Sign in to follow this  
மெசொபொத்தேமியா சுமேரியர்

மன்னிப்புக் கோருகிறேன்

Recommended Posts

18447618_10207710367910794_1774421316670

 

தன்மானம் இழந்து தலைகுனிந்து

தரையில் தமிழன் வீழ்ந்திட்ட நாள் இன்று .......

என்று இனி நாம் நிமிர்வோம் ???????

 

ஏகாதிபத்தியத்தின் எமாற்றலில்

எமக்கானவை எல்லாம் இழந்தோம்

இன்னும் தான் வரவில்லை எவரும்

 

செருக்கிழந்து உருக்குலைந்து

செல்வமெல்லாம் இழந்தபின்னும்

சேர்ந்திடாதிருக்கிறோம் நாம்

 

கொலைக்களங்கள் பல கண்டு

கொடுமைகள் நிதம்கொண்டு

அடிமைகளாய் வாழ்கையிலும்

கோபமின்றி குரலின்றி

கோழைகளாய் வாழ்கின்றோம்

 

செங்குருதி தோய்ந்து

செத்தழிந்து போனவர்கள்

கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள்

உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள்

அத்தனை பேரிடமும் மண்டியிட்டு

மன்னிப்புக் கோருகிறேன்

 

எதுவும் செய்திட முடியா ஏழைகள் நாம்

ஆண்டில் ஒருமுறை உம்மை நினைத்து

அழுவதாய் மற்றவர் முன் பாசாங்கு செய்து

அடுத்தநாள் எல்லாம் மறந்து

மீண்டும் வரும்  ஆண்டுக்காய்

காத்திருக்க மட்டுமே முடிகிறது

முடிவேதுமற்று ..........

 

  • Like 10

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதுவும் செய்திட முடியா ஏழைகள் நாம்

ஆண்டில் ஒருமுறை உம்மை நினைத்து

அழுவதாய் மற்றவர் முன் பாசாங்கு செய்து

அடுத்தநாள் எல்லாம் மறந்து

மீண்டும் வரும்  ஆண்டுக்காய்

காத்திருக்க மட்டுமே முடிகிறது

முடிவேதுமற்று ..........

உன்மை அக்கா  

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

செங்குருதி தோய்ந்து

செத்தழிந்து போனவர்கள்

கந்தகக் காற்றில் கரைந்து போனவர்கள்

உயிருடன் மண்ணில் புதைந்து போனவர்கள்

அத்தனை பேரிடமும் மண்டியிட்டு

மன்னிப்புக் கோருகிறேன்

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் எங்களின் கையாலாகாத தன்மையை மறைத்து மெழுகுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எழுதி முடிக்கையில் சுமைகள் தீர்ந்துவிடுவதாய் ஒரு உணர்வு.

 

  • Like 3

Share this post


Link to post
Share on other sites
suvy    3,190

அழுவதாய் மற்றவர் முன் பாசாங்கு செய்து

அடுத்தநாள் எல்லாம் மறந்து

 

அழுவதைக் கூட ஆத்மார்த்தமாய் செய்ய முடியாத ஏதிலிகள் நாமே....! tw_blush:

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 18/05/2017 at 5:59 PM, தனி ஒருவன் said:

உன்மை அக்கா  

வருகைக்கு நன்றி

On 21/05/2017 at 3:48 PM, வல்வை சகாறா said:

மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் எங்களின் கையாலாகாத தன்மையை மறைத்து மெழுகுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எழுதி முடிக்கையில் சுமைகள் தீர்ந்துவிடுவதாய் ஒரு உணர்வு.

 

அதுதான் உண்மை

On 22/05/2017 at 9:36 AM, suvy said:

அழுவதாய் மற்றவர் முன் பாசாங்கு செய்து

அடுத்தநாள் எல்லாம் மறந்து

 

அழுவதைக் கூட ஆத்மார்த்தமாய் செய்ய முடியாத ஏதிலிகள் நாமே....! tw_blush:

உணமைதானே அண்ணா

வருகைதந்த பச்சை வழங்கிய உறவுகளுக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this