• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

சங்கா அபார சதம்

Recommended Posts

சங்கா அபார சதம்

இங்கிலாந்துக் கழகங்களுக்கு இடையிலான தொடரில் சர்ரேயைப் பிரதிநிதித்துவம் செய்துவரும் சங்கா, நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டமொன்றில் சதம் கடந்தார்.

சர்ரேயை எதிர்த்து ஹாம்சயர் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஹாம்சயர் முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 பந்துப்பரிமாற்றங்களில் அந்த அணி 8 இலக்குகள் இழப்புக்கு 271 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக பெய்லி ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்துவீச்சில் ராம்போல் 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்குக் களமிறங்கிய சர்ரே 38 பந்துப்பரிமாற்றங்களில் 2 இலக்குகளை இழந்து 238 ஓட்டங்களைக் குவித்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணத்தால் ட்க்வேர்த்லூயிஸ் விதிப்படி 66 ஓட்டங்களால் சர்ரேக்கு வெற்றி வழங்கப்பட்டது. சங்கா 124 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காதிருந்தார்.

கடந்த ஆட்டத்தில் சங்கா விளையாடும் பதினொருவர் கொண்ட குழாமில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் இந்தச் சதத்தின்மூலம் அவர் தெரிவுக் குழுவுக்கு தக்க பதில் வழங்கினார்.

kumar.jpg

sanga.jpg

JS69359223-1024x692.jpg

kumar-sangakkara-surrey-royal-london-one-day-cup_3767506.jpg

Sanga-Surrey.jpg

http://uthayandaily.com/story/3186.html

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this