Jump to content

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி கர்ப்பமா?


Recommended Posts

பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி கர்ப்பமா?

 

 

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோனின் மனைவி கர்ப்பமாக இருப்பது போல் சார்லி ஹெப்டோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக 39 வயதான இம்மானுவேல் மக்ரோன் சில தினங்களுக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்டார்.

மக்ரோன் பாடசாலையில் பயின்றபோது இவருடைய ஆசிரியையான பிரிஜ்ஜிட் (64) என்பவர் மீது காதல் கொண்டார். இவர்களின் காதல் நிறைவேறியதை தொடர்ந்து கடந்த 2009- ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். மக்ரோனை விட அவரது மனைவி 24 வயது மூத்தவராக இருந்ததால் இவ்விவகாரம் தொடர்ச்சியாக பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. இது குறித்து மக்ரோன் பதிலளித்தபோது, ‘என் மனைவியை விட நான் 24 வயது மூத்தவராக இருந்தால் இந்த உலகம் கேள்வி எழுப்பாது. ஆனால், என் மனைவி என்னை விட 24 வயது மூத்தவராக இருப்பதால் பத்திரிகைகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இவற்றை பெண்களுக்கு எதிரான வன்கொடுமையாகவே நான் பார்க்கிறேன்’ என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் மிகவும் பிரபலமான சார்லி ஹெப்டோ பத்திரிகை சர்ச்சைக்குரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மக்ரோனின் மனைவி கர்ப்பமாக இருப்பது போலவும், அவரது வயிற்றை மக்ரோன் தொட்டுக்கொண்டு இருப்பது போலவும் புகைப்படம் வெளியிட்டுள்ளது.

மேலும், 21-ஆம் நூற்றாண்டில் பல அற்புதமான சாதனைகளை செய்ய உள்ளதாக மக்ரோன் சபதம் எடுத்துள்ளார். ஒருவேளை, வயதான அவருடைய மனைவி கர்ப்பம் அடைந்தால் அதுவும் ஒரு அற்புதமான சாதனையாக இருக்கும்’ என கிண்டலாக செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/20042

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

64 வயது!

பிரான்ஸ்காரர்கள் பெண்களை அவமதித்துக் கொண்டே.... கவலைப்படாமல் போய்கொண்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18342059_1522249091131557_7223808309504152394_n.jpg?oh=995759f08ecfa38086266d17751ed9d5&oe=59AA677B

பார்க்க வடிவாய்த்தானே கிடக்கு...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சொல்லுறது.. பொது வாழ்க்கைக்கு வாறவன்.. பொதுவா ஒழுங்கா இருக்கனுன்னு. இல்லாடி.. இப்படி தான் கிண்டலும் குடையலும்.. நக்கலும் நளினமும் இருக்கத்தான் செய்யும். சந்திச்சுத்தான் ஆகனும். ... முகத்தை திருப்பிக்கிட்டு காரியத்தில் கண்ணாயிடனும். tw_blush:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.