Jump to content

'நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை நெருங்கவிட மாட்டேன்...' ரஜினிகாந்த் பரபர பேச்சு!


Recommended Posts

'நான் அரசியலுக்கு வந்தால் இவர்களை நெருங்கவிட மாட்டேன்...' ரஜினிகாந்த் பரபர பேச்சு!

 

நடிகர் ரஜினிகாந்த், இன்று முதல் 19-ம் தேதி வரை தனது ரசிகர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். அப்போது, அவர்களுடன் ரஜினி போட்டோ எடுத்துக்கொள்ள இருக்கிறார். இதற்கான துவக்க நிகழ்ச்சியில், இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கலந்து கொண்டார்.

அப்போது ரஜினி பேசுகையில், "இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனக்கு சகோதரர். ஒழுக்கம், சத்தியம், உண்மை ஆகியவற்றை அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன். அவர், என்னை எப்போது பார்த்தாலும், 'உனது உடலைப் பார்த்துக்கொள், ரசிகர்களைப் பார்த்துப் பேசு, போட்டோ எடுத்துக்கொள்' என்று சொல்வார்.

Rajinikanth


அவர் சொன்னது இன்று நடந்துள்ளது. ஆரம்பத்தில், நான் படப்பிடிப்புக்கு தாமதமாகச் செல்வேன். அப்போது, முத்துராமன் என்னிடம், நீ படத்தின் ஹீரோ. படப்பிடிப்புக்கு நீதான் முதலில் வர வேண்டும் என்பார். அப்போது முதல், நான்தான் படப்பிடிப்புத் தளத்துக்கு முதலில் செல்வேன். சில காரணங்களால் வெற்றி விழாக்களைக் கொண்டாட முடியவில்லை. 


வேலை காரணமாக ரசிகர்களைச் சந்திக்க முடியவில்லை. இலங்கைப் பயணமும் திடீரென்று ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, ஊடகங்களில், ரஜினி முடிவில் உறுதியாக இருக்க மாட்டார் என்று செய்திகள் வந்தன. தண்ணீரில் இறங்கும்போது, முதலைகள் இருக்கின்றன. அப்போது, கால் வைத்தால் என்ன ஆகும்? அதனால், பின் வாங்கித்தான் ஆக வேண்டும். முரட்டுத் தைரியம் எப்போதும் ஆகாது.

Rajinikanth

அரிசி வெந்தால்தான் சோறு ஆகும். படம் நன்றாக இருந்தால்தான் வெற்றியாகும். எனது இயக்குநர்கள் அதைச் சரியாகச் செய்ததால்தான், நான் இங்கு நிற்கிறேன். ரஜினி நல்ல படம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் நீங்கள் திரையரங்கு வருகின்றீர்கள். நான் நல்லபடங்களைத் தொடர்ந்து கொடுப்பேன்.


சில காரணங்களால், அரசியலில் சில கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது கோரிக்கையை ஏற்று, அந்தக் கூட்டணியை ரசிகர்கள் வெற்றிபெற வைத்தனர். அது முதல், எனது பெயர் அரசியலில் அடிபட ஆரம்பித்தது. எனது சில ரசிகர்களும் அரசியல் ஆர்வம் அதிகமாகக் கொண்டுள்ளனர். அவர்களை, அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். என் பெயரை தவறாகப் பயன்படுத்த நினைத்தனர். ஆனால், அடுத்தடுத்து ஆதாயத்துக்காக அணுகும்போது, அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது.

Rajinikanth

அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆண்டவன்தான் தீர்மானிக்கிறான். இப்போது, நடிகனாக என்னுடைய கடமையைச் செய்கிறேன். நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும், உண்மையாகவும் இருப்பேன்.


அது, கடவுளின் கையில்தான் உள்ளது. என்னைப் பற்றிய அரசியல் செய்திகளை நம்ப வேண்டாம். அப்படி நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை வந்தால், கண்டிப்பாக வருவேன். காசு சம்பாதிக்க வேண்டும் என்பவர்கள் இப்போதே விலகிவிடுங்கள். நான் அரசியலுக்கு வந்தால், ஊழல் செய்பவர்கள், பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படுபவர்களை பக்கத்துலயே வைத்துக்கொள்ள மாட்டேன். அந்த மாதிரி ஆட்களை கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். நுழையக்கூட விட மாட்டேன் ஒதுங்கிடுங்க. ரசிகர்கள் முதலில் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். குடிப்பழக்கம், புகைபிடிக்கும் பழக்கத்தை விடுங்கள். அடிபட்டதால் சொல்கிறேன். சந்தோஷமாக இருங்கள். 

http://www.vikatan.com/news/cinema/89343-rajinikanth-speech-about-his-political-career-in-fans-meet.html

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது வேற..

புது படம் வருகுது...

பப்ளிசிட்டி முடிந்தவுடன், கடையை மூடிவிடுவார்.

அடுத்த படம் வரும் போது மீண்டும் திறப்பார்.

Link to comment
Share on other sites

ஆண்டவன் தீர்மானித்தால் அரசியலில் ஈடுபடுவேன்: எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ரஜினிகாந்த் பேச்சு

 
 

ஆன்மிகத்தை முழுமையாக நம்பும் தான், ஆண்டவன் தீர்மானித்தபடியே செயல்படுவதாகவும், ஒருவேளை நாளை அரசியலில் ஈடுபட ஆண்டவன் தீர்மானித்தால் அது நடைபெறும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் Image captionரஜினிகாந்தின் பேச்சு தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

பணம் சம்பாதிக்க அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும், ஒருவேளை அரசியலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டாலும் கூட பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை உடன்சேர்க்க மாட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதன்மூலமாக தான் அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவே ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டுள்ளார் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அரசியலில் ஈடுபட ஆண்டவன் தீர்மானித்தால் அது நடைபெறும்” ரஜினிகாந்த்

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி நான்கு நாட்களுக்கு தனது ரசிகர்களை நேரில் சந்திக்கும் ரஜினிகாந்த், அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க நாளான இன்று திங்கள்கிழமை, ரசிகர்கள் மத்தியில் உரையாடிய ரஜினிகாந்த் இவ்வாறு கூறினார்.

மேலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே இத்தனை ஆண்டுகள் தன்னால் தனது ரசிகர்களை சந்திக்க முடியாமல் போனதாக கூறிய ரஜினிகாந்த், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தன்னை வற்புறுத்திய காரணத்தால்தான் தற்போது இந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

ரஜினி, எஸ்.பி முத்துராமன் Image captionசில ரசிகர்கள் பணத்தாசையால் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாக ரஜினி குற்றச்சாட்டு

தான் ஒரு முறை அரசியல் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் என்பது தனக்கு ஏற்பட்ட விபத்து போன்றதொரு சம்பவம் என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், அதன் பிறகே தனது 'ஒரு சில' ரசிகர்கள் பணத்தாசையால் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

 

அதன் காரணமாகவே தான் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதை தேவைப்படும் போதெல்லாம் வெளிப்படுத்த நேரிடுவதாகவும் ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.

குடும்பம் குழந்தை மீது அக்கறை காட்டுங்கள். மது, சிகரெட், போதை பொருள் போன்ற தீய பழக்கங்களை விட்டொழியுங்கள்” ரஜினிகாந்த்

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் தனக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்த காரணத்தால் தான் பல இன்னல்களை சந்தித்தாகவும் கூறினார்.

 

குறிப்பாக, குடும்பம் குழந்தை மீது அக்கறை காட்டுங்கள் என்று கூறிய ரஜினிகாந்த், மது, சிகரெட், போதை பொருள் போன்ற தீய பழக்கங்களை விட்டொழியுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ரஜினிகாந்த் Image captionரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால் அதை வரவேற்பேன் - மு.க. ஸ்டாலின்

அரசியல் தலைவர்களின் கருத்து

ரஜினிகாந்தின் இன்றைய பேச்சு அரசியல் கட்சியினரின் கவனத்தை மட்டுமன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால் அதை வரவேற்பேன் என திமுகவின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன், ரஜினிகாந்தை அரசியலுக்கு நண்பனாக வரவேற்பேன் என்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்போம் என்றார்கள்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39926465

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

raj.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, நவீனன் said:

அரசியலில் ஈடுபட ஆண்டவன் தீர்மானித்தால் அது நடைபெறும்” ரஜினிகாந்த்

ஹை.கார்பன எதிர்க்க நீ எதாவது முடிவெடுத்தியா?

இல்ல

மீத்தேன்?

இல்ல

மணல்?

இல்ல

நீட்?

இல்ல

இந்தி?

இல்ல

அப்புறம் எதுக்கு நான் முடிவெடுக்கனும்?

C_2Ind1UAAA7aL5.jpg

Link to comment
Share on other sites

"ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா?" #VikatanSurveyResult

 
 

ரஜினி

டிகர் ரஜினிகாந்த், தன்னுடைய ரசிகர்களைத் தொடர்ந்து சந்தித்துவருகிறார். இதற்கு, அரசியல் பின்னணி இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பது, அவர் ஆற்றும் உரையிலேயே தெரியவருகிறது. இதை அடுத்து, நேற்று (15.05.2017) 'விகடன்' இணையதளத்தில் "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா?" என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயில், ரஜினியின் ரசிகர்களும் பொதுமக்களும் பங்கேற்று பதிலளித்துள்ளனர். பெரும்பாலானோர், ''ரஜினி இதற்குப் பிறகு அரசியலுக்கு வருவது தேவையற்றது'' என்றுதான் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும்... அவற்றுக்கு அவர்கள் அளித்த பதில்களும் கீழே வருமாறு...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

ரஜினி அரசியலுக்கு வந்தால், அவர் எந்தக் கட்சியில் இணைய வாய்ப்பு அதிகம் உள்ளது? அல்லது அவர் புதிய கட்சி தொடங்குவாரா என்பது பற்றிய உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்

*நடிகராக இருப்பதே நல்லது

*இவர் என்ன செய்வாரென்று அவரைத்தான் கேட்க வேண்டும், காலம் கடந்துவிட்டது, 1996ல் அவருக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார்! 

*பா.ஜ.க தான்... பின்புலத்தில் தாமரையைப் பார்த்தாலே தெரியுதே..!

*HE WON'T COME TO POLITICS.

*புதிய கட்சி தொடங்கி அரசியல் பிரவேசம் செய்தால் அவருக்கு நல்லது.

*அவர் வரவே மாட்டார். அவர் தன்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே செயல்படுகிறார்

*அவர் அரசியலுக்கு வருவதால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நடக்கப்போவது இல்லை...

*புதிய கட்சி துவங்கவே வாய்ப்பு அதிகம். ஆனால், அந்தக் கட்சி பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்கும்

*அவர் அரசியலுக்கு வந்தால், நிச்சயம் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பார், பா.ஜ.க-வும் அவரை விடாது, தமிழகத்தில் வெற்றிபெறவும், நிலையான இடத்தைப் பிடிப்பதற்கும் அவரைப் பயன்படுத்திக்கொள்ளும். 

*நிச்சயமாக, அரசியலில் தமிழக மக்களுக்கு நல்லதே செய்வார். நன்றிக்கடன்மூலம் நேர்மையான முறையில் தொண்டாற்றுவார் 

*நிச்சயம் அவர் அரசியலுக்கு வர மாட்டார். ஒரு வேளை அரசியலுக்கு வந்தால், பி.ஜே.பி-யில் ஐக்கியம் ஆவார்.

*புதுக் கட்சி துவங்குவார். அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே, அவருக்கும் இந்திய மக்களுக்கும் அவர் ஆற்றும் பெரிய தொண்டு.

*அவர் எப்படி வந்தாளும் ஆதரவு கிடைக்காது என்பதுதான் எதார்த்தம்.

http://www.vikatan.com/news/vikatan-survey/89452-will-rajinikanth-enter-politics-survey-result.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர். போல ரஜினி முதல்வர் ஆவார்: கேரள ஜோதிடர் கணிப்பு

 

கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு என்று ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.

 
201705171604027392_mgr-Rajini-is-the-chi
 

ரஜினியின் அரசியல் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி அவருக்கு நெருக்க மானவர்கள் கூறியதாவது:-

கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு.

இனி எந்த நாளில் அவர் அரசியல் கட்சித் தொடங்கினாலும், அவர் நினைத்தது நடக்கும். இன்னொரு எம்.ஜி.ஆர். ஆக தமிழக முதல்வராக வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.

தனிக்கட்சி ஆரம்பித்து விட்டு, அக்கட்சியை, தேசிய கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். ஒரு கட்டத்தில், பா.ஜ.க.வும் தனக்கு முழு மரியாதை கொடுத்து, தமிழகத்தை ஆள அனுமதிக்கும்பட்சத்தில், புதிய கட்சியை பா.ஜ.க.வோடு இணைத்து விடலாம் என்றும், அந்த ஜோதிடர், நம்பிக்கை வாக்கு கொடுத்துள்ளார்.

201705171604027392_Amal-0727._L_styvpf.g

ஜோதிடர் சொல்லும் பாதையில் பயணிக்ககும் முடிவு செய்துள்ள ரஜினி இப்படியொரு யோகம் தனக்கு இருக்கிறதா? என, தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் ஜோதிடர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.

ரஜினிக்கு 1996 முதலே தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என ஆசை இருந்தது. எதிலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத அவர் தன்னை சந்திக்க வருபவர்களிடம் தமிழக அரசியல் முதல் தேசிய அரசியல் வரை, நிறைய பேசுவார். பேச்சின் முடிவில், ஒருவேளை, நான் தீவிர அரசியலில் களம் இறங்குகிறேன் என வைத்துக் கொள்வோம். அந்த சூழல் எப்படி இருக்கும்? உங்களுக்கு தெரிந்ததை முதலில் சொல்லுங்கள். பின், உங்களுக்கு தெரிந்தவர்கள், நெருக்கமானவர்களிடம் கேட்டு, அவர்களின் கருத்துக்களையும் சொல்லுங்கள் என்று, மறக்காமல் கூறுவார்.

ஒருவேளை, அரசியலில் தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியையும் அவர் விடாப்பிடியாக கேட்பார்.

நிறைய பேரிடம் கருத்துக்களை மாறி மாறி கேட்பதாலேயே மனதுக்குள் நிறைய குழப்பங்களுக்கு ஆளாகி, ஆசைக்கும் தோல்விக்கும் இடையில் எதை தேர்வு செய்வது என புரியாமல் இருந்து வந்தார். இதே நிலையை வெகு நாட்களுக்கு கொண்டு செல்ல அவர் விரும்பவில்லை. அரசியல் குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.

பா.ஜ.வுடன், நெருக்கமாக இருந்து, தன்னுடைய அரசியல் ஆர்வம் குறித்து தெரிவித்து வந்தாலும், ஒரு கட்சிக்குள் தன்னை சுருக்கிக் கொள்வதை அவர் விரும்பவில்லை.

201705171604027392__L0A6471_resize._L_st

தற்போதைய நிலையில், தனி கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்துக்கு அவர் வந்து விட்டார். அதற்கான டீசர் தான் ரசிகர்கள் சந்திப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி, அரசியலில் குதிப்பது உறுதியாகி விட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/05/17160401/1085722/mgr-Rajini-is-the-chief-minister-Kerala-astrologer.vpf

Link to comment
Share on other sites

அரசியல் குறித்து எதையும் கேட்காதீர்கள்: ரஜினிகாந்த்

 

ரஜினி | கோப்பு படம்
ரஜினி | கோப்பு படம்
 
 

அரசியல் குறித்து எதையும் கேட்காதீர்கள் என்று பத்திரிகையாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் இன்று சென்னையில் 3-வது நாளாக ரசிகர்களை சந்தித்தார். இன்றைய நிகழ்வின் போது ரசிகர்களிடம் மனம் திறந்து எதுவும் பேசவில்லை. ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சிறிது நேரம் ஒய்வெடுக்க கீழே சென்றுவிட்டார். சுமார் 10 நிமிடங்கள் கழித்து மேடையேறியவுடன், புகைப்படம் எடுக்கும் நிகழ்வு தொடங்கியது.

இன்றைய நிகழ்வு குறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ரஜினி, "ரசிகர்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம். அரசியலில் நுழைவது பற்றி எனது கருத்தை, ஏற்கெனவே ரசிகர்களின் முன்னிலையில் தெரிவித்துவிட்டேன். தற்போதுள்ள நிலையில் மேலும், அதைப் பற்றி பேச விரும்பவில்லை. இந்த ரசிகர்கள் சந்திப்பு முடிந்தவுடன், அடுத்து 15 மாவட்டங்கள் உள்ளன. அடுத்ததாக நேரம் கிடைக்கும் போது, இதே போன்று திட்டமிட்டு சந்திக்கும் எண்ணம் உள்ளது. மேலும், அரசியல் குறித்து எதையும் கேட்காதீர்கள்" என்று தெரிவித்தார்.

அப்போது "பொன்.ராதாகிருஷ்ணன் நீங்கள் பாஜக-வில் சேர்ந்தால் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். நீங்கள் இணைவீர்களா" என்று செய்தியாளர் கேட்டதற்கு "கருத்து கூற விரும்பவில்லை" என்று தெரிவித்தார் ரஜினி.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/அரசியல்-குறித்து-எதையும்-கேட்காதீர்கள்-ரஜினிகாந்த்/article9705869.ece?homepage=true

கடவுளிடம் ரஜினிகாந்த் கேட்கும் சில கேள்விகள்!

ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார்? எப்படி வருவார்?
ரஜினி கடவுளிடம் என்ன வேண்டிக்கொள்வார்?

 

ரஜினிகாந்திற்கு கவலை நாட்டின் மீதா? 2.0 வசூலின் மீதா?|JV Breaks

எதற்கும் ஏமாறாத தமிழ் மக்கள்.. ஒரு விஷயத்தில் மட்டும் தொடர்ந்து ஏமாறுகிறார்களே.. ரஜினி சொல்ல வரும் ரகசியம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியாச்சும் படம் நல்ல விலைக்கு போகணும் அதுதான் இந்த கன்னட கூத்தாடிக்கு முக்கியம் மற்றதெல்லாம் அல்வா சும்மா காசுக்கு கூவுற காணொளிகள் வாங்கிற அடியை பார்த்தால் ஆள் நிமிர முடியாது போல் உள்ளது .

இதெல்லாத்துக்கும் காரணம் இந்த சீமான்,இணையம்  என்பதில் மாற்று கருத்து இல்லை .

Link to comment
Share on other sites

உங்கள் குழப்பத்தை ஊர் குழப்பம் ஆக்காதீர்கள் ரஜினி!

 

 
 
 
rajini1234_3165556f.jpg
 
 
 

வெள்ளைத் தாமரைப் பூவின் இதழ்களிலிருந்து மேல் நோக்கி விரியும் அபான முத்திரை. இந்தப் பின்புலத்தில் நின்றுகொண்டுதான் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு முறை தனது கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.

‘பாபா’ முத்திரை எனப் பரவலாக நம்பப்படும் அபான முத்திரை, உடலைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்டது எனச் சொல்லப்படுகிறது. ஆன்மிகரீதியில் தாமரை என்பதன் பொருள் வேறு. அரசியலில் அதன் பொருள் வேறு. அபான முத்திரையின் பயனாகச் சொல்லப்படும் தூய்மைப்படுத்துதல் என்பதற்கு உடல் சார்ந்து கொள்ளக்கூடிய பொருள் வேறு, அரசியல் சார்ந்த பொருள் வேறு. ரஜினிகாந்த் தன் ரசிகர்களைச் சந்தித்தபோது, பின்புலத்தில் இந்த இரு சின்னங்களும் இருந்ததை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

ரஜினியின் பேச்சும் அப்படித்தான். திரையிலும், அதற்கு வெளியிலும் அவர் பலமுறை இத்தகைய வசனங்களைப் பேசியிருக்கிறார். ‘என் வழி தனி வழி’, ‘வர வேண்டிய நேரத்துல வந்துடுவேன்’, ‘கடமையைச் செய்.. பலனை எதிர்பார்’, ‘நான் அரசியலுக்கு வந்தால் தூய்மையான அரசியலையே முன்னெடுப்பேன்’…

இதுபோன்ற வசனங்களைப் பரிசீலித்தால், ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அரசியல் விஷயத்தில் ஆழமான எந்தக் கருத்தும் ரஜினிக்கு இல்லை. அப்படியே இருந்தாலும் அதை அவர் சொன்னதில்லை.

மாறிய ரஜினியின் குரல்

வணிகரீதியில் உச்ச நட்சத்திரமான ரஜினிக்கு அபரிமிதமான அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 1994-95 காலகட்டத்தில் மொத்தத் தமிழகமும் ஜெயலலிதாவின் அதிரடி கண்டு ஒடுங்கி நின்றபோது, ஜெயலலிதாவைப் பொது அரங்கில் நேரடியாக விமர்சித்தவர் ரஜினி. அப்போது சந்தையில் அவரது நிலை உச்சத்தில் இருந்தது. ‘பாட்ஷா’வுக்குப் பின் திரைக்கு வெளியில் வெளிப்படையாக அரசியல் பேசிய ரஜினி, ‘படையப்பா’வில் படத்துக்குள்ளும் அதைத் தொடர்ந்தார். ‘பாபா’வில் அது உச்சம் பெற்றது. ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதிலிருந்தே அவருடைய அரசியல் குரல் தேயத் தொடங்கியது. பல சமயங்களில் அரசுக்கு ஆதரவாகவும் அவர் குரல் வெளிப்பட்டது.

ரஜினிக்கும் உண்டு நெருக்கடி

கால மாறாட்டத்தில் திரையரங்கில் ரஜினி மாயம் மங்கத் தொடங்கியது. அவருடைய படங்களின் தொடக்கக் காட்சிகள் ஏற்படுத்தும் பரபரப்பு குறையவில்லை எனினும் பாட்ஷா, படையப்பா போன்ற படங்களுக்கு இணையான வீச்சும் தாக்கமும் இல்லை என்பது கண்கூடு. சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி ஆகிய படங்களுக்கான முதல் நாளின் ரசிக ஆரவாரம் படிப்படியாகக் குறைந்துவருகிறது. தமிழ்த் திரையுலகமே பெரும் தத்தளிப்பில் இருக்கும் நிலையில், எல்லா நட்சத்திரங்களும் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி ரஜினிக்கும் இருக்கிறது. ரஜினி படத்தால் நஷ்டம் என்னும் புலம்பல்கள் ‘சந்திரமுகி’க்குப் பிந்தைய ரஜினியின் எல்லாப் படங்கள் தொடர்பாகவும் எதிரொலித்துவருகின்றன. ரஜினி, எல்லாத் தரப்பினருக்கும் லாபம் தரும் படத்தைக் கொடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. திரைத் துறையில் தன்னுடைய இடம் மெல்ல மங்கிவருவதை உணர்ந்துதான் தன் அரசியல் பிரவேசம் பற்றி அவர் பூடகமாகப் பேசுகிறாரா என்னும் ஐயத்தை அவர் பேச்சு ஏற்படுத்துகிறது.

தமிழக அரசியலில் ஸ்திரமின்மை நிலவும் இந்தச் சமயத்தில் ரசிகர்களைச் சந்தித்துள்ள ரஜினி, அரசியலைப் பற்றிப் பேசியிருப்பதும் ‘பணத்தாசை கொண்ட’ தன் ரசிகர்களைக் கண்டித்திருப்பதும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாதவை. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் அரசியல் களத்தில் இல்லை, ஆளுங்கட்சி பிளவுபட்டுக் கலகலத்துப்போயிருக்கிறது. திமுகவைத் தவிர வேறு எந்த எதிர்க்கட்சியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வலுவோடு இல்லை. புதிதாக ஒருவர் அரசியலுக்குள் நுழைய வேண்டுமென்றால், அதற்கு இதைவிடவும் சிறந்த நேரம் இருக்க முடியாது. இந்தச் சூழலையும் திரைத் துறையில் தனக்கான தனி இடம் மங்கிவருவதையும் கணக்கில் கொண்டே ரஜினி காய் நகர்த்துகிறாரா?

இருக்கலாம். ஆனால், ரஜினியின் அரசியல் பேச்சு வழக்கம்போலவே குழப்பமாக இருப்பதால் அவருக்கு உண்மையிலேயே அந்த எண்ணம் இருக்கிறதா அல்லது வழக்கமான பூச்சாண்டிதானா என்னும் ஐயமும் எழுகிறது. அரசியலுக்கு வந்தால் நியாயமான அரசியலையே முன்னெடுப்பேன் என்றும் அரசியலை வைத்துச் சம்பாதிக்க நினைக்கும் ரசிகர்களுக்கு அதில் இடம் இருக்காது என்றும் தெளிவாகச் சொன்ன அவர், கடைசியில் எல்லாம் ஆண்டவன் கையில் என்று வழக்கம்போலச் சொல்லிவிட்டார். எல்லாம் ஆண்டவன் கையில் என்றால் இதையெல்லாம் ஏன் பேச வேண்டும்? இதைக் குழப்பங்களின் குவியல் என்றும் சொல்லலாம். பிறரைக் குழப்பும் தந்திரம் என்றும் சொல்லலாம். தன் ரசிகர்களை அவர் என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்?

‘வரும்… ஆனா வராது…’ இது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவைக் காட்சியொன்றில் ‘என்னத்தே’ கன்னையா பேசும் வசனம். தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் திரையில் அதீத சாகச நாயகனாகவும் விளங்கும் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வின் மிக முக்கியமான ஒரு நகர்வு, ‘வரும்… ஆனா வராது…’ என்னும் பரிகாசமாகவே ஆகிவிட்டது நகைமுரண்தான்.

சிந்தனையும் செயல்திட்டமும் எங்கே?

ரஜினி இதுவரை வெளிப்படுத்தியுள்ள அரசியல் கருத்தில் மாற்று அரசியலுக்கான சிந்தனையோ செயல்திட்டமோ இல்லை. எல்லாரும் பொதுவாகப் பேசுவதுபோலத் தூய்மை அரசியலைத்தான் அவரும் பேசுகிறார். தூய அரசியல் பற்றிப் பேசுவது எளிது. அதற்கான செயல்திட்டம் என்ன என்பதுதான் முக்கியம். அதற்கு, அரசியலில் ஊழல் செயல்படும் விதம் குறித்த ஆழமான புரிந்துணர்வு தேவை. இந்தப் புரிந்துணர்வோ அதன் அடிப்படையிலான செயல்திட்டமோ ரஜினிக்கு இருக்கும் என்று நம்புவதற்கான எந்த அடையாளத்தையும் அவர் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. தூய்மை என்பதைத் தாண்டி, அவர் பேசிய அரசியல் கருத்துகள் எல்லாம் தேசம், ஒற்றுமை, பண்பாடு குறித்தவை. இவை மென் இந்துத்துவ வகையைச் சேர்ந்தவை. எனவே, சித்தாந்தத் தளத்திலும் புதிதாகவோ நம்பிக்கை அளிக்கும் விதத்திலோ அவரது அணுகுமுறை இருப்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை.

இத்தகைய கருத்தியலை முன்வைத்து அரசியல்செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது. அல்லது பலரும் கருதுவதுபோல பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்புரிவதற்கான உரிமையும் இருக்கிறது. ஆனால், அதை அவர் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

தன் அசல் பார்வையை மறைப்பதற்கான முகமூடியாகத் தூய அரசியல் என்னும் கோஷத்தைப் பயன்படுத்த அவர் நினைக்கக் கூடாது. திடீரென்று ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டு, அதன் பிறகு ஆண்டவனைக் கேடயமாகப் பயன் படுத்திக்கொண்டு தப்பித்துக்கொள்ளவும் நினைக்கக் கூடாது.

தமிழக அரசியல் என்பது திரை நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர் பலத்தை வைத்துப் பகடை ஆடும் களம் அல்ல. அது மக்கள் வாழ்வோடு தொடர்புகொண்டது. இன்று அது மிகத் தீவிரமான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்நிலையில், திரையுலக நாயகர்கள் இங்கே வந்து கிச்சுகிச்சு மூட்டுவது, ஸ்திரத்தன்மை இல்லாத அரசியல் சூழலில் சிக்கித் தவிக்கும் மக்கள் மீது செலுத்தப்படும் வன்முறை. தெளிவான பேச்சு அல்லது மௌனம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்காவிட்டால், ரஜினியின் அரசியல் என்பது நிரந்தரமான நகைச்சுவையாக மாறிவிடும்.

- அரவிந்தன்,

http://tamil.thehindu.com/opinion/columns/உங்கள்-குழப்பத்தை-ஊர்-குழப்பம்-ஆக்காதீர்கள்-ரஜினி/article9706246.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்டா தமிழா.... தமிழனை ஆள.. ஒரு தமிழ் நடிகனும் இல்லையாடா.. தமிழா.. தமிழ் நாட்டில். tw_blush::rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

ரஜினிகாந்த் மண்டையில் ஒன்றும் இல்லை: மார்க்கண்டேய கட்ஜு விளாசல்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

 
ரஜினிகாந்த் மண்டையில் ஒன்றும் இல்லை: மார்க்கண்டேய கட்ஜு விளாசல்
 
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், அவரது அரசியல் பயணம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுத்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-

தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படத்தபோது, ஒருசமயம் தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசன் நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

201705181147552470_rajinii2._L_styvpf.gi

இப்போது, ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இருக்கின்றனவா? அவரிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/18114753/1085831/Like-Amitabh-Bachchan-Rajinikanth-has-nothing-in-his.vpf

Link to comment
Share on other sites

'ரஜினி அரசியலுக்கு வந்து 21 வருஷம் ஆச்சு..!' முரண்பாடுகள் சூழ் பயணம்

 

ரஜினிகாந்த்

மீண்டும் அரசியல் உலகின் கவனத்தைத் தன்பால் திருப்பியிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினி எதையும் புதியதாக பேசி விடவில்லை என்றபோதும், ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் அரசியல் பற்றி கோடிட்டு அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலமாக ரஜினி இப்படி குழப்பமான அறிவிப்புகளைத் தான் வெளியிட்டு வருகிறார்.

"என் தலையில அரசியல் எழுதலை'னுச் சொன்னால் நீங்க ஏமாந்து போவீங்க. ஒருவேளை நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பணம் சம்பாதிக்கணும், ஊழல் பண்ணணும்னு நினைக்கிற ஆட்களை கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். நுழைய கூட விட மாட்டேன். அதுனால இப்பவே அவங்க எல்லாம் ஒதுங்கிடுங்க. இல்லைன்னா ஏமாந்து போவீங்க" என பேசிய ரஜினி, இறுதியில் 'என் வாழ்க்கை ஆண்டவன் கையில் தான் இருக்கிறது. அவர் தான் அதை முடிவு செய்வார்' எனப் பேசி பழையபடி குழப்பத்தை விதைத்திருக்கிறார்.

ஆனாலும் இன்றும் இந்தச் செய்தியை தலைப்புச் செய்தியாக்கியதன் மூலம் ரஜினிக்கு இன்னுமொரு வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. அதோடு ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. உண்மையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகிறது. பாட்ஷா படம் வெளிவந்த பின்னரே அரசியல் குறித்து பேச ஆரம்பித்து விட்டார் ரஜினிகாந்த். அப்போதிருந்தே அரசியல் செய்தும் வருகிறார்.

ரஜினிகாந்த்

அரசியல் பயணம் இப்படித்தான் துவங்கியது !

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், முதல்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கடும் விமர்சனங்களுக்குள்ளானார். சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், பல்வேறு முறைகேடுப் புகார்கள், அடக்குமுறை நிர்வாகம், அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மீதான தாக்குதல்கள் எனப் பல புகார்களால் ஜெயலலிதா கடும் நெருக்கடிக்குள்ளானார். இந்நேரத்தில் ஜெயலலிதாவுக்கு மாற்றாக ரஜினிகாந்த் முன்னிறுத்தப்பட்டார்.

'அரசியலுக்கு வர வேண்டும். 1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் நிற்க வேண்டும்' என்ற குரல்கள் அப்போது எழுந்தன. அப்போது ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை என்றபோதும், தி.மு.க - த.மா.கா வேட்பாளரை ஆதரவு தெரிவித்து வீடியோ பிரசாரம் செய்தார் ரஜினிகாந்த். 'ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தா, தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது' என்று சொல்லி அவர் வெளியிட்ட ஐந்து நிமிட வீடியோ அந்தத் தேர்தலில் மிக முக்கியமான பிரசாரமாக பேசப்பட்டது. அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் பெரும் வெற்றிக்கும் அதுவே காரணமாகச் சொல்லப்பட்டது.

ரஜினிகாந்த் கருணாநிதி

கோவை குண்டுவெடிப்பும்... ரஜினியின் தேர்தல் ஆதரவும்...!

1996 தேர்தலோடு ரஜினியின் அரசியல் முடிந்து விடவில்லை. 1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது மீண்டும் தி.மு.க - த.மா.கா கூட்டணியை ஆதரித்தார் ரஜினிகாந்த். கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நேரம் அது. 'கோவை குண்டுவெடிப்பை இஸ்லாமியர்கள் செய்திருக்க முடியாது' எனச் சொன்னார். கோவை குண்டுவெடிப்பு சம்பவம் அந்த தேர்தலில் முக்கியமானதாக இருந்தது. பி.ஜே.பி.க்கு அதை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது. இந்நேரத்தில் 'இஸ்லாமியர்கள் இதை செய்திருக்க முடியாது'  என்பது பி.ஜே.பி.க்கு எதிரான பிரசாரமாகவே பார்க்கப்பட்டது.

பி.ஜே.பி.யும், இந்து அமைப்புகளையும் ரஜினியின் இந்த வாய்ஸ், அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரஜினியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும், போராடவும் திட்டமிட்டனர். அந்நேரத்தில் பி.ஜே.பி. தலைவர் அத்வானியிடம் போனில் பேசினார் ரஜினி. அதோடு தன் ஆன்மீக குரு தயானந்த சரஸ்வதி மற்றும் முக்கிய அரசியல் விமர்சகர் ஆகியோரைச் சந்தித்த ரஜினிகாந்த்,  அத்வானியின் அறிவுரை, தயானந்த சரஸ்வதியின் ஆசியுரை, அரசியல் விமர்சகரின் விமர்சனம் எல்லாம் என்ன செய்ததோ தெரியவில்லை. அப்படியே அமைதியானார். அதன் பின்னர் யாரையும் ரஜினி ஆதரிக்கவே இல்லை.

ரஜினிகாந்த் ராமதாஸ்

பா.ம.க.வுக்கு எதிராக ரஜினியின் அரசியல்

1998ம் ஆண்டு ரஜினியின் வாய்ஸ் சர்ச்சையை ஏற்படுத்த, 2001ம் ஆண்டு தேர்தலில் யாரையும் ரஜினி ஆதரிக்கவில்லை. 2001 ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வந்தது. 2004ம் ஆண்டு தேர்தலின் போது மீண்டும் ரஜினியின் கண்ணசைவு ரசிகர்களைத் தேர்தல் அரசியலில் களமிறக்கியது. 2002ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான 'பாபா' திரைப்படத்துக்குப் பா.ம.க. பிரச்னை செய்தது. இதனாலே அப்படம் பெரும் பாதிப்பை சந்தித்ததாக ரஜினி நம்பினார்.

இதனால் ஆவேசமடைந்தவர், 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ம.க.வுக்கு எதிராக வேலை பார்த்தனர் ரஜினி ரசிகர்கள். இது இரட்டை இலை, தாமரைக்கே ரசிகர்களின் ஓட்டு என்ற சூழலை அந்த தேர்தலில் உருவாக்கியது.

ரஜினிகாந்த் ஜெயலலிதா

தைரியலட்சுமியான ஜெயலலிதா !

யார் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவானலும் காப்பாற்ற முடியாது என ரஜினி சொன்னாரோ, அவரின் ஆட்சி மீண்டும் வந்திருந்தது. பா.ம.க எதிர்ப்பு நிலை  என்பது அ.தி.மு.க., பி.ஜே.பி. ஆதரவு நிலையாகக் கருதப்பட்ட நேரம் அது.  2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா நடந்தது. அப்போது அதில் பங்கேற்றார் ரஜினிகாந்த். ஜெயலலிதா பாராட்டு விழாவில் ரஜினி பங்கேற்றதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் பேசியது பரபரப்பைக் கூட்டியது. அந்த விழாவில் ஜெயலலிதாவை  'தைரியலட்சுமி' எனப் புகழ்ந்தார்.  ஜெயலலிதா இரு தேர்தல்களில் எதிர்த்த ரஜினிகாந்த், திடீரென ஜெயலலிதாவைப் புகழ்ந்தது என்பது அரசியல் உலகில் பரபரக்கப்பட்டது.

இதன்பிறகு எந்தத் தேர்தல்களிலும் தனது கருத்தை ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை. அரசியல் குறித்து கருத்துத் தெரிவிப்பதையும் தவிர்த்தார். தி.மு.க., அ.தி.மு.க.., பி.ஜே.பி. என அனைவருக்கும் நெருக்கமானவராகவே தன்னை நிறுத்திக்கொண்டார். 2010ம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடந்தது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த இந்த விழாவில், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். விஜயகாந்த் உள்ளிட்ட வெகு சிலரே பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

ரஜினிகாந்த் கருணாநிதி

இடைவிடாது தொடர்ந்த முரண்பாடுகள்...

இந்த விழாவில் அஜித் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ''எந்தப் பிரச்னைகள் வந்தாலும், சில அமைப்புகள் திடீரென்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தறாங்க. அதிலே எங்களையும் கலந்துக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க. மிரட்டுறாங்க. சென்சிட்டிவ்வான விஷயங்களில் அரசாங்கம் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி இவங்களே அறிக்கை விடுறாங்க. கூட்டம் நடத்துறாங்க. நாங்க கலந்துக்காட்டி தமிழர் கிடையாதுன்னு முத்திரை குத்துறாங்க. கருத்துச் சொல்லாட்டியும், அரசியலுக்கு வராட்டியும் விட மாட்டேங்குறாங்க... வந்தாலும் மிரட்டுறாங்க'' என்று அஜித் அதிரடியாகப் பேச... அதுவரை கருணாநிதியின் அருகே அமர்ந்திருந்து அவருடன் பேசிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், திடீரென எழுந்து நின்று கை தட்டினார். அஜித்தை விட அதிகம் கவனிக்கப்பட்ட ஆளாக ரஜினி மாறினார்.

"இந்த விழாவை விஜயகாந்த் உள்ளிட்ட சிலர் புறக்கணித்திருந்தனர். ரஜினிக்கு இதில் விருப்பம் இல்லையென்றால் புறக்கணித்திருக்கலாம். அதை விடுத்து விழாவில் பங்கேற்று, கருணாநிதியுடன் நெருக்கமாக அமர்ந்திருந்தவர், அஜித் பேசியதும் எழுந்து நின்று கை தட்டியது சரியல்ல. முரண்பாடுகள் நிறைந்த மனிதராக இருக்கிறார்" என அப்போது ரஜினி மீது விமர்சனம் எழுந்தது. இதற்கிடையே ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு  அளித்தார். மோடியையும், பி.ஜே.பி. தலைவர்களையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சந்தித்தார்.

ரஜினிகாந்த் மோடி

விளக்கமும், விளக்கத்துக்கு விளக்கமும்...

இதன் பின்னர் திரைப்பட வெளியீட்டின் போதெல்லாம் அரசியல் குறித்து பேசுவார். சினிமாவிலும் அரசியல் வசனங்கள் அதிகரித்தன. இதை ரஜினி விரும்பவே செய்தார்.  'அரசியலைப் பார்த்து பயப்படலை. தயங்குறேன்' ' 'நான் அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும்' எனப் பேசுவதை வழக்கப்படுத்தினார். அதன் தொடர்ச்சிதான் சில தினங்களுக்கு முன்னர் அரசியல் குறித்த ரஜினியின் பேச்சு.

ரஜினிக்கு அரசியல் ஆசை என்பது நிறைந்திருப்பதைதான் ரஜினியின் தொடர்ச்சியான பேச்சு உணர்த்துகின்றன. இப்போது பேசியதும் அப்படித்தான். இதைப் பேசிய மறுநாள் செய்தியாளர்களிடம் பேசும் போது, அரசியல் பற்றி நான் யோசிக்கவே இல்லை என்று சொன்னார் ரஜினி.

அரசியல் பற்றி வெளிப்படையாகப் பேசாதவர், அரசியல் பற்றி பேசினால் அது குறித்து விவாதிக்கலாம். ரஜினி அரசியல் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அரசியல் களத்தில் ரஜினிகாந்த் என்பவர் முரண்பாடுகள் நிறைந்த ஒரு மனிதர். அதனால்தான் அவர் பேச்சுக்கு அவரே விளக்கமும், அந்த விளக்கத்துக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்க வேண்டிய சிக்கல் ஏற்படுகிறது.

http://www.vikatan.com/news/coverstory/89683-its-been-21-years-since-rajini-entered-politics-rajinikanths-controversial-journey.html

Link to comment
Share on other sites

ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவுக்கு புகழாரம்...'போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்!'- ரஜினி சூசகம்

 
 

இன்று சென்னையில் ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் 'போர் வரும்போது நாம் பார்த்துக்கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள்' எனக் கூறியுள்ளார்.

rajini

சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ரசிகர்களை அவர் சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார். இதனிடையே ரசிகர்களுடனான  சந்திப்பின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. குறிப்பாக தனது ரசிகர்களிடம் 'பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வரக்கூடாது' என அவர் கோரிக்கை வைத்தார்.

இதனிடையே இன்று கடைசி நாளாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, 'வேறு மாநிலத்தில் இருந்து வந்த என்னை தமிழனாக மாற்றியது நீங்கள்தான்' எனக் கூறினார். மேலும் அரசியல் குறித்து நான் அன்மையில் பேசியது பெரும் விவாதங்களையும் எதிர்ப்புகளையும் கிளப்பும் என எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம்' என அவர் கூறியுள்ளார். 'சமூக வலைதளங்களில் தன்னை திட்டி எழுதுவதை பார்க்கும் பொழுது தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துக்கொள்கிறார்கள்' என வருத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை அவர் பாராட்டினார். குறிப்பாக அவர், 'போர் வரும்போது பார்த்துக் கொள்வோம், அதுவரை பொறுமையாக இருப்போம்' என்று ரஜினிகாந்த் சூசகமாக  ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே 'தமிழகத்தில் அரசியல் நிலவரம் சரியில்லை, நிர்வாக அமைப்பு சீர்கெட்டு போயுள்ளது' என ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருந்து என்னை தூக்கிப்போட்டாலும் நான் வேறு மாநிலத்துக்கு செல்லமாட்டேன். இமையமலைக்கு தான் செல்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.vikatan.com/news/politics/89744-rajni-praises-other-political-party-leaders.html

Link to comment
Share on other sites

DAK49ceUQAEcj7C.jpg

இதுல தலைவர் எதுலையுமே கலந்துக்க இல்ல ஆனா தமிழ் நாட்டுக்கு முதல்வர் ஆகணும்னு ஆசை மட்டும் இருக்கு கொஞ்சம்கூடவா மனசு உருத்தல ????

இதுல தலைவர் எதுலையுமே கலந்துக்க இல்ல ஆனா தமிழ் நாட்டுக்கு முதல்வர் ஆகணும்னு ஆசை மட்டும் இருக்கு கொஞ்சம்கூடவா மனசு உருத்தல ????இதுல தலைவர் எதுலையுமே கலந்துக்க இல்ல ஆனா தமிழ் நாட்டுக்கு முதல்வர் ஆகணும்னு ஆசை மட்டும் இருக்கு கொஞ்சம்கூடவா மனசு உருத்தல ????

Link to comment
Share on other sites

முடிவை நீங்கள் எடுங்கள் ரஜினி!

 

 
rajini_3166042f.jpg
 
 
 

1996-ல் ரஜினி அரசியலுக்கு வரலாமா என்று கேட்டு எடுத்த கருத்துக்கணிப்பு என்ன சொன்னது?

மீண்டும் அரசியல் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் ரஜினி. பொதுவாக, தனிக் கட்சியைத் தொடங்க முற்படும்போது நடிகர்கள் பேசும் ‘தூய பரிசுத்தவாத’த்தையே ரஜினியும் இப்போது உதிர்த்திருக்கிறார். அதிமுகவைத் தொடங்கியபோது எம்ஜிஆரும், தேமுதிகவைத் தொடங்கியபோது விஜயகாந்தும் பேசிய பேச்சுகளை எடுத்துப் படித்துப் பார்த்தால், அந்தப் பேச்சுகளுக்கும் ரஜினி பேச்சுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்க முடியும். பிற்காலத்தில் அந்தக் கட்சிகள் வந்தடைந்திருக்கும் நிலையையும் ரஜினி முழக்கத்தின் பின்னுள்ள மாயாவாதத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதை ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். ஆனால், எந்த நோக்கத்தின்பேரில் அவர்கள் அரசியலுக்குள் நுழைகிறார்கள் அல்லது நுழைய வைக்கப்படுகிறார்கள் என்பது இங்கு பரிசீலிக்கப்பட வேண்டியது. ரஜினியின் அரசியல் ஆசைக்கும் பிறருடைய அரசியல் ஆசைக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. எம்ஜிஆரோ, சிவாஜியோ, விஜயகாந்தோ, பாக்யராஜோ ஒரு முடிவு எடுப்பதில் தெளிவாக இருந்தவர்கள். ரஜினி தானும் குழம்பி மக்களையும் குழப்புபவர் என்பதே அவருடைய ஆசையின் பின்னுள்ள வேறுபாடு.

‘ஆண்டவன் சொல்ல வேண்டும்’ என்று தன்னுடைய அரசியல் நிலைப்பாடு தொடர்பில் அடிக்கடி சொல்பவர் ரஜினி. ஆனால், ஆண்டவனிடம் அல்ல; தன் உள்ளுணர்விடமும் அல்ல; தன்னைச் சுற்றியிருப்பவர்கள் சொல்வதையே அவர் கேட்கிறாரோ என்று தோன்றுகிறது. அரசியல் என்பது அடிப்படையில் துணிச்சலை முதலீடாகக் கொண்ட தொழில். சுயதுணிச்சல் இல்லாதவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இது ஒருவரோடு முடியும் கதை அல்ல என்பதால்தான்.

சிவாஜியின் தெளிவு

‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்கிற தனிக் கட்சியைத் துவக்கிய சிவாஜிகணேசன், அதிமுகவின் ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து 50 தொகுதிகளைப் பெற்றுத் தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கியபோது, அவருடன் தமிழகம் முழுக்கப் பயணிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. செல்லும் இடங்களில் எல்லாம் திரளான கூட்டம். உற்சாகம் ததும்பப் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் போட்டியிட்ட திருவையாறு தொகுதியிலேயே மோசமான தோல்வியைத் தழுவினார். ‘‘அவ்வளவு கூட்டம் வந்துச்சே.. ஆனா யாரும் ஓட்டுப் போடலையேப்பா!’’ என்ற வார்த்தைகளையே தேர்தல் முடிந்த பிறகு உச்சரித்த சிவாஜி, கூடிய சீக்கிரமே தெளிவான முடிவை எடுத்தார்: அரசியல் நமக்குச் சரிப்படாது!

அரசியலுக்கு வருவதாகச் சொன்னதை ரஜினியின் வார்த்தையில் சொன்னால், ஒரு ‘முரட்டுத் தைரியத்தோடு’ களம் இறங்கியவர் தேமுதிக தலைவரான விஜயகாந்த். கட்சியைத் துவக்கி, அதை மக்களிடம் எடுத்துச் செல்ல மற்ற தலைவர்களைவிட அதிகப்படியான கிராமங்களுக்கு அலைந்து எதிர்பார்த்ததைவிடக் கூடுதலான வாக்கு சதவிகிதத்தைப் பெற்று எதிர்க் கட்சித் தலைவராகவும் ஆனவர். சினிமாவைக் காட்டிலும் கூடுதலான அலைச்சல்கள், மன உளைச்சல்கள், உடல் நலக் குறைவு என எல்லா இழப்புகளையும் தாண்டினாலும் அவருக்கு அரசியல் சார்ந்து ஒரு தெளிவு இருக்கிறது: அரசியல் நமக்கு வேண்டும்!

அரசியல் வேண்டாம்

சினிமாக்காரர்களின் அரசியல் கனவுகளுக்கு எம்ஜிஆர், என்டிஆரில் தொடங்கி பாக்யராஜ், டி.ராஜேந்தர் வரை வெற்றி - தோல்விகளுக்கான இரு பக்க முன்னுதாரணங்களும் உள்ளேயே இருக்கின்றன. அவற்றைக் கொண்டே அவர்கள் முடிவை எடுக்க முடியும். மக்கள் மீது திணிக்க வேண்டியது இல்லை. மக்கள் கருத்தைத் தெரிந்துகொள்ள முற்படுவதிலும் தவறில்லை.

நவரச நடிகர் என்றழைக்கப்பட்ட முத்துராமன் ஓர் உதாரணம். சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரம். அரசியலுக்குள் இறங்கச் சொல்லி சிலர் அவருக்கு ஆசை காட்டினார்கள். அவருக்கும் அந்தச் சபலம் இருந்திருக்க வேண்டும். தமிழின் பிரபலமான வார இதழ் ஒன்றில் ‘நான் அரசியலுக்கு வரலாமா? உங்கள் கருத்தை எழுதுங்கள்!’ என்று வெளிப்படையாக அறவித்தார். பதிலாக வந்த கடிதங்களில் பெரும்பாலானவை ‘அரசியலில் இறங்க வேண்டாம்.. நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்!’ என்றன.

அரசியலில் இறங்கும் முடிவை மாற்றிக்கொண்ட முத்துராமன், அதற்குப் பின் காலம் முழுமைக்கும் அரசியல் பக்கம் திரும்பவில்லை. ரஜினியும் இப்படி ஒரு மக்கள் கருத்தை ஏற்கெனவே அறிந்திருந்தார். அது 1996. ‘பாட்ஷா’ படம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்காத நேரம் அது. பல பத்திரிகைகளில் ரஜினி அரசியல் பற்றிய கவர் ஸ்டோரிகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருந்தன. அப்போது ‘துக்ளக்’கில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ‘துக்ளக்’ அலுவலகத்துக்கு சோவைப் பார்க்க ரஜினி அடிக்கடி வந்து போய்க்கொண்டிருப்பார்.

ரஜினி அரசியலுக்கு வரலாமா?

அந்தச் சமயத்தில் திருச்சி, தஞ்சாவூர் தொடங்கி ராமநாதபுரம், குமரி வரை தமிழகத்தில் அரசியல்ரீதியான ஒரு கருத்துக் கணிப்பை ‘துக்ளக்’ பத்திரிகைக்காக நடத்தத் திட்ட மிட்டிருந்தோம். அதற்காக நாங்கள் கிளம்பும்போது ஆசிரியர் சோ சொன்னார், “நீங்க அந்த சர்வேகூட எனக்காக இன்னொரு விஷயத்தைப் பத்தியும் சர்வே பண்ணிட்டு வரணும்’’ என்றார்.

‘‘என்ன சார்?’’

‘‘ரஜினி அரசியலுக்கு வரலாமா, அவர் வர்றதைப் பத்தி ஜனங்க என்ன நினைக்கிறாங்க, அவரை ஏத்துக்குறாங்களா, இல்லையான்னு கேட்டுட்டு எனக்குத் தனியா ஒரு ரிப்போர்ட் கொடுக்கணும். ஆனா, இது பப்ளிஷ் பண்ணுறதுக்காக இல்லை!’’

அப்படியென்றால், அது எதன் நிமித்தமானது என்று நான் புரிந்துகொண்டேன்.

அந்தக் கருத்துக்கணிப்பில் ஆயிரக்கணக் கானோரைச் சந்தித்தோம். பெருநகரங்களிலிருந்து கிராமங்கள் வரை பலதரப்பட்டவர்களைச் சந்தித்து, அவர்கள் கருத்துகளை கேஸட்டுகளாகப் பதிவும் செய்து வந்தோம்.

‘‘ரஜினி அரசியலுக்கு வர்றதைப் பத்தி என்ன நினைக்கிறாங்க.. அதைச் சொல்லுங்க?’’ - சோ உற்சாகம் பொங்கக் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

நான் அந்தக் கருத்துக்கணிப்பின் விவரங்களை அவரிடம் ஒப்படைத்தேன். 75%-க்கும் அதிகமான வர்கள் ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்ப வில்லை என்று தெரிவித்திருந்தார்கள். மீதமுள்ள 25%-ல் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.

‘‘அப்போ ரஜினி அரசியலுக்கு வரணும்னு பத்திரிகைகளில் எழுதறதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’’

‘‘சார்.. எனக்கே இது அதிர்ச்சிதான். ஆனா, நம்ம மீடியா ரிப்போர்ட்டை மட்டும் வெச்சிக்கிட்டு எந்த முடிவுக்கும் வந்துட முடியாது - மக்கள் மனசை அங்கே போய்த்தான் தெரிஞ்சுக்க முடியும்கிறதுக்கு இது இன்னொரு உதாரணம் சார்!”

அறிக்கையைக் கொடுத்துவிட்டு நான் கிளம்பிவிட்டேன். இது நடந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. மறுபடியும் அரசியலை எதிர்கொள்வது பற்றிய கேள்வி ரஜினிக்கு முன் நிற்கிறது. அந்தக் கருத்துக்கணிப்புபோல ஒன்றை நடத்தி முடிவைத் தெரிந்துகொண்டு அரசியல் பக்கம் வரட்டும். ஆனால், முடிவெடுக்கும் குழப்பத்தை மக்கள் மீது அவர் திணிப்பது நியாயமே இல்லை. 1996-ல் நடந்ததை விபத்து என்று இப்போது சொல்கிறார் ரஜினி.

இப்போதைய முடிவை எதிர்காலத்தில் விபத்து என்று சொல்ல மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தன்னுடைய முடிவையே எடுக்க முடியாதவர், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான முடிவுகளை எடுக்க வேண்டிய ஒரு வேலையைக் கற்பனைசெய்வது என்ன நியாயம்?

http://tamil.thehindu.com/opinion/columns/முடிவை-நீங்கள்-எடுங்கள்-ரஜினி/article9707508.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23 வருடம் கன்னடராக இருந்தேன்... 44 வருடங்களாக பச்சை தமிழனாக இருக்கிறேன்.. - ரஜினி !

color.jpg

 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதான் ஒரு கன்னடக் கூத்தாடியிடமிருந்து தமிழ் நாடு விடுதலை பெற்று ஒழுங்கான தலையை தேடி அல்லாடிக்கொண்டிருக்கிறது..

இந்த சந்து இடைவெளியில் இன்னொரு கூத்தாடி ஆக்கிரமிக்கப் பார்க்கிறார்..

கிரகணம், இன்னமும் தமிழர்களை விட்டபாடில்லை..!  urticaire.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

 

அந்த கறுப்புச்சட்ட தான் ரஜனியின் அரசில் தமிழக கல்வியமைச்சர் என்ற தகவலை தர கடமைப்பட்டுள்ளேன், மாகஜனங்களே.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.