Jump to content

பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..! (படங்கள் இணைப்பு)


Recommended Posts

பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..! (படங்கள் இணைப்பு)

 

 

பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியாக இமானுவல் மக்ரோன் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.

404E96CB00000578-4504038-Emmanuel_Macron

404C80EE00000578-4504038-Following_the_c

இரண்டு கட்டங்களாக இடம்பெற்றுள்ள குறித்த ஜனாதிபதி தேர்தலில்  சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று  தன்னை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி கட்சி தலைவர் மரின் லீ பென்னை தோல்வியுற செய்துள்ளார்.

404E8D1C00000578-4504038-French_Presiden

404D06A000000578-4504038-Macron_pictured

மேலும் மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த லீ மெரீன், தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும், ஆளும் தரப்பிற்கு பலமான எதிர்க்கட்சியாக செயல்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

404D12A200000578-4504038-Mr_Macron_pictu

404D61E300000578-4504038-Speaking_as_the

404D44A500000578-4504038-New_French_Pres

இந்நிலையில் இன்று இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வின் போது மக்ரோன், முன்னாள் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயிடமிருந்து, அணுவாயுத குறியீடுகளை பெற்று கொண்டுள்ளார். அத்தோடு ஜனாதிபதியாக மக்ரோனின் முதல் வெளிநாட்டு பயணமானது ஜெர்மனிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.virakesari.lk/article/19989

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானும் வாழ்ந்து ...........
நாட்டு குடிகளையும் வாழ வைக்க எனது வாழ்த்துக்கள் !

இப்போதைய உலக சூழலில் இவரது வெற்றியைவிட ...
இவரை எதிர்த்து போட்டியிடடவரின் தோல்வியே 
ஒரு மூன்றாம் உலக குடியான எனது மகிழ்ச்சியாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for trump and melania

404D12A200000578-4504038-Mr_Macron_pictu

இரு தம்பதிகளுக்கு இடையே உள்ள ஒரு 'வித்தியாசமான' ஒற்றுமை என்ன?

Link to comment
Share on other sites

வேற என்ன வயது வித்தியாசம்தான்..

6 minutes ago, Nathamuni said:

Image result for trump and melania

404D12A200000578-4504038-Mr_Macron_pictu

இரு தம்பதிகளுக்கு இடையே உள்ள ஒரு 'வித்தியாசமான' ஒற்றுமை என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ பாசத்தையும்  பாசத்தையும் தான்  அவர்களின் கைகள் காட்டுகின்றன.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

வேற என்ன வயது வித்தியாசம்தான்..

 

முடியல்ல நவீனன்:rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

Image result for trump and melania

404D12A200000578-4504038-Mr_Macron_pictu

இரு தம்பதிகளுக்கு இடையே உள்ள ஒரு 'வித்தியாசமான' ஒற்றுமை என்ன?

மேலிருக்கும் பட தம்பதிகள் ஆட்டம் பாட்டத்தினால் ஒன்று கூடினார்கள்.
கீழிருக்கும் பட தம்பதிகள் அறிவை போதிக்கும் போது ஒன்று கூடியவர்கள்.
மேலிருக்கும் பட கதாநாயகிக்கு எதுவுமேயில்லை.
கீழிருக்கும் பட கதாநாயகிதான் எதுவுமே.

வித்தியாசமான ஒற்றுமை...
அங்கே ஆண்வலிமை...
இங்கே பெண்வலிமை....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.