Jump to content

கால்பந்து உலகின் எதிர்கால சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்!


Recommended Posts

கால்பந்து உலகின் எதிர்கால சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்!

 
 

கால்பந்து உலகில் மெஸ்சி, ரொனால்டோவுக்கு நிகராக உருவெடுத்து வரும் டாப் 5  இளம் வீரர்களை பற்றிய விவரம்.

 பிளேபாய் நெய்மர்

கால்பந்து வீரர் நெய்மர்

நெய்மர் டா சில்வா, பிரேசிலைச் சேர்ந்த 25 வயது இளம் முன்கள வீரர். பிரேசில் அணிக்காகவும் ஸ்பெயின் நாட்டின் டாப் மோஸ்ட் கிளப் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரம். முன்னாள் சூப்பர் ஸ்டாரான ரொனால்டினோ போன்ற பிரேசிலின் மூத்த வீரர்களுடனும் தற்போதைய சூப்பர் ஸ்டாரான மெஸ்சியுடனும் இணைந்து விளையாடி அனுபவம் கற்றவர். எதிரணி வீரர்களை குழப்பும் மந்திர கால்களுக்குச் சொந்தக்காரர். டிரிபிளிங் மூலம் லாவகமாக பந்தைக் கடத்துவதில் கெட்டிக்காரர். எத்தனை முறை தாக்குதலுக்கு உள்ளானாலும் களத்தில் சூறாவளியாய் சுழன்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். 

சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பாரீஸ் செயிண்ட் ஜெர்மன் அணிக்கு எதிரான 2 வது போட்டியில் இவர் ஆடிய ருத்ரதாண்டவத்தால் பார்சிலோனா 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதற்கு முந்தைய சுற்றில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த போதிலும் இந்தப் போட்டியில் மீண்டு வந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியில் 2 கோல்கள், ஒரு அசிஸ்ட் என நெய்மாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 

களத்தில் அனைத்து ஏரியாக்களிலும் கில்லியான இவர் விதவிதமான ஹேர்ஸ்டைல்களிலும் கலக்கக்கூடியவர். அதீத திறமையால் அடுத்த முறை உலகக் கோப்பையை பிரேசில் அணிக்கு வென்றுதருவார்; மெஸ்சிக்குப் பிறகு பார்சிலோனா அணியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வார் என கால்பந்து உலகம் நம்புகிறது.  நெய்மர் எதிர்காலத்தில் கால்பந்து உலகை ஆள்வார் என்பதில் சந்தேகமில்லை. 

நடப்பு சீஸனில் பார்சிலோனா அணிக்காக 37 போட்டிகளில் 14 கோல்கள் அடித்து, 18 கோல்கள் அடிக்க உதவியுள்ளார். 2018 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றில் பிரேசில் அணிக்காக 7 போட்டிகளில் 6 கோல்கள் அடித்துள்ளார். மேலும் சக வீரர்கள் 6 கோல்கள் அடிக்க உதவியாக இருந்துள்ளார். 

 கால்பந்து வீரர் நெய்மர்
 

 ஃபினிஷர் டிபாலா

கால்பந்து வீரர் டிபாலா

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த 23 வயதான இளம் ஸ்டிரைக்கர் பாலோ டிபாலா. அர்ஜென்டினா தேசிய அணிக்காகவும் இத்தாலியின் டாப் கிளப்பான யுவென்டஸ் அணிக்காகவும் விளையாடி வரும் இவரை ‘அடுத்த மெஸ்சி’ என வர்ணிக்கிறது கால்பந்து உலகம். உயரம், திறமை இரண்டிலும் மெஸ்சியைப் போன்றவர். மெஸ்சியைப் போலவே இடது காலில் கோல் அடிப்பதில் மன்னன்.  ஃபினிஷிங்கில் கெட்டிக்காரர். தூரத்தில் இருந்தாலும் கூட துல்லியமாக கோல் அடிப்பதில் வல்லவர்.

சாம்பியன்ஸ்லீக் தொடரில் பார்சிலோனா அணிக்கெதிரான முதல் காலிறுதியில் இரண்டு சூப்பர் கோல்கள் அடித்து யுவென்டஸ் அணியை வெற்றிபெறவைத்தார்.  எதிர்காலத்தில் மெஸ்சியின் இடத்தை நிரப்புவார் என்பது இவரைப் பற்றிய எதிர்பார்ப்பு. நடப்பு சீசனில் யுவென்டஸ் அணிக்காக 38 போட்டிகளில் 13 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் 6 கோல்கள் அடிக்க உதவியுள்ளார். 2018 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணிக்காக 3 போட்டிகளில் விளையாடியபோதும் கோல் அடிக்கவில்லை. இனி வரும் போட்டிகளில் கோல் ஸ்கோரர் பட்டியலில் டிபாலா பெயர் நிச்சயம் இடம்பெறும் என நம்பலாம்.

டிபாலா

ஆல்ரவுண்டர் போக்பா

கால்பந்து வீரர் போக்பா

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 24 வயதான அட்டாக்கிங் மிட்ஃபீல்டர் பால் போக்பா. ஃபிரான்ஸ் தேசிய அணிக்காகவும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காகவும் விளையாடி வரும் இவர்தான் கால்பந்து வரலாற்றிலேயே அதிக தொகைக்கு விலைக்கு வாங்கப்பட்ட வீரர். இத்தாலியின் யுவென்டஸ் அணியில் கெத்துக்காட்டிய இவரை 89.3 மில்லியன் பவுண்டுகளுக்கு மான்செஸ்டர் யுனைடெட் கடந்த ஆண்டு வாங்கியது. அட்டாக், டிஃபன்ஸ் என எதுவாயினும் களத்தில் இறங்கி அடிக்கும் இவருக்கு வேகமும் கோபமும் கூடுதல் பலம். 

ஒரு சீசனுக்குள்ளேயே ஐந்தாறு முறை ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொள்ளும் வெறியர். எத்தனை விதமாக பந்தை கடத்த முடியுமோ அத்தனை வித்தைகளையும் ஜஸ்ட் லைக் தட் செய்யக்கூடியவர். தனது ஆல் ரவுண்டர் திறமையால் எதிர்காலத்தில் ஒரு ரவுண்ட் வருவார். நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 44 போட்டிகளில் 7 கோல்கள் அடித்து, 4 கோல்கள் அடிக்க உதவியுள்ளார். 2018 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்றில் ஃபிரான்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்துள்ளார். 


பால் போக்பா


ரன்னர் பெல்லெரின் 


கால்பந்து வீரர் ஹெக்டர் பெல்லெரின்

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 22 வயதான பின்கள தடுப்பாட்ட வீரர் ஹெக்டர் பெல்லெரின். இங்கிலாந்தின் ஆர்செனல் கிளப் அணிக்காக விளையாடி வரும் இவர் வளர்ந்து வரும் இளம்புயல். பந்தைத் துல்லியமாக பாஸ் செய்வதில் கில்லாடி. இவரின் பலம் அதீத வேகம். எங்கிருப்பார் எப்போது வருவார் என யாருக்கும் தெரியாது. ஆனால் தன் அணியின் கோல்கீப்பர் ஆபத்திலிருக்கும் போது ஆபத்பாந்தவனாய் சறுக்கிக்கொண்டு வந்து பந்தை வெளியேற்றிவிடுவார். தன்னைத்தாண்டி பந்து அரைகிலோமீட்டர் சென்று விட்டாலும் கூட அசராமல் விரட்டிச் சென்று கிளியர் செய்வது இவரின் சிறப்பம்சம். 

தடுப்பாட்ட கில்லியான இவரை விலைக்கு வாங்க அனைத்து முக்கிய கிளப்புகளும் போட்டியிடுகின்றன. அதிலும் பார்சிலோனா அணி எப்படியாவது இவரை வாங்கிவிட வேண்டுமென்ற வெறியில் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது என்பதிலேயே இவரின் எதிர்கால முக்கியத்துவத்தை உணரலாம். நடப்பு சீசனில் ஆர்செனல் அணிக்காக 38 போட்டிகளில் 3 கோல்கள் அடிக்க உதவியுள்ளார். 85 சதவீதத்திற்கு மேல் துல்லியமாக பந்தை பாஸ் செய்துள்ளார். வெகுவிரைவில் ஸ்பெயின் தேசிய அணியில் இடம்பிடிப்பார் என்பது கால்பந்து வல்லுநர்கள் கணிப்பு.

bellarin_18409.png
 

கீப்பர் டெர் ஸ்டேகன்

கீப்பர் டெர் ஸ்டேகன் - கால்பந்து

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 24 வயது கோல் கீப்பர் மார்க் ஆண்ட்ரே டெர் ஸ்டேகன்.  பார்சிலோனா அணியின் முதன்மை கோல்கீப்பர். ஒவ்வொரு ஆட்டத்திலும் திறமையை மெருகேற்றிக்கொண்டு வரும் இவர், தொடர்ந்து ஆரோக்கியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.நெருக்கடியான சூழ்நிலையிலும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். லா லிகா தொடரில் கடந்த ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற ரியல் மட்ரிட் அணிக்கெதிரான சுவராஸ்யமான போட்டியில் துடிப்பாக விளையாடி 13 ஷாட்டுகளை  தடுத்து பார்சிலோனா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். எதிர்காலத்தில் தலைசிறந்த கோல்கீப்பராக உருவெடுப்பார் என கால்பந்து வட்டாரத்தில் கொண்டாடப்படும் முதன்மையான வீரர். நடப்பு சீஸனில் பார்சிலோனா அணிக்காக 43 போட்டிகளில்  17 ஆட்டங்களில் கோல் விழாமல் பார்த்துக்கொண்டதுடன் 143 ஷாட்டுகளையும் தடுத்துள்ளார். ஜெர்மனி அணியில் இன்னமும் உலகின் தற்போதைய சிறந்த கோல்கீப்பரான மேனுவல் நோயர் ஃபார்முடன் இருப்பதால் இவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. 

 


கோல்கீப்பர் டெர் ஸ்டேகன் கால்பந்து

 

 
 
 

http://www.vikatan.com/news/sports/89267-top-5-emerging-football-players.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.