• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

10 செகண்ட் கதைகள் 15

Recommended Posts

10 செகண்ட் கதைகள்

 

 

p102a.jpg

பயம்

திருடிய சிசிடிவி கேமராவை, தன் சொந்த வீட்டில் மாட்டினான் திருடன்.

- வேம்பார் மு.க.இப்ராஹிம்


p102b.jpg

விளக்கம்

'புரளின்னா என்ன?' என்று கேட்ட பேரனுக்கு, 'வாட்ஸ்அப் மெசேஜ்' என்றார் தாத்தா.

- வேம்பார் மு.க.இப்ராஹிம்


p102c.jpg

திட்டம்

கடும் பண நெருக்கடிக்கு ஆளான ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ., `அரசுக்கு எதிராக அறிக்கை விடலாமா?' என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.

- ரா.ராஜேஷ்


p102d.jpg

ஷவர்

`எவ்வளவு பெரிய ஷவர்' என்றது, மழையில் நனைந்த குழந்தை.

- சங்கரி வெங்கட்


p102e.jpg

வேலை

`இங்கே, டாஸ்மாக்கை எல்லாம் அடிச்சு மூடுறாங்க, அங்கேயே வேலை தேடிக்கோ' என்று நண்பனுக்குத் தகவல் கொடுத்தான் பீகாரி.

- கி.ரவிக்குமார்


p102f.jpg

சொந்தம்

ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய திவ்யாவும் கீதாவும் தூரத்துச் சொந்தம் எனத் தெரிந்ததும், நட்பைத் துண்டித்துக்கொண்டார்கள்.

- கே.சதீஷ்


p102g.jpg

கடமை

சேஸிங் செய்து துரத்திப் பிடித்தது போலீஸ், கமிஷன் தராத மணல் லாரியை..!

- ராஜி ராம்


p102h.jpg

மாற்றம்

``இது நீலகண்டன் வீடுதானே?''

``இல்லைங்க. இப்ப இது மணிகண்டன் வீடு'' என்றார் வாடகைக்குக் குடியிருந்தவர்.

- பெ.பாண்டியன்

http://www.vikatan.com

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    

   அறிவுரை

   “ரொம்ப கிட்ட உட்கார்ந்து டி.வி  பார்க்காதேன்னு எத்தனை தடவை சொல்றது!” என மகனை அதட்டினார் செல்ஃபோனில் படம் பார்த்துக்கொண்டிருந்த அப்பா.

    - கோ.பகவான்

   அப்பாவி

   ``ஃபுல் பாட்டில் குடிக்கவேண்டிய கட்டாயம் என்ன வந்துச்சு?” என மனைவி கேட்க,  ``பாட்டில் மூடி தொலைஞ்சுபோச்சு” என அப்பாவியாய் சொன்னான் அரவிந்த்.

   - ஹேமலதா

   சம்பளம்

   பள்ளிக் கட்டணம் கட்டாததால் மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தார், மூன்று மாதங்களாகச் சம்பளம் கிடைக்காத அந்த ஆசிரியை.

   - தொண்டி முத்தூஸ்.

   விமர்சனம்

   படம் பார்க்காமலேயே  அடித்து உரித்து விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தார் பிரபல ஃபேஸ்புக் போராளி!

   -கே.மணிகண்டன்

   நேர்மை

   ``அளவெல்லாம் சரியாதான்மா இருக்கும். குறைஞ்சா எனக்கு போன் பண்ணுங்க” என்று கடைக்காரர் எழுதிக் கொடுத்திருந்த சீட்டில் வெறும் ஒன்பது எண்கள்தான் இருந்தன.

   - எம்.ஜெயலஷ்மி

   கடன்

   எல்லாக் கடனையும் அடைத்துவிட்டான், பேங்கில் லோன் வாங்கி.

   - எஸ்.கே.ஜீவா

   லைக்ஸ்

   ``ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. நான் எல்லோருக்கும் லைக் போடுறேன்... ஆனா எனக்கு யாரும் லைக்ஸ் போட மாட்றாங்க” என்றாள் நிவேதிதா.

   -  மாறன்

   ரசிகன்

   “உங்க படத்தை டவுன்லோடு பண்ணி, குடும்பத்தோடு பார்ப்போம் சார்!” என்றான் நடிகருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகன்.

   - கோ.பகவான்

   விளம்பரம்

   ‘’வாசல்ல ஒரு காரு நின்னாதான்டா பெரியாளுங்கள்லாம் சாப்பிடுறாங்கபோலன்னு கூட்டம் வரும்’’ என செட் ப்ராப்பர்ட்டியாக ஒரு காரை நிறுத்திவைத்தார் நெடுஞ்சாலை ஹோட்டல் ஓனர்.

   - கே.சதீஷ்

   சண்டை

   ``அப்பா டைம் ஆயிடுச்சு... அம்மாவும் நீயும் இன்னும் சண்டை போடல'' என்றாள் சுட்டி அனிதா!

   - கே.மணிகண்டன்
   https://www.vikatan.com/
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
    

   கெடுதல்

   ``எப்பப் பாரு டிவி பாத்தா கண்ணு என்னத்துக்குடா ஆகும்..?” எனச் சத்தம் போட்டார், வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா!

   - சி.சாமிநாதன்

   வீடு

   “தண்ணி வசதி இல்லாட்டியும் பரவாயில்ல.. கொசு இல்லாத வீடா பாருங்க’’ என்றான், தரகரிடம் ராகுல் .

   - எம். விக்னேஷ்

   கல்வி

   ``மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’’ எனக் கேட்ட மகனிடம் இரண்டுமே முக்கியம் இல்லை என்றார் தனியார் பள்ளி நடத்திவந்த அரசியல்வாதி!

   - கே.சதீஷ்

   அறிவுரை

   ``பேரன்டிங் ரொம்ப முக்கியம். குழந்தைகளைத் திட்டாதீங்க. அன்பா இருங்க’’ என்ற பள்ளி ஆசிரியை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மகனை அடி பின்னியெடுத்தார்.

   - கே.சதீஷ்

   ரகசியம்

   பஸ்சில் அடுத்தடுத்த சீட்டில் உட்கார்ந்துகொண்டு செய்திகளை வாட்ஸ்அப்பில் பரிமாறிக் கொண்டனர் இரு நண்பர்கள்.

   - சீர்காழி.ஆர்.சீதாராமன்

   பங்கு

   வீட்டிலுள்ள அனைவருக்கும் தன் கடனில் பங்கிருப்பதாக உயில் எழுதிவிட்டு இறந்தார் சந்திரன்

   - மணிகண்டபிரபு

   அத்துமீறல்

   அத்துமீறி நுழைந்த பக்கத்துத் தெரு நாயை சேர்ந்து குரைத்தே விரட்டியடித்தன இந்தத் தெரு நாய்கள்!

   - கே.மணிகண்டன்

   ஷாப்பிங்

   ``எந்த நேரமும் போனையே நோண்டிட்டு இருக்காதே’’ என்ற கணவனிடம்... ``ஆன்லைன் ஷாப்பிங் பண்றேன். வேண்டாம்னா சொல்லுங்க கடைக்குப் போவோம்’’என்றாள் மனைவி!

   - கே.மணிகண்டன்

   லைக்ஸ்

   ``என்னடி, இந்த கலர் சேலை எடுத்திருக்கே?” என்ற தோழியிடம், “இதான்டி ஃபேஸ்புக்ல ஆயிரம் லைக்ஸ் வாங்கின சேலை...” எனப் பெருமையாய்ச் சொன்னாள் கவிதா..!

   - சி.சாமிநாதன்

   செல்ஃபி

   “என் கல்யாணத்துக்கு வந்து என்னுடன் செல்ஃபி எடுத்துக்கணும்..” என முன்னாள் காதலனை அழைத்தாள் முன்னாள் காதலி.

   - கிருஷ்ணகுமார்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    


    
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
     ஓவியங்கள்: செந்தில்
    

   ஆசி

   பெண் குழந்தையுடன் அம்மன் கோயிலுக்கு சந்தோஷமாக வந்த கணவன் மனைவியிடம் ``அடுத்தமுறை ஆண் குழந்தையுடன் வரணும்’’ என ஆசி வழங்கினார் கோயில் பூசாரி!

   - கே.மணிகண்டன்

   ஓய்வு

   “நாளைக்கு சண்டே. கொஞ்சம்கூட ரெஸ்ட் கிடைக்காது’’ என்றார் சலூன் கடைக்காரர்!

   - பிரகாஷ் ஷர்மா

   நாடகம் 

   ‘தடியடி’ நடத்திவிட்டுக் காவல்துறையினர் நான்கு பேர் ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆகினர்!

   - இரா.இரவிக்குமார்

   ஸ்டேட்டஸ்

   நண்பனின் பெருமைகளைக் கவிதைகளாக எழுதி ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வாங்கினான், அவனின் சாவுக்குப்போக நேரமில்லாத வரதன்!

   - பெ.பாண்டியன்

   சண்டை

   “வாய்ல வைக்க முடியல... என்னடி சமைச்சிருக்கே...”

   “அப்படித்தான் சமைப்பேன்... இஷ்டமிருந்தா சாப்பிடு.இல்லேன்னா போ” என்று கணவனும் மனைவியும் சண்டை போட்டனர், வாட்ஸ்அப்பில்!

   - சி.சாமிநாதன்

   விளையாட்டு

   “தாத்தாவுக்குப் போரடிக்குதாம். வீடியோகேம்ஸ் விளையாடக் கற்றுக்கொடு” மகனிடம் சொன்னார் அப்பா!

   -பெ.பாண்டியன்

   முதல் செலவு

   சம்பளம் வந்ததும் முதலில் போய் ஒரு மாதத்திற்கான மாத்திரை வாங்கினான் மனோ!

   - ரியாஸ் 

   அழுகை

   செல்போனைக் கொடுத்து சமாதானம் செய்தது குழந்தை, அழுதுகொண்டிருந்த தன் அம்மாவை!

   - கிருஷ்ணகுமார்

   கண்காணிப்பு

   ஆயிரம் கண்ணுடைய அம்மனைக் கண்காணித்துக்கொண்டிருந்தது சி.சி.டி.வி. கேமரா!

   - கிருஷ்ணகுமார்

   புகார்

   ‘`என் புருஷன் ரொம்ப வேஸ்ட்... எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது’’ எனத் தோழியிடம் புகார் சொல்லிக்கொண்டிருந்தாள் திவ்யா!

   - கே.சதீஷ்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    
   பால்

   ``இந்தப் பால்காரன், `பசும்பால்’னு சொல்லி எந்தப் பாலைக் கொடுக்கிறானோ தெரியலை?’’ என்று சொல்லிக்கொண்டே தன் குழந்தையின் ஃபீடிங் பாட்டிலில் பாலை ஊற்றினாள்... சமீபத்தில் அம்மாவாகியிருந்த கோமதி! 

   - நெய்வேலி தேன்ராஜா

   படிந்த பேரம்

   நாற்பதில் இருந்து ஐம்பது தொகுதிகளாக உயர்த்தியும் படியாத கூட்டணி பேரம், நான்கே பெட்டிகளில் படிந்தது!

   - அஜித்

   ஸ்டார்நைட்

   ``ரஷ்யாவுல ஒரு பாட்டுக்கு நயனோடு டான்ஸ் ஆடுறேன்” - சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் மனைவியிடம், ஹீரோவாக நடிக்க முயற்சித்து வாய்ப்பு கிடைக்காமல் குரூப் டான்ஸரான கோவிந்த்!

    - பெ.பாண்டியன்

   முள்

   ``கால்ல சின்னதா ஒரு முள்ளு குத்திருச்சு.

   ஒரு வாரம் ஆச்சு... அடியெடுத்துவைக்க முடியலை...’’ என்று டாக்டரிடம் முனகினான் லாடம் அடிப்பவன்!

   - தங்க.நாகேந்திரன்

   புறக்கணிப்பு

   பெட்டி வாங்கிய பின்னர் தலைவர், தொண்டர்களிடம் கூறினார், ``இந்தத் தேர்தலில் பணம் விளையாடும் என்பதால், நாம் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை!”

    - வேம்பார் மு.க.இப்ராஹிம்

   எட்டு... ஏழரை

   8 போட்டு லைசென்ஸ் வாங்கியவன், புது பைக்கை புக் செய்யும்போது சொன்னான்... ``கூட்டல் எண் 8 வராம பாத்துக்கோங்க!’’

   - ஹரி கிருஷ்ணன்

   பரவசம்

   ஓவியப் பிச்சைக்காரன் வரைந்திருந்த பிள்ளையார் படத்தைப் பார்த்து, காசு போட்டவர்களைவிட கன்னத்தில் போட்டுக்கொண்டவர்களே அதிகம்!

   - பர்வீன் யூனுஸ்

   ஜன்னல்

   ``ஜன்னலைத் திற... காற்று உள்ளே வரட்டும்’’ என்று கிராமத்தில் அப்பா கூறிய அதே நேரத்தில், “ஜன்னலை நல்லா மூடு...

   ஏ.சி வெளியில போயிடும்’’ என்றான் மகன் அப்பார்ட்மென்ட்டில்!

   - நந்த குமார்

   சிச்சுவேஷன் சாங்

   அசல் கிராமத்துக் கதையைச் சொல்லிய இயக்குநரிடம், ``பாடல் கம்போஸிங்கை லண்டனில் வைத்துக்கொள்ளலாம்’’ என்றார் அந்தப் புதுமுக இசையமைப்பாளர்!

   - பாலூர் பிரேம்பிரதாப்

   அங்கீகாரம்

   வேறு ஜாதி பையனுடன் ஓடிப்போன தன் மகளை, குழந்தைகளுடன் பார்த்த அப்பா, சில நிமிட யோசனைக்குப் பின்னர் அந்த போட்டோவுக்கு லைக் போட்டார் ஃபேஸ்புக்கில்! 

   - பொ.குமரேசன்
   http://www.vikatan.com
   16ma
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
       ஓவியங்கள்: செந்தில்
    

   மன்னிப்பு

   நேரில் சண்டை போட்டுக்கொண்ட கணவனும் மனைவியும் ஸாரி கேட்டுப் பேசிக்கொண்டார்கள் வாட்ஸ்அப்பில்!

   - கிருஷ்ணகுமார்

    
   புகார்

   “நேற்று ரேவதி மிஸ் ஹோம் வொர்க் எதுவும் கொடுக்கல” ஹெட்மிஸ்டரஸிடம்புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனாவின் அம்மா.

   - விகடபாரதி

   ஹவுஸ்மேட்ஸ்

   ``சண்டை போட்டுக்காம விளையாடுங்க’’ என்ற அம்மாவிடம் குழந்தைகள் சொன்னது ``இது பிக்பாஸ் விளையாட்டும்மா!’’

   - ரியாஸ் 

   முதலும் முடிவும்

   “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!” என்ற ராகவன் ஹாஸ்பிட்டல் பில்லைப்பார்த்ததும் சண்டை போடத் தயாரானான்.

   - விகடபாரதி

   என்னாச்சு?

   பைக்கில் அடிபட்டு இரண்டு நாள்களாக மயக்கத்தில் இருந்தவன், கண் விழித்தவுடன் கேட்ட கேள்வி “ஓவியாக்கு என்னாச்சு?”

   - A. சண்முக ராஜன்

   சம்பவம்

   “சின்ன ஆபரேஷன்தான். பயப்படாதீங்க...” டாக்டர் ஆறுதல் சொன்னார், கூலிப்படைத் தலைவனுக்கு!

   - பெ.பாண்டியன்

   காலிங் ராகுல்

   மாமா, சித்தி, அத்தை, அண்ணன், அண்ணி, சித்தப்பா, பெரியப்பா எல்லாருக்கும் போன் பண்ணிச் சொன்னான் ராகுல், லைக்ஸ் போடச் சொல்லி...

   - விகடபாரதி

   உத்தரவு

   ‘`பிக்பாஸ் முடியறதுக்குள்ள எல்லா போராளிகளையும் கைது பண்ணி உள்ளே வெச்சுப் பின்னியெடுங்க’’ என்று உத்தரவிட்டார் அமைச்சர்!

   - கே.சதீஷ்

   ஏற்பு

   வருங்கால மாமனார், ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்ததுமே நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தான் வினோத்!

   - கே.மணிகண்டன்

   அடி

   வீட்டில் குழந்தையைப் போட்டு சாத்தினாள், நல்ல மிஸ் என்று பெயரெடுத்த ஆசிரியை!

   - சி.சாமிநாதன்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    

   நெருக்கடி

   நடந்துபோனால், அரைமணி நேரத்துக்குள் போய்விடும் அலுவலகத்துக்கு ஒரு மணி நேரம் ஊர்ந்தபடியே காரில் போனான் ராகுல்!

   - கே.சதீஷ்

   புரிதல்

   ``ஹாய் டாட்!’’ என்ற வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து மகளுக்கு `டாப் அப்’ செய்தார் அப்பா!

   - கி.ரவிக்குமார்

   சுறுசுறுப்பு

   “ஹோம் ஒர்க் எழுத முடியல...தூக்கம் வருதும்மா...” என்றவனிடம், மொபைலை நீட்டியதும் எழுந்து உட்கார்ந்தான்!

   - சி.சாமிநாதன்

   பிரார்த்தனை

   படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேயின் ஆசை நிறைவேற கடவுளை பிரார்த்தித்தது குழந்தை!

   - பெ.பாண்டியன்

   தனிமை

   ஆயிரமாவது ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்துவிட்டு, ஃபீலிங் லோன்லி என்று ஸ்டேட்டஸ் போட்டான் தருண்!

   - வி.சகிதாமுருகன்

   அவசரம்

   6 மணி, 6.30, 7, 8 மணி என வேலைக்குப் போகும்வரை அலாரம்களை அலறவிட்டபடியே இயங்கிக்கொண்டிருந்தான் ராகவன்!

   - செல்வி

   வெய்ட்டிங்

   ``காபி போட்டுட்டு வர்றேன். ஆல்பம் பாருங்க’’

   "வேண்டாம். வை-ஃபை ஆன் பண்ணிட்டுப் போங்க!’’

   - ரியாஸ்

   உயிர்

   ``எங்க அப்பா செத்துருவார்னுதான் நினைச்சேன்... ஆனால் பொழைச்சுட்டாருடா’’ மருத்துவமனை வாசலில் சந்தோஷ செய்தி சொல்லிக்கொண்டிருந்தான் விக்னேஷ்!

   - கே.மணிகண்டன்

   மருத்துவம்

   ``ஒண்ணும் பிரச்னையில்லை... இது சாதாரண தலைவலிதான்’’ என மூன்று வேளைகளுக்கான மாத்திரை கொடுத்தார் மருந்துக்கடைக்காரர்!

   - கே.மணிகண்டன்

   பந்தி

   பந்திக்குச் சாப்பாடு குறைவாக இருக்கிறதென்றதும், பிளாஸ்டிக் அரிசி பரிமாறப்படுவதாகப் புரளி கிளப்பினார் கேட்டரிங் மேனேஜர்!

   - ராஜேஷ்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    

   பேச்சு

   ``வாட்ஸ்அப்ல அப்படி என்னதான் பேசிப்பீங்க” என்ற அம்மாவிடம், ``ஒன்லி வீடியோதாம்மா” என்றாள் பொன்னி.

   - கே.சதீஷ்

   இங்கிதம்

   சுமாரான புடவை, சிம்பிளான அலங்காரத்துடன் கிளம்பினாள், வேலைக்கார அம்மாவின் வீட்டு விசேஷத்துக்கு.

   - ராம்ஆதிநாராயணன்

    
   சிரிப்பு

   முதல்வரைப் பார்த்து, 32 எம்.எல்.ஏக்களும் தெரிய சிரித்தார் தலைவர்.

   - கிணத்துக்கடவு ரவி

   சமையல்

    ``சாப்பாடு பிரமாதமா இருக்கு. சமைச்சவருக்குக் கை குடுக்கணும். மாஸ்டர் எங்கே இருக்காரு..?’’என்ற கஸ்டமரிடம்,

   ``வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்காரு சார்..’’ என்றார் சர்வர்!

   - சி.சாமிநாதன்

   பில்டப்

   ``கார் பார்க்கிங், மூணு பெட்ரூம், ஒப்பன் டெரஸ்...’’

   ஆறு மாதங்களாக விற்காத ஃப்ளாட்டைக் காட்டிப் பேரம் பேசிக்கொண்டிருந்தார் புது பில்டர்!

   - கே.மணிகண்டன்

   பிஸி

   ஒரு லைக் கூட போட முடியாத அளவுக்கு பிஸியா என கணவனிடம் அலுத்துக்கொண்டாள் புது மனைவி!

   - கே.சதீஷ்

   சிகிச்சை

   இன்னன்ன நோய்க்கு இந்தந்த மருந்து சாப்பிட வேண்டும் என்று பக்கத்திலிருப்பவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் நோயாளி!

   - சி.சாமிநாதன்

   செல்ஃபி

   ``ஃபங்ஷன் முடிஞ்சதும் இருந்து செல்ஃபி எடுத்துட்டுத்தான் போகணும்’’ என்றான் நண்பன்.

   - பவான்ராஜ்

   உறக்கம்

    `12 மணி ஆச்சு... போனை ஆஃப் பண்ணிட்டுத் தூங்குடா’ என்று மகனுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினான் மனோ! 

   - ரியாஸ்

   போர்

   பள்ளிகள் திறந்ததும் போருக்குத் தயாராகினர் பெற்றோர்!

   - கே.மணிகண்டன்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    

   கண்காணிப்பு

   “ஸ்கூல்ல பசங்க யாரும் செல்போன் கொண்டுவர்றாங்களா?” என வாத்தியாரிடம் வாட்ஸ்அப்பில் கேட்டார் ஹெச்.எம்!

   - பெ.பாண்டியன்

   கலைப்பு

   “இரண்டு நாள்ல கலைக்கப் போறாங்களாம் ஐயா...”

    பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஆளுங்கட்சி MLA, தோட்டக்காரன் காட்டிய குருவிக் கூட்டை.

   - கல்லிடை வெங்கட்

    விதி

   விதியை மீறி கட்டிய கட்டடத்தால் விதியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

   - நந்த குமார்

   வெள்ளைப்பூக்கள்

   சண்டை போட்டுக்கொண்டே குடும்ப அமைதிக்காகக் கோயிலுக்குப் புறப்பட்டனர்  கணவனும் மனைவியும்!

   - கே.சதீஷ்

   நிறைவு

    “வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் முதியோர் இல்லத்தில் காலத்தைக் கடத்தினார் கார்த்திக்.’’

   - சீர்காழி.ஆர்.சீதாராமன்

   தவிப்பு

   “யார், யாருக்கோ லைக்ஸ் போடறார். எனக்கு லைக்ஸ் போட மாட்டேங்கறார். பிரியமில்லாத கணவர்கூட எப்படி வாழ்றது?’’ என அம்மாவிடம் அழுதாள் ஆர்த்தி!

   - பெ.பாண்டியன்

   வறட்சி

   பாலம் கட்டித் தரச் சொல்லி போராடிய ஆற்றில், தார்ச்சாலை போட்டுக் கொண்டனர் மக்கள்.

   - கி.ரவிக்குமார்

   கல்வி

   15 நாளில் கார் ஓட்டக்கற்றுக்கொண்டு, 10 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வாங்கி டாக்ஸி டிரைவரானர் 45 வயதான ஆறுமுகம்!

   - கே.மணிகண்டன்

   தையல்

   நகரின் பெரிய ஜவுளிக் கடையில் மகனுக்கு ஜீன்ஸும், டி-சர்ட்டும் வாங்கிக் கொடுத்தார் டெய்லர் மாடசாமி.

   - கல்லிடை வெங்கட்.

   பழையது

   முதலாளியின் மகன் ஆதித்யாவின் பிறந்த நாளுக்குப் பரிசாக புது டிரெஸ் வாங்கிக் கொடுத்த வேலைக்காரியின் மகனுக்கு, ஆதித்யாவின் பழைய துணிகளைக் கொடுத்து அனுப்பினாள் முதலாளியம்மா.

    - கல்லிடை வெங்கட்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    

   சம்மர்

   ``சம்மரில் உங்கள் குழந்தைகளுக்கு டிராயிங்.. ஹேண்ட் ரைட்டிங்...அபாகஸ் எனக் கற்றுத் தருகிறோம், வாருங்கள்..'' என்ற விளம்பரத்தில் நடித்து முடித்த ஹீரோ, மனைவி குழந்தைகளுடன் புறப்பட்டார், சுற்றுலாவுக்கு!

   - சி.சாமிநாதன்

   கண்டிஷன்

   `மணமகன் தேவை' விளம்பரத்தில் ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கக் கூடாது என்ற கண்டிஷனையும் சேர்த்தாள்.

   - ரேகா ராகவன்

   உதவி

   ``உதவிக்கு நர்ஸ் இருக்காங்க. பயப்படாதீங்க ...''

   என பைபாஸ் சர்ஜரி செய்துகொண்ட அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, வேலைக்குக் கிளம்பினான் மகன்!

   பெ.பாண்டியன்

   பார்வை

   ``தப்பு செஞ்சா மேலே இருந்து ஒருத்தன் பார்ப்பான்!" என்றதும், "கேமிராவாப்பா?" என்றது குழந்தை.

   - கி.ரவிக்குமார்

   எலிமினேட்

   ``எலிமினேட் பண்ணும்போதும் அழமா, சிரிச்சிக்கிட்டே பேட்டி கொடுக்கிறாங்களே... இதுதான் ஐ.பி.எல். கிரிக்கெட்டாப்பா?'' என்றாள் திவ்யா அப்பாவிடம்!

   -கே.சதீஷ்

   முத்தம்

   அந்தக் காதல் ஜோடி நிரந்தரமாகப் பிரியும் தருணம்...

   கடைசியாக ஒருமுறை வாட்ஸ்அப் ஸ்மைலி மூலம் முத்தம்கொடுத்துக்கொண்டனர்!

   - ஃபெரோஸ்கான்

   ஜாக்கிரதை

   "சண்டை போடாம இருங்க" என ஊருக்குப் போகும் முன் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போனது குழந்தை.

   -கோ. பகவான்

   பயம்

   மனைவி அடிக்க வந்ததும் பயந்து நடுங்கினார் ஸ்டன்ட் மாஸ்டர்.

   -அபிசேக் மியாவ்.

   நட்பு

   ``ஃபேஸ்புக்ல ஏன் என்னை அன்ஃப்ரெண்ட் பண்ணிட்ட?" எனக் கேட்டதும், ``நேத்து கடன் கேட்டேனே கொடுத்தியா?'' என்றான் நண்பன்.

    -பவான்ராஜ்
    

   கடவுள்

   இறந்துபோன தன் அப்பாவின் போட்டோவைப் பார்த்து கடவுள் படத்தை வரைந்துகொண்டிருந்தாள்  ரம்யா!

   - கே.மணிகண்டன்

   ஷுகர்
   ``போர் அடிக்குது. அப்படியே வெளிய போய் ஷுகர் டெஸ்ட் பண்ணிட்டு மாத்திரை வாங்கிட்டு வரலாமா?'' என்றார் சுந்தரம், மனைவியிடம்!

   - ரியாஸ்
   http://www.vikatan.com