Jump to content

தமிழில் ட்வீட்... எம்.ஜி.ஆர் மீது பாசம்..! : தமிழக அரசியலை நோக்கிப் பாயும் மோடி!


Recommended Posts

தமிழில் ட்வீட்... எம்.ஜி.ஆர் மீது பாசம்..! : தமிழக அரசியலை நோக்கிப் பாயும் மோடி!

 

கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, ஐ.நா சபையின் சார்பில் நடந்த சர்வதேச மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவதற்காக, மோடி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார்.  அவர் தனது பயணத்தை முடித்துவிட்டு,  நேற்று இந்தியா திரும்பி விட்டார். இந்தப் பயணத்தின் போது, அவரது செயல்கள் அனைத்தும், தமிழக அரசியலை சுற்றியே இருந்ததாக கூறப்படுகிறது.

Modi


இதற்காக, இலங்கை செல்வதற்கு முன்பே மோடி தமிழில் ட்வீட்டி வந்தார். "இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன்" என ட்வீட்டை ஆரம்பித்த அவர், இங்கே செல்கிறேன், அங்கே செல்கிறேன் என்று இலங்கை பயணம் முழுவதையும், தமிழில் ட்வீட்டி அப்பேட் செய்தார்.


முக்கியமாக, ப்போது, இலங்கை அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மற்றும் தமிழ் தலைவர்ளை சந்தித்துப் பேசினார்.

Modi

"வருகின்ற, ஆகஸ்ட் மாதம் முதல் கொழும்பில் இருந்து, வாரணாசிக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா துவங்கும். இதன்மூலம் தமிழ்ச் சகோதர, சகோதரிகள், புத்தருடைய மண்ணுக்கு வரலாம்" என்று மோடி அறிவித்தார். 


குறிப்பாக, மலையகத் தமிழர்கள் மத்தியில் பேசிய மோடி, "தமிழக முதல்வராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மண்ணைச் சேர்ந்தவர். இந்தியாவின் தேசியத் தலைவராக விளங்குகிறார் எம்.ஜி.ஆர். எனவேதான் இந்த மண்ணிற்கும் இந்தியாவிற்கும் ஒரு பந்தம் இருக்கிறது என்றேன்" என்று கூறினார்.

 


தமிழகத்தில், தற்போது நிலவும் அரசியல் அசாதாரண சூழலுக்கும், மோடிக்கும் சம்பந்தம் உள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், மோடியின் தமிழ் ட்வீட்கள், எம்.ஜி.ஆர் பாசம் ஆகியவை அரசியல் உள்நோக்கம் மிகுந்தவை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

http://www.vikatan.com/news/india/89240-modi-talks-about-mgr-in-srilanka.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நவீனன் said:

இலங்கை செல்வதற்கு முன்பே மோடி தமிழில் ட்வீட்டி வந்தார். "இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன்" என ட்வீட்டை

போர போக்கை பார்த்தால் மோடி தமிழன் என்று விகடன் எழுதினாலும் ஆச்சரியப்படுவத்ற்கில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.