Sign in to follow this  
Followers 0
nunavilan

பிரளயத்தின் சாட்சி

2 posts in this topic

பிரளயத்தின் சாட்சி

கண்கொண்டு பார்க்க முடியாது
ஒரு பறவை
இரத்தம் சொட்டச் சொட்ட
நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்
பிய்த்து வீசப்பட்டிருப்பதை

முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்
பின்னர் ஆண்குறிகளால்
பின்னர் துப்பாக்கிகளால்

அழுகிய பிணங்களைப்
புணரும் வீரமிகு படைகள்
வேறெதைச் செய்வர்?

யாருமற்ற கடற்கரையில்
ஈனக்குரல் எழுப்புகையில்
ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை

வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்?

யாராலும் எழுத முடியாது
நேரிட்ட நிர்க்கதியை
சிந்திய கண்ணீரை
உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை
பிய்த்தெறியப்பட்ட கதையை
இறுதிக்குரலை

நிராயுதயபாணிகளை வேட்டையாடும்
கொலையாளிகளிடம்
‘அது நானில்லை’
என்று சொன்னாய்
யாரை அவர்கள் விட்டு வைத்தனர்?

அன்றொருநாள் கதிர்காமநகரில்
மன்னம்பேரியை நிர்வாணமாய்
இழுத்துச் செல்கையிலும்
அவளிடம் துப்பாக்கியேதுமில்லையே

இசைப்பிரியா,
முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் முடிவில்
அணையும் இறுதிக்குரலில்
மாபெரும் குற்றங்களின் சாட்சியமானாள்.

இனியும்
ஒரு பெண்ணுக்கும்
ஒரு இனத்திற்கும் வேண்டாமென்றாள்
ஈனக்குரலும் நெருப்பு மேனியுமாய்

தீபச்செல்வன்

மன்னம்பேரி: 1971இல் கதிர்காமம் என்ற இடத்தில் இலங்கைப் படையினரால்; பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிங்களப் பெண் போராளி. 
வற்றாப்பளையம்மன்: முள்ளிவாய்க்காலுக்கு அருகில் உள்ள கோயில்.

நன்றி: குமுதம்

http://deebam.blogspot.com/2013/11/blog-post.html

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, nunavilan said:

பிரளயத்தின் சாட்சி

அன்றொருநாள் கதிர்காமநகரில்
மன்னம்பேரியை நிர்வாணமாய்
இழுத்துச் செல்கையிலும்
அவளிடம் துப்பாக்கியேதுமில்லையே

இசைப்பிரியா,
முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் முடிவில்
அணையும் இறுதிக்குரலில்
மாபெரும் குற்றங்களின் சாட்சியமானாள்.

இனியும்
ஒரு பெண்ணுக்கும்
ஒரு இனத்திற்கும் வேண்டாமென்றாள்
ஈனக்குரலும் நெருப்பு மேனியுமாய்

தீபச்செல்வன்

இணைப்புக்கு நன்றி.

எதை எழுதுவது. எதை உணர்வது. தமிழினமே, நீ தூங்கிவிடாதே! என்று உரிமையோடு விழித்தலைத் தவிர. இத்தனை அழிவுகளுக்கும் சாட்சிகள் தேவையா உலகே. ஏமாற்றும் உலகை ஒன்றுகூடி நீதிகேட்பதொன்றே எம்முன்னால் உள்ள பெரும்பணி. மே18ஐ நீதிகோரும் நாளாக மாற்றுவதே மண்டியிடாது மண்ணுக்குள் உயிர்விதையை ஊன்றியோருற்கு நாம் செய்யும் சிறிய கைமாறு.

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0