Jump to content

மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது?

May-18-1.jpg

அழைத்தாலா வருவாய்
யார் யாரை அழைப்பது
அறியத் தருவாயா
ஊரூராய் பிணக்காடாய்
உன் உறவும் பிணமாக
போனதந்த நாளினிலே
எதுவும் கேட்காதே
புறப்பட்டு வாவென்று
சொல்ல வேண்டுமெனில்
வினாவொன்று இருக்கிறது
நீ தமிழனா!

வெற்றியிலே பங்கேற்று
வீரமுடன் வீறுகொண்டாய்
வீழ்ச்சியிலே யாரென்று
விலகி நிற்பதென்ன
காலத்தின் நகர்வுகளோ
காட்சிகளாய் விரிகிறது
அன்னை மண்ணிருந்து
அழகாய் வளர்ந்தவனே
உன்னை உருவாக்கி
உலகில் வாழவைத்த
அன்னை மண்பட்ட
அவலம் உரைப்பதற்கு
அழைப்பு உனக்கெதற்கு
அழைப்பு வேண்டுமெனில்
வினாவொன்று இருக்கிறது
நீ தமிழனா!
நீ தமிழனா
இல்லை
மனிதனா
மனிதமொன்று
உன்னுள்ளே
மக்காதிருக்கிறதா
மக்காதிருக்குமெனில்
மக்கள் துயருரைக்க
ஒன்றுகூடும் பலரிலே
நானும் ஒருவனென
நிற்கும் உறுதியுடன்
நாளைய தலைமுறைக்கு
நாடுகாணுமுறுதிகொண்டு
வரவேண்டும் திடலுக்கு
ஒற்றிணையும் கரங்களிலே
உன் கரங்கள் இணையட்டும்!

மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி

http://www.kuriyeedu.com/?p=68204

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொச்சி...
இதே.... ஏக்கத்துடன்,  மே  மாதம் தொழிலாளர் தின ம்  என்ற பதிவிலும் உங்கள் ஏக்கம் இருந்ததை  நினைவில் வைத்துள்ளேன்.
எனது நகரத்தில்... மே தினத்தை, நடத்துபவர்கள், சந்தேகத்துக்கு இடமானவர்கள் என்று, 
தமிழ்க் கடை,  தமிழ் சலூன் என்று..... சனம்,  தாறு மாறாக... கதைப்பதை,   
காது கொடுத்து கேட்கும்...  எவருக்கும், அப்படியான நிகழ்வுகளில் பங்கெடுப்பதை.... 
தவிர்க்கவே, விரும்புவார்கள் என.. நினைக்கின்றேன்.  

தயவு செய்து... யார், எந்த ஊர்.... என்று கேட்டு என்னை, கேட்க வேண்டாம். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதியற்று நிற்கிறது தமிழினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நாதியற்று நிற்கிறது தமிழினம்.

நாதியற்றவர்களாக்கப்பட்டதொன்றும் வேற்றவராலல்ல நம்மவராலேயே. இன்றும் ஒன்றாகநிற்கத் தமிழினம் துணிய மறுப்பதென்ன? யாருக்காக இந்தத்தலைமைகள். யாருக்காக இந்த அமைப்புகள். மக்கள் நலன்விரும்பா எதுவுமே எமக்குத்தேவையில்லை. துடைத்தெறிந்தவிட்டு தமிழினம் தானாக எழும்வரைதான் நாதியற்றதாக இருக்கும். சரியான உறுதிகொண்டு எழுமெனில் கீழ்திசை ஒளிபரவுவதை உலகாலும் தடுக்க முடியாது. ஏனெனில் இநந்த உலகுதான் சொல்கிறது சனனாயக வழியில் உங்கள் உரிமையைக் கோரும் உரிமை எமக்கு இருப்பதாக. ஆனால் நாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12.5.2017 at 10:40 PM, தமிழ் சிறி said:

நொச்சி...
இதே.... ஏக்கத்துடன்,  மே  மாதம் தொழிலாளர் தின ம்  என்ற பதிவிலும் உங்கள் ஏக்கம் இருந்ததை  நினைவில் வைத்துள்ளேன்.
எனது நகரத்தில்... மே தினத்தை, நடத்துபவர்கள், சந்தேகத்துக்கு இடமானவர்கள் என்று, 
தமிழ்க் கடை,  தமிழ் சலூன் என்று..... சனம்,  தாறு மாறாக... கதைப்பதை,   
காது கொடுத்து கேட்கும்...  எவருக்கும், அப்படியான நிகழ்வுகளில் பங்கெடுப்பதை.... 
தவிர்க்கவே, விரும்புவார்கள் என.. நினைக்கின்றேன்.  

தயவு செய்து... யார், எந்த ஊர்.... என்று கேட்டு என்னை, கேட்க வேண்டாம். :)

 

தமிழரது விடுதலைப்போராட்ட நகர்விலே பெரும்பாலான பின்னடைவுகளுக்குக் கரணியமாயிருப்பது இரண்டகமே. 2009வரை ஒருவெளித்தெரியும் தலைமையும் கட்டுப்படுத்தும் சக்திமையமும் கொண்ட வலைப்பின்னலூடான செயற்பாடுகளின்போது தெளிவிருந்தது உண்மை. இன்று அப்படியில்லாத சூழலில் வாழாதிருத்தலென்பதும் பாதிப்பையே தரும். இன்று யாரைநம்மபுவது நம்பாமலிருப்பது என்ற வினா பலரிடம் உள்ளபோதும் முடிந்தவரை தம்மாலானதை செய்கின்ற பலரையும் காணமுடிகிறது. கடை சலூன் போன்றவற்றுக்கு பலதரப்பட்டோரும் வருகின்ற இடமென்ற வகையிலே பலவிதமான கருத்தியலுடையோரின் உரையாடல்கள் நடைபெறுவது இயல்பானதே. நான் வாழுமிடத்திலே உள்ள கடையிலே பொதுவாகவே தேசியத்துக்கெதிரான கூட்டத்தையே காணமுடியும். அடிக்குமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோன்றதே மனித மனங்களின் இயல்பு. உய்தறியும் தன்மை இருந்தாலும் இன்றைய நிலை அதற்கான நிலையைத் தரவில்லை. ஆனால் என்ன செய்வது ஒரு சரியான தலைமையொன்று தோற்றம் பெறும்போதோ அல்லது இப்போதிருக்கும் சக்திகளைமேவியதானதொரு நேர்மையுடையோர் கையாளும் காலம் வரும்போதோதான் உண்மைகளைக்காணமுடியும். அதுவரை நாங்கள் கேள்விச்செவியரே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.