Jump to content

பதவி நீக்கம் செய்யப்பட்பட்ட உளவுத்துறை இயக்குநருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை


Recommended Posts

பதவி நீக்கம் செய்யப்பட்பட்ட உளவுத்துறை இயக்குநருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

 
 

தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிடக்கூடாது என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஜேம்ஸ் கோமிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிபர் டிரம்ப்படத்தின் காப்புரிமைALEX WONG/GETTY IMAGES

"நமது உரையாடல் தொடர்பான பதிவுகள் ஏதும் இல்லை என நம்புகிறேன்" என்று வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் நேரத்தில், அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசார குழுவினருக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த கோமி, கடந்த செவ்வாய்க்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

தான் விசாரணை வரம்புக்குள் இல்லை என்று கோமி தன்னிடம் கூறியதாக டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

சாத்தியமானால், நான் விசாரணையின் கீழ் இருக்கிறேனா என்பதைச் சொல்லுங்கள் எனக் கேட்டேன். நீங்கள் விசாரணையின் கீழ் இல்லை என அவர் தெரிவித்தார் என்று டிரம்ப் தெரிவித்தார்.

ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கியது தன்னுடைய முடிவு மட்டுமே என்று அதிபர் டிரம்ப் என்பிசி நியுஸிடம் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு பற்றியும், டிரம்பின் பரப்புரை அதிகாரிகளுக்கும், மாஸ்கோவுக்கும் இடையே சாத்தியமாகியிருக்கலாம் என்று கருதப்படும் இணக்கம் பற்றியும் ஜேம்ஸ் கோமி விசாரணை ஒன்றை தலைமையேற்று நடத்தி வந்தார்.

இந்த விசாரணையை போலித்தனம் என்று கூறி இது நடைபெறுவதை டிரம்ப் ரத்து செய்திருக்கிறார். கோமிக்கு அடுத்ததாக இந்த பொறுப்பை ஏற்றிருப்பவர் இந்த கோரிக்கையில் இருந்து அப்படியே முரண்படுகிறார்.

 

. புதிய நிர்வாகத்தில் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் இருந்ததால், உளவுத்துறை தலைவர் விரும்பி கேட்டுகொண்ட வெள்ளை மாளிகை விருந்தில் கோமி தான் விசாரணையின் கீழ் இல்லை என முதலில் தெரிவித்ததாக அதிபர் டிரம்ப் கூறிருக்கிறார்.

ஜேம்ஸ் கோமிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், வெள்ளை மாளிகை தான் இந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்தது என்றும், அதிபர் விசாரணயின் கீழ் இருக்கிறார் என்பதை கோமி அவரிடம் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை என்று கோமிக்கு நெருங்கியவரும், பெயர் குறிப்பிடப்படாத முன்னாள் மூத்த உளவுத்துறை அதிகாரியுமானவரை மேற்கோள்காட்டி, என்பிசி பின்னர் தெரிவித்திருக்கிறது.

டிரம்ப் தெரிவித்திருப்பதுபோல இந்த உரையாடல் முறையானதாக இடம்பெறாமல் இருந்திருக்கலாம் என்று சட்ட நிபுணர்களின் கவலைகளை வெள்ளை மாளிகை நிராகரித்திருக்கிறது.

 

"இதனை கருத்து வேற்றுமையாக பார்க்கவில்லை என்று செய்தி தொடர்பாளர் சாரா ஹக்காபீ சான்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

உயர்நிலை நீதித்துறை அதிகாரிகளின் பரிந்துரையின்படி கோமி பதவி நீக்கம் செய்யப்படுவதாக வழங்கப்பட்ட வெள்ளை மாளிகையின் தொடக்க விளக்கத்தை அதிபர் மாற்றி குறிப்படுவதாக தோன்றுகிறது.

p052jttf.jpg
 
புலனாய்வுத் தலைவரை பதவி நீக்கினார் டிரம்ப்

"அவர் கவனத்தை ஈர்ப்பவர். பகட்டாக செயல்படுபவர். உளவுத்துறை குழப்பத்தில் உள்ளது. நான் கோமியை பதவி நீக்குகிறேன். இது என்னுடைய முடிவு" என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

துணை அட்டர்னி ஜெனரல் ரோட் ரோசன்ஸ்டீனால் எழுதப்பட்ட புகார் குறிப்பில், பதவி நீக்கத்தை குறிப்படும் தொடக்க பத்தியில் "நான் அவர்களின் பரிந்துரைகளை ஏற்றிருக்கிறேன்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.

ஆனால், இந்த பரிந்துரைகளுக்கு அப்பாலும் தான் அவரை பதவி நீக்கம் செய்வதாக அவர் என்பிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global-39899130

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.