Sign in to follow this  
Followers 0
Nathamuni

ஆத்தாடி, இது ஆப்புன்னா, ஆப்புதான்.

1 post in this topic

Posted (edited)

இலங்கையின் மேல்மாகாணத்தில் இருந்து, சில குடும்பங்கள் ஒன்றாக வானில், தல யாத்திரை கிளம்பி போயிருக்கிறார்கள்.

நீண்ட தூர பயணம், வெயில் வேற வாட்டி எடுக்க, வழியில் ரோட்டு ஓரமாக ஒரு சிறிய கடை ஒன்றில் பொருட்கள் வாங்க நிறுத்தி இருக்கிறார்கள்.

அந்த யாத்திரைக் கூட்டத்தில், ஒரு இளைஞர்.... வாலிப வயது....மன்மதன்... 

கடையில், அப்பா, அம்மா ... அவர்களுக்கு உதவியாக ஒரு அழகான இளம் சிட்டு. ஓடி, ஓடி தேநீர் போடுவதிலும், சிறு பலகாரங்கள் செய்வதிலும் அம்மாவுக்கு, மிகவும் ஒத்தாசையாக இருந்தார்.

எல்லோருக்கும் பிடித்து விட்டது... அழகிய சிட்டு என்றால் சும்மாவா? 

முதல் பார்வையிலேயே காதல் கொண்ட, நமது மன்மதன், யாரும் அறியாத வகையில்,  தனது பெயர், முகவரி, போன் நம்பரை, சீட்டில் எழுதி, சிட்டுவிடம் சேர்ப்பித்து விட்டார். 

image_1494560156-e0dcf4da88.jpg

அவர்கள் கிளம்பிப் போய் விட்டனர்.

சில நாட்களின் பின்னர், இளம் சிட்டும், அம்மாவுமாக, முகவரியினை தேடி வந்து விட்டனர்.

வாலிபர் திடுக்கிட்டார். எங்கோயோ பார்த்த மாதிரி இருக்குதே.... யோசிக்கிறாராம்.

சிறிது நேரத்தில் அவர்கள் எதற்க்காக வந்தார்கள் என்று சொல்ல, தர்ம சங்கட நிலை. அவரின் கையெழுத்துடன், சீட்டு வாலிபர் குடும்பத்தினர் கைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

விவாதித்துக் கொண்டிருக்கும் போதே, இருட்டி விட்டது. போக வழியில்லை. அன்று இரவு அங்கேயே தங்கி விட்டனர். அம்மாவும், மகளும், வாலிபர் அம்மாவுக்கு, சமையலில் அதே ஒத்தாசை.

வாலிபருக்கு மறு நாள் மேலும் அதிர்ச்சி. பெண்ணின் அம்மா பையை தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டார்.  நாம் அலையா விருந்தாளிகள் இல்லை. உங்களது அழைப்பில் வந்து தங்கினோம். 

என்னிலும் பார்க்க, மாமியார் மிக நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கை இருக்கிறது. மகளை இங்கேயே விட்டு செல்ல முடிவு செய்து விட்டேன். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.

நீ முகவரி கொடுத்தாய், ஆகவே நீ வரவழைத்தாய், நீயே கட்டிக்கொள் என்று

பெண்ணையும், வாலிபரையும் வெளியே அனுப்பி விட்டனர் அம்மாவும், அப்பாவும்.

திருமணத்துக்கு தாயாரோ, பெண் குடும்பமோ வரவில்லை. அப்படீன்னா.... அவரு அப்புறமும் போய், 'காதலை' வளர்த்து இருப்பாரோ?

கடுதாசி கொடுத்தால், அம்மா, அப்பா வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவார்கள். நாமும் ஜாலியா அதை என்ஜோய் பண்ணலாம் என்பவர்களுக்கு நல்ல ஆப்பு தான்.

http://www.dailymirror.lk/article/A-youthful-fun-turned-into-a-lifelong-deal-128725.html

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0