Jump to content

அம்மாவாம் அம்மா.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவாம் அம்மா....!

பத்து மாதங்கள் பகலையே காட்டாமல்  

இருட்டு வயிற்றில் படுக்க விட்டாள் 

புஷ்டியான ஆகாரம் தானுண்டு -- தனக்கு 

இஷ்டமான காரம் விட்டாள்....!

 

பிரசவத்தில் அவள் பட்ட  வலியை

பிறசமயத்தில்  ஊரார் நன்றாய் உளறுகின்றார் 

கருப்பையால் புவியேற நான்கொண்ட துன்பம் 

இங்கெவர் உரைப்பார் காண்....!

 

பத்தியமென்று பகாசுரன் போல தின்று 

அறுத்த மீனெல்லாம் அரைத்த குழம்பாக்கி 

விருப்பமுடன் விழுங்கினாள் தன் பிள்ளை 

அருந்த பால் சுரக்கவே....!

 

கொழுக் மொழுக்கென்று முட்ட முட்ட 

அணைத்து பால்தந்தாள் முப்பத்தாறு மாதம் 

அடுத்தென்னை மடியில் இருத்தி -- தந்தாள் 

வேப்பெண்ணை பூசியே முலையை.....!

 

கொட்டப் பெட்டியில் காசெடுத்து கடையில் 

மிட்டாயும் சூப்புத்தடியும்  மித்திரரோடு களித்துவர

எட்டிக் கைபிடித்து கப்பில் கட்டிவைத்து 

கண்ணில் தூவினாள் தூள்....!

 

அயர்ந்து உறங்குபவனை அதட்டி எழுப்பி 

இடையில் சுமந்து பள்ளியில் விட்டு 

இடையேவந்து தேனீரோ டினிப்பும்  தந்து 

"அ " எழுதென்று மொழியில் அடிப்பாள்....!

 

காச்சலில்  விழுந்து காரைக்காடு சென்று 

வழியில் ரயிலைக் கண்டு அடம்பிடிக்க 

அடித்திழுத்து நிலையத்தில் ஏற்றி இறக்கினாள் 

இணுவிலில் இருந்து தெல்லிப்பளைக்கு....!

 

காப்பை வைத்து காற்சட்டை வாங்கினாள் 

சங்கிலி வைத்து சயிக்கிள் வாங்கினாள் 

காணி  வைத்து வேலை வாங்கினாள் 

எதைவைத்து  எதைநான் தர....!

 

 அன்புடன் சுவி....!  tw_blush:

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

அம்மாவாம் அம்மா....!

 

காணி  வைத்து வேலை வாங்கினாள் 

எதைவைத்து  எதைநான் தர....!

 

 அன்புடன் சுவி....!  tw_blush:

 

 

 

 

காணி விற்று வெளிநாடு அனுப்பினாள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

காணி விற்று வெளிநாடு அனுப்பினாள்

நான் அங்கு கோர்னமெந்து உத்தியோகம் எடுக்க காணி ஈடு வைக்கவேண்டி வந்துட்டுது. வெளிநாடு வர கையில் கொஞ்சம் காசும் வந்திட்டுது. ஐயா இல்லாதபடியால் தாலிக்கொடி மற்றும் சில நகைகளும் அடைவு வைத்து வந்தது....!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை வைத்து எதை நான் தர?????

பட்டகடன் பட்டதுதான் அடைக்க வழியே கிடையாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்துமாதம் எம்மை இருட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக வாழ்க்கை முழுவதும் எம்மை வெளிச்சத்தில் வைத்து தான் இருட்டில் உழல்பவழல்லவா அம்மாம் அம்மா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கெல்லாம் சொல்ல வார்த்தைகள் இல்லை   கண் முன் தெரியும் தெய்வம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

சங்கிலி வைத்து சயிக்கிள் வாங்கினாள் 

காணி  வைத்து வேலை வாங்கினாள் 

எதைவைத்து  எதைநான் தர....!

கடேசி வரை எம்முடனே சந்தோசமாக வைத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் கைமாறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

 

காப்பை வைத்து காற்சட்டை வாங்கினாள் 

சங்கிலி வைத்து சயிக்கிள் வாங்கினாள் 

காணி  வைத்து வேலை வாங்கினாள் 

எதைவைத்து  எதைநான் தர....!

 

 அன்புடன் சுவி....!  tw_blush:

 

 

எதனாலும்  எவராலும் ஈடுசெய்யமுடியாத ஒரே அற்புதமெனில் அது அன்னையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அன்னை என்றால் அன்பு ...அன்பு கைம்மாறு கேட்க்காது   ..அன்பு ஒரு பிரவாகம் .

.அன்புக்கு ஈடு அன்பு தான் . கவிதைக்கு பாராட்டுக்கள் சுவி அண்ணர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

காப்பை வைத்து காற்சட்டை வாங்கினாள் 

சங்கிலி வைத்து சயிக்கிள் வாங்கினாள் 

காணி  வைத்து வேலை வாங்கினாள் 

எதைவைத்து  எதைநான் தர....!

அம்மாவின் தியாகங்களுக்கு.... எதுவும், ஈடாக முடியாது.
அம்மாவிற்கு..  நாம் பட்ட  கடன்கள் ஏராளம்.
வரும் 14´ம் திகதி, உலக  அம்மா தினத்தை முன்னிட்டு வெளியிட்ட  மனதை உருக்கும் கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

கொட்டப் பெட்டியில் காசெடுத்து கடையில் 

மிட்டாயும் சூப்புத்தடியும்  மித்திரரோடு களித்துவர

எட்டிக் கைபிடித்து கப்பில் கட்டிவைத்து 

கண்ணில் தூவினாள் தூள்....!

சுவியர்.....உங்களுக்கு இது நடந்தது எப்படித் தெரியும்?

 

எனக்கு....கிளிசிரியா மரம்...!

உங்களுக்கு///?:cool:

அனுபவக் கவிதை நன்று....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11.5.2017 at 1:40 PM, suvy said:

அம்மாவாம் அம்மா....!

 

எதைவைத்து  எதைநான் தர....!

 

 அன்புடன் சுவி....!  tw_blush:

 

 

 

 

ஒரு தாய் தான் செய்த எந்தக் கருமத்திற்கும் பிள்ளைகளிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
ஏனென்றால் அவளுக்குத் தெரியும் பிள்ளைகளால்  அத்தனைக்கும் கைமாறாக எதையும் செய்துவிட முடியாது என்று..
இங்கேயும் பிள்ளைகளுக்காகவே தான் முடிவெடுக்கின்றாள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.