Jump to content

அப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்...


Recommended Posts

அப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்...

 

75 நாள் மர்மங்கள்... விடை தருமா வீடியோக்கள்?

 

‘ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை, அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு ஒரு நிபந்தனையாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வைக்கிறார்கள். ஆனால், ‘சிகிச்சையின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசும் வீடியோ எங்களிடம் உள்ளது. அதை வெளியிட்டால், பன்னீர் தரப்பினரை என்ன செய்யலாம்?’ என திவாகரனின் மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். சமீபத்தில் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படங்களை வெளியிடத் தயாராக இருக்கிறோம். அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்’ என்று திரி கொளுத்திப் போட்டார். இதைத் தொடர்ந்து ஜெ. மரண விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது. உண்மையில் அப்படி வீடியோக்கள், புகைப்படங்கள் இருக்கின்றனவா? 

சினிமா உலகிலும் அரசியல் வாழ்விலும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. அவற்றில், அதிகம் பேசப்பட்ட படங்கள் ஏராளம். ஆனால், அப்போலோவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்களில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் புகைப்படங்கள் பற்றிய மர்மம்தான் இப்போது வைரல். ‘புகைப்படங்கள் எடுக்கப்பட்டன’ என்று சசிகலா தரப்பு உறுதியாகத் தெரிவிக்கவும் இல்லை; ‘அப்படி எதுவும் படங்கள் எடுக்கப்படவே இல்லை’ என்று ஓ.பி.எஸ் தரப்பு உறுதியாக மறுக்கவும் இல்லை. அதனால், இந்தக் கேள்விக்குள் அடங்கி இருக்கும் மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

p2b.jpg

புகைப்பட மர்மம்!

2016 செப்டம்பர் 21-ம் தேதி ஜெயலலிதாவின் கடைசி நிகழ்ச்சியின் புகைப்படம் வெளியானது. அதன்பிறகு 2016 டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா மரணமடைந்து ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தபோது அவருடைய அடுத்த புகைப்படம் வெளியானது. இடைப்பட்ட 75 நாள்களில் அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ‘அவர் நலமுடன் இருந்தார்’ என்று அப்போலோ மருத்துவமனை சொன்ன மருத்துவ அறிக்கைகள் மட்டுமே வெளியானது. ஒரு புகைப்படம்கூட வெளியாகவில்லை.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட படத்தை வெளியிட வேண்டும் என்று முதன்முதலில் சர்ச்சையைக் கிளப்பியவர் கருணாநிதி. அப்போது அவருடைய இந்தக் கோரிக்கை, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால், அன்று அவர் வைத்த அந்தக் கோரிக்கையைத்தான் இன்று ஒட்டுமொத்த தமிழகமே வைக்கிறது.

கருணாநிதி அந்தக் கோரிக்கையை அன்று எழுப்பியதற்குக் காரணம், 2016 செப்டம்பர் 27-ம் தேதி வெளியான அரசு செய்திக்குறிப்புதான். அந்தச் செய்திக்குறிப்பில், ‘செப்டம்பர் 27 மாலை, 4.30 மணி முதல் 5.30 மணி வரை தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா காவிரி விவகாரம் குறித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, “ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார் என்றால், அது பற்றிய புகைப்படத்தை வெளியிடலாமே” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு எந்த தரப்பில் இருந்தும் பதில் இல்லை.

அதன்பிறகு அப்போலோ மருத்துவமனையில் இருந்து தொடர்ச்சியாக, ‘முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார்... உடல்நலம் தேறி வருகிறார்... திட உணவுகளை எடுத்துக்கொள்கிறார்’ என்று அறிக்கைகள் வெளியாகின. ஆனால், ஒரு புகைப்படம்கூட வெளியாகவில்லை. அரசாங்கமும், ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் கூடவே இருந்து கவனித்துக்கொண்ட சசிகலாவும் இந்த விவகாரத்தில் மௌனத்தையே பதிலாகச் சொல்வதால், எதிர்தரப்பு எழுப்பும் சர்ச்சைகளுக்கு அர்த்தம் கூடிக்கொண்டே போனது. ஜெயலலிதாவின் புகைப்படம் தொடர்பான மர்மம் தொடர்வதற்கு இவையெல்லாம் காரணமாக அமைந்தன.

p2.jpg

பொங்கி எழுந்த சசிகலா குடும்பம்!

ஒருகட்டத்தில் அ.தி.மு.க-வில் இருந்து தனி அணியாக செயல்பட ஆரம்பித்த ஓ.பி.எஸ் தரப்பு, ஜெயலலிதாவின் இறந்த உடல் போன்ற மாதிரியை வைத்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக் கேட்கும் நிலைக்குப் போனார்கள். அது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. சசிகலாவின் கணவர் நடராசனோ, “ஜெயலலிதாவை நாங்கள் கொலை செய்துவிட்டோம் என்று எழுதவும் பேசவும் செய்கிறீர்களே... உங்களுக்கு எல்லாம் மனச்சாட்சியே இல்லையா?” என்று பத்திரிகையாளர்களிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதோடு, ‘‘அந்த அம்மா எப்படி வாழ்ந்த நடிகை என்பதும், அரசியலுக்கு வந்தபிறகு  தன் இமேஜுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். அவருடைய மருத்துவமனை புகைப்படங்கள் வெளிவருவதை அவர் விரும்பவில்லை. அந்த ஒரு காரணத்தால்தான் அவருடைய புகைப்படங்களை நாங்கள் வெளியிடாமல் இருக்கிறோம்’’ என்று விளக்கமும் கொடுத்தார்.

சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த், ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினார். அதில், ‘‘கொலைப் பழி சுமத்தப்பட்டும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படத்தை வெளியிடவில்லை. பச்சை கவுனில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற படங்களை எதிரிகள் பார்க்கக்கூடாது என்பதால்தான் நாங்கள் வெளியிடவில்லை. சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே ராஜமரியாதையுடன் அனுப்பிவைத்தோம். ஆனால், ஓ.பி.எஸ் ஜெயலலிதாவைப் பிணப்பெட்டியில் வைத்து ஓட்டுக் கேட்கிறார். உண்மை வலிமையானது. ஒருநாள் ஜெயலலிதா, சசிகலா இருவரும் மருத்துவமனையில் பேசிய வீடியோவை வெளியிட்டால்..? பி.ஹெச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன்... இவர்களை என்ன செய்யலாம்” என்று கொதிப்போடு கேட்டு இருந்தார். அவரைத் தொடர்புகொண்டு, ‘‘இப்போது அதை நீங்கள் வெளியிடலாமே?” என்று கேட்டோம். “என்னுடைய அந்தப் பதிவு இன்னும் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில்தான் இருக்கிறது. நான் எதையும் நீக்கவில்லை. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது எந்தக் கருத்தைக் கூறினாலும், அது திட்டமிட்டு வேறு மாதிரியாகப் பரப்பப்படுகிறது. அதனால், புகைப்படங்களும் வீடியோவும் இருக்கின்றனவா, இல்லையா என்று என்னால் எந்தக் கருத்தையும் இப்போது வெளிப்படையாகச் சொல்லமுடியாது. அதே நேரம் நான் பதிவிட்ட கருத்திலும் எந்த மாற்றமும் இல்லை. இப்போது நடக்கும் அரசியல் விவகாரங்களை வேடிக்கை பார்க்கப்போகிறோம். அ.தி.மு.க-வின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி சொன்ன கருத்து, அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று நிதானமாகப் பதில் அளித்தார்.

ஆனால், ‘படம் இருக்கிறதா... இல்லையா?’ என்பதைச் சொல்ல மறுத்துவிட்டார்.

புகைப்படங்கள் யாரிடம் இருக்கின்றன?

‘‘ஜெயலலிதாவின் சிகிச்சை விவகாரங்களைக் கவனித்துக்கொண்ட அ.தி.மு.க அம்மா அணியில் இருக்கும் சர்ச்சை நாயகனான அமைச்சர் ஒருவரிடம் ஜெயலலிதாவின் படம் உள்ளது. அதுபோல ஜெயலலிதாவின் மருத்துவக் கோப்புகளுடன் இணைக்கப்பட்டு சில புகைப்படங்கள் உள்ளன. அதோடு, ‘அந்த நேரத்தில் அரசுத்துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்த நான்கு அதிகாரிகளிடம் ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ளது’’ என்று சசிகலா தரப்பில் சிலர் சொல்கிறார்கள். ‘‘ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், ஷீலாபிரியா, வெங்கடரமணன் ஆகியோர்தான் அந்த அதிகாரிகள்’’ என்கின்றனர்.

‘‘ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது திடீரென ஒருநாள், இந்த நான்கு அதிகாரிகளையும் உள்ளே அழைத்துள்ளார். ஷீலாபிரியா தவிர மற்ற மூன்று அதிகாரிகள் சென்றுள்ளனர். அவர்களிடம் பேசிய ஜெயலலிதா, ‘வேர் இஸ் ஷீலாபிரியா’ என்று கேட்டுள்ளார். அவர் கேட்டபோதே ஷீலாபிரியாவும் உள்ளே சென்றுவிட்டார். அன்று அவர்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த ஜெயலலிதாவோடு அவர்கள் நான்கு பேரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஆனால், தற்போது அவர்களும் ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை’’ என்கிறார்கள் அவர்கள்.

p2a.jpgஇந்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, ‘‘ஜெயலலிதாவின் புகைப்படங்கள் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும்’’ என்று சொன்ன புகழேந்தியிடம் பேசினோம். அவர், “அம்மா கடந்த ஒன்றரை வருடங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தார். அவருடைய உடல் கூன் போட்டு வளைந்துவிட்டது. ஒரு அப்பாயின்மென்ட் முடித்துவிட்டு, அடுத்த நபரைப் பார்ப்பதற்கு இடையில் அவர் சோர்ந்து உட்கார்ந்துவிடுவார். அந்த சோர்வு நீங்கியதும்தான் அடுத்தவரைப் பார்ப்பார். அதோடு அவரால் சரியாக நடக்க முடியவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளைப் பிடித்துக் கொண்டுதான் நடந்தார். இந்த நிலையில் இருந்த அவர் மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அப்போது அவருடைய புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவல்கள் எல்லாம் பன்னீருக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும். தன் இறுதி நாட்களில் சின்னம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த அம்மா, ‘தன் புகைப்படம் இந்தக் கோலத்தில் எதிலும் வெளிவந்துவிடக்கூடாது’ என்று தெரிவித்தார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் பொதுவெளியில் அது இன்னும் வெளியிடப்படவில்லை. நீதிமன்றத்திலும், அரசு மட்டத்திலும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதை சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அதையெல்லாம் மறைத்து  ஓ.பி.எஸ் அணியினர் தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். அதனால், தகுந்த நேரத்தில் அந்தப் படத்தை சின்னம்மாவிடம் கலந்தாலோசித்து நாங்கள் வெளியிடுவோம்” என்றார்.

வீடியோ இருக்கிறதா?

‘‘வீடியோவும் இருக்கிறது. ஜெயலலிதா சிகிச்சையில் முன்னேற்றம் கண்ட நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், நர்ஸ் ஒருவரிடம் சசிகலாவை அழைக்கும்படி ஜெயலலிதா சொல்கிறார். அதையடுத்து ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிக்கொள்கின்றனர். அந்த வீடியோ, இளவரசியின் மகன் விவேக் கையில் இருக்கிறது’’ என்றும் சொல்கிறார்கள்.

இதை மறுக்கும் ஓ.பி.எஸ் அணியினர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எந்தப் படமும் எடுக்கப்படவில்லை. படம் எடுத்தாக வரும் செய்திகளில் உண்மையில்லை. ஒருவேளை சசிகலா தரப்பு ஜெயலலிதாவைப் படம் எடுத்திருந்தால் அதுவே மிகப் பெரிய கிரிமினல் குற்றம். தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே அவர்கள் படம் எடுத்ததாகத்தான் கருதமுடியும். மருத்துவமனையில் நோயாளிகளின் அனுமதி இல்லாமல் படம் எடுக்கக் கூடாது. அம்மாவை இவர்கள் படம் எடுத்திருந்தால், சசிகலா குடும்பம்தான் முதல் குற்றவாளியாகச் சிக்குவார்கள்” என்கிறார் ஓ.பி.எஸ் அணியில் உள்ளவரும்,  வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன்.

நல்லா படம் காட்றாங்கப்பா!

http://www.vikatan.com/juniorvikatan/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.