Jump to content

ரொனால்டோ கோல் அடிப்பதை யுவென்டஸ் தடுக்க முடியுமா? #Championsleague #Gameplan


Recommended Posts

ரொனால்டோ கோல் அடிப்பதை யுவென்டஸ் தடுக்க முடியுமா? #Championsleague #Gameplan

 
 

தலைப்பைப் படித்ததும் திட்ட வேண்டாம். `இன்று நள்ளிரவுதான் சாம்பியன்ஸ் லீக் அரை இறுதி செகண்ட் லெக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட் மோதுகின்றன. அதற்குள் எப்படி ஃபைனலில் ரொனால்டோ கோல் அடிப்பதைப் பற்றி எழுதலாம்?' எனக் கேட்கலாம். கால்பந்தை, சாம்பியன்ஸ் லீக்கை, இந்த சீஸனை உன்னிப்பாகக் கவனித்துவருபவர்களுக்கு ஃபைனலில் ரியல் மாட்ரிட் - யுவென்டஸ் மோதலைத் தவிர்க்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். 

ரொனால்டோ - சாம்பியன்ஸ் லீக்

ரியல் மாட்ரிட் ஹோம் கிரவுண்ட் சாண்டியாகோ பெர்னபுவில் நடந்த முதல் அரை இறுதியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடிக்க, 3-0 என ரியல் மாட்ரிட் வெற்றி. ஆக, அல்ரெடி ஃபைனலில் ஒரு காலை வைத்துவிட்டது ரியல் மாட்ரிட். அட்லெடிகோ மாட்ரிட் கிளப்பின் சொந்த மைதானத்தில் இன்று நடக்கும் செகண்ட் லெக் செமி ஃபைனல் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமே. பெஸ்ட் க்ளப்புக்கு எதிராக 90 நிமிடங்களில் நான்கு கோல்கள் என்பதெல்லாம் சாத்தியமில்லாத விஷயம். ஏதாவது  அதிசயம் நடந்தால் மட்டுமே அட்லெடிகோ ஃபைனல் செல்லும். கிட்டத்தட்ட ஜூன் 3-ம் தேதி கார்டிஃப் நகரில் நடக்கும் ஃபைனலில் ரியல் மாட்ரிட் - யுவென்டஸ் மோதுவது என்பது அன்அஃபீஷியலாக முடிவெடுக்கப்பட்டுவிட்டது. எனவே ஃபோகஸ் முழுவதும் ஃபைனலில் மட்டுமே.

ரியல் மாட்ரிட், ஸ்பெயின் கால்பந்தில் கில்லி. 11 முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன். கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரீம் பென்ஸிமா, கேரத் பேல் என முன்னணி ஸ்ட்ரைக்கர்கள் நிறைந்த படை. யுவென்டஸ் - இத்தாலி கால்பந்தில் கோலோச்சும் கிளப். டிஃபன்ஸ் விஷயத்தில் சர்வதேச க்ளப்களின் முன்னோடி. ஜார்ஜோ கெலினி, லியாண்டோ போனுச்சி,  ஆண்ட்ரியோ பர்ஸாக்லி, விங்கில் அலெக்ஸ் சாண்ட்ரோ என யுவென்டஸ் பின்களம் எப்போதுமே மிரட்டல். இவர்களுக்கு எதிராக கோல் அடிக்கவேண்டியது ரொனால்டோ முன் உள்ள சவால். அவர் எப்படியும் கோல் அடித்துவிடுவார் என்பது CR7, ரியல் மாட்ரிட் ரசிகர்கள் எதிர்பார்ப்பு. அரை இறுதியின் ஃபர்ஸ்ட் லெக்கில், யுவென்டஸ் போலவே டிஃபன்ஸுக்குப் பெயர்போன டீகோ சைமனின் அட்லெடிகோ மாட்ரிட்டுக்கு எதிராகவே ஹாட்ரிக் கோல் அடித்தவர் CR7. அவரால் எந்த அணிக்கு எதிராகவும், எந்த நேரத்திலும் கோல் அடிக்க முடியும். பலமுறை அப்படி அடித்திருக்கிறார். He strikes when it matter. ஆனாலும், யுவென்டஸ் அவ்வளவு எளிதில் ரொனால்டோவை பெனால்டி பாக்ஸில் அனுமதிக்காது என்பதையும் மறுப்பதற்கில்லை. டிஃபன்ஸில் யுவென்டஸ் சிம்மசொப்பனம். எனவே, ஃபைனலில் நிச்சயம் அனல் பறக்கும்.

சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் யுவென்டஸ்

யுவென்டஸ், ஒன்பதாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் விளையாடுகிறது. 1985, 1996 என இரண்டு முறை மட்டும் சாம்பியன். தொடர்ந்து நான்கு முறை ஃபைனலில் தோல்வி. இவற்றில் 2015-ல் பார்சிலோனாவுக்கு எதிரான தோல்வியும் அடக்கம். இந்தமுறையும் எதிர்த்து விளையாட இருப்பது ஸ்பெயின் க்ளப் என்பது, யுவென்டஸ் ரசிகர்களுக்கு கிலியாக இருக்கும். அதேநேரத்தில் மெஸ்சி, சுவாரஸ், நெய்மர் ஆகிய மும்மூர்த்திகளையும் கோல் அடிக்கவிடாமல், பார்சிலோனாவை இந்த சீஸனில் வீட்டுக்கு அனுப்பிய பெருமையும் யுவென்டஸ் க்ளப் வசமே. இந்த சீஸனில் 689 நிமிடங்கள் கோல் வாங்காமல் இருந்த ஒரே க்ளப் யுவென்டஸ் மட்டுமே. ஆறு மேட்சக்சுகளில் க்ளீன் ஷீட். 

ஃபுட்பாலில் க்ளீன் ஷீட் என்பது, கோல்கீப்பருக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த கெளரவம். அப்படிப்பட்ட கோல் கீப்பரைப் (புஃபான்) பெற்றிருப்பது யுவென்டஸ் செய்த வரம். புஃபான் வயது 39. மனுஷன் இன்னமும் இளைஞன். அவரிடம் வேர்ல்டு கப் வின்னர் என்ற பெருமை இருக்கிறது. ஆனால், க்ளப் உலகம் என்றென்றும் கொண்டாட வேண்டுமெனில், `சாம்பியன்ஸ் லீக் வின்னர்' என்கிற பெயரும் அவசியம். 2003, 2015 என இருமுறை சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் விளையாடும் வாய்ப்பு பெற்றாலும், கோப்பையை முத்தமிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ‛சில வீரர்களின் கோப்பைக்கும் உதட்டுக்குமான இடைவெளி நீண்டுகொண்டே இருக்கும்’ - மாரடோனா சொன்ன இந்த வரிகள் புஃபானுக்கும் பொருந்தும். இந்தமுறை நிறைவேறுமா?

ரொனால்டோ - சாம்பியன்ஸ் லீக்

கார்டிஃப் நகரில் நடக்கும் ஃபைனலில் நிச்சயம் ரியல் மாட்ரிட்டுக்குத்தான் ஆதரவு இருக்கும். யுவென்டஸ் Underdogs Tag-ல்தான் மதிப்பிடப்படும். எந்த அணிக்கும் யுவென்டஸ் பின்களம் அச்சுறுத்தலாக இருக்கும். சந்தேகமே இல்லை. ஆனால், இந்தப் போட்டியில், இந்த நேரத்தில், இந்த நிமிடத்தில், இந்த கோல் கீப்பருக்கு எதிராக கோல் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடி இருக்கும்போது கோல் அடிக்கவல்ல திறமையான ஸ்ட்ரைக்கர்கள் யுவென்டஸ் அணியில் இல்லை. குருட்டாம்போக்கில் கோல் அடித்துவிட முடியாது அல்லவா? அங்கே செர்ஜியோ ரமோஸ் பெளல் செய்தேனும் கோல் அடிக்கவிடாமல் தடுத்துவிடுவார் அல்லவா?  ஹிகுவெய்ன், மண்ட்சுகிச், டிபாலா போன்றோரால் ரியல் மாட்ரிட் டிஃபன்ஸைத் தகர்த்து கோல் அடிக்க முடியுமா? மொனாக்கோவுக்கு எதிரான அரை இறுதியில் டேனி ஆல்வ்ஸ், மரியோ மண்ட்சுகிச் இரண்டு கோல்கள் அடித்தனர். அதைவிட அவர்கள் நழுவவிட்ட வாய்ப்புகள் ஏராளம். அதுவும் லட்டு போன்ற எளிதான வாய்ப்புகள். மொனாக்கோ போல் அல்ல ரியல் மாட்ரிட். வாய்ப்புகள் அடிக்கடி கிடைக்காது.

 

ஹிகுவெய்ன், மண்ட்சுகிச் நல்ல ஸ்ட்ரைக்கர்கள்தான். ஆனால், நான்கில், மூன்றில் ஒரு வாய்ப்பை கோல் அடிப்பர். கோல் அடிக்க வாய்ப்பில்லாதவற்றையும் வலைக்குள் தள்ளுபவர் ரொனால்டோ. எனவே, யுவென்டஸ் பயிற்சியாளர் அலெக்ரியிடம் தெளிவான திட்டம் இருக்க வேண்டும். ரொனால்டோவைக் கட்டுப்படுத்தும் திட்டம், ரியல் மாட்ரிட் டிஃபன்ஸை ஊடுருவும் திட்டம், டோனி க்ரூஸின் இஞ்ச் பெர்ஃபெக்ட் கிராஸைத் தடுக்கும் திட்டம் என எல்லாவிதங்களிலும் சிந்திக்க வேண்டும். அவுட் ஆஃப் தி பாக்ஸ் யோசிக்க வேண்டும். ப்ளான் பி ரெடியாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும்விட டிஃபன்ஸ், டிஃபன்ஸ், டிஃபன்ஸ் என்ற ஸ்ட்ரேட்டஜியை ஒத்திவைத்துவிட்டு, கூடுமானவரை அட்டாக், அட்டாக், அட்டாக் என்ற ஃபார்முலாவை அரங்கேற்ற வேண்டும். ஏனெனில், வெற்றி டிஃபண்டர்களைவிட கோல் அடிப்பவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/sports/88981-can-juventus-defenders-stop-cristiano-ronaldo-in-champions-league-final.html

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப் போட்டியில் ஜூவென்டஸ் அணி

 

 
 
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது கட்ட அரை இறுதியில் மொனாக்கோ அணிக்கு எதிராக கோல்கீப்பரின் தடுப்பை மீறி அசத்தலாக கோல் அடிக்கும் ஜூவென்டஸ் அணி வீரர் மரியோ மன்ட்ஸ்யூக். படம்: ஏஎப்பி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது கட்ட அரை இறுதியில் மொனாக்கோ அணிக்கு எதிராக கோல்கீப்பரின் தடுப்பை மீறி அசத்தலாக கோல் அடிக்கும் ஜூவென்டஸ் அணி வீரர் மரியோ மன்ட்ஸ்யூக். படம்: ஏஎப்பி
 
 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2-வது கட்ட அரை இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மொனாக்கோ அணியை வீழ்த்திய ஜூவென்டஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

முதல் கட்ட அரை இறுதியில் ஜூவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று இத்தாலியின் டுரின் நகரில் 2-வது கட்ட அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. 33-வது நிமிடத்தில் ஜூவென்டஸ் அணி முதல் கோலை அடித்தது.

அந்த அணி வீரர் மரியோ மன்ட்ஸ்யூக், எதிரணி வீரர்களின் தடுப்புகளை மீறி கோல் கம்பத்தின் மிக அருகே வைத்து அடித்த இந்த கோலால் ஜூவென்டஸ் 1-0 என முன்னிலை பெற்றது. 44-வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான டேனி ஆல்வஸ் அடித்த கோலால் முதல் பாதி ஆட்டத்தில் ஜூவென்டஸ் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

69-வது நிமிடத்தில் மொனாக்கோ பதிலடி கொடுத் தது. 18 வயதான கைலன் பாப்பே இந்த கோலை அடித்தார். ஆனால் இதன் பின்னர் அந்த அணியால் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. அதேவேளை யில் ஜூவென்டஸ் அணி தற்காப்பு ஆட்டத்தை பலப்படுத்தியது. முடிவில் ஜூவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரு கட்ட அரை இறுதி ஆட்டங்களில் அடிக்கப்பட்ட கோல்களின் சராசரி விகிதப்படி ஜூவென்டஸ் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அந்த அணி கடந்த 3 ஆண்டு களில் 2-வது முறையாக இறுதிப் போட்டியில் கால்பதித்து அசத்தி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பார்சிலோனோவிடம் 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வி யடைந்திருந்தது.

http://tamil.thehindu.com/sports/சாம்பியன்ஸ்-லீக்-கால்பந்து-இறுதிப்-போட்டியில்-ஜூவென்டஸ்-அணி/article9692313.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: யுவென்டஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

 

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் யுவென்டஸ் அணி, மொனாக்கோ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

 
 
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: யுவென்டஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
மொனாக்கோ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய யுவென்டஸ் அணியினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
துரின் :

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் யுவென்டஸ் (இத்தாலி), மொனாக்கோ எப்.சி. (மொனாக்கோ), அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. அரைஇறுதி ஆட்டங்கள் 2 சுற்றுகள் கொண்டதாகும். 2 சுற்றுகள் முடிவில் அதிக கோல் அடித்த அணி வெற்றி பெறும். இதன் அரைஇறுதியில் முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டையும், யுவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொனாக்கோ அணியையும் தோற்கடித்து முன்னிலை பெற்றன.

இந்த நிலையில் துரினில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதி 2-வது சுற்று ஆட்டத்தில் யுவென்டஸ்-மொனாக்கோ அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொனாக்கோ அணியை மீண்டும் வீழ்த்தியது. யுவென்டஸ் அணியில் மரியோ மான்ட்சுகிச் 33-வது நிமிடத்திலும், டேனி ஆல்வ்ஸ் 44-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மொனாக்கோ அணி தரப்பில் கெய்லியன் மாப்பே 69-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

201705110942584645_12Junior-Football._L_

அரைஇறுதியின் இரண்டு சுற்று ஆட்டங்கள் முடிவில் யுவென்டஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. 1985, 1996-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய யுவென்டஸ் அணி 9-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 2-வது தடவையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. கடைசியாக 2015-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்த யுவென்டஸ் அணி இறுதிப்போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியிடம் (ஸ்பெயின்) தோல்வி கண்டது.

கார்டிப்பில் ஜூன் 3-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் யுவென்டஸ், அணி நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும். பெரும்பாலும் 11 முறை சாம்பியனான வலுவான ரியல் மாட்ரிட் அணியையே அந்த அணி சந்திக்க வேண்டியது வரும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/11094252/1084673/European-Champions-League-football-Juventus-team-qualifies.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் லீக்: அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது ரியல் மாட்ரிட்

 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதியின் 2-வது லெக்கில் ரியல் மாட்ரிட் 1-2 என தோல்வியடைந்தாலும் ஒட்டுமொத்தமாக 4-2 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

 
 
சாம்பியன்ஸ் லீக்: அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது ரியல் மாட்ரிட்
 
ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று நள்ளிரவு நடைபெற்று அரையிறுதியின் 2-வது லெக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின.

ஏற்கனவே நடைபெற்ற முதல் லெக்கில் ரியல் மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்த போட்டியில் 4-0 என வெற்றி பெற்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையுடன் அட்லெடிகோ மாட்ரிட் களம் இறங்கியது.

ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணியின் நிகஸ் முதல் கோலை பதிவு செய்தார். கார்னர் வாய்ப்பில் சக நாட்டு வீரர் கார்னரில் இருந்து தூக்கியடித்த பந்தை தலையால் முட்டி கோல் ஆக்கினார். 16-வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணி வீரர் கோல் அடிக்க பந்தை கடத்திக் கொண்டு வருகையில் ரியல் மாட்ரிட் வீரர் அவர் காலை தட்டிவிட்டார். இதனால் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியான பயன்படுத்தி கிரிஸ்மான் கோல் அடித்தார்.

201705111624354934_isco-s._L_styvpf.gif

16-வது நிமிடத்திலேயே அட்லெடிகோ மாட்ரிட் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. இன்னும் ஒரு கோல் அடித்தால் டிரா, இரண்டு கோல் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் அட்லெடிகோ மாட்ரிட் வீரர்கள் அபார ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே 42-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் இஸ்கோ கோல் அடித்தார். பென்சிமா கொடுத்த பந்தை க்ரூஸ் அசுர வேகத்தில் அடித்தார். அந்த பந்தை அட்லெடிகோ மாட்ரிட் கீப்பர் அருமையாக தடுத்தார். ஆனால் பந்து அவரது கையில் இருந்து வெளியேறியது. அருகில் தயாராக இருந்த இஸ்கோ பந்தை கோல் கம்பத்திற்குள் உதைத்து தள்ளி கோலாக்கினார்.

இதனால் முதல்பாதி நேரத்தில் 2-1 என அட்லெட்டிகோ மாட்ரிட் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதி நேரத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி பெற்றது. என்றாலும் முதல் லெக்கில் ரியல் மாட்ரிட் 3-0 என வெற்றி பெற்றிருந்ததால், ஒட்டுமொத்தத்தில் 4-2 என ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அடுத்த மாதம் 3-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் - யுவான்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி வேல்ஸில் உள்ள கார்டிஃப் மைதானத்தில் நடக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/11162429/1084773/Champions-League-Real-Madrid-Beat-Atletico-Madrid.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.