Sign in to follow this  
Innumoruvan

ஆனந்தத் தாண்டவம்

Recommended Posts

Innumoruvan    514

மென்மதி மலர்மீது பூம்பனித் துளிகள்
தேனி சிறகசைக்கத் துளிகள் ஒன்றாயின
மஞ்சள்த் தேனியின் காலின் கறுப்பிற்கு மகரந்தச் செம்மஞ்சள் 
முறுவலை என்முகம் முளுதாய்ப் பிரசவித்தது.

மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டு தொலைந்தது
கூடவே மாயையும் கரைந்துபோனது
நிறம் மணம் மறைந்து ஆவி ஒன்றென ஆகி நின்றோம்
எரியும் கட்டையோடு பிறிதொரு கட்டைபோடின், ஒரே நெருப்பு இரண்டிலும் எரிவதுபோல்
தேனியும் மென்மதியும் மகரந்தமும் என்னுசிரும் ஜோதியில் ஒன்றாய்ப் புரிந்து கிடந்தன

எங்கும் பரந்த முடிவற்ற வெளி
ஆதியும் அந்தமும், அடியும் முடியும், நேரமும் மரித்த வெளி
அருவத்துள் உருவத்துள் அனைத்துள்ளும் பரந்த ஒரே வெளி
கடலிற்குள் உப்பற்ற நீர்த்துளி இல்லை
இவ்வெளிக்குள் துளிகள் இல்லை, ஒன்று, ஒரே ஒன்று, துளிகளிற்குள்ளும் விரியும் ஒரே வெளி
வெளியில் ஞானமில்லை, வெளியே ஞானம்
அனைத்தும் வெளியாதலால் ஞானமே அனைத்தும்
பள்ளியில் இல்லை கருத்தரிப்பில் இல்லை, இருப்பிற்கு முந்திய இல்லாமையில் இல்லை,
அது இல்லாது இருந்ததே இல்லை, தொடங்கிற்றில்லை முடிந்திற்றில்லை

பேருந்து நிலையத்தில் குள்ளன் ஒருவன், பிச்சைக்கார நோயாளி பிறிதொருவன்,
முதிய பெண்ணொருத்தி, அழகி இன்னொருத்தி
தன் இருப்பைப் பேண... மனம் தீர்ப்புக்கள் எழுதிக்கொண்டிருக்கையில்
மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டுதொலைந்தது
கூடவே தூக்கமும் கலைந்தது
குள்ளனும் கிழவனும் நொடிந்தோனும் அழகியும் என்னானார்கள் தெரியாது
இரண்டு கட்டையில் எரியும் ஒரே நெருப்பு
பூமிப்பந்தில்லை, பால்வெளிகளில்லை, சூரியசந்திர நட்சத்திரத் துகள்களில்லை
ஆதியும் அந்தமும் அற்ற, அடியும் முடியும் இல்லா, நேரம் மரித்த ஞானப்பெருவெளியில்...ஆனந்தத் தாண்டவம்
நேரமில்லை, ஆதலாற் தாண்டவம்... தொடங்கிற்றில்லை முடிந்திற்றில்லை

  • Like 8

Share this post


Link to post
Share on other sites
suvy    3,192

எரியும் கட்டைகளும் எரிந்தபின் எரிக்கும் நெருப்பும் அங்கில்லை....!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் ......! ஞ<னம், பொருள் நிறைந்த கவிதை ....!  tw_blush:  

Share this post


Link to post
Share on other sites

கனவுக்கு மட்டுந்தானே அத்தனை சக்தி.....

இன்னுமொருவனின் இன்னொரு முகம். ரம்மியமாகத்தான் இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites
Innumoruvan    514

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும்.


கனவு பற்றி எழுதவில்லை, கனவு போன்று அர்த்தமின்றிக் கரைந்து கொண்டிருக்கும் வாழ்வில் இருந்து விழித்துக்கொள்ளல் பற்றியது. தூக்கம் என்பதை விழிப்புணர்வுக்கு முந்தை நிலையாக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். 


உலகின் அத்தனை சமயங்களும் (இந்து, கிறீஸ்த்தவம், இஸ்லாம் (சூபி குறிப்பாக), பௌத்தம், சென் அனைத்தும்) காலாதிகாலமாக குறிப்பிடும் அடிப்படை விடயங்கள், மூன்றாம் வகுப்புச் சமயப்புத்தகத்திலேயே நாம் படித்துவிட்டாலும் விழிப்புணர்வின்றி, துன்பத்தில் உழன்று, எத்தனை செழிப்பிருப்பினும் வெறுமை மட்டும் உணரப்பட்டதாயப் பல வாழ்வுகள் நகர்கின்றன. 


மனம் பற்றிய புரிதல் இன்றி, உலகை துண்டுதுண்டாக மட்டும் பார்த்துக் கிடக்கிறோம். அனைத்தையும் மனதின் ஆதிக்கத்தில் விடுத்து, தீர்ப்புக்கூறாது எதையும் பார்க்க முடியாதவர்களாக, இருக்கிறோம். எம்மை உலகினின்று பிரிந்தவர்களாக ஒரு தீவு போன்றே எம்மையறியாது உணர்ந்துகொண்டிருக்கிறோம். உலகின் முழமைக்குள் நாமும் என்பது ஞாபகத்தில் வருவதே இல்லை. கவிதை போன்றன கூட துண்டு துண்டா விடயங்களை மனத்தின் ஆழமைக்குள் மட்டும் நின்று பேசிக்கொண்டிருக்கின்றன. அழகை வெழியே தேடுகின்றன. மதிப்பீடு தீர்ப்பு என்பனவற்றைத் தாண்டிய, மனதிற்கும் சிந்தனைக்கும் அப்பாலான கட்டத்தில் பார்த்தல் என்றவகையில் இதைப் பதிந்துள்ளேன்.

கவிதை என்று பதிந்துவிட்டு அதற்கு பொழுpப்பும் எழுதுவது சரியாக அமையாது என்பதால் வாசகர் கையில் விட்டுகிறேன். சுவியின் பார்வை அண்மித்து வருவதாகத் தோன்றுகிறது.  
 

Share this post


Link to post
Share on other sites

அனுபவம் என்பது வாழ்க்கையின் ஆரம்பம்.

பலரும்  ஒரு துளி அளவு  கூட இல்லாத அனுபவத்தையே பெரும் கடலாகப் பார்க்கின்றனர்.

அது உண்மையல்ல.

பெருங்கடல் போல எம்முன்னே விரிந்திருக்கும் அனுபவக்கடலில்

ஆழ்ந்து நீந்துபவர்கள் ஒரு சிலரே அவர்களே ஞானிகள் ஆகின்றனர்.
சிலர்  சிறுவயதிலேயே அந்த நிலையை அடைந்து விடுகின்றனர்.

இன்னும் சிலருக்கு அதிக கால  அவகாசம் தேவைப்படுகின்றது.

வாழ்வின் பேறு என்பது என்ன?
வாழ்வின் பேறு  என்பது உன்னை நீயே மனதார மற்றவர்களுக்கு அர்ப்பணித்து விடுதல்.

அனுபவம் என்ற பெருங்கடலில் நீ பெற்ற முத்துக்களைக் கோர்த்து

அழகான கவிதையாக்கி அடுத்து  வரும் தலைமுறைக்கு அர்ப்பணித்து விடுதல்.

அப்போது நீ பெற்ற வாழ்வின் பேறினைப் பெற்றவனாகி விடுகின்றாய்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, வாத்தியார் said:

அனுபவம் என்பது வாழ்க்கையின் ஆரம்பம்.

பலரும்  ஒரு துளி அளவு  கூட இல்லாத அனுபவத்தையே பெரும் கடலாகப் பார்க்கின்றனர்.

அது உண்மையல்ல.

பெருங்கடல் போல எம்முன்னே விரிந்திருக்கும் அனுபவக்கடலில்

ஆழ்ந்து நீந்துபவர்கள் ஒரு சிலரே அவர்களே ஞானிகள் ஆகின்றனர்.
சிலர்  சிறுவயதிலேயே அந்த நிலையை அடைந்து விடுகின்றனர்.

இன்னும் சிலருக்கு அதிக கால  அவகாசம் தேவைப்படுகின்றது.

வாழ்வின் பேறு என்பது என்ன?
வாழ்வின் பேறு  என்பது உன்னை நீயே மனதார மற்றவர்களுக்கு அர்ப்பணித்து விடுதல்.

அனுபவம் என்ற பெருங்கடலில் நீ பெற்ற முத்துக்களைக் கோர்த்து

அழகான கவிதையாக்கி அடுத்து  வரும் தலைமுறைக்கு அர்ப்பணித்து விடுதல்.

அப்போது நீ பெற்ற வாழ்வின் பேறினைப் பெற்றவனாகி விடுகின்றாய்.

ஆகா... அருமையான கருத்து, வாத்தியார். :) 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this