Jump to content

கனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்


Recommended Posts

கனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்

 
 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், கனடாவுக்கு வந்த முஹமத் மற்றும் ஆஃப்ரா பிலான் தம்பதியர் முற்றிலும் ஒரு புதிய நாட்டில், தங்களின் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர்.

குழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'வுடன் ஆஃப்ரா பிலான்படத்தின் காப்புரிமைAFRAA BILAN Image captionகுழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'வுடன் ஆஃப்ரா பிலான்

சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரை சேர்ந்த இத்தம்பதியர் மற்றும் இவர்களின் மகள் நயா மற்றும் மகன் நேல் ஆகியோர் கடும் பனிக்காலத்தில் மான்ட்ரல் நகருக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

கனடாவுக்கு வந்த மற்ற சிரியா அகதிகளை விமான நிலையத்தில் வரவேற்றது போல, இவர்கள் வந்த போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்கவில்லை.

ஆனால், தங்களை கனடாவில் அனுமதித்தற்காக, ஏதாவது ஒரு வகையில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவிக்க விரும்பிய இத்தம்பதியர், புதிதாக பிறந்த தங்களின் ஆண் குழந்தைக்கு அவரது பெயரை வைத்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமையன்று ஜஸ்டின் ட்ரூடோ ஆடம் பிலான் பிறந்தான்.

தற்போது 29 வயதாகும் முஹமத், டமாஸ்கஸில் முடிதிருத்தும் தொழிலாளியாக பணிபுரிந்தார். ஆனால், ஒரு முறை சிரியாவின் ராணுவத்தால் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னரும், மீண்டும் அவரை சிரியா ராணுவம் தேடி வருவதையும், மீண்டும் ஒரு முறை முஹமத் கைது செய்யப்படலாம் என்பதையும் அவர் குடும்பம் அறிந்தது.

மீண்டும் ஒரு முறை, அவர் கைது செய்யப்பட்டால், அங்குள்ள பலரைப் போல முஹமத் மீள முடியாத நிலை ஏற்படும்.

கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்றவுடன், சிரியா அகதிகளை கனடா ஏற்றுக் கொள்ள ஆரம்பித்த பின்னர், சிரியாவை விட்டு வெளியேறும் வாய்ப்பு முஹமத் குடும்பத்துக்கும் கிட்டியது.

ஐந்து ஆண்டுகளாக போர் நடந்து வந்த சிரியாவில் இருந்து வெளியேறும் வாய்ப்பு கிடைத்தவுடன் முஹமத் குடும்பத்தார் அந்த வாய்ப்பை பயன்படுத்தினர்.

குழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'வுடன் தந்தை முஹமத்படத்தின் காப்புரிமைFACEBOOK/MUHAMMAD BILAN Image captionகுழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'வுடன் தந்தை முஹமத்

கிழக்கு மாகாணமான குயூபக்கில் உள்ள மான்ட்ரல் நகரில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்த இக்குடும்பம், இறுதியாக மேற்கு மாகாணத்தின் கால்காரிக்கு இடம்பெயர்ந்தனர்.

''கனடா மிகவும் பாதுகாப்பான நாடு. இங்கு எந்தப் போரும் நடைபெறவில்லை'' என்று பிபிசியிடம் தொலைபேசியில் தெரிவித்த ஆஃப்ரா பிலான், மேலும் கூறுகையில், ''எல்லாமே மாறியுள்ளது. எல்லாமே இங்கு நன்றாக உள்ளது, சிரியாவை போல அல்ல'' என்று தெரிவித்தார்.

கனடா வந்த புதிதில், தாங்கள் சில துயரங்களை சந்தித்ததாக ஒப்புக் கொண்ட ஆஃப்ரா, அங்குள்ள சூழல்களுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள, குறிப்பாக கடும் குளிரை தாக்குப் பிடிப்பது சிரமமாக இருந்தது என்று தெரிவித்தார்.

குழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'படத்தின் காப்புரிமைFACEBOOK/SAM NAMMOURA Image captionகுழந்தை 'ஜஸ்டின் ட்ரூடோ'

தற்போது, ஆஃப்ரா சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். மேலும், அவரது கணவர் முஹமத் ஒரு மளிகைக் கடையில் பகுதி நேர பணியாளராக பணிபுரிகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் பெயரை தாங்கிய தங்களின் குழந்தை ஒருநாள் தனது பெயரை கொண்ட கனடா பிரதமரை சந்திப்பான் என்று இத்தம்பதியர் நம்புகின்றனர்.

''ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் நல்லவர்'' என்று தெரிவித்த ஆஃப்ரா, ''அவர் எங்களுக்கு மிகவும் உதவுகிறார். கனடாவில் எங்களை வாழ அனுமதித்த பிரதமருக்கு சிறிய அளவில் நன்றி தெரிவிப்பதற்கே அவரது பெயரை எங்களின் குழந்தைக்கு வைத்துள்ளோம். அவருக்கும், கனடா மக்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்'' என்று மேலும் தெரிவித்தார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோபடத்தின் காப்புரிமைREUTERS Image captionகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த ஜனவரி மாதத்தில், 7 பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்த போது, துன்புறுத்தல், பயங்கரவாதம் மற்றும் போர் ஆகியவற்றால் தங்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்பவர்களுக்கு உதவ தனது அரசு உறுதி பூண்டிருப்பதாக சமூகவலைத்தளத்தில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

http://www.bbc.com/tamil/39835814

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாம்புக்கு பால் ஊத்தினாலும் அதன் தன்மையை இழப்பதில்லை என்று எப்ப இந்த ஜஸ்டின் உணரபோறாரோ தெரியலை அது மட்டும் அந்தாள் பல்லே டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கபோகுது . அங்காலை கப்பலில் வந்த நம்மவரை வச்சு வதம் பண்ணுவதும் இதே கனடா அரசுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

பாம்புக்கு பால் ஊத்தினாலும் அதன் தன்மையை இழப்பதில்லை என்று எப்ப இந்த ஜஸ்டின் உணரபோறாரோ தெரியலை அது மட்டும் அந்தாள் பல்லே டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கபோகுது . அங்காலை கப்பலில் வந்த நம்மவரை வச்சு வதம் பண்ணுவதும் இதே கனடா அரசுதான்.

சிரியா பகைநாடு சிறிலங்கா நட்புநாடு அவளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nochchi said:

சிரியா பகைநாடு சிறிலங்கா நட்புநாடு அவளவுதான்.

பொறுங்க கனடா காரர் வந்து விளக்கம் தருவினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் சொன்னாலும் கனடாவில் பல  தமிழர்கள் அகதிகளாக சென்று  குடிகளானார்கள் அவர்களையும் ஏற்றுக்கொண்டது  கனடிய அரசுதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

 அங்காலை கப்பலில் வந்த நம்மவரை வச்சு வதம் பண்ணுவதும் இதே கனடா அரசுதான்.

 

12 minutes ago, பெருமாள் said:

பொறுங்க கனடா காரர் வந்து விளக்கம் தருவினம் 

வதம் பண்ணுவதற்கு சாட்சி சொல்லுபவர்கள் அதே கப்பலில் ஒன்றாக வந்த முன்னர் ஒன்றாக இருந்த நம்மவர்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

கனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்

 

உந்த சிரியன்காரார் இஞ்சையும் அங்கெலா மேர்க்கல் எண்டு தங்கடை பொம்புளை பிள்ளையளுக்கு பேர் வைச்சுக்கொண்டு திரியினம்.:cool:

ஆனால் எங்கடை புலம்பெயர்சனமும் உந்தவிசயத்திலை குறையில்லை.......இவையளும் தங்களுக்கு உதவி செய்த ஜேர்மன்காரன்/காரியின்ரை பெயரை தங்கடை பிள்ளையளுக்கும் சூட்டி பெருமிதம் அடைஞ்சிருக்கினம் தெரியுமோ..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கீரை கட்டை வாங்கி வந்தால் 
அதில் சில அழுகிய கீரைகள் இருக்கத்தான் செய்கிறது.
அவற்றை விலக்கி விட்டு மற்ற கீரைகளை கழுவி கறி வைத்து 
சாப்பிட்டு ஆரோக்க்கியம் அடைவதே புத்திசாலித்தனம். 

கனடாவின் அயல்நாட்டை பார்த்தீர்கள் என்றால் ....
கீரை கட்டை தூக்கி அங்கால போட்டுவிட்டு 
அந்த அழுகிய கீரையை மட்டும் எடுத்து 
படம் காட்டி டீ வி ரேடியோ என்று பக்க வாதம் மூட்டு வாதம் செய்து 
மக்களை ஒரு மிரண்ட நிலையிலேயே வைத்திருப்பார்கள் 
அதிலும் ஆயுத உற்ப்பத்தி கார்கள் சொந்த மக்களை முட்டாள் கள்  ஆக்கி 
தாம் லாபம் பெற்று கொள்கிறார்கள்.

இந்த பானத்தை குடியுங்கள் 
இதில் உங்கள் ஆரோக்கியம் வளர அது இருக்கு இது இருக்கு 
என்று லாபம் பார்த்து ஒரு சீனி வியாதி கூட்டத்தை உலகில் உருவாக்கி விட்டு 
போய்விடாமல் .
இதை வேண்டி குடியுங்கள் ..... இதில் எதுவுமே இல்லை எல்லாம் ஸீரோ தான் 
என்றும் சொல்லி விற்றும்  அதே நபர்கள் மீண்டும் கொள்ளை லாபம் பெறுகிறார்கள்.  

அது ஏன் ?
உலகம் பூரா முஸ்லீம் இருக்கு 
இந்த மத்திய கிழக்கு முஸ்லீம் மட்டும்தான் பயங்கரவாதியாக 
இருந்து கொண்டு அப்ப அப்ப ஐரோப்பா ... அமெரிக்காவில் தாக்குதல் செய்கிறான் ?

நாம் எவ்ளவு மூடர்களாக இருக்கிறோமோ ...
அந்த அளவில் எமை ஏய்த்து பிழைக்க ஒருவன் வருகிறான். 
எமது மூடத்தனம் எங்கு இருக்கிறது என்று அறிவதே புத்திசாலித்தனம். 

சொந்த நாட்டில் எமக்கு கிடைக்காத ஆதரவும் உரிமைகளும் 
ஒரு பிற நாட்டில் கிடைக்கிறது என்றால் ......
அந்த நன்றி மறவாத மனிதன் 
எந்த கேடும் ஒருபோதும் செய்யான்.
தான் புத்திசாலி என்று எண்ணுபவன்தான் 
சொந்த நாடடையும் ஏய்த்து ... வந்த நாடடையும் ஏய்ப்பான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.