Jump to content

காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? ஓர் அதிர்ச்சிப் பயணம் (வீடியோ தொடர்) #Cauvery #Hogenakkal


Recommended Posts

காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? ஓர் அதிர்ச்சிப் பயணம் (வீடியோ தொடர்) #Cauvery #Hogenakkal

 
 

காவிரி

காவிரிதான் நம் வாழ்வாதாரம்... காவிரிதான் நம் வாழ்வு... இந்தக் கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள். இதில், காவிரி வறட்சிப்பற்றிப் பேசி இருப்போம். இதில், கடைசிக் காட்சியில், '‘காவிரி வறண்டுருச்சு.. இப்ப என்ன செய்யப்போறோம்னு..’' கேள்வி எழுப்பி முடிக்கிறபோது, கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வதுபோலக் காட்சிவரும். அது, திட்டமிட்டுப் படம்பிடித்தது இல்லை. ஆனால், அந்தக் காட்சி ஒரு குறியீடாக... மாபெரும் இடம்பெயர்வைக் குறிப்பிடுவது மாதிரி அமைந்தது.

பறவைகள் சுலபமாக இடம்பெயரலாம்... ஏனெனில், அவைகள் விதைப்பதும் இல்லை... அறுப்பதும் இல்லை. இயற்கையின் கொடையை எந்தப் பேராசையும் இல்லாமல் அவைகள், அளவாக நுகர்ந்து வாழ்கின்றன. குறிப்பாக, அவற்றிடம் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை... சாதி, இன, மதப்பாகுபாடு இல்லை... ஆனால், மனிதர்களாகிய நாம் அப்படியா? 

அந்தப் பறவைகள் போல, காவிரி இல்லை என்று சுலபமாக எங்கேயாவது இடம்பெயர்ந்துவிட முடியுமா...? அகதிகளாக இன்னொரு மாநிலத்துக்குச் சென்றுவிட முடியுமா...?  நினைத்துப் பார்க்கும்போதே மனது பதறுகிறது. நம்முடைய சொந்த ஊரில் இருக்கும் சந்தோஷம், பாதுகாப்பு உணர்வு நிச்சயமாக வேறு எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் கிடைக்காது.

காவிரி

 

சரி... நமக்கு எல்லாம் தந்த காவிரி வறண்டுபோய்விட்டது... இப்போது என்ன செய்யலாம்?

நமக்குத் தண்ணீர் தந்த காவிரிக்குக் கொஞ்ச நாள்களுக்கு நாம் தண்ணீர் தருவோம்.. அதற்கு இதமான சில விஷயங்களைச் செய்வோம்... 

என்ன முட்டாள்தனமாகப் பேசுகிற மாதிரி இருக்கிறதா? இல்லை.... அறிவியலாகத்தான் பேசுகிறேன். ஆமாம்... நம் ஊரில் இருக்கும் எல்லா உள்ளூர் நதிகளும் பெரும்பாலும் காவிரியில்தான் கலக்கின்றன. உதாரணத்துக்கு, அந்த வீடியோ எடுக்கப்பட்ட தர்மபுரியில் உள்ள நாகவதி ஆறு, தொப்பையாறு, சனத்குமார் ஆறு எல்லாம் கலக்கும் இடம் காவிரிதான்.  

நாம் இந்தக் கோடையில் அந்த உள்ளூர் நதிகளைச் சரி செய்வோம்... அதைப் புனரமைக்கச் சொல்லி அரசாங்கத்துக்கு அழுத்தம் தருவோம். இப்படிச் செய்தால் நிச்சயம் காவிரியை மீட்டுவிடலாம்...

காவிரி நம் உரிமை. இது, அரசியல்ரீதியாக மக்களை மடைமாற்றுகிற வேலையாக இருக்கும் என்று சொல்கிறீர்களா...? இல்லை... நிச்சயம் இல்லை. காவிரி நம் உரிமைதான். மறுக்கவில்லை. ஆனால், அதே நேரம் அந்தக் காவிரிக்கு நாம் எதைத் திரும்பச் செய்திருக்கிறோம் என்று யோசிக்கவேண்டும்?

 

 

 

மேட்டூரில் பெரும் நிறுவனக் கழிவு, ஈரோடு மற்றும் திருப்பூரில் சாயப்பட்டறை கழிவு என்று அசிங்கங்களைத்தானே திருப்பிக்கொடுத்து இருக்கிறோம்.

தண்ணீர் ஓர் உயிரென்பது அறிவியல். காவிரியும் ஓர் உயிர்தான். ஓர் உயிரைத் தொடர்ந்து இம்சித்து வந்தால் என்ன நடக்கும்...? ஒன்று சாகும்... இல்லை என்றால் திருப்பியடிக்கும். இப்போது காவிரி ஆறு என்ன செய்கிறது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

இனியாவது அந்தக் காவிரி, அந்தத் தண்ணீர் மகிழ்ச்சியடைகிற மாதிரி சில விஷயங்களைச் செய்வோம். 

காவிரிக்குத் தண்ணீர் தருவது எல்லாம் சாத்தியமா என்று கேட்கிறீர்களா....?

சாத்தியம்தான் என்று தர்மபுரி மாவட்டத்தில் புவிதம் மீனாட்சி, பியூஷ், பொம்மிடி அருண், அந்த மாவட்ட மக்கள் மன்றம் என நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதை நாம், அடுத்த வீடியோ கட்டுரையில் பார்ப்போம்.

 (தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/88190-its-right-time-to-give-back-to-mother-cauvery-a-travel-along-the-river-bank-of-cauvery-videoseries.html

Link to comment
Share on other sites

‘காவிரிக்குத் தண்ணீர் தரும் முயற்சியில் ஐவர் குழு’ - காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? (வீடியோ தொடர்) பகுதி - 2 #Cauvery #Hogenakkal #Inspiring

 

ஏரி - காவிரி

நிக்கோலஸ் எழுதிய “தி நோட்புக்” எனும் நாவலில் இப்படி ஒரு வசனம் வரும். “தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் ஒரு மனிதன் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும்” என்று. ஆம், தண்ணீர் நமக்கு எல்லாம் கற்றுத் தருகிறது. தண்ணீர் நம் தவறுகளின் அளவுகோல். கேரள வனத்தில் நான் சந்தித்த பழங்குடி ஒருவர், “ஒரு சமூகம் பெண்களை எப்படி மதிக்கிறது, நடத்துகிறது என்பதை வைத்துதான் அந்த சமூகத்தை எடைப்போட முடியும்” என்றார். பெண்ணை மட்டுமல்ல, நீரையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நம் சமூகத்தின் கண்ணாடி போன்றது நீர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாம் பெண்களையும் மதிக்கவில்லை...நீரையும் மதிக்கவில்லை. பெண்களின் மீதும், தண்ணீர் மீதும் அமிலம் வீசுகிறோம். பெண்ணையும், தண்ணீரையும் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறோம். 

சரி...சென்ற அத்தியாயத்தில் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறேன். காவிரிக்குத் தண்ணீர் தரலாம் என்றுதானே முடித்திருந்தேன். “ஏன் இந்த பிதற்றல்...? இது சாத்தியமா...? என்றெல்லாம் உங்களுக்குள் பல கேள்விகள் எழுந்திருக்கும். ஆனால், இது சாத்தியம்தான் என்று நிகழ்த்திக் காட்டும் பணியில் இறங்கி இருக்கிறது ஐவர் குழு.

 

“ஆறு ஏரி... ஓர் ஓடை... ஐந்து பேர்...”

அருண்அருண்... தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி. வறண்ட பூமியில் விவசாயத்தில் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியவர். “நமக்கு பிடித்தமானதை மட்டும் விவசாயம் செய்யக்கூடாது. மண்ணுக்குப் பிடித்தமானதையும் விவசாயம் செய்ய வேண்டும்” என்பவர். மண்ணின் மனம் அறிந்தவர். இப்போது காவிரிக்குத் தண்ணீர் தரும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். 

ஆம், தங்கள் பகுதியில் இருக்கும் தண்ணீர் மீது, சமூகத்தின் எதிர்காலம் மீது, மண்ணின் மீது பெருங்காதல் கொண்ட ஐந்து பேரை இணைத்துக் கொண்டு ஏரியை, ஓடையைப் புனரமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். 

இப்போது இளைஞர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து, இதுபோன்ற உன்னத முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் ஏரியை, ஓடையை புனரமைப்பதால் எப்படி காவிரிக்கே தண்ணீர் தர முடியும் என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், அருண் சொல்வதைக் கொஞ்சநேரம் செவி கொடுத்துக் கேளுங்கள். 

“எங்கள் பகுதியில் இருக்கும் சின்னாகவுண்டன் ஏரி, தர்தான்கோட்டை ஏரி, கரடிகுட்டை ஏரி, கிருஷ்ணசெட்டி ஏரி, கொமாரெட்டி ஏரி, ஜர்க்கம் பாறை ஏரி ஆகிய ஏரிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு பூமாலை வடிவில் அமைந்திருக்கும். இந்த ஏரிகள் அனைத்தையும் இணைப்பது ஒட்டுப்பள்ளம் என்னும் ஓடை. அருகில் ஏற்காடு பகுதியில் உள்ள சேர்வராயன் மலையில் இருந்து ஊற்றெடுக்கும் நீர், இயற்கையாக அது அமைத்துக் கொண்ட பாதையில் பயணித்து இந்த ஏரிகளை வந்து அடையும், ஒரு ஏரியின் கொள்ளளவு நிறையும் போது, ஒட்டுப்பள்ளம் ஓடை வழியாக இன்னொரு ஏரிக்குப் போகும்....அதேபோல் ஆறு, ஏரிகளை நிரப்பிய பின், அது இறுதியாக தொப்பையாறு அணைக்குச் செல்லும். அங்கிருந்து காவிரியைச் சென்றடையும்.

அருண் மற்றும் நண்பர்கள்

தனி மனிதர்களின் உதவியுடன் பெரும்பாலான பணிகளை முடித்து விட்டோம். இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்துப் பணிகளும் முடிந்து விடும். வரும் ஆண்டில் வடகிழக்கு பருவமழை பெய்யும்போது, எங்கள் ஊர் ஏரியிலிருந்தும், ஓடையிலிருந்தும் காவிரிக்குத் தண்ணீர் செல்லும்... டெல்டா விவசாயிகள் எங்கள் ஊரிலிருந்து சென்ற நீரில் விவசாயம் செய்வார்கள். உண்மையில் இதுதான் போராடும் டெல்டா விவசாயிகளுக்கு நாங்கள் அளிக்கும் பரிசு” என்கிறார் மிகுந்த நம்பிக்கையுடன்.

இவருடன் இந்த ஏரிகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கலைச்செழியன், கிருஷ்ணன், அகிலன், ரவி ஆகிய அனைவருமே எளிய மனிதர்கள்தான். எந்தவொரு பெரிய பின்புலமும் இல்லாதவர்கள். ஆனால், சத்தமில்லாமல் நம் கண்முன்னால் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

“மேற்கத்தியம் கொண்டாடும் தமிழின அறிவியல்”

ஓடை

 

நம் முன்னோர்கள் ஏரிகளையும், ஓடைகளையும், நீர் வழிப்பாதைகளையும் அறிவியல் கண்ணோட்டத்துடன்  பார்த்தவர்கள், வடிவமைத்தவர்கள். காவிரியிலிருந்து தண்ணீரைப் பெற்றார்கள். காவிரிக்குத் தண்ணீரைக் கொடுக்கவும் செய்தார்கள். ஆனால், நம்முடைய மேற்கத்திய மனோபாவம், நம் முன்னோர்களின் அறிவியல் கீழானது என்று நம்மை நம்ப வைத்தது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும்தான் புத்திசாலிகள் என்று நாம் நம்புகிறோம். ஆனால், மேற்கத்தியர்களுக்குத் தெரிந்திருக்கிறது, தமிழர்கள் புத்திசாலிகள் என்றும், நீர் மேலாண்மையை அவர்களிடம் இருந்துதான் கற்க வேண்டும் என்றும். வெற்று புகழ்ச்சியல்ல, உலக வங்கி தனது அறிக்கையில், நம்முடைய ஏரிப் பாசனம் குறித்து சிலாகித்துக் குறிப்பிட்டு இருக்கிறது. அதுபோல, நம்முடைய 2000 ஆண்டுகள் பழமையான மதகு தொழில்நுட்பத்தை ஐரோப்பியர்கள் நம்மிடமிருந்து கற்றது 19-ம் நூற்றாண்டில்தான். 

அந்த தொழில்நுட்ப அறிவு, இன்றும் பொம்மிடி அருண்களின், கலைச்செழியன்களின் செல்களில் படிந்திருக்கின்றன. திரைகடல் ஓடி திரவியம் தேடுவதுடன், பன்னாட்டு சாத்திரங்களையும் கற்க வேண்டும்தான்... ஆனால், அதே நேரம், நீர் மேலாண்மையில் உண்மையான விருப்பம் இருப்போர்  நம்முடனே இருக்கும் அருண்களுடன் உரையாட வேண்டும். 

(உரையாடுவோம்)

http://www.vikatan.com/news/coverstory/88268-its-right-to-give-back-to-mother-cauvery-part-ii-cauvery-hogenakkal-inspiring.html

Link to comment
Share on other sites

20 இளைஞர்கள் வெட்டிய மூன்று கிணறுகள்! காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? பகுதி -3 #Cauvery #Hogenakkal

 
 

ம் உடலில் இருக்கும் ஆன்மாவுக்கு நிகரானது ஆற்றில் ஓடும் நீர்'' என்பார் தத்துவஞானி ஹென்றி. அப்படியானால், நீரை மாசுப்படுத்துவது என்பது நம் ஆன்மாவை மாசுப்படுத்துவதாகும்தானே...?  இதையே இப்படி யோசித்துப்பாருங்கள், அந்த நீரைக் கைப்பற்றுவது அது, ஓடும் நிலப்பரப்பில் வாழும் அத்தனை உயிர்களையும் கைப்பற்றுவதுதானே...? ஆம், நீரெனப்படுவது அதிகாரம். நீரைக் கைப்பற்றினால் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடலாம். நீரை விஷமாக்கினால், அதிகாரத்தை நிலைகுலையச் செய்யலாம். அதனால்தான், 18-ம் நூற்றாண்டில் சென்னையைக் கைப்பற்ற சென்னை மின்ட் பகுதியில் உள்ள ஏழுக்கிணற்றில் விஷம் கலக்கத் துடித்தான் நவாப். அதே ஏழுக்கிணற்றை முற்றும் முழுவதுமாகத் தனதாக்கிக்கொள்ள மக்கள் மீது வன்முறையை ஏவினான் ஆங்கிலேயன். தாகத்தை மட்டும் தீர்க்கவல்லதல்ல நீர், அதிகாரப்பசியைத் தீர்க்கவல்லது நீர்தான். இதை நாம் சரியாகப் புரிந்திருக்கிறோமா... உணர்ந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. ஆனால், தர்மபுரியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் மிகச்சரியாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், நீரைப் பரவலாக்க அதாவது அதிகாரத்தைப் பரவலாக்க உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

“முப்பது நாள்கள்... இருபது இளைஞர்கள்... மூன்று கிணறுகள்!”

கிணறு - காவிரிசென்ற அத்தியாயத்தில் ஐந்து தனி நபர்கள் இணைந்து ஆறு ஏரிகளை, ஓர் ஓடையை புனரமைத்ததைப் பார்த்தோம்தானே...? உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகமும், தயக்கமும் எழுந்திருக்கும்... “அவர்களால் சாத்தியமாகி இருக்கிறது. இது எப்படி எங்களால் சாத்தியமாகும்? அதிகாரத்தை எதிர்த்து, ஆட்களைத் திரட்டி... மக்களை இணைத்து ஏரிகளை மீட்டெடுப்பது எங்களால் இயலாது. அதற்கு அதிக நேரம் தேவை. பணத்தைக்கூடச் செலவழித்துவிடலாம். ஆனால், நேரத்தைச் செலவழிப்பது முடியாத காரியம்” என்று யோசித்திருப்பீர்கள். என்னிடம் பேசிய பலரும் இதைத்தான் சொன்னார்கள். இந்தத் தயக்கங்களுக்கு எளிய தீர்வைச் சொல்கிறார்கள்... இருபது இளைஞர்கள். 

''நீரை மீட்க...  நிலத்தடி நீரை உயர்த்த அதிக உழைப்பு எல்லாம் தேவையில்லை. காலையில் கொஞ்சம் ஓய்வுநேரத்தையும், குறைந்த உழைப்பையும் செலவிட்டாலே போதும்'' என்கிறார்கள் தர்மபுரி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

இவர்கள் செய்ததெல்லாம் என்னவோ எளிய விஷயம்தான். ஆனால், கிடைத்ததெல்லாம் மகத்தான பலன். ஆம், இருபது இளைஞர்கள்... முப்பது நாட்கள் தொடர்ந்து உழைத்து... மூன்று கிணறுகளை வெட்டி இருக்கிறார்கள்.   

இனி அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்... 

“சில ஆண்டுகளுக்கு முன், எங்கள் பகுதியில் ஒரு தோல் தொழிற்சாலை உமாசங்கர்செயல்பட்டுவந்தது. 'தொழிற்சாலை வந்தால் நல்லதுதானே... அதனால் வேலை வாய்ப்புக் கிடைக்கும்' என்று முதலில் மகிழ்ந்தோம். ஆனால், அந்தத் தொழிற்சாலை சில ஆண்டுகளிலேயே விஷத்தை உமிழத் தொடங்கியது... நிலத்தடி நீரை உறிஞ்சியது. அத்துடன், அந்த நீரையும் மாசுப்படுத்தியது. தண்ணீரில் உப்பு ஏறி, அந்தத் தண்ணீர் டி.டி.எஸ் 2,300-க்கு மேல் உயர்ந்தது. சராசரியாக, 500 டி.டி.எஸ் உள்ள தண்ணீர்தான் குடிக்க உகந்தது. இந்தப் பகுதி நீர் முழுவதும் குடிக்கப் பயனற்றதாகிப் போனது. என்ன செய்யலாம் என்று பலருடன் உரையாடியபோது, அவர்கள் சொன்ன ஆலோசனை 'கிணறு வெட்டுங்கள்' என்பதுதான். 

முதலில் பெரிதாக எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் பணியைத் தொடங்கினோம். அதிக நபர்கள் எல்லாம் இல்லை. இருபது பேர் தினமும் மூன்று மணி நேரம் செலவிட்டு முப்பது அடியில் கிணறு வெட்டினோம். அந்தச் சமயத்தில் சரியாக மழையும் பெய்தது. மழை நீர் கீழே இறங்க இறங்க... நிலத்தடி நீரும் உயர்ந்தது. தண்ணீரின் டி.டி.எஸும் குறையத் தொடங்கி இருக்கிறது” என்கிறார் தர்மபுரி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி. 

 

இந்த அனுபவம் தந்த உற்சாகத்தில், இவர்கள் தொடர்ந்து பொது இடங்களில் கிணறு வெட்டும் பணியில் இறங்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு ஒருங்கிணைப்பளர் உமாசங்கர், “இதே டி.டி.எஸ் பிரச்னை இந்தப் பகுதியில் பல இடங்களில் இருக்கிறது. அதனால், சில இடங்களை அடையாளம் கண்டு அங்கு கிணறு வெட்டத் தொடங்கி இருக்கிறோம். இப்போது, இந்தப் பணி அதே தர்மபுரியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்துகொண்டிருக்கிறது. மழை பெய்தால், இந்தப் பகுதியில் ஆங்காங்கே தேங்கும் நீர் இந்தக் கிணற்றை வந்து அடைவதுபோல வடிவமைத்திருக்கிறோம். இதற்கு நல்ல பயனும் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது” என்கிறார் அவர். 

 

 

“கிணறு வைத்த வீடு!”

முன்பெல்லாம் அனைத்து ஊர்களிலும், வீடுகளிலும் கிணறுகள் இருந்தன. பொதுக் கிணறுகள் பெருமிதங்களின் சின்னமாக இருந்தன. ஆனால், எந்தப் புள்ளியில் அது தன் பெருமிதங்களை உதிர்த்தன என்று தெரியவில்லை. இரண்டு தசாப்தங்களில் கிணறுகள் அனைத்தும் தொலைந்து, அந்த இடங்களை ஆழ்துளைக் கிணறுகள் பிடித்தன. அனைத்தையும் பணமாகவே பார்க்கும் நிறுவனங்களும், நிறுவனமயமாகி... நிறுவனங்களுக்காக மட்டுமே பணி செய்யும் அரசுகளும் ஆழ்துளைக் கிணறுகளை ஊக்குவித்தன. பெரும்பசியுடன் இயங்கிய ஆழ்துளைக் கிணறுகள், அந்தப் பகுதியில் இருந்த அனைத்து நீர்வளங்களையும் உறிஞ்சி நம் நிலத்தைப் பாலையாகிவிட்டுச் சென்றுவிட்டன. கிணறுகள் இல்லாமல், ஆழ்துளைக் கிணறுகள் வற்றி, ஏரிகள், குளங்கள் தூர்ந்த நிலையில் இப்போது நாம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் காவிரியிலிருந்து உறிஞ்சிக்கொண்டிருக்கிறோம். இன்று காவிரியும் வற்றத் தொடங்கிவிட்டது... நாளை என்ன செய்யப் போகிறோம்...?

காவிரியை மீட்டல் என்பது... ஆழ்துளைக் கிணறுகளை ஒழிப்பதிலும், மீண்டும் கிணறுகள் வெட்டுவதிலும்... பொதுக் கிணறுகள் பயன்பாட்டைக் கொண்டுவருவதிலும் இருக்கிறது. இதை இன்று... இப்போதே தொடங்காமல் போனால், நம் நிலம் பாலையாகத்தான் போகும்!

இருபது இளைஞர்கள், முப்பது நாள்கள் செலவிட்டு, மூன்று கிணறுகளை வெட்டி இருக்கிறார்கள். இந்த இளைஞர்களின் படிப்பினைகளை அப்படியே உள்வாங்கி, பரப்புவோம். வாருங்கள், புதுக் கிணறுகள் செய்வோம். அப்படியே, இருக்கும் கிணறுகளையும் தூர்வார்வோம்.  

(உரையாடுவோம்)

http://www.vikatan.com/news/coverstory/88378-these-20-youths-dig-3-wells-in-30-days-amid-drought-travel-along-the-bank-of-river-cauvery-episode-3-cauvery-hogenakkal.html

Link to comment
Share on other sites

“ட்ரம்பின் வெற்றிக்கும் தருமபுரிக்கும் உள்ள தொடர்பு!” காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? பகுதி-4 #Cauvery #NagavathyRiver

 
 
 

நாகாவதி ஆறு - காவிரி

மெரிக்கச் சூழலியல்வாதி எட்வர்டு அபேய், ''வளர்ச்சிக்கான வளர்ச்சி என்பது ஒரு புற்றுநோய்'' என்பார். இந்த நவீன வளர்ச்சியை இவ்வாறாக இல்லாமல் வேறு எவ்வாறாகவும் வர்ணிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. நிரந்தர வைப்புத்தொகை ஏதுமற்ற வங்கி, கடன்களை மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்..? விரைவில் திவாலாகும்தானே. அதுபோலத்தான் இந்தப் புவியும் என்பதை மறந்து, இந்தப் பூவுலகுக்கு நல்லது எதையும் கொடுக்காமல், எடுத்துக்கொண்டே இருக்கிறோம். முடிவற்ற வளர்ச்சி அல்லது இலக்கற்ற வளர்ச்சியை நோக்கிய நமது இந்தப் பயணம் நாளை நம் பிள்ளைகளை நடுத்தெருவில்தான் கொண்டுவந்து நிறுத்தும். 

சரி... தண்ணீர் குறித்துத்தானே உரையாடிக்கொண்டிருந்தோம், மீண்டும் அந்தப் புள்ளியிலிருந்தே தொடங்குகிறேன். பாலைநிலமான ராஜஸ்தானில் மரணித்த பல நதிகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்த ராஜேந்திர சிங் குறித்து நாம் அறிந்திருக்கிறோம்தானே... இங்கே இரண்டு பெண்கள் தண்ணீர் குறித்த அவரது அனுபவங்களை அப்படியே உள்வாங்கி, வறண்ட நிலமான தர்மபுரியில் மனிதர்களின் நினைவில் மட்டும் வாழும் ஒரு நதிக்கு உயிர்கொடுக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். 

வாருங்கள் மீனாட்சியையும், கீதாவையும் சந்திப்போம். ஹூம்... ஒரு நிமிடம், அவர்களைச் சந்திக்கும் முன் அந்த நாகாவதி நதியின் வாசனையைக் கொஞ்சம் நுகர்ந்துவிட்டு வருவோம்.

“நாகாவதி நதியும்... ட்ரம்பின் வெற்றியும்!”

டொனால்ட்தீவிர இனவாதியான ட்ரம்பின் வெற்றிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து லண்டன் வெளியேறியதற்கும், தர்மபுரியில் ஜனித்து காவிரியில் கலக்கும் உள்ளூர்நதியான நாகாவதி நதிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா...? ஆம். மிகமிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நீங்கள் ட்ரம்பின் வெற்றியைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாகாவதி நதியைப் புரிந்துகொள்ள வேண்டும். 

நாகாவதி, தர்மபுரியில் பென்னாகரம் வட்டத்தில் உள்ள சிறுமலைத் தொடர், குன்றுகளில் ஊற்றெடுத்து, ஏறத்தாழ 20 கிலோமீட்டர் பயணித்து நாகாவதி அணையில் கலக்கும் ஓர் உள்ளூர் நதி. தமிழகத்தின் எல்லா நதிகளையும்போல, ஒரு காலத்தில் இந்தச் சிறுநதியும் செழிப்பாக இருந்தது. தன்னை நம்பி இருந்தவர்களின் வாழ்க்கையையும் செழிப்பாகவைத்திருந்தது. ஆனால், கெடுவாய்ப்பாக அரசின் தவறான நீர் மேலாண்மைக் கொள்கைகள், கட்டற்ற நுகர்வு எல்லாம் சேர்ந்து அந்தச் செழிப்பை இறந்தகாலமாக்கியது. மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த நிலத்தைவிட்டு, பெருநகரங்களுக்குக் கட்டடக் கூலிகளாகப் புலம்பெயர்ந்தார்கள்; தினம்தினம் புலம்பெயர்ந்துகொண்டும் இருக்கிறார்கள். 

இந்தப் புலம்பெயர்வின் பின்னணியில் ட்ரம்பின் வெற்றியையும், பிரீக்ஸிட் ஒப்பந்தத்தையும் புரிந்துகொள்ளுங்கள். ஆம், ட்ரம்ப் என்ன சொன்னார்... 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு மட்டும்தான்... உள்ளூர் மக்களுக்கு மட்டும்தான் வேலை, வெளிநாடுகளிலிருந்து இங்கு புலம்பெயர்வதை அனுமதிக்க முடியாது' என்றார்தானே... இதேவாதம்தானே, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கும் காரணமானது. அதாவது, ஒரு நதி மரணித்தால் புலம்பெயர்வு நடக்கும். அதிக அளவில் நடக்கும்போது இனவாத, தேசியவாதக் கொள்கைகள் இறுக்கமாகும். தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பது என்பது ஓர் உள்ளூர் நதியைக் காப்பதில் இருக்கிறது. 

சரி... உலக அரசியல் பேசி அதிக நேரம் எடுத்துக்கொண்டேன் என்று நினைக்கிறேன். வாருங்கள்... இந்த இரண்டு தண்ணீர் மனுஷிகளையும் சந்திப்போம்... அவர்கள், ஓர் உள்ளூர் நதியைக் காக்க என்னென்ன செய்கிறார்கள் என உள்வாங்குவோம். 

 

 

 

“நதியை நினைவுப்படுத்திக்கொண்டே இருங்கள்!” 

மீனாட்சிமீனாட்சி, உத்தரப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கட்டடப் பொறியாளர். காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கிராம மக்களுக்காகத்தான் நம் அறிவு பயன்படவேண்டும் என்பதற்காகப் பல தசாப்தங்களுக்கு முன்னே தர்மபுரியில் நாகர்கூடல் என்ற பகுதிக்குக் குடியேறியவர். கிராம மக்களின் பிள்ளைகளுக்காகப் புவிதம் என்ற பெயரில் இலவசப் பள்ளியை நடத்திக்கொண்டிருப்பவர்.  இவருடன் கரம்கோத்திருக்கும் கீதா, மென்பொறியாளர்... இவரும் கிராமப் பொருளாதாரம், சூழலியல் மீது பெருங்காதல் கொண்டு வேலையைவிட்டு நதிகளை மீடெடுக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். 

மீனாட்சி சொல்கிறார், “நதிகளை மீட்டெடுத்தல் என்பதன் முதல் படி, அந்த நதி குறித்து மக்களுடன் உரையாடிக்கொண்டே இருப்பதுதான். அதற்கு, முதலில் அந்த நதியின் நினைவுகளை மீட்டெடுக்க வேண்டும். முதலில் நாங்கள் இதைத்தான் செய்தோம்... கடந்த இரண்டு வருடங்களாக மக்களிடம் உரையாடிக்கொண்டே இருந்தோம். அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக மக்களை இணைத்துக் களத்தில் இறங்கினோம். நாகாவதி நதிக்கு உயிர்கொடுத்தல், அந்த நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும், நதியின் உள்ளே மண்டியிருக்கும் களைகளை அகற்றுவதில் மட்டும் இல்லை. இந்தப் பகுதியில் உள்ளது எல்லாம் சிறுகுன்றுகள். வறட்சியாலும், மனிதத் தவறுகளாலும் அவை மரங்களை இழந்து மொட்டையாகிவிட்டன. அதனால், ஒரு சிறுமழை பெய்தாலே, மண்ணை அரித்துக்கொண்டு நீர் ஓடிவிடும். மேல் மண் இல்லாததால் இங்கு எந்த நிலத்திலும் நீர் ஊராது. நீர் ஊராதது மட்டுமல்ல, மண்தானே விவசாயத்துக்கு ஆதாரம். அதனால், விவசாயமும் பொய்க்கும். நீரைக் காக்க வேண்டுமானால், நதிக்கு உயிர்கொடுக்க வேண்டுமானால், மண்ணைக் காக்க வேண்டும் என்று உணர்ந்தோம்.” 

கீதாஇங்கிருந்து கீதா தொடர்கிறார், “இந்தச் சமயத்தில்தான் ராஜஸ்தான் சென்று ராஜேந்திர சிங்கைச் சந்தித்தோம். அந்தப் பாலைநிலத்திலேயே பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டியிருந்தார். அவரது அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்தார். அதை நம் நிலத்துக்கு ஏற்றவாறு, இங்கே கொஞ்சம் மாற்றிச் செயல்படுத்தினோம். முதலில் நாங்கள் செய்ததெல்லாம் சின்ன விஷயம்தான். அந்த நிலத்தில் விழும் நீரை அந்த நிலத்திலேயே தக்கவைக்க வேண்டும். மண் அரிப்பைத் தடுக்க வேண்டும். மேல் மண் இருந்தால்தான் தண்ணீர் ஊறும். இதையெல்லாம் மக்களிடம் பேசி, அவர்கள் இடத்திலேயே பள்ளம் மற்றும் கரைகளை (Trench and Bunds) உண்டாக்கினோம். இதனால் நீரும் மண்ணும் அடித்துச் செல்லப்படுவது தவிர்க்கப்பட்டு, அந்தப் பகுதியின் நீர்மட்டம் உயரும். நீர்மட்டம் உயரும்போது, நாகாவதிக்குத் தண்ணீர் தந்த ஊற்றுகள் உயிர்பெறும். இப்போது தனியார் விவசாய நிலங்களில், இந்தப் பள்ளம் மற்றும் கரைகளை உண்டாக்கும் பணியில்தான் இருக்கிறோம்” என்கிறார்.

“இது ஒரு நீண்டகாலச் செயல்பாடு. எளிய கிராம மக்களையும் இதில் இணைத்துச் செல்ல வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருக்கும்போது, இதில் அவர்களையும் இணைத்துச்செல்வது பெரும்பணி. ஆனால், அவர்களையும் கண்டிப்பாக இணைத்துச் சென்றால்தான், இது நம் நதி, நம்மால் உயிர்பெற்ற நதி என்ற பெருமிதம் அவர்களுக்கு வரும். அந்தப் பெருமிதம் வந்துவிட்டால்... நிச்சயம் மீண்டும் நதியைத் தொலைக்காமல்... மரணிக்கவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்பாமல், வெளியிலிருந்து ஒரு வேலையைச் செய்துகொடுப்பது, எந்தப் பயனும் தராது” என்கிறார் மீனாட்சி மிகத்தெளிவாக. 

ஆம்... அரசுகளிடம் இல்லாத தெளிவு எப்போதும் தனி மனிதர்களிடம் இருக்கிறது. எப்போதும் இந்த எளிய மனிதர்களால்தான், இந்தப் புவி இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது.

(உரையாடுவோம்)

http://www.vikatan.com/news/coverstory/88468-connection-between-victory-of-donald-trump-and-dharmapuri-travel-along-the-bank-of-river-cauvery-episode-4-cauvery-nagavathyriver.html

Link to comment
Share on other sites

நம் பிள்ளைகளின் முகத்தில் நாமே அமிலம் வீசுவோமா...? : காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? நிறைவுப்பகுதி #Cauvery

 
 

காவிரி

“தண்ணீரை நாம் ஒட்டுமொத்தமாகத் துஷ்பிரயோகம் செய்வதுதான் காலநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணம். வரும் காலங்களில் நமது நடத்தை, நீரியல் சுழற்சியையே அழித்துவிடும். நீரியல் சுழற்சியைக் காக்க, காலநிலை மாற்றத்திலிருந்து தப்பிக்க ஒரேவழி பெருமளவில் நீர்நிலைகளை மீட்டெடுப்பதுதான்.”  - மிச்சல் க்ராவிக், ஸ்லோவேகியா விஞ்ஞானி. 

கடந்த நான்கு அத்தியாயங்களில் நாம் பார்த்த இந்த எளிய மனிதர்கள் யாரும் விஞ்ஞானிகள் அல்ல... பெரிய அமைப்புகளின் பலம்கொண்டவர்களும் அல்ல. ஆனால், தாம் வாழும் சமூகத்தின் மீது பெருங்காதல் கொண்டவர்கள். நம் சமூகத்தின் பிள்ளைகளை நாளை ஒரு சொட்டுத்தண்ணீருக்காக நடுவீதியில் விட்டுவிடுவோமோ என்று பதறுபவர்கள். அதனால்தான், தங்களை அர்ப்பணித்துக்கொண்டு நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும், ஆற்றுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று தங்களுக்குத் தாங்களே அசாத்திய இலக்குகளை முன்வைத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

“செயலற்ற அரசுகள்!”

தமிழ்க அரசுகாந்தி சொல்வார், “அமைப்புகளும் அரசுகளும் செயலற்றுப் போகும்போதுதான் தனி மனிதர்கள் அரசுகள் ஆகின்றனர்.” இங்கு அரசுக்கு அதிகார மோதல் புற்றுவைத்து இருப்போமா, பிழைப்போமா என்று தெரியாமல் கோமா நிலையில் கிடைக்கிறது. சேலத்திலும், தர்மபுரியிலும் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் சாகும்போது... அப்படியெல்லாம் சாகவில்லை என்று பொய்க்கணக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது. “அரசுகள் எங்களைக் கைவிட்டுவிட்டன. நாங்கள் வளர்த்த கால்நடைகளை நாங்களே கைவிடுவதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கண்கலங்குகிறார் சாந்தாம்மா. இதுமாதிரியான தமிழகத்தின் எதிர்காலத்தை இருள்கவ்விய சூழ்நிலையில், தனிமனிதர்கள் அரசுகளாக மாறிச் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களே நம்பிக்கைகளாவும் இருக்கிறார்கள்.

“கலகத்தை எதிர்நோக்கி!”

உங்களை அச்சுறுத்தவெல்லாம் சொல்லவில்லை... காவிரிக் கரையில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்தவன் என்பதால் சொல்கிறேன். காவிரியில் இப்படியான வறட்சியை எப்போதும் பார்த்ததில்லை. எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவைதான்... ஆனால், ‘வரலாறு காணாத வறட்சி’ என்ற சொற்களுக்கான முழுமையான பொருளுக்கான சாட்சி இந்தக் கோடைதான். இது வரலாறு காணாத வறட்சி மட்டுமல்ல.. இனி எப்போதும் எதிர்காலம் காணக்கூடாத வறட்சியும்கூடத்தான். ஆம், இந்த வறட்சி தொடர்ந்தால், இங்கு மாபெரும் கலகம் வெடிக்கும். தமிழகத்தில், இல்லை... இல்லை... உலகம் முழுவதும் நீரைச் சார்ந்துதான் வாழ்க்கையும் எதிர்காலமும் இருக்கின்றன. நீர் இல்லாமல் போவதென்பது எதிர்காலம் இல்லாமல்போவது; வாழ்க்கை வற்றிப்போவது. பொருளாதாரம் சிதைந்து, எதிர்காலம் குறித்த நம்பிக்கை எல்லாம் வற்றியபின் என்ன நிகழும்...? நிச்சயம் கலகம்தான்; கலகம் மட்டும்தான். உலகெங்கும் இதுதான் நிகழ்ந்திருக்கிறது. 

ஒருபக்கம், சாமான்யன் ஒரு சொட்டுத் தண்ணீருக்காகத் தவித்துக்கொண்டிருக்கிறான் என்றால்... இன்னொருபக்கம் பெரும் கோலா நிறுவனங்களுக்கு நம் அரசுகள் தங்குதடையில்லாமல் நீர் வழங்கிக்கொண்டிருக்கிறது. இதை எதிர்த்துக் கேள்விகேட்டால், நம் செல்லூர் ராஜுக்கள் சொல்கிறார்கள், “நம்மை நம்பித் தொழில் செய்ய வந்துவிட்டார்கள். அவர்களுக்கு அப்படித்தான் தண்ணீர் கொடுப்போம்” என்று மமதையில் கொக்கரிக்கிறார்கள். பொலிவியா அரசாங்கத்தின் வீழ்ச்சி, தண்ணீருக்கான கொசபம்பா போராட்டத்தில்தான் தொடங்கியது என்று யாராவது அவர்களுக்குச் சொல்ல வேண்டும். தண்ணீருக்காக ஓர் எழுச்சி வந்தால், கசடுகள் காணாமல்போகும் என்பதைப் புரியவைக்க வேண்டும். 

காவிரி

“பிள்ளைகளின் முகத்தில் அமிலம் வீசுகிறோம்!”

நீங்கள், இந்தக் கோடைக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு சுற்றுலாவுக்குத் திட்டம் தீட்டி இருப்பீர்கள்; அதனுடன் தண்ணீர் சுற்றுலாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்; இயன்றால், இந்தத் தொடர்களில் குறிப்பிட்டிருக்கும் செயற்பாட்டாளர்களைச் சந்தியுங்கள்... உரையாடுங்கள்... என்ன செய்யலாம் எனத் திட்டமிடுங்கள். நான் வறட்சி குறித்த ஆய்வுக்காகத் தர்மபுரிப் பகுதியை எடுத்துக்கொண்டதால், இவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். தமிழகமெங்கும் இதுபோன்ற செயற்பாட்டாளர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் கரம் கோத்து நில்லுங்கள். 

இறுதியாக, நான் சந்தித்த செயற்பாட்டாளர்கள் சொன்ன விஷயத்துடன் இத்தொடரை முடிக்கிறேன். அவர்கள் சொன்னார்கள், “காவிரி நம் உரிமைதான். ஆனால், அதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்....? மேட்டூரில் ரசாயனக் கழிவுகள், ஈரோட்டில் சாயப்பட்டறைக் கழிவுகள் என அதன்மேல் ரசாயனம் அல்லவா அடித்துக்கொண்டிருக்கிறோம். நம் பிள்ளைகள்மீது நமக்கு உரிமை இருக்கிறது என்பதற்காக அவர்கள் முகத்தில் ரசாயனம் அடிப்போமா என்ன...?” என்றார்கள். சத்தியமான கேள்விதானே...? காவிரி நம் உரிமைதான்... ஒருபக்கம், அதற்கான உரிமைப் போராட்டம் நடத்துவோம்... இன்னொருபக்கம் அதைக் கழிவுகளிலிருந்து மீட்போம். காவிரியை மட்டுமல்ல... ஒவ்வொரு நீர்நிலையையும் மீட்போம். அந்த மீட்சியில்தான் நம் எதிர்காலம் இருக்கிறது. 

முற்றும்

http://www.vikatan.com/news/coverstory/88583-would-we-pour-acid-on-our-daughters-face-travel-along-the-bank-of-river-cauvery---episode-5-cauvery.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உறவே,  இப்படியே  போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு  உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂   
    • @goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி… ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா? நீங்கள் குறிப்பிட்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 
    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.     சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால்  தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣  
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.