Jump to content

விஸ்வரூபமெடுத்த ரிஷப் பன்ட்.. இதுவரை கடந்து வந்த பாதை! #RishabhPant


Recommended Posts

விஸ்வரூபமெடுத்த ரிஷப் பன்ட்.. இதுவரை கடந்து வந்த பாதை! #RishabhPant

 
 

டிராவிட்

குஜராத் லயன்ஸ் Vs டெல்லி டேர் டெவில்ஸ். நேற்றைக்கு நடந்த அந்தப் போட்டி, ஐ.பி.எல் சீசனின் 42வது போட்டி. முன்னதாக ஆடிய குஜராத் லயன்ஸ் அணி 208 ரன்கள் எடுத்திருந்தது. ஓவருக்கு 10 ரன் வேண்டும் என்ற நிலையில் சேஸ் செய்ய களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, மூன்றாவது ஒவரில் இடியாக கருண் நாயர் விக்கெட். ஸ்கோர் 24/1. 3வது ஓவரின் கடைசி பந்துக்கு இறங்குகிறார் ரிஷப் பன்ட். லெக் பையில் ஒரு ரன் எடுத்து அடுத்த ஓவரை எதிர்கொள்கிறார்.

நான்காவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்குத் தெறிக்க விடுகிறார்.  ஐந்தாவது ஓவரின் முதல் மூன்று பந்துகள் 6,6,4. அதன்பிறகு ஒவ்வொரு அடியும் அதிரடியாகப் பார்த்துக் கொண்டார்கள் ரிஷப் பன்ட்டும், ஓபனிங் இறங்கிய சஞ்சு சாம்சனும். அதுவும் ரிஷப்பின் ஆட்டம், ருத்ரதாண்டவம். 43 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இவர் அவுட் ஆனபோது சச்சின் ஒரு ட்வீட் போடுகிறார்.

 

 

சச்சின்

‘10 ஐபில் சீசன்களிலும் நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்களில் இது ஒன்று’ என்று. யார் இந்த ரிஷப் பன்ட்? அவர் கடந்து வந்த பாதை என்ன? 

2016 ஜூனியர் (U19) உலகக்கோப்பை

எப்படிப்பட்ட பந்துகளாக இருந்தாலும், அதனை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டிவிடக்கூடிய ஓர்  அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்தான் ரிஷப் பன்ட்! கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில், தொடக்க பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய இவர்தான், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்! ஆறு போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதம் (ஸ்டிரைக் ரேட் - 104) என அசத்தலான ஆட்டத்தையே தொடர் முழுதும் வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக, இரண்டு போட்டிகளில் செம மாஸ் காட்டினார் ரிஷப் பன்ட்.

 

ரிஷப் பன்ட்

நேபாள அணிக்கு எதிரான போட்டியில், தொடக்கம் முதலே அந்த அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அந்தப் போட்டிக்கு முன்புவரை, 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச போட்டிகளில், வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ட்ராவான் கிரிஃப்பித் எனும் வீரர், 19 பந்துகளில் அரைசதம் அடித்ததுதான் உலக சாதனையாக இருந்தது. ஆனால் அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட், 18 பந்துகளிலேயே அரை சதம் அடித்து, புதிய உலக சாதனையைப் படைத்தார்! அடுத்த 6 பந்துகளில், கூடுதலாக 28 ரன்களையும் குவித்தார். ஆக நேபாளத்துக்கு எதிரான  அந்த போட்டியில், தான் சந்தித்த 24 பந்துகளில், அவர்  78 ரன்களை அடித்தார்! (ஸ்டிரைக் ரேட் 325). இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். நமிபியா அணிக்கு எதிரான போட்டியில், இவர் அடித்த 111 ரன்கள், அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது!

2016 ரஞ்சி டிராஃபி மற்றும் 2016 ஐபிஎல் சீஸன்

 

ரஞ்சி

2016 ரஞ்சி சீசனில், டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பன்ட், அதிரடியான முச்சதம் - 48 பந்துகளில் அதிவேகமான சதம்- சூப்பரான இரட்டைச் சதம் என வெரைட்டியாக அடித்தார். இதனைத் தொடர்ந்து 2016 ஐபிஎல் சீஸனில், தனது அடிப்படை விலையான 10 லட்சத்தைவிட 19 மடங்கு அதிக விலைக்கு, டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை வாங்கியது. அதிலும் கவனிக்கத்தக்க வகையில் (10 போட்டிகளில் 200 ரன்கள் - ஸ்டிரைக் ரேட்:130) விளையாடினார், நடப்பு சீஸனிலும், தான் களமிறங்கிய 10 போட்டிகளில் 281 ரன்களை அடித்துள்ளார் (ஸ்டிரைக் ரேட் - 176) நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், 43 பந்துகளில் 97 ரன்களை அதிரடியாக அடித்தார்! இப்படி எந்த பாரபட்சமுமின்றி விட்டு விளாசும், 19 வயது இளைஞனான ரிஷப் பன்ட், ஒரு இடது கை பேட்ஸ்மேன்; ஏனோ இந்திய அணித்தேர்வின்போது, தேர்வுக் குழுவினர் கவனத்தில் கொள்ளாமல் சிலரை மறந்து விடுகின்றனர். ஆஸ்திரேலியா அணியைப் போல, நீண்டகால செயல் திட்டத்தின் அடிப்படையில், இந்திய அணியும் தொடர்ந்து இளம் வீரர்களை உருவாக்கவும், அவர்களுக்கான தக்க வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும்! 

இந்திய அணியில் உள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்

ஐபிஎல்

இப்போது இந்தியாவின் விக்கெட் கீப்பர்களாக இருக்கும் தினேஷ் கார்த்திக் (31), ரிதிமான் சாகா (32), நமன் ஓஜா (31), பார்த்திவ் படேல் (31) ஆகிய நால்வருமே 30 வயதைக் கடந்துவிட்டார்கள். இவர்களைத் தவிர, மற்ற ஆப்ஷன்களாகத் தெரியும் ராபின் உத்தப்பா மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும், 31 வயதை எட்டியிருக்கிறார்கள். எனவே எப்படிப் பார்த்தாலும், அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள்  டெஸ்ட் / ஒருதினப் போட்டிகளில் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறி. எனவே ரிஷப் பன்ட் போன்ற இளம் வீரர்களுக்கு, இப்போதிலிருந்தே வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் ஜூன் மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராஃபி தவிர்த்து, இப்போதைக்கு உடனடியாக இந்தியாவுக்கு வெளிநாட்டில் டெஸ்ட் தொடர்கள் இல்லாததால், சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் இவரை அணியில் சேர்த்தால் தன்னை மேலும் மெருகேற்ற அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். 

ரிஷப் பன்ட்

ஆக ஒரு நட்சத்திர ஆட்டக்காரரான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கும் ரிஷப் பன்ட்டைத்தான், இந்திய அணிக்கு தயாராகும் அடுத்த விராட் கோலி / தோனி என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். வருங்கால இந்திய அணிக்கு மற்றுமொரு நல்ல தயாரிப்பாக இருக்கும் இவரைச் சரியாகப் பயன்படுத்தினால், 2019 சீனியர் உலகக் கோப்பையின் வின்னிங் ஷாட்டை, ரிஷப் பன்ட் அடிப்பதைப் பார்க்கலாம்.  காலம் அவருக்கு சாதகமாக இருக்கும் என நாம் வாழ்த்தலாம்!

இவரின் புள்ளிவிபரங்கள்:= 

ஐபிஎல் சீஸன் சம்பளம் - 1.9 கோடி ரூபாய் (டெல்லி டேர்டெவில்ஸ்)

பிசிசிஐ ஆண்டு சம்பளம் - பிரிவு சி : 50 லட்ச ரூபாய்!

முதல் சர்வதேச போட்டி -  இந்தியா-இங்கிலாந்து இடையான 3-வது டி-20 போட்டி! (பெங்களூரு - பிப்ரவரி 2017) ஆனால் களமிறங்கவில்லை.

முதல்தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர்: 48 பந்துகள் (2016 - 17 சீஸன்)

http://www.vikatan.com/news/sports/88454-a-small-flashback-of-rishabh-pant.html

Link to comment
Share on other sites

ஐ.பி.எல்.லில் சிறந்த ஆட்டம்: ரி‌ஷப்பான்டுக்கு தெண்டுல்கர் பாராட்டு

 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய டெல்லி வீரர் ரிஷப் பான்ட்டை கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

 
 
ஐ.பி.எல்.லில் சிறந்த ஆட்டம்: ரி‌ஷப்பான்டுக்கு தெண்டுல்கர் பாராட்டு
 
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ரி‌ஷப் பான்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் 97 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். ஜார்க்கண்டை சேர்ந்த 19 வயதான அவரது ஆட்டத்தை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

ஐ.பி.எல். வரலாற்றில் நான் பார்த்த சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று ரி‌ஷப் பான்ட்டை கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

201705051536009027_sahi._L_styvpf.gif

இதைபோல ஷேவாக், கங்குலி உள்ளிட்ட முன்னாள் பிரபல வீரர்களும் பாராட்டினர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/05153554/1083685/Sachin-Tendulkar-Calls-Rishabh-Pants-Knock-One-Of.vpf

Link to comment
Share on other sites

மோசமான பந்தாக இருந்தால் முதல் பந்தையே சிக்சருக்கு தூக்குவேன்: ரிஷப் பந்த் சொல்கிறார்

பந்து வீச்சாளர் மோசமான பந்தை வீசினால், நான் சந்திக்கும் முதல் பந்தாக இருந்தாலும் அந்த பந்தை சிக்சருக்கு தூக்குவேன் என்று டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

மோசமான பந்தாக இருந்தால் முதல் பந்தையே சிக்சருக்கு தூக்குவேன்: ரிஷப் பந்த் சொல்கிறார்
 
ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோரின் அதிரடியால் குஜராத் அணிக்கெதிராக 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை 17.3 ஓவரில் டெல்லி அணி எட்டிப்பிடித்தது. 3-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் 6 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 43 பந்தில் 97 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 31 பந்தில் 7 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்தார்.

இருவரின் அதிரடியை கண்டு அனைவரும் பூரித்து போனார்கள். தனது அதிரடி ஆட்டம் குறித்து ரஷப் பந்த் கூறுகையில், பந்து வீச்சாளர் மோசமாக பந்தை வீசினால், அது நான் எதிர்கொள்ளும் முதல் பந்தாக இருந்தாலும் சிக்சருக்கு தூக்கி விடுவேன் என்று ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘பந்து அடிப்பதற்கு ஏற்ற வகையில் வந்தால், அதை நான் அடித்து விடுவேன். மோசமான பந்து வீசினால் அதற்கு நீங்கள் தண்டனை பெற்றுதான் ஆகவேண்டும். அதிகம் யோசிக்காமல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு ராகுல் டிராவிட் என்னிடம் கூறினார். 3 ரன்கள் எடுத்து சதம் அடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. முடிந்த அளவிற்கு இலக்கு நோக்கி எட்டிச் செல்ல வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே இருந்தது’’ என்றார்.

குஜராத் அணிக்கெதிரான தான் சந்தித்த 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரிஷப் பந்த். அதன்பிறகு தொடர்ந்து வாணவேடிக்கை நடத்தினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/05202531/1083739/If-1st-delivery-is-a-bad-one-I-will-hit-it-for-a-six.vpf

Link to comment
Share on other sites

நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்: பான்டுக்கு பிரபலங்கள் புகழாரம்

குஜராத்துக்கு எதிராக 9 சிக்சருடன் 97 ரன்கள் விளாசிய டெல்லி வீரர் ரிஷாப் பான்ட் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். டுவிட்டரில் அவருக்கு புகழாரம் சூட்டிய பிரபலங்களை பார்க்கலாம்.

 
நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்: பான்டுக்கு பிரபலங்கள் புகழாரம்
 
குஜராத்துக்கு எதிராக 9 சிக்சருடன் 97 ரன்கள் விளாசிய டெல்லி வீரர் ரிஷாப் பான்ட் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். டுவிட்டரில் அவருக்கு புகழாரம் சூட்டிய பிரபலங்கள் வருமாறு:-

சச்சின் தெண்டுல்கர் (இந்திய ஜாம்பவான்): 10 ஐ.பி.எல். தொடர்களில், நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று.

சவுரவ் கங்குலி (முன்னாள் கேப்டன்): ரிஷாப் பான்ட், சஞ்சு சாம்சன்...இரவில் அற்புதம் காட்டி விட்டனர். இருவரும் சிறப்பு வாய்ந்தவர்கள். அணியில் அவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும்.

201705060943053308_celebrities-wishes._L

ரோகித் சர்மா (மும்பை கேப்டன்): டெல்லியில் ‘பான்ட் புயல்’ உருவாகி விட்டது. பயமில்லாத ஒரு ஆட்டம். சதத்திற்கு தகுதியானவர்.

ஷேவாக் (முன்னாள் வீரர்): தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பேட்ஸ்மேனை நேசிக்கிறேன். அந்த வகையில் நம்பிக்கையுடன் பந்தை அடித்து விளாசுவதற்கான சிறப்புத்திறமை ரிஷாப் பான்டிடம் இருக்கிறது. அது வெளிப்பட்டு இருக்கிறது.

டாம் மூடி (ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்): இதை விட சிறப்பாக ஆட முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/06094305/1083782/best-innings-I-have-seen-celebrities-wishes-of-Rishabh.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.