Jump to content

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2019; மே.இ. தீவுகளின் வாய்ப்பு ஊசலாடுகிறது


Recommended Posts

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2019; மே.இ. தீவு­களின் வாய்ப்பு ஊச­லா­டு­கி­றது

இங்­கி­லாந்தில் 2019ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் முன்னாள் உலக சம்­பி­யனும் முன்னாள் ஜாம்­ப­வான்­க­ளு­மான மேற்­கிந்­தியத் தீவுகள் பங்­கு­பற்­றுமா என்­பது தொடர்ந்தும் சந்­தே­க­மா­கவே இருந்­து­வ­ரு­கின்­றது.

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் வரு­டாந்த தர­வ­ரி­சைப்­ப­டுத்தல் இந்த சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் நாடு­க­ளுக்­கான தரி­வ­ரி­சையில் செப்­டெம்பர் 30 ஆம் திக­தி­யுடன் முதல் எட்டு இடங்­களில் உள்ள நாடு­களே 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்ற தகு­தி­பெறும்.

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு ஒரு நிலை முன்­னி­லையில் தற்­போது எட்டாம் இடத்­தி­லி­ருக்கும் பாகிஸ்தான், தனது உலகக் கிண்ண வாய்ப்பை அதி­க­ரித்­துக்­கொண்­டுள்­ளது.

wi-team

 

இந் நிலையில் இன்னும் ஐந்து மாதங்­களில் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்கள் பாகிஸ்­தா­னுக்கும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கும் முக்­கி­ய­மாக அமை­வ­துடன் ஐ. சி. சி சம்­பியன் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களும் அவற்­றுக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்த வாய்ப்­புள்­ளது. ஏனெனில் இந்த இரண்டு நாடு­களும் தர­வ­ரிசைப் புள்­ளி­களை இழந்­துள்­ளன.

பாகிஸ்­தானின் தர­வ­ரிசைப் புள்­ளிகள் 90 இலி­ருந்து 88 ஆகக் குறைந்­துள்­ள­துடன் மேற்­கிந்­தியத் தீவு­களின் தர­வ­ரிசை புள்­ளிகள் 83 இலி­ருந்து 79 ஆகக் குறைந்­துள்­ளது.

இதே­வேளை ஆறாம் இடத்­தி­லி­ருக்கும் இலங்கை, அண்­மையில் நடை­பெற்ற பங்­க­ளா­தே­ஷு­ட­னான தொடர் முடிவை அடுத்து 5 புள்­ளி­களை இழந்­துள்­ளது. அத் தொட­ருக்கு முன்னர் 98 புள்­ளி­க­ளுடன் இருந்த இலங்­கைக்கு தற்­போது 93 புள்­ளி­களே இருக்­கின்­றன. பங்­க­ளா­தேஷின் புள்­ளிகள் 92இலி­ருந்து 91ஆகக் குறைந்­துள்­ளது.

செப்­டெம்பர் 30ஆம் திக­திக்கு முன்னர் அயர்­லாந்தில் நடை­பெ­ற­வுள்ள மும்­முனைத் தொடரில் பங்­க­ளாதேஷ் விளை­யா­ட­வுள்­ளது. இத் தொடரில் மூன்­றா­வது நாடாக நியூ­ஸி­லாந்து விளை­யா­டு­கின்­றது.

மேற்­கிந்­தியத் தீவுகள் 3 போட்­டி­களைக் கொண்ட ஆப்­கா­னிஸ்­தா­னு­ட­னான தொட­ரிலும் 5 போட்­டிகள் கொண்ட இங்­கி­லாந்­து­ட­னான தொட­ரிலும் விளை­யா­ட­வுள்­ளது. சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை சம்­பியன் கிண்ணப் போட்­டிகள் மாத்­தி­ரமே பாகிஸ்தான் விளை­யா­ட­வுள்­ளது.

இதே­வேளை, மேலும் 4 புள்­ளி­களைப் பெற்­றுக்­கொண்­டுள்ள தென் ஆப­ரிக்கா 123 புள்­ளி­க­ளுடன் முத­லி­டத்­திலும் உலக சம்­பியன் அவுஸ்­தி­ரே­லியா அதே 118 புள்­ளி­க­ளுடன் இரண்டாம் இடத்­திலும் இருக்­கின்­றன.

நடப்பு ஐ சி சி சம்­பியன்ஸ் கிண்ண சம்­பியன் இந்­தியா 5 புள்­ளிகள் அதி­க­மாகப் பெற்று நான்காம் இடத்­தி­லி­ருந்து மூன்றாம் இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ள இந்­தி­யா­வுக்கு 117 புள்­ளிகள் உள்­ளன. நியூ­ஸி­லாந்து 3 புள்­ளி­களைப் பெற்­ற­போ­திலும் 115 மொத்த புள்­ளி­க­ளுடன் நான்காம் இடத்­திற்கு பின்­தள்­ளப்­பட்­டள்­ளது.

ஐ. சி. சி சம்­பியன்ஸ் கிண்ணப் போட்­டி­களை இவ் வருடம் முன்­னின்று நடத்­த­வுள்ள இங்­கி­லாந்து ஒரு புள்ளி அதி­கமாகப் பெற்­றுள்­ள­போ­திலும் 109 மொத்தப் புள்­ளி­க­ளுடன் ஐந்தாம் இடத்­தி­லேயே இருக்­கின்­றது.

ஆப்­கா­னிஸ்தான் (52 புள்­ளிகள்) பத்தாம் இடத்­திலும் ஸிம்­பாப்வே (46 புள்­ளிகள்) பதி­னோராம் இடத்­திலும் அயர்­லாந்து (43 புள்­ளிகள்) பன்­னி­ரெண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

http://metronews.lk/?p=7028

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.