Jump to content

வால்வாயணம் - சிறுகதை


Recommended Posts

வால்வாயணம் - சிறுகதை

தென்றல் சிவக்குமார் - ஓவியம்: ரமணன்

 

“உங்க அபார்ட்மென்ட்ல சிசிடிவி இல்லையா?”

“இருக்குப்பா... அது எதுக்கு இப்ப?” - திகிலுடன் நான்.

“சிம்பிள்டி... டேப்ஸ் எடுத்துப் பார்த்துட்டு அதை ப்ரூஃபா வெச்சு லோக்கல் போலீஸ், இல்லன்னா மகளிர் காவல் நிலையம், அதுவும் வேணாம்னா ஹ்யூமன் ரைட்ஸ் வரைக்கும்கூட காக்ரோச் பண்ண முடியும்...”

‘அப்ரோச்’ என்று அவள் சொன்னதுதான் குழப்பத்தின் ஏதோ ஒரு சுழற்சியில் எனக்கு ‘காக்ரோச்’ என்று கேட்டது என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். சுதாரிப்பதற்குள், “நம்ம கீதாவோட தம்பி லாயர்தான்... நா வேணா பேசிப் பார்க்கவா...” என்று அடுத்த சுற்றைத் தொடங்கினாள். வேறு வழியே இல்லாமல் “செகண்ட் கால்ல வினோத் வராருப்பா... அப்பறம் பேசறேன்” என்று அப்போதைக்குத் தப்பித்தேன்.

p62a.jpg

சுயசிந்தனை, தோழமை, துணை என்ற வரிசைப்படி அடுத்து நிஜமாகவே வினோத்தை அழைத்தேன். வழக்கமான மீட்டிங்குக்காகச் சேலம் சென்றிருந்தார் என்னவர். திவ்யாவாவது மூன்று நிமிடங்கள் முழுக்கதை கேட்டாள். இவர் கதைச் சுருக்கம் ஆரம்பித்த உடனேயே, “மறுபடியுமா..? சரியான லூசு. சரி விடு... அஞ்சு நிமிஷத்து வேலை... ரொம்ப யோசிக்காதே... நியாயங்கறதெல்லாம் நமக்குச் சுலபமானது மட்டும்தான். புரியுதா... வெக்கட்டா... ஹேய் சுமதி இரு இரு... அம்மாட்ட உளறி வெக்காதே...” - அவ்வளவுதான்!

மேலோட்டமாகப் பார்த்தால் இருவருமே சரியான தீர்வைத்தான் சொல்கிறார்கள் என்று தோன்றும். பிரச்னை இதுதான். மூன்றாவது முறையாக இன்று எங்கள் வீட்டுக்கு மட்டுமான தண்ணீர் இணைப்பின் வால்வ் மூடப்பட்டிருந்தது. தளத்துக்கு ஆறு என்று 24 வீடுகள் இருக்கும் எங்கள் குடியிருப்பில், யார் இதைச் செய்கிறார் கள் என்பது முதன்முறை புரியவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அடுத்து வரவிருக்கும் புத்தாண்டையொட்டி நிகழ்ச்சி நிரல் முடிவு செய்வதற்காக, குடியிருப்பின் உறுப்பினர் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. “ஞாயிற்றுக்கிழமை காலைல கூட்டமான கூட்டம். பாவம் நீ சமையலைக் கவனி... நான் போயிட்டு வரேன்” என்றவாறே மாமியார் கிளம்பிப் போனார். வினோத் கடமையாக ஷேவிங் செய்து கொண்டிருந்தார். அடுப்பில் ஏற்றியிருந்த பாலை மறந்து, நான் மும்முரமாகத் துணிகளைத் துவைக்க வாகாகப் பிரித்துக் கொண்டிருந்தேன். லேசாகப் புகையும் வாடை வந்தவுடன் ஓடிப்போய் அடுப்பை நிறுத்திவிட்டு வினோத்தை எட்டிப் பார்த்தேன். கவனிக்கவில்லை என்று தெரிந்தது. மாமியார் வருவதற்குள் தடயத்தை அழிக்கவேண்டி, சிங்க்கில் போட்டுத் தண்ணீரைத் திருப்... ம்ஹூம்... காற்றுதான் வந்தது. வெளியில் வந்தபோது வினோத்தும் கன்னங்களில் க்ரீம் நுரையுடன் வந்தார்.

டிஸ்னியில் `டோரேமான்' பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சனாவிடம், “வாட்ச்மேனை மோட்டார் போடச் சொல்லுடா...” என்று கொஞ்சினார். அவள் நிமிர்ந்து அப்பாவைப் பார்த்துவிட்டு சிரிப்புடன் ஓடினாள். “ஓடாதடீ...” என்பதெல்லாம் அவளுக்கு “சீக்கிரம்...” என்றுதான் கேட்குமாக்கும். நிமிடத்தில் திரும்பி வந்தவள், “வாட்ச்மேன் கீழ இல்லப்பா... ஆனா, மோட்டார் ஓடிட்டுத்தான் இருக்கு... ஹரீஷோட தாத்தாகூட செடிக்குத் தண்ணி விடறாரே...” என்றாள். `சைத்தான்' என்றும் சொல்லலாம்... `சமர்த்து' என்றும் சொல்லலாம். அடுத்த கேள்விக்கு ஆப்ஷனே இல்லாமல் தீர்க்கமாகப் பதில் சொல்வாள்.

துவைத்து மடித்த துண்டை எடுத்து க்ரீமைத் துடைத்து மெத்தை மேல் போட்டுவிட்டு, அழுக்குக் கூடையிலிருந்து டி-ஷர்ட் ஒன்றை மாட்டிக்கொண்டு வினோத் வெளியே போனார். நான் குளியலறை வாளியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்துவந்து பால் பாத்திரத்தில் ஊற்றினேன். ‘சர்’ரென்று குழாயில் தண்ணீர் வரவும் ஒரு கணம் பதறிவிட்டேன். வினோத் கடுகடுவென்று வந்தார். “நம்ம வால்வை மட்டும் யாரோ மூடியிருக்காங்க... ரொம்ப சில்லியா இருக்கும்மா... பத்து நிமிஷம் யோசிச்சா கண்டுபிடிச்சிட மாட்டமா? எவன் வேலைன்னு தெரியலை...”  

p62b.jpg

எனக்கும் எரிச்சல் வந்தது. சரி தொலை யட்டும் என்று அவரவர் வேலையில் மூழ்கி விட்டோம்.

எந்த விஷயமும் முதன்முறை நிகழும் போது அதற்குண்டான முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அடுத்தடுத்த முறைகளில் தான் மனசு யோசிக்கிறது. புத்தாண்டுக் கொண்டாட்டம் விமரிசையாக நடந்தது.  உள்ளூரில் வசிக்கிற வீட்டு ஓனர்களும்கூடக் குடும்பத்தோடு வந்திருந்தனர். இரவு ஒன்பதரை. பாத்ரூமுக்குப் போன வினோத் உர்ரென்று வெளியே வந்தார். நான் அனுசரணையான குரலில் `என்னப்பா?' என்றேன். `தண்ணி வர்லம்மா... புரிஞ்சுதா' என்றார். இதில் புரிய என்ன... `மைகாட்'. எனக்குப் பழக்கமில்லை என்றாலும் பல்லைக் கடித்தேன். எங்கள் வீட்டின் தலைக்கு மேலிருக்கும் வீட்டின் ஓனர் ராமசாமி. இப்போது வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு மேடவாக்கத்திலோ, எங்கோ இன்னொரு சொந்த வீட்டில் வசிக்கிறார். எப்போதுமே அவருக்கும், சகல திசைகளில் இருக்கிற வீடுகளுக்கும் ஆகவே ஆகாது. அஃப்கோர்ஸ்... இங்கே எல்லாரோடும் `டூ' விட்டுவிட்டதால்தான் இருநூறு வீடு இருக்கிற பெரிய அபார்ட்மென்ட்டாகப் பார்த்துப் போயிருக்கிறார். ஆறேழு வருஷங்கள் தாங்குமல்லவா எல்லாரையும் பகைத்து முடிக்க!

நானும் வினோத்தும் ஒரே நேரத்தில் `ராமசாமி' என்றோம். இங்கிலீஷ் படத்தின் க்ளைமாக்ஸ் சீனில் பேசுவதற்கு நேரமில்லாத நாயகனைப் போல வினோத் வெளியே டார்ச்சோடு கிளம்பிப் போனார். குழாயில் தண்ணீரும் அவரும் ஒரே வேளையில் வந்ததும் ரெண்டாவது ஷோ முடிந்தது. `இவ்ளோ மட்டமாவாடீ இருப்பான் மனுஷன்’ என்றார் வினோத். ‘ஏங்க பன்னண்டு மணிக்கு அந்தாளைப் பத்திப் பேசுறீங்க..?’ என்றதற்கு முறைத்தார் வினோத். “அம்மாவுக்கு எதும் தெரிய வேண்டாம். தெரிஞ்சதுன்னா அடுத்த தடவை அந்தாள் வர்றப்ப சட்டையைப் பிடிச்சு உலுக்கிடுவாங்க... பேசாம இரு...” என்றார்.

என் மாமியார் காவல் துறையில் வேலைபார்த்தவர். ஆஃபீஸ் வேலைதான் என்றாலும் அத்தனை அஃபீஷியல்களுக்கும் அவரைத் தெரியும். போல்டு டைப். ரிடையரான பிறகும்கூட அவ்வப்போது போகிற வருகிற இடங்களில் காவல் யூனிஃபார்ம்கள் சல்யூட் அடித்து சிநேகம் காட்டும்போது பெருமையாக இருக்கும்.ராமசாமிக்கு இதுவும் தெரியும். இருந்தாலும் பல்லிக்கும் கரப்பானுக்கும் கூடக் கோபம் வரலாம் இல்லையா... அவற்றில் கூட திரிசமன் இருந்தே தீருமல்லவா..? அன்று வெகுநேரம் கழித்தே தூங்கினேன். அடுத்து வந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை வந்து போனார் ராமசாமி. ஆனால், வால்வுக்குத் தொல்லையில்லை. ‘திருந்தியிருப்பார்’ என்று நாங்களா கவே நினைத்துக் கொண்டோம். யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. மாமியார் உட்பட யாருக்கும் தெரியாது. அர்ச்சனாவுக்கு மட்டும் ஓரளவுக்குத் தெரியும்.

இன்று நான் அர்ச்சனாவைப் பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது, “இந்தப் பக்கம் வந்தேன்” என்று ‘ரயில்வே’ கண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தார் ராமசாமி. வால்வு மூடப்பட்டிருந்தது. எனக்குத் தலையை வலித்தது. நேரடியாகக் கேட்பதில் எந்தப் பயனும் இல்லை. அவரது நமுட்டுச் சிரிப்பு கண்முன் தோன்றி மேலும் வெறுப்பைக் கிளறியது. பெரிதாக யோசிக்க முடியாமல்தான் திவ்யாவையும், பின்னர் வினோத்தையும் அழைத்தேன். எனக்குள் யோசித்தபடியே வண்டியை உசுப்பினேன். அர்ச்சனாவைப் பாட்டு கிளாஸிலிருந்து அழைத்துக்கொண்டு திரும்பி வந்தபோது, “ஏம்மா... இந்த வால்வை மூடினா, அவங்க வீட்ல தண்ணி நின்னுபோற மாதிரி நம்ம ராஜேஷ் அங்கிள்ட்ட சொல்லி மாத்திட முடியாதா?” என்றாள். உண்மையிலேயே ஒரு நிமிடம் யோசிக்க வைத்த யோசனை அது.

இதோ இன்னொரு வாரத்தில் ‘வாடகை வாங்க’ என்று வந்துவிடுவார் ராமசாமி. எக்கேடோ கெட்டு ஒழியட்டும், அமைதியாக இருப்போம் என்று வினோத்தைப் போலவும் இருக்க முடியவில்லை. அடுத்த முறை வால்வில் கை வைத்தால் ராமசாமி தலையில் இங்க் கொட்டுவது முதல், வால்வோடு அவர் கை ஒட்டிக்கொள்வது வரை  கையும் களவுமாகப் பிடிபடுமாறு மனசுக்குள் ஏகப்பட்ட திட்டம் தீட்டிப் பத்து நிமிடங்களுக்கொருமுறை பழிவாங்கிக் கொண்டிருந்த அர்ச்சனாவைப் போலவும் இருக்க முடியவில்லை. மிகத் தெளிவாக எங்கள் கண்களில் படும் நாள்களில் மட்டுமே வால்வை அடைத்து, அவர்தான் என்பதைத் தெரியப்படுத்தி இம்சிக்கிறார். குறைந்தபட்சம் நறுக்கென்று நாலு வார்த்தை கூட அவரைக் கேட்க முடியாமல் இருப்பது எனக்கு மெகா எரிச்சலாகிக் கொண்டிருந்தது.p62c.jpg

ஒருவழியாக ராமசாமி வந்த ஒரு நாளில், ஒரு முடிவுக்கு வந்தேன். எனக்கு என் ஆரோக்கியம், அதிலும் மன ஆரோக்கியம் மிக முக்கியம். அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு, பக்கத்து மளிகைக் கடைக்குப் போய்வருவதாகச் சொல்லிவிட்டு இறங்கினேன்.

“என்னம்மா பண்ணப் போறோம்?”

“ஷ்... சொல்றேன் வா...”

நேரே வண்டியை எடுக்கப் போவது போலவே போய் எங்கள் வால்வை நானே அடைத்துவிட்டேன். குழப்பத்துடன் பார்த்தாள் அர்ச்சனா. “எப்படியும் நாமதான் திரும்பவும் திறக்கப் போறோம்... அதுக்கு எதுக்கு அந்தாளு வந்து அடைக்கற வரைக்கும் காத்திருக்கணும்?” என்றேன். ஏதோ புரிந்தது போல தலையசைத்தாள். ஒரு நிமிடமாவது அவர் குழம்புவார் என்ற திருப்தி எனக்கு.

சாமான்களோடு கடையிலிருந்து திரும்பி வருகையில் தெருமுனையில் எதிர்ப்பட்டது ராமசாமியின் கார்.

வண்டியை பார்க் செய்தபோது வால்வ் திறந்திருப்பது தெரிந்தது.

“ஹா ஹா ஹா... மத்த வால்வெல்லாம் எப்டி இருக்குன்னு வெரிஃபை கூடப் பண்ணல போலிருக்கும்மா” என்றாள் என் ராட்சசி!

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.