Jump to content

கவிப்புயல் இனியவன் கவிதைகள்


Recommended Posts

என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான் 
வாடவேமாட்டாய் ...!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • Replies 233
  • Created
  • Last Reply

உன் ....
வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை.....
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு .......!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலோடு இருக்கும்....
என்னவளும் தான் ....!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

இழந்தது ......
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம் 
தந்த காதலை ....!

&
சின்ன சின்ன கவிதைகள் 07
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

போடா.....
உனக்கு.......
காதலிக்க கூட  ..
தெரியாது என்று ...
நண்பர்கள்........
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!
&
சின்ன சின்ன கவிதைகள் 08
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 04/04/2017 at 5:19 PM, கவிப்புயல் இனியவன் said:

சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

சிலந்தி உயிரை விட்டு வைத்து கொல்லும்.... நன்றாய் இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!

இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!

&
சின்ன சின்ன கவிதைகள் 09
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!

என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!

&
சின்ன சின்ன கவிதைகள் 10
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

காதலின் சின்னம்......
கல்லறையாக இருக்கிறது.....
கல்லறைக்கு பின்னரும்............
காலத்தால்  நிலைத்திருப்பதால்......!

நிலையில்லாத உயிருக்கு.......
நிலையான இடத்தை கொடுப்பது.....
காதல் காவியங்களே.........!

&
சின்ன சின்ன கவிதைகள் 11
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

உன் ......
கண் சொல்கிறது.....
என் மேல் உள்ள காதலை.....
நீ முகம் திருப்பினால்..........
மறைந்து விடாது காதல்.....!

நீ
கண் இமைக்கும் நேரத்தில்....
நான் காணாமல் போய்.......
விடுவேனோ என்பதற்காய்......
நீ படும் வேதனையை என்......
இதயம் மட்டுமே அறியும்....!

&
சின்ன சின்ன கவிதைகள் 12
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

கண்ணை திறந்து கொண்டும்.....
கண்ணை மூடிக்கொண்டும்.....
கனவு காணும் அபூர்வ சக்தி.....
காதலருக்கே உண்டு...............!

அணைத்து கொண்டு இருப்பது.......
காதலுக்கு இன்பம்..........
நினைத்து கொண்டிருப்பது.......
காதலுக்கு சொர்க்கம்......!

&
சின்ன சின்ன கவிதைகள் 13
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

என் இதயம் பேசுகிறது 01
----------------------------------
வாழ்வியல் சிறக்க .....
வாழ்க்கை சிறக்க வேண்டும்.....!

வார்த்தை சிறக்க......
வரிகள் சிறக்க வேண்டும்.......!

வாழ்த்துக்கள் சிறக்க.....
வாய்மை சிறக்க வேண்டும்......!

வாழ்க வளமுடன் என வாழ்த்தி......
வாழ்வோம் வையம் போற்ற.....!

^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது 
 

Link to comment
Share on other sites

வாழ்க்கையில் உதவியவை .....!!!
-----
ஏழையாக வாழ்ந்திருக்கிறேன்......
கோழையாக வாழவில்லை.....
தந்தையின் உபதேசம் அது.......!

மன்னித்து பழகியிருக்கிறேன்.....
மண்டியிட்டு வாழவில்லை......
தாயின் வளர்ப்பு அது.............!

திட்டு வாங்கியிருக்கிறென்........
முட்டாளாக வாழவில்லை......
அண்ணனின் உபதேசம் அது.....!

தலை குனிந்து வாழ்ந்திருகிறேன்.....
தலை குனியும்படி வாழவில்லை......
உற்றர் உறவினர்களின் தூண்டுதல்......!

தலை நிமிர்ந்து வாழ்கிறேன்.....
தலை கனத்தோடு வாழவில்லை....
இறைவனின் அருள் கிருபை அது.....!

^
தொடர் கவிதை தொகுப்பு
கவிப்புயல் இனியவன்
என் இதயம் பேசுகிறது 02

Link to comment
Share on other sites

கொடுங்கள் கொடுக்கப்படும்

------------------------------------------

நவீனத்தால் ஆடைகள் மாறும்.....
அலங்காரங்கள் மாறும்..........
உள்ளத்தில் உள்ள உணர்வுகள்.....
கொடுக்க துடிக்கும் கரங்கள்
காலத்தால் மாறாது......!

எங்கிருந்தும் கொடுக்கவில்லை....
இங்கிருந்தே  கொடுக்கிறோம்....
இருப்பதிலிருந்து   இல்லாதோருக்கு
கொடுங்கள் இறைவன் உங்களுக்கு....
கொடுத்துகொண்டே இருப்பான்....!

^^^
கவிப்புயல் இனியவன்
 

Link to comment
Share on other sites

அ கிலத்தில் உனக்கான ....
அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...
அ வள்  எப்போது கிடைப்பாள்....?
அ வதிப்படாதே அவஸ்தை படாதே ....
அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!

அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு 
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!

^^^
அகராதியில் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!

ஆ ருயிரே என்று அழைத்துப்பார் ....
ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ...
ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் ....
ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!

^^^
அகராதியில் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

ஒரு நாளில் ஒரு .......
வார்த்தையாவது பேசிவிடு........
இல்லையேல் என்னை ........
கொன்ற பாவத்துக்கு......
ஆளாகிவிடுவாய்.....................!

நீ
பேசாமல் இருக்கும்.....
ஒவ்வொரு நொடியும்.....
நான் பேச்சை இழக்கும்.....
நொடிகள் என்பதை.....
மறந்துவிடாதே.........!

^^^
கவிப்புயல் இனியவன்
காதல் சோகக் கவிதை 
29 .04.2017

Link to comment
Share on other sites

கண்ணீர் துளிகளால்.....
அழகாக்கியவளே.....
கரைந்தது கண்களே.....
காதல் இல்லை...........!

சோகமும் கண்ணீரும்.....
காதலை கரைக்காது........
காலமெல்லாம் 
காத்திருக்கவைக்கும்.......!

உன்னை 
நினைப்பதற்காகவே......
இறைவன் என்னை ....
படைத்துவிட்டானே ......
நான் என்ன செய்வது....?

^^^
கவிப்புயல் இனியவன்
காதல் சோகக் கவிதை 02
29 .04.2017 

Link to comment
Share on other sites

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................மழை.........................!!!

வெட்டிய மரங்களின் ஓலங்கள் ....
அழுது கொட்டியது அடைமழை ....!!!

|||||||

வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை 
வானம் கதறி அழுதாள் - அடைமழை 

||||||||

பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம் 
பருவம் தவறி மழைபெய்தால் -நாசம் 

|||||||

விவசாயியின் நண்பன் - மழை 
வியாபாரியின் எதிரி -மழை 

||||||

மனதில் என்றும் முதல் காதலும்....
முதல் மழையில் நனைந்ததும் மறையாது

IIIIII

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................காதல்........................!!!

காதல் ஒரு வழி பாதை ......
நினைக்க தெரியும் மறக்க தெரியாது....!

-----

உன்னோடு வாழவும் துடிக்கிறேன்....
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!

-----

உதடு சிரிக்கிறது ...
இதயமோ அழுகிறது ......!

-----

காற்றிருந்தால்  பட்டம் பறக்கும்
காதல் இருந்தால்  வாழ்க்கை சிறக்கும்....!

-----

காதலில் நினைவுகள் முற்கள் 
கனவுகள் வாசனைமலர்கள் ....!

@@@

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

தொழிலாளர்  தினக் கவிதை 
^^^^^
உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....
ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!

களைப்பில் உழைப்பின் முதுகு ....
கேள்விக்குறியாய் வளைந்தது ....
சளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....
அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் ....
திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....!

தூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....
திரட்டி கொண்டனர் தம்பலத்தை .....
நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....
நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....
வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....!

நோக்கம் நிறைவேறும்வரை ......
உக்கிரமானது சர்வதேசப் புரட்சி......
உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....
உழைக்கும் நேரம் எட்டுமணியாக .....
உரிமையை போராடி வென்றனர்.....!

போராடி வென்ற தொழிலாளர் தினம் .....
பேச்சளவில் இன்று சட்டத்திலும் ...
சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...
மனத்தால் உழைப்பின் புனிதத்தை ...
உணரும் நாள் என்று உதயமாகிறதோ ....
அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......!

@
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்
வட இலங்கை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für மே தின வாழ்த்துக்கள்.

அனைவருக்கும்.... மே தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................நட்பு........................!!!

அமைதியான நேரத்தில் என்.......
பலவீனத்தை சொன்னான் நண்பன்......!
^^^
அன்று  நட்பு இல்லையென்றால் ... 
அன்றே பாடையில் போயிருப்பேன் ......!
^^^
மூச்சுக்கு காற்று நண்பன் ....
என் உயிருக்கு நீயே நண்பன் .....!
^^^
நான் போகும் இடமெல்லாம்....
நிழலாய் தொடர்கிறான் நண்பன்
^^^
மறந்துபோயும் கேட்கமாட்டான்
மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....!

@@@

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
!!!.....................அம்மா........................!!!

எந்த பல்கலைகழகத்திலும் கற்கவில்லை
எல்லா அம்மாக்களும் வைத்தியர்கள்......!
^^^

அன்னையை அன்னையர் இல்லத்தில் விடாதீர்......
அன்னை இருக்கும் வீடுதான் அரண்மனை.........!
^^^

உலகின் தியாகி யார் என்று கேட்டேன்.......
அன்னையை சொல்லாமல் மூடர்களின் பதில்.........!

^^^
பிசைந்த சோற்றை அருவருக்காமல் .........
சாப்பிடும் ஒரே ஒரு உறவு அம்மா........!

^^^
எப்போது நினைத்தாலும் கண்ணீர்......
அன்னையை தவிர யாரும் இல்லை.....!


@@@

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.