Jump to content

நான் கண்ட கற்பு - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

கருத்தும் கவிதையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

.

பெண்கவிஞர் ஒளவ்வையார் கற்பை உடலுடனோ மனசுடனோ இணைக்காமல் ”கற்பெனப் படுவது சொற் திறம்பாமை” என ’சொல்; சம்பந்தப் பட்டதாக வரையறை செய்கிறார்.  சொல் அடிபடையில் குழந்தை பெறுவது தொடர்பானதுதான். சொல் அடிப்படையில் உன்னோடு வாழும்வரை வேறு பெண்ணை/ஆணைச் சேரேன் என்பதுதான், இது இருவருக்கும் பொதுவானது.
.
இந்த வரைவிலக்கணத்தின்படி என் அனுபவத்தில் நோர்வீயிய ஆண்களும் பெண்களும் கற்புநிலையில் உச்சம் என்பேன். ஒரு சமயத்தில் ஒருவன் ஒருத்தியென தளம்பாமல் வாழ்வது, மனம் கசந்தால் நேரே பேசி விலகியபின் மட்டுமே வேறு துணை தேடுவது என அவர்கள் பண்பில் சுதந்திரமான கற்புநிலை. சிறக்கிறது. இதனால் உறவின் வெளியே தொடர்புகள் அக குறைந்த சூழல் அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தையர்கள் இருக்கும் குடும்பங்களில்கூட சொல்திறம்பாமையால் தந்தையர் பிள்ளைகள் உறவில் சிக்கல் எழுவதில்லை.
.
பெண் சுதந்திரமே இத்தகைய உயர்ந்த சொல்திறம்பாத கற்ப்பு நிலைக்கு வழி வகுக்கும். குழந்தையை உனக்கு பெற்றுத்தருவேன் என்கிற சொல்லை மட்டுமே குடும்ம்ப அமைப்பில் ஆண்கள் எதிர்பார்க்கலாம். அதுதான் அறம். சதுரங்கம்
.....
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*
 
சிருஸ்ட்டி வேட்கையில்
ஆனைமலைக் காடுகள்
பாடுகிற
அந்தி மாலை.
அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில்
உன்னையே சுற்றுதடி மனசு
*.
 
இது தீராத காதலடி
நீதான் கண்டு கொள்ளவில்லை.
அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய்
தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும்
யானைபோல
உண்மையில் என் காதலும் பெரியதடி.
*
 
காமத்தில் சூரியன்
பொன்சிந்த இறங்கி வர.
நாணிப் புவிமகள்
முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்..
ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற
உனது நாடகம் அல்லவா இது.
*
 
ஆண் பெண்ணுக்கிடையில்
ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகை
எப்போதும் விரிகிறது.
*
 
என்னோடு இன்னும் சிலரை
பந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும்
வித்தைக்காரியில்தான் காதலானேன்.
அதனால் என்ன.
கீழே காட்டில் .
ஒரு மூங்கில் புதரை மட்டுமே மேய்ந்த
யானையும் இல்லை
ஒரு யானை மட்டுமே மேய்ந்த
மூங்கில் புதரும் இல்லை.
*
 
எதுவும் செய்..
ஆனால்
இறுதியில் நாம் மட்டுமே மிஞ்சவேண்டும்.
நம் மரபணுக்களில் கவிதை கோர்க்க. .
 
Link to comment
Share on other sites

இது உங்க பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்குமானது

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.