Jump to content

சாக்கடலில் சேற்றுக்குளியல் ஜோர்தானுக்கான சுற்றுப் பயணத்திப்போது


Recommended Posts

சாக்கடலில் சேற்றுக்குளியல்

 

ஜோர்தானுக்கான  சுற்றுப் பயணத்திப்போது

 

மத்­தி­ய­கி­ழக்கு பிராந்­தி­யத்­தில் உல்­லாசப் பய­ணி­களின் சுவர்க்கம் என்று அழைக்­கப்­ப­டு­கின்­ற­தான நாடு­களின் வரி­சையில் இஸ்­லா­மி­யர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­மைந்­துள்ள நாடாக ஜோர்தான் திகழ்­கின்­றது.

சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான பாரா­ளு­மன்றக் கட்­ட­மைப்பைக் கொண்டு மன்னர் ஆட்­சியின் கீழான இயக்­கத்­தி­லுள்ள ஜோர்தான் அம்மான் எனும் பெயரை தலைநக­ராகக் கொண்­டுள்­ளது. மிகப் பிர­மாண்­ட­மா­னதும் எழில்­மிக்­கதும் அதே­நேரம் கண்­கவர் கட்­டட அமைப்­பு­களை கொண்­ட­மைந்­துள்ள ஜோர்தான் நாட்டின் பிர­தம அமைச்­ச­ராக ஹனி அல்– முல்கி காணப்­ப­டு­கிறார். 

கீழ்­சபை, மேல்­சபை என வகுக்­கப்­பட்ட பாரா­ளு­மன்றக் கட்­ட­மைப்­பொன்று இருக்­கின்­ற­போ­திலும் முடிக்­கு­ரிய மன்­ன­ராக மன்னர் அப்­துல்லா – II ஆட்­சிக்கு அதி­ப­தி­யாக இருக்­கிறார். 98 வீதத்தை இஸ்­லா­மி­யர்­க­ளாக கொண்ட இங்கு அரபு மொழியே உத்­தி­யோ­க­பூர்வ மொழி­யாக இருக்­கின்­றது. இவர்கள் சுன்னி முஸ்லிம் என்று அழைக்­கப்­ப­டு­கின்­றனர்.  

2017 ஆம் ஆண்டின் முற்­ப­கு­தியின் தொகை மதிப்­பீட்டு புள்­ளி­வி­ப­ரங்­களின் அடிப்­ப­டையில் 98 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்­டுள்­ளது. 34495 சதுர மைல் பரப்­ப­ளவைக் கொண்­டுள்ள இந்­நாட்டின் நாண­ய­மா­னது ஜோர்தான் டினார் என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. எனினும் J.D.என்­பது சுருக்கி அழைக்கும் வழக்­க­மாக பர­வி­யுள்­ளது.

இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான் ஆகிய நாடு­களை சேர்ந்­த­வர்கள் இங்கு சென்றால் வாக­னங்­களை செலுத்­துதல் என்­பது நினைத்­துப்­பார்க்க முடி­யா­த­தாகும். ஏனெனில் அங்கு வலது புறத்து ஒட்­டு­கையே அமுலில் இருந்து வரு­கி­றது.

வித­வி­த­மா­னதும் வித்­தி­யா­ச­மா­ன­து­மான உண­வு­க­ளால் தானோ என்­னவோ ஜோர்­தா­னி­யர்கள் ஆணோ பெண்ணோ சிறு­வர்­களோ அனை­வ­ருமே ஒரு­வி­த­மான கவர்ச்­சி­கொண்ட எழி­லோடும் அழ­கோடும் உலா­வ­ரு­கின்­றனர்.

ஆமாம் இவ்­வாறு இன்னும் கூறு­வ­தற்கு பல உண்டு. அவை­பற்றி கூறு­வ­தற்கு முன்­ப­தாக இந்தக் கட்­டு­ரையை எழு­து­வ­தற்­கான பிர­தான கார­ணத்­தையும் கூறி­யாக வேண்டும். வரு­ட­மொன்­றுக்கு சுமார் 50 இலட்சம் உல்­லாசப் பய­ணி­களை கவர்ந்­திழுக்­கின்ற வர­லாற்று சிறப்புமிக்க விட­யங்­களை கொண்­ட­மைந்­துள்ள ஜோர்தான் நாட்­டுக்கு அண்­மையில் சுற்­றுலாப் பயணம் ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்தோம்.

ஜோர்­தா­னுக்­கான இலங்கைத் தூதுவர் அப்துல் லத்தீப் லாபிர் ஏற்­பாட்டில் ஜோர்தான் நாட்டின் சுற்­றுலாப் பய­ணத்­து­றை அதிகாரசபையின் நேர­டி­யா­னதும் பூர­ணத்­து­வ­மா­ன­து­மான அனு­ச­ர­ணையின் கீழ் இலங்­கையைச் சேர்ந்த கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய மற்றும் பௌத்த மதங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அச்சு இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் அடங்­கிய குழு­வாக ஜோர்­தா­னுக்கு சென்­றி­ருந்தோம்.

இலங்­கை­யி­லி­ருந்து நேர­டி­யாக ஜோர்­தா­னுக்­கான விமான சேவை இல்­லா­ததால் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து முதலில் கட்­டா­ருக்குப் பய­ணித்தோம்.

இதி­லென்ன புதி­ன­மெனில் புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்ட கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தின் ஓடுபாதை திறக்­கப்­பட்ட இரண்­டா­வது நாளாகும். அப்­ப­டி­யான நாளில் எந்­த­வித அலைச்­சலும் இல்­லாது எமது பயணம் இல­கு­வாக அமைந்­தி­ருந்­தது.

கட்டார் விமான நிலை­யத்தில் சில மணி­நேரங்கள் காத்­தி­ருக்கும் தேவை ஏற்­பட்­டி­ருந்­தது. சில மணிநேரங்கள் என்­றாலும் மிகக்­கு­று­கிய நேரமே அது. அதற்குள் கட்டார் விமான நிலை­யத்­தி­லி­ருந்து இனா­மாக கிடைக்­கப்­பெற்ற வைபை சேவையை பெற்­றுக்­கொண்ட நாம் அனை­வரும் அவ­ரவர் கைய­டக்கத் தொலை­பே­சி­யுடன் சங்­க­மித்­தி­ருந்தோம். அது­மாத்­தி­ர­மின்றி எம்­மி­டையே சில­ரது கைத்­தொ­லை­பே­சிகள் உயி­ரி­ழந்து கிடந்­ததால் இனா­மாக சார்ஜ் செய்து கொள்­ளவும் முடிந்­தது. அதற்­கான வச­திகளும் அங்கு உள்­ளன.

கைத்­தொ­லை­பே­சியை உற்­று­நோக்கி மூழ்­கிக்­கி­டந்த நேரமே அறி­யாது தலை­நி­மிர்ந்த போது கட்டார் விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஜோர்தான் பறப்­ப­தற்­கான நேரம் நெருங்­கி­யி­ருந்­தது. அனை­வ­ருமே அவ­சர அவ­ச­ர­மாக இயற்கைத் தேவை­களை முடித்துக் கொண்டு விமான நிலையம் புறப்­ப­டுகை தளத்­துக்குள் புகுந்து கொண்டோம்.  

சுமார் இரண்டு மணித்­தி­யா­லங்­களும் சில நிமி­டங்­களும் கடந்து கண் விழிக்­கையில் ஜோர்தான் நாட்டின் தலை­ந­க­ரான அம்­மானின் சர்­வ­தேச விமான நிலை­யத்தில் எமது கட்டார் விமானம் தரை­யி­றங்­கு­வதை உணர்ந்தோம்.

ஒரு­வாறு வெளி­யேறு தளத்­துக்கு வருகை தந்த போது அங்கு எம்மை வர­வேற்­ப­தற்­காக இலங்­கைக்­கான ஜோர்­தா­னியத் தூதுவர் அப்துல் லத்தீப் லாபிர் காத்­தி­ருந்தார். அவ­ருடன் எமக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த சுற்­றுலாப் பய­ணத்­து­றையின் சிறப்­பு­மிக்க வழி­காட்டி ஒரு­வரும் சுற்­றுலாப் பய­ணத்­துறை அலு­வலர் ஒரு­வரும் அவர்­க­ளோடு தூத­ர­கத்தில் பணி­பு­ரியும் அரபு நாட்டு பைங்­கிளி ஒரு­வரும் நின்­றி­ருந்­தனர்.

எம் அனை­வ­ரையும் கட்­டி­ய­ணைத்து கைலாகு கொடுத்து முகர்ந்து வர­வேற்ற தூது­வரின் முகம் மலர்ந்து பர­வ­சத்தில் காணப்­பட்­டதை உண­ர­மு­டிந்­தது. சிறி­தான அறி­மு­கத்­தின் பின்னர் எமக்­காக காத்­தி­ருந்த அதி­சொ­குசு வாக­னத்தில் ஏறினோம். சுமார் இரண்டு மணி­நேர பய­ணத்தின் பின்னர் மூவ் பிங்க் எனும் நட்­சத்­திர ஹோட்­ட­லுக்குள் புகுந்தோம்.

வெளித் தோற்­றத்தில் பண்­டைக்­கா­லத்து கலா­சா­ரத்தை வடித்து வைத்தால் போலுள்ள இந்த ஹோட்டல் மிகவும் உயர்­த­ர­மா­ன­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது.

இலங்கை நேரப்­படி நாம் பய­ணித்த மறுநாள் அதி­காலை 2.00 மணி­ய­ளவில் எமது இரவு உணவை எடுத்துக் கொண்டோம். ஒதுக்­கப்­பட்­டி­ருந்த சொகுசு அறையில் சில மணி­நே­ரங்­களே நித்­திரை கொண்டு விழித்­தெழ நேர்ந்­தது. ஏனெனில் மாதக்­க­ணக்கில் ஜோர்தான் நாட்டில் தங்­கி­யி­ருந்து சுற்­றுலா செல்­வ­தற்­கான வர­லாற்று புக­ழி­டங்கள் இருந்­தாலும் வெறும் எட்டு தினங்­களில் அநே­க­மான இடங்­களை சுற்­றிப்­பார்க்க வேண்­டிய தேவை­யுடன் எமக்­கான நிகழ்ச்சி நிரல் தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

சுற்­றுலாப் பய­ணத்தின் முத­லா­வது நாளில் எமக்­கான நிகழ்ச்­சி­நி­ரலில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது என்­ன­வென்றால் கடற்­கு­ளி­ய­லாகும். இது மிகவும் ஆச்­ச­ரி­யம்­மிக்­கது. அதி­ச­யிக்­கத்­தக்­கது. அதற்கும் காரணம் உண்டு என்­பதை எமது வழி­காட்டி மிகத் தெளிவாக எடுத்­தி­யம்­பினார். அற்­புத மருத்­துவம் கொண்­ட­தாக அந்த கடற்­கு­ளியல் அமையும் என்­பதை மிக அழ­காக வர்­ணித்தார். வரு­ட­மொன்­றுக்கு 50 இலட்சம் பேர் ஜோர்­தா­னுக்­கான சுற்­றுலாப் பய­ணத்தை மேற்­கொள்­வ­தாக நான் முன்­னரே குறிப்­பிட்­டி­ருந்தேன். அவ்­வாறு ஜோர்தான் வரு­கின்ற சுற்­றுலாப் பய­ணி­களின் ஆவலில் முத­லிடம் கொண்­ட­துதான் இந்த “Dead Sea” குளியல். சாக்­கடல் என்­பது இந்த கட­லுக்கு அமைந்­துள்ள தமிழ்ப்­பெயர்.

இக் கடலானது இஸ்ரேல், பலஸ்தீன் மற்றும் ஜோர்தான் ஆகியா நாடுகளுக்கு சொந்தமாகவும் அமைந்திருக்கிறது. உப்­புக்­கடல் என்ற சொல்­லொன்று தமிழ்த் திரைப்­ப­டப்­பா­ட­லிலும் வரு­கி­றது. ஆனாலும் இந்த உப்புக் கட­லா­னது சாதா­ரண கட­லிலும் பன்­ம­டங்கு உப்­புத்­தன்­மையைக் கொண்­டி­ருக்­கின்­றது. இங்­குள்ள விசேடம் என்­ன­வெனில் கறுப்பு நிற­மான சேற்றை உடல் முழுதும் பூசிக்­கொண்டு சில நிமி­டங்­கள் க­ழித்து உப்பு செறி­மானம் அதி­க­ரித்த இந்த சாக்­க­டலில் குளித்தல் வேண்டும்.

மிக­மிக அடர்த்­தி­யான நீரை இக்­கடல் கொண்­டி­ருப்­பதால் பஞ்­ச­ணையில் போன்று மிதக்­கவும் முடி­கி­றது. இயற்கை மருத்­துவம் இங்­குதான் உள்­ளது என்று புக­ழப்­ப­டு­கி­றது. தோல் சம்­பந்­தப்­பட்ட அனைத்­து­வி­த­மான நோய்­க­ளுக்கும் உப்­புக்­கடல் என்­கின்ற இந்த சாக்­கடல் குளியல் நிவா­ர­ணி­யாக அமை­கின்­றதாம்.  

நாம் இங்கு குளிப்­ப­தற்கு சென்­றி­ருந்த போது பிரான்ஸ் நாட்­டுக்­கா­ரர்கள் சிலரை சந்­திக்க நேர்ந்­தது. அவர்­க­ளிடம் சுமா­ராக பேச்­சுக்­கொ­டுத்­த­போது தாம் சாக்­க­டலில் குளிப்­ப­தற்­கா­கவே பிரான்­ஸி­லி­ருந்து வருகை தந்­த­தாக குறிப்­பிட்­டனர். சாக்­கடல் ஆச்­ச­ரி­ய­மா­கவும் அதி­ச­ய­மா­கவும் இருந்­தது.

தோல் நோய்­க­ளுக்கு இயற்கை நிவா­ர­ணி­யாக விளங்கும் Dead Sea எந்­த­வொரு உயி­ரி­னமும் வாழ்­வ­தற்கு பொருந்­தா­த­தாகும். உப்புத் தன்மை அதி­க­ரித்­தி­ருப்­பதால் இங்கு மீன்­களோ வேறு உயி­ரி­னங்­களோ இல்லை. சாக்கடல் இறை­வனால் அரு­ளப்­பட்ட அற்­பு­த­மா­ன­தொரு அம்­ச­மாகும். இதில் அதி­முக்­கிய விடயம் ஒன்றும் மறைந்­தி­ருக்­கி­றது.

Dead Sea இல் குளிப்­ப­தற்கு ஆவல் கொண்­ட­வர்கள் சவரம் செய்­து­விட்டு இந்த கட­லுக்கு செல்­வது கண்­டிப்­பாக தடை செய்­யப்­ப­டு­கி­றது. அதி­க­ரித்த உப்­புத்­தன்­மையும் மேலே கூறப்­பட்ட சேறும் சவரம் செய்­யப்­பட்ட தோலில் ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்­தி­வி­டு­கின்ற கார­ணத்­தா­லேயே இவ்­வா­றா­ன­தொரு கட்­டாய கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்டு அறி­வு­றுத்­தவும் படு­கி­றது.

சாதா­ரண கடலில் குளித்­தாலே தேக சுகம் எனக்­கூ­றப்­ப­டு­கின்ற போது இயற்கை மருத்­துவ குணம் கொண்ட உப்­புக்­க­டலில் குளிப்­ப­தற்கு யாருக்­குத்தான் ஆசை­யி­ராது? அனை­வ­ரு­மாக அள்ளிப் பூசிக் கொண்ட சேற்­றுடன் கட­லுக்குள் சங்­க­மித்தோம். 

உப்­புக்­கடல் குளி­யலில் குளிர்ந்­தி­ருக்க நேரமோ சீக்­கி­ர­மாக கடந்து கொண்­டி­ருந்­தது. மறு­பு­றத்தில் எமது அடுத்த நிகழ்ச்சி நிரலின் படி­யான பய­ணத்­துக்கு அதி­சொ­குசு வாக­னமும் அதே­நேரம் எமக்­கான வழி­காட்டி அலு­வ­லரும் மூவ் பிங்க் ஹோட்­டலின் வர­வேற்­புப்­ப­கு­தியில் காத்­தி­ருந்­தனர். எனினும் நேரம் வெகு­வாகக் கடந்­தி­ருந்­தது.

ஜோர்­தானின் சுற்­றுலாப் பய­ணத்­து­றை­யா­னது அதன் அபி­வி­ருத்தி கருதி பல மில்­லியன் ரூபாவை எமக்­காக செல­விட்டே தனது நிகழ்ச்­சி­நி­ரலை தயா­ரித்­தி­ருந்­தது. அந்த வகையில் எமது சுற்றுலாப் பயணத்தின் முதலாவது நாளின் இரண்டாவது விஜயம் எல்லாம் வல்ல இறைவனின் ஒரே குமாரனான இயேசுகிறிஸ்து புனித திருமுழுக்கு அருளப்பரிடம் திருமுழுக்குப் பெற்றுக் கொண்ட “ஜீஸஸ் பெப்டிசம் சைட்” எனப்படுகின்ற புனித பூமிக்கான பயணமாக அமைந்திருந்தது.

எனினும் Dead Sea குளியலானது அதற்கான நேரத்தைக் குடித்து விட்டதாகக் கூறிய வழிகாட்டி அலுவலர் இறைமகனாம் இயேசுகிறிஸ்து திருமுழுக்கு பெற்ற புனித பூமிக்கான பயணம் இரத்துச் செய்யப்பட்டு விட்டதாகக் கூறிவிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் எனது மனம் இடிந்து போனது. எனினும் மனதைத் திடமாக்கிக்கொண்டிருந்தேன். எமது அடுத்த பயணம் தான் புனித விவிலியத்தில் (Holy Bible) கூறப்படுகின்ற மோசஸின் இறுதிக்கால கட்டத்துடனான (Mount Nebo) மலைத்தொடருக்கானதாகும்.  

இங்குதான் மோசேயின் ஆலயமும் அவரது ஞாபகார்த்த படிகக் கல்லும் அங்குதான் காணப்படுகிறது. பச்சைப்பசேலென வளர்ந்து காட்சியளித்த ஒலிவ மரத்து அழகை ரசித்துக் கொண்டிருந்த அந்த புனித பூமியின் புனிதத்துவத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

ஜே.ஜி.ஸ்டீபன்

(தொடரும்) 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-29#page-6

Link to comment
Share on other sites

ஜோர்தானில் முடிவுற்ற மோசேயின் யாத்திரை

 

மோசேயினால் அழைத்து வரப்பட்ட மக்கள் சுதந்தரிகளாக வாழக்கூடிய நிலப்பரப்பினைக் காட்டிய தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்தபடி இஸ்ரவேல் ஜனத்தாருக்கான சுதந்திர தேசத்தை காண்பித்தேன் என்று மோசேக்கு கூறுகிறார், அத்துடன் மக்கள் அங்கு செல்கின்ற போதிலும் உன்னால் அங்கு செல்ல முடியாது என்றும் மோசேயிடம் கூறுகின்றார். தேவனின் கட்டளைப்படி ஒழுகிவரும் மோசே தேவனின் இறுதிக்கட்டளையையும் ஏற்கிறார். அந்தச் சந்தர்ப்பத்தில் தனது ஊழியக்காரனான யோசுவாவை அழைத்து தேவனின் கட்டளையை விளக்கி, மோசே தனது மேலாடையையும் அற்புதக் கோலையும் அவரிடம் ஒப்படைக்கின்றார்

பரி­சுத்த வேதா­க­மத்­திலோ அல்­லது புனித குர் ஆனிலோ கூறப்­பட்­டுள்­ள­வாறு இறை­வனால் அனுப்­பப்­பட்ட இறை­வாக்­கினர் அல்­லது முற்­கா­லத்­தையும் பிற்­கா­லத்­தையும் அறிந்த விவே­கமும் ஞானமும் நிறைந்­த­வர்­களில் இறை­வாக்­கினர் மோசஸ் தனி­யா­னதும் மகத்­துவம் மிக்­க­து­மான இடத்தைப் பிடித்­தி­ருக்­கிறார். மோசஸ் எனப்­ப­டு­பவர் இறை­வ­னுக்குப் பாத்­தி­ர­மா­னவர் மாத்­தி­ர­மல்­லாது தேவ­னோடு பேசு­ப­வ­ரா­கவும் திகழ்ந்தார்.

அத்­த­கைய இறை ஆசி நிறைந்த இறை­வாக்­கி­னரின் இறுதிக் காலக்­கட்­டத்தின் புக­ழி­டமே ஜோர்­தானின் நேபோ எனப்­ப­டு­கின்ற மலைத் தொட­ராகும்.

இந்த புனிதம் மிக்க மலை­யா­னது ஜோர்­தானின் தலை நகரம் அம்­மா­னி­லி­ருந்து வெறும் 47 நிமிட பய­ணத்­துக்குள் அடங்­கி­யி­ருக்­கின்­றது. மோசேயின் யாத்­திரை முடிந்து யோசுவா என்­ப­வரின் பயணம் ஆரம்­பிப்­பதும் இந்த நேபோ மலைத் தொட­ரி­லேயே ஆகும். இது எரிக்­கோ­வுக்கு எதிரே அமைந்­துள்ள மலை­யாகும்.

ஜோர்­தா­னுக்­கான சற்­று­லாப்­ப­ய­ணத்தின் மற்­று­மொரு அம்­ச­மாக மோசேயின் மலைக்­கான எமது பயணம் அமைந்­தி­ருந்­தது, எங்கும் ஒலிவ மரங்­களால் அலங்­க­ரிக்­கப்­பட்­டாற்போல் காட்­சி­தரும் அந்த மலைத்­தொ­டரில் ஜில்­லென வீசும் குளிர் காற்­றையும் கிழித்­துக்­கொண்டு முன்­னே­றினோம்,

இந்த புனிதம் மிக்­க­தான நேபோ மலை­பற்றி பேசும் போதும் அந்த மலையில் வாசம் செய்த மோசே என்­ப­வ­ரது இறுதிக் காலம் குறித்து சிந்­திக்­கும்­போதும் மெய்­சி­லிர்க்கும். அந்த வகையில் இறை­வாக்­கி­னர்­மோ­சேயைப் பற்றி சற்று பார்க்­க­லாமே.

இறை­வனால் சிருஷ்­டிக்­கப்­பட்ட உலகில் ஆதாம் என்­பவர் முதல் மனி­த­னா­கவும் ஏவாள் என்­பவள் முதல் மனு­ஷி­யா­கவும் அறி­யப்­ப­டு­கின்­றனர். உலகம் சிருஷ்­டிக்­கப்­பட்­டதன் பின்னர் பல்கிப் பெருகிச் சென்ற மனித இன­மா­னது முறை தவறி, வழி­த­வறி வாழத் தொடங்­கி­யது. இறை­வனால் படைக்­கப்­பட்ட முதல் மனி­தனும் முதல் மனு­ஷியும் பாம்­பாக வந்த சாத்­தானால் வஞ்­சிக்­கப்­பட்­டதன் விளை­வாக மனிதன் பாவி­யா­கினான், அழி­வு­களை நாடினான், குரோ­தங்­க­ளையும் வைராக்­கி­யங்­க­ளையும் தன்­ன­கத்தே ஆழப் பதிந்துக் கொண்­ட­வ­னானான். இவ்­வாறு வழி தவ­றிய மனிதன் மீட்­டெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்று சித்தம் கொண்ட தேவன் தனது தூது­வர்­க­ளாக ஏரா­ள­மான தீர்க்க தரி­சி­களை உல­கிற்கு அனுப்பி வைத்தார்.

அவ்­வாறு இறை­வனால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­களில் ஒரு­வர்தான் இறை­வாக்­கினர் மோசஸ். இவர் சீனாய் மலையில் எரியும் முட்­செ­டியின் நடுவே தோன்றி தேவ­னோடு பேசி­ய­வர்தான் இந்த மோசே,,

எகிப்து நாட்டின் அடி­மை­க­ளாக நடத்­தப்­பட்ட இஸ்­ராயேல் ஜனத்­தாரை மீட்­டெ­டுக்க வேண்டும் என்­பதும் ஆசீர்­வ­திக்­கப்­பட்­ட­வர்­களாய் அவர்­களை வாழ வைக்க வேண்டும் என்­பதும் இறை­வ­னது சித்­த­மாகும். இந்த சித்தம் நிறை­வேற வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஒவ்­வொரு கால கட்­டத்­திலும் இறை­தூ­தர்கள் அனுப்­பப்­பட்­டனர்.

எகிப்­தி­லி­ருந்து அடிமை ஜனங்­களை மீட்­டெ­டுத்து வழி நடத்­தவும் இறைவன் சித்­த­மா­க­வுள்ள தேசத்தில் அவர்கள் சுதந்­த­ரி­க­ளாக வாழவும் சித்தம் கொண்­டி­ருந்த கார­ணத்தால் அன்­றைய மீட்­ப­னாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருந்த மோசேக்கு இறைவன் துணை­யாக இருந்தார்.

எகிப்தில் அடி­மை­களாய் இருந்­த­வர்­களை மீட்­டு­வ­ரு­வ­தென்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. எகிப்­திய இராஜ்­ஜியம் விட்டு அங்­கி­ருந்த அடிமை மக்கள் விடு­விப்­ப­தற்கு அப்­போ­தையை மன்னன் இணங்­கி­யி­ருக்­க­வில்லை. இதனால் மன்­னனின் மன­மாற்­றத்­துக்­காக இறைவன் அற்­பு­தங்­களை நிகழ்த்­தவும் அதே­நேரம் கொடிய நோய்­களை பர­வவும் செய்­தி­ருந்தார். அவ்­வப்­போது அடி­மை­களை விடு­விப்­பது தொடர்பில் உணர்த்­தியும் வந்தார். இவ்­வாறு வேதா­க­மத்தில் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்ள மோசேயின் வர­லாறு வெகு­வாக வியா­பித்து நிற்­கி­றது.

இறை­வனால் அரு­ளப்­பட்ட கோல் ஒன்றே மோசேயின் ஆயு­த­மாக இருந்­தது. அந்த கோலின் துணை கொண்டே எகிப்­திய மன்­னனை எதிர்­கொண்டு இஸ்­ரவேல் ஜனத்­தாரை மீட்­க­லானார் மோசே, பல சவால்கள், சங்­க­டங்கள், இன்­னல்கள், துன்­பங்கள், எதிர்ப்­புகள், இழப்­பு­க­ளுக்கு மத்­தி­யிலும் தேவனின் கட்­ட­ளையின் பிர­காரம் நீதி நெறி தவ­றா­த­வ­ராக செயற்­பட்ட மோசஸ் எகிப்­திய அடி­மை­களை அழைத்துக் கொண்டு எகிப்­தி­லி­ருந்து புறப்­ப­டு­கிறார்.

இவ்­வாறு தனக்கு அரு­ளப்­பட்ட அதி­சய அற்­புத கோலை மட்­டுமே துணை­யாகக் கொண்­டி­ருந்த மோசஸ் மக்­களை அழைத்துச் செல்­கையில் செங்­கடல் தடை­யாக அமைந்­தது. பின்னால் எகிப்­திய இராஜ்­ஜியப் படைகள் மோசேயின் மீட்புப் பணியைத் தடுப்­ப­தற்கும், அதே­நேரம் அடி­மைகள் தப்பிச் சென்­று­வி­டாது முடக்­கு­வ­தற்கும் வேக­மாக விரைந்து கொண்­டி­ருந்­தன.

இந்த சந்­தர்ப்­பத்தில் தேவனின் அற்­புதம் நிகழ்த்­தப்­ப­டு­கி­றது. மோசே­யுடன் பேசிய தேவன் மக்­களை வழி­ந­டத்­து­வ­தற்கும் அவர்­களைப் பாது­காப்­ப­தற்கும் செங்­க­டலைப் பிரித்து வழி­ச­மைப்­பதாய் உறு­தி­ய­ளித்தார். தேவனின் சித்தம் மோசே­யினால் நிறை­வே­றி­யது.

தேவன் கூறி­ய­வாறு மோசே செங்­க­டலை நோக்கி தனது அற்­புதக் கோலை உயர்த்த செங்­கடல் இரண்­டாகப் பிரிந்து நின்­றது. அதி­சயம் ஆச்­ச­ரியம் பொங்கி நின்ற சம­யத்தில் அடிமை மக்கள் வாய்­பி­ளந்து நின்­றனர்.

செங்­கடல் பிரிந்து அமை­யப்­பெற்­றி­ருந்த தரை வழி­யாக நடக்­கு­மாறு இடப்­பட்ட மோசேயின் கட்­ட­ளையை மக்கள் ஏற்­றனர். செங்­க­டலும் கடக்­கப்­பட்­டது. இவ்­வாறு செங்­க­டலைத் கடந்த மக்கள் ஜோர்­தானை அடைந்­தனர். நாடோ­டி­களாய் திரிந்து கொண்­டி­ருந்த மக்­களை பேணிக்­காத்­தது இறை­வனே என்­பதும் அவ­ரது தூதனே மோசஸ் என்­பது மக்­களால் அப்­போ­துதான் உண­ரப்­படத் தொடங்­கி­யது. செங்­கடல் கடக்­கப்­பட்­டதன் பின்னர் எகிப்­திய அடி­மைகள் சுதந்­திர மனி­தர்­க­ளா­னாலும் தேவனால் எண்ணம் கொண்ட தேசத்தை அடை­வ­தற்கு இன்னும் காலங்கள் எடுக்­கப்­பட்­டன.

மோசஸின் இறுதிக் காலம் நெருங்­கி­யி­ருந்­தது. எனினும் கண்­பார்வை குன்­றா­மலும், உடல் பலம் குறை­யா­மலும் காணப்­பட்ட மோசே அப்­போது 120 வய­து­களை எட்­டி­யி­ருந்தார் என்று வேதா­கமம் கூறு­கி­றது.

மோசேயின் ஒவ்­வொரு நகர்வும் இறை­வனால் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்­பதை அவ­ரது ஊழி­யக்­கா­ர­னாக இருந்த யோசுவா நன்கு அறிந்­தி­ருந்தார். மோசேயின் மனதை வென்­றி­ருந்த யோசுவா மோசேயின் அடுத்த ஸ்தானத்தில் பார்க்­கப்­பட்டார்.

மோசே எனும் இறை­வாக்­கி­னரை கிறிஸ்­த­வர்கள் மோசஸ் என்று அழைக்கும் அதே­வேளை இஸ்­லா­மி­யர்கள் அவரை மூசா நபி என்று அழைக்­கின்­றனர், அதே­போன்று கிறிஸ்­த­வர்­களால் யோசுவா என்று அழைக்­கப்­ப­டு­கின்­றவர் இஸ்­லா­மி­யர்­களால் யூசுப் என்று அழைக்­கப்­ப­டு­கின்றார்,

ஜோர்தான் நாட்­டிலே அம்மான் எனும் தலை நக­ருக்கு மிக அருகில் “MOUNT NEBO’’ என்று புனித பூமி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நேபோவில் மோசேயின் வர­லாறு கூறும் நினை­வுகள் பதி­யப்­பட்­டுள்­ளன.

செங்­கடல் வழி­யாக அழைத்­து­வ­ரப்­பட்ட மக்­களை நேபோவின் அடி­வா­ரத்­திலே இருக்கச் செய்த மோசேக்கு தேவனின் அழைப்பு வரு­கி­றது. நேபோவின் உச்­சிக்கு வரு­மாறு மோசே தேவனால் அழைக்­கப்­ப­டு­கிறார். இந்த நேபோ பர்­வ­த­மா­னது எரிக்­கோ­வுக்கு எதிரே அமைந்து காணப்­ப­டு­கி­றது. நேபோவின் உச்­சிக்கு அழைக்­கப்­பட்ட மோசேக்கு அவரால் அழைத்து வரப்­பட்ட மக்கள் சுதந்­த­ரி­க­ளாக வாழ்­வ­தற்­கான தேசங்­க­ளையும் நிலப்­ப­ரப்­பி­னையும் காண்­பித்­த­தாக வேதா­க­மத்தில் கூறு­வதைக் காண முடியும்.

மோசே­யினால் அழைத்து வரப்­பட்ட மக்கள் சுதந்­த­ரி­க­ளாக வாழக்­கூ­டிய நிலப்­ப­ரப்­பினைக் காட்­டிய தேவன் ஆபி­ரகாம், ஈசாக்கு, யாக்­கோபு ஆகி­யோ­ருக்கு வாக்­க­ளித்­த­படி இஸ்­ரவேல் ஜனத்­தா­ருக்­கான சுதந்­திர தேசத்தை காண்­பித்தேன் என்று மோசேக்கு கூறு­கிறார், அத்­துடன் மக்கள் அங்கு செல்­கின்ற போதிலும் உன்னால் அங்கு செல்ல முடி­யாது என்றும் மோசே­யிடம் கூறு­கின்றார்.

தேவனின் கட்­ட­ளைப்­படி ஒழு­கி­வரும் மோசே தேவனின் இறு­திக்­கட்­ட­ளையும் ஏற்­கிறார். அந்தச் சந்­தர்ப்­பத்தில் தனது ஊழி­யக்­கா­ர­னான யோசு­வாவை அழைத்து தேவனின் கட்­ட­ளையை விளக்கி, மோசே தனது மேலா­டை­யையும் அற்­புதக் கோலையும் அவ­ரிடம் ஒப்­ப­டைக்­கின்றார். இனியும் நமது மக்­களை நீயே வழி­ந­டத்­துவாய். இறைவன் அளித்­துள்ள தேசத்­துக்கு மக்­களை அழைத்துச் செல்வாய் என்று பணிக்­கவே, இது எப்­படி என்னால் சாத்­தி­ய­மாகும் என்று யோசுவா மோசே­யிடம் கேட்­கிறார்.

எனினும் தேவன் கட்­ட­ளை­யி­டுவார் அவ­ரது விருப்­பத்­தையும் எண்­ணங்­க­ளையும் நிறை­வேற்று என்று மோசே யோசு­வா­வுக்கு உறு­தி­யாகக் கூறினார். இதன் பின்னர் நேபோ மலைத் தொடரில் மோசேயின் இறு­திக்­கா­லமும் நிறை­வ­டை­கி­றது என்றும் இந்நாள் வரை மோசேயின் உடல் அடக்­கம்­பண்­ணப்­பட்ட கல்­லறை என்று எதுவும் கண்டு பிடிக்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.

மோசேயின் மேலா­டை­யையும் அவ­ரது அற்­பு­தக்­கோ­லையும், தாங்­கி­ய­வாறு நோபோ மலை­யி­லி­ருந்து இறங்கி வந்த யோசு­வாவை கண்ட மக்கள் மோசேயின் இறு­திக்­காலம் நிறை­வே­றி­விட்­டதை உணர்ந்­த­வர்களாய் அழுது புலம்­பினர். துக்கம் தாளாது துவண்டு போயினர். இன்­பத்­திலும் துன்­பத்­திலும் பசி­யிலும் பட்­டி­னி­யிலும் துணை­யாக நின்­றி­ருந்த மோசேயின் பிரிவு அந்த மக்­களை வெகு­வாகப் பாதித்­தது. எனினும் தேவனின் சித்தம் என்­ன­வென்றும் மோசேயின் விருப்பம் எது­வென்றும் மக்­க­ளுக்கு உணர்த்­து­வ­தற்கு யோசுவா கட­மைப்­பட்­டி­ருந்தார். இத­னை­ய­டுத்து மக்கள் யோசு­வாவின் வார்த்­தை­க­ளுக்கு செவி­ம­டுத்­தனர்.

இறை­வனின் தூதர் மோசேயின் யாத்­தி­ரையில் இறு­திக்­கட்டம் தான் இந்த நேபோ மலை­யாகும்.

பரி­சுத்த தள­மா­கவும் அதே­நேரம் சுற்­றுலாப் பய­ணி­களின் தள­மா­கவும் ஜோர்­தா­னிய அர­சினால் பாது­காக்­கப்­பட்டு வரு­கின்ற நேபோ மலை­யா­னது ஒலிவ மரங்­களால் சூழப்­பட்­டி­ருக்­கின்­றது. எங்கு பார்த்­தாலும் ஒலி­வ­மரம் நிறைந்து காணப்­ப­டு­கி­றது.

இங்கு மோசேயின் ஞாப­கார்த்­த­மாக நினை­வுக்கல் ஒன்று அமை­யப்­பெற்­றுள்­ளது. அதே­போன்று மிகவும் அழ­கான நினைவுத் தேவா­ல­யமும் உள்­ளது. மோசேயின் காலத்தில் அமைக்­கப்­பட்ட அடித்­த­ளங்கள் இன்றும் அங்கு பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன. பல ஆயிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு இடம் பெற்ற நிகழ்­வு­களை நூல் வடிவில் படிப்­ப­தற்கும் அவ்­வி­டங்­களில் நின்று அனு­ப­விப்­ப­தற்கும் வித்­தி­யா­சங்கள் இருக்­கின்­றன.

மோசேயின் இறு­திக்­கால வர­லா­றுகள் பாது­காக்­கப்­ப­டு­கின்ற இந்த புனித பூமிக்கு தினமும் உல்­லாசப் பய­ணி­களின் வரு­கை­யா­னது அமைந்­தி­ருக்­கி­றது. இங்கு வருகை தந்த பரி­சுத்த பாப்­ப­ரசர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்பர் அவ­ரது ஞாப­கார்த்­த­மாக ஒலி­வ­மரக் கன்று ஒன்­றையும் நாட்டி வைத்­துள்ளார். மோசேயின் காலப் பதி­வா­னது நேபோ மலையில் ஒவ்­வொரு விட­யங்­களும் மிகவும் அரு­மை­யாக பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தேவனின் தூதர் அதுவும் தேவ­னோடு உரை­யாடும் வல்­ல­மையைப் பெற்­றி­ருந்த தூதனின் வர­லாறும் கால­டியும் பதிந்­தி­ருந்த நேபோ மலையில் அதி­ச­யங்கள் அறிந்து, பார்த்து, அனு­ப­வித்து முடிய அந்­நாட்டின் நேரப்­படி பிற்­பகல் இரண்டு மணி­யா­கி­யி­ருந்­தது. இதன்­படி புனித பூமி­யான நேபோ­வி­லி­ருந்து வெளி­யாகி மதிய உண­வுக்­காக நிய­மிக்­கப்­பட்ட விடு­திக்குள் சங்­க­மித்தோம். அங்கு அறு­சு­வை­யோடு உணவு அயிட்­டங்கள் காத்­தி­ருந்­தன.

இவ்­வாறு அன்­றைய நாள் ஓடி­யது. இன்று நினைத்­தாலும் நேபோ மலையில் நின்று நிழலா­டு­வது போல் ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்­கி­றது. ஜோர்­தா­னுக்­கான உல்லாசப் பயணிகளாக அல்லது வேலை வாய்ப்புக்காக இல்லாவிட்டால் வேறு என்ன காரணங்களாலும் சரி அங்கு பயணித்தால் இத்தகைய வரலாற்றிடங்களையும் புனிதத் தலங்களின் வரலாறுகளையும் அறிவது அவசியமானது என்றேபடுகிறது.

ஜோர்தான் உல்லாசப் பயணத்துறை ஏற்பாடு செய்திருந்த வழிகாட்டியானவர் மோசேயின் வரலாறுகளை உள்ளது உள்ளவாறே விளக்கினார். தனக்கே உரிய பாணியில் அவரது விளக்கமான தனியான ஸ்டைலாகவும் அது இருந்தது. சரி எமது பயணத்தின் அடுத்த கட்ட சுவாரஸ்யத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

ஜே.ஜி.ஸ்டீபன்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-06#page-6

Link to comment
Share on other sites

பாறைகளின் நகரம்

 

ஆறாம் நூற்­றாண்டில் நபெத்­தி­யர்­களின் வாழ்­ வி­டங்­களும் வாழ்க்கை முறையும் பதி­வா­கி­யுள்ள ஜோர்­தானின் LOST CITY

அரபு இராஜ்­ஜி­யத்­துக்குள் அரச கலா­சார மற்றும் இறை­யம்­சங்­க­ளுடன் கூடி­ய­மைந்­த­து­மான வர­லாற்று சிறப்பைக் கொண்­டுள்ள ஜோர்தான் நாட்­டுக்குள் கால் பதித்த அனு­ப­வமும் அனு­ப­வித்து உணர்ந்த, கற்­றுக்­கொண்ட விட­யங்­களும் நினைத்­தாலே இனிப்­பவை.

இலங்­கை­யி­லி­ருந்து தெரிந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­களாய் ஜோர்­தானின் உல்­லா­சப்­ப­ய­ணத்­துறை அதி­கார சபையின் அழைப்­புக்­கி­ணங்க நாம் அங்கு சென்­றி­ருந்த பத்து நாட்­களின் சுற்­றுப்­ப­ய­ணத்தில் இரு தினங்கள் கடந்­தி­ருந்த போது அந்த நாட்டின் உல்­லாசப் பய­ணத்­துறை அதி­கார சபையின் தலைவர் அபிட் அல் ரஸாக் அர­பியாட் உட­னான சந்­திப்பும் கலந்­து­ரை­யா­டலும் ஏற்­பாடா­கி­யி­ருந்­தது. ஜோர்­தா­னிய உல்­லாசப் பய­ணத்­துறை அதி­கார சபையின் கட்­டடத்­தொ­கு­தியில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போது இலங்­கைக்­கான தூதுவர் அப்துல் லத்தீப் லாபிரூம் எம்­மோடு இணைந்­தி­ருந்தார். அத்­துடன் எம் ஒவ்­வொ­ரு­வ­ரையும் தூது­வரே அந்­நாட்டின் உல்­லாசப் பய­ணத்­துறை அதி­கார சபையின் தலை­வ­ருக்கு அறி­முகம் செய்தும் வைத்தார்.

அறி­மு­கத்தின் பின்னர் பேசிய தலைவர் முத­லா­வ­தாக எம் அனை­வ­ரையும் வர­வேற்­ற­துடன் ஜோர்­தா­னுக்கு விஜயம் செய்­தி­ருப்­ப­தை­யிட்டு மகிழ்ச்­சி­ய­டை­வ­தா­கவும் அதே­நேரம் நன்றி தெரி­விப்­ப­தா­கவும் கூறினார்.

பின்னர் ஜோர்தான் நாட்டு வர­லாற்று சிறப்­புக்­களை விளக்கிக் கூறிய அவர் தங்­க­ளது நாடு சுற்­றுலாப் பய­ணி­களின் சொர்க்­கா­புரி என்றும் வர்­ணித்துக் கூறினார். சுற்­றுலாப் பய­ணி­களின் வரு­கையின் அவ­சியம் பற்றி எடுத்­து­ரைத்த அவர் இரு­த­ரப்பு நன்­மைகள் குறித்து குறிப்­பி­டு­வ­தற்கும் மறக்­க­வில்லை.

அது­மாத்­தி­ர­மன்றி மக்­கா­வுக்­கான யாத்­தி­ரையை மேற்­கொள்ளும் இலங்கை முஸ்­லிம்கள் ஜோர்­தானின் வர­லாற்­றி­டங்­க­ளையும் புனிதத் தலங்­க­ளையும் தரி­சித்து அங்கிருந்து இஸ்ரேல் ஊடாக எரு­ச­லே­முக்கு செல்­வ­தற்­கான விசா வச­தி­களை ஏற்­ப­டுத்தித் தரு­வ­தா­கவும் அவர் கூறினார்,

இதன் பின்னர் தூதுவர் லாபீர் பேசு­கையில், ஜோர்­தா­னிய உல்­லா­சத்­துறை அதி­கார சபையின் தலை­வ­ருக்கு நன்றி தெரி­வித்­த­துடன் ஜோர்தான் நாட்டின் தூது­வ­ராக செயற்­ப­டு­வதால் அவ­ருக்­கி­ருக்கும் பொறுப்­புக்கள், கட­மை­களின் நிமித்தம் தான் ஆற்ற வேண்­டிய விட­யங்­க­ளையும் எடுத்­துக்­கூ­றினார். அது­மாத்­தி­ர­மின்றி ஜோர்தான் உல்­லாசப் பய­ணத்­ துறையில் தானும் ஒரு பங்­கா­ளி­யாக செயற்­ப­டு­வதைப் போன்று எடுத்­து­ரைத்­தி­ருந்தார்.

இதன் பின்னர் ஜோர்­தா­னுக்கான எமது சுற்­றுலாக் குழுவின் தலை­வ­ரும் நவ­மணி ஆசி­ரி­ய­ரு­மான எம்.என். அமீன் உரை­யாற்­றினார். இலங்­கை­யி­லி­ருந்து அழைப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் எமது கட­மை­களை எடுத்­து­ரைத்தார். கலந்­து­ரை­யா­டலின் முடிவில் தலை­வரின் விருப்­பப்­படி சக­லரும் குழு­வா­கவும் தனித்­த­னி­யா­கவும் புகைப்­படம் எடுத்துக் கொண்டோம். இதில் தூதுவர் லாபீரும் இணைந்து கொண்டார். இதே­வேளை இலங்­கை­யி­லி­ருந்து கொண்டு சென்ற அன்­ப­ளிப்­புகள் தலைவர் அபிட் அல் ரஸாக் அர­பி­யாட்­டுக்கு வழங்­கப்­பட்­டன. கலந்­து­ரை­யாடல் நிகழ்வு நிறை­வ­டை­வ­தற்கும் எமக்­கான மதிய உண­வுக்கும் நேரம்­பொ­ருந்தி வந்­தி­ருந்­தது. நாவினால் உண­ரப்­ப­டு­கின்­ற­தான அத்­துணை வகை உண­வு­க­ளையும் ருசித்­துப்­பார்த்­தா­யிற்று. மதிய உண­வுக்குப் பின்னர் மீண்டும் எமது அதி­சொகுசு வாக­னத்­துக்குள் புகுந்து கொண்டோம். அந்த வாகனம் வீதியில் பறந்து கொண்­டி­ருந்­தது.

இவ்­வா­றான எமது பய­ணத்தின் போது ஓரி­டத்தில் எமது வாகனம் நிறுத்­தப்­பட்­டது. ஏன் வாகனம் நிறுத்­தப்­பட்ட என்­பதை அறியும் நோக்கில் இறங்­கினால் எமது பயண வழி­காட்டி அழகு பொருள் குவிந்து கிடங்கும் பெரி­ய­தொரு விற்­பனை நிலை­யத்­துக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சென்று பார்த்­த­போது கொளுத்த உருவம் படைத்த ஒரு­வரும் ஒல்­லி­யான உடல்­வாகு கொண்ட ஒரு­வரும் கையில் கத்­த­ரிக்கோல் போன்ற ஆயுதம் ஒன்றை வைத்­துக்­கொண்டு “டிக்” “டிக்” என்று சத்தம் வரும் வகையில் வெட்­டிக்­கொண்­டி­ருந்­தனர்.

சற்று உற்றுப் பார்த்­த­போது அவர்கள் சிறு சிறு துண்­டு­க­ளாக வெட்டிக் கொண்­டி­ருந்த கற்கள் வெறும் கருங்­கல்ல என்­பதும் கிரைனெட் கற்­களைப் போன்றும் விலை­யுயர் கற்­களைப் போன்றும் காட்சி தந்­தது.

அவர்­க­ளது மேசையில் வெள்ளை விரிப்பு, சிறு கற்கள், பசை, கத்­த­ரிக்கோல், கம்­பித்­துண்­டுகள், சிறிய பலகைத் துண்­டுகள் போன்­றவை காணப்­பட்­டன. மெது­வாக அவர்­க­ளிடம் பேச்சுக் கொடுக்­கலாம் என்று வாயைத் திறந்தால் அவர்கள் அரபு மொழியில் பேசத் தொடங்­கினார். நிலை­மையை உணர்ந்து ஆங்­கில மொழியில் விப­ரித்­த­போது ஒல்­லிக்­குச்சி உடம்­புக்­காரர் எமக்கு விளக்­க­ம­ளித்தார்.

ஜோர்தான் நாட்டைப் பொறுத்­த­வரை உல்­லாசப் பய­ணத்­து­றையின் வரு­மானம் அந்­நாட்டு வரு­மா­னங்­களில் பிர­தா­ன­மா­ன­தாக காணப்­ப­டு­வ­தாகக் கூறினார். அது­மாத்­தி­ர­மன்றி அழ­கு­சா­தனப் பொருட்கள், அலங்­காரப் பொருட்கள் உற்­பத்தி மற்றும் அந்­நாட்டின் கல், மண் வளங்­களைக் கொண்டு விலை உயர்ந்த அழகுப் பொருட்­க­ளையும் சித்­திரக் கைவண்­ணங்­க­ளையும் உரு­வாக்­கு­வ­தாக கூறினார். அது­மாத்­தி­ர­மின்றி உல­க­ளா­விய ரீதி­யி­லி­ருந்து ஜோர்­தா­னுக்கு வரும் சுற்­றுலாப் பய­ணிகள் இவ் அழகுப் பொருட்­களை கொள்­வ­னவு செய்­வது குறித்து பெரு­மிதம் கூறினார். அவர் எம்­முடன் பேச்சுக் கொடுத்­த­வாறே முன்­ப­கு­தி­யி­லி­ருந்து அந்த விற்­பனை நிலை­யத்தின் கதவைத் திறந்து விட உள்ளே நுழைந்தோம். அங்கு சொர்க்­கமே தெரிந்­தது போலி­ருந்­தது. எங்கு பார்த்­தாலும் அழகு சாத­னங்கள், கண்­கவர் பொருட்கள் வடித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அங்­கி­ருந்து சில பொருட்­களைக் கொள்­வ­னவு செய்ய வேண்டும் போலி­ருந்­தது. அதுவும் நிறை­வே­றிற்று. அன்­றைய நாளும் ஓடி மறைந்­தா­யிற்று.

அடுத்­த­தாக எமது பய­ணத்தில் அமைந்­தி­ருந்­த­தான ஆறாம் நூற்­றாண்டு காலத்து வர­லாற்றைக்கொண்­ட­மைந்­துள்ள ஜோர்­தானின் ‘LOST CITY’ எனப்­ப­டு­கின்ற PETRA நக­ரத்­துக்கு நிகழ்ச்சி நிரல் தயார்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. உச்சி வெயில் நேரம் உச்­சந்­த­லைக்குள் பாய்ந்­தாலும் அது உறைந்­த­தா­கவே உண­ரப்­ப­ட­வில்லை என்­பது தான் ஆச்­ச­ரியம். அன்­றைய நிகழ்ச்சி நிரலின் பிர­காரம் சுமார் பத்து கிலோ­மீற்றர் நடை பய­ண­மாக அமைந்­தி­ருந்­தது.

தண்ணீர்ப் போத்­தல்­களை சுமந்­த­வாறு காலை 9.00 மணி­ய­ளவில் நாம் தங்­கி­யி­ருந்த பேட்ரா கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்­பட்­டி­ருந்தோம்.

LOST CITY OF JORDAN எனப்­ப­டு­கின்­ற­தான பேட்ரா நக­ர­மா­னது தலை நகர் அம்­மா­னி­லி­ருந்து சுமார் மூன்று மணி­நேர பயணத் தூரத்தில் அமைந்­துள்­ளது. இந்­ந­க­ர­மா­னது 264 சதுர கிலோ­மீற்றர் பரப்­ப­ளவைக்கொண்­ட­மைந்­துள்­ளது. ஜோர்தான் நாட்­டுக்குப் படை­யெ­டுக்கும் சர்­வ­தேச நாடு­களில் சுற்­றுலாப் பய­ணி­களில் சுமார் ஆறு இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் பேட்ரா நக­ரத்தை (LOST CITY) பார்­வை­யிட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

ஆறாம் நூற்­றாண்டு காலப்­ப­கு­தியில் இங்கு வாழ்ந்த மக்­களின் வர­லா­றுகள் வாழ்­வி­டங்கள், சித்­திர அலங்­கார வேலைப்­பா­டுகள் இங்கு இன்றும் மாறா­த­வை­யாக பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன. பாறைத் தொடர்­களின் பள்­ளத்­தாக்­கு­களும் பாறை­களால் ஆன மலைத்­தொ­டர்­களும் கண்­கொள்ளாக் காட்­சி­க­ளாக வரு­கின்­றதை மீண்டும் எண்­ணி­பார்க்கத் தோன்­று­கி­றது.

நாபெத்­தி­யர்கள் என்ற இனமே அன்­றைய கால கட்­டத்தில் வாழ்ந்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது. அவர்­களின் வாழ்­வி­டங்­க­ளாக கற்­கு­கை­களே காணப்­ப­டு­கின்­றன. பாறை­களைக் குடைத்து வீட­மைத்து பாது­காப்­பாக வாழ்ந்த வர­லா­று­களும் அதே­நேரம் அசாத்­தி­ய­மான பாறை­களில் வீட­மைத்­தி­ருப்­பதும் பதி­வா­கி­யுள்­ளன. அன்­றைய மன்­னர்­களின் வாழ்­வி­டங்கள், மறை­வி­டங்கள், உயர்த்­த­வர்­களின் வாழ்­வி­டங்கள் என்­ப­னவும் மாறா நிலையில் உள்­ளன.

பாறை­களின் மலைத்­தொ­ட­ரான இந்த LOST CITY யின் நுழை­வா­யிலில் அந்­நாட்டுப் பொலிஸார் கட­மையில் உள்­ளனர். இருப்­பினும் நக­ருக்குள் இருக்கும் பொலி­ஸாரைப் போன்று அவர்­க­ளது சீருடை அமைந்­தி­ருக்­க­வில்லை. மாறாக ஆறாம் நூற்­றாண்டு கால படை­யி­னரின் சீரு­டையைப் போன்­ற­மைத்து பொலிஸார் கட­மையில் நிறுத்­தப்­பட்­டுள்­ளனர். இந்த மலைத்­தொ­டரே ROCK CITY என்று அழைக்­கப்­ப­டு­கின்­றது. நீண்­ட­தூர நடை பய­ணத்தின் போது ஒவ்­வொரு இடத்­திலும் ஆச்­ச­ரி­யங்­களே நிறைத்­தி­ருக்­கின்­றன. இந்த நெடுந்தூரப்பய­ணத்தை கால் நடை­யாக மேற்­கொள்ள முடி­யா­த­வர்கள் குதிரை வண்­டி­யையோ அல்­லது ஒட்­ட­கத்­தையோ வாட­கைக்கு அமர்த்திக் கொள்ள முடியும். நூற்­றுக்­க­ணக்­கான ஒட்­ட­கங்கள், கழு­தைகள் இங்கு வாட­கைக்கு கிடைக்கப் பெறு­கின்­றன.

இதில் முக்­கி­ய­மான விடயம் ஒன்­றையும் கூற­வேண்டும். கற்­பா­றை­களின் மலைத்­தொ­டரின் நடை­ ப­ய­ணத்தில் தவ­றி­விட்டால் பர­லோகம் போய்ச்­சேர வேண்டும் என்­ப­தையும் மறந்­து­வி­டக்­கூ­டாது.

பாறைத் தொடரின் பள்­ளத்தில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த நாம் சுமார் இரண்டு மணி­ய­ளவில் BASIN RESTAURANT எனும் உணவு விடு­திக்குள் புகுந்தோம். அங்கு ஏற்­க­னவே எமக்­கான ஆயத்­தங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. வகை­வ­கை­யான உண­வு­களை ஒரு கைபார்த்து விட்டே அங்­கி­ருந்து கிளம்­பி­யி­ருந்தோம்.

மதிய உண­வுக்குப் பின்­னரே உச்­சி மலை நோக்கிப் பய­ணித்தோம். மாலை 4.00 மணி­ய­ளவில் மலையில் உச்­சியில் இருந்தோம். அங்­கி­ருந்து எங்கு பார்த்­தாலும் மலைத்­தொ­டர்­களே காட்­சி­ய­ளித்­தன. இது மன்­னர்­களின் வாழ்­வி­ட­மா­கவும், மறை­வி­ட­மா­கவும் காணப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது.

மலையின் உச்சம் தொட்ட நாம் சிறிது நேரம் அமர்ந்து மீண்டும் இறங்கத் தொடங்­கினோம். 6.00 மணி­ய­ளவில் அடி­வா­ரத்தை அடைந்த நாம் பய­ணித்த பாதையில் மீண்டும் ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நடை நடையாய் நடந்து இரவு 8.40 மணியளவில் ஹோட்டலை அடைந்திருந்தோம்.

இந்த வரலாற்றுக் கதைகள் கூறும் ஆறாம் நூற்றாண்டு காலத்தோரின் செயற்பாடுகள், நடவடிக்கைகள், விட்டுச் சென்ற விடயங்கள் பாதுகாக்கப்படவேண்டியவை என்று கூறப்படுகின்றது. பாரிய பாறைகளை செதுக்கி அரண்மனைகளாக அமைத்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கின்றது. உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் ஜோர்தான் நாட்டில் அமைந்துள்ள பேட்ரா நகரத்தில் அதி சொகுசு நிறைந்த ஹோட்டல்கள், கெஸ்ட் ஹவுஸ்கள் காணப்படுகின்றன.

பேட்ராவில் காணப்படுகின்ற 40க்கும் அதிகமான அதி சொகுசு ஹோட்டல்களில் ஒன்றான PETRA GUSET HOUSE இல் நாம் இரண்டு இரவுகளைக் கழித்திருந்தோம். வெள்ளைப் பாறைகளின் மலைத் தொடரிலேயே இந்த கெஸ்ட்ஹவுஸும் அமைந்திருந்தது. எமது அடுத்த பயணத்தில் கனவு நனவானது போன்றதொரு உள்ளார்ந்த உணர்வு தென்பட்டிருந்தது. அதுதான் இறை மகன் இயேசு கிறிஸ்து கால் பதித்த புனித பூமியில்.

ஜே.ஜி.ஸ்டீபன்

 

 அடுத்த வாரம் பார்ப்போம் 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-13#page-5

Page-17-9f6e5198fc20b9fb79ce41c39af3010d

Link to comment
Share on other sites

பெரிய வெள்ளியன்று ஜோர்தான் நதிக்கரைக்கு ஓர் அழைப்பு

 

ஜோர்தான் நதிக்­க­ரை­யா­னது  இஸ்­ரேலின் எல்­லையில் அமைந்­தி­ருக் கின்­றது. ஜோர்­தானும், இஸ்­ரேலும் நட்பு நாடு­க­ளாக இருந்து வரு­கின்­றன.  ஜோர்­தானும் இஸ்­ரேலும் வெவ்­வேறு நாடுகள் என்­ப­தற்கு ஜோர்தான் நதியே சாட்­சி­யாக விளங்­கு­கி­றது. இவ்­விரு நாடு­களின் எல்­லை­க­ளுக்­கான உடன்­ப டிக்­கையே ஜோர்தான் நதி  என்றும் கூறலாம். வெறும் 12 முதல் 15 அடி அகலம் கொண்ட ஜோர்தான் நதிக்கு மறு­க­ரையில் இஸ்ரேல் நாட் டி­னூ­டாக ஜோர்தான் நதிக்கு வருகை தந்தோர் நதியைக் கடந்து ஜோர்தான் மண்­ணிலோ அல்­லது ஜோர்­தா­னி­ லிருந்து நதியைக் கடந்து இஸ்ரேல் மண்­ணிலோ கால்­ப­திக்க முடி­யாது  

 

 

பரி­சுத்த வேதா­க­மத்­தில் வார்க்­கப்­பட்­டி­ருக்­கின்ற சரித்­திர சத்­தி­யங்கள் ஒவ்­வொரு கிறிஸ்­த­வ­ராலும் வாசித்தோ அல்­லது வாய்­மொ­ழி­யாக செவி­ம­டுத்தோ இருக்க வேண்டும். ‘ஒன்­று­மில்­லா­மை­யி­லி­ருந்து இறைவன் உல­கத்தை சிருஷ்­டித்தார்’ என்று பரி­சுத்த வேதா­க­மத்­தில் ஆரம்­பிக்கும் வாசகம் உலகில் வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் ஒவ்­வொரு கிறிஸ்­த­வனின் உள்­ளத்­திலும் இல்லத்திலும் ஆழ­மாக பதி­யப்­பட்­டா­யிற்று.

பரி­சுத்த வேதா­க­மத்தின் சத்­தி­யங்கள் உண­ரப்­ப­டு­கின்­றதைப் போன்று அது அனு­ப­விக்­கப்­ப­டு­கின்ற தரு­ணத்தில் முழுமை பெறு­கின்­றது என்­பதே மறு­த­லிக்க முடி­யாத பேருண்­மை­யாகும்.

அவ்­வாறு நானும் அந்த முழு­மையை அனு­ப­வித்து அடைந்தேன். அதற்­கான கிரு­பையை, அனுக்­கி­ர­கத்தை, ஆசீர்­வா­தத்தை வல்ல இறைவன் எனக்­க­ளித்­தி­ருந்தார்.

"உல­கெல்லாம் சென்று நற்­செய்­தியை பரப்­புங்கள்" என்­கி­றது பரி­சுத்த வேதா­கமம். அந்­த­வ­கையில் தேவன் என்னை எவ்­வாறு தேர்ந்­தெ­டுத்தார்? எவ்­வாறு என்னை ஆசீர்­வ­தித்தார் என்­பது இந்த கட்­டு­ரையின் முடிவில் உணர்த்­தப்­பட்­டி­ருக்கும்.

இறைவன் தன்னை நம்­பு­கி­ற­வனை சோதிப்பார் என்­பதும் ஆனால், அவனை கைவி­ட­மாட்டார் என்­பதும் வாய் மொழி­யாக கூறப்­ப­டு­கின்ற ஒரு­வித வாசகத் தொடர்தான். ஆனால், அது நிஜ­மா­னதை உணர்ந்தேன்.

ஜோர்­தா­னுக்­கான பத்­துநாள் சுற்­றுப்­ப­ய­ணத்தின் முடி­வுக்கு முதல் நாளில்தான் இறை­வனின் ஒரே பேரான இறை­மகன் இயே­சு­கி­றிஸ்து கால்­ப­தித்­த­தா­னதும் திரு­மு­ழுக்குப் பெற்­ற­து­மான ஜோர்தான் நதிக்­க­ரை­யு­ட­னான புனித பூமிக்கு செல்­வ­தற்­கான பாக்­கியம் கிட்­டி­யது. எனினும், இதற்கு முன்­ன­தாக எனக்கு நிகழ்ந்த சோதனை குறித்து கூறி­விட வேண்டும்.

எமது சுற்­றுப்­ப­ய­ண­மா­னது ஆரம்­பிக்­கப்­பட்ட முத­லா­வது நாளின் நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் முத­லா­வது நிகழ்­வாக சாக்­கடல் குளியல் (DEAD SEA BATH) அமை­யப்­பெற்­றி­ருந்­தது. அதன் முடிவில் அன்­றைய தினத்தின் இரண்­டா­வது நிகழ்­வா­கத்தான் இயே­சு­கி­றிஸ்­துவின் ஞானஸ்­நானம் அதா­வது திரு­மு­ழுக்குப் பெற்ற புனித பூமிக்­கான (JESUS BEBTISM SITE) விஜ­ய­மாக இருந்­தது. எனினும், சாக்­கடல் குளியல் என்­பது புளித்துப் போகாத விட­யமும் சந்­தர்ப்­பமும் ஆகி­விட்­டதால் நேரம் வெகு­வாக ஓடி­யி­ருந்­ததை நாம் சற்றும் அறிந்­தி­ருக்­க­வில்லை.

ஒரு­வாறு சாக்­க­டலில் இருந்து வெளி­யேறி எமது ஹோட்­ட­லுக்கு வந்து காலை உணவை முடித்­துக்­கொண்டு தயா­ரா­ன­போது எனக்கான சோதனை ஆரம்­பித்­தது.

எமது வழி­காட்­டி­யான மொஹம்மட் பசெல் என்­பவர் சிரித்த முகத்­து­டனே வந்தார். Good Morning Friends என்று கூறி­ய­வாறு நேரம் உங்­க­ளது இரண்­டா­வது நிகழ்வை ரத்துச் செய்­து­விட்­டது. அதா­வது, BEBTISM SITE விஜயம் ரத்து என்று திட்­ட­வட்­ட­மாக கூறி­விட்டார். ஏனெனில், நிக­ழ்ச்­சி­நி­ரலின் பிர­காரம் அடுத்த பய­ணத்­துக்­கான நேர­மாக அப்­போது அமைந்­தி­ருந்­தது.

எமது வழி­காட்­டியின் அந்தக் கூற்று எனக்கு அதி­க­ரித்த வலியை கொடுப்­பது போன்று உண­ர­லானேன். எனது கனவு கலைந்­து­விட்­டதே என்று என்னை நானே திட்­டியும் கொண்டேன். தேற்­றியும் கொண்டேன். மறு­பக்கம் ஏமாற்­றமும் அடைந்­தி­ருந்தேன் என்­ப­துதான் உண்மை.

மனதை இறுக்­க­மாக்­கினேன். அந்தத் தரு­ணங்­க­ளி­லி­ருந்து மீண்டேன். ஏனெனில், அடுத்த பயணம் மோஸேயின் மலைக்­கா­னது என்­ப­தால்தான். நான் அங்கு செல்­கை­யிலும் வாக­னத்­துக்குள் மிகவும் அமை­தி­யாக இருந்தேன். அடுத்த நாளில் ஜோர்­தா­னுக்­கான இலங்கைத் தூதுவர் லத்திப் லாபீரை சந்­திக்கும் சந்­தர்ப்பம் உரு­வா­னது. எமது அனு­ப­வங்­களை கேட்டு மகி­ழ்ந்த அவ­ரிடம் எனது நிலை­மையை உணர்த்­தினேன். ஜீஸஸ் பெப்­டிஸம் சைட் கென்சல் ஆகி­விட்­டதே. மாற்று வழி இருக்­கி­றதா என்று அவ­ரிடம் கேட்டேன். அதற்கு அவர் சற்று சிந்­தித்­த­வாறு எப்­ப­டி­யேனும் செல்­லலாம். கவ­லைப்­பட வேண்டாம் என்று கூறினார். சற்று ஆறு­த­லானேன்.

எனினும், அடுத்­த­டுத்த நாட்­களில் எமது பய­ணங்கள் அதி­க­ரித்தே காணப்­பட்­டி­ருந்­தன. நேரமும் சீக்­கி­ர­மாக ஓடிக்­கொண்­டி­ருந்­தது. இப்­ப­டி­யி­ருக்க அன்­றொரு புதன்­கி­ழமை நாளில் தூது­வரின் இல்­லத்தில் எமக்­கான இர­வு­ணவு ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. சுமார் ஐந்து முதல் ஆறு தினங்­க­ளுக்கு அப்பால் நம்­நாட்டு உணவு கிடைக்­க­வி­ருப்­பதை எண்­ணிக்­கொண்­டி­ருந்தோம்.

அன்­றைய தினம் இரவு நாம் அங்கு சென்று குளிர்­பானம் அருந்­திக்­கொண்­டி­ருக்­கையில் திட­காத்­தி­ர­மான ஒருவர் அங்கு வருகை தந்தார். அப்­போது தூதுவர் அவரை எமக்கு அறி­மு­கப்­ப­டுத்­தினார். அவர் பெயர் சுபைர் இப்­றாஹிம். ஐக்­கிய நாடுகள் சபையின் மத்­திய கிழக்கு மற்றும் வட ஆபி­ரிக்­கா­வுக்­கான பணியகத்தின் சிரேஷ்ட ­திட்ட அலு­வ­ல­ராக ஜோர்­தானின் தலை­ந­க­ரான அம்­மானை வதி­வி­ட­மாக கொண்­டுள்ளார்.

ஆனாலும் எனக்­கா­கவே இறைவன் அவரை அனுப்பி வைத்­தி­ருந்தார் என்­பதை அப்­போது நான் சற்றும் உணர்ந்­தி­ருக்­க­வில்லை. இரவுணவை உண்­ட­வாறு சுவா­ரஸ்­ய­மான கதை­களை கூறிக்­கொண்­டி­ருக்­கையில் தூதுவர் லாபிர் என்­னைப்­பற்றி சுபைர் இப்­றா­ஹி­மிடம் கூற­லானார். அது­மாத்­தி­ர­மின்றி ஜோர்தான் சுற்­றுப்­ப­ய­ணத்­தில் ஜீஸஸ் பெப்­டிஸம் சைட் விஜ­யத்தை கூற மறக்­க­வில்லை. அந்தக் கவ­லையை அவர் என்­னிலும் கண்­டி­ருக்­கக்­கூடும். தூதுவர் இவ்­வாறு கூறிய அடுத்த கணத்தில் பெப்­டிஸம் சைட்­டுக்கு நாம் செல்வோம். நான் விடு­மு­றை­யில்தான் இருப்பேன். நான் அழைத்துச் செல்­கிறேன் என்று அவர் உறு­தி­ப­டக்­கூ­றி­யதும் என்னால் அதனை உட­ன­டி­யாக ஜீர­ணிக்க முடி­யா­தி­ருந்­தது. சுபைர் இப்­றாஹிம் மீண்டும் அதனை என்­னிடம் கூறினார். அப்­போ­துதான் எனது நினை­வுக்கு ஒரு விடயம் வந்து நின்­றது.

எப்­ப­டி­யா­வது பெப்­டிஸம் சைட்­டுக்கு செல்வோம் என்றும் முயற்சி செய்வோம் என்றும் தூதுவர் லாபிர் இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் கூறி­யது ஐ.நா. அலு­வலர் சுபைர் இப்­றாஹிம் ஊடாக நிறை­வே­றப்­போ­வ­தாக உணர்ந்தேன். அந்தக் கணமே இறை­வ­னுக்கு நன்றி கூறினேன். சந்­தோஷ மிகு­தியால் அநேக தட­வை­கள் தூதுவர் லாபி­ருக்கும் ஐ.நா. அலு­வலர் சுபைர் இப்­றா­ஹி­முக்கும் எனது நன்­றி­களைத் தெரி­வித்தேன். மறுநாள் பெரிய வியாழன் தின­மாக இருந்­தது. அன்­றைய நாள் பாஸ்கா காலத்தின் முக்­கி­யநாள். அன்று மாலை வேளையில் முகப்­புத்­த­கத்தில் ஒரு பதி­விட்­டி­ருந்தேன். “நாளை பெரிய வெள்ளி, நான் இயே­சு­கி­றிஸ்து ஞானஸ்­நானம் பெற்ற ஜோர்தான் நதிக்­க­ரைக்குச் செல்­கிறேன். உங்கள் அனை­வ­ருக்­கா­கவும், நமது நாட்­டுக்­கா­கவும் மன்­றா­டுவேன்” என்று கூறி­யி­ருந்தேன். ஏனெனில், பரி­சுத்த வேதா­க­மத்தின் புதிய ஏற்­பாட்­டில் கூறப்­பட்­டி­ருக்கும் இயே­சு­கி­றிஸ்­துவின் ஞானஸ்­நானம் பெற்ற ஜோர்தான் நதிக்­கரை பற்றி வாசித்­தி­ருக்கும் நான் அந்த நதிக்­க­ரைக்கே செல்லப் போவ­தை­யிட்டு இருப்­புக்­கொள்ள முடி­யா­தி­ருந்­தது.

மறுநாள் பெரிய வெள்ளி. அந்த பெரிய வெள்ளி தினத்­தன்று ஜோர்தான் நதிக்­கரை நோக்கி பய­ணித்தோம். ஐக்­கிய நாடுகள் சபையின் மேற்­படி நிகழ்ச்­சித்­திட்ட சிரேஷ்ட அலு­வலர் சுபைர் இப்­றாஹிம் தான் உறு­தி­ய­ளித்­த­வாறு அவ­ரது பாரியார் சகிதம் எம்மை அழைத்துச் செல்­வ­தற்கு வருகை தந்­தி­ருந்தார். எமது குழுவில் இருந்த பத்து பேரில் ஜீஸஸ் பெப்­டிஸம் சைட்­டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்­ணமும் நோக்­கமும் எனக்கே அதி­க­ரித்­தி­ருந்­தது. ஆகையால் அன்­றைய வெள்­ளிக்­கி­ழமை நிகழ்ச்சி நிர­லின்­படி ஏனையோர் சென்­றி­ருக்க நான் சார்ந்த மூவரும் மற்றும் சுபைர் இப்­றா­ஹிமும் அவ­ரது பாரியார் என ஐவ­ராக ஜீஸஸ் பெப்­டிஸம் சைட்­டுக்கு சென்றோம். நீண்ட தூர­மாக அந்தப் பயணம் அமைந்­தி­ருந்­தது.

இறைவன் சோதிப்பார். ஆனால், கைவி­ட­மாட்டார் என்ற மொழி நடை­யா­னது அந்தச் சந்­தர்ப்­பத்தில் உயிர் பெற்­றி­ருந்­ததை நான் உணர்ந்தேன். இறை­வனின் நிறை­வான ஆசீர்­வாதம் கிட்­டி­ய­தாக உணர்ந்தேன். என்­னை­ய­றி­யாது அலு­வலர் சுபைர் இப்­றா­ஹி­முக்கு நன்றி தெரி­வித்தேன். அவர் சிரித்­துக்­கொண்டே ஆமோ­தித்தார்.

எமது வாகனம் புனித பூமியை நெருங்­கி­யது. முன்­னைய காலத்து தேவா­ல­யங்கள் தூரத்தே அங்­கு­மிங்­குமாக தென்­பட்­டன. சில நிமி­டங்­களில் (Holy Land) புனித பூமிக்குள் கால்­ப­தித்தோம். மயிர் கூச்­செ­ரிந்­தாற்போல் ஓர் உணர்வு தென்­பட்­டது. எமக்­கான அனு­ம­திச்­சீட்­டுக்­களை ஐ.நா. அலு­வ­லரே பெற்றார்.

ஜோர்தான் நதிக்­க­ரைக்கு திரு­மு­ழுக்குப் பெறு­வ­தற்­காக வரு­கை­தந்த இறை­ம­கனாம் இயே­சு­கி­றிஸ்து மூன்று தினங்­களே அங்கு வாசம் செய்­தி­ருந்தார் என்று ஜீஸஸ் பெப்­டிஸம் சைட் வழி­காட்டி கூறினார்.

‘‘இஸ்­ராயேல் ஜனங்­களே மனந்­தி­ரும்­புங்கள்’’ என்று அன்று போதித்­துக்­கொண்­டி­ருந்த புனித திரு­மு­ழுக்கு அரு­ளப்பர் அன்­றைய காலத்தின் தீர்க்­க­த­ரி­சி­யாக இருந்தார். புலித்­தோலை உட­லில் தரித்து கையில் கோலொன்­றுடன் இறை வார்த்தை கூறி மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்த திரு­மு­ழுக்கு அரு­ளப்­பரைப் பார்த்த அன்­றைய ஜனங்கள் இவரே ‘மெஷியா’ என்று நம்­பினர். எனினும், இறை­வனால் அறி­விக்­கப்­பட்ட மெஷியா (மெஷியா என்றால் மீட்பர் என்­பது பொருள்) நான் அல்ல.

எனக்குப் பின்னால் ஒருவர் வர­வி­ருக்­கிறார். அவரே இவ்­வு­ல­கத்தின் மெஷியா. அவரே மீட்பர். அவ­ரது பாத­ணி­களை தொடு­வ­தற்கும் கூட நான் தகு­தி­யற்­றவன் என்று கூறி இறை­மகன் இயே­சு­கி­றிஸ்­துவை மக்­க­ளுக்கு அறி­வித்து வந்தார்.

இயே­சு­கி­றிஸ்­து­வுக்கு முன்­ன­தாக வந்த இறை­வாக்­கி­ன­ராக திரு­மு­ழுக்கு அரு­ளப்பர் அறி­யப்­ப­டு­கிறார். அவ­ரது நினை­வா­லயம் இன்றும் ஜோர்தான் நதிக்­கரை வளா­கத்தில் கம்­பீ­ர­மாக காட்­சி­ய­ளிக்­கின்­றது.

இயே­சு­கி­றிஸ்து திரு­மு­ழுக்கு அரு­ளப்­ப­ரிடம் ஞானஸ்­நானம் பெறு­வ­தற்கு ஜோர்தான் நதிக்­க­ரைக்கு வருகை தந்­த­போது திரு­மு­ழுக்கு அரு­ளப்பர் ஒரு­கணம் திகைத்து நிற்­பதாக கூறப்­ப­டு­கி­றது. எனினும், இயே­சு­கி­றிஸ்து அவ­ரிடம் திரு­மு­ழுக்கு பெறு­கிறார்.

இற்­றைக்கு இரண்­டா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற சத்­தி­யத்­து­ட­னான உறை­விடம் பாது­காக்­கப்­பட்டு வரு­கி­றது. இயே­சு­கி­றிஸ்­துவின் திருப்­பா­தங்கள் பதித்த மண், அவ­ரது உடல் நனைந்த நதி அனைத்தும் புனி­த­மாக போற்­றப்­ப­டு­கி­ன்றன.

ஜோர்தான் நதிக்­க­ரை­யா­னது இஸ்­ரேலின் எல்­லையில் அமைந்­தி­ருக்­கின்­றது. ஜோர்­தானும், இஸ்­ரேலும் நட்பு நாடு­க­ளாக இருந்து வரு­கின்­றன.

ஜோர்­தானும் இஸ்­ரேலும் வெவ்­வேறு நாடுகள் என்­ப­தற்கு ஜோர்தான் நதியே சாட்­சி­யாக விளங்­கு­கி­றது. இவ்­விரு நாடு­களின் எல்­லை­க­ளுக்­கான உடன்­ப­டிக்­கையே ஜோர்தான் நதி என்றும் கூறலாம்.

வெறும் 12 முதல் 15 அடி அகலம் கொண்ட ஜோர்தான் நதிக்கு மறு­க­ரையில் இஸ்ரேல் நாட்­டி­னூ­டாக ஜோர்தான் நதிக்கு வருகை தந்தோர் நதியைக் கடந்து ஜோர்தான் மண்­ணிலோ அல்­லது ஜோர்­தா­னி­லி­ருந்து நதியைக் கடந்து இஸ்ரேல் மண்­ணிலோ கால்­ப­திக்க முடி­யாது.

அங்கு எந்­த­வி­த­மான பாது­காப்பு வேலி­களோ அரண்­களோ காணப்­ப­ட­வில்லை. தேவனால் ஆசீர்­வ­திக்­கப்­பட்ட பரந்த பூமி­யா­னது பின்­னாட்­களில் பல தேசங்­க­ளாக பிள­வு­பட்டு விட்­டது. இஸ்­ரே­லையும் ஜோர்­தா­னையும் பிரித்து நிற்கும் ஜோர்தான் நதியின் மறு­க­ரையில் இஸ்ரேல் பக்­க­மாக நின்­ற­வர்­களைப் பார்த்து ஹாய் கூற அவர்­களும் அவ்­வாறே கூறி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தத் தருணத்தில் இயேசுகிறிஸ்து திருமுழுக்குப் பெற்றதான அந்த நதியில் இறங்கிய நான் எனது வலது கரத்தில் நீரை அள்ளி தலையில் ஊற்றிக்கொண்டபோது பரவசமாக இருந்ததை உணரக்கூடியதாக இருந்தது. வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாகவும் இறைவனின் ஆசீர்வாதமாகவும் அன்றைய நாள் எனக்கு அமைந்திருந்தது. ஏனெனில், இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்தார் என்பது நிரூபணமாகிவிட்டது. உலகெல்லாம் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்ற வாசகம் உயிருள்ளது என்பதும் இதனூடாக நிரூபணமாகியுள்ளது.

பரிசுத்த வேதாகமத்தில் கூறியுள்ளதை உணர்வதற்கும் அனுபவிப்பதற்கும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆவல் கொண்டிருப்பது உண்மைதான். இன்னுமின்னுமாக அற்புதங்கள், அதிசயங்கள் நிறைந்த சத்தியங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் அனுபவிக்க இறை அனுக்கிரகத்தையும் வேண்டுவோம்.

ஜோர்தானுக்கான விஜயங்களை மேற்கொள்வோர் குறிப்பாக, கிறிஸ்தவர்கள் (JESUS BEBTISM SITE) ஜீஸஸ் பெப்டிஸம் சைட்டை மறக்காதிருப்பது அவசியமாகும். ஏனெனில், அதுதான் அவர்களது ஆசீர்வாதம். ஆமென்.

ஜே.ஜி.ஸ்டீபன்

 

(தொடரும்...)

Page-19-8433e3e4fdc4a75195da2f3fa3edd2e6

Link to comment
Share on other sites

Page-19-b35ac759e8596fd7ac94e01bb1208a87

 

பாலைவனத்து சவாரி

 

ஜோர்தானுக்கு பயணங்களை மேற்கொள்வோர் அல்லது தொழிலுக்காக செல்வோர் அங்குள்ள மதத்தலங்களை தரிசிப்பது இன்றிய மையாததாகும். இதன் மூலம் ஜோர் தானின் வரலாற்று புகழிடங்களை அறிந்து கொள்ளமுடியும்

சமய, சமூக, கலா­சார, பண்­டைக்­கால நாக­ரி­கங்கள் என்ற வகை­யி­ல­மைந்­த­தான ஜோர்­தானின் வர­லாற்றுப் புக­ழி­டங்கள், சமயத் திருத்­த­லங்கள், புனித பூமிகள் என வரி­சைப்­பட்டு செல்­கின்ற அரிய பிர­தே­சங்­க­ளுக்­கான எமது பய­ணத்தின் நிகழ்ச்சி நிரல் இறு­திக்­கட்­டத்­துக்கு வந்­தி­ருந்­தது.

நாம் இலங்கை திரும்பும் சனிக்­கி­ழமை நாளதில் காலை 9.00 மணிக்கு நாம் தங்­கி­யி­ருந்த ஆறு நட்­சத்­திர விடு­தியில் இருந்து விடை­பெற்றோம்.

அன்­றைய தினம் காலை 6.00 மணிக்கு நித்­தி­ரை­யி­லி­ருந்து எழுந்­தா­யிற்று. அந்த நேர­மா­னது இலங்­கை நேரப்­படி காலை 8.30 ஆகும்.

ஒன்­பது நாட்­களின் பின்னர் தாய்­நாடு திரும்பப் போவது ஆனந்­த­மாக இருந்த அதே­நேரம், முதல் நாள் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் காத்­தி­ருந்­தது முதலாவது சுற்­றுலாப் பய­ணத்தில் தொட்­டுச்­சென்ற அனுபவத்தை அனைத்து விட­யங்­களும் ஒன்­றன்பின் ஒன்­றாக கண் முன்னே வந்து சென்­று­கொண்­டி­ருந்­தன.

சாக்­கடல் குளியல், மோசேயின் மலை, பேற்ரா நக­ரத்தின் பழம்­பெரும் இஸ்­லா­மிய திருத்­த­லங்கள், பேட்ரா கெஸ்ட் ஹவுஸ், அங்கு கிடைத்த அறு­சு­வை உணவு வகைகள் நிழ­லா­டின.

அது­மாத்­தி­ர­மின்றி பாலை­வ­னத்தில் ஜீப் சவாரி, சூரிய அஸ்­த­மனக் காட்­சி­யின்­போது எங்கு பார்த்­தாலும் செம்­மஞ்சள் ஒளிக்­கீற்று பர­விக்­கி­டந்த அழகு ஆகி­ய­வற்­றுடன் பாறை­களின் நக­ரத்­துக்­கான பயணம், கற்­கு­கைகள், கற்­பா­றை­களை செதுக்­கிய கலை நயங்கள், ஒட்­டகச் சவாரி அதன் பின்னர் சுடுநீர் நீர்­வீழ்ச்­சியில் குளியல், செங்­கடல் குளியல் அனைத்தும் முடிய ஜோர்­தானின் தலை­நகர் அம்­மானில் அமைந்­துள்ள ஆறு நட்­சத்­திர விடு­தி­யான ரொட்­டானா ஹோட்­டலை அடைந்து வரை சுவையானதாக இருந்தது.

இப்­போது இந்த ஹோட்­டலின் 26ஆவது மாடியில் இருந்து கொண்­டுதான் இதனை நினை­வு­ப­டுத்திப் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்றேன்.

இத­னை­ய­டுத்து ஜோர்­தா­னுக்­கான இலங்கைத் தூதுவர் லத்தீப் லாபிரின் வீட்டில் இராப்­போ­ஷனம், நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போல் இறை மகன் இயேசு கிறிஸ்து கால் பதித்து ஞானஸ்­நானம் பெற்­றுக்­கொண்ட ஜோர்தான் நதிக்கான பயணம், அன்று இரவு ஐ.நா. அலு­வலர் இப்­ரா­ஹிமின் வீட்டில் இடம்­பெற்ற தேநீர் விருந்­து­ப­சாரம் மற்றும் இரண்டு நூல்கள் தூது­வ­ருக்கும் மற்றும் ஐ.நா. அலு­வ­ல­ருக்கும் வழங்­கப்­பட்­டமை ஆகிய அனைத்தும் நிழ­லாடி மறைந்து கொண்­டி­ருந்­தன.

நாம் அனு­ப­வித்த மற்­று­மொரு இடம்தான் ஜோர்­தானின் அக்­கபா நகரில் உள்­ள­தான Hot Spring சுடுநீர் நீர்­வீழ்ச்­சி­யாகும்.

இங்கு நாம் ஒரு நாள் இரவைக் கழிப்­ப­தற்­காக ஏற்­பா­டா­கி­யி­ருந்த ஹோட்­டலின் பெயரும் Hot Spring Hotel தான். ஜோர்­தானில் எங்கு திரும்பிப் பார்த்­தாலும் வெட்ட வெளி­யா­கவும், பாலை­வ­ன­மா­கவும் காட்சி தரு­கையில், சுடுநீர் நீர்­வீழ்ச்சி அமைந்­துள்ள பிர­தே­ச­மா­னது ஒரு பள்­ளத்­தாக்கில் அமை­யப்­பெற்­றுள்­ளது.

இங்கு மரம், செடி, கொடிகள், அரு­விகள் என செழிப்­பான பிர­தே­ச­மாகக் காட்சி தந்­தது.

அதே­போன்று, தேவனின் சித்­தத்தால் மோசேயின் கோல் கொண்டு இரண்­டாக பிளக்­கப்­பட்­ட­தான செங்­கடல் குளியல் சிறப்­பு­மிக்­க­தாகும். ஜில்­லென சிறி­தான அலை­யுடன் கூடிய செங்­க­டலில் கால் பதிந்து நனைந்­ததும் பாக்­கி­யம்தான்.

அது­மாத்­தி­ரமா, நான் மேலே குறிப்­பிட்­டது போன்று பாலை­வ­னத்­தி­லொரு ஜீப் சவாரி வித்­தி­யா­ச­மான அனு­ப­வத்தை தந்­தி­ருந்­தது.

கட்­டணம் செலுத்தி அமர்த்­தப்­பட்­டி­ருந்த மூன்று ஜீப் வண்­டிகள் எமக்­காக தயார் நிலையில் இருக்க, முகத்தை மூடிக்­கட்­டி­ய­வாறு ஜீப்­களில் ஏறினோம். பாலை­வன மண­லுக்குள் அசைந்து ஆடி நகர்ந்து ஜீப் வண்டி சிறிது நேரத்தில் கடும் வேக­மாக செல்லத் தொடங்­கி­யது.

எங்கு பார்த்­தாலும் மணலும், மணல் மேடு­களும் தென்­பட்­டன.

பாறை­க­ளா­லான குன்­றுகள் கம்­பீ­ர­மாகக் காட்­சி­ய­ளித்­தன. நெடிய தூரத்தை பாலை­வ­னத்­துக்குள் பய­ணித்­ததன் பின்னர் ஓரி­டத்தில் எமது ஜீப் வண்­டிகள் தரித்து நின்­றன.

நாற்­தி­சை­க­ளிலும் வான­ளா­வ உயர்ந்து நின்ற கற்­பா­றை­களால் ஆன மலைத் தொடரின் அடி­வா­ரத்தில் நின்­றி­ருந்தோம். அது­வரை அமை­தி­யாக இருந்து எமக்கு அச்ச உணர்வு ஒன்றை ஊட்­டிய எமது வழி­காட்டி மொஹமட் பஷெல் எமது நிலை­மையை புரிந்­து­கொண்டு கூடா­ரத்தால் அமை­யப்­பெற்­ற­தான தேநீர் கடை­யொன்­றுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சுவை­யான தேநீர் கிடைத்­தது.

தேநீ­ருக்­கான நேரம் கடந்­ததும் மீண்டும் ஜீப்பில் ஏறினோம். மீண்டும் பாலை வனத்­துக்குள் ஜீப் பறந்து கொண்­டி­ருந்­தது. மதிய உண­வுக்­கான ஹோட்­டலை அடைந்தோம். பகல் உணவு பிர­மா­த­மாக இருந்­தது. அன்­றைய தினம் சூரிய அஸ்­த­ம­னத்தைப் பார்­வை­யிடும் நாளாக எமக்கு அமைந்­தி­ருந்­தது.

மதிய உணவை முடித்­துக்­கொண்டு நாம் அந்த ஹோட்­ட­லி­லேயே நேரத்தைக் கழிக்க வேண்­டி­யி­ருந்­தது. ஏனெனில், மாலை 6.30க்குத்தான் அங்கு சூரிய அஸ்­த­மனம் இடம்­பெறும். சூரியன் அஸ்­த­மிக்கும் அந்த தரு­ணத்தில் நாம் நின்­று­கொண்­டி­ருந்த பாலை­வ­னத்து பாறை மலைகள் செந்­நிற ஒளிக்­கீற்­றுக்­களால் ஜொலித்­துக்­கொண்­டி­ருந்­தன.

இதற்கு முன்­ன­தாக மதிய போஷ­னத்தின் பின்­ன­ரான நேரத்தில் எஞ்­சி­யி­ருந்த நேரத்தில் எஞ்­சி­யி­ருந்த நேரத்தை கழிக்­க­வென தூதுவர் லாபிரின் எண்­ணப்­படி விநோத நிகழ்ச்­சி­யொன்றை செய்­வ­தற்கு ஆயத்­த­மானோம். பாடல்கள் பாடப்­பட்­டன. அனு­ப­வங்கள் பகி­ரப்­பட்­டன. பகிடிக் கதைகள் கூறப்­பட்­டன.

இந்த நேரத்­தில்தான் எம்­மோடு இணைந்­தி­ருந்த பிர­பல அறி­விப்­பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அடிக்­கடி ‘பாலை­வ­னத்தில் ஒரு ரோஜா மலர்ந்­தது’ என்ற பாடலை முணு­மு­ணுத்­துக்­கொண்­டி­ருந்தார். ஆனால் அவர் அந்தப் பாடலை முழு­மை­யாக பாடவே இல்லை. எதற்­காக பாடினார், ஏன் அதனைத் தொட­ர­வில்லை என்­ப­தெல்லாம் அவ­ருக்கே வெளிச்சம் இதனை சிரேஷ்ட ஊடகர் யாக்கூப்பும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

இவ்­வாறு ஜோர்­தானின் ஒன்­பது நாட்­களைக் கடத்­திய நாம் அன்­றொரு சனிக்­கி­ழமை நாளில் காலை 9 மணிக்கு அம்மான் ரொட்­டானா ஹோட்­டலில் இருந்து வெளி­யே­றினோம். ஹோட்டல் ஊழி­யர்­க­ளிடம் விடை­பெற்றோம். அவர்­க­ளோடு புகைப்­ப­டங்­களும் எடுத்­துக்­கொண்டோம்.

நாம் அம்மான் விமான நிலை­யத்தை நோக்கி பய­ணித்­த­போது, எம்மை தொடர்ந்து தூதுவர் லாபீரும் இணைந்­தி­ருந்தார். அத்­துடன், அவ­ரது அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்­களும் இணைந்திருந்­தனர்.

அம்மான் விமான நிலை­யத்தில் எம்மை வழி­ய­னுப்­பிய தூதுவர் ஏதோ சாதித்­து­விட்­டதைப் போன்று மலர்ந்த முகத்துடன் காணப்பட்டார். பின்னர் எம்மிடமிருந்து விடைபெற்றார்.

இதன்பின்னர் நாம் கட்டார் நாட்டுக்கு சொந்தமான விமானத்துக்காக அம்மான் விமான நிலையத்தில் காத்திருந்தோம். அதன் பின்னர் கட்டார் வந்து அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்தோம்.

ஜோர்தானுக்கு பயணங்களை மேற்கொள்வோர் அல்லது தொழிலுக்காக செல்வோர் அங்குள்ள மதத்தலங்களை தரிசிப்பது இன்றியமையாததாகும். இதன் மூலம் ஜோர்தானின் வரலாற்று புகழிடங்களை அறிந்து கொள்ளமுடியும் அங்குள்ள வரலாற்று புகழிடங்கள், முன்னோரின் வாழ்விடங்களை பார்ப்பது அவசியமாகும் எனக் கூறிக்கொள்கிறேன்.

ஜே.ஜி.ஸ்டீபன்

முற்றும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.