Jump to content

கட்சிகளுக்கு பலப்பரீட்சையாகும் மே தினம்


Recommended Posts

கட்சிகளுக்கு பலப்பரீட்சையாகும் மே தினம்

 

மக்கள் செல்­வாக்கு யாருக்கு உள்­ளது என்­பதை நிரூ­பிக்­கப்­போகும் போராக நாளை மறு­தினம் கொண்­டா­டப்­படும் மேதினக் கொண்­டாட்டம் இருக்­கப்­போ­கி­றது. கட்­சிகள் ஒவ்­வொன்றும் தமது மக்கள் செல்­வாக்கை நிரூ­பித்துக் காட்ட வேண்­டிய ஒரு கால­கட்­டத்தின் கொண்­டாட்­ட­மாக இம்­முறை மேதினக் கொண்­டாட்­டங்கள் அமை­யப் ­போ­ கி­ன்றன என்­ப­தற்கு அடை­யா­ள­மா­கவே இம்­மே­தினக் கொண்­டாட்­டங்கள் களை கட்டி நிற்­கின்­றன.

மேல் மாகா­ணத்தில் தேசியக் கட்­சி­களும் மலை­ய­கத்தில் அப்­பி­ரதே­சத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களும் வட­கி­ழக்கில் தமிழ்த்­ தே­சியக் கூட்­ட­மைப்பும் அதற்கு எதிர்நிலையில் நிற்கும் கட்­சி­களும் அமைப்­புக்­களும் தமது மக்கள் செல்­வாக்கை ஊர்­ஜி­தப்­ப­டுத்தும் வகை­யிலும் மிகத் தீவி­ர­மான ஆயத்­தங்­களை மேற்­கொண்டு வரு­வதை நாளாந்தம் வெளி­வரும் செய்­தி­க­ளி­லி­ருந்து தெரிந்து கொண்­டி­ருக்­கிறோம்.

எதிர்வரும் மாகாண சபைத்­தேர்தல் மற்றும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களில் ஆட்­சியை தாம் கைப்­பற்­றி­விட வேண்­டு­மென்ற இலக்கை அடை­வ­தற்­காக நடத்தும் போட்டிப் பரீட்­சை­யா­கவே இதை கட்­சி­களும் கட்சி ஆத­ர­வா­ளர்­களும் கரு­து­வது போன்ற ஒரு பிர­மை­யா­கவே இம்­முறை மேதினக் கொண்­டாட்­டங்கள் அமை­ய­வி­ருக்­கி­ன்றன.

2015 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் கூட்­டுச்­சேர்ந்து நல்­லாட்­சியை அமைத்துக் கொண்­டாலும் தனித்­து­வ­மான தங்கள் போக்­கு­க­ளையும் கொள்­கை­க­ளையும் விட்­டுக்­கொ­டுக்க விரும்­பாத கூட்­டாட்­சி­யா­கவே இவ்­வாட்சி நடந்­தேறிக் கொண்­டி­ருக்­கின்­றது.

இரு கட்­சி­களின் போக்­கு­க­ளி-­லு­மி­ருந்து இதனை தெளி­வா­கவே தெரிந்­து­கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கி­றது.

ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது சுதந்­தி­ரத்­திற்கு முன் தோற்­று­விக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்து தனது முத­லா­ளித்­துவம் சார்­பான கொள்­கை­களை விட்டுக் கொடுக்­காமல், முத­லா­ளித்­துவப் பொரு­ளா­தார முறை­மை­க­ளையும் ஆட்சி முறை­மை­க­ளையும் அது சார்­பான நாடு­க­ளையும் பின்­பற்­றியே தனது கொள்­கை­க­ளையும் போக்­கு­க­ளையும் வளர்த்து வந்­தி­ருக்­கி­றது என்­பது இலங்­கையின் கட்­சி­முறை போக்­கிலும் ஆட்சி வகை­யிலும் அறிந்து கொண்ட விட­ய­மாகும்.

இலங்­கையின் கட்­சி­முறை வளர்ச்­சியில் இட­து­சாரி தத்­து­வங்­களை உள்­வாங்கிக் கொண்ட இலங்கை சம­ச­மாஜக் கட்சி, கம்­யூ­னி­ஸ்ட் ­கட்சி, பி.எல்.பி. கட்சி ஆகி­யன முன்னே தோன்­றிய கட்­சி­க­ளாக இருந்த போதிலும் சோல்­பரி அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­பட்டு இலங்­கைக்கு டொமி­னியன் அந்­தஸ்து வழங்­கப்­பட்டு, முத­லா­வது பாரா­ளு­மன்ற பொதுத் தேர்தல் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி முதல் செப்­டெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடத்­தப்­பட்­டது. இத்­தேர்தல் முடி­வு­களின் நிமித்தம் 42 ஆச­னங்­களைப் பெற்றுக் கொண்ட ஐ.தே. கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் என்ற வகையில் டி.எஸ். சேன­நா­யக்­காவை பிர­த­ம­ராகக் கொண்ட முத­லா­வது அர­சாங்கம் நிறு­வப்­பட்­டது.

இலங்­கையின் முத­லா­வது பிர­த­ம­ராக முடி­சூடிக் கொண்ட டி.எஸ். சேன­நா­யக்கா நடை, உடை, பாவ­னையில் முத­லா­ளித்­துவ பாவனை கொண்­ட­வ­ரா­கவே காணப்­பட்டார். இட­து­சாரி சிந்­தனைத் தத்­துவம் என்­ப­வற்றை மான­சீ­க­மாக ஏற்­றுக்­கொண்ட லங்கா சம­ச­மாஜக் கட்சி முத­லா­வது பொதுத் தேர்­தலில் ஆகக்­கூ­டி­யது 10 ஆச­னங்­களை மாத்­தி­ரமே சுவீ­க­ரித்துக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருந்­தது. கம்­யூனிஸ்ட் கட்சி ஒரு ஆச­னத்­தையும் தொழி­லாளர் கட்சி ஒரு ஆச­னத்­தையும் மாத்­தி­ரமே பெற்­றுக்­கொண்­டன. இலங்­கையின் ஆட்­சி­மு­றையின் ஆரம்ப கால­கட்­டத்­தி­லேயே, முத­லா­ளித்­து­வம்சார் போக்கு ஆழ­மாக வேரூன்றிக் கொண்ட நிலை­மை­களே காணப்­ப­டு­கி­ன்றன. இட-­து­சா­ரிகள் ரொஸ்­கிய வாதிகள் என்ற வகையில் பல­புத்­தி­ஜீ­விகள் இக்­கா­லப்­ப­கு­தியில் ஆளு­மையும் ஆற்­றலும் கொண்­ட­வர்­க­ளாக காணப்­பட்ட போதும் அவர்­களால் பாட்­டாளி மக்கள், மலை­யக கூலிகள், வட­புல தமிழ் மக்கள் மத்­தியில் தமது ஆற்­றல்­மிக்க ஆளு­மை­களை செலுத்­த­மு­டி­ய­வில்லை என்­பதே உண்மை.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் அடுத்த தலை­மை­க­ளான டட்லி சேன­நா­யக்கா, சேர். ஜோன் கொத்­த­லா­வல, ஜே. ஆர். ஜெய­வர்த்­தன, ஆர். பிரே­ம­தாச, ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்ற தலை­மைகள் வரி­சையில் இவர்கள் பட்டும் படாத சோஷ­லிச சிந்­த­னை­க­ளுடன் முத­லா­ளித்­துவ வாதத்தை நாட்டில் முன்­னெ­டுத்­த­வர்­க­ளா­கவே விளங்­கி­னார்கள்.

இவர்­களின் எதிர் தலை­மைகள் என்­ற­வ­கையில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்கா முத­லா­ளித்­துவ சிந்­த­னை­க­ளி­லி­ருந்து தன்னை சிறி­த­ளவு விலத்திக் கொண்ட தேசி­ய­வாத, கிரா­மிய, சுதே­சிய கோட்­பா­டு­களில் அதிக நாட்டம் கொண்­ட­வ­ராக தன்னை பலப்படுத்திக் கொண்டார். இது அவரின் ஆட்சி ஏற்­றத்­துக்கு கால்­கோ­ளாக அமைந்­தது. அவ­ருக்கு பின் சுதந்­திரக் கட்­சிக்கு தலைமை தாங்­கிய திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க, சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க, மஹிந்த ராஜபக் ஷ, தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ற தலை­மைத்­து­வங்கள் கலப்பு முறை­யி­லான ஆட்சி முறை­களில் அதிக நாட்டம் கொண்­ட­வர்­க­ளாக விளங்­கி­னார்கள்.

உதா­ர­ண­மாக, 1970 ஆம் ஆண்டு முத­லா­வது பெண் பிர­த­ம­ராக பத­வி­யேற்றுக் கொண்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இலங்கை கம்­யூனிஸ்ட் கட்சி, லங்கா சம­ச­மாஜக் கட்சி, ஆகி­ய­வற்றை இணைத்­துக்­கொண்டு சோஷ­லி­சமும் முத­லா­ளித்­துவம் கலந்த ஒரு ஆட்­சி­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்த விரும்­பிய போதும் ஆற்­றி­லொரு கால் சேற்­றி­லொரு கால் என்­பது போல் அவ் ஆட்­சிக்கு பல்­வேறு சவால்கள், பேரி­ன­வா­தி­க­ளிடம் இருந்தும் தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்தும் உரு­வாகிக் கொண்­டன.

இவ்­வா­றான ஆட்­சி­முறைப் போக்­கில்தான் இவ்­வ­ருட மே தினக் கொண்­டாட்­டங்கள் திட்­ட­மி­டப்­ப­டு­கின்­றன. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் சுட்­ட­மண்ணும் பச்சை மண்ணும் மணம் முடித்­தது போல் ஒட்டிக் கொண்­டா­லும்­கூட, தமது பலமும் மக்கள் செல்­வாக்கும் அதற்­கான இருப்­புக்­களும் தொடர்ந்தும் காப்­பாற்­றப்­பட வேண்­டு­மென்­பதில் கவனம் கொண்­ட­வர்­க­ளா­கவே இருந்து வரு­கின்­றன.

சுதந்­திரக் கட்­சியை பொறுத்­த­வரை அதன் சிரேஷ்ட அமைச்­சர்கள், மூத்த உறுப்­பி­னர்கள் தேசிய அர­சாங்­கத்தை முடி­வுக்கு கொண்டு வர வேண்டும். அதற்­கான ஒப்­பந்த கால அட்­ட­வணை முறிந்து விட்­டது என விவாதித்துக் கொண்­டி­ருப்­பதைக் காண்­கின்றோம். கவ­ன­மா­கவும் அறி­வு­பூர்­வ­மா­கவும் கூறப்­போனால் தேசிய அர­சாங்­க­மென்ற தேரை தொடர்ந்து இழுத்துச் செல்­வதில் சுதந்­திரக் கட்­சி­யினர் அதி­ருப்தி கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள். அத­னால்தான் என்­னவோ அண்­மைக்­கா­ல­மாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான புதிய ஆட்­சி­யொன்றை அமைப்­போ­மென கோஷ­மிட்டு வரு­வதை தினந்­தோறும் கேட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

ஜனா­தி­ப­தி புதிய மந்­திரி சபையை உரு­வாக்­கப்­போ­கிறேன், ஊழல்­வா­தி­களை சட்­டத்தின் முன் நிறுத்­தப்­போ­கிறேன் என்று பிர­சங்கம் செய்­யு­ம­ள­வுக்கு அவரின் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பதும் கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்­களின் குற்­றச்­சாட்­டு­க­ளாக இருக்­கி­றன.

இதே­வேளை சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரின் இக் கூக்­கு­ரலை கேட்டும் கேளா­த­வ­ராக, தெரிந்தும் தெரி­யா­த­வ­ராக மிக மிக அடக்கி வாசிக்கும் மௌன­தா­ரி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க காணப்­ப­டு­கிறார். காரணம் நடை­பெ­ற­வி­ருக்கும் மாகாண சபைத்­தேர்தல் மற்றும் உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி எல்லா மாகாண சபை­க­ளையும் தனித்து கைப்­பற்ற வேண்டும். நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­களில் கணி­ச­மா­ன­ தொகுதிகளை ஐக்­கிய தேசியக் கட்சி கைப்­பற்ற வேண்டும் அவ்­வாறு கைப்­பற்­று­வதன் மூலமே எதிர்­கால தேவை­க­ளுக்கு அவற்றைப் பயன்­ப­டுத்திக் கொள்ள முடி­யு­மென்ற தூர­நோக்கு சிந்­த­னைகள் அவரை மௌனம் சாதிக்­க­வைக்­கி­றது என்று கருத இட­முண்டு.

தற்­போ­தைய சூழலில் ஜனா­தி­ப­தி­யையோ அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யையோ பகைத்துக் கொள்­ளு­ம­ள­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கோ, தனக்கோ திரா­ணி­யில்லை என்­பதை பிர­தமர் உண­ரா­ம­லில்லை.

உதா­ர­ணத்­துக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை தற்­போ­தைய சூழலில் பகைத்துக் கொண்டு தனி­யாட்சி அமைக்கும் அள­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு பல­மில்லை. அவ்­வாறு அமைக்க வேண்­டு­மானால் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மற்றும் சில சிறு­பான்மை, சிறிய கட்­சி­களை இணைத்துக் கொண்டே ஆட்சி அமைக்கும் வல்­ல­மையை கொள்­ள­மு­டியும். இது சாத்­தி­ய­மற்­றது.

அவ்­வாறு அமைக்­கப்­பட்­டா­லும்­கூட நிறை­வேற்று ஜனா­தி­பதி அதி­கா­ரங்கள் முற்று முழு­தாக குறைக்­கப்­ப­டாத நிலை­யி­லுள்ள ஜனா­தி­ப­தியின் ஆட்சி அதி­கா­ரத்­துக்குள் மாறு நிலை­யான ஆட்­சி­யொன்றை அமைத்து அதனை நடத்தி செல்­வது என்­பது எந்­த­ள­வுக்கு சாத­க­மாக இருக்க முடி­யு­மென்ற உண்­மையை பிர­தமர் அறி­யாத ஒரு வாய்ப்­பா­டாக இருக்க முடி­யாது. ஏலவே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமாரதுங்கவின் காலத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி 106 உறுப்­பி­னர்­க­ளுடன் 19.12.2001இல் ஆட்சி அமைத்து பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க பத­வி­யேற்றார். இவர்­க­ளு­டைய ஆட்­சி­காலம் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை சுமார் மூன்று வரு­டங்கள் இருந்­த­போது 07.02.2004 இல் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்தார். இதனால் பிர­தமர் பதவியிலிருந்து ரணில் நீக்கப்பட்டார். இத்­த­கைய படிப்­பி­னை­யொன்று மீண்டும் ஏற்­பட்­டு­விடக் கூடாது என்­பதில் ரணில் மிக கவ­ன­மாக இருப்பார் என்­பதில் ஐய­மில்லை.

அது­வு­மின்றி 2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வி­ருக்­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­க­வி­ருக்­கின்ற இன்­றைய பிர­தமர் தன்­னையும் தனது கட்­சி­யையும் தொடர்ந்து பலப்படுத்திக் கொள்­வ­தற்கு மே தினம் போன்ற மக்கள் மயப்­பட்ட நிகழ்­வு­களை தம­தாக்கிக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் மிக நுட்­ப­மா­கவும் திட்­ட­மிட்­ட­மு­றை­யிலும் செயற்­ப­டுத்திச் செல்ல வேண்­டிய தேவை­யி­ருக்­கி­றது என்­பது கூறா­மலே விளங்கிக் கொள்ள வேண்­டிய விட­ய­மாகும்.

மே தினத்தில் தமது பலத்தை நிரூ­பிக்கும் வகையில் பிர­தான கட்­சிகள் மற்றும் சிறு­பான்மைக் கட்­சிகள், சிறு­கட்­சிகள், பிர­தேச கட்­சிகள், அமைப்­புகள், ஆயத்­த­மாகி வரு­கின்­றன. அவ்­வ­கையில் தொழி­லா­ளர்­களின் ஆத­ரவு, பிர­தேச மக்­களின் ஆத­ரவு, சமூக மற்றும் இனங்­களின் ஆத­ரவைப் பெறும் தீவி­ர­மான இலக்­குடன் திட்­ட­மிட்டு செயற்­பட்டு வரு­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. அதன் பிர­காரம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தனது மே தினக் கொண்­டாட்­டத்தை பாரம்­ப­ரி­ய­ நக­ர­மான கண்­டி­யிலும் ஐக்­கிய தேசியக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி ஆகி­யன கொழும்­பி­லுள்ள கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­க­ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அம்­பாறை மாவட்­டத்­திலும் நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளன.

இதே­போன்றே பல்­வேறு தொழி­லாளர் அமைப்­புகள், புரட்­சி­கர அமைப்­புகள், சங்­கங்கள், சர்­வ­தேச தொழி­லாளர் தினத்தை முன்­னிட்டு பல பேர­ணி­க­ளையும் ஊர்­வ­லங்­க­ளையும் நடத்த திட்­ட­மிட்­டுள்­ளன. இவ்­வ­கையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் மே தினக் கூட்­டத்தை ஜனா­தி­பதி தலை­மையில் கண்­டியில் கெட்­டம்பே மைதா­னத்தில் மாலை நடத்­த­வுள்­ளது. “சுதந்­திர தொழி­லாளர் தினம்” என்ற கருப்­பொ­ருளை மைய­மாகக் கொண்டு கட்­சியின் இளைஞர் அமைப்பின் ஏற்­பாட்டில் நடை­பெ­ற­வுள்ள இவ்­வை­ப­வத்­துக்கு பெருந்­தொ­கை­யான மலை­யக மக்­களும் முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்­களும் கலந்து கொள்ளும் எதிர்­பார்ப்புக் கருதி கண்டி நகர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் கண்­டியை அண்­டிய மாவட்­டங்­களின் மக்கள் செல்­வாக்கை அதி­க­ரிக்­கவும் உறு­திப்­ப­டுத்­தவும் இந்த ஏற்­பா­டு­களை தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை ஏட்­டிக்குப் போட்­டி­யொன்ற வகையில் ஐக்­கிய தேசிக் கட்சி தனது கொழும்பு மக்­களின் செல்­வாக்கை நிலை­நி­றுத்திக் காட்டும் வகையில், மேல் மாகாணத்தை அண்­டிய பகு­தி­களை மையப்­ப­டுத்தி கொழும்பு கெம்பல் மைதா­னத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கட்­சியின் தொழிற்­சங்க அமைப்­புக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

பொது­வா­கவே இலங்­கையின் கட்சி அமைப்­பு­களில் ஒவ்­வொரு கட்­சி­க­ளுக்கும் குறித்த குறித்த மாவட்­டங்கள் மக்கள் ஆத­ரவு நிரந்­த­ர­மாக கொண்ட மாவட்­டங்­க­ளாக கணிப்­பீடு செய்து பார்க்­கப்­ப­டு­வது வழக்­க­மாக இருந்­து­வந்­துள்­ளது. உதா­ர­ண­மாக கொழும்பு மாவட்­டத்தை ஐ.தே.கட்­சியின் மாவட்­ட­மாக பார்க்­கப்­ப­டு­வதும் அதேபோல் கம்­பஹா மாவட்­டத்தை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மாவட்­ட­மாக பேசப்­ப­டு­வதும் சாதா­ரண வதந்­தி­க­ளாக இருந்­தாலும் கூட தேர்தல் முடிவு மதிப்­பீ­டுகள் சில­வே­ளை­களில் இதை நிரூ­பித்­துள்­ளன.

இம்­முறை மே தினக் கொண்­டாட்­டங்­களில் பிர­தான கணிப்­புக்­குள்­ளா­கப்­போ­கிற விடயம் அதா­வது ஆளும் அர­சாங்­கத்­துக்கு எதிர்­நி­லையில் ஒன்று கூடப் போகின்ற முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியின் மே தினக் கூட்­டமும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஊர்­வ­ல­முமே ஆளும் தேசிய அர­சாங்­கத்­துக்கு சவா­லாக அமையப் போகி­ற­தென்­ப­தாகும்.

இம்­முறை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணியின் மே தினக் கூட்டம் கொழும்பில் இடம்­பெ­ற­வுள்­ளது. கொழும்பின் பல்­வேறு பிரி­வு­க­ளி­லி­ருந்து ஆரம்­பிக்­க­வி­ருக்கும் பொது எதி­ர­ணியின் மே தினக் கூட்டம் காலி­மு­கத்­திடல் மைதா­னத்தில் பிர­தான கூட்­டத்­துடன் ஒன்று சேர­வுள்­ளது.

பொது எதி­ர­ணி­யி­னரால் நடத்­தப்­ப­ட­வுள்ள மேதினக் கூட்ட வேளை பிர­தமர் அலு­வ­லகம் சுற்றி வளைக்­கப்­ப­டு­மென்றும் சுமார் 20 இலட்சம் மக்­களை ஒன்று திரட்டி தமது பலத்­தையும் மக்கள் ஆத­ர­வையும் நிரூ­பிக்கப் போவ­தாக பொது எதி­ரணி ஐ.தே.கட்­சிக்கும் சுதந்­திரக் கட்­சிக்கும் சவால் விடுத்­துள்­ளது.

என்­னதான் பிர­த­மரும் ஜனா­தி­ப­தி­யும் தங்­களின் ஆட்­சியை வீழ்த்த முடி­யாது, மக்கள் செல்­வாக்கை உடைக்க முடி­யாது என வீரம் பேசி­னாலும் இருக்­கின்ற நிலை­மை­களின் அனு­மா­னங்­களைக் கொண்டு பார்க்­கி­ற­போது கூட்டு எதி­ர­ணியின் சவால்­க­ளையும் எதிர்ப்­பு­க­ளையும் எவ்­வாறு சமா­ளிக்­கப்­போ­கி­றார்கள் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டும். இதே­வேளை சுதந்­திரக் கட்­சியின் மே தினக் கூட்­டத்­துக்கு வரு­கை­த­ரு­மாறு முன்னாள் ஜனா­தி­பதிகளான மஹிந்த ராஜபக் ஷவுக்கும் சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது என மத்­திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்­க­நா­யக்கா தெரி­வித்­துள்ளார்.

இவ்­வ­ழைப்பு ஏன் விடுக்­கப்­பட்­டது என்ற சந்­தே­கத்­துக்கு அப்பால் எதி­ர­ணியின் மீதுள்ள பயத்தின் கார­ண­மாக விடுக்­கப்­பட்­டதா? அல்­லது எதி­ர­ணி­யி­னரை தம்பக்கம் இழுக்கும் உள்நோக்கம் கருதி இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பதெல்லாம் சர்ச்சைக்குரிய விடயமாகும்.

எவை எவ்வாறு இருந்தபோதிலும் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களானவை அரச ஆதரவாளர்கள், அதன் எதிராளர்கள் என்ற இருதரப்பினரின் பலத்தையும் செல்வாக்கையும் களத்தில் நிரூபிக்கும் நிகழ்வுகளாகவே இருக்கப்போகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டம் பற்றி கருத்துத் தெரிவித்த மத்திய மாகாண முதலமைச்சர் நடைபெறவுள்ள மே தினக் கூட்டமானது சிலரை அரசியல் அநாதையாக்கப்போகிறது. கொழும்பில் சில கட்சிகள் நடத்தவிருக்கும் மே தினக் கூட்டங்களில் மிகக் குறைந்தளவு சனத்தொகையினரே பங்கு கொள்வர். ஆனால் கண்டியில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்துக்கு இலட்சக் கணக்கான ஆதரவாளர்கள் வருகை தரவுள்ளனர் என தெரிவித்திருந்தார்.

இதேவேளை வடக்கு, கிழக்கின் மே தினக் கூட்ட ஒழுங்குகள் பெரிய அளவில் சூடு பிடித்ததாகத் தெரிய வில்லை. கொழும்பு, கண்டி, மலை யகம் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பெரியளவு தீவிரம் காட்டப்பட வில்லை யென்ற நிலைமைகளே காணப் படு கின்றன. இதேவேளை த.தே.கூ. அமைப் பின் மே தினக் கூட்டம் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பில் இடம்பெறவுள்ளதாக தெரிய வருகிறது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி ஏனைய இன மக்களுக்கும் அளிக்கப்படும் உயரிய கௌரவமாக இது கருதப்பட வேண்டு மென இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் அழைப்பு விடுத்துள் ளது.

இலங்­கையின் இன்­றைய சூழ்­நி­லைகள் சம்­ப­வங்கள் நிகழ்­வுகள் அனைத்­துமே எதிர்­கா­லத்தில் இடம்­பெ­ற­வுள்ள தேர்­தல்­களை இலக்கு வைத்தும் ஆட்­சியை கைப்­பற்றும் நோக்­கத்தைக் கொண்­டுமே கட்­சிகள் ஒவ்­வொன்றும் செயற்­பட்டு வரு­கின்­றன என்­ப­தற்கு இவ்­வ­ருட மே தினம் தகுந்த உதாரணமாகும்.

திருமலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-29#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.