Jump to content

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !


Recommended Posts

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் !

 

 சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார்.

 

actor vinu chakravarthy passed away today

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மனைவி பெயர் கர்ணப்பூ. மறைந்த வினுசக்கரவர்த்திக்கு சரவணன், சண்முகப்பிரியா என்கிற மகன், மகள் உள்ளனர்.

 

1945 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் வினுசக்கரவர்த்தி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2007ல் வெளிவந்த முனி திரைப்படம் அவரின் ஆயிரமாவது படமாகும். இறுதியாக 2014ல் வெளிவந்த வாயை மூடி பேசவும் படத்தில் நடித்திருந்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-vinu-chakravarthy-passed-away-today-281126.html



 

 

 

 

நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

 

vinjucharavarthy_20585.jpg

திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

1945-ம் ஆண்டு மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, கோபுரங்கள் சாய்வதில்லை, குரு சிஷ்யன், ராஜாதி ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர்.

தென்னிந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வினுசக்கரவர்த்தி நடித்துள்ளார்.

இவர், 'வண்டிச்சக்கரம்' படத்தின் மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். கடைசியாக 2014-ம் ஆண்டு வெளிவந்த 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார்.

http://www.vikatan.com/news/cinema/87763-actor-vinu-chakravarthy-passed-away.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நடிகர்.... ஆழ்ந்த இரங்கல்கள்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு குணசித்திர நடிகர்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

தீர்க்கமான கலைஞன்! - வினுசக்கரவர்த்தி நினைவலைகள்⁠⁠⁠⁠

தென்னிந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற வினுசக்கரவர்த்தி, 27.4.17 அன்று நம்மிடம் இருந்து பிரிந்தார். இவர் அடிப்படையில் சினிமா கதாசிரியர்.  அதுவும் கன்னடப் பட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியராகப் பணிபுரிந்தவர். ஆனால், பிறந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி. படித்தது, வளர்ந்தது, தென்னிந்திய ரயில்வே துறையில் துணை ஆய்வாளராகப் பணிபுரிந்தது எல்லாம் சென்னையில்தான்.  பின்னர் செய்த வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு கதை எழுதப் போனதெல்லாம் இவரின் கலைத்துறை வரலாறு.

குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை நடிகர்... என எல்லா கேரக்டர்களிலும் ஜொலித்தவர். வினுசக்கரவர்த்தியின் நடிப்புக்கு நிகராக இவரது குரலும் மிகப் பிரபலம். யாராவது ஒரு மிமிக்ரி கலைஞர் இடுப்பில் கையை ஊன்றிக்கொண்டு அல்லது விசிறிக்கொண்டு, `ஆங்...’ என கட்டைக் குரல் எடுத்து உறுமலாக ஒரு வசனத்தைப் பேச ஆரம்பித்தால், நிச்சயம் அவர் வினுசக்கரவர்த்தி வாய்ஸைப் பேசப் போகிறார் என்று சத்தியம் செய்துவிடலாம். அவ்வளவு புகழ்பெற்றது அவரது குரல் கீர்த்தி.

கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் இவர் கதாசிரியராகப் பணிபுரிந்த `பரசக்கே கண்ட தின்மா’ படம்தான், நடிகர் சிவகுமார் தமிழில் நடித்து வெள்ளி விழா கண்ட `ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படம். இந்தப் படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைக்கு வந்தவர் வினுசக்கரவர்த்தி. அதற்குப் பிறகு ஆயிரம் படங்கள் தாண்டி திரைத்துறையில் நின்றார். அவரது 1000-வது படம் `முனி’. `வண்டிச்சக்கரம்’ படத்தின் மூலம் விஜயலட்சுமி என்கிற பெண்ணை சில்க் ஸ்மிதாவாக அறிமுகப்படுத்தியவர் வினுசக்கரவர்த்திதான். அறிமுகப்படுத்தியது இல்லாமல் சில்க் ஸ்மிதாவின் கடைசிக்காலம் வரையும் அவருக்கு மாரல் சப்போர்ட்டாய் இருந்தார்.  தன் மனைவியைக் கொண்டு சில்க் ஸ்மிதாவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தவர் என்பது பலருக்கு தெரியாத செய்தி. இயல்பிலே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் வினுசக்கரவர்த்தி என்பதை அவரது டிவி பேட்டிகளில் காண முடியும்.

ஒரு பேட்டியில், `தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலோடு வினுசக்கரவர்த்தி நடிக்கும்போது, அவரது தொந்தியைக் குறைப்பதற்கு கமல் ஒரு வைத்தியம் சொல்லியிருக்கிறார். அது இதுதான்... ```காலையில் படுக்கையைவிட்டு எந்திரிக்கிறதுக்கு முன்னாடி உங்க கைகள் ரெண்டையும் படுக்கையில் ஊனி, கால்களையும் உடலையும் தலையையும் தரையில் படாமல் எழும்பி பத்து நொடிக்கு நில்லுங்க. அப்படிச் செஞ்சிவந்தீங்கன்னா கொஞ்ச காலத்துக்குள் உங்கள் தொந்தி குறைஞ்சு நீங்க ஸ்லிம் ஆகிடுவீங்க. இந்த யோகாசனத்துக்குப் பெயர் மயிலாசனம்’ என்று கமல் சொன்னார். அவ்வளவு கவனமா கேட்டுக்கிட்டேன். ஆனா, ஒருநாள்கூட அதைச் செய்யவே இல்லை’’ எனச் சொல்லிவிட்டு கட்டைக்குரலில் வெடித்துச் சிரித்திருக்கிறார்.  

வினுசக்கரவர்த்தி

``அதே நேரத்தில் கொஞ்சம் முரட்டுத்தனம் கொண்டவர்தான். `நல்லா இருக்கீங்களாணே?’ன்னு கேட்டா, `ஏன் நல்லா இல்லைன்னா நீ நல்லா வைக்கப்போறீயா?’னு கேட்பார். ஆனா, அவரோடு பழகிய என்னைப் போன்றவர்களுக்குத்தான் தெரியும். அவர் எத்தனை கனிவானவர் என்று’’ என்கிறார் நடிகர் ராதாரவி.

``நான் அப்போ அதிமுக பேச்சாளர். கிருஷ்ணகிரியில் ஒரு கூட்டத்தில் பேசுறதுக்காக ஒரு ஹோட்டல் அறையில் தங்கியிருந்தேன். பக்கத்துல வினுசக்கரவர்த்தி தங்கியிருந்திருக்கார். அது எனக்குத் தெரியாது. அறையைவிட்டு வெளியே வந்து பார்த்தேன். ஒரே கூட்டம். சண்டைச் சச்சரவு. இடையில் நின்னுகிட்டு  வினுசக்கரவர்த்தி அண்ணன் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தார். அப்புறம் விசாரிச்சப்போதான் தெரிஞ்சது. அவரோடு பேசவந்தவங்கிட்ட ஏதோ தவறா வார்த்தையை விட்டுட்டார். அப்புறம் நான் புகுந்து பேச சண்டை சமாதானம் ஆச்சு’’ என்கிற ராதாரவி, வினுசக்கரவர்த்தியும் தானும் ரஜினியின் சிவா படத்தில் நடித்தபோது நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

``வினுசக்கரவர்த்தி அண்ணன் எப்போதும் நல்லா டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணுவார். வீட்டிலிருந்து வெள்ளைப் பேன்ட், வெள்ளை சட்டை எல்லாம் போட்டுக்கிட்டு இன் பண்ணி, கூலிங் க்ளாஸ் மாட்டிக்கிட்டு வந்தார். பம்பாய்ல் ஃபைட் சீன் ஷூட்டிங். `ஏன்ணே இப்படி வேஷம் கட்டி வந்திருக்கீங்க? அங்க ஃபைட் சீன்ல வில்லனான உங்களை ஹீரோ கீழே போட்டு புரட்டி எடுக்கப்போறார். அதுக்கா இப்படி?’னு கேட்டேன். `இல்லை ரவி, ஷூட்டிங் முடிஞ்சதும், குளிச்சிட்டு ஃபிளைட்ல ஏறி உக்கார்ந்தா ச்சும்மா ஜம்முன்னு தூங்கிட்டு வீட்டுக்கு போகணும். அதுக்குத்தான் இப்படி’ன்னு சொன்னார். ஆனா, சண்டைக் காட்சி முடிய நேரமாகி அப்படியே அழுக்குத்துணியோடு ஃபிளைட் பிடிக்க ஓடினார் வினுசக்கரவர்த்தி அண்ணன். இதை எல்லாம் பார்த்த ரஜினி அன்னிக்கு விழுந்து விழுந்து சிரிச்சார். இதுதான் வினுசக்கரவர்த்தி அண்ணன். இன்னொரு சம்பவம் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். அவர் ஒரு படம் எடுக்க ஆரம்பித்து ஒரே நாள் ஷூட்டிங்கோடு நிறுத்திக்கொண்டார். `ஏன்ணே?’னு கேட்டேன். `இல்லை... இந்தப் படம் சரியா வந்தாலும், போட்ட காசுகூட கைக்கு வராதுன்னு தோணுது. அதான் நிறுத்திக்கிடேன்’னு சொன்னார். அந்தப் படத்துல நடிக்க நடிகர் நடிகையருக்கு அட்வான்ஸாகக் கொடுத்திருந்த பணத்தைக்கூட அவர் திரும்பக் கேட்கவில்லை’’ என்கிறார்.

வினுசக்கரவர்த்தி

வினுசக்கரவர்த்தி வாழ்வின் இன்னொரு கோணத்தைச் சொல்கிறார், அவரோடு மிகவும் நெருங்கிப் பழகிய நடிகர் சிவகுமார்...

``அந்தக் காலத்தில் இருந்துவந்த நீள நீள வசன பாணியை `வண்டிச்சக்கரம்’, `ரோசாப்பூ ரவிக்கைக்காரி...’ போன்ற படங்களில் உடைத்திருப்பார் வினுசக்கரவர்த்தி. எனக்குத் தெரிந்தவரை சினிமா வாழ்க்கையையும் குடும்ப வாழ்க்கையையும் பேலன்ஸ் செய்து நடத்திக்கொண்டு போனவர்களில் வினுசக்கரவர்த்தி முக்கியமானவர். கரடுமுரடானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் அவரைப் பற்றிச் சொல்வார்கள். இவையெல்லாம் ஒழுக்கமாக இருக்க அவர் எடுத்துக்கொண்ட மெனக்கெடல்களாகத்தான் இருக்கும். அதனால்தான் அவரது பிள்ளைகளை நல்லவிதமாக வளர்த்து ஆளாக்கினார். ஒரு மகன்; ஒரு மகள். மகன் சரவணபிரியன் லண்டனில் மருத்துவர். மகள் சண்முகபிரியா அமெரிக்காவில் பேராசிரியர். பரபரப்பான சினிமா வாழ்வையும் அமைதியான குடும்ப வாழ்க்கையும் பெற்ற, எனது நண்பர் வினுசக்கரவர்த்தி ஆன்மா சாந்தியடைய வேண்டும்’’ என்றார் சிவகுமார்.

 

இந்தியில் சில்க் ஸ்மிதா வாழ்க்கை பற்றிய படம் `டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் உருவாகி வந்தபோது, ‘சில்க் ஸ்மிதா வாழ்க்கைக் கதையை நான் எடுத்தால்தான் அது உண்மையாக இருக்கும். இந்தியில் எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் தணிக்கை அலுவலகத்துக்கு முன்பு நான் போராட்டம் நடத்துவேன்’ என்றார் வினுசக்கரவர்த்தி. தான் கண்டுபிடித்து, தென்னிந்திய கனவுக்கன்னியாக வளர்த்தெடுத்த, தன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மதித்த சில்க் ஸ்மிதா பற்றி கடைசிவரை அவர் படமே எடுக்கவில்லை என்பதுதான் காலம் எழுதி முடித்த கதை.

http://www.vikatan.com/news/vikatan-specials/87892-memories-about-the-actor-vinu-chakravarthy.html

Link to comment
Share on other sites

’சினிமாவுக்கு நீங்க யாரும் வர வேண்டாம்டா!’’ - வினுச்சக்ரவர்த்தி நினைவுகளைப் பகிரும் மகள்

 
 

மனைவி மற்றும் மகளுடன் நடிகர் வினுச்சக்ரவர்த்தி


னக்கென தனி மேனரிஸத்துடன் குணசித்திரம், வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் வினுச்சக்ரவர்த்தி. ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் காலமானார். சினிமா மீதான ஆர்வத்தால்,  ரயில்வே வேலையை உதறிவிட்டு திரைத்துறையில் வலம்வந்த வினுச்சக்ரவர்த்தியின் சினிமா மற்றும் குடும்ப நேசத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார், அவர் மகள் சண்முகப்பிரியா.

"சினிமா, குடும்பம் இரண்டையும் எப்போதுமே அப்பா சேர்த்துவைத்து பார்த்ததில்லை. இரண்டு உலகத்துக்கும் தனித்தனியே தகுந்த முக்கியத்துவம் கொடுத்தாரு. மூணு வயசுல இருந்து சில நாடகங்கள்ல நடிச்சுட்டு இருந்தவர், தொடர்ந்து சினிமா துறையிலதான் வேலை செய்யணும்னு ஆசைப்பட்டாரு. பி.காம் படித்தவர், எதேச்சையா மத்திய அரசின் ரயில்வே துறையில துணை ஆய்வாளரா வேலைக்குப் போக வேண்டிய சூழல்.  வாய்ப்பு கிடைச்சா சினிமா துறையில சேர்ந்திடலாம்னு காத்திருந்தார். ஒருமுறை ரெயில்ல போயிட்டு இருந்தப்போ, கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலை சந்திச்சு ரெண்டு பேரும் நண்பர்களானாங்க. அப்படியே சினிமா துறையில கொஞ்சம் கொஞ்சமா கவனம் செலுத்த ஆரம்பிச்சாரு. 'பரசக்கே கண்ட தின்மா'ங்கிற கன்னடப் படத்துக்கு கதை எழுதி அந்த படமும் பெரிய ஹிட் ஆச்சு. பின்னர் அந்த கதை, தமிழ்ல 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி'யா வெளியாகி ஹிட் ஆச்சு. ரயில்வே வேலையில லீவ் போட்டுட்டு சினிமாவுல கவனம் செலுத்தினா, மத்தவங்க தப்பா நினைப்பாங்களோன்னு நினைச்சு அந்த வேலையை விட்டுட்டாரு.

குடும்பத்தினருடன் நடிகர் வினுச்சக்ரவர்த்தி

தொடர்ந்து முழு நேரமா சினிமாவுல மட்டும் கவனம் செலுத்தியவர், 'வண்டிச்சக்கரம்' படத்துக்கு கதை எழுதினதோடு, அதுல நடிக்கவும் செய்தாரு. அந்தப் படத்துல, நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஆயிரத்துக்கும் அதிகமான படங்கள்ல குணசித்திரம், வில்லன், நகைச்சுவைன்னு எல்லாவிதமான கதாபாத்திரங்கள்லயும் நடிச்சாரு. சினிமா துறையில தனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்க, அப்பா நிறைய கஷ்டநஷ்டங்களை சந்திச்சிருக்காரு. 'இந்த துறையில நிறைய அவமானங்களைச் சந்திக்கணும். இன்னிக்கு மதிக்கிறவங்க, நாளைக்கு மதிக்க மாட்டாங்க. அதனால என்னோட இந்த சினிமா துறை போகட்டும். எனக்கு அடுத்து நம்ம குடும்பத்துல வேற ஒருத்தரும் சினிமா துறைக்குள்ள வரக்கூடாது. அதனால என்னோட ரெண்டு பிள்ளைங்களும் நல்லா படிக்கணும். படிப்புக்கு ஏத்த வேலையோட நல்லபடியா வாழ்க்கையில செட்டில் ஆகணும்'னு எங்களை நல்லபடியா படிக்க வெச்சாரு. படிச்சு முடிச்சதும் என்னையும், தம்பியையும் வெளிநாடுகளுக்கும் வேலைக்கு அனுப்பினாரு.

எந்த ஊருக்கு ஷூட்டிங் போனாலும் அங்க போனதும் உடனே வீட்டுக்கு போன் பண்ணிச் சொல்லுவாரு. அடிக்கடி போன் பண்ணி, வீட்டுல இருக்குற எல்லோரைப் பத்தியும் விசாரிச்சுகிட்டே இருப்பாரு. குறிப்பா, ஷூட்டிங் போன இடத்துல கிடைக்கும் சிறப்பான உணவுகளை மறக்காம வாங்கிக்கிட்டு வருவாரு. எந்த நேரமா இருந்தாலும் வீட்டு வந்த உடனே, முதல் வேலையா அதை எங்களுக்கு சாப்பிடக் கொடுப்பாரு. கிழிஞ்சுப்போன ஒரு தோசை சுட்டுக்கொடுத்தாலும், அதை இன்முகத்தோட அணுகி 'சூப்பரா இருந்துச்சுமா'ன்னு பாராட்டிப் பேசுவாரு. உற்சாகப்படுத்தியே காரியத்தைச் சிறப்பா செய்ய வைப்பாரு. செல்லம் கொடுக்குற அதே நேரம் நல்லா படிக்கலைன்னா மட்டும், கண்டிப்போட நடந்துக்குவாரு. 

சினிமாவுல அதிகமா வில்லன் கதாபாத்திரத்துல நடிச்சாலும், அவர் நிஜ வாழ்க்கையில ரொம்பவே பாசிட்டிவான குணம் கொண்டவர். முடிஞ்ச வரைக்கும் பொறுமையாகத்தான் எல்லோரிடமும் பேசுவாரு. ஒருகட்டத்துக்கு மேலதான் கொஞ்சம் கோபப்படுவாரு. மத்தவங்களுக்கு தெரியாத விஷயம், அவர் நல்லா பெயின்ட்டிங் பண்ணுவாரு; பாட்டுப் பாடுவாரு. ஓய்வே இல்லாம கதை எழுதிகிட்டோ அல்லது கதை சொல்லிகிட்டே இருப்பாரு. எங்களோட நல்லாவே ஷட்டில்காக் விளையாடுவாரு. 

குடும்பத்தினருடன் நடிகர் வினுச்சக்ரவர்த்தி

`உங்களுக்குன்னு தனி அடையாளத்தோட இருக்கணும். எந்த சூழல்லயும், 'நான் இன்னாரோட பொண்ணு, பையன்'னு நீங்க சொல்லிக்கக்கூடாது'னு சொல்லி வளர்த்தாரு. 'ரோட்டுல நடந்து போனாக்கூட, எங்கேயாச்சும் சாலையோரமா நிண்ணு ஏதாச்சும் வாங்கிச் சாப்பிட்டாக்கூட யாராச்சும் போட்டோ எடுத்துடுவாங்களோ'ன்னு பயப்படுறது என்னோட போகட்டும். நீங்க சுதந்திரமா இருக்கணும்னு ஆசைப்படுவாரு. அதன்படியே எங்கள எந்த ஒரு சினிமா ஷூட்டிங் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் அழைச்சுகிட்டுப் போனதே கிடையாது. அதனாலேயே எங்களுக்கும் சினிமா மீது பெரிய ஆர்வம் இல்லாம போயிடுச்சு." என்பவர், அப்பா சினிமா மீது வைத்திருந்த பற்றுக்கு உதாரணம் சொல்கிறார்...

" உடம்பு சரியில்லாம படுக்கையில இருந்தப்பகூட, டி.வி-யில படம் பார்க்கும்போது 'இந்த ரோல்ல நான் நடிச்சிருந்தா ரொம்பவே நல்லா இருந்திருக்கும். எனக்கு மட்டும் உடம்பு நல்லாயிருந்தா இன்னும் நடிச்சுகிட்டே இருப்பேன்'னு சொல்லிகிட்டே இருப்பாரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல அப்பாவை அட்மிட் பண்ணியிருந்தோம். டாக்டர்ஸ் நிறைய முயற்சி செஞ்சும், ஊசிபோட ஒத்துழைப்பு கொடுக்காம இருந்தாரு. 'வண்டிச்சக்கரம் படத்தை ரீமேக் செய்றாங்களாம். சிவகுமார் அங்கிள் நடிச்ச கேரக்டர்ல சூர்யா சாரும், நீங்க நடிச்ச கேரக்டர்ல சிவகுமார் அங்கிளும் நடிக்கிறாங்களாம். அதுக்காக உங்களப் பார்த்து கதைப் பேச சிவகுமார், சூர்யா ரெண்டு பேருமே ஒரு மணி நேரமா வெளியே வெயிட் பண்றாங்க. நீங்க ஊசிபோட்டுகிட்டா, உடனே உங்களப் பார்க்க உள்ளே வருவாங்க'ன்னு ஒரு பொய் சொன்னேன். அடுத்த கணமே, ஊசி போட ஒத்துழைப்புக் கொடுத்தாரு. `அவங்கள உடனே கூப்பிடு'ன்னு சொன்னாரு. சும்மா வெளியே போயிடுவந்து, 'நேரமாச்சுன்னு திரும்பி போயிட்டாங்க. மூணு நாள் கழிச்சு வர்றதா சொல்லியிருக்காங்க'ன்னு மறுபடியும் பொய் சொன்னேன். `சரிம்மா... அவங்க வரும் நாளப்போ ஞாபகப்படுத்து. ஷேவிங் பண்ணிகிட்டு ரெடியாகிடுறேன்'னு சரியா பேச முடியாத சூழல்லயும் கஷ்டப்பட்டு பேசினாரு. 

உயிரோட இருந்தப்போ எங்கள நல்லபடியா பார்த்துகிட்டவரு, இப்போ இறந்தும் சாமியா எங்களப் பார்த்துக்குவாருன்னு நம்புறேன்'' என உருக்கமாகப் பேசுகிறார், சண்முகப்பிரியா.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/87971-you-dont-enter-into-cinema-industry---says-vinu-chakravarthys-daughter.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர்.
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.