Jump to content

லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை; எதிரணிகளை நையப் புடைத்தன


Recommended Posts

லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை; எதிரணிகளை நையப் புடைத்தன

 

லா லிகா தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை பொழிந்தன. பார்சிலோனா 7-1 எனவும், ரியல் மாட்ரிட் 6-2 எனவும் எதிரணிகளை வீழ்த்தின.

 
 
 
 
லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை; எதிரணிகளை நையப் புடைத்தன
 
லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பார்சிலோனா- ஒசாசுனா அணிகள் மோதின. பலம் வாய்ந்த பார்சிலோனா அணியின் முன் ஒசாசுனா அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். ஒசாசுனா அணி வீரர் தன்னுடைய அணியின் வீரருக்கு பந்தை பாஸ் செய்தார். அந்த பந்தை திறமையாக பறித்து மெஸ்சி கோலாக மாற்றினார். 30-வது நிமிடத்தில் அந்த்ரே கோமஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் ஒசாசுனா அணியின் ராபர்ட்டோ டோர்ஸ் 48-வது நிமிடத்தில் ப்ரீ ஹிக் மூலம் கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 2-1 என முன்னிலையில் இருந்தது. பின்னார் பார்சிலோனா தொடர்ந்து ஐந்து கோல்கள் (அந்த்ரே கோமஸ் 57, மெஸ்சி 61, பகோ 64, மாஸ்செரானோ 67, பகோ 86) அடிக்க, 7-1 என ஒசாசுனாவை வீழ்த்தியது.

201704271847560477_barcelona-s._L_styvpf

மற்றொரு லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - டெபோர்ட்டிவோ அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் மொராடா முதல் கோலை பதிவு செய்தார். 14-வது நிமிடத்தில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் ஒரு கோலும், லுகாஸ் 44-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர். இதற்கு டெபோர்ட்டிவோ அணியின் புளோரின் அண்டோன் 35-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க முதல் பாதியில் ரியல் மாட்ரிட் 3-1 என முன்னிலைப் பெற்ற்றது.

2-வது பாதி நேர்தில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 66-வது நிமிடம், இஸ்கோ 77-வது நிமிடம் மற்றும் கேஸ்மிரோ 87-வது நிமிடத்தில் கோல் அடித்தனர். 84-வது நிமிடத்தில் டெப்போர்ட்டிவோ அணியின் ஜோசேலு ஒரு கோல் அடிக்க, ரியல் மாட்ரிட் அணி 6-2 என அபார வெற்றி பெற்றது.

201704271847560477_realmadrid1-s._L_styv

தற்போது வரை பார்சிலோனா 34 போட்டிகள் முடிவில் 78 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ரியல் மாட்ரிட் 33 போட்டிகளில் 78 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/27184752/1082363/Real-Madrid-Barcelona-win-heavily-to-maintain-lock.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.