Jump to content

நடிகர், வினு சக்கரவர்த்தி காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für வினுசக்கரவர்த்தி

நடிகர், வினு சக்கரவர்த்தி காலமானார்!

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72.

குரு சிஷ்யன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

1945 ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் பிறந்தவர் வினுசக்கரவர்த்தி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2007ல் வெளிவந்த முனி திரைப்படம் அவரின் ஆயிரமாவது படமாகும். 

- தற்ஸ் தமிழ். -

அன்னாரின் மறைவுக்கு... ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.