Jump to content

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்


Recommended Posts

பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்

 

இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் வினோத் கன்னா காலமானார்.

பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா

1970களில் மிகவும் பிரபலமான நடிகரான வினோத் கன்னா, பாஜகவால் முன்னிறுத்தப்பட்டு, பஞ்சாப் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர்.

1970 மற்றும் 1980களில் இவர் நடித்த பாலிவுட் படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

1968ல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், 1990களில் அரசியலில் நுழைவதற்கு முன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.

நீண்ட நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் காலமான வினோத் கன்னாவுக்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றர்.

http://www.bbc.com/tamil/india-39731236

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நடிகர்.... ஆழ்ந்த இரங்கல்கள்....!

Link to comment
Share on other sites

“மனைவி, குடும்பத்தோடு வாழ நான் லாயக்கற்றவன்!” வினோத் கன்னா வாழ்க்கை ஒரு ரீவைண்ட் #RIPVinodKhanna

“நேற்று  காலமான பிரபல பாலிவுட் நடிகரும் பா.ஜ.க எம்.பி-யுமான வினோத் கன்னாவின் வாழ்க்கை, இன்றைய நடிகர்கள் படிக்கவேண்டிய ஒன்று'' என்கின்றனர் பாலிவுட் திரைப் பிரபலங்கள்.  தன் இரங்கலை, ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.


வினோத் கன்னா யார், அவர் கடந்து வந்த பாதை என்ன என்பதைப் பார்ப்போம்...

வினோத் கன்னா

கன்னாவின் குடும்பப் பின்னணி

பாகிஸ்தான் பெஷாவர் பகுதியைச் சேர்ந்த தம்பதி கமலா-கிருஷ்ணசந்த். இவர்களுக்கு மூன்று பெண், இரண்டு ஆண் என ஐந்து குழந்தைகள். அதில் வினோத் கன்னாவும் ஒருவர். இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குக் குடிபெயர்ந்தது கிருஷ்ணசந்த் குடும்பம். அங்கு உள்ள ராணி மேரி பள்ளி, புனித சேவியர் மேல்நிலைப் பள்ளிகளில் படித்தார் கன்னா. பிறகு, இவரின் குடும்பம் 1957-ம் ஆண்டில் டெல்லிக்குக் குடிபெயர்ந்தபோது, அங்கு  இருந்த பப்ளிக் பள்ளியில் படித்தார். 1960-களில் குடும்பம் மீண்டும் மும்பைக்கே குடிபெயர்ந்தது. அங்கு தங்கும் விடுதியில் இருந்தபடி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். பிறகு, மும்பை சிடன்ஹாம் கல்லூரியில் வணிகவியலில் பட்டப்படிப்பை முடித்தார் கன்னா.

சினிமா அறிமுகம்

பள்ளியில் படிக்கும்போது பார்த்த ‘மொஹல் ஏ ஆசம்’ திரைப்படம்தான் கன்னாவுக்கு சினிமா மீதான ஆர்வத்தை  ஏற்படுத்தியது. பிறகு, 1969-ம் ஆண்டு சுனில் தத் தயாரித்து அதுர்த்தி சுப்பாராவ் இயக்கிய ‘மன் கா பிரீத்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக திரைத் துறைக்கு அறிமுகமானார். அது, டி.ஆர்.ராமண்ணா இயக்கி ரவிச்சந்திரன்-ஜெயலலிதா நடித்து 1966-ம் ஆண்டில் வெளிவந்த ‘குமரிப்பெண்’ என்ற தமிழ்ப் படத்தின் ரீமேக். அதைத் தொடர்ந்து 1970-களில் ‘சச்சதா ஜூஹுதா’, ‘ஆன் மிலோ சஜ்னா’, ‘மஸ்தானா’, ‘மேரா கான் மேரா தேஷ்’ ஆகிய படங்களில் வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் எனத் தொடர்ந்து நடித்துவந்தார்.

வில்லனாக அறிமுகமாகி ஹீரோவான ஒருசில இந்தி நடிகர்களில் கன்னாவும் ஒருவர். தனி ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த படம் ‘ஹம் தும் அவுட் வா’. 1973 முதல் 1982 வரையிலான பத்து ஆண்டுகள் ஹீரோவாகப் பல படங்கள் நடித்தார் கன்னா. `ஃபெரேபி', `கட்யாரா', ‘காயித்’, ‘சலிம்’, இன்கார்’, ‘கட்டார்’, ‘ஆப் கி கதிர்’, ‘ஆருப்’... உள்பட பல படங்களில் நடித்தார். 1980-ம் ஆண்டில் ஃபெரோஸ் கான் இயக்கி தயாரித்து நடித்த ‘ஹுர்பானி’ என்ற படம் அந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலை அள்ளியது.

 

வினோத் கன்னா

மல்ட்டி ஸ்டார் காம்பினேஷன்

தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த கன்னா, எந்த ஈகோவும் பார்க்காமல் பல நடிகர்களுடன் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவும் தயாராக இருந்தார். இந்தக் குணம் அவரை மேலும் உயர்த்தியது. அப்படி 1971-ம் ஆண்டில் சத்ருகன் சின்ஹா உடன் இணைந்து குல்சார் இயக்கிய ‘மேரே ஆப்னா’ என்ற படம் நடித்தார். இப்படிப் பல முன்னணி ஹீரோக்களுடன் கன்னா சேர்ந்து நடித்த படங்களே கிட்டத்தட்ட ஐம்பது இருக்கும்.

சஷி கபூருடன், ‘சங்கர் சம்பு’, ‘சோர் சிப்பாஹீ’, ‘ஏக் அவுட் ஏக் கைரா’ படங்களில் நடித்தவர், அமிதாப் பச்சனுடன் ‘ஹேரா பேரி’, ‘கூன் பசினா’, ‘அமர் அக்பர் ஆண்டனி’, ‘ஷமீர்’, ‘பர்வரிஷ்’, ‘முஹதர் கா சிகந்தர்’ படங்களில் நடித்தார். இதேபோல ரந்தீர் கபூர், சுனில் தத், ஜிதேந்திரா, தர்மேந்திரா எனத் தொடர்ந்த காம்பினேஷன், ராஜ் கபூர், ராஜ்குமார், கோவிந்தா, சஞ்சய் தத், சல்மான் கான் என நீண்டது. இப்படி இவர் கடைசியாக வேறொரு நடிகருடன் சேர்ந்து நடித்த படம் ‘தில்வாலே’. அதுவே இவருக்குக் கடைசியான படமாகவும் அமைந்துவிட்டது.

ராஜேஷ் கண்ணா நட்பு

இவர் சேர்ந்து நடித்த ஹீரோக்களில் ராஜேஷ் கன்னா குறிப்பிடத்தக்கவர். ராஜேஷுக்காக சில படங்களில் வினோத் கன்னா குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். ‘ஆன் மிலோ சஜ்னா’வில் வினோத், ராஜேஷுக்கு வில்லன். ‘சச்சா ஜூட்டு’, ‘ராஜ்புத்’ மற்றும் ப்ரேம் கஹானி படங்களில் வினோத்துக்கு கேரக்டர் ரோல்கள். இவர்களின் இணைபிரியா நட்பு, சினிமாவைத் தாண்டியும் பேசப்பட்டது. ஆனால், அரசியலில் நேர்எதிர் துருவங்கள். வினோத் கன்னா, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். ராஜேஷ் காங்கிரஸ்காரர். இவரும், ஒருவரை ஒருவர் எதிர்த்து தீவிர பிரசாரம் செய்திருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் காங்சிரஸை ஆதரித்து பிரசாரம் செய்த ராஜேஷ் கன்னா, ‘‘பா.ஜ. கட்சியினர் தேர்தலுக்குத் தேர்தல் பல வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆனால், தேர்தலுக்குள் அதை மறந்துவிடுகிறார்கள். குர்தாஸ்பூர் தொகுதியில் எம்.பி ஆன வினோத் கன்னா, கடந்த தேர்தலின்போது திரைப்பட அகடாமி ஒன்றை நிறுவுவதாக வாக்களித்தார். ஆனால், இதுவரை திரைப்பட அகடாமியைக் கட்டவில்லை. ஆனால் காங்கிரஸ், தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவருகிறது” என்று பேசினார். ஆனாலும் அரசியலைத் தாண்டி அவர்களின் நட்பு தொடர்ந்தது.

 

வினோத் கன்னா

ஆன்மிகம்

ஆன்மிகத்தில் ஓஷோ ரஜ்னீஷைப் பின்பற்றினார் வினோத் கன்னா. 1982-ம் ஆண்டில் சினிமாவிலிருந்து விலகி ஆன்மிகம் பக்கம் சென்றவர், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் மீண்டும் பாலிவுட் பக்கம் வந்தார். ‘இன்சாஃப்’ என்ற படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் நடித்தார். அந்தச் சமயத்தில் வினோத் கன்னாவுக்கு ரொமான்டிக் ரோல்களாக வந்தன. ஆனால், இவர் ஆக்‌ஷன் படங்களையே விரும்பினார்.

மகன் அறிமுகம்

1997-ம் ஆண்டில் தன் மகன் அக்‌ஷய் கன்னாவை ‘ஹிமாலே புத்ரா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். மூன்று தலைமுறைகளாக சினிமாவில் நடித்து வந்த இவருக்கு, 1999-ம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது கொடுக்கப்பட்டது. கடைசியாக, 2007-ம் ஆண்டில் ‘தில்வாலே’ படத்தில் ஷாரூக் கானுடன் நடித்தார். வினோத், டிவி-யையும் விட்டுவைக்கவில்லை. ஸ்மிரிதி இரானி தயாரித்த இந்தி சீரியலில் வினோத்தான் ஹீரோ.

அரசியல்

1997-ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் கன்னா . பஞ்சாப்பின் குர்தாஸ்பூர் தொகுதியிலிருந்து பா.ஜ.க-வின் சார்பாக லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1999-ம் ஆண்டில் அதே தொகுதியிலிருந்து மீண்டும் எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்டார். பிறகு, 2002-ம் ஆண்டில் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சரானார். ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளியுறவுத் துறை இணை அமைச்சரானார். 2004-ம் ஆண்டில் நடந்த மறுதேர்தலிலும் குர்தாஸ்புர் தொகுதியில் வென்றவர், 2009-ம் ஆண்டில் லோக்சபா தேர்தலில் அதே தொகுதியில் தோல்வியைத் தழுவினார். ஆனால், 2014-ம் ஆண்டு நடந்த நடப்பு 16-வது லோக்சபாவில் அதே தொகுதியில் வென்று எம்.பி-யானார்.

வினோத் கன்னா

குடும்பம்

1971ல் கீதாஞ்சலி என்பவரை மணந்தவருக்கு ராகுல் கன்னா, அக்ஷய் கன்னா ஆகிய இரு மகன்கள். 1980ல் அமெரிக்காவில் உள்ள ஓஷோ ரஜினிஷின் ரஜீனிஸ்புரத்துக்கு சென்றவர் அங்கேயே 5 வருடங்கள் தங்கிவிட்டார். அங்கு பாத்திரங்களை கழுவுவது, ஓஷோவின் தோட்டங்களை பராமரிக்கும் தோட்டக்காரர் என ஆன்மிக பணிவிடைகளை செய்தார். குடும்பத்தில் இருந்து விலகிச்சென்றதால் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. பிறகு அது விவாகரத்தில் முடிந்தது. அதைத்தொடர்ந்து 1990ல் கவிதா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்தார். கவிதாவுக்கு சாக்ஷி என்ற மகன், ஸ்ரத்தா என்ற மகள் என இரு பிள்ளைகள். 

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி உடல்நலக்குறைபாடு காரணமாக மும்பை கிர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் இருப்பதாக வெளியில் செய்தி பரவியது. ஆனால் அவரது குடும்பம் அதை ஆரம்பத்தில் மறுத்தது. இந்த நிலையில்தான் வினோத் கன்னா நேற்று (ஏப்ரல் 27) காலமானார். 

150 படங்களுக்கும் மேல் நடித்த ஒரு பிரபலம், ஒரே தொகுதியில் இருந்து பலமுறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி... போன்ற எந்த பாராட்டுக்களையும் தலைக்கு ஏற்றி கர்வம் கொள்ளாத அமைதியான மனிதரான வினோத் மறைந்தது உண்மையிலேயே மிகப்பெரிய இழப்புதான். 

வினோத் கன்னா அளித்த பழைய பேட்டி ஒன்று வெகு பிரபலம். ‘சினிமாவைவிட்டு விலகி ஆன்மிகத்தை நோக்கி போகிறேன்’ என்று அவர் அறிவித்த சமயத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி. இன்றைய சினிமா கலைஞர்கள் படிக்கவேண்டிய முக்கியமான பேட்டி. அதில் இருந்து சில பகுதிகள் மட்டும் இங்கே... 

“சினிமாவை விட்டு விலக என்ன காரணம்?”

“லட்சியத்தை எட்ட, கடுமையாகப் போராடுவோம். அப்போது நமக்கான ஒரு வாழ்க்கை இருக்கிறது என்ற நினைவே நமக்கு வருவதில்லை. அப்போது ஆன்மா ஏமாற்றப்பட்டு, தன் நிம்மதியை இழக்கிறது. இதுதான் என் வாழ்க்கையிலும் நடந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இந்த முடிவு.”

“உங்கள் மனைவி, அப்பா என்ன சொன்னார்கள்?”

“ `பைத்தியக்காரன்' என்றார்கள். திட்டித்தீர்த்தார்கள். ‘இந்த இடத்துக்கு வர, நீ பட்ட கஷ்டங்கள் வீண். உன்னைச் சார்ந்தவர்களை வருத்தப்பட வைத்துவிட்டாய். லட்சக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றிவிட்டு
நீ என்ன மகிழ்ச்சியை அனுபவித்துவிடப்போகிறாய்?’ என்றார்கள்.”

வினோத் கன்னா

“இந்த உயரத்தைத் தாண்டியும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையா?”

“சாதனைக்கும் எல்லை உண்டு. என் சாதனைக்கு இதுதான் எல்லை. இதற்குமேல் என்னால் சிந்திக்க முடியவில்லை. இந்தச் சூழல் என்னை நிம்மதியிழக்கச் செய்தது. நான் நிம்மதியைத் தேடிப் போகிறேன்.”

“இந்த முடிவுக்கு உங்கள் மனைவி கீதாஞ்சலியின் கோபம்தான் காரணமா?”

‘‘இல்லை, நான்தான் காரணம். அடுத்த பிறவியில் நான் ஒரு நடிகனானால் நிச்சயம் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். ஆம், ஒரே மனிதனால் இரு படகுகளில் பயணிக்க முடியாது. ஒருநாளில் 18 மணி நேரம் வேலைசெய்யும் என்னால், மனைவிக்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. பெண்களிடமும் உள்ள எதிர்பார்ப்புகள் அவளிடமும் இருக்கும்தானே! அதை நான் நிறைவேற்றவில்லை. அதனால் கீதா கோபக்காரியாகிவிட்டாள். என் குழந்தைகள்கூட திரையில் மட்டும்தான் என்னைப் பார்த்தார்கள். ‘நான்தான் உன் அப்பா’ என்று அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. மனைவி குடும்பத்தோடு வாழ நான் லாயக்கற்றவன்.”

 
 

ஆனால், ஐந்து ஆண்டுகள் ரஜ்னீஷ் ஆசிரமத்தில் இருந்துவிட்டு வந்த பிறகு கவிதா என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இறக்கும் வரை மனைவி, பிள்ளைகளோடு வினோத் கன்னா மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.   எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.   சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.   அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.   இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.   திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.   மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.   'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.   காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.   தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.   (தொடரும்..........)    
    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.