Jump to content

தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ்


Recommended Posts

தினகரனுடன் சென்னை புறப்பட்டது டில்லி போலீஸ்

 

புதுடில்லி : தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தினகரன். இவரை விசாரணைக்காக டில்லி போலீசார் இன்று (ஏப்ரல் 27) சென்னை அழைத்து வருகின்றனர்.
 

 

சென்னை விரையும் டில்லி போலீஸ் :


இரட்டை இலை சின்னத்தை பெருவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் நேற்று முன்தினம் இரவு தினகரன் கைது செய்யப்பட்டார். இவர் நேற்று டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தினகரன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். தினகரனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டில்லி போலீசாரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் தினகரின் ஜாமின் மனுவை நிராகரித்து நீதிபதி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் தினகரனை அழைத்துக் கொண்டு டில்லி போலீசார் சென்னை புறப்பட்டனர். தினகரனுடன் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760048

Link to comment
Share on other sites

டிடிவி.தினகரன் முதல்வர் பதவிக்கு ‘குறி’ வைத்தார்: விசாரணையில் பரபரப்பு தகவல்

டிடிவி. தினகரன் முதல்வர் பதவிக்கு குறி வைத்தே இரட்டை இலை சின்னத்திற்காக ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
 
டிடிவி.தினகரன் முதல்வர் பதவிக்கு ‘குறி’ வைத்தார்: விசாரணையில் பரபரப்பு தகவல்
 
சென்னை:

ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனிடம் போலீசார் சுமார் 40 மணி நேரம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

அடுத்த கட்டமாக அவரை 5 நாள் காவலில் எடுத்துள்ள டெல்லி போலீசார் மேலும் அவரிடம் இருந்து புதிய தகவல்களை பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை விசாரணை குழுவினரிடம் டி.டி.வி.தினகரன் அளித்துள்ள பதில்கள் பற்றி டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் தீவிரமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதற்காகத்தான் அவர் கோடிக்கணக்கில் பணபேரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறும் போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்துள்ளது. அதில் வெற்றி பெற்றால்தான் முதல்-அமைச்சர் பதவியை எளிதாக பெற முடியும் என்று அவர் குறி வைத்திருந்தார்.
 
201704271139487250_irattai-chinnam._L_st

அதன்காரணமாகவே அவர் ரூ.50 கோடி வரை லஞ்சம் கொடுக்க முன் வந்தது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. இதற்காக அவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் பல தடவை பேசியுள்ளார்.

நாங்கள் விசாரணை நடத்திய போது முதலில் அவர் இதை மறுத்தார். ஆனால் ஒரே கேள்வியை நாங்கள் 5 விதமாக கேட்ட போது அவர் சுகேசிடம் பேசியதை ஒப்புக் கொண்டார்.

அவரது பெங்களூர் நண்பர் மல்லிகார்ஜுனா இந்த பணப்பரிமாற்றங்களுக்கு உதவியாக இருந்துள்ளார். அவர்தான் முதல் தவணை தொகையாக ரூ.10 கோடியை திரட்டியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சில தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளிடம் ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது. அந்த பணத்தை அவர்கள் கொச்சியை சேர்ந்த ஹவாலா ஏஜெண்டு ஷேக் பைசல் மற்றும் டெல்லி சாந்தினி சவுக்கை சேர்ந்த 2 பேர் மூலம் கைமாற்றியுள்ளனர்.

ஹவாலா ஏஜெண்டுகள் அனைவரும் எங்கள் விசாரணைக்குள் உள்ளனர். அவர்கள் ரூ.10 கோடி பணம் கைமாறியதை ஆதாரபூர்வமாக ஒப்புக்கொண்டனர். எனவே அடுத்தக் கட்டமாக சென்னை, கொச்சி, பெங்களூர் நகரங்களில் விசாரணையையும், சோதனையும் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/27113945/1082246/TTV-Dinakaran-aimed-to-become-TN-CM.vpf

Link to comment
Share on other sites

டி.டி.வி.தினகரன் கைதுக்குக் காரணன் ஜனார்த்தனன்...!? பின்னணி என்ன?

 
 

தினகரன்

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயிலுக்குப் போன சசிகலா, தன் இருப்புக்கு எதிர்காலத்தில் சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்று தன்னுடைய அக்காள் மகன் டி.டி.வி.தினகரனை கட்சிக்குள் கொண்டுவந்தார். ஆனால், ஒட்டுமொத்தமாக மன்னார்குடி குடும்பமே கட்சிக்கு முழுக்குப் போடும் நிலையை ஏற்படுத்திவிட்டார் டி.டி.வி தினகரன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா பிரச்னையில் அமைச்சர்கள் சிக்கிய நிலையில், இரட்டை இலை மீட்பு பிரச்னையில் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இது ஆளும்கட்சிக்கு பெரிய தலைவலியை  உருவாக்கி இருக்கிறது. அடுத்து என்ன செய்யலாம் என்று அவரது ஆதரவாளர்கள் ரகசியமாகப் பேசி வருகிறார்கள். இந்த நிலையில், டி.டி.வி தினகரன் கைது விஷயத்தில் டெல்லி போலீசார் சொல்லும் தகவல்கள் இதுதான்.

வருமான வரித்துறை சோதனையின் போது ஆர்.கே நகர் பணப்பட்டுவாடா குறித்து சில அமைச்சர்கள், எம்.பி-க்கள் பெயர்கள் லீக் ஆனது. அந்த சோதனையில் சிக்கிய சில ஆவணங்களை வருமான வரித்துறையினர்  அப்படியே ரகசியமாக டெல்லிக்கு பரிமாறினர். அதுதொடர்பான தகவல்களை வெளியே கசியாமல் பார்த்துக் கொண்டதோடு ரகசிய விசாரணையையும் மேற்கொண்டனர். அதன் பின்னணியில்தான் டெல்லியில் கடந்த 15-ம் தேதி சுகேஷ் சந்திரசேகர் என்னும் இடைத்தரகரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினகரன்அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ''இந்திய தேர்தல் ஆணையத்தில் மூத்த அதிகாரிகள் 2 பேரை எனக்கு நன்றாகத் தெரியும் என்று அ.தி.மு.க மூத்த தலைவர் ஒருவரிடம் பேரம் பேசினேன்.  இரட்டை இலையை மீட்க 50 கோடி ரூபாய் தருவதாக அவர்கள் சொன்னார்கள். தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் இரண்டுபேருக்கும் தலா ரூ.20 கோடி வீதம் ரூ.40 கோடி கொடுக்க வேண்டும் என்றும் இந்த காரியத்தை செய்து முடிக்க 10 கோடி ரூபாய் கமிஷன் வேண்டும் என்றும் சொன்னேன். அவர்களும் தந்தார்கள். இது தொடர்பாக பல தடவை மூத்த தலைவர் ஒருவரிடம் பல தடவை பேசினேன். டெல்லியில்தான் பணத்தை கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது'' என்று கூறி இருந்தார்.

அதன்பின்னர்தான், டி.டி.வி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. பின்னர் டெல்லிக்கு விசாரணைக்கு அழைத்தனர். டெல்லியில் 4 நாள் விசாரணை என்று மொத்தம் 37 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு 25-ம் தேதி  கைது செய்தனர். அந்த கைதுக்கு அவர்கள் முக்கிய சாட்சியாக ஜனார்த்தனன் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தை சாட்சியாகக் காட்டுகிறார்கள். இவர், டி.டி.வி.தினகரனின் உதவியாளர். போயஸ் கார்டன், அந்தக் கட்சி டி.வி என்று 2002-ம் ஆண்டில் இருந்து டி.டி.வி தினகரனுக்கு நெருக்கமாக, நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கொண்டிருக்கிறார். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் இருந்து டி.டி.வி தினகரனை நீக்கியபோது அவரோடு சென்றுவிட்டார். சசிகலா கைதுக்கு பிறகு, கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் ஆன பிறகு அரசியலில் மீண்டும் பிஸியானார் ஜனார்த்தனன்.

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டெல்லியில் இருந்து இந்த ஜனார்த்தனன் போன் நம்பர் வழியாகத்தான் டி.டி.வி.தினகரனிடம் அடிக்கடி பேசி இருக்கிறார். அந்த உரையாடல்தான் இப்போது டி.டி.வி தினகரனுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி போலீசார் விசாரித்தபோது முதலில் ஜனார்த்தனன் 'தனக்கு ஒன்றுமே தெரியாது' என்றுதான் கூறி இருக்கிறார். போன் உரையாடல்களை அவருக்குப் போட்டுக் காட்டியபோதுதான்  அதிர்ச்சியில் உறைந்து போனது மட்டுமல்லாமல், இனிமேல் தப்பிக்க முடியாது என்று ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்துள்ளார். அவரின் வாக்குமூலம் அனைத்தையும் அப்படியே டெல்லி குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளார்கள். அந்த பதிவுகளை காட்டிய பிறகுதான் டி.டி.வி தினகரனும் 'சுகேஷ் சந்திரசேகரிடம் பேசினேன்' என்று சொல்லி இருக்கிறார். ஆனால், 'பணம் கொடுக்கவில்லை' என்று திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறார். 

இந்த வழக்கில், ஜனார்த்தனனை சாட்சியாக சேர்த்துவிடலாம் என்று டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன. அதற்கான பேச்சுகளும் ஒரு புறம் நடந்துகொண்டு இருக்கிறது. இதுகுறித்து ஜனார்த்தனன் நட்பு வட்டாரத்தில் பேசிய போது, ''கடந்த 15 வருடங்களாக விசுவாசத்தோடு அந்த குடும்பத்துக்கு பணியாற்றி வருகிறார். 2011-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் குடும்பத்தை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கி வைத்தபோது ஆட்சியாளர்களின் கடுமையான நெருக்கடிகளை ஜனார்த்தனன் சந்தித்தார். அப்போது யாருடைய மிரட்டலுக்கும் அவர் பயப்படவில்லை. இப்போது அவர் அப்ரூவர் ஆகிவிடுவார்; அரசு சாட்சியாக மாறிவிடுவார் என்பதெல்லாம் ஜனார்த்தனன் மீது கிளப்பி விடப்படும் வதந்திகள்'' என்கிறார்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/87660-janarthanan-is-one-of-the-reasons-for-ttv-dinakaran-arrest.html

Link to comment
Share on other sites

அடையாறு இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் தினகரன்!

 
 

ttv_dinakaran_intervier_2aa_12399.jpg

இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்ற 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். நேற்று நீதிமன்றத்தில் தினகரனை ஆஜர் செய்தபோது, தினகரனை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி அளித்தது நீதிமன்றம். அதன் தொடர்ச்சியாக தினகரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த டெல்லி குற்றப்பிரிவு புலனாய்வுத்துறையினர் முடிவு செய்தனர்.

இன்று காலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு டி.டி.வி தினகரன் அழைத்து வரப்படுகிறார். விமான நிலையத்தில் இருந்து, தினகரனை அவருடைய அடையார் இல்லத்துக்கு காவல்துறையினர் அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலையிலே தினகரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/87697-delhi-police-en-route-to-chennai-with-ttv-dinakaran-for-investigation.html

Link to comment
Share on other sites

முதலில் அரசு விடுதி... அடுத்து அடையாறு வீடு..! டி.டி.வி.தினகரனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

 

Enqury_ttv_dinakaran_17291.jpg

இரட்டை இலைச் சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனை சென்னை அழைத்து வந்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் உள்ள ஹோட்டலில் கடந்த 18-ம் தேதி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்ததோடு, 1.3 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்ததாகக் கூறினார். இதையடுத்து தினகரன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

டெல்லிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட தினகரனை நான்கு நாள்களுக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து தினகரனை விமானம் மூலம் சென்னைக்கு இன்று டெல்லி காவல்துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தலைமையில் ஐந்து காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

Enqury_ttv_dinakaran_1_17544.jpg

விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவனில் உள்ள மத்திய அரசு விடுதியில் வைத்து தினகரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அடையாறில் உள்ள தினகரன் இல்லத்துக்கு அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அவரிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. 40 நிமிடங்களுக்கு மேல் விசாரணை நடந்து வருவதால் தினகரனின் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/87732-first-government-hostel-next-adyar-house-intense-inquiry-to-ttv-dinakaran.html

Link to comment
Share on other sites

"நெக்ஸ்ட்... அனுராதா..!’’ அதிர்ச்சியில் மன்னார்குடி உறவுகள்

 

அனுராதா -தினகரன்

“தினகரனை  கைது செய்து சசிகலா குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு, அடுத்த கட்டமாக தினகரன் மனைவி அனுராதாவிற்கு குறிவைத்துள்ளது. இதனால் சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்ப உறவுகளும் அதிர்ச்சியில் உள்ளார்கள். 
இரட்டை இலைச் சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், சுகேஷ் சந்திரசேகர் என்கிற தரகரை கைது செய்தார்கள். அவனிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தர தினகரன் தரப்பிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், அதற்கு முன்பணமும் பெற்றதாக வாக்குமூலம் கொடுத்தார். இதுதொடர்பாக தினகரனுக்கு டெல்லி போலீஸார் வீட்டுக்கே வந்து சம்மன் அளித்தனர். இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன் தினகரன் ஆஜரானார். நான்கு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு தினகரனுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி அவரை கைது செய்தனர் டெல்லி போலீசார்.

நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட தினகரனை ஐந்து நாட்கள் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. தினகரனை சென்னையில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்த டெல்லி காவல்துறையினர் அவரை விமானத்தில் சென்னை அழைத்து வந்தனர். அடையாறு வெங்கடேஷ்வரா நகரில் உள்ள அவரது  வீட்டில் வைத்து விசாரணையைத் தொடர்ந்தனர். 
இந்த விசாணைக்குப்பின் வெளியான தகவல்கள் தான் இப்போது சசிகலா குடும்பத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தினகரன் தரப்பில் இருந்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்கு சுகேஷ் சந்திரசேகரிடம் தினகரன் உதவியாளர் ஜனா தான் பேசியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் மல்லிகார்ஜுனாவும் உடன் இருந்துள்ளார். அதிகாரிகளுக்கு பணம் கொடுப்பது குறித்து அப்போது பேச்சு எழுந்தபோது, ஒரே தவணையாக பணத்தை கொடுக்க முடியாது என தினகரன் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. முன்தொகையாக பத்துகோடி ரூபாய் சுகேஷ் கேட்டுள்ளார். அந்த பணத்தை மல்லிகார்ஜுனன் மூலம் மும்பையில் இருந்து பணம் சுகேஷ் கைக்கு மாறியுள்ளது. 

தினகரன்

இந்தப் பணம் வந்த வழியை இப்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆய்வு நடத்திவருகின்றனர். பணம் கொடுக்கப்பட்டதில் தினகரன் மனைவி அனுராதாவுக்கு சம்பந்தம் இருப்பதாக போலீஸார் கருதுகின்றனர். அவர் பெயரில் தான் பணம் மாற்றம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்த ஆவணங்களை கையில் வைத்து கொண்டு தான் சென்னைக்கு வந்த விசாரணைக்குழு தினகரன் வீட்டிலும் ஆய்வு செய்து வேறு சில ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளார்கள். தினகரன் வீட்டில் வைத்தே அனுராதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

அனுராதாவையும் இந்த வழக்கில் சிக்கவைக்கும் முயற்சியில் கனக் கச்சிதமாக டெல்லி காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள். அனுராதாவுக்கு இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதற்கான ஆதாரங்கள் வலுவாக இருந்தால் அனுராதாவும் வளைக்கப்படலாம் என்கிறார்கள். தினகரனை டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து அவர் வீட்டில் வைத்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் சசிகலா உறவினர்களிடம் எழுந்துள்ளது. அனுராதா, தினகரன் மனைவி என்பதைத் தாண்டி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் ஆவார். 

சசிகலா குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் கொடுப்பதன் பின்னணியில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதால் விழிபிதுங்கி நிற்கிறார்கள், சசிகலா உறவுகள். 
அடுத்தடுத்த நிகழ்வுகளில் பொறுத்திருந்துப் பாருங்கள் என்கிறார்கள் டெல்லி அதிகாரிகள்!

http://www.vikatan.com/news/tamilnadu/87759-anuradha-likely-to-be-questioned-soon.html

Link to comment
Share on other sites

தேர்தல் கமிஷனுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டில்லி போலீசா ரால் கைது செய்யப்பட்டுள்ள தினகரன், மேல் விசாரணைக்காக நேற்று சென்னை அழைத்து வரப்பட்டார். அப்போது அவரைப் பார்க்க அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை. அவருக்கு ஆதரவாக கோஷம் போடவும் போதிய ஆட்கள் இல்லை.

 

Tamil_News_large_1760193_318_219.jpg

டில்லி போலீஸ் என்பதால் அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் தலைமறைவாகி விட்டனர். வழக்கமாக வரும் துதிபாடிகளை காணாததால் தினகரன் வருத்தத்துடன் காணப்பட்டார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க சசிகலா வின் அக்கா மகன் தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவன் மூலம் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து சட்ட விரோத மாக 10 கோடி ரூபாய் டில்லிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

அதில் 1.30 கோடி கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஹவாலா ஏஜன்ட் மூலம் டில்லி நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த

சுகேஷ் சந்தரிடம் சேர்க்கப்பட்டுள்ளது. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய டில்லி போலீசார் சுகேஷ் சந்தரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். அவனது வாக்குமூலப்படி தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம்கொடுக்க முயன்ற விவகாரத்தில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனன் சிக்கினர்.

அவர்களு டன் அலைபேசியில் பேசிய உரை யாடல்கள் மற்றும் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்களையும் போலீசாரிடம் சுகேஷ்அளித்துள்ளான்.

இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தினகரனுக்கு டில்லி போலீசார் சம்மன் அளித்து பல கட்ட விசாரணைக்கு பின் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்தனர். அவரையும் மல்லிகார்ஜுனாவையும் போலீஸ் காவலில் விசாரிக்க ஐந்து நாள் அனுமதி பெற்றனர்.அதன்படி நேற்று மதியம் டில்லியில் இருந்து தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை 'ஏர் இந்தியா' விமானம் மூலம் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையில் 11 பேர் இடம் பெற்ற போலீஸ் படையினர் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அப்போது அவரை காண நாஞ்சில் சம்பத் மற்றும் கர்நாடக ஜெ., பேரவை செயலர் புகழேந்தி மட்டுமே வந்திருந்தனர். முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை. விமான நிலையம் அருகே இருந்தவர்களும் டில்லி போலீசார் கண்ணில் பட்டால் தாங்களும் சிக்கி கொள்வோம் என்பதால் ஓட்டம் பிடித்தனர். துதிபாதிகளை காண முடியாததால் தினகரனும் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். பின்

 

டில்லி போலீசார்தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது லஞ்சப் பணம் எங்கிருந்து வந்தது; அதை எங்கு பதுக்கி வைத்து இருக்கிறீர்கள் என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள் ளன. மாலையில் தினகரனை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர் தந்த தகவலின் அடிப்படையில் ஆவணங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தினகரன் மனைவி அனுராதாவிட மும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பின் தினகரனையும் மல்லிகார்ஜுனாவையும் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற முயன்ற, மூன்று தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள்; இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதா கக் கூறிய தேர்தல் கமிஷன் அதிகாரிகள்; சுகேஷ் பின்னணியில் இருக்கும் வி.வி.ஐ.பி.,க் கள் குறித்த விபரங்களையும், டில்லி போலீசார் சேகரித்துள்ளனர்.

தினகரன் தொடர்பான விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி அண்ணா நகரில் உள்ள மல்லிகார் ஜுனாவின் வீடுகளுக்கு அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். பின் தினகரன், மல்லிகார்ஜுனாவை பெங்களூரு, கொச்சிக்கும் அழைத்துச் சென்று விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1760193

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
    • இதனை வேற சொல்லித்தான் தெரியனுமா ......பங்காளி மாட்டிட்டாரு ....தமிழிலில் ஒரு பழமொழி "ஆழம் தெரியாமல் காலை விடாதே " சும்மாவா சொன்னார் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.