Jump to content

ஞானசார தேரர் மாயக்கல்லி விஜயம்

Recommended Posts

ஞான­சார தேரர் மாயக்­கல்லி விஜயம்

03-30a2bd5729b9814958668071f881c03e17824b8b.jpg

விகாரை நிர்­மா­ணிக்­கவும் 2 ஏக்கர் காணி காணி சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு மாற்றுக் காணி
 (அம்­பாறை மேல­திக நிருபர்)

பொது பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அம்­பாறை பௌத்த பிக்­கு­க­ளுடன் நேற்று செவ்வாய்க் கிழமை இறக்­காமம் மாயக்­கல்லி மலை­யடி வாரத்­திற்கு விஜயம் செய்தார். 

மாயக் கல்லிப் பிர­தேச விகாரை விடயம் தொடர்பில் நேற்று அம்­பாறை கச்­சேரியில்

அரச அதிபர் துசித்த வணி­க­சிங்க தலை­மையில் நடை­பெற்ற உயர் மட்ட மாநாட் டில் மாகாணக் காணி ஆணை­யாளர் டீ.டீ. அனுர தர்­ம­தாச  மாவட்ட உதவிக் காணி ஆணை­யாளர் டீ.டீ.எஸ். தக்­சிலா குண­ரத்ன மாவட்ட நில அளவை திணைக்­கள அதி­கா­ரிகள் மற்றும் இறக்­காமம் பிர­தேச செய­லாளர் எம்.எம். நசீர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்­டிலும் ஞான­சார தேரர் உட்­பட பௌத்த பிக்­குகள் பலரும் பங்கேற்றனர். விகாரை நிர்­மா­ணிப்­ப­தற்­கான காணியை வழங்­காமை குறித்தும் அரச அதி­ப­ரிடம் ஞான­சார தேரர் விசனம் தெரி­வித்தார்.  

இத­னை­ய­டுத்து மாயக்­கல்லி மலை­யடி வாரத்தில் விகாரை நிர்­மா­ணிக்க 2 ஏக்கர் காணியை வழங்­கு­வ­தா­கவும் அக் காணிச் சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு உடன் மாற்றுக் காணி வழங்­கு­வ­தா­கவும் மாகாணக் காணி ஆணை­யாளர் அனுர தர்மதாச குறிப்­பிட்டார். மேலும் விகா­ரைக்­கான காணிக்கு ஒரு வார காலத்தில் உறு­திப்­பத்­திரம் வழங்­கப்­ப­டு­மென்றும் மாநாட்டில் முடி­வெ­டுக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்தே விகாரை நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வி­ருக்கும் மாயக் கல்லி மலைப்­ப­கு­தி­யையும் ஞான சார தேரர் பார்­வை­யிட்டார்.

மாயக்­கல்லிப் பிர­தே­சத்திற்கு அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை அம்­பாறை மேல­திக மாவட்ட நீதி மன்றம் எவரும் நுழை­யாத வாறு இடைக்­காலத் தடை உத்­த­ரவு விதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மாயக்­கல்­லியில் கருத்துத் தெரிவித்த ஞானசார தேரர், எமது பௌத்த நாட்டில் பௌத்த விகாரை அமைக்க நாம் எவரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-26#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு அவலங்கள் வந்தபோதெல்லாம் நாம் தமிழரல்ல, முஸ்லீம்கள் என்றார்கள்...

இன்று தமிழர்களிடம் இருந்து முஸ்லீம்களை மத ரீதியாக, அஸ்ரப்பினை வைத்து பிரித்த சிங்களம், இன்று தமிழர் சோலியை முடித்த பின் அவர்களை இலக்கு வைத்துவிட்டது.

முஸ்லீம் மதப் பிரிவினருக்கு இருக்கும் உலகளாவிய அரசியல் பிரச்சணையால், இந்திய, சீன, மேலை நாடுகளின் ஆதரவு கிடைக்க வாய்ப்பில்லை. 

இப்போதாவது, தமிழராக உறுதியாக இணையாவிடில்.... ஒட்டுமொட்ட சிறுபான்மையினருக்கே இழப்புத்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி!  அவர்கள் இணைய முற்பட்டாலும் அவர்களை இணைப்பதா இல்லையா என்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடம்.  கிழக்கு மாகாண சபையை ஏற்கனவே தமிழர்கள் இழந்து விட்டார்கள்.  அதை இனித் திரும்ப மீட்டுக்கொள்வதென்பது நடக்கக் கூடிய விடயமல்ல.    கிழக்கு மாகாணச் சிங்கள மக்களுடன் சேர்ந்தே தமிழர்கள் அதைத் தங்கள் வசப்படுத்த வேண்டும்.  அதில் குறியாக இருப்பதை விட்டுவிட்டு இத்தகைய சிறிய விடயங்களில் சிங்கள மக்களின் முகச்சுழிப்பையும் வெறுப்பையும் சம்பாதிப்பது சரியான அரசியலாகாது என நினைக்கிறேன்.  இந்த விடயத்தை அவர்கள் பாட்டில் விட்டுவிடுவதே சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, karu said:

கிழக்கு மாகாணத்தில், ததேகூ ஆதவுடன் தான் அவர்கள் ஆள்கின்றனர் அல்லவா?

ஐ சு மு உடன் ஆன கனவான் ஒப்பந்தப் படி முதல் பாதியில் பிள்ளையானும், பின் பாதியில் நசீரும் முதலமைச்சர்கள்.

மைத்திரியின் சுதந்திர கட்சி இந்த ஒப்பந்தத்தை தொடர விரும்ப வில்லை யாயினும், எங்கண்ட சம்பந்தர் ஐயா நல் இணக்கத்தில் அவர்கள் வண்டி ஓடுது கண்டியளே. அதாவது, பிள்ளையான் போன்ற ஐ சு மு யின்  தமிழ் உறுப்பினர்கள் ஆதரவுடன், முஸ்லீம் காங்கிரஸைக் கவுக்க முடியும்.

மேலும் இவ்வாண்டு தேர்தல்..

Inline images 1

Link to comment
Share on other sites

6 hours ago, karu said:

நாதமுனி!  அவர்கள் இணைய முற்பட்டாலும் அவர்களை இணைப்பதா இல்லையா என்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடம்.  கிழக்கு மாகாண சபையை ஏற்கனவே தமிழர்கள் இழந்து விட்டார்கள்.  அதை இனித் திரும்ப மீட்டுக்கொள்வதென்பது நடக்கக் கூடிய விடயமல்ல.    கிழக்கு மாகாணச் சிங்கள மக்களுடன் சேர்ந்தே தமிழர்கள் அதைத் தங்கள் வசப்படுத்த வேண்டும்.  அதில் குறியாக இருப்பதை விட்டுவிட்டு இத்தகைய சிறிய விடயங்களில் சிங்கள மக்களின் முகச்சுழிப்பையும் வெறுப்பையும் சம்பாதிப்பது சரியான அரசியலாகாது என நினைக்கிறேன்.  இந்த விடயத்தை அவர்கள் பாட்டில் விட்டுவிடுவதே சிறப்பு.

கரு, முஸ்லிம்கள் விட்ட வரலாற்றுத் தவறை நாமும் விட வேண்டுமா?

நாதமுனி குறிப்பிட்டுள்ளது போன்று முஸ்லிம்கள் பெரும்பான்மை இன மக்களுடன் இணைந்து இருந்தால் அதிக நன்மை கிடைக்கும் என நினைத்துதான் சிங்கள மக்களுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராக அரசியல் செய்தனர். ஆனால் தமிழர்களின் பலத்தை நசுக்கிய பின் இன்று சிங்கள பேரினவாதம் முஸ்லிம்களை நசுக்க முனைகின்றது. இப்போது நாமும் முன்னர் முஸ்லிம்கள் செய்ததைப் போன்று சிங்களவர்களுடன் இணைந்தால் நாளை மீண்டும் நாம் தான் நசுக்கப்படுவோம்.

சிறுபான்மை மக்களின் இணைந்த அரசியல் தான் அவர்களின் இருப்பை இலங்கையில் உறுதிப்படுத்தும். அடம்பன் கொடிகள் திரண்டால் தான் மிடுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

முஸ்லிம்களின் இன்றய பெரும் பிரச்சனையே, நீள்பார்வை இல்லாத தலைமைகள். சகலரும் சுயநல வாதிகள். இதை கொழும்பு தமிழ் பத்திரிகைகள் எல்லாமே எழுதுகின்றன.

இதனைப் புரிந்தே சம்பந்தரும் பல விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகின்றார். அதில் ஒன்றே நான் மேல சொன்ன கிழக்கு மாகாண சபை.

இந்த முஸ்லீம் அரசியல் தலைமைகளில் மிகவும் அடாவடி அரசியல் செய்பவர் றிசாட் பதியுதீன். இவர் வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து, அவ்வாறு இருந்தே படித்து, மொரட்டுவ பல்கலைக் கழகம் சென்றவர். இடம் பெயர்ந்தமைக்கு யார் காரணமோ, அவர்கள்மீது கோபம் இருக்கக் கூடும்.

இவரது கட்சிக்கும், ஹக்கீமின் முஸ்லீம் காங்கிரசுக்கும் இடையே போட்டி. அதன் விளைவே வில்பத்து முஸ்லீம் மக்கள் பிரச்சனை தீர்வின்றி போகிறது. அதாவது றிசாட்டுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க கூடாது என்னும் முஸ்லீம் காங்கிரஸ் உடைய,  தில்லாலங்கடி வேலையால், தீர்வு இல்லாமல் போகின்றது.

இந்த தில்லாலங்கடி வேலை அரச மட்டத்தில் மட்டுமில்ல, ஞானசேரர் போன்ற பலரை கிண்டிவிடும் அளவுக்கு உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது. மக்களுக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுணப் பிழை ஆகட்டும் என்ற நிலைமை.

இலங்கையின் முஸ்லீம்கள் இடையே பல வகைகள் உண்டு. ஒன்று, பாகிஸ்தான், சிரியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து அரபு வணிகர்களாக வந்து குடியேறியவர்கள். அடுத்தவர்கள் தமிழகத்தில் இருந்து வந்து குடியேறி உள்ளூர் மக்களுடன் இணைந்து கலந்து இலங்கை முஸ்லீம்களானவர்கள். இவர்களில் ரவூப் ஹக்கீம், அசாத் அலி போன்றவர்கள் முதல் வகையிலும், றிசாட் போன்றவர்கள் இரண்டாவது வகையிலும். 

இருபகுதிகளுக்கும் இடையே வெளியே தெரியாத ஈகோ பிரச்சனைகள். அவர்கள் வேறு வேறு முஸ்லீம் மதப்பிரிவுகளாகவும் இருக்கலாம்.

இந்த சிங்கள புத்த பிக்குகளின் வேலையினால், (முக்கியமாக மட்டக்களப்பு தூசனப் பிக்கர், சமண தேரர்) கிழக்கின் சாதாரண தமிழ், முஸ்லீம் மக்கள் தமது இயலாத தன்மை குறித்து உணர்கிறார்கள்.

இந்த மாயக்கள்ளி மலை விடயமே, இருவரும் சேர்ந்த உறுதியான போராட்டம் மூலமே தவிர்க்க முடியும். 

தமிழ் பேசுவோராய், இலங்கையின் தமிழர், முஸ்லிம்கள், இந்திய தமிழர்கள் இணையாவிடில் யாருக்குமே நிம்மதியான வாழ்வு கிடையாது. 

அதேவேளை சம்பந்தர் செய்வது பக்குவ அரசியல் என்பது எனது கருத்து. இன்றைய நிலையில் அதை விடுத்தால் வேறு வழி இல்லை. 

நிலத்தினை மீட்க என நடந்த புலிகளின் போராட்டத்தின் போது, நாம் இழந்த காணிகளை, இப்போது அகிம்சைப் போராட்டத்தின் மூலமே மக்கள் மீட்டு எடுக்கின்றனர்.

மக்கள் அகிம்சை போர் செய்ய, தமது துப்பாக்கிகளுக்கு வேலை இல்லை என்பதை படையினர் உணர்கின்றனர். வருடப்பிறப்புக்கு பல காரங்களுடன் வந்து அதே மக்களை சந்தித்து அவர்களது போராடடத்தின் நியாயத்தினை உறுதி படுத்துகின்றனர்.

பெரும் படைபலம் என்னும் யானையை, தேவையில்லாமல் கட்டி சோறு போடுகிறோம் என, வங்குரோத்து நிலையில் உள்ள அரசு விரைவில் உணரும் போது, மிகுதி காணிகளும் விடுவிக்கப் படும்.

அதேவேளை, கஜே கோஸ்ட்டி அரசியலும், தமிழர் மத்தியில் பெருமளவில் எடுபடாது. ஏனெனில் மக்கள், போதுமடா சாமி என்ற நிலையில் இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

முஸ்லிம்கள் தாங்கள் நம்பத் தகுந்தவர்கள் என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வரை அவர்களுக்கு சார்பாக நடப்பது, கதைப்பது தமிழினத்தின் அழிவில் தான் முடியும். மண்குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்க முடியாது.

தமிழர் காணிகள் பலவற்றை ஆக்கிரமித்திருக்கும் முஸ்லீம் கள்ளக்காணிக் கும்பல் தமது திருகுதாளங்களை உணர்ந்துகொள்ள ஞானசாரர் போன்றவர்களின் சிங்கள-பௌத்த பயங்கரவாதம் இன்னும் ஆழமாக பாயவேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

அவர்களுக்கு பின்னால் நீங்கள் போகவேண்டியதில்லை. 

அவர்கள் தான் பின்னால் வரவேண்டும்.

காரணம், அவர்கள் சிறுபான்மை மட்டுமல்ல, உலக அரசியல் அபிப்பிராயமும் அவர்களுக்கு எதிராகவே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் இளைஞர்கள் கோழைகளா..? வீரமிகு தாய்மார்களிடம் பால் குடித்தார்களா..??

(இறக்காமத்திலிருந்து வலீத்) அம்பாறை மாவட்ட இக்காமத்தில் முஸ்லிம்களின் காணியில் புத்தர் சிலையை வைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் தீவிரப்படுத்தபட்டுள்ளன. முஸ்லிம் அரசியல் தலைவர்களிடத்தில் இதுகுறித்து முறையிட்டும், முஸ்லிம் தலைமைகளினால் அதனைத் தடுத்துநிறுத்த முடியவில்லை.

புத்தர் சிலையை நிறுவும் நோக்குடன் கடந்த செவ்வாய்கிழமை, 25 ஆம் திகதி அப்பகுதிக்கு சென்றிருந்த ஞானசாரர் உள்ளிட்ட பௌத்த கடும்போக்குவாதிகள் முஸ்லிம்களை தூஷித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் ஞானசாரரும் அவனது சகாக்களும் இலங்கை முஸ்லிம்களின் இதயபூமியான அம்பாறையில் தமது அடாவடித்தனத்தை காண்பித்துள்ளனர். இறக்காமத்தில் புத்தர் சிலை நிறுவப்பாட்டால், அவர்களின் அட்டகாசம் அதிகரிப்பதுடன், மேலும் பல முஸ்லிம் பிரதேசங்கள் சுவீகரிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

இந்தநிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் அரசியல் தலைமைகளை நம்பிக் கொண்டிருக்காமல், தமது பூர்வீகப் பிரதேசங்களை பாதுகாக்க வீதிக்கு வரவேண்டும். தாம் கோழைமிகு தாய்மார்களின் மார்பகங்களில் பால்குடித்து வளர்ந்த பிள்ளைகள் அல்ல என்பதை இந்நாட்டுக்கு நீரூபித்துக்காட்ட வேண்டியது அம்பாறை மாவட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு காலம் இடும் கட்டளையாகும். எனவே நேரம் தாமதிக்காது, தமது தாயகப் பூமியை சிங்கள இனவாத சக்திகள் கபளீகரம் செய்வதை தடுத்துநிறுத்தவும், தாம் வீரமிக்க முஸ்லிம் முஸ்லிம் இளைஞர்கள்தான் என்பதை நிரூபிக்கவும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு தற்போது வாய்ப்புக் கிட்டியுள்ளது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் இளைஞர்களே ‘பந்து’ தற்போது எங்கள் கையில்..!

AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=126847 .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, colomban said:

கெளப்பிறாங்கையா... கெளப்புறாங்க...:rolleyes:

Link to comment
Share on other sites

இறக்காமம் விவகாரம்: ஹக்கீம் – சம்பந்தன் இணைந்து செயற்பட முடிவு

1379325567hakeem-with-sambanthan

இறக்காமம் மாயக்கல்லி மலையில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியை தடுப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை நேற்றிரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு விஜயம்செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் இரா. சம்பந்தனுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மாயக்கல்லி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய உயர்‌மட்ட நடவடிக்கைளை இருதரப்பும் கூட்டாக முன்னெடுப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதுதொடர்பாக ஜனாதிபதி மட்டத்தில் மிக விரைவாக பேசுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய மலையை அண்டியுள்ள காணியை அதன் உரிமையாளர்களிடமிருந்து அடாத்தாக ஆக்கிரமித்து, அவ்விடத்தில் பெளத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முஸ்தீபுக்கு ஆதரவளிப்பது நல்லாட்சி அரசாங்கத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் ஒரு செயல் எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தடையுத்தரவு தீர்மானத்தை அமுல்படுத்துவதில், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் எவரும் இடைஞ்சலாக செயற்படக்கூடாது என்பதை இருவரும் அழுத்தமாக வலியுறுத்தவுள்ளனர்.

இத்தீர்மானங்களோடு, இறக்காமம் மக்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இவ்வார இறுதிக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மாயக்கல்லி மலைக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

http://www.dailyceylon.com/123058

Link to comment
Share on other sites

வட கிழக்கு மாகாணங்களில் முசுலீம்களால் ஆக்கிரமிக்கப்படும் நில விவகாரங்கள் பற்றிச் சம்பந்தன் ஐயா யாருடன் இணைந்து செயற்படப் போகிறார்.?? :shocked: Bildergebnis für நரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

வட கிழக்கு மாகாணங்களில் முசுலீம்களால் ஆக்கிரமிக்கப்படும் நில விவகாரங்கள் பற்றிச் சம்பந்தன் ஐயா யாருடன் இணைந்து செயற்படப் போகிறார்.?? :shocked: Bildergebnis für நரி

 மோடியுடன் சேர்ந்து என்று நான் நினைக்கிறென்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எங்குமே இல்லாததொரு நிலை இலங்கையில் சிறுபான்மையினரின் நிலை. அடிப்பவனிடமே ஓடுவது. இதனை மாற்றவேண்டுமாயின் சமாந்தரமாக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதே வழி.(சரி பிழை அனைத்தையும் சுயவிமர்சனம் செய்துகொள்ளல்) இல்லையென்றால் பலமானவரை அழித்தபின் அடுத்தவரை அழிப்பது தொடரும். தமிழ் முஸ்லிம்  அரசியல்வாதிகள் முதலில் நல்ல வழிகாட்டும் தலைமைகளாக மாறவேண்டும். சுயநல அரசியலைக் களைந்து தமிழர்களாகச் சிந்திப்பதோடு தத்தமது கலாசார விழுமியங்களை பேணும்வகைகளையும் கண்டறிந்து ஐயம் களைந்து இணையாவிடின் தமிழருக்கே சேதாரம். 

தமிழர்தலைமைகள் என்று சொல்வோரிடம் தாயகநிலவரைபு படைகளின் ஆக்கிரமிப்புப்பகுதிகள் சிங்களக்குடியேற்றங்கள் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு எனத்திகதிவாரியானதொரு ஆவணத்தை தமிழ்தேசியக் கூட்டமைப்போ, தமிழ்தேசிய முண்ணனியோ, தமிழ் மக்கள் பேரவையோ கொண்டுள்ளதா? முதலில் ஒரு சரியான வேலைத்திட்டமின்றிய செயற்பாடானது திசைதெரியாத பயணத்திற்கொப்பானது. இதுதான் இன்றைய தலைமைகளின் நிலை. வெளிநாட்டு அரசியலாளர்களைச் சந்திக்கும்போது வெறுமனே கைகொடுப்பதைவிட இதுபோன்றதொரு ஆவணத்தைக் கொடுத்து உரையாடுவதே பொருத்தமானது. அதேவேளை இப்படியானதொரு ஆவணம் தயாரிக்கப்பட்டு தமிழர்கள் கைகளிலும் கிடைக்கச்செய்யவேண்டும். குறிப்பாகப் புலம்பெயர் இளையதலைமுறையின் கைகளுக்கு அது கிடைக்கவேண்டும். கபளீகரம் செய்யப்படும் தமிழரது நிலம் மற்றும் வளங்கள் தொடர்பான அடிப்படைகளை அறியாது எதிர்காலத்தில் எமது நிலந்தொடர்பான விடயங்களை கையாள்வது கடினமாகிவிடும். கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் இலங்கையில் தமிழர் வரலாற்று நூலில் கொடுக்கப்பட்டுள்ளபோதும் அது இன்றுவரையானதாக இல்லை. இதுகுறித்துப் புவியியல் வரலாறு கற்கும் பல்கலைக்கழக மாணவர்களாவது சிந்திக்கவேண்டும். 
இலங்கையை,  மாகாணம், மாவட்டம், நகரம், கிராமம், என்ற படிமுறையின் கீழ் ஒரு ஆவணத்தைத் தயாரித்து வெளியிடுவது இன்றை காலத்தில் அவசியமானது. இதனை வட-கிழக்கு மாகாணசபைகள் மற்றும் பல்கலைக்கழக குமுகாயம் இணைந்து இந்தச் செயற்பாட்டை செய்ய முன்வருவது அவசியமானது. இப்படியானதொரு ஆவணம் சிந்திக்கக்கூடிய சிங்களவரிடையேயும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

நிலம் நிலம் என்று பேசுகின்றோம். ஆனால் எமது நிலத்தில் எவளவு பறிபோயுள்ளது என்பது அறியாது இருக்கின்றோம். புலத்திலே இருக்கின்ற இளையோரமைப்புகள் இன்றைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தரவுகளைச் சேகரித்து ஆவணவடிவமாக்க முயல்வதோடு தாயகத்திலேயுள்ளவர்களோடு இணைப்புகளை ஏற்படுத்தி அறிவதனூடாக தாயகத்தின் நிலஆக்கிரமிப்பை ஆதாரங்களோடு வெளிக்கொணரலாம். 

இவற்றை செய்வதனூடாகவே ஞானசாரர தேரர் முதல் றி.பதியுதீன் வரை என்ன செய்கிறார்கள் என்பதோடு சிறுபான்மையினரின் இணைந்த செயற்பாட்டையும் ஏற்படுத்த முடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.