Jump to content

கல்குடா எதனோல் உற்பத்தி தொழிற்சாலை - மக்களுக்கு யார் விளக்கம் சொல்வது?


Recommended Posts

கல்குடா எதனோல் உற்பத்தி தொழிற்சாலை - மக்களுக்கு யார் விளக்கம் சொல்வது?
 
 

article_1493101945-arrack-new.jpg- அதிரதன்  

வறுமையைப் பற்றியும், வருமானப்பிரச்சினை பற்றியுமே எல்லோரும் பேசுகின்றனர். ஆனால் அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் பற்றிய சிந்தனை, எத்தனை பேரிடம் இருக்கிறது என்றால் கேள்விக் குறியாகிறது.
மட்டக்களப்பு, வறுமையில் முதலிடம் வகிப்பதாகவும் வருமானக்குறைவு, வீட்டுப்பிரச்சினைகள் கொண்ட மாவட்டமாகவும் கருதப்படுகின்றது.

ஒன்றை இழந்தால்தான் மற்றென்றைப் பெறமுடியும். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதெல்லாம் கூடப் பலருக்கு மறந்துபோய் விட்டது.

ஏன் இந்த விடயத்தைப் பற்றிப் பேசுகிறேன் என்று யோசிக்கத் தோன்றலாம். ஒரு முறை கொழும்பு சென்ற வேளை, முச்சக்கர வண்டியொன்றில் மட்டக்குளியிலிருந்து தெகிவளைக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்போது அதன் சாரதியிடம் எனக்கு தெரிந்த சிங்களத்தில் “யாபாலன கோமத மல்லி” (நல்லாட்சி எப்படித் தம்பி) என்று கேட்டேன். 

அதற்கு அவர் “குனு பாலன” என்றார்.

நாட்டில் ஆட்சிமாற்றம் ஓர் அரசியல் ரீதியான மாற்றமாக இருந்தாலும், பல சிக்கல்களைக்கொண்டு வந்ததாகவே இருக்கிறது. வீதிப்போக்குவரத்து உட்பட இன்னும் பல விடயங்கள் கூட நன்றாகத்தான் இருக்கிறது. 

ஆனாலும், பலவற்றில் முடிவுகள் எடுக்கப்படுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும்தான் தாமதமும் பிரச்சினைகளுமாக இருக்கிறது. இதற்கு எப்போது மாற்றம் வரும் என்றால், காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

எப்போதும் குற்றம் கண்டுபிடிப்பதும், எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஒன்றால் வரப்போகும் நன்மையை விடவும் தீமையை, குறைபாட்டைப் பெரிதாகத் தூக்கிப்பிடித்துக்கொண்டு சண்டைபிடிப்பதும் சாதாரணமாகவே இருக்கிறது. 

இதற்கு யுத்தம் உருவாக்கி வைத்திருக்கிற அச்ச, சந்தேக மனோநிலை சார் உந்துதல்கள்தான் காரணம். இது தமிழர் தரப்புக்கு மாத்திரமல்ல ஏனைய சமூகங்களிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் வீச்சில் வித்தியாசம் தெரிகின்றது.

மட்டக்களப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பருக்குப் பிறகு, மதுபான உற்பத்தித் தொழிற்சாலை  பற்றிய விடயம், வாதப்பிரதிவாதங்களை உருவாக்கிவிட்டிருக்கின்றது.  

கடந்த 2016 செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி, கிரான் ‘றெஜி’ கலாசார மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது, எதனோல் - ஸ்பிரிட் உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, வேம்புக் கிராமத்தில் திறப்பதற்கான அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துடன் கூடிய மனு, வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் 
எஸ்.எம்.ஷிஹாப்தீனிடம் கையளிக்கப்பட்டது.

இப்பொழுது, எட்டு மாதங்கள் கடந்து போயிருக்கிறது. இதற்குள் இருக்கும் அரசியல் என்ன என்பது ஒருபக்கமிருந்தாலும், பல பக்கங்களிலிருந்தும் பிரச்சினைகள் வெடித்த வண்ணம் இருக்கின்றன. 

நேற்றைய தினமும் (24) வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. ஆர்ப்பாட்டங்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள் எனத் தொடர்ந்து, தூண்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் 
அத்தொழில்சாலையின் கட்டுமான வேலைகளும் இடை நிறுத்தப்பட்டிருக்கின்றது.

எப்படியிருந்தாலும், மட்டக்களப்பின் “கல்குடா, வேம்பு பிரதேசத்தில் மதுபானத் தயாரிப்போ, விற்பனையோ இடம்பெறப் போவதில்லை. இக்கிராமத்தில் எரிசாராயத்தை உற்பத்தி செய்து, கொழும்புக்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம். இந்நிலையத்தைத் திறப்பதால், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக, இங்குள்ள 250 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு நேரடியாகக் கிடைக்குமென்பதுடன், 1,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களும் நன்மையடையும். இதன் மூலம் இக்கிராமம் அபிவிருத்தி அடையுமென்ற எதிர்பார்ப்பும் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எரிசாராய உற்பத்திக்குத் தேவையான சோளம், நெல், அரிசி ஆகியவற்றைக் குறித்த நிறுவனம் இக்கிராம விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமென்பதுடன், விவசாயிகளுக்கான மூலப்பொருள் உற்பத்தி ஊக்குவிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளும். 

இந்த உற்பத்திக்கு சந்தைவாய்ப்புடன், கூடிய நியாய விலையும் கிடைக்கும். இதன் முதற்கட்டமாக மேட்டுநிலப் பயிர்ச்செய்கையாளர்கள் 200 பேருக்குத் தண்ணீர் பம்பிகள் வழங்கப்படவுள்ளன என்றும் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. 

மேலும், இந்த உற்பத்தி நிலையத்தைத் திறப்பதற்கான கட்டட அனுமதி கோரி, பிரதேச சபையிடம் விண்ணப்பம் செய்துள்ளபோதிலும், கடந்த பல மாத காலமாக, கட்டடத்துக்கான அங்கிகாரம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டே வந்து கொண்டிருக்கிறது என்பது அந்த நிறுவனத்தின் கருத்தாகவும் தெரிகிறது.

கல்குடா, கும்புமூலை வேம்பு பகுதியில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும், எதனோல் உற்பத்தித் தொழில்சாலை குறித்து எதிர்ப்புகள் மேலெழுந்து வருகின்ற நிலையில், தொழிற்சாலையை உடன் நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு மட்டக்களப்பு அரசியல்வாதிகளால் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி செய்திசேகரிக்கச் சென்ற இரு செய்தியாளர்கள் அத்தொழிற்சாலையை அமைத்துக் கொண்டிருக்கும் சிலரால் துரத்தப்பட்டு, தாக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கல்குடா எதனோல் உற்பத்தி நிலையம் குறித்து, மிகத் தீவிரமாகப் பல தரப்புகளும் எதிரான செயற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

இருப்பினும் இந்த உற்பத்தி நிலையம் மதுபானத் தொழிற்சாலை அல்ல;இது ஓர் எதனோல் உற்பத்தித் தொழிற்சாலை என்ற  வாதமும் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.

நெல்லைப் பயன்படுத்தி எதனோல் உற்பத்தி செய்யப்படப் போவதனால் அரிசியின் விலை அதிகரிக்கும்; மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பிரச்சினையாகும். மதுபானப்பாவனை அதிகரிக்கும்; அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும். அதிக நீர் பாவனைக்காக நுகரப்படுவதனால் நிலத்தடி  நீர் தட்டுப்பாடாகும். என்றெல்லாம்  எதிர்வினையான முறையில் கருத்துகள் வெளியிடப்பட்ட வண்ணமே இருக்கின்றன.

மதுபான உற்பத்தியும் விற்பனையும் இலங்கையின் மொத்த வருமானத்தில் மிக முக்கிய பங்கினைக் கொண்டதாக இருக்கிறது. மதுபானச்சாலைகளுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவது அரசியல் அதிகாரங்களினாலும், கொழும்பிலுள்ள மதுவரித்திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினாலும் தீர்மானிக்கப்படுகிறது. மாவட்ட ரீதியிலோ, பிரதேச செயலக ரீதியாகவோ அதற்கான எந்தத் தீர்மானத்தினையும் மேற்கொள்ள முடிவதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் தற்போது 67 மதுபான சாலைகள் உள்ளன. இவை மாவட்டத்துக்கென அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையினை விடவும் அதிகம். 

ஆனாலும், அவற்றில் ஒன்றையேனும் இரத்துச் செய்வதற்கு முடியாத நிலையே காணப்படுகிறது.  மட்டக்களப்பிலுள்ள இந்த மதுபான சாலைகள் கண்டி உட்பட பல மாவட்டங்களில் ஏற்கெனவே இருந்தவைகளாகும். அவை விசேட நாடாளுமன்ற அனுமதியின் அடிப்படையில் வேறுமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டவை. 

மதுபானசாலைகளை மட்டக்களப்பில் குறைப்பதன்மூலம் மாத்திரமே மதுபானப்பாவனையை ஓரளவுக்குக் குறைக்க முடியுமே தவிர எதனோல் உற்பத்தி நிலையத்தினைத் தடுப்பதன் மூலம் அல்ல என்பதும் ஒருதரப்பினது வாதமாக இருக்கிறது.

எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியாவிட்டாலும் அதுதான் வெளிப்படையான உண்மையாகும். மக்களை வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வைத்துக் கொண்டிருப்பதன்மூலம் அரசியலைக் கொண்டுநடத்த நினைக்கிற ஒருசில அரசியல்வாதிகளின் கட்டுப்பாடுகளுக்கூடாக உந்தப்படுகின்ற மக்கள், எதனோல் உற்பத்தி நிலையம் மட்டக்களப்புக்குத் தேவையில்லை என்று கோசமிடுகின்றனர் என்பது இன்னொரு பக்கவாதம்.

ஆனாலும், கிழக்கில் அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகம், பெரும்போகம் என்று இரண்டு போகங்கள் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. அதில் கிடைக்கும் உற்பத்திகள், நெல் சந்தைப்படுத்தல் சபையின் கொள்வனவுக்கும் மேலதிகமாக தனியார் வியாபாரிகளாலேயே கொள்வனவு செய்யப்படுகின்றன. 

அதற்குக் காரணம் வறுமையில் இருக்கும் விவசாயிகள் வங்கிக்கடன்கள், தங்கநகை அடகுகளுக்கு மேலதிகமாக கிருமி நாசினி விற்பனை நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களால் கொடுக்கப்படுகின்ற கடன்கள்  விதை நெல் விநியோகம், உரம், உழவு மற்றும் அறுவடைக்கு நிதி என்பவை காரணமாக மோசமான பொருளாதார நெருக்கடியில்  இருக்கின்றனர். இவர்களிடம் வரும் தனியார் வியாபாிகள், விவசாயிகளின் நிதிப் பிரச்சினையைச் சீர்செய்து விட்டு, அவர்களது அறுவடை முழுவதையும் அள்ளிச்செல்லும் நிலைமையே காணப்படுகிறது. 

எத்தனால் அல்லது எதனோல் என்பது சர்க்கரையை நொதிக்கச் செய்து தயாரிப்பது வரலாற்றுக் காலம் முதல் மனிதகுலம் அறிந்த முறையாகும். 

அண்மைக் காலங்களில் எதனோல் ஒரு மாற்று எரிபொருளாய் முன்வைக்கப்பட்டு வருகிறது. நேரடியாக ஊர்திகளில் எரிபொருளாகவும் பெட்ரோல் போன்ற எரிபொருட்களோடு கலந்தும் இதனைப் பயன்படுத்தலாம்.

 சோளம் பயன்படுத்தப்பட்டு எதனோல் உற்பத்தி செய்யப்படுகின்ற போது, தற்போது பெருமளவில் சேனைப்பயிர்ச் செய்கையாகவே இருந்துவரும் சோளம் உற்பத்தி பாரம்பரிய, பெருமளவிலான உற்பத்தித் துறையாக மாறலாம். மட்டக்களப்பு மாவட்டத்தின் பெருமளவான மக்களது வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கும் காரணமாகக்கூட மாறலாம்.

நாட்டின் உற்பத்தித்துறை மேம்பாடு நாட்டையும், மாவட்டத்தின் உற்பத்தி தொழிற்துறை மேம்பாடு மாவட்டத்தையும் அபிவிருத்தியடைய உதவும்.

 உலக ஓட்டத்தில் ஓடிச்செல்ல முடியாதவர்கள் காலச் சக்கரத்தில் இல்லாமல் போவதற்கு யார்தான் துணிவார்கள்.

- See more at: http://www.tamilmirror.lk/195395/கல-க-ட-எதன-ல-உற-பத-த-த-ழ-ற-ச-ல-மக-கள-க-க-ய-ர-வ-ளக-கம-ச-ல-வத-#sthash.3M10Suvt.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு கூட்டணி அமைத்ததன்  பிறகு  தனித்து  நிற்கும் போது  எல்லா கட்சிகளினும் ஆதரவு குறைத்து உள்ளது   உதாரணம் வைகோ   விசயகாந்த்.        இவர்களுக்கு கூட்டணி அமைக்க முதல் இருந்த ஆதரவு வீதம்   கூட்டணி உடைந்த பிற்பாடு  இல்லை  சடுதியாக மிகவும் குறைத்து விட்டது   சீமானும். கூட்டணி அமைத்து   அதன் பின் கூட்டணி உடைத்து தனியாக நிற்கும் போது  ஆதரவு குறையும்     இதை தான் சொன்னேன்   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது    அப்படி அமைக்கப்படும் போது  சீமான் கட்சியின் ஆதரவு குறையாது    சீமான் அல்லது வேறு கட்சி தலைவர்கள்   இன்னொரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து   அது உடைத்து அடுத்து வரும் தேர்தலில் தனியாக போட்டி இடும் போது  பொதுவாக  அனைத்து கட்சியின் ஆதரவு குறையும்     கூட்டணி அமைத்து  உடைந்த பிற்பாடு  சின்ன கட்சிகளின் எதிர்காலம்  எப்படி இருக்கும்?? இருக்கிறது?? 
    • ஆகா தில்லை எனக்கு 21 வயது ஐஸ்வரியாவை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. ஐஸ்வரியா வரியா வரியா.
    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.