Jump to content

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது


Recommended Posts

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது

 

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758849

தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது
Link to comment
Share on other sites

லஞ்சம் தர முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் அதிரடி கைது..!

 

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

dinakaran

கடந்த நான்கு நாட்களாக டி.டி.வி.தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நான்கு நாட்களில் 37 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், தினகரன் டெல்லி குற்றப்பரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் டெல்லி போலீஸில் சிக்கிய சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. மேலும், தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீஸார் ஆய்வு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/politics/87558-ttvdinakaran-arrested-by-delhi-crime-branch-police.html

Link to comment
Share on other sites

‘டி.டி.வி.தினகரனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. ராஜதந்திரிக்கு வலை!’ - டெல்லி போலீஸின் அடுத்த அஸ்திரம் #VikatanExclusive

 
 

டி.டி.வி.தினகரன்

 டி.டி.வி.தினகரனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் ராஜதந்திரியாகக் கருதப்படும் எம்பி ஒருவர், தினகரனின் நண்பர் ஆகியோரிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, ஒயிட் காலர் கிரிமினலான சுகேஷ் சந்திரசேகர்மூலம் பேரம் பேசியதாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். ஒரு கோடி, 30 லட்சம் ரூபாய் பணத்துடன் சுகேஷ் சந்திரசேகரைக் கைதுசெய்த டெல்லி போலீஸார், அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரனையும் மல்லிகார்ஜூனாவையும் நள்ளிரவில் கைது செய்தனர். போலீஸ் காவலில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம், தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரனை போலீஸ் காவலில் எடுக்கவும் டெல்லி போலீஸார் முடிவுசெய்துள்ளனர். அடுத்து, இந்த வழக்குத் தொடர்பாக, அ.தி.மு.க-வின் ராஜதந்திரியாகக் கருதப்படும் எம்பி ஒருவரிடமும், தினகரனின் வலதுகரமாகச் செயல்படும் ஒருவரிடமும் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் திடடமிட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, தேர்தல் ஆணையத்திடமே பேரம் பேச டெல்லி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை, டி.டி.வி.தினகரன் தரப்பு அணுகியுள்ளது. சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க. வழக்கறிஞர் ஒருவர் மூலமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அதன்பிறகே, இரட்டை இலைச் சின்னம் மீட்க பேரம் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பான போன் உரையாடல்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம். கடந்த நான்கு நாள்களாக நாங்கள் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தினோம். போலீஸ் காவல் முடிந்து, சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தியபோது, முதல் குற்றவாளியான டி.டி.வி.தினகரனை ஏன் கைதுசெய்யவில்லை என்று நீதிபதி கேட்டார். இதையடுத்தே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, டி.டி.வி.தினகரனையும். மல்லிகார்ஜூனாவையும் கைதுசெய்துள்ளோம். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கியத் தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அதில், அ.தி.மு.க எம்பி ஒருவரின் தலையீடும் டி.டி.வி.தினகரனின் வலதுகரமாகச் செயல்பட்ட ஒருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

டி.டி.வி.தினகரன்

டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகருக்குக் கொடுத்த பணம், ஹவாலா என்பது தெரியவந்துள்ளது. இந்தப் பணம், ஹவாலா கும்பல்மூலம் கொச்சியில்வைத்து சுகேஷ் சந்திரசேகருக்குக் கொடுக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிந்துள்ளது. இதனால், சென்னையைச் சேர்ந்த ஹவாலா கும்பலைச் சேர்ந்தவர்களைத் தேடிவருகிறோம். இதற்காக,  டெல்லி டீம் சென்னையில் தங்கி, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், எங்களின் சந்தேக வளையத்துக்குள் இருக்கும் அ.தி.மு.க. எம்பி., பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இருப்பினும், எங்களது விசாரணை வளையத்துக்குள் அந்த எம்பி இருக்கிறார்.

இதற்கிடையில், டி.டி.வி.தினகரனுக்கு வலதுகரமாக இருக்கும் அ.தி.மு.க.பிரமுகர் ஒருவருக்கு, இரட்டை இலைச் சின்னம் பேரத்தில் தொடர்பு இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம். டி.டி.வி.தினகரன் கைதான தகவல் வெளியானதும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் சிலரது செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிலர் தலைமறைவாகியுள்ளனர். மேலும், சுகேஷ் சந்திரசேகரிடம் கொடுத்தப் பணம் தற்போது யாரிடம் இருக்கிறது என்பது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இதில் எங்களுக்கு, ஆதாரத்துடன் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் பணத்துடன் பதுங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களையும் பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றனர்.

டி.டி.வி.தினகரன் தரப்பில் பேசியவர்கள், "இந்த வழக்குக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. குறிப்பாக, போலீஸார் சந்தேகிக்கும் அ.தி.மு.க. எம்பி ஒருவர், டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பர் ஆகியோருக்கு போலீஸிடமிருந்து எந்தவித சம்மனும் வரவில்லை. அவர்களுக்கும் இந்த வழக்குக்கும் எந்தவித தொடர்பு இல்லை. டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல்செய்ய உள்ளோம். அதோடு, இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகிய அணிகளைச் சேர்ந்தவர்கள், டி.டி.வி.தினகரன் கைதுக்குப் பிறகு, ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியென்றால், டி.டி.வி.தினகரன் கைதுக்காகத்தான் அவர்கள் இதுவரை காலதாமதப்படுத்தினார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. டி.டி.வி.தினகரன் நினைத்திருந்தால், இந்த ஆட்சியைக் கலைத்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி நினைக்கவில்லை. பிளவுப்பட்ட அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக, கட்சியிலிருந்து ஒதுங்குவதாகப் பெருந்தன்மையோடு அறிவித்தார். ஆனால், அவரால் கட்சிக்கு வந்தவர்களே, இன்று அவருக்கு எதிராகச் செயல்படுவது வேதனையளிக்கிறது. இருப்பினும் எல்லாவற்றுக்கும் காலம் பதில்சொல்லும்" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/87576-delhi-polices-next-target-after-ttv-dinakaran.html

Link to comment
Share on other sites

ஜாமீன் கேட்கிறார் தினகரன்; காவலில் எடுத்தது டெல்லி போலீஸ்

 
 

ttv_dinakaran_intervier_2aa_15395.jpg

டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு  கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயற்சி செய்ததாக டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தினகரனிடம் டெல்லி காவல்துறையினர் நான்கு நாள்களாக விசாரணை செய்தனர்.

நான்கு நாள்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார் என்று டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி டெல்லி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சவுத்திரி, டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். ஒரு வாரம் வரை போலீஸ் காவலில் விசாரணை தொடரும் என்று தெரிகிறது. சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

http://www.vikatan.com/news/politics/87613-dinakaran-and-mallikarjuna-appeared-in-delhi-court-and-appealed-for-bail.html

Link to comment
Share on other sites

டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நாளை சென்னை வருகை!

 

Dina_33_18550.jpg

டி.டி.வி.தினகரனை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லியின்  திஸ் ஹசாரி நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நாளை சென்னை வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீஸ், சென்னை அழைத்து வரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயற்சி செய்ததாக டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நேற்று கைது செய்தது. 

நான்கு நாள்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார் என்று டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி டெல்லி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சவுத்திரி, டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று தினகரனை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். கைது நடவடிக்கையை அடுத்து, ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வழக்கு விசாரணையில் டெல்லி போலீஸின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வேகம் பிடித்துள்ளன. 

http://www.vikatan.com/news/india/87635-delhi-police-to-come-to-chennai-tomorrow.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
    • திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
    • 5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.