Sign in to follow this  
வல்வை சகாறா

விழிநீரால் குளிப்பாட்டி.....

Recommended Posts

art.jpg

விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?

ஆணதாய், பெண்ணதாய் பிம்பங்கூட

பேரன்பில் மாய்ந்ததாய் மனதில் தோன்றி

ஊரதும், உலகதும் உறைந்தே போக – உன்

உறவது மட்டுமே உயிர் மேவுமோ?

தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன்

தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன்

வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக்

கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன?

நேற்றுவரை மோகித்த கனவு எல்லாம்

நெடுந்துயர் தந்ததன்றி வேறு இல்லை

ஆற்ற வா…. அன்பே! அருகே நீதான் – அன்றில்

ஆற்றாத துயரோடு……. உயிர் போகுமோ?

எதையுமே கேட்டதில்லை உன்னிடத்திலே

என்னையும் தந்ததில்லை உன் கரத்திலே

பிரிவினை மட்டுமே பேறாய் பெற்றேன் – இந்தப்

பேதையின் நெஞ்சம் செய் பிழைதான் என்ன?

காலனவன் கவர வரும் கடைசி ஒரு வேளை – என் கனவே!

கட்டுடைத்து கரம் இறுகப் பற்றிடவே வருவாயா?

சிதையேற்றி என் உடலைத் தீ தீண்டும் முன்னே – உன்

விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?

sad_eyes_by_paintedmonke.jpg

Edited by வல்வை சகாறா
 • Like 14

Share this post

Link to post
Share on other sites

நெஞ்சை உருக்கும் கவி வரிகள். 

உங்கள் ஆக்கத்திற்கு நன்றி. 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன்

தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன்

வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக்

கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன?

 கேட்கிற வரம் யாருக்கு கிடைக்குது.... கெடுக்கிற வரம் கேளாமலே கிடைக்குது....! அழகான வரிகள்....!  tw_blush:

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
பதில் எழுத முடியாத பதிவு இது
எதில் உனது இதயத்தை நீ தொலைத்தாய்
ஒளியினிலே தொலைத்து விட்ட உன் உறவை
விழியினிலே தேடி விட ஏன் துணிந்தாய்
வழியனுப்பும் தருணத்தை எண்ணி நீயும்
வாழ்க்கையினைத் தொலைக்காதே அன்புத் தோழி
விதி வலிது எனத் துணிந்து நீ எழுந்து
வாழ்க்கையெனும் வரமதனை நீயும் வாழு
கவிதை நன்று
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

வெறும் சடத்துவத்துக்கும்.....மலின உணர்வுகளுக்கும் அப்பாலிருக்கும்...பரந்த வெளியில் பயணிக்கின்றது கவிதை!

மீரா....கண்ணனைத் தேடுவது போல...ஒரு கற்பனையைத் தேடுகிறதா கவிதை.....அல்லது மானிடத்தின் சமூக விதிகளால்..தொலைக்கப் பட்ட எதையோ தேடுகிறதா கவிதை..என்று புரியவில்லை!

ஒரு சூனிய வெளியிலிருந்து பிரசவிக்கப் பட்ட ஒரு கவிதை போல உள்ளது!

எதற்கும்....அந்த ஔவையார் தான் வந்து விளக்கம் தர வேண்டும்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

உயிரோடு வலிகலந்து மொழிசிந்திய கண்ணீர்துளி அருமை

Edited by கஜந்தி
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

யாகவி, சுவியண்ணா, யாயினி, தமிழினி, ரோமியோ, காவலூர் கண்மணி ஆகியோரின் பச்சைப்புள்ளிகளுக்கு நன்றி பகர்கிறேன்

On 4/27/2017 at 6:53 AM, yakavi said:

நெஞ்சை உருக்கும் கவி வரிகள். 

உங்கள் ஆக்கத்திற்கு நன்றி. 

நெஞ்சை உருக்குகிறதா யாகவி நீங்கள் மிகவும் மென்மையானவர் என நினைக்கிறேன். உங்கள் பதிவுக்கு நன்றி சகோ.

Share this post

Link to post
Share on other sites

எனக்கு உந்த கவிதை வாசித்து கருத்து சொல்லும் அளவுக்கு அறிவில்லை இருந்தாலும் எதோ சோக கவிதை என்பது மட்டும் புரிகின்றது....ஒம் நமச்சிவாய..என்று சொல்லி ...ரிலாகஸ் 

On 2017-4-25 at 5:48 AM, வல்வை சகாறா said:

விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
On 4/27/2017 at 10:33 AM, suvy said:

தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன்

தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன்

வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக்

கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன?

 கேட்கிற வரம் யாருக்கு கிடைக்குது.... கெடுக்கிற வரம் கேளாமலே கிடைக்குது....! அழகான வரிகள்....!  tw_blush:

கேட்கிற வரங்களெல்லாம் கிடைத்துவிட்டால் வாழ்க்கையே சப் என்றாகிவிடும். வாழ்க்கை என்பது பெருங்கடலில் படகுபோல் இருக்கவேண்டும் அப்போதுதான் எமக்கு பிறந்ததன் அர்த்தம் புரியும். எக்காரணத்தைக் கொண்டும் தோற்க முடியாது. கட்டாய வெற்றிகளை கைப்பிடித்தே ஆகவேண்டும்...சுவியண்ணா இப்பதிவைப்பார்த்து நீங்கள் தலைமுடியைப் பிய்த்து எறிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.... இருந்தாலும் என்கவி மனம் உங்களை அந்த நிலையில் கற்பனைபண்ணிப்பார்ப்பதை தவிர்கக மறுக்கிறது.<_<

pulling+hair+out+man+large.jpg

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 4/25/2017 at 1:18 AM, வல்வை சகாறா said:

சிதையேற்றி என் உடலைத் தீ தீண்டும் முன்னே – உன்

விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?

வாவ் வாவ் வாவ் வாவ்  சகாறா அக்கா மீண்டும் கவிதையில் கலக்கல்  விழிநீரால் குளிப்பாட்டி விடை தருவாயா  யாருக்கோ அருவி போல் கொடூகிறது போல கண்ணீர்

 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 4/27/2017 at 11:30 AM, Kavallur Kanmani said:
பதில் எழுத முடியாத பதிவு இது
எதில் உனது இதயத்தை நீ தொலைத்தாய்
ஒளியினிலே தொலைத்து விட்ட உன் உறவை
விழியினிலே தேடி விட ஏன் துணிந்தாய்
வழியனுப்பும் தருணத்தை எண்ணி நீயும்
வாழ்க்கையினைத் தொலைக்காதே அன்புத் தோழி
விதி வலிது எனத் துணிந்து நீ எழுந்து
வாழ்க்கையெனும் வரமதனை நீயும் வாழு
கவிதை நன்று

இதயம் இருக்கிறது என்பதை தெரியுமுன்பாகவே காணாமல் போய்விட்டதே தோழி. அப்போதே தெரிந்திருந்தால் பத்திரப்படுத்தி வைத்திருந்திருப்பேன் காலம் எழுதியின் கதையில் ஒரு அத்தியாயமே இல்லாமல் போயிருக்கும். தொலைத்ததை கண்டபின்னர் திரும்பப்பெறும் துணிவின்றிப்போனது.tw_blush: சரி போனாப் போகட்டும் ஆசைப்பட்டு வைத்திருக்கும் பேர்வழி வைத்துக் கொள்ளட்டுமே என்று விட்டுவிட்டேன்....அடப்பாவி மகளே இதயம் இல்லாமல் இருந்தால் இறைலோகப்பதவி பெற முடியாதேடி என்று எண்ணங்கள் வலிமையாகிச்சா... அச்சச்சோ நம்ம இதயத்தை கொண்டு வந்து கடைசி மூச்சில தன்னும் தந்துவிட்டு போ ராசா... நீ என்னிடம் அதைத் திருப்பித் தந்து bye காட்டினாத்தானே நான் நிம்மதியா போக முடியும்.....அதான் கனகாலமா பொத்தி பொத்தி வச்ச பொருளை இழப்பதென்றால் யாருக்கு முடியும்.... அடம் பிடித்து அழமாட்டாங்களா.... அதுதான் நீ அழுகிற அந்தக்கணம்தான் நாம நம்ம பொருளை மீளப் பெறுவது உறுதியாகும் இல்லையா... அத்த நெனைச்சு எழுதின கவிதை தோழி.... நாம எல்லாம் எங்கேம்மா சீரியசான ஆட்களா இருந்திருக்கிறோம்?

என்ன ஒருவரை அழ வைத்து நம்ம பொருளைப் பறிப்பது கொஞ்சம் கடினமானதுதான் பட் பறித்துத்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் அடுத்த உலகத்திலும் தொலைத்ததைத் தேடி அலையவேண்டி வருமே....tw_angry:tw_angry:tw_angry:

hqdefault.jpg

Share this post

Link to post
Share on other sites
On 4/27/2017 at 6:37 PM, புங்கையூரன் said:

வெறும் சடத்துவத்துக்கும்.....மலின உணர்வுகளுக்கும் அப்பாலிருக்கும்...பரந்த வெளியில் பயணிக்கின்றது கவிதை!

மீரா....கண்ணனைத் தேடுவது போல...ஒரு கற்பனையைத் தேடுகிறதா கவிதை.....அல்லது மானிடத்தின் சமூக விதிகளால்..தொலைக்கப் பட்ட எதையோ தேடுகிறதா கவிதை..என்று புரியவில்லை!

ஒரு சூனிய வெளியிலிருந்து பிரசவிக்கப் பட்ட ஒரு கவிதை போல உள்ளது!

எதற்கும்....அந்த ஔவையார் தான் வந்து விளக்கம் தர வேண்டும்!

கண்ணன் என்கிற மாயையை மீரா சிறுவயதில் வரித்ததும் போஜராசனின் மனையானபின்னும் அம்மாயையில் இருந்து மீளாமல் மலினப்பட்டும் சடத்துவத்திற்கு அப்பால் பரந்த வெளியில் வியாபித்தும் பேரன்பில் கட்டுண்டு கிடந்ததும்...... மகத்துவம் பெற்றதும் கிரிதாரி மீதான நேசிப்பால்தானே..

..de1da034867dbd4638218280d8e09337.jpg

சூனிய வெளியில் மட்டுமே ஜீவாத்மா கண்களுக்கு பரமாத்மா புலப்படும்.

rooh-uyir-endral-enna-w619-o.jpg

ரோமியோ இப்படியெல்லாம் திக்குமுக்காட வைக்கக்கூடாது....

வந்தமா வாசிச்சமா இரசிச்சமா என்று இருக்கிறதை விட்டுட்டு பிரபஞ்சத்தின் சூனிய வெளியை பேசி அவ்வெளியில் போய் நின்று பரமாத்மா ஜீவாத்மா என்றெல்லாம் தேடி பெரும் பேரன்புசார் பெரிய விடயங்களை எல்லாம் பேச வச்சிட்டீங்களே ரோமியோ....

இருந்தாலும் ரோமியோ நீங்கள் கற்பூரம்தான்

Share this post

Link to post
Share on other sites
On 24.4.2017 at 9:48 PM, வல்வை சகாறா said:

பிரிவினை மட்டுமே பேறாய் பெற்றேன் – இந்தப்

பேதையின் நெஞ்சம் செய் பிழைதான் என்ன?

காலனவன் கவர வரும் கடைசி ஒரு வேளை – என் கனவே!

கட்டுடைத்து கரம் இறுகப் பற்றிடவே வருவாயா?

சிதையேற்றி என் உடலைத் தீ தீண்டும் முன்னே – உன்

விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா?

ஏக்கத்தை.. அழகாக வர்ணித்த,  மனதை உருகிய வரிகள். 
கவிதைக்கு நன்றி வல்வை  சகாறா. 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 4/29/2017 at 5:32 AM, கஜந்தி said:

உயிரோடு வலிகலந்து மொழிசிந்திய கண்ணீர்துளி அருமை

நன்றி கஜந்தி நீண்ட காலத்திற்குப் பின்னர் மீளவும் இப்பதிவில் உங்களைக் காண்கிறேன்.

On 4/29/2017 at 10:15 AM, putthan said:

எனக்கு உந்த கவிதை வாசித்து கருத்து சொல்லும் அளவுக்கு அறிவில்லை இருந்தாலும் எதோ சோக கவிதை என்பது மட்டும் புரிகின்றது....ஒம் நமச்சிவாய..என்று சொல்லி ...ரிலாகஸ் 

சோகமாவது புரிந்து ஓம் நமசிவாய சொல்லி ரிலாக்ஸ் போட்டுவிட்டீர்கள் வரவுக்கும் வாசிப்பிற்கும் நன்றி புத்ஸ்

23 hours ago, முனிவர் ஜீ said:

வாவ் வாவ் வாவ் வாவ்  சகாறா அக்கா மீண்டும் கவிதையில் கலக்கல்  விழிநீரால் குளிப்பாட்டி விடை தருவாயா  யாருக்கோ அருவி போல் கொடூகிறது போல கண்ணீர்

 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 

இப்படித் தொடர் சவுண்ட் கொடுத்தால் நாய் குரைக்கிற மாதிரி இருக்கு முனி.....tw_angry:

இந்தக்காலத்தில யாருக்கப்பா அருவி கொட்டும் எல்லாம் செயற்கையான சவர்தான்

img_768_ins_3515_600.jpg

Share this post

Link to post
Share on other sites
On 29/04/2017 at 10:15 AM, putthan said:

எனக்கு உந்த கவிதை வாசித்து கருத்து சொல்லும் அளவுக்கு அறிவில்லை இருந்தாலும் எதோ சோக கவிதை என்பது மட்டும் புரிகின்றது....ஒம் நமச்சிவாய..என்று சொல்லி ...ரிலாகஸ் 

ஓம் நமச்சிவாய!

ஓம் நமச்சிவாய!

ஓம் நமச்சிவாய!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 4/30/2017 at 11:04 AM, தமிழ் சிறி said:

ஏக்கத்தை.. அழகாக வர்ணித்த,  மனதை உருகிய வரிகள். 
கவிதைக்கு நன்றி வல்வை  சகாறா. 

நன்றி இலையான் கில்லர்

On 4/30/2017 at 11:32 AM, கலைஞன் said:

ஓம் நமச்சிவாய!

ஓம் நமச்சிவாய!

ஓம் நமச்சிவாய!

b9f8ac840adccac79f9fa232770d5f02--symbol

Share this post

Link to post
Share on other sites

வரிகள் வலிகளைக்கடந்து நகர்ந்து செல்கிறது.

சிலவேளைகளில்...

ஒரு தடவல்
ஒரு வருடல்
ஒரு தழுவல் தராத சுகத்தை தந்துவிடும். 

சோகமேயில்லாத வாழ்வுமில்லை
சோகமே வாழ்வாவதும் இல்லை சகோதரி!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 5/7/2017 at 4:04 PM, nochchi said:

வரிகள் வலிகளைக்கடந்து நகர்ந்து செல்கிறது.

சிலவேளைகளில்...

ஒரு தடவல்
ஒரு வருடல்
ஒரு தழுவல் தராத சுகத்தை தந்துவிடும். 

சோகமேயில்லாத வாழ்வுமில்லை
சோகமே வாழ்வாவதும் இல்லை சகோதரி!

உண்மைதான் நொச்சி

காதல் வெற்றி பெறுவது மட்டுமல்ல அழியாநிலை கொள்வதும் சோகத்திலும் பிரிவிலும்தான் அதிகம் போல் இருக்கிறது. :)

Share this post

Link to post
Share on other sites

காலம் கடந்த எதிர்பார்ப்புக்கள் காலம் கடந்த பின்னர் நிஜமானாலும்
காலம் கடந்த கவிதையாகி.... விதையாகி மரமாக வளர்ந்து நிற்கும் :100_pray:

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 5/12/2017 at 8:06 AM, வாத்தியார் said:

காலம் கடந்த எதிர்பார்ப்புக்கள் காலம் கடந்த பின்னர் நிஜமானாலும்
காலம் கடந்த கவிதையாகி.... விதையாகி மரமாக வளர்ந்து நிற்கும் :100_pray:

நன்றி  வாத்தியார்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

உயிர்ப்பை உணர்த்தும் வலிதோய்ந்த வரிகள். 

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this