Jump to content

செத்தும் காத்த அம்மா நினைவும் கவிதையும் - வ,ஐ,ச,ஜெயபாலன்

Recommended Posts

 செத்தும் காத்த என் அம்மாவின் பிறந்தநாள் நினைவில்
.
அம்மா பிறந்தது 1917
உடுவில் மகளிர் கல்லூரி வரவேற்ப்பில் மகத்மா காந்திக்கு மாலை சூடி ஆசி பெற்றது நவம்பர் 2017
(இறக்கிற வரைக்கும் காந்திய செல்வாகுடனேயே வாழ்ந்தார், விடுதலையும் சமூக சமத்துவமும் கவிதையும் அவரிடமிருந்து கற்றதுதான்.)
.

2013 நவம்பரில் அம்மாவின் சமாதிக்குச் சென்றபோது  கோத்தபாய ராசபக்சவின் விசேட உத்தரவின் பேரில் என்னைக் கைதுசெய்ய  இராணுவம் எங்கள் பண்ணைக்கும் வன்னிவளான்குழம் கோவிலுக்கும்  நடுவிலுள்ள காட்டுக்குள் காத்திருந்தனர், நல்ல வேலையாக நான் கார் சார்தியிடம் ”40 வருடமாக ஒவ்வொரு தடவை பண்ணைக்கு வரும்போதும் வன்னிவிளான்குளம் அம்மன் கோவிலில் கற்பூரம் கொழுத்திவிட்டு வரும்படி சொல்லுவார். 40 வருடங்களாக நான் கேலி செய்வேன். இப்ப அம்மா இல்லை. அவர் சமாதிக்கு முதன் முதலாக போகிறேன், அம்மாவின் ஒரே விருப்பமான வன்னிவிளாம் குளம் கோவிலில் கற்பூரம் கொழுத்திவிட்டு சமாதிக்குப் போவோம் என சொன்னேன். சாரதியோ இருட்டாகிவிட்டது என தயங்கினார். பின் எனது வற்புறுத்தலால் திருப்பி கோவிலுக்கு போனார். அதிற்சி அடைந்த இராணுவத்தினர் என்னை பின் தொடர்ந்து வந்தனர், அதனால்தான் என்னை இரகசியமாக கைதுசெய்யும் கோத்தபாயவின் திட்டம் தோல்விகண்டது.    

வன்னிவிளான்குளம் கோவிலில் வைத்து  கோத்தபாயாவின் விசேட பயங்கரவாத தடைப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டேன் நான் திட்டமிட்டு உரத்துச் சண்டைபோட்டதால் வன்னிவிளான்குழ மக்கள் இச்சேதியை நோர்வேயில் வசிக்கும் க.சுந்தரலிங்கத்துக்கு கைபேசியில் சொன்னார்கள். சுந்தரலிங்கம் உடனடியாக குளோபல் தமிழ் ரேடியோ குருபரனுக்கும் வேறு ஊடகங்களுக்கும் அறிவித்துவிட்டார். என் கைது நடவடிக்கை முடியுமுன்னமே சர்வதேச ஊடகங்களில் சேதி வந்துவிட்டது. .எனக்காக் பசீர் சேகுதாவுத் உடனடியாக கழத்தில் இறங்கினான், தொடர்ந்து எனது மனைவி மக்கள் தோழன் ஒய்விண்ட் புக்ளரூட் நோர்வே சுந்தரலிங்கம்,  குளோபல் தமிழ் றோடியோ குருபரன் பாசன அபேவர்தனவின் சுதந்திர பத்திரிகையாலர் அமைப்பு  ரமனன்  என பலரும் என் விடுதலைக்கான முயற்சிகளில் இறங்கினர்.  நான் கைதுசெய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் .  அமைச்சராய் இருந்தும் முஸ்லிம் தோழன் பச்சீர் சேகுதாவுத் எனக்காக கழத்தில் இறங்கினான், நீதி அமைச்சராய் இருந்தும் முஸ்லிம் தலைவர் ரவ் ஹக்கீம் கோத்தபாயாவுக்கு எதிராக ஜெயபாலன் குற்றம் இழைக்கவில்லையென அறிக்கை விட்டார். ராவய, ஜெடபோன்ற சிங்கள முற்போக்கு அமைப்புகள் போர்கொடி தூக்கின. தமிழ் தலைவரான சுர்ரேஸ் பிரேமசந்திரனும் சிறீதரனும் கேழ்வி எழுப்பினார்கள் என அறிந்தேன்,  மலைய தமிழ் பாராழுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தடுப்புக்காவலுக்குவந்து என்னை சந்தித்தார்.  இந்த பின்னணியில் சர்வதேச சமூகம் ஈலங்கை அரசுக்கு நெருக்குதல் கொடுத்தது. அதன் உச்சக்கட்டமாக அமைந்தது நண்பர் எரிக் சோல்கைமின் அறிக்கை. அவர் வளமைக்கு மாறான கோபத்துடன் “ மீசை மயிரில் கூட தொடமுடியாது. விடுதலை செய்யாவிடின் நான் வாய் திறக்க வேண்டி வரும்” என மிரட்டினார்,  இந்த வளமைக்கு மாறான கோபம் கோத்தபாயவை பணிய வைத்தது. எனது தோழன் பசீர் சேகுதாவுத்தை அழைத்து “ஜெயபாலனை வைத்திருப்பது கஸ்டமாக இருக்கு. ஆனால் வெளியில் விட்டாலும் தன்னை துன்புறுத்தியதாக பொய்ப் பிரசாரம் செய்வாரே” என கூறியுள்ளார். அதற்க்கு தோழர் பசீர் ஜெயபாலனை எனக்கு 20 வருசமா தெரியும். அவர் எதற்க்கும் அஞ்சிவதில்லை, பொய்சொல்வதுமில்லை.  தன்னை மரியாதையாக நடத்தியதாக என்னிடம் சொன்னார். ஆகையால் அதைத்தான் வெளியிலும் சொல்வார்” எனக் கூறியுள்ளார், உடனவே என்னை சாகிற வரைக்கும் சிறைதான் என சொன்ன கோத்தபாயவினால் ஒரு வாரம் முடியுமுன்னமே  உடனடியாக நோர்வேக்கு நாடுகடத்தும் உத்தரவு பிறபிக்கப் பட்டது.  காட்டில் காத்திருந்த இராணுவத்திடம் அகப்பட முன்னம் அம்மா வின் நினைவே என்னை வன்னிவிழாங்குளம் கோவிலுக்கு திரும்ப வைத்தது, அதனால்தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன். வாழும்போது என் காவல் தெய்வமாக இருந்த என் அம்மா இறந்தபின்னரும் என்னை காத்த நிகழ்வு புதிரானது, 
.
2006ல் அம்மா வவுனியா வைத்தியசாலையில் மரணப் படுக்கையில் இருந்ததார், அவரது இறுதி நாட்கள் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன்,  அம்மாவைக் காண தமிழகத்தில் இருந்து  மீன்பிடிப் படகிலாவது இலங்கை செல்லும் முடிவில் இருந்தேன். ஆனால் அம்மாவின் மரணத்துக்கு முதல் நாள்  தம்பி பாரதி கைபேசியில் என்னை அழைத்தான்,  அம்மா பேசவிருப்பதாக சொல்லி கைபேசித் தொடர்பை ஏற்படுத்தினான். அம்மாவின் முதல் வார்த்தை ”எனக்கு என்ன நடந்தாலும் இலங்கைக்கு வந்திடாதே ராசா” என்பதில் “எனக்கு எந்த அச்சமுமில்லை. கட்டாயம் வருவேன்” அம்மா அழுதபடி சத்தியம் கேட்டாள். “நீ வந்தா பாதகர்கள் உன்னைக் கொண்றிடுவாங்கள் ராசா. அம்மா ஆனையா வரக்கூடாது” அம்மாவை அழவைக்காதே என பாரதி சொன்னான். “சரி அம்மா” என்றேன்.
.
இத்தனை கொடுமைகளுக்கும் இனக்கொலைக்கும்பிறகு இலங்கை அரசு இணைபாட்ச்சித் தீர்வுக்கு இணங்க மறுத்தால் எப்படி மன்னிப்பது?
.

வரமுடியவில்லை அம்மா
வ.ஐ.ச. ஜெயபாலன்
.
வரமுடியவில்லை அம்மா
தீயினை முந்தி உந்தன்
திரு உடலில் முத்தமிட...
.
சிங்கமும் நரிகளும் பங்கும்
நீர்சுனையின் வழி அஞ்சி
உயிர் வற்றும் மானானேன்.
சென்னைச் சுவர்பாலை
துடிக்கும் பல்லி வாலானேன்.
.
தோப்பாகும் கனவோடு நீ சுமந்த
நறுங் கனிகள தின்றதே
ஈழத் தமிழன் விதி என்ற
பேர் அறியா தேசத்துப் பறவை.
துருவக் கரை ஒன்றில்
அதன் பீயாய் விழுந்தேனே
என் கனிகளச் சுமந்தபடி
.
இறால் பண்ணை நஞ்சில்
நெய்தல் சிதைந்தழியும்
சேதுக் கரையோரம்
படகுகளும் இல்லை.
.
கண்ணீரால் உன்மீது
எழுதாத கவிதைகளைக்
காலத்தில் எழுகிறேன்...
2006

http://ireport.cnn.com/docs/DOC-1063267

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கண்ணீரால் எழுதிய கவிதைக்குத் தலைவணங்குகின்றேன் ஐயா......!

வலிகளே எமக்கு சொந்தமுமாகி பழக்கமாயும் போச்சு.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, poet said:

தெய்வச் செயல் என்பது தான் உங்களை கோவிலுக்கு வரவழைத்தது.

கோத்தபாய செய்த பெரும் கொடுமைகளுக்கும்,  அநியாயங்களுக்கும்,  அதே தெய்வம் நின்று கேட்டே தீரும்.... ஒரு நாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தீராத சோகங்கள்  பொயட்  அருமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயின் இழப்பில் தோன்றும் அதீத சோகத்தை பொயட் உங்களால் மட்டுமே இப்படி எழுத முடியும்.

Link to comment
Share on other sites

நன்றி நாதமுனி, நன்றி முனிவர்ஜி நன்றி கவிஞர் வல்வை சகாறா.

என் பதிவில் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டது. எடிற்பண்ண முடியவில்லை. நிர்வாகம் உதவ வேண்டும்.

பிழை திருத்தம் :

அம்மா பிறந்தது 22.04. 1922
உடுவில் மகளிர் கல்லூரி வரவேற்ப்பில் மகத்மா காந்திக்கு மாலை சூடி ஆசி பெற்றது நவம்பர் 1927
(இறக்கிற வரைக்கும் காந்திய செல்வாகுடனேயே வாழ்ந்தார்,

பிழை : அம்மா பிறந்தது 1917
உடுவில் மகளிர் கல்லூரி வரவேற்ப்பில் மகத்மா காந்திக்கு மாலை சூடி ஆசி பெற்றது நவம்பர் 2017
(இறக்கிற வரைக்கும் காந்திய செல்வாகுடனேயே வாழ்ந்தார், விடுதலையும் சமூக சமத்துவமும் கவிதையும் அவரிடமிருந்து கற்றதுதான்.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.