Jump to content

இலங்கை சுற்றுலா


Recommended Posts

காலி (Galle)

இலங்கைத் திருநாட்டில் சுற்றுலாவுக்கா பஞ்சம்? – காலி (Galle)

வருட இறுதி, வேலைப்பழு அதன்பின் வரவிருக்கும் விடுமுறைகள் கொண்டாட்டங்கள் இதற்கிடையில் மனதுக்கு மகிழ்வுதரும் சிறு விடுமுறையொன்றில் தொலைந்துபோக மனம் நினைக்கிறதா? இயற்கையோடு கூடிய வரலாற்று வாசத்தில் நல்ல உணவோடு கலைத்துவமாக அவ்விடுமுறை இருக்கவேண்டுமா?

கவுதம் மேனனின் “அச்சம் என்பது மடமையைடா” பார்த்த பின்பு, கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட பயணத்துக்கு அழைக்கிறதா? அதற்காகவே இறைவன் உருவாக்கி வைத்திருக்கின்ற ஓர் இடமாக காலியை சொல்லலாம்.

காலி (Galle)

காலிக் கோட்டை (thehistoryhub.com)

காலிக் கோட்டை

இலங்கையின் தென்மேற்கு கரையோர கடற்கரையை ஆக்கிரமித்து அமைந்த பிரதேசம் என்பதனாலும், இலகுவாக சர்வதேச கடற்பரப்பை கண்காணிக்ககூடிய தன்மை கொண்டுள்ளதாலும், இலங்கை எப்போதெல்லாம் ஜரோப்பியர்களின் ஆளுமைக்கு உட்பட்டதோ, அப்போது எல்லாம் அவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்ட நகரமாக இருந்திருக்கிறது காலி. இதனை இன்றளவிலும் காலி நகரினை சுற்றிலும் காணக்கூடியதாக உள்ளது. மேலும், இத்தகைய வரலாற்று எச்சங்களும், பாரம்பரியங்களுமே காலிக்கு சுற்றுலாபுரி என்கிற நிலையினை தந்துள்ளன என்றால் அது மிகையாகாது.

அதிவேக நெடுஞ்சாலை வசதி காலிக்கான பயணத்தை கொழும்பிலிருந்து ஒரு மணிநேரமாக மாற்றியிருப்பதால், ஒரு நாளில் காலியின் அழகையும், அங்குள்ள தொன்மைவாய்ந்த கட்டிடக்கலையை ரசித்து களிக்க இயலுமானதாக இருக்கும். இல்லாவிட்டாலும், தென்மேற்கு கடற்கரையோரமாக காலி நோக்கி பயணிக்கும் நேரம் அண்ணளவாக மூன்று மணிநேரமாகவிருந்தாலும், பயண வழிநெடுகிலும் காட்சிகளைக் கண்டுகளித்து முன்னேறும் மோட்டார் வாகன சவாரிக்கு (Bike Travel) பொருத்தமான பாதையாக இது இருக்கும்.

இரசிக்க வேண்டிய இடங்கள்

ஏனைய பிரதேசங்களைப்போல காலியில், ஒவ்வொரு சுற்றுலா தளத்திற்கும் வேறு வேறு பயண முறையை மேற்கொண்டு நெடுந்தூரம் அலையவேண்டியதில்லை. பெரும்பாலான புராதன கட்டிடங்களும், இயற்கையோடு கலந்த கடற்கரையும் பழைய காலிக்கோட்டையுடன் இணைந்திருப்பதால், இவற்றை இலகுவாக பார்வையிட முடியும்.

அடிப்படையில் காலி நகரினை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, புகையிரத நிலையம், பேரூந்து நிலையம், காலி சர்வதேச மைதானம் ஆகியவற்றை உள்ளடக்கி ஓய்வில்லாத நவீன நகரமாக ஓடிக்கொண்டிருக்கும். மற்றையது, இவை எவற்றிற்குமே சம்பந்தமில்லாமல், அமைதியாக பழைய ஒல்லாந்தரின் நகரத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும். இந்த அமைதியான நகரத்தை வாகனங்களை ஓரம்கட்டி வைத்துவிட்டு, நடையிலேயே சுற்றி வந்துவிடலாம்.

காலிக் கோட்டை

காலிக் கோட்டையின் ஓர் பகுதி (dailynews.lk)

காலிக் கோட்டையின் ஓர் பகுதி

காலிக்குள் உள்நுழைந்ததுமே நமக்கு தெரிவது, வானுயர்ந்து எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கமும், இன்றும் உறுதியாய் அமையப் பெற்றிருக்கும் காலிக் கோட்டையின் மதில் சுவர்களுமே! அன்றைய ஆங்கிலேயரின் வாழ்விடங்களை காப்பாற்றிக்கொள்ள 1588ம் ஆண்டில் முதன்முதலில் போர்த்துகேயரினால் இந்த கோட்டை அமைக்கபட்டது. ஆனாலும், அதன் இன்றைய வடிவத்தை உருவாக்கியதில் ஒல்லாந்தருக்கு பெரும் பங்குண்டு. இன்றும், காலிகோட்டையின் உள் அமைந்துள்ள கலைநயமிக்க சில வீடுகளுக்கு ஒல்லாந்து குடும்பங்கள் உரிமையாளராக உள்ளார்கள் என்பது இலங்கையின் மீதான வெளிநாட்டவரின் காதலுக்கு ஓர் சான்றாகும்.

இலங்கையில் சுனாமி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மோசமான நகரங்களில் காலி நகரமும் ஒன்றாகும். இதன்போது, காலிக்கோட்டையும் பாதிப்புக்குள்ளானது. இன்றும், சுனாமியின் எச்சங்களை தாங்கியபடி, அதனையும் தாண்டி காலிக்கோட்டை எழுந்து நிற்பதானது, அன்றைய திறமையாளர்களின் திறனுக்கு ஓர் எடுத்துகாட்டாகும்.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட காலி நகரம் (thuppahi.files.wordpress.com)

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட காலி நகரம் 

காலி கோட்டையின் கடற்கரைக்கு அண்டிய மதில்சுவர்களில் நடந்து செல்கையில், கடலின் அழகை இரசிப்பது மட்டுமல்லாது, முக்குளிப்போர் எனப்படும் Diverகளையும் காணக்கூடியதாக இருக்கும். காலியில் முக்குளிப்பதற்கு பெயர்போன கொடிப் பாறை (Flag Rock) பகுதியில் இவர்களை காணக்கூடியதாக இருக்கும். அழகில் ஆபத்தும் உள்ளது என்பதுபோல, இவர்கள் சாகசம் அழகானது என்றபோதிலும், உயிரை பறிக்கும் ஆபத்து நிறைந்ததாகும்.

அருங்காட்சியங்கள்

காலி நோக்கிப் பயணிப்பவர்கள், இலங்கையினதும் காலியினதும் தொன்மையை அறிந்துகொள்ளுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாயின், அவர்கள் தவறவிடக்கூடாத சில முக்கியமான இலங்கையின் அருங்காட்சியகங்கள் இங்குண்டு.

காலி தேசிய அருங்காட்சியகம் – ஒல்லாந்த அரசதரப்பினரால், அவர்களுக்கென கட்டப்பட்ட கட்டிடத்தில் இன்றும் காலியின் ஆதிகாலம்தொட்டு, ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வரலாறு சார்ந்த பொருட்களையும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்

காலி தேசிய அருங்காட்சியகம் (wikimedia.org)

காலி தேசிய அருங்காட்சியகம்

தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டுவிட்டு வெளியே வரும் வழியில், நன்கு வளர்ந்த ஈரப்பலாக்காய் (Breadfruit Tree) மரத்தினை நீங்கள் கடந்து செல்லகூடும். ஆனால், இது சாதாரணமான மரமொன்று அல்ல. ஒல்லாந்து நாட்டவரால் இலங்கைக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட 300 வருடங்கள் பழமையான ஈரப்பலாக்காய் மரமே அதுவாகும்.

காலி கடல்சார் அருங்காட்சியகம் – இலங்கையின் இயற்கைத் துறைமுகங்களில் ஒன்று காலியிலும் அமைந்துள்ளது. அப்படியானால், கடலுடனும், கடல்சார் விடயங்களிலும் காலி எவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது என்பதை சொல்வதற்கில்லை. 1992ம்ஆண்டு மக்கள் பாவனைக்காக ஒல்லாந்தரின் கட்டிடத்தில் ஆரம்பிக்கபட்ட இந்த அருங்காட்சியகமும் சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்தது. ஆனாலும், 2004ல் UNESCOவின் உதவியுடனும், 2010ம் ஆண்டு நெதர்லாந்து அரசின் 177 மில்லியன் உதவியுடனும், புத்தாக்கம் பெற்று மீண்டும் மக்கள் பாவனைக்கு திறந்துவிடபட்டுள்ளது.

தேசிய கடல்சார் அருங்காட்சியகம் (roadslesstravelledsrilanka.com)

தேசிய கடல்சார் அருங்காட்சியகம்

 

காலி மாளிகை அருங்காட்சியகம் (Galle Mansion Museum) – இந்த தனிநபர் அருங்காட்சியகம் காலியின் பழமையான குடிமனையில் அமைந்துள்ளதுடன், இங்கு, காலியின் பண்டைய வாழ்க்கை முறைமையை பிரதிபலிக்கின்ற அனைத்துவகையான உபகரணங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. பழமையான மட்பாண்டங்கள் முதல், நம் முன்னோர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் என அனைத்துமே உள்ளடக்கபட்டிருக்கிறது. கவ்வார் (Gaffar) என்கிற பெரியவரினால், நடாத்தபடுகின்ற இந்த தனிநபர் அருங்காட்சியகம் விற்பனை நிலையமாகவும் இது அமைந்துள்ளது.

ஆலயங்கள்

காலி வரலாற்றில் ஆங்கிலேயர்களின் பாதிப்பு இருப்பது போல, அவர்களது கலைதாக்கம் கொண்ட தேவாலயங்களுக்கும் பஞ்சமில்லை. REFORMED CHURCH, ALL SAINTS’ CHURCH என்பன அவற்றுள் முக்கியத்துவம் பெறுகின்ற 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்ரை கொண்ட தேவாலயங்களாக உள்ளன. அதுபோல, வாணிப வாயிலாக இலங்கைக்குள் உள்நுழைந்த இஸ்லாமியர்களின் வரலாற்றை சொல்லுகின்ற 300 வருடங்கள் பழமையான மீரான் பள்ளிவாசலும் (MEERAN MOSQUE ) இங்குண்டு.

Dutch Reformed Church Galle (tropicalceylon.com)

Dutch Reformed Church Galle 

இவ்வாறு, தொன்மையான கட்டிடக்கலையையும், வரலாற்றை சொல்லும் அருங்காட்சியகங்களையும், மத தளங்களையும் இரசித்துகொண்டு காலிக்கோட்டைக்குள் நடைபயிலும் உங்களுக்கு பயணத்தின் நடுவிலோ அல்லது முடிவிலோ பசி வயிற்றை பதம் பார்ப்பின், அவற்றை வழமைபோல அல்லாமல், விதவிதமான உணவுகளுடன் தீர்த்துக்கொள்ள பல்வேறு வகையான உணவகங்கள் காலியில் உள்ளன.

மீரான் பள்ளிவாசல் காலி (i.ytimg.com)

மீரான் பள்ளிவாசல் காலி 

உணவகங்கள்

அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் உல்லாச பயணிகளின் வருகையினால், ஒல்லாந்து குடும்பங்கள் தமக்கு சொந்தமான வீடுகளை நவீனதரமிக்க உணவகங்களாக மாற்றியமைத்து, வெளிநாட்டின் விதவிதமான உணவுவகைகளை பரிமாறி வருகிறார்கள். காலிக்கோட்டைக்குள் அமைந்துள்ள உணவகங்களில் விலையும், தரமும் அதிகமாக இருப்பதுடன், புதிய காலி நகரத்தில் நம்மவர்களின் வழமையான உணவுகளை வேவ்வேறு விலைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

காலிக்கோட்டையில் கொழும்பில் உள்ள டச்சு வைத்தியசாலை என்று அழைக்கபடுகின்ற இந்நாளின் உணவுக்கட்டிடத் தொகுதிபோல, டச்சு வைத்தியசாலை விதவிதமான உணவுதொகுதிகளை கொண்டு அமைந்திருக்கிறது.

இதனை தவிரவும்,

Fort Rotti Restaurant –  ரொட்டியை அடிப்படையாக கொண்ட விதவிதமான உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

Chambers – மொராக்கன் மற்றும் இத்தாலிய உணவுவகைகளை இங்கே ருசிக்க கூடியதாக இருக்கும்.

Poonies-Kitchen – புதிய மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான Salads உட்பட ஏனைய உணவுகளையும் இங்கே ருசிக்கலாம்.

Poonies Kitchen (unakanda.com)

Poonies Kitchen

 

The Original Rocket Burger – Burger பிரியர்களுக்கு பொருத்தமான இடங்களில் ஒன்று. அதுபோல, கொழும்பின் உரிமைத்துவ உணவங்களான (Franchise Restaurant)  Buger King, McDonald போன்ற உணவகங்களுக்கு மாற்றீடாக இதனை ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.

இவை எல்லாம், வழமையாக இலங்கையின் சுற்றுலா தளங்களில் உள்ள உணவகங்களுக்கு மாற்றீடாக பயணங்களின்போது ருசிபார்க்க கூடிய சில உணவகங்கள் ஆகும்.

காலிக் கோட்டையிலிருந்து சூரிய அஸ்தமனம் (67.media.tumblr.com)

காலிக் கோட்டையிலிருந்து சூரிய அஸ்தமனம் 

இவ்வாறு, காலிநகரின் சகலபகுதிகளையும் இரசித்து கொண்டே, நாள் நிறைவில் வீடு திரும்பும் எவருமே, மாலைவேளையில் காலி கடற்கரையோரங்களிலோ அல்லது காலிக்கோட்டையின் கடற்கரையோர மதில்களிலிருந்தோ சூரிய அஸ்தமன அழகை இரசிக்காமல் திரும்புவதில்லை.

 

https://roartamil.com/travel/galle

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

12 minutes ago, Athavan CH said:

தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டுவிட்டு வெளியே வரும் வழியில், நன்கு வளர்ந்த ஈரப்பலாக்காய் (Breadfruit Tree) மரத்தினை நீங்கள் கடந்து செல்லகூடும். ஆனால், இது சாதாரணமான மரமொன்று அல்ல. ஒல்லாந்து நாட்டவரால் இலங்கைக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட 300 வருடங்கள் பழமையான ஈரப்பலாக்காய் மரமே அதுவாகும்.

Bildergebnis für galle oldest Breadfruit Tree

Bildergebnis für galle oldest Breadfruit Tree

அட இலங்கைக்கு... ஈரப்பிலாக்காய் மரத்தை அறிமுகப் படுத்தியது ஒல்லாந்தரா?
ஒல்லாந்தில் ஈ ரப் பிலாக்காய் மரம் வளரும் கால நிலை இல்லை என நினைக்கின்றேன்.
இலங்கைக்கு வரும் வழியில்... விஜயன் வெள்ளரசு மரத்தை கொண்டு வந்த மாதிரி
ஒல்லாந்தர்,  எங்காவது  ஈரப்பிலாக்காய் மரக்  கன்றை புடுங்கி வந்திருக்கக் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

 

Bildergebnis für galle oldest Breadfruit Tree

Bildergebnis für galle oldest Breadfruit Tree

அட இலங்கைக்கு... ஈரப்பிலாக்காய் மரத்தை அறிமுகப் படுத்தியது ஒல்லாந்தரா?
ஒல்லாந்தில் ஈ ரப் பிலாக்காய் மரம் வளரும் கால நிலை இல்லை என நினைக்கின்றேன்.
இலங்கைக்கு வரும் வழியில்... விஜயன் வெள்ளரசு மரத்தை கொண்டு வந்த மாதிரி
ஒல்லாந்தர்,  எங்காவது  ஈரப்பிலாக்காய் மரக்  கன்றை புடுங்கி வந்திருக்கக் கூடும்.

வெள்ளரசமரம் சங்கமித்திரை கொண்டுவந்து எங்க நித்திரையை கெடுத்துக் கொண்டிருக்கா ....!  விஜயன் 700 பேருடன்  ஊர்ல இருந்து நாடுகடத்தப் பட்டு இலங்கையில் கரையொதுங்கி குவேனியை கண்டு காதல் கொண்டு.......!  tw_blush:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

வெள்ளரசமரம் சங்கமித்திரை கொண்டுவந்து எங்க நித்திரையை கெடுத்துக் கொண்டிருக்கா ....!  விஜயன் 700 பேருடன்  ஊர்ல இருந்து நாடுகடத்தப் பட்டு இலங்கையில் கரையொதுங்கி குவேனியை கண்டு காதல் கொண்டு.......!  tw_blush:

அட... இப்ப, கதையை மாத்தீட்டாங்களா. :grin:
முந்தி விஜயன் கொண்டு வந்ததாக.. வாசித்த நினைவு. :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அட... இப்ப, கதையை மாத்தீட்டாங்களா. :grin:
முந்தி விஜயன் கொண்டு வந்ததாக.. வாசித்த நினைவு. :D:

சின்ன வயசில படித்தது மறந்துடனோ தெரியவில்லை, யாராவது வந்து தெளிவு படுத்தவும்.... ப்ளீஸ் , வரலாறு முக்கியம் அமைச்சரே ....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

சின்ன வயசில படித்தது மறந்துடனோ தெரியவில்லை, யாராவது வந்து தெளிவு படுத்தவும்.... ப்ளீஸ் , வரலாறு முக்கியம் அமைச்சரே ....!  

நீங்கள் சொன்னது தான்.... சரி சுவி. :grin:
நான்... காசா, பணமா என்று விட்டு, சும்மா எழுதினான். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
சரித்திர நோக்கில் சாந்தையும் விநாயகர் ஆலயமும் ( ஆய்வுக்கட்டுரை)

ஆய்வு செய்தவர் : திரு.த. குணத்திலகம்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்,
சாந்தை,
பண்டத்தரிப்பு.
saanthai-3-1-300x224.jpgஈழத்திருநாட்டின் சிரசாம் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாண நன்நகரின் முகமென தோன்றும் மேற்குக் கரையோரத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க ஜம்புகோளத்துறையை அண்டிய பண்டத்தரிப்புப் பிரதேசத்தில் செந்நெல் கொழிக்கும் தும்பளப்பாய் வயல் வெளியுடன் கூடிய சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஒரு அழகிய கிராமம் சாந்தையாகும். இங்கு கோயில் கொண்டிருப்பவர் அருள்மிகு சித்தி விநாயகராவார். இக் கோயில் எந்தக் காலத்தது என்பது திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது. எனினும் இலங்கையின் சரித்திரத்தை ஆராயும் பொது இது மிகவும் பழமை வாய்ந்தத்தாகக் கருத இடமுண்டு.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு இலங்கையை ஆண்ட மன்னன் தேவநம்பியதீசன் இந்துசமயத்தவன். இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஒரு நாகரீக இனம் நாகர் இனமாகும். இவர்களும் இந்து சமயிகளாவர். அனுராதபுரத்தை ஆண்ட மூத்த சிவன் யாழ்பாணத்தின் கதிரமலையின் அரசாண்ட நாகர் குலத்தில் திருமணம் செய்தான் எனவும், அவர்களின் புதல்வனே தேவநம்பியதீசன் எனவும் மிகப்பழம் சிங்கள இலக்கிய நூலாகிய மகாவம்சம் கூறுகிறது.

இந்தியாவிலிருந்து வந்த மகிந்ததேரர் என்னும் புத்தபிக்குவின் உபதேசத்தில் மனம் மாறிய தேவநம்பியதீசன் புத்தசமயத்தைத் தழுவிக் கொண்டான் இருப்பினும் தீவிர சைவர்கள் தம்மதத்தை விட்டுக் கொடுக்காது சைவசமயத்தை கடைப்பிடித்தனர் என மகாவம்சம் கூறுகிறது. மக்கவம்சம் ஒரு சிங்கள பௌத்த இலக்கிய நூலாகையால் அது பௌத்தத்தை முதன்மைப்படுத்தியே கூறியுள்ளது. எனவே மகாவம்சத்தை அடிப்படையாக வைத்து நாம் இந்து சமயத்தின் நிலைமையை ஊகித்தறியமுடியும். இக்கூற்றின் படி இந்துசமயிகள் இங்கு வாழ்ந்ததால் இந்துக்கோயில் நிச்சயமாக இருந்திக்கும்.

எனவே இலங்கைக்கு புத்தசமயம் கொண்டு வரப்பட்டபோது இங்கு இவ்வாலயம் இருந்து இருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது. ஏனெனில் புத்த பிக்குணியாகிய சங்கமித்தை புனித வெள்ளரசங்கிளையுடன் வந்து சம்பில்துறையில் இறங்கிய பொது தேவநம்பியதீசன் இவ்வாலயம் இருக்கும் இடத்தில் வடபுறம் ஒருமடத்தில் (அவனால் அமைக்கப்பட்டதென்பர்) தங்கி இருந்து வரவேற்றான் என மகாவம்சம் கூறுகிறது..

 

6 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொன்னது தான்.... சரி சுவி. :grin:
நான்... காசா, பணமா என்று விட்டு, சும்மா எழுதினான். :D:

இதை என்ன இருக்கிறது, உண்மைதான் முக்கியம் அமைச்சரே....!

Link to comment
Share on other sites

 
Pigeon-Island-National-Park-In-Sri-Lanka

 

 

இலங்கைத் திருநாட்டின் எழில்மிகு பொக்கிஷம் – திருகோணமலை

 

இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் யாழ்ப்பாணத்திற்கு 113 கிலோமீற்றர்கள் தெற்கிலும் மட்டக்களப்பிற்கு 69 கிலோமீற்றர்கள் வடக்கிலும் அமைந்துள்ள திருகோணமலை இலங்கைத் திருநாட்டின் இயற்கை வனப்புக்கும் எழில்மிகு தோற்றத்துக்கும் சான்றாக விளங்கும் ஓர் நகராகும்.

திருகோணமலைக் கடற்கரையின் அழகிய தோற்றம். படம் - angelstravels.com

திருகோணமலைக் கடற்கரையின் அழகிய தோற்றம். படம் – angelstravels.com

அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைத் தனது எல்லையாகக்கொண்ட திருகோணமலையின் இயற்கையாக அமைந்த கடற்கரை அழகு உள்நாட்டவர் முதல் வெளிநாட்டவர் வரை திருகோணமலையைத் தங்கள் நினைவுகளில் நீங்கா இடம்பெற்று நிற்கச் செய்கின்றது. இருப்பினும், இவையனைத்தையும் தாண்டி, திருகோணமலையானது மிகத் தொன்மையான வரலாற்றுக் கதைகளையும் தனது சுற்றுலாத்தளங்களுக்குள் உள்ளடக்கி நிற்கிறது. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலமாகவும் திருகோணமலை விளங்கி நிற்கின்றது.

வரலாற்றுடன் கலந்த சுற்றுலாப்பிரதேசங்களை அனுபவிக்கின்ற எவருக்குமே திருகோணமலை ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாகவிளங்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கையின் சுற்றுலாத்துறை சம்மேளனத்தின் வருடாந்த அறிக்கைக்கமைவாக, 2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளில் 74.1% சதவீதமானவர்கள் இலங்கையின் கிழக்குக்கடற்கரைப் பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளார்கள் என்பதே அதனை நிரூபிக்கப் போதிய சான்றாக உள்ளது.

இயற்கையாக மூன்று பக்கங்களிலும் மலையால் சூழப்பட்ட இயற்கைத்  துறைமுகத்தைக் கொண்ட திருகோணமலைப் பிரதேசமானது ஆதி முதல் ஆங்கிலேயர் வரை பிரசித்தம்பெற்றிருந்தமைக்கு, இந்நிலம் தாங்கியுள்ள வரலாற்று எச்சங்களே சான்றாக உள்ளன.

திருகோணமலையின் அழகை ஏற்கனவே கண்டு ரசித்த ஒருவர் மீண்டும் அங்கு செல்லும்போது, தான் பார்த்த இடங்களின் மற்றுமொரு பரிமாணத்தையும், புதிதாக செல்ல இருப்பவர்களுக்கு முழுமையான சுற்றுலா அனுபவத்தையும் இந்த ஆக்கம் நிச்சயம் வழங்கும்.

கன்னியா வெந்நீரூற்றுக்கள் (Kanniya Hot Water Springs)

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் - படம் : Chauffeur Emil Lanka Tour

கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் – படம் : Chauffeur Emil Lanka Tour

இலங்கையை ஆண்ட இராவணன் என்கிற மன்னனால், தனது தாயின் கிரியை நிகழ்வுகளுக்காக உருவாக்கபட்ட ஏழு கிணறுகளுமே இதுவாகும் என இராமாயண வரலாறு கூறுகிறது. இந்த ஏழு கிணறுகளும் வெவ்வேறு விதமான வெப்பநிலையை வெளிப்படுத்தும் ஊற்றுக்களாக அமைந்துள்ளதுடன், குறுகிய தூர இடைவெளியில் அமைந்துள்ள இவ்வூற்றுக்களின் வெப்பநிலை வேறுபாட்டுக்கான காரணங்கள் இதுவரையிலும் அறிவியல்பூர்வமாகக் கண்டறியப்படவில்லை என்பது பெரும் விந்தையாகும்.

இந்துக்களால் இறந்தவர்களின் ஆத்ம கிரியைகளுக்குப் புனித இடமாக பயன்படுத்தபடுகின்ற இவ்விடம், தற்போது இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் மூலமாக, நாட்டின் பாதுகாக்கப்படவேண்டிய இடங்களின் பட்டியலில் உள்ளடக்கப்படுகின்றது. இனமத பேதமின்றி அனைத்து மக்களும் இந்த அபூர்வ வெந்நீர் ஊற்றுக்கு வருகைதருவது இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

திருக்கோணேஸ்வர ஆலயம் (Koneswaram Temple)

திருக்கோணேஸ்வர ஆலயம் - படம் : youtube.com

திருக்கோணேஸ்வர ஆலயம் – படம் : youtube.com

திருகோணமலையின் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த புனிதஸ்தலங்களில் முதன்மை பெறுவது இந்த திருக்கோணேஸ்வர ஆலயமே! பல நூற்றாண்டு வரலாறு கொண்ட இந்த ஆலயம் மலைமீதே அமைந்திருக்கிறது என்பது பலரது எண்ணம். ஆனாலும், குறித்த ஆலயத்தின் தொன்மை, குறித்த ஆலயம் அமைந்துள்ள மலையடிவாரத்தில் கடலுடன் முழுமையாகப் புதைந்து காணப்படுகிறது.

முன்னொரு காலத்திலே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் ஏற்பட்ட கடற்கோளில் ஆட்கொள்ளப்பட்டதன் விளைவால் அங்கு காணப்பட்ட பழமையான கோவில் கடலுக்குள் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.

திருக் கோணேஸ்வர ஆலயம் - படம் : Glorious Lanka

திருக் கோணேஸ்வர ஆலயம் – படம் : Glorious Lanka

படகின் மூலமாக கோணேஸ்வர மலையின் பின்புறமாகப் பயணிப்பதன் மூலம் இக்கோயில்களின் எச்சங்களை தற்போதும் பார்வையிடக் கூடியதாக உள்ளது. திருக்கோணேஸ்வர ஆலய தரிசனம் மட்டுமன்றி அங்கு ஆங்கிலேயரினால் அமைக்கப்பட்ட புராதன கோட்டைகளில் ஒன்றான பிரெட்றிக் (Fort Frederick) கோட்டையின் எச்சங்களையும் பார்வையிட முடியும்.

பிரெடரிக் கோட்டை. படம் - travelfootprint.lk

பிரெடரிக் கோட்டை. படம் – travelfootprint.lk

வெல்கம் விகாரை (Velgam Vehara)

இலங்கையின் ஆரம்பகால பெளத்தவரலாறுகளில் மிக முக்கியமான பங்கை வகிப்பவன் மன்னன் தேவநம்பியதீசன். இம்மன்னனது காலப்பகுதியில் அமைக்கப்பட்டு, பின்னர் பாத்திய திஸ்ஸ அரசரினால் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட, பல வரலாற்றுக் கல்வெட்டுக்களைத் தன்னகத்தே தாங்கிநிற்கும் இந்த மிகப்பழமையான விகாரை திருகோணமலையின் மற்றுமொரு வரலாற்றுச் சின்னமாகும்.

சுவாரஸ்யமாக இவ்விகாரையின் கட்டுமானப் பணிகளுக்காகப் பல தமிழ் மன்னர்கள் நன்கொடை வழங்கிய வரலாறையும் இவ்விகாரைக் கல்வெட்டுக்கள் கொண்டுள்ளன. இப்பழைமைவாய்ந்த விகாரையின் எச்சங்கள் மிகுந்த காலம்கடந்து இலங்கைத் தொல்பொருள் ஆய்வாளர்களால் 1929ம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

வெல்கம் விகாரை. படம் - exposrilanaka.lk

வெல்கம் விகாரை. படம் – exposrilanaka.lk

2ம் உலகப்போரின் நினைவுச் சின்னங்கள்

இந்துசமுத்திரத்தில் உள்ள இச்சிறியயதீவாம் இலங்கையின் எழில்மிகு இத்திருகோமலை இந்து மற்றும் பெளத்தமத காலச்சுவடுகளை மட்டுமல்லாது, நவீனகால வரலாற்று எச்சங்களையும் தன்னகத்தே தாங்கி நிற்பது இப்பிரதேசத்தின் பெறுமதியை உலகுக்குப் பறைசாற்றுவதாய் அமைகிறது. இயற்கையாக பாதுகாப்பு அரணாக அமைந்த சீன வளைகுடா (China Bay), 2ம் உலகப்போரில் பிரித்தானியார்களால் ஒரு போர்த்தளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீன வளைகுடாவின் தரைத்தோற்றம் பிரித்தானியர்களின் போர் முறைமைகளைக் கொண்டுநடாத்த ஏதுவாக அமைந்திருந்ததே இதற்கான காரணமாகும். இதற்கு ஆதாரமாக, மிகசிறப்பான முறையில் பராமரிக்கபடுகின்ற 2ம் உலகப்போரில் உயிர்நீத்த போர்வீரர்களின் சமாதி இன்னும் திருக்கோணமலையைத் தரிசிக்கச் செல்லும் சுற்றுலாப்பயணிகளால் பார்வையிடக்கூடியதாக இருக்கின்றது.

இரண்டாம் உலக மகா யுத்த இடுகாடு. படங்கள் - chauffeuremillankatours.com

இரண்டாம் உலக மகா யுத்த இடுகாடு. படங்கள் – chauffeuremillankatours.com

இலங்கை உள்நாட்டு போரின் நினைவிடங்கள்

அண்மையில் முடிவுக்குவந்த இலங்கையின் இருதசாப்தகால உள்நாட்டுப் போரில் இலங்கைக் கடற்படையினால் பெறப்பட்ட வெற்றிகள் மற்றும் சவால்களைக் காட்சிப்படுத்தும் நினைவகமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது புனரமைக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டுக்கான டச்சுக் கடற்படை ஆணையாளரின் இல்லமாகும். இலங்கையின் 65ஆவது சுதந்திர தினத்தின் நினைவையொட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது.

கூடவே, இந்த நினைவிடங்களுக்கு அண்மித்ததாகவுள்ள சிறு சோபர் தீவுகளில் (Sober Island) முழுநாளையும் செலவிடக்கூடியவகையில் கடற்படையின் உதவியுடன் இலங்கை அரசு, சுற்றுலாதள வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

யுத்த மற்றும் கடற்படை நூதனசாலை. படம் - en.wikipedia.org

யுத்த மற்றும் கடற்படை நூதனசாலை. படம் – en.wikipedia.org

நிலாவெளி – புறாத் தீவு

திருகோணமலையின் கரையோர சுற்றுலாதளங்கள் என்றதுமே நினைவுக்கு வருவது, நிலாவெளி கடற்கரையும் அதனைச் சார்ந்ததாக அமைந்துள்ள புறாத் தீவுமே ஆகும். திருகோணமலை நகரிலிருந்து 21Km தொலைவில் இப்புறாத்தீவு அமைந்துள்ளது.

புறாத்தீவு - படம் : http://marvelloussrilankalk.blogspot.com

புறாத்தீவு – படம் : http://marvelloussrilankalk.blogspot.com

1963ம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்தப் புறாத் தீவு. (இந்த தீவு கண்டறியப்பட்ட காலம்முதல் பெருமளவிலான புறாக்களின் வசிப்பிடமாக இது அமைந்திருந்ததால், இன்றும் இது புறாத்தீவு என்றே அழைக்கப்படுகிறது. ஆயினும், மனித நடமாட்டம் அதிகரித்தபின்பு, இங்கு புறாக்களின் வருகை குறைவடைந்து விட்டது.) இலங்கை அரசினால் பாதுகாத்துப் பராமரிக்கபடுகின்ற 17வது தேசிய பூங்காவாகவும் 2ஆவது தேசிய கரையோரப் பூங்காவாகவும் இப்புறாத்தீவு அறிவிக்கபட்டது.

இத்தீவு பல்வேறுபட்ட முருகைக்கற்பாறைகளின் களஞ்சியமாகக் காணப்படுவதோடு, அண்ணளவாக நூறு இன முருகைக்கல் பாறைகளையும் முன்னூறுக்கும் அதிகமான முருகைக்கல்வாழ் மீனினங்களையும் கொண்டது.

குறிப்பு – பொலித்தீன் மற்றும் பிளாஸ்திரிக் பாவனை முற்றிலும் தடைசெய்யப்பட்ட தீவாக இது அமைந்துள்ளது.

மார்பிள் கடற்கரை (Marble Beach)

மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா கடல் மற்றும் காலியில் அமைந்துள்ள ஜங்கிள் (jungle Beach) கடற்கரை போன்றவொரு அனுபவத்தை திருகோணமலை சுற்றுலாவின்போது பெற்றுக்கொள்ளக்கூடியதொரு தளமாக இம்மார்பிள் கடற்கரை அமைந்துள்ளது. திருகோணமலையின் கிண்ணியா கடற்பரப்பில் அமைந்துள்ள இந்தக் கடற்கரை, இலங்கையின் அருகிவரும் முருகைக்கற்பாறைகளை கொண்டவொரு கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது.

குறிப்பு – பொலித்தீன் மற்றும் பிளாஸ்திரிக் பாவனை முற்றிலும் தடைசெய்யப்பட்ட இடமாக இது அமைந்துள்ளது.

மார்பிள் கடற்கரை. படம் - alifeofsaturdays.wordpress.com

மார்பிள் கடற்கரை. படம் – alifeofsaturdays.wordpress.com

கடற் சுற்றுலா (Whale & Dolphin Watching)

அண்மைக்காலத்தில் திருகோணமலையின் பிரசித்தம் பெற்ற மற்றுமொரு துறையாக இந்தக் கடற் சுற்றுலா மாறிவருகிறது. குறிப்பாக, திமிங்கலம் மற்றும் டொல்பின் பார்வைடுதலுக்கு இலங்கையின் உகந்த இடங்களில் ஒன்றாக திருகோணமலை காணப்படுகிறது.

கடற் சுற்றுலா. படம் - holidaysinsrilanka.net

கடற் சுற்றுலா. படம் – holidaysinsrilanka.net

பசுபிக் சமூதிரத்துக்கு அண்மையில் இலங்கையின் கடற்பரப்பு அமைந்துள்ளது இதற்கு ஏதுவாக உள்ளது. குறிப்பாக, மே மாதம் முதல் அக்டோபர் (May-October) மாதம் வரை இந்த பார்வையிடலுக்கு உகந்த இடமாக திருகோணமலை உள்ளது. இலங்கை கடற்படையினால் பாதுகாப்பான முறையில் ஒழுங்குசெய்யப்பட்ட படகுகள் மூலம் இந்த சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.

2727 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட இத்திருகோணமலை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் ஓர் பிரதேசமாக விளங்குகின்றது. கிழக்கு மாகாணத்தின் ஒரு சிறிய நிலப்பரப்பில் இத்துணை பெறுமதிவாய்ந்த இயற்கை, கலை, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இடங்கள் காணப்படுவது இம்மண்ணிற்கேயுரிய தனிச்சிறப்பென்று போற்றினால் அது மிகையாகாது.

குறுகிய வார விடுமுறைகள் அல்லது வார இறுதி நாட்கள் என இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முழுமையாகக் கண்டுகளிக்கக்கூடிய சுற்றுலாத்தளமாக இதனைக்கொள்ளலாம். தனது வியத்தகு சுற்றுலாத் தளங்களைக்கொண்டு பயணிகளை மீண்டும் மீண்டும் தன்புரமீர்க்கும் இத்திருகோணமலை உங்கள் விடுமுறை அனுபவத்தை மென்மேலும் மெருகூட்டவல்லது!

இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவியரீதியில் சுற்றுலாவிரும்பிகள் பார்வையிடவேண்டிய தலங்களின் வரிசையில் திருகோணமலை முக்கிய இடம்பெற்று வீற்றிருப்பது இலங்கை மண்ணுக்கும் அதன் வரலாற்றுச் சிறப்பிற்கும் பெருமை சேர்த்துக்கொண்டே இருக்கும்!

 
 
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 24.4.2017 at 2:09 PM, suvy said:

எனவே இலங்கைக்கு புத்தசமயம் கொண்டு வரப்பட்டபோது இங்கு இவ்வாலயம் இருந்து இருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது. ஏனெனில் புத்த பிக்குணியாகிய சங்கமித்தை புனித வெள்ளரசங்கிளையுடன் வந்து சம்பில்துறையில் இறங்கிய பொது தேவநம்பியதீசன் இவ்வாலயம் இருக்கும் இடத்தில் வடபுறம் ஒருமடத்தில் (அவனால் அமைக்கப்பட்டதென்பர்) தங்கி இருந்து வரவேற்றான் என மகாவம்சம் கூறுகிறது..

இந்த சம்பில்துறை ஜம்புகோளத்துறையாகி பின்னர் மாதகலாகி இப்ப தம்பகொலபடுனவா மாறிட்டுது அமைச்சரே 

இன்னமும் சம்பில்துறை எண்டால் யாருக்குப் புரியும்.:grin:

IMG_0104.jpg

Link to comment
Share on other sites

உடவளவை தேசியப் பூங்கா 

இலங்கை வாழ் மக்களில் 90 வீதமானோர் சென்றிருக்கக்கூடிய அனைவரும் அறிந்திருக்கக்கூடிய இடமே கதிர்காமம். இன, மத, மொழி வேறுபாடு இன்றி இலங்கையர்கள் கதிர்காமத் திருத்தலத்திற்குச் செல்வதை வாழ்நாள் கடமையாகக் கருதுகிறார்கள். கதிர்காமம் யாழ்பாணத்தில் இருந்து கிட்ட தட்ட 600 கிமீ தூரத்தில் உள்ளது. உடவளவை தேசியப் பூங்கா கதிர்காமத்திற்குச் செல்லும் வழியில் கொழும்பிலிருந்து 200 கி.மீ தொலைவில் காணப்படுகின்றது. உலர் வலயப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பூங்காவில் நீர் வாழ் உயிரினங்கள் உள்ளடங்கலாக மான், சிறுத்தை, சிறுத்தைப் புலி, நரி, முயல், குரங்கினங்கள் போன்ற விலங்குகளையும் மயில், காட்டுக் கோழி, மைனா, கொக்கு, நாரை போன்ற சகல விதமான பறவையினங்களையும் காணமுடியும். குறிப்பாக இப்பிரதேசம் யானைகளுக்குப் பிரபல்யம் வாய்ந்தது. யானைகள் கூட்டம் கூட்டமாகச் செல்வதை சாதாரணமாகக் கண்டு ரசிக்க முடியும். இவற்றுடன் இங்கு காணப்படும் அரிய பல மரங்களும் இப்பகுதிக்கு மேலதிக குளிர்ச்சியான அழகைக் கொடுக்கின்றன. உடவளவை நீர்த் தேக்கமும் இப்பூங்கா அமைந்துள்ள பிரதேசத்திலேயே உள்ளது. முற்று முழுதான இயற்கை வனப்பைக் கண்டு ரசிப்பதற்கு உடவளவைத் தேசியப் பூங்கா பொருத்தமான சுற்றுலாத் தலம்.

Screen%2BShot%2B2015-07-17%2Bat%2B3_Fotorw.jpg

jey%2Bjey%2Btravals%2B%2526%2Btours.png

Screen%2BShot%2B2015-07-17%2Bat%2B3.15.04%2BPM.png

http://jeyjeytourism.blogspot.ch/2015/07/blog-post_17.html

Safari

Nisaetus cirrhatus

Axis axis ceylonensis

 

Elephants passing Udawalawe reservoir

http://www.djibnet.com/photo/உடவளவை+தேசியப்+பூங்கா/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தவறாமல் ஏறவேண்டிய இலங்கையின் 5 மலைகள்

இயற்கை வனப்புமிகு இலங்கையின் மலைகள்

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

“அபடீன்” நீர்வீழ்ச்சி – இயற்கையின் காதலர்க்கு…

 

“இலங்கைத் தீவின் மலையடிவாரங்களில் சுவர்க்கத்தைக் கண்டேன்” என்று 14ஆம் நூற்றாண்டின் நாடோடி ‘ஜோன் டீ மொரிஞொலி’ கூறியதாக சிறிய வகுப்பு சமூகக் கல்விப் பாடப் புத்தகங்களில் படித்ததாக ஞாபகம். அது சரி லண்டன் பிரிட்ஜ்-இலும், ஈபில் டவரிலும், பெர்ஜ் கலீபாவிலும் நின்றுகொண்டு பந்தாவாக செல்பி (தாமி) எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவிட்டு, சமயம் கிடைக்கும் பொழுதுகளில் “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப் போல வருமா” என்று இளையராஜாவை இழுத்தெடுக்கும் நமக்கு, “சொர்க்கமே நம்ம ஊர்லதான் இருக்கு” என்ற உண்மை புரிவதில்லை பாவம்.

ஒரு கிழமைக் குப்பை போட இடமில்லாமல் நகர் முழுதும் நாறிப்போய் கிடக்கிறதே! இதிலென்ன சுவர்க்கம் என்று கேட்கிறீர்களா? அட! அது நாம் நகரம் என்ற பெயரில் நரகமாக்கிய சுவர்க்கம் நண்பர்களே! நான் சொல்வது, நமது “பொல்யூஷன்” (மாசு) பார்வை மொய்க்காத புண்ணிய பூமிகள் பற்றியது. புண்ணிய பூமிக்கு புது வரைவிலக்கணம் கொடுத்தாயிற்று, இனி சுவர்க்கம் நோக்கிய யாத்திரைக்குச் செல்வோம்.

கோடை, மழை, வெள்ளம், மண்சரிவு இப்படி நாம் எந்தப் பருவகாலத்தில் இருக்கிறோம் என்றே தெரியாத அளவு குழப்பத்தில் நாடு இருக்கையில், சுற்றுலாவுக்கு இடத் தேர்வு செய்வதொன்றும் அவ்வளவு எளிதல்ல. ஒருமுறை தென்னிலங்கை கடற்கரைகள் கண்டாயிற்று, போனமுறை வனவிலங்குகள் சரணாலயம், வரலாற்றுத் தலங்கள் என வடமத்தியின் வரண்ட காலநிலை கடந்தாயிற்று. வேறு வழி? மலைநாடுதான். இப்படி ஆரம்பித்தது பயணம். அதிக திட்டமிடல் இல்லாத கால்போன போக்கில், மன்னிக்கவும் ‘கார்’ போன போக்கில் நாவலப்பிட்டி நகரைத் தாண்டி சென்றுகொண்டிருந்தவேளை…

மலைநாட்டு சுற்றுலாக்களில் எழுதப்படாத சட்டங்களான அணைக்கட்டுகள், மின்னுற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை புறந்தள்ளிவிட முடியுமா என்ன? பிறகு “ஹட்டனுக்கு போனீங்களே, லக்ஷபான நீர்வீழ்ச்சி பாக்கல்லையா?” என்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? நாங்களும் லக்ஷபான நோக்கிய பயணத்தையே தொடர்ந்தோம்.

கினிகத்தேனையை அண்மித்ததும் எம்முடன் இருந்த ஒரு ‘என்சைக்ளோபீடியா’ கினிகத்தேனை சந்திப்பிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் நீர்வீழ்ச்சி ஒன்று இருப்பதாக அறிவித்தது. “ப்ளான மாத்துவம் மச்சான், வாகனத்த இடதுபுறம் பள்ளத்தில் விடு” என்று ஒருவர் அறிவிக்க, ஏகமனதாக அத்திட்டம் ஆமோதிக்கப்பட்டது. “அபடீன் நீர்வீழ்ச்சி” (Aberdeen Falls) -இலங்கைத் தேயிலையில் காதல்கொண்டு வந்துசேர்ந்த ஸ்கொட்லாந்து நாட்டவர்களினால் இலங்கையின் முக்கிய இடங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களில் இதுவும் ஒன்று.

IMG_20170629_151315-701x1246.jpg

மழைநின்ற தூறலுடன் மலைச்சரிவில் வளைந்துசெல்லும் ஒடுங்கிய பாதைவழியே சுமார் இருபது நிமிட வாகன ஓட்டம். பாதை மருங்கில் அடர்ந்து வளர்ந்த பன்னத் தாவரங்கள், நீண்டு வளர்ந்த சாதிக்காய், பலா, ஜம்பு என பசுமை உலகுக்குள் நாம் நுழைவதான ஓர் பிரமை. பாதித் தூரம் கடக்கையில் எதிர்த்திசைப் பள்ளத்தாக்கை நோக்கி பிரவாகமெடுத்து வீழும் நீர்ஜெரி, கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிந்த காட்சி ஏற்படுத்திய சிலிர்ப்பு, நீர்வீழ்ச்சி நோக்கிய எங்கள் பயணத்துக்கு மிகை எரிபொருள் போலானது.

ஆனால் நினைக்குமளவு அவ்வளவு தூரம் பள்ளத்தாக்குகளில் சென்று நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தை அடைவது சுலபமல்ல. போகப்போக பாதையின் சீரற்ற தன்மை அதிகரிக்க ஆரம்பித்தது. சுமார் ஏழு கிலோமீட்டர்கள் சென்ற வாகனம் அதற்கு மேல் நகர மறுக்க, அங்கே வீதியோரம் வேலைசெய்துகொண்டிருந்த தொழிலாளர்களிடம் தொடர்ந்து செல்வது பற்றி வினவினோம். கொஞ்ச தூரம்தான், நடந்தால் போய் விடலாம் என்று அருள்வாக்களித்தார்கள். எங்கே அடிவாரத்தை அடைவது கனவாகிவிடுமோ என்ற வருத்தத்தில் இருந்த எங்களுக்கு சுவாசம் நுரையீரலின் தரைதொட்டது.

நடக்க ஆரம்பித்தோம், இரண்டொரு நீர்ப் போத்தல்கள், செல்பி ஸ்டிக் போன்றவற்றை காவிக்கொண்டு பாதை வளைந்த வாக்கிலே நாங்களும் பள்ளம் நோக்கி படையெடுத்தோம். உள்ளே செல்லச் செல்ல நாங்கள் கண்ட காட்சிகளும் அனுபவங்களும் புதுவிதமாக இருந்தன…

DSC_7517-701x1248.jpg

பாதையின் இடையிடையே குறுக்கறுக்கும் சிறு நீரோடைகளும், அவற்றின் காதுக்கினிய ஓசையும், காட்டுப் பாதையில் ஓடும் குளிர்ந்த, தெளிந்த நீரும் உள்ளத்தை கொள்ளைகொள்ள வல்லவை. இத்தனைக்கும் சிகரமாய் ஆங்காங்கே இருந்த எளிமையான ஒற்றைத் தனி வீடுகளும், சில வீடுகளின் முற்றத்தில் இயற்கையாய் அமைந்திருந்த குறு நீர்வீழ்ச்சிகளும் “வாழ்றானுங்கடா” என்று எங்களை பெருமூச்சிறைக்கவைத்தன. என்னதான் சொல்லுங்கள், இப்படி ஓர் சூழ்நிலையில் இதமான காலநிலையில் வாழ்ந்து மரணிக்கும் எவருக்கும் கடவுள் கொடுக்கப்போவது இரண்டாம் சொர்க்கம்தான்.

பாசியும், கூழங்கற்களும் மண்டிக்கிடந்த பாதையில் பாடுபட்டு நடக்கும்போது “மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை” என்ற கவிப்பேரரசுவின் வரிகள் மூளைக்குள் வந்துவந்து போயின. பாதை வர வர பயம் காட்டியது, எதிர்ப்படும் யாராவது ஒருவரைக் கேட்டால், “கொஞ்சம் தூரம்தான், இதோ வந்துவிடும்” என்று சொல்கிறார்களே தவிர அடிவாரம் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை. கால்கள் நகர மறுத்தன, நிலைதடுமாறி விழுந்துவிடுமளவு கற்கள் நிறைந்த பாதை எம்மை வாட்டியது. போகும்  வழி இன்னும் எத்தனை பயங்கரமான சவால்களை வைத்துக் காத்திருக்கிறதோ என்பதுபற்றிக்கூட சட்டை செய்யாமல் எதோ ஒரு வேகத்தில் நடந்தோம்.

20170629_131402-701x935.jpg

வீட்டில் அம்மாவும் அப்பாவும் அப்பாடுபட்டு வளர்த்த பூமரங்கள் இங்கே பார்ப்பாரற்று செழித்து வளர்ந்திருப்பதைப் பார்த்து இறைவனின் திருவிளையாடல்களில் இதுவுமொன்று என்று நினைத்து மனதுக்குள் சிரித்தவாறு திறன்பேசி தேடியெடுத்து சிலபல பூக்களின் சிரிப்பை சுட்டேன்! ஓர்கிட், அந்தூரியம், கடுகுப்பூ, குரோட்டன்கள், சேம்பு, ஆற்றுவாளை, கோடசாரை, கோப்பி, மலைவாழை இப்படி நீண்டுசெல்லும் தாவரப் பல்வகைமை.

சில இடங்களில் போடப்பட்டிருந்த சீரான படி வரிசைகள் நாங்கள் போகும் பாதை சரிதான் என கட்டியம் கூறின. ஆளில்லாத அடர்ந்த காட்டுக்குள்ளும் ஆங்காங்கே தெரிந்த மதுப் போத்தல்களும், நெகிழிப் பைகளும் மனிதன் செவ்வாய்க் கிரகத்திலும் கொத்துரொட்டி போடுவான் என்று அலுத்துக்கொள்ளவைத்தது. எதோ எஞ்சியிருக்கும் எச்ச சொச்ச இயற்கையையும் மனிதன், மன்னிக்கவும் “நாங்கள்” வேட்டு வைத்து அழிப்போமடா! என்று ஆழ்மனது பொதுநலம் பாராட்டியவேளை, “என்னை விட்டுவிட்டீர்களே! நானும் இருக்கிறேன் இவ்வுலகில்” என்று மண்டைக்குள் சென்ற கணத்தாக்கம் கால்வழியே கசிந்த உதிரத்தை கண்டுகொண்டது. இருக்கின்ற கஷ்டத்தில் நீயுமா என்று என்னோடு ஒட்டிப் பிறந்ததுபோல் கட்டிக்கொண்டிருந்த அட்டையை அகற்றி நடந்தேன். இனி முன்னும் பின்னுமிருந்து பல அட்டை அட்டாக்குகளுக்கான அபயக் குரல்கள் நண்பர்களிடமிருந்தும் வந்தன.

DSC_7562-701x1248.jpg

இந்த நாள் முழுதும் இங்கேயே போய்விடுமோ என்னவோ, போவதற்கே இவ்வளவு பாடு, இதில் இதே பாதையினூடு திரும்பியும் வரவேண்டும் கடவுளே என்று குற்றுயிரும் குலையுயிருமாக நடந்த எங்களுக்கு, மிக அருகில் நீர்வீழ்ச்சி இருப்பதாய் நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ஆருடம் கூறியது. இதனையும் “இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்று சொல்லலாம் வாசகர்களே, தப்பில்லை! ஆர்வம் மேலிட வேகமாக முன்னேறிச் சென்ற எங்களை, கண்ணெதிரே நாங்கள் கண்ட காட்சி மெய்மறக்கச் செய்தது.

பிள்ளை பெறும் வேதனை அத்தனையும் குழந்தையின் முதல் அழுகை கேட்டவுடன் காணாமல் போகும் தாய்மார்  போன்று அத்தனை பெரிய நீரின் வீழ்ச்சியும், எங்கள் முகத்தில் வந்து விசிறிய கோடி கோடி நீர்த் தூறல்களும் அவ்வளவு நேரமும் நாங்கள் அனுபவித்த நோவினைகளை இருந்த இடம் தெரியாமல் பறந்துபோகச் செய்தது! “worth the struggle” என்று நண்பனொருவன் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தான். ! களனி கங்கையின் முக்கிய கூறான “கெஹல்கமு” வாவியில் தோன்றும் இந்நீர் வீழ்ச்சி இலங்கையின் பதினெட்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும்.

DSC_7567-701x1248.jpg

அட்டைகள் அனுப்பிய “ஹிருடின்” செயலிழக்கும் வரை வழிந்துகொண்டிருந்த இரத்தத்தையும் பொருட்படுத்தாது, கரடு முரடான குன்றுகள் வழியே ஆர்வ மிகுதியால் அவசர அவசரமாக கீழிறங்கினோம்! 322 அடி உயரத்திலிருந்து கொட்டிய நீர்ஜெரியும், அதன் ஆர்ப்பரிக்கும் ஓசையும், புகைமூட்டமாக சூழ்ந்துகொண்ட நீர்த் தூறல்களும் ஏற்படுத்திய அனுபவம், கண்டம் கடத்து பறந்துசென்று நயாகராவின் புகழ்பாடிய கவிப் பேரரசே! இதோ உங்கள் அண்டைவீட்டில் இருக்கும் சுவர்க்கத்தைக் கண்டு பாட உங்களுக்குக் கொடுப்பினை இல்லையே என்று சொல்லச் சொன்னது.

அது ஒரு சுகானுபவம், இயற்கையும் போதைதான், அதை முழுவதும் அனுபவிபவர்க்கு… சந்தோஷ மிகுதியால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் கூவினோம், சிரித்தோம், சில பல செல்பிகளில் குளித்தோம் (நீரில் குளிப்பதற்கு ஆயத்தமாகச் செல்லவில்லை) போதும் போதும் என்னும் அளவு மலையன்னை கொடுத்த தாய்ப்பாலைப் பருகிக் களித்தோம் (கற்பனை : கவிப்பேரரசு வைரமுத்து)

DSC_7676-701x394.jpg

இனி திரும்பவேண்டிய நேரம், இத்தனை தூரத்தை மறுபடியும் கடக்க வேண்டுமே என நொந்துகொண்டு, கையிலிருந்த நீர்ப் போத்தல்கள் காலியானவர்களாக, தொண்டைத் தண்ணீர் வற்ற புவியீர்ப்புக்கு எதிராக எங்கள் முழுப் பலனையும் கொண்டு மேலேறினோம். பாடசாலை முடிந்த நேரம் அக்காட்டுப் பகுதியில் ஆங்காங்கே சிறு வீடுகளில் வசிக்கும் பிள்ளைகள் பாடசாலை முடிந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் இரு முறை இப் பிஞ்சுக் கால்கள் இத்தூரத்தை நடந்து கடக்கின்றனவே! ஒரு நாள் கடப்பதற்கே வளர்ந்த எமக்கு நாக்குத் தள்ளுகிறதே என்று நினைத்ததும், தொழில்நுட்பமும், வசதி வாய்ப்புக்களும் மனிதனுக்கான இயற்கை விதிகளிலிருந்தும் எம்மை எத்துனை சோம்பேறிகளாகவும், ஆரோக்கியமற்றவர்களாகவும் மாற்றி வைத்திருக்கிறது என்ற உண்மை நடுமண்டையில் உறைத்தது.

DSC_7526-701x394.jpg

கிட்டத்தட்ட பிரதான பாதையை அண்மித்ததும் நண்பனொருவன் “அபடீன்” என்று செய்த கூகுளில் “தடாகத்தின் மையப்பகுதி குளிப்பதற்கு உகந்ததல்ல, அதிக மரணங்கள் சம்பவித்த இடம், அவதானம்” என்ற வாசகம் கண்டதும், “இவ்வளவு தூரம் வந்தும் நீரிலிறங்கி குளிக்கவில்லையே” என்று புலம்பிக்கொண்டு வந்த நண்பனை நோக்கி காட்டமாக திரும்பியது அனைவரின் பார்வையும்!

படங்கள் : கட்டுரையாசிரியர்

 

https://roar.media/tamil/travel/travel-aberdeen/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.