Jump to content

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி -மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினர்.


Recommended Posts

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்டப் போட்டி -மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினர்.

 
IMG_6807.jpg
 
கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில்  பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட போட்டியை நேற்று சனிக்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
 
அக்கினிச் சிறகுகள் அமைப்பின்  ஏற்பாட்டில் கிளிநொச்சி உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியாக  வடக்கில் கிழக்கில் உள்ள பல மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி போட்டி முல்லைத்தீவு இரணைப்பாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
 
கிளிநொச்சியில் ஆரம்பமான போட்டியில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட ;  பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கருத்து தெரிவித்த போது
 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பாந்தாட்ட போட்டியில் என்னையும் விருந்தினராக அழைத்திருந்தார்கள் நான் அரசியல் வாதியாக அல்லாமல் ஒரு விளையாட்டு வீரனாக ஆதாவது பல போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றி கிண்ணங்களை பெற்றவன் என்ற அடிப்படையில் கலந்துகொண்டிருக்கிறேன்.
 
எங்கள் சமூதாயம் பெரும் போர் ஒன்றை சந்தித்து வீழ்ந்துகிடக்கின்ற நிலைமையில் இப்படியான விளையாட்டுக்கள் குறிப்பாக இளைஞர்களை ஒழுங்கமைத்த உற்சாகப்படுத்துகின்ற வகையில் மனோநிலை உடல் நிலை என்பவற்றை கட்டியெழுப்ப வேண்டும். தொடர்ந்தும் அவர்கள் ஒரு விடுதலை உணர்வோடு எங்கள் சமூதாயத்தில்  தலைமைத்துவ பயிற்சி வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கோடு நடைப்பெறுகின்ற இந்தப் போட்டியில் நான் கலந்துகொள்வதனையிட்டு ஆறுதலும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
 
இந்த விளையாட்டுப் போட்டி பல இக்கட்டுகளுக்கு மத்தியில் அதாவது பொலீஸார் மற்றும் உளவுத்துறையின் விசாரணைகளுக்கு மத்தியில் இடம்பெறுகிறது. எனவே இவர்கள் தொடர்ந்தும் தங்களது விடுதலையுணர்வை இழந்துவிடாது மேலும் கட்டியெழுப்புதற்காக ஜனநாயக வழியில்  இவ்வாறான போட்டிகள் இடம்பெறுவதை நான் வரவேற்கிறேன் எனத் தெரிவித்தார்
 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைப்பந்தாட்ட போட்டிகள் பல மட்டங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தமை தொடர்பில்  கருத்து கேட்ட போது
 
விமர்சனங்கள் இடம்பெறும் அதனை நாங்கள் மறுக்கவில்லை ஆனால் இதே இளைஞர் சமூதாயத்தை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் மக்களையும் வீரர்களையும் இணைப்பதில்  ஏற்பாட்டாளர்கள் ஒரு விடுதலையுணர்வோடுதான் இந்தப் போட்டிகளை நடத்துகின்றார்கள். இத்தனை அழிவுகளுக்குப் பின்னும் எத்தனையோ போட்டிகள் எத்தனையோ கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. ஆனப்படியால் இந்தப் போட்டியையும் அதேமாதிரியான விமர்சனக் கண்ணோடு பார்க்காமல் அவர்கள் எழுந்து நிற்கின்றார்கள்  அவர்கள் உடல் வலிமை பெறுகின்றார்கள் வடக்கு கிழக்கு இணைந்து நிற்கவேண்டும்  என்ற ஒரு  அடிப்படை கோட்பாடுக்கொள்கை  இருப்பதை நான் பார்க்கின்றேன். எங்களுடைய  இளைஞர்கள்  விளையாட்டுத்
IMG_6787.jpgIMG_6789.jpgIMG_6795.jpgIMG_6801.jpgதுறையில் மீண்டும் எழுந்து வந்துள்ளனர் என்பதையே நான் இங்கு பார்க்கின்றேன் எனத் தொிவித்தாா்.
 

https://globaltamilnews.net/archives/24833

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்  வாழ்வின் மிக மிகக் கொடிய வரலாற்றுப் பதிவு முள்ளிவாய்க்கால் , இந்த நினைவு தினத்தில் , மரணித்த மக்களை நினைவு கூர்ந்து, காணாமல் செய்யப்பட்டோரை கண்டுபிடித்தல், காணி மீட்பு  போன்றவற்றை முன்னிலைப் படுத்தி மாபெரும் கவணயீர்ப்பை மேற்கொண்டு , உலக நாடுகளின் கவணத்தினை எம்மீது திருப்ப வேண்டிய தருணத்தில்......, விளையாட்டு விழா நடத்தி மக்களின் கவணத்தினை திசை திருப்பி  அரசாங்கத்தின் திட்டத்தினை நிறைவேற்றும் இந்த ஈனப்பிறவிகள் தான் எமது பிரதிநிதிகள் என்பது முள்ளிவாய்க்கால் அவலத்தினை விடக் கொடுமையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொட்டைத்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதானா முள்ளி வாய்க்கால்  நினவு தினத்துக்கும் உதைபந்தாட்டத்துக்கும் என்ன சம்பந்தம்  வர வர சமபந்தம் இல்லாதத மட்டும் செய்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, முனிவர் ஜீ said:

மொட்டைத்தலைக்கும் முளங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது இதுதானா முள்ளி வாய்க்கால்  நினவு தினத்துக்கும் உதைபந்தாட்டத்துக்கும் என்ன சம்பந்தம்  வர வர சமபந்தம் இல்லாதத மட்டும் செய்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள் 

இப்படியாவது நினைவு கூறுகிறார்கள் என்று மகிழ்சி அடைவோம்.....சூரன் போருக்கு ஒவ்வோருத்தரும் ஒரு விளக்கம் கொடுப்பது போன்று இதுக்கும் ஒரு விளக்கம் கொடுபடும்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.