Jump to content

இங்கும் அங்கும்


Recommended Posts

                                       "நாளைக்கு செந்தளிப்பா இன்னும் அழகா இருக்கோணும் அம்மா சீக்கிரம் படனை" அம்மா சொல்லிவிட்டு கதவை மெதுவாக மூடி சென்றாள். அவள் அப்படித்தான் நடந்தால் நிலமதிராது. இரண்டு அண்ணன்கள் செல்லமாய் வளர்ந்த எனக்கு கொஞ்சம் துடுக்குதான். ஒருமுறை பள்ளி ஆசிரியை அடித்ததை அறிந்து அவருடன் சண்டைக்கு போன அப்பா என் மேல் துரும்பு விழுந்தாலும் துடித்து போகும் பாசம் .எனது சந்தோசமே அவரது சந்தோசமென வாழ்கிற ஜீவன்.

                                        எல்லோரும் தூங்கிவிட்டார்களா.. அப்படி அமைதியாக இருக்கிறது. அந்த நிசப்தத்திலும் என் இதயத்தின் துடிப்பு எனக்கு கேக்கிறது. ஏன் இந்த படபடப்பு?  ஏன் இந்த சலனம்? நாளைக்கு எனக்கு திருமணம் மாப்பிள்ளை இலண்டன். எல்லா இலட்சணங்களும்  குணங்களும் கலந்த கலவை போல. ஏனோ யாருக்கும் சம்மதிக்காத என்னை அவர் பார்வை கவர்ந்துவிட்டது .

                                        "எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை வேணாம் அப்பா உங்களை விட்டு என்னால் பிரிந்து போக முடியாது"

                                         "ஏன் பிரிந்து இருக்க வேண்டும் அடிக்கடி நீ வரலாம் நாங்கள் வரலாம் நல்ல வரன் நல்ல வாழ்க்கை நீ சந்தோசமாக இருப்பாய் "என எல்லோரும் சொல்லி என்னை சம்மதம் சொல்ல வைத்தனர். ஜாதகம் அப்படி பொருந்தி விட்டதாம் என அப்பா பூரிப்பாய் சொன்னார். விருப்பமே இல்லாதவளாக வெளியே காட்டி கொண்டாலும் வசீகரன் அழகில் ஏன் மனம் தொலைந்தது உண்மைதான். தூக்கம் வரவில்லை பல நினைவுகள், குழப்பங்கள், பயம் கவலை காதல், பூரிப்பு, சந்தோசம், எல்லாம் கலவையாக மனம் குழம்பி தூக்கமே வரவில்லை. கண்ணை மூடிக்கொள்கிறேன்.

                                        வசி முதல்முறை அழைப்பில் இருப்பதாக அப்பா கைத்தொலைபேசியை கொடுத்தார்.

                                            "மாப்பிளை பேசு" என்று பெரும் தயக்கம். அப்பா நாகரீகமாக வெளியே போய்விட்டார்.

                                            "வணக்கம் " தமிழில் முதல் வார்த்தை. பதில் வரவில்லை எனக்கு. மீண்டும்

                                            "வணக்கம் கலைவாணி "

                                            "வணக்கம்"  நான்  சொன்னது எனக்கே கேட்கவில்லை.

                                            "கேக்கல"

                                           "வணக்கம்" கொஞ்சம் வார்த்தையும் நிறைய காத்துமே வந்தது.

                                            "நான் உங்கள வாணின்னு கூப்பிடவா"

                                             "ம்ம் எல்லோரும் அப்படித்தானே கூப்பிடுவார்கள்" இப்படி தொடங்கிய பேச்சு மணிக்கணக்கில் தொடர, பேசி பேசி அவர்மேல் காதல் பெருகித்தான் போனது. ஒருநாள் பேசாமல் இருந்தால் எதோ வெறுமையாக தோணும். எனக்குள் எவ்வளவோ மாற்றங்கள் எப்போது அவரோடு சேருவோமென்ற எண்ணம். மற்றவர்கள் பாசத்தை எல்லாம்  ஓரம் கட்டிவிட்டதோ என எண்ண  தோன்றியது .

ஒரு தேநீர் கூட வைக்க தெரியாத பெண் என்று இருந்த எனக்கு கடந்த சில வாரங்களாக அம்மாவின் சமையல் வகுப்பெடுப்புகள் எக்கச்சக்கம் . விரலை சுட்டு கொண்ட ஒரு நாள் வசியிடம் சொன்னபோது

                                            "எதுக்கு கஷ்டப்படுறீங்க நான்  பார்த்துக்கொள்கிறேன்" என்றார்

                                            "என்ன சமையலையா" என்றதும்

                                             "ஆமாம் பத்து வருடங்களாக நானேதான் சமைத்து உண்கிறேன்" என்றபோது ஓ பெரிய சமையல்காரர் போல என்று எண்ணிக்கொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன்தான் வசியை விமானநிலையத்துக்கு வரவேற்க போனபோது நேரில் பார்த்தேன். அப்படியே ஓடிப்போய் கட்டிக்கொள்ள வேணும் போல் இருந்தது. அவருடைய அம்மா உறவுகள் என் அப்பா அம்மா அண்ணன்மார் எல்லோரும் இருந்தார்கள். அவர் என்னை பார்த்தும் பராதது போல அவர் அம்மாவை பொய் கட்டி கொண்டார். அம்மாவின் காலை தொட்டு வணங்கினார். எல்லோரிடமும் நலம் விசாரித்து நம் பக்கம் வந்தார். அப்பா அம்மா கால் தொட்டு வணங்கினார். யாரும் எதிர் பாக்கவில்லை அவர் அம்மாவை பார்த்தேன். அவருக்கு பிடித்திருக்காதோ என அவரோ மிகவும் பெருமையுடனும் வாஞ்சையுடனும் பார்த்துக்கொண்டிருந்தார். 

                                             என்னை குறும்புடனும் பார்த்து சிரித்த கண்களை அப்பா பக்கம் திருப்பி,

                                             "எங்கே ஏன் மனைவி "என கேட்டார்.

                                              "என்ன மாப்பிள்ளை இதோ வாணி நிக்கிறா தெரியவில்லையா" என்றார். எனக்கு இவ்வளவு வெட்கம் வருமென எனக்கே அப்போதுதான் தெரிந்தது. கையில் இருந்த பூங்கோத்தை அவருடன் கொடுத்து

                                               "நல்வரவு" என்றேன்.

                                                "புகைப்படத்தில் விட நேரில் மிக அழகாக இருக்கிறீங்க வாணி" என்றார்.

                                                "நீங்களும்தான்" என்றேன். மெல்ல குனிந்து காதருகே வந்தவர்

                                                "மூன்று நாட்கள்  காத்திருக்க முடியாது இப்போதே ஓடிப்போகலாமா" என கேட்டார். எனக்கு கூச்சமாக இருக்க அம்மா பின் ஓடி ஒளிந்து கொண்டேன். அன்று பிரியமுடியாமல் கண்களால் தழுவி பிரிந்தோம். இதயம் ஆனந்தமாய் அந்தரத்திலேயே மிதந்துகொண்டிருந்தது. மறுநாள் அவர்கள் வீட்டுக்கு வருகிறார்கள் என அப்பா சொன்னார். வசீ என்ன செய்வாரோ.. குறும்புக்காரன் வெளிநாட்டில் வாழ்ந்தவர். எதாவது முத்தம் கித்தம் குடுத்து அவரை யாரும் தப்பை நினைத்து விடுவார்களோ.. என பல எண்ணங்கள் எனக்குள். அவருடன் அவர் அம்மா, அவர் சித்தி, சித்தப்பா, அவர்களின் மகள் என சிலர் வந்தார்கள். ஒரே கலகல என இருந்தது. எங்கள் கண்கள் மட்டும் காதல் பேசிக்கொண்டிருந்தது. அவர் சித்தி மகள்

                                             "அக்கா உங்க வீட்டை சுத்தி கட்ட மாட்டிங்களா வாணி" என கேட்டார்.என்று கேக்க

                                              "ஓ வாங்கோ" என அழைக்க..

                                              "அண்ணா நீயும் வா" என அவரையும் கையை பிடித்து அழைத்து வந்தார். கடைசியாய் மொட்டைமாடி வந்தபோது..

                                               "அண்ணா ஏன் வேலை முடிந்தது சீக்கிரம் பேசிவிட்டு வா" என அவள் ஓடிவிட்டாள். தனியே நானும் வசியும் வண்ணத்துப்பூச்சிகள் வயிற்றினுள் படபடத்து அலைபாய..

                                                 "ஐயோ தப்பா  நினைப்பார்கள் கீழே போவோம்" என திரும்பி போக முற்பட்டேன். கையை என்  கையின் மணிக்கட்டை இறுக்கி பிடித்தார்.

                                                  " ஆஹ்" என்ன ஒரு முரட்டு பிடி.

                                                  "ஓ வலித்துவிட்டதா" அப்படியே என் கரங்களை இழுத்து என்னை அவை மீது சாய்த்தது கொண்டபோது, அந்த என்றுமே உணராத ஒரு புது பரிஸம், ஒரு புது இடம், புது இதம், எங்கும் பரவசமாய் அந்த மார்பின் ஒதுங்கி விடமாட்டேனா? என இதயம் ஆசை கொள்ள..

                                                  "விடுங்கள் எல்லோரும் என்ன நினைப்பார்கள்" என கையை பறித்து ஓட முயன்றேன். இல்லை.. முயல்வதாக நடித்தேன். வசி என்னை என்  இடையில் கைகளால் இறுக்கி பிடித்து  கொண்டு இழுத்து, தன்னோடு அணைத்து கொண்டார். என்  கன்னத்தில் முத்தம் ..முதல் முத்தம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் கிறங்கி வசியின் காலடியில் விழுந்து கிடக்கிறது  போல உணர்ந்தேன். ஆனாலும் இது தவறு என்று ஏதோ சொல்ல முழு பலத்தையும் சேர்த்து அவரிடம் இருந்து பறித்து கொண்டு ஓடினேன். என்னை அவர் நினைத்திருந்தால் மறித்திருக்க முடியும். ஆனால் சிரித்துகொண்டே பார்த்துக்கொண்டு  நின்றார். நினைவுகள் மெல்ல கலைய, அந்த கதவு திறந்தது. அப்பா.. தூங்குவது போல இருந்தேன் .

மெல்ல உள்ளே வந்தவர், தலை அருகே அமர்ந்தார். மெல்ல ஏன் தலையை வருடியவர், என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார், என புரிந்தது. அவர் என்னை பிரிய போவதை எண்ணி அழுகிறார், என நினைத்தபோது உள்ளே உடைந்து நொறுங்கிப்போனேன். வெளிநாட்டு வாழ்க்கை எதுவும் வேண்டாம் .அப்பாவுடன் இருந்துவிடலாம் என தோணியது. அப்பா மெல்ல எழுவது புரிந்தது.கதவு பக்கம் போனவர் திரும்பி வந்து காலடியில் அமர்ந்து கொண்டார். என் கால்களை கைகளில் ஏந்தி முத்தம் இட்டவர். உள்ளே அதிர்வது புரிந்தது . படக்கென எழுந்து உடைந்து அழுது கொட்டிவிடுவோமா.. என்று தோணியது. வேணாம் நான்  அழுவதை அப்பாவால் தாங்கி  கொள்ள முடியாது. மனதை கல்லாக்கி கொண்டு கண்களை இறுக மூடி தூங்குவது போன்ற பாசாங்கை தொடர்ந்தேன். அப்பாவை நானும், என்னை அப்பாவும்,  பாராமல் எப்படி  எதிர்காலம்?.. சூனியமாய் இருக்காதா?.. இல்லை!  நான்  இருக்க பயம் ஏன்? என்று வசீகரன் ஒரு பிரகாசமான புன்னகை தர.. இந்த பேதை மனதில் மௌனமாய் பெரும் போராட்டமே நடக்கிறது. அப்போது அம்மா வந்தார். மெதுவாக

                                                   "என்ன இது ஏன் இப்படி அழுகிறீர்கள். நான் அப்போதே சொன்னேன் உள்ளூர்ல யாருக்கும் கொடுப்போம் என.. இல்ல அவள் சுகமா வாழனும் நிம்மதியா வாழோனும் என்று ஆயிரம் சொல்லிட்டு இப்ப சின்னைப்பிள்ளை போல அழுறீங்களே அப்பா" என அம்மா தானும் அழ மேல் அதுக்கு மேல் பொறுக்க முடியாமல் நான் எழுந்து.. அவர்கள் இருவரையும் பார்த்து விசும்ப ஆரம்பித்தேன். 

                                                   "இந்த கல்யாணம் வேணாம் நன் உங்கள விட்டு எங்கயும் போகமாட்டேன் அப்பா" என அவரை கட்டி கொண்டு அழ

                                                     "இல்லடா உன்னை எங்க  கட்டி குடுத்தாலும் இந்த பிரிவும் இருக்கும்தானடா பொண்ண பெத்தா யாருக்கும் கட்டி குடுக்கணும்டா அழாத தங்கம்" .. அவரும் அழ, அம்மாவும் அழ ,அண்ணாக்கள் இருவரும் கூட வந்து விட்டார்கள்.  அப்பா அம்மாவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு, என்னை தூங்க சொல்லி, அவர்கள் வெளியே போனபோது.. அவர்கள் பாசத்தில் கொஞ்சம் சந்தேகேமே வந்துவிட்டது.                   (தொடரும் ) 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.