Jump to content

யாரை ஏமாற்றும் முயற்சி?


Recommended Posts

யாரை ஏமாற்றும் முயற்சி?

Page-01-image-15d940a8929071d8c560cac4f2b6cadd5f36df8a.jpg

 

வடக்கில் இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான கூட்டம் ஒன்று கடந்த அண்மையில் பாது­காப்பு அமைச்சில் இடம்­பெற்­றி­ருந்­தது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அரச அதி­கா­ரிகள் மற்றும் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கும் இடையில் நடத்­தப்­பட்ட முக்­கி­ய­மான கூட்டம் இது.

இந்தக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் கிரி­சாந்த டி சில்வா பொது­மக்­களின் காணி­களை சுவீ­க­ரித்து வைத்­தி­ருப்­ப­தற்கு இரா­ணு­வத்­துக்கு அதி­காரம் இல்லை என்றும், தாம் அவ்­வாறு காணி­களைச் சுவீ­க­ரிக்­க­வு­மில்லை என்றும் கூறி­யி­ருந்தார்.

அத்­துடன், காணி­களை விடு­விக்­கு­மாறு ஜனா­தி­ப­தியோ, பாது­காப்புச் செய­லரோ உத்­த­ர­விட்டால் அதனை உட­ன­டி­யா­கவே நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்குத் தாம் தயா­ராக இருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

பாது­காப்பு அமைச்சில் நடந்த கூட்­டத்­துக்குப் பின்னர், கொழும் பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தான் இந்த தக­வலை வெளி­யிட்­டி­ருந்தார்.

பாது­காப்பு அமைச்சில் அண்மையில் இந்தக் கூட்டம் நடப்­ப­தற்கு இரண்டு நாட்கள் முன்­ன­தாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ர னும் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்­தனர்.

காணிகள் விடுப்பு, காணாமல் ஆக்­கப் ­பட்­டோரின் விவ­காரம் உள்­ளிட்ட வடக் கின் முக்­கி­ய­மான பிரச்­சி­னைகள் குறித்து பேச்சு நடத்­து­வ­தற்கே இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்தச் சந்­திப்பின் போது, காணிகள் விடு­விப்புத் தொடர்­பா­கவும், அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பா­கவும் சம்­பந்தன் கேள்வி எழுப்­பிய போது, இது குறித்த நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக அறிக்கை ஒன்றை சமர்ப்­பிக்­கு­மாறு ஒரு வரு­டத்­துக்கு முன்­னரே, பாது­காப்புத் தரப்­புக்கு தாம் உத்­த­ர­விட்­ட­தா­கவும், ஆனால் தனது உத்­த­ரவு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று வருந்­து­வ­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார். இந்தச் சந்­திப்பில் இரா.சம்­பந்­த­னுடன் பங்­கேற்­றி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தான் இந்த தக­வலை வெளி­யிட்­டி­ருந்தார்.

இரண்­டொரு நாள் இடை­வெ­ளியில் ஜனா­தி­ப­தி­யு­டனும், பாது­காப்பு அமைச்­சிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நடத்­திய சந்­திப்­பு­களில் அளிக்­கப்­பட்ட பதில்கள், ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டா­ன­வை­யாக இருப்­பதை அவ­தா­னிக்­கலாம்.

பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தாம் ஏற்­க­னவே உத்­த­ர­விட்­டி­ருந்த போதும், அந்த உத்­த­ரவை பாது­காப்புத் தரப்பு நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை என்றும் ஜனா­தி­பதி கூறு­கிறார்.

இரா­ணுவத் தள­ப­தியோ ஜனா­தி­பதி உத்­த­ர­விட்டால் தாம் காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்கத் தயா­ராக இருப்­ப­தாக கூறு­கிறார். இங்கு யார் உண்­மையைக் கூறு­கிறார் என்ற குழப்பம் பொது­மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இலங்­கையில் ஜனா­தி­பதி தான் அதிக அதி­காரம் படைத்­தவர். நிறை­வேற்று அதி­காரம் அவ­ருக்குத் தான் இருக்­கி­றது. முப்­ப­டை­க­ளி­னதும் தள­ப­தியும் அவர் தான்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­ வியை உரு­வாக்­கி­யவர் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த்­தன. ஆணைப் பெண்­ணா­கவும், பெண்ணை ஆணா­கவும் மாற்­று­வதை தவிர மற்­றெல்லா அதி­கா­ரமும் தமக்கு இருப்­ப­தாக அவர் முன்னர் பெரு­மை­யுடன் கூறி­யி­ருந்தார்.

அந்­த­ள­வுக்கு அவ­ரிடம் அதி­கா­ரங்கள் குவிந்­தி­ருந்­தன.

பின்னர் மஹிந்த ராஜபக் ஷ 18ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் மூலம், ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை மேலும் வலுப்­ப­டுத்திக் கொண்டார். எனினும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்னர் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இருந்­தாலும், நிறை­வேற்று அதி­கா­ரங்கள் இன்­னமும் அவ­ரிடம் தான் உள்­ளன. முப்­ப­டை­க­ளுக்கு ஆணை­யிடும் அதி­காரம் அவ­ரிடம் தான் இருக்­கி­றது,

ஆனால் தன்­னிடம் உள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பயன்­ப­டுத்­து­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டு, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அமைச்­சர்­க­ளா­லேயே முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. நிறை­வேற்று அதி­காரம் கொண்­ட­வ­ரான ஜனா­தி­பதி, தனது உத்­த­ரவை பாது­காப்புத் தரப்பு நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை என்று இரா.சம்­பந்தன், சுமந்­தி­ர­னிடம் கூறி­யி­ருக்­கிறார்.

அவ்­வா­றாயின், ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கட்­டுப்­ப­டுத்தும் சக்­தி­யாக பாது­காப்புத் தரப்பு இருக்­கி­றதா என்ற சந்­தேகம் எழு­கி­றது.

அதே­வேளை, பாது­காப்பு அமைச்சில் நடந்த கூட்­டத்தில், காணி­களை பிடித்து வைத்­தி­ருப்­ப­தற்கு தமக்கு அதி­கா­ர­மில்லை என்று இரா­ணுவத் தள­பதி கூறி­யி­ருக்­கிறார். அவ்­வாறு காணி­களை பிடித்து வைத்­தி­ருக்­க­வில்லை என்றும் கூறி­யி­ருக்­கிறார். அர­சாங்கம் கூறினால், அதா­வது ஜனா­தி­ப­தியோ, பாது­காப்புச் செய­லரோ உத்­த­ர­விட்டால், உட­ன­டி­யாக காணி­களை விடு­விக்கத் தயார் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

இரா­ணுவத் தள­ப­தியின் இந்தக் கருத்து, அர­சாங்­கத்தின் உத்­த­ரவின் பேரில் தான், காணி­களை படை­யினர் பிடித்து வைத்­தி­ருக்­கின்­றனர் என்று அர்த்­தப்­ப­டுத்­து­கி­றது.

அதே­வேளை, தாம் காணி­களை பிடித்து வைத்­தி­ருக்­க­வில்லை என்றும் அவ்­வாறு காணி­களைப் பிடித்து வைத்­தி­ருப்­ப­தற்கு அதி­கா­ர­மில்லை என்றும் இரா­ணுவத் தள­பதி கூறிய கருத்து உண்­மை­யா­ன­தல்ல.

இன்­னமும் இரா­ணு­வத்­தினர் வசம் காணிகள் உள்­ளன. அதனால் தான் அவற்றை விடு­விப்­பது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான கூட்டம் பாது­காப்பு அமைச்சில் நடத்­தப்­பட்­டது. வடக்கில் இரா­ணு­வத்­தினர் வச­முள்ள காணி­க­ளுக்குள் உரி­மை­யா­ளர்­களால் நுழையக் கூட முடி­யாது.

“இது இரா­ணு­வத்­தி­ன­ருக்கு ஒதுக்­கப்­பட்ட நிலம்”, “அத்­து­மீறி உள்­நு­ழையக் கூடாது” அல்­லது “உள்­நு­ழைந்தால் தண்­டிக்­கப்­ப­டு­வீர்கள்” என்­பது போன்ற வாச­கங்­களை வடக்கில் படை­யினர் வச­முள்ள காணி­களின் வெளிப் புறங்­களில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் அல்­லது தொடங்க விடப்­பட்­டி­ருக்கும் தகவல் பல­கை­களில் எழு­தப்­பட்­டி­ருப்­பதை இப்­போதும் காணலாம்.

பொது­மக்­களின் காணி­களில் யாரும் நுழையக் கூடாது என்று தடுக்­கின்ற அதி­காரம் இரா­ணு­வத்­துக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றதோ இல்­லையோ, அந்த அதி­கா­ரத்தை இரா­ணுவம் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது. அப்­ப­டி­யி­ருக்கும் போது, பொது­மக்­களின் காணி­களை பிடித்து வைத்­தி­ருப்­ப­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை என்ற இரா­ணுவத் தள­ப­தியின் கருத்து அபத்­த­மா­னது.

வடக்­கிலும் கிழக்­கிலும், இரா­ணுவம் தனக்­கான அதி­கா­ரங்­களை தாமா­கவே பெற்றுக் கொண்­டது. போர்க்­கா­லத்தில் மாத்­தி­ர­மன்றி, போருக்குப் பின்­னரும் கூட அவ்­வாறு தான் நிலை­மைகள் இருந்­தன.

தற்­போது அந்த நிலை­மை­களில் சில மாறு­தல்கள் ஏற்­பட்­டி­ருந்­தாலும், பொது­மக்­களின் காணி­களை இன்­னமும் இரா­ணுவம் பிடித்து வைத்­தி­ருக்­கி­றது. அவ்­வாறு காணி­களைப் பிடித்து வைத்­தி­ருப்­ப­தற்கு தமக்கு அதி­கா­ர­மில்லை என்று கூறிய இரா­ணுவத் தள­பதி தான், இன்­னொன்­றையும் கூறி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­ப­தியோ, பாது­காப்புச் செய­லரோ உத்­த­ர­விட்டால், காணி­களை விடு­விக்கத் தயார் என்­பதே அது. இங்கு ஒரு குழப்பம் வரு­கி­றது.

காணி­களைப் பிடித்து வைக்கும் அதி­காரம் இரா­ணு­வத்­துக்கு இல்­லை­யென்றால், அவற்றை விட்டு வெளி­யேறிச் செல்ல வேண்­டி­யது தானே, எதற்கு ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவு தேவைப்­ப­டு­கி­றது?

அப்­ப­டி­யாயின், ஜனா­தி­ப­தியும், இரா­ணுவத் தள­ப­தியும், ஒரு­வரை ஒருவர் மாறி மாறி சாட்டுச் சொல்லித் தப்­பிக்க முனை­கின்­ற­னரா? அல்­லது, இவ்­வாறு கூறி கூட்­ட­மைப்பை ஏமாற்ற முனைந்­தி­ருக்­கின்­ற­னரா? என்ற கேள்வி எழு­கி­றது.

வடக்கில் மாத்­தி­ர­மன்றி, கிழக்­கிலும் கூட தமிழ் மக்கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழ்ந்து வந்த, வளம்­மிக்க, பொரு­ளா­தாரப் பெறு­மானம் கொண்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணிகள் படை­யி­ன­ரிடம் உள்­ளன. இந்தக் காணிகள் தனியே பாது­காப்புத் தேவைக்கு என்றே அப­க­ரிக்­கப்­பட்­டன. ஆனாலும், வளம்­மிக்க இந்தக் காணி­களை படை­யினர் தமது பொரு­ளா­தாரத் தேட்­டங்­க­ளுக்­கா­கவும் வணிக நோக்­கங்­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

அதே­வேளை படை­யி­ன­ரிடம் காணி­களை இழந்த குடும்­பங்கள் இன்­னமும் தற்­கா­லிக இருப்­பி­டங்­களில் அல்­லது முகாம்­களில் தமது பாரம்­ப­ரிய தொழில்­களை செய்ய முடி­யாத நிலையில் இருக்­கின்­றன.

இவ்­வா­றான நிலையில் தான் கேப்­பாப்­பு­ல­விலும் முள்­ளிக்­கு­ளத்­திலும் போராட்­டங்கள் நடத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்தப் போராட்­டங்­களின் தூண்­டு­தல்­களின் பேரில் தான், அர­சாங்­கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அழுத்­தங்­களைக் கொடுக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைக்­காமல், தமது கோரிக்­கை­களை நிறை­வேற்றிக் கொடுக்­காமல், கூட்­ட­மைப்பை தமிழ் மக்­க­ளிடம் இருந்து அந்­நி­யப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றதா என்று கூட பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும் என்று வேறு ஒரு தரப்பு கிளம்பியிருக்கிறது.

இத்தகைய சூழலில் ஜனாதிபதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த விடயத்தில் இறுக்கமான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளனர். இதன் விளைவாகத் தான், காணிகள் விடுவிப்புத் தொடர்பான சில கூட்டங்களை நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதியும், இராணுவத் தளபதியும் அவ்வாறு கூறியிருந்தாலும் கூட, காணிகள் விடுவிப்பில், வெறும் உத்தரவுகளுக்கு அப்பால் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன என்பதை தான் மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டங்கள் உணர்த்தியிருக்கின்றன.

வாய்மொழி அல்லது எழுத்து மூல உத்தரவுகளுக்கு அப்பாலும், காணிகள் விடுவிப்பு விவகாரத்துக்கு இன்னொரு பரிமாணம் இருக்கிறது. ஆளை ஆள் காரணம் கூறித் தப்பிக்க முனைந்தாலும், அந்த மறைமுகக் காரணியானது, காணிகள் விடுவிப்பு விவகாரத்தை இலகுவாக நடைமுறைப்படுத்த அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-23#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.