Jump to content

வைரலாகும் மெஸ்சி - ரொனால்டோவின் அந்தப் படம்! களை கட்டும் எல் கிளாசிகோ மோதல்


Recommended Posts

வைரலாகும் மெஸ்சி - ரொனால்டோவின் அந்தப் படம்! களை கட்டும் எல் கிளாசிகோ மோதல்

 

கிளப் கால்பந்து போட்டியின் உச்சக்கட்ட மோதலாகக் கருதப்படும் 'எல் கிளாசிகோ' நாளை நடைபெறுகிறது. ரசிகர்களிடையே மோதலைத் தவிர்க்கும் வகையில் மெஸ்சியும் ரொனால்டோவும் முத்தம் பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்கள் பார்சிலோனா நகரில் ஒட்டப்பட்டுள்ளன.

முத்தம் பரிமாறிக் கொள்ளும் மெஸ்சி, ரொனால்டோ

ஸ்பானீஷ் லீக் தொடரில், 23ம் தேதி இரவு பர்சிலோனா- ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் 'எல்கிளாசிகோ' மோதல் நடைபெறவுள்ளது. உலகம் முழுக்க 70 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை தொலைக்காட்சியில்  கண்டுகளிப்பார்கள். 'எல் கிளாசிகோ' மோதலின் போது ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், பார்சிலோனா நகரங்களில் ஒரு வித பதற்றம் காணப்படும். இரு நகரங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கும்.

ரியல்மாட்ரிட்- பார்சிலோனா அணிகளின் மோதல் ரணகளத்தில் முடிவடைய அரசியல் பின்னணியும் இருக்கிறது. ஸ்பெயினுக்கு மாட்ரிட் தலைநகரம். ஸ்பெயினில் உள்ள  கட்டலான் மாகாணத்தின் தலைநகரம்தான் பார்சிலோனா. ஸ்பெயினிடம் இருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டுமென்று கட்டலான் மாகாண மக்கள் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்பெயின் அரசு மறுத்து வருகிறது. இதனால், பார்சிலோனா வெற்றி பெற்று விட்டால், ஸ்பெயினையே வீழ்த்தி விட்டது போன்ற மிதப்பில் கட்டலாண் மக்கள் கருதி ஆடிப்பாடி மகிழ்ச்சியில் திளைப்பார்கள். ரியல்மாட்ரிட் வெற்றி பெற்று விட்டால், 'ஹாலா மாட்ரிட்' கோஷம் விண்ணைப் பிளக்கும்.

மைதானத்துக்கு வெளியே மட்டுமல்ல உள்ளேயும் மோதல்கள் அரங்கேறும். இது கெளரவத்துக்கான போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வர்.  ஃபவுல் ஆட்டத்தில் ஈடுபடுவது என தண்டனைக்குரிய அத்தனை விஷயங்களும் 'எல்கிளாசிகோ' மோதலில் அரங்கேறும். இது தவிர, ரொனால்டோ - மெஸ்ஸி ரசிகர்களும் தனியாக மோதலில் ஈடுபடுவார்கள். இணையத்தில் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பார்கள். மெஸ்சியை பற்றி ரொனால்டோ தரப்பும், ரொனால்டோ பற்றி மெஸ்சி தரப்பும் அவதூறுகளைப் பரப்புவது, கெட்ட பெயரை ஏற்படுத்துவது போன்ற படங்களை இணையங்களில் பகிர்வதுதான் இவர்களின் முக்கிய பணி.

இந்த சீசனின் முதல்  கிளாசிகோ மோதல் பார்சிலோனாவின் ஹோம் கிரவுண்ட் கேம்ப் நுவில் நடந்தது. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. இரண்டாவது மோதல் மாட்ரிட் நகரில் உள்ள சான்டியாகோ பெர்னபு மைதானத்தில் நடைபெறுகிறது.  இது ரியல் மாட்ரிட் மைதானம். சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் படுதோல்வியடைந்து பார்சிலோனா அணி ஏற்கனவே வெளியேறி விட்டது. மாட்ரிட் நகரைச் சேர்ந்த ரியல்மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. எனவே இதனை வைத்தும் 'ஹாலா மாட்ரிட்' கோஷம் எழுப்பப்படும். பார்சிலோனா அணி வீரர்களை. ரசிகர்களை ரியல்மாட்ரிட் ரசிகர்கள் கேலி செய்யக் கூடும்.  ரியல் மாட்ரிட்டை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி இழந்த பெருமையை மீட்க  பார்சிலோனா முயற்சிக்கும. வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதால், மாட்ரிட், பார்சிலோனா நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 

இதற்கிடையே, இரு அணியின் ரசிகர்களை சாந்தப்படுத்தும் வகையில் பார்சிலோனா நகரில் மெஸ்ஸியும் ரொனால்டோவும் முத்தமிட்டுக் கொள்வது போன்ற புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அன்பையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் வகையில் இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இத்தாலியின் மிலன் நகரைச் சேர்ந்தவர் டி.வி. பாய் என்பவர் பார்சிலோனாவில் கடந்த 13 ஆண்டுகளாக வசித்து வருகின்றார். இவர்தான் இந்த போஸ்டரை வடிவமைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''இத்தாலியில் இன்டர்மிலன்- ஏ.சி.மிலன் அணிகளின் ஆட்டத்தின் போது, ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள். சாதாரண மக்கள் முதல் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுச் சொத்துகள் சேதமடைகின்றன. கால்பந்து விளையாட்டு இப்போது வன்முறைக் களமாகி வருகிறது. மெஸ்சியும் ரொனால்டோவும் ஒருநாளும் முத்தமிட்டுக் கொள்ள மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். இது போன்ற ஓவியங்களாவது ரசிகர்களின் மோதல் போக்கைக் குறைக்கும் என நம்புகிறேன்'' என்கிறார். 

http://www.vikatan.com/news/sports/87286-el-clasico-match-preview.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நேரம்  என்னப்பா சொல்லுங்களன் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நவீனன் said:

இன்று இரவு 12,15

 

நடுச்சாமமே சரி பார்க்கலாம்  நன்றி நவீனன்

Link to comment
Share on other sites

எல் கிளாசிகோ: ரியல் மாட்ரிட் அணியை 3-2 என வீழ்த்தியது பார்சிலோனா

 

 
 

பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கிடையிலான எல் கிளாசிகோ போட்டியில் பார்சிலோனா 3-2 என ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. மெஸ்சி இரண்டு கோல்கள் அடித்தார்.

 
 
 
 
எல் கிளாசிகோ: ரியல் மாட்ரிட் அணியை 3-2 என வீழ்த்தியது பார்சிலோனா
 
ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கால்பந்து தொடர் லா லிகா. புகழ்வாய்ந்த பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ‘எல் கிளாசிகோ’ என்று பெயர். இரு அணிகளும் மோதும் ஆட்டத்தை உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள்.

லா லிகா தொடரில் நேற்று நள்ளிரவு 2-வது ‘எல் கிளாசிகோ’ ரியல் மாட்ரிட்டுக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. தடை விதிக்கப்பட்டதால் பார்சிலோனா அணியில் நெய்மர் இடம்பெறவில்லை. சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ரியல் மாட்ரிட் களம் இறங்கியது.

ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் பென்சிமா கொடுத்த பாஸை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் நோக்கி அடித்தார். ஆனால் அவரது முயற்சி முறியடிக்கப்பட்டது. 9-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் இனியஸ்டாவின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

11-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கேஸ்மிரோ மஞ்சள் அட்டை பெற்றார். 19-வது நிமிடத்தில் மார்சிலோ கொடுத்த பந்தை ரொனால்டா கோலாக்க முயன்றார். ஆனால் பார்சிலோனா அணி அதை தடுத்துவிட்டது. 23-வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு வாய்ப்பை தவற விட்டார்.

27-வது நிமிடத்தில் மார்சிலோ கொடுத்த பந்தை ரமோஸ் கோல் அடிக்க முயன்றார். பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியது. இதை கேஸ்மிரோ சிறப்பாக கோலாக்கினார். இதனால் 28-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலைப் பெற்றது.

201704240917170949_realmadrid-s._L_styvp

33-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் இவான் ராகிடிக் கொடுத்த பந்தை, மெஸ்சி கோலாக மாற்றினார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றது. 38-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் சாமுவேல் உம்திதி மஞ்சள் அட்டை பெற்றார்.

201704240917170949_messi-s._L_styvpf.gif

அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேரம் ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. இடைவேளைக்குப்பின 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியது. இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். மார்சிலோ கொடுத்த பந்தை டோனி க்ரூஸ் கோலாக்க முயன்றார். ஆனால் பலனில்லை. 52-வது நிமிடத்தில் பென்சிமாவிற்கு ஒரு வாய்ப் கிடைத்தது. அதுவும் பலனளிக்கவில்லை.

201704240917170949_james-s._L_styvpf.gif

73-வது நிமிடத்தில் பார்சிலோனாவின் இவான் ராகிடிக் ஒரு கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 2-1 என முன்னிலைப் பெற்றது. 76-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் சிகப்பு அட்டை பெற்று வெறியேறினார். அதே நிமிடத்தில் டேனியல் கார்வாஜல் மஞ்சள் அட்டை பெற்றார்.

201704240917170949_red-s._L_styvpf.gif

ரமோஸ் வெளியேறியதால் ரியல் மாட்ரிட் அணி 10 வீரர்களுடன் விளையாடியது. ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. 85-வது நிமிடத்தில் மார்சிலோ கொடுத்த பந்தை மாற்று வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் சிறப்பான வகையில் கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலைப் பெற்றது.

இன்னும் 5 நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 90 நிமிடம் முடியும்போது ஸ்கோர் 2-2 என சமநிலையில் இருந்தது. போட்டி நிறுத்தம், காயம் போன்றவற்றை கணக்கில் கொண்டு 2 நிமிடங்கள் கூடுதல் நேரமாக கொடுக்கப்பட்டது. 92-வது நிமிடத்தின் கடைசி நொடிகளில் பார்சிலோனா கோல் கம்பம் பக்கத்தில் இருந்த பந்தை அந்த அணியின் வீரர்கள் மின்னல் வேகத்தில் கடத்திக் கொண்டு மெஸ்சியிடம் கொடுத்தனர். மெஸ்சி அருமையான கோலாக்கினார். இதனால் பார்சிலோனா 3-2 என வெற்றி பெற்றது.

201704240917170949_lic-s._L_styvpf.gif

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா 33 போட்டிகளில் 75 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. 32 போட்டிகளில் அதே புள்ளிகளுடன் ரியல் மாட்ரிட் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/24091712/1081558/El-Clasico-2017-barcelona-beats-real-madrid.vpf

Link to comment
Share on other sites

பார்சிலோனாவுக்காக 500 கோல்கள்: 'லயன்' மெஸ்ஸியின் அபார கடைசி நிமிட கோலினால் ரியால் மேட்ரிட் தோல்வி

 

 
 
Messi_3157524f.jpg
 
 
 

ஸ்பானிய லீக் கால்பந்து தொடரான லா லீகாவில் ரியால் மேட்ரிட் அணிக்கு எதிராக லயன் மெஸ்ஸியின் அபாரமான 92-வது நிமிட கோலினால் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியால் மேட்ரிட்டை வீழ்த்தி வெற்றி பெற்று அட்டவணையில் முதலிடம் பிடித்தது.

ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் கேசிமிரோ ரியால் மேட்ரிட்டுக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால் இது 5 நிமிடங்களே தாக்குப் பிடித்தது, ஏனெனில் லயன் மெஸ்ஸியின் தனிநபர் சாகசத்தினால் பார்சிலோனா 1-1 என்று சமன் செய்தது. பிறகு 73வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் ராகிடிக் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

இந்நிலையில் ரியால் மேட்ரிட் வீரர் செர்ஜியோ ரேமோஸ் லயோனல் மெஸ்ஸியை உடல் ரீதியாக எதிர்கொண்டதையடுத்து ரெட் கார்ட் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 10 வீரர்களுடன் ஆடினாலும் ரியால் மேட்ரிட் 77-வது நிமிடத்தில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் மூலம் கோல் கண்டு 2-2 என்று ஆட்டம் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் காயத்தினால் நிறுத்தப்பட்ட ஆட்டத்துக்கு ஈடான நேரத்தில் அதாவது 92-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு அதிர்ச்சி கோலை அடிக்க ஆட்டத்தின் கடைசி கிக் பார்சிலோனா வெற்றியுடன் முடிய இந்த அணிக்காக மெஸ்ஸியின் 500-வது கோலாகவும் அமைந்த்து.

பார்சிலோனா அணி நெய்மர் தடையினால் சற்றே பின்னடைவு கண்டிருந்த தருணத்தில் மெஸ்ஸி எழுந்து நின்றார்.

தொடக்கத்தில் ரியால் மேட்ரிட் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு பந்தை பார்சிலோனா கோலுக்கு அருகே எடுத்துச் சென்றார். அப்போது சாமுவேல் உம்டைட்டியின் எதிர்கொள்ளல் சர்ச்சையானது. ரியால் மேட்ரிட் கடுமையாக பெனால்டி கேட்டு முறையீடு செய்தது, ஆனால் நடுவர் அலட்சியமாக அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். பிறகு ரொனால்டோ அடித்த அருமையான கோல் நோக்கிய ஷாட்டை பார்சிலோனா கீப்பர் ஆந்த்ரே டெர் ஸ்டீஜன் அருமையாக தடுத்தார்.

அதன் பிறகு டோனி குரூஸின் கார்னர் ஒன்று சரியாக எடுக்கப்படாத நிலையில் பந்து மார்செலோவிடம் வந்தது. இவர் ரொனால்டோவுக்கு அதனை பாஸ் செய்தார், கோல் அருகே ரேமோஸ் இருந்தார். ரேமோஸ் தனது முதல் ஷாட்டை போஸ்ட்டில் அடிக்க, கேசிமிரோ கோலாக மாற்றினார். ரியால் மேட்ரிட் 1-0 என்று முன்னிலை பெற்றது. அதன் பிறகும் ஒப்பீட்டளவில் ரியால் மேட்ரிட் சவுகரியமாகவே ஆடினாலும் முன்னிலை 5 நிமிடங்கள் தாங்கவில்லை.

இதற்கிடையே மெஸ்ஸி, மார்செலோவுடன் போட்டியிடுகையில் அவரது முழங்கை மெஸ்ஸியின் வாயைத் தாக்க மெஸ்ஸிக்கு ரத்தம் வந்தது.

ஆனால், இதே மெஸ்ஸி தன் ஆட்டத்தில் வேகத்தைக் கூட்டினார். ரியால் மேட்ரிட் இடத்தில் பாக்ஸில் ரகீடிக்கிடமிருந்து பந்தை பெற்ற மெஸ்ஸி, டான் கர்வாஜலுக்குப் போக்கு காட்டி அற்புதமான கோலை அடித்தார். கிளாசிகோ வரலாற்றில் 15-வது கோலை அடித்து மேலும் ஒரு சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி.

இடைவேளைக்கு முன்னதாக ஓபன் கோல் வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

பார்சிலோனா கீப்பரின் இரண்டு தடுப்புகள்:

இடைவேளைக்குப் பிறகு ரியால் மேட்ரிட் அபாரமாகத் தொடங்கியது. முதலில் குரூஸ் அற்புதமாக பந்தை பார்சிலோனா கோல் நோக்கி அடிக்க அதனை பார்சிலோனா கீப்பர் அருமையாக தட்டிவிட்டார்.

பிறகு ரியால் மேட்ரிட் ஒரு மூவில் மீண்டும் பார்சிலோனா கோல் அருகே கொண்டு செல்ல, கரீம் பென்சீமா மிக அருகிலிருந்து தலையால் முட்டிய பந்தை மீண்டும் ஸ்டீஜன் கோலாகாமல் தடுத்தார்.

59-வது நிமிடத்திற்கு பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்கக் கிடைத்த அருமையான வாய்ப்பை கோலுக்கு மேலே அடித்து வீணடித்தார்.

இந்தக் கோலை வீணடித்ததன் காயத்தில் ஊசியைச் செலுத்துவது போல் பார்சிலோனா வீரர் ரகீடிக் மிக அருமையாக 20 அடியிலிருந்து ஒரு கோலை அடித்து முன்னிலை கொடுத்தார்.

அதன் பிறகு ரேமோஸ் மிக அசிங்கமாக மெஸ்ஸியை இருகால்களாலும் எதிர்கொள்ள ரெட் கார்டு காண்பிக்கப்பட்டார். இது அவரது கால்பந்து வாழ்க்கையில் காட்டப்படும் 22வது ரெட் கார்டாகும். ரியால் 10 வீரர்களுக்குக் குறுக்கப்பட்டது.

அதன் பிறகே ரியால் மேட்ரிட் 85-வது நிமிடத்தில் ரோட்ரிக்ஸ் மூலம் 2-வது கோலை அடித்தது. பிறகு 92-வது நிமிடத்தில் ஜோர்டி ஆல்பா ஒரு பந்தை மெஸ்ஸியிடம் கொடுக்க வழக்கமான மின்னல் மெஸ்ஸியானார், அது கோலாக மாறியது. பார்சிலோனா வெற்றி.

http://tamil.thehindu.com/sports/பார்சிலோனாவுக்காக-500-கோல்கள்-லயன்-மெஸ்ஸியின்-அபார-கடைசி-நிமிட-கோலினால்-ரியால்-மேட்ரிட்-தோல்வி/article9659444.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.