Jump to content

தாமரைப் பொய்கை பிணக்காடானது எப்படி?


Recommended Posts

தாமரைப் பொய்கை பிணக்காடானது எப்படி?

 

ஐந்து பரம்­ப­ரை­யி­னரை வாழ­வைத்த அக்­கி­ராமம் தற்­போது 32 உயிர்­களைக் காவு­கொ­டுத்து நெடுந்­து­யரில் அழு­து­கொண்­டி­ருக்­கி­றது. தாமரை மலர்ந்த அப்­பொய்­கையில் அழுக்­கு­களை அள்­ளிக்­கொட்டி அழு­கு­ரல்­களை ஒலிக்கச் செய்த வஞ்­ச­னை­க­ளுக்கு அதி­கா­ரத்­திலுள்­ள­வர்கள் மாத்­திர­மன்றி சமூ­கமும் பொறுப்­புக்­கூறக் கட­மைப்­பட்­டுள்­ளது.

கணப்­பொ­ழுதில் பல ஆன்­மாக்­களை அந்­த­ரத்தில் உல­வச்­செய்த அக்­குப்பை மேட்டை அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கு அப்­பி­ர­தே­ச­வா­சிகள் அனு­ப­வித்த துய­ரங்கள் எண்­ணி­ல­டங்­கா­தவை. ஆன­போதும் அப்­போ­ராட்­டங்­க­ளினால் எவ்­

வி­தப்­ப­யனும் கிட்­ட­வில்லை. அத­னால் தான் புதிய வரு­டத்தில் குப்­பை­க­ ளற்ற தேசத்­தைக்­காண தமது இன்­னு­யிர்­களை அப்­பி­ர­தே­ச­வா­சிகள் தியாகம் செய்தனர். எனவே தமது சுற்­றுப்­பு­றச்­சூ­ழலில் கொட்­டப்­பட்ட குப்பை மேட்டை அகற்­று­வ­தற்கு பல உயிர்­களை தியாகம் செய்த வர­லாறு கொலன்­னாவ மீதொட்­ட­முல்­ல­யில்தான் பதி­வா­கி­யுள்­ளது.

மீதொட்­ட­முல்ல குப்­பை­மேடு அமை­வி­டத்தின் பின்­னணி 

மீதொட்­ட­முல்­லவில் கடந்த சித்­தி­ரைப்­புத்­தாண்டு தினம் சரிந்து வீழ்ந்து பாரிய அனர்த்தம் ஏற்­ப­டுத்­திய குப்­பை­மேடு அமைந்­துள்ள இடம் குப்பை குவிக்­கப்­படு­வ­தற்கு முன்னர் “பொத்­துவில் வயல்“ என அழைக்­கப்­படும் வயல் சார்ந்த பிர­தே­ச­மா­கவே அமைந்­தி­ருந்­தது. அங்கு பாரிய பள்ளம் ஒன்று இருந்­த­துடன் அப்­பள்­ளத்தின் ஒரு பகு­தியில் நீர் தேங்கி நீர் நிலை­யா­கவும் காட்சி தந்­தது.

அத்­துடன் அந்நீர் நிலையில் தாமரை மலர்கள் மலர்ந்து அப்­பி­ர­தே­சத்தை அழ­கு­ப­டுத்­தி­ய­தா­கவும் மீதொட்­ட­முல்­லயைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட நிஹால் என்­பவர் குறிப்­பிட்டார். மேலும் தனது இள­மைக்­கா­லத்தில் அந்நீர் நிலையை அண்­மித்த வயல்­சார்ந்த பிர­தே­சத்தில் ஓடி விளை­யா­டி­ய­தா­கவும் தனது நினை­வு­களைப் பகிர்ந்­து­கொண்டார்.

குப்பை மேடா­னது எப்­படி?

நீர் நிலை­யுடன் வயல்­சார்ந்த அவ்­வி­டத்தில் காலப்­போக்கில் பிர­தே­ச­வா­சிகள் குப்­பை­களைக் கொட்­டு­வ­தற்கு ஆரம்­பித்­தனர். ஆகவே அங்­குள்ள பாரிய பள்ளம் படிப்­ப­டி­யாக குப்­பை­களால் நிறைந்­த­துடன் நீர் நிலையும் குப்­பைகள்­ நிரம்பி மறைந்து போனது.

எனினும் அது பாரிய பிரச்­சி­னை­யாக அப்­போது உரு­வெ­டுக்­காது பிர­தேசக் குப்­பை­களை முகாமை செய்­வ­தற்கு போது­மானதாக இருந்­தது. ஆன­போ­திலும் கொழும்பு மாந­க­ர­ச­பையின் ஆளு­கைக்­குட்­பட்ட பிர­தே­சங்­களில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களை அங்கு கொட்ட ஆரம்­பித்த பின்­னர்தான் அங்கு குப்பைப் பிரச்­சினை பூதா­க­ர­மாக உரு­வெ­டுத்­தது.

கொழும்பு மாந­கர சபை எல்­லைக்குட்பட்ட பிரதேசத்தில் சேக­ரிக்­கப்படும் குப்­பைகள் புளூ­மென்டல் பிர­தே­சத்­தி­லேயே கடந்த காலங்­களில் குவிக்­கப்­பட்டு வந்­தன. எனினும் அப்­பி­ர­தேச மக்கள் அங்கு குப்பை குவிக்­கப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்­பினை வெளி­யிட்டு வந்­தனர். ஆகவே 2009 ஆம் ஆண்டு நீதி­மன்ற அறி­வித்த­லுக்கு இணங்க மீதொட்­ட­முல்­லயில் குப்பைகளை கொட்­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. எனினும் இரண்டு ஏக்கர் பரப்­பி­லேயே குப்­பை­கொட்­டு­வ­தற்கு நீதி­மன்றம் அனு­மதி வழங்­கி­யி­ருந்­தது.

ஆன­போ­திலும் மீதொட்­ட­முல்­லயில் குப்பைகளை கொட்­டு­வ­தற்கு அப்­பி­ர­தேச மக்கள் கடு­மையான எதிர்ப்­பினைத் தெரி­வித்­தனர். அதனால் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யுடன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­யை தொடர்ந்து மீண்டும் புளூ­மெண்டல் பிர­தே­சத்தில் குப்பை கொட்­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இருந்­த­போ­திலும் 2009 ஆம் ஆண்டு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­புக்­க­மைய நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் தீர்­மா­னத்­திற்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­துடன் குறித்த பிரச்­சி­னைக்கு பொருத்­த­மான தீர்வை வழங்கும் பொறுப்பு கொழும்பு மாந­கர சபைக்கு சுமத்­தப்­பட்­டது.

எனினும் கொழும்பு மாந­க­ர­சபை அப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வை முன்­வைக்­கா­ததால் மீண்டும் அப்­பி­ரச்­சினை நீதி­மன்­றுக்குச் சென்­றது. ஆகவே கொழும்பு மாந­கர சபையின் முன்னாள் மேயர் மீதொட்­ட­முல்­ல­விற்குச் சென்று அப்­பி­ர­தேச மக்­களைச் சந்­தித்து குறித்த பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­துடன் அதற்­காக 400 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­துள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

ஆகவே பிரச்­சி­னைக்கு விரைவில் நிரந்­த­ரத்­தீர்வு கிடைக்கும் என அப்­பி­ர­தேச மக்கள் கரு­தி­ய­துடன் அது வரையில் மீதொட்­ட­முல்­லயில் குப்பை கொட்­டு­வ­தற்கு இட­ம­ளித்­தனர். எனினும் கடந்த சித்­தி­ரைப்­புத்­தாண்டில் குப்­பை­மேடு சரிந்து அனர்த்தம் ஏற்­படும் வரையில் அப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. மேலும் நீதி­மன்ற தீர்ப்­புக்­க­மை­வாக இரண்டு ஏக்­கரில் மாத்­திரம் குப்பை கொட்ட முடியும். ஆனால் தொடர்ந்து அங்கு குப்பைகள் கொட்­டப்­பட்­ட­தனால் 18 ஏக்கர் நிலப்­ப­ரப்­புக்கு பரந்­த­துடன் முன்­னூறு அடி­வ­ரையில் உயர்ந்­தது.

மேலும் அக்­குப்­பை­மேட்டில் குவிக்­கப்­படும் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் காகித அட்­டை­களை சேக­ரித்து விற்­பனை செய்­வதன் மூலம் சுமார் 75 குடும்­பங்கள் வரையில் பிழைப்பு நடத்­தி­ய­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

குப்பைகள் கொட்­டு­வ­தனை தடுப்­ப­தற்கு மக்கள்  முன்­னெ­டுத்த எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் 

குப்பைப் பிரச்­சி­னைக்கு தீர்வை முன்­வைக்­காது தொடர்ந்தும் இழுத்­த­டிப்பு செய்­த­தை­யிட்டு ஆத்­தி­ர­ம­டைந்த அப்­பி­ர­தே­ச­வா­சிகள் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கத் தயா­ராகினர். அவர்கள் 2011 ஆம் ஆண்டு முதல் அமைப்பு ரீதி­யாக எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள ஆரம்­பித்­தனர். “மீதொட்­ட­முல்­லயில் குப்பை கொட்­டு­வ­தற்கு எதி­ரான மக்கள் அமைப்பு” என்ற பெயரில் தமது எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தனர்.

ஆகவே 2011 ஆம் ஆண்டின் பின்னர் 15 இக்கு மேற்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­தனர். அவ்­ ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு கடந்த அர­சாங்கம் பல்­வேறு இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தி­யது. ஆர்ப்­பாட்­டங்­களைத் தடுப்­ப­தற்கும் கண்­ட­னப்­பே­ர­ணி­களை ஒடுக்­கு­வ­தற்கும் பொலிஸார் தாக்­கு­தல்­க­ளையும் மேற்­கொண்­டனர். மேலும் தமது பிர­தே­சத்தில் குப்பை கொட்­டப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்த பெண்கள் மீதும் தாக்­குதல் மேற்­கொண்­டனர்.

ஆட்சி மாற்­றத்தின் பின்­னரும் அப்­பி­ர­தேச மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். ஆகவே நல்­லாட்சி அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் “மீதொட்­ட­முல்­லயில் குப்பை கொட்­டு­வ­தற்கு எதி­ரான மக்கள் அமைப்­புடன்” பேச்­சு­வா­ர்த்தை நடத்­தி­ய­துடன் குறித்த பிரச்­சி­னைக்கு ஆறு மாத காலத்தில் தீர்வை முன்­வைப்­ப­தா­கவும் வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது. எனினும் நல்­லாட்சி அர­சாங்­கமும் தீர்வு வழங்­க­வில்லை.

தீர்வு வழங்­காமல் இழுத்­த­டிப்பு செய்­யப்­பட்­ட­மைக்­கான பின்­னணி 

அப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு முன்­வைத்­தி­ருக்­கலாம். எனினும் அக்­குப்­பை­மேட்டின் பின்னால் பெருந்­தொகைப் பணம் சுழன்று கொண்­டி­ருப்­ப­தால்தான் தீர்வை முன்­வைக்­காது இழுத்­த­டிப்பு செய்­யப்­பட்டு வந்­த­தாக “மீதொட்­ட­முல்­லயில் குப்பை கொட்­டு­வ­தற்கு எதி­ரான மக்கள் அமைப்பின்” ஏற்­பாட்­டா­ளர்­களில் ஒரு­வ­ரான சட்­டத்­த­ரணி நுவன் போபகே தெரி­வித்தார்.

குப்பைகளை சேக­ரித்து கொட்­டு­வ­தற்­கான விலை மனுக்­கோ­ரலில் 200 மில்­லியன் ரூபா இலாபம் உள்­ள­து. அதனை அதி­கா­ரத்­தி­லுள்ள சிலர் பங்­கிட்­டுக்­கொள்­கின்றனர். அத்­துடன் குப்பை கொண்டு வரும் பணிக்கு பிர­தேச அர­சி­யல்­வா­தி­களின் லொறி­களே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. மேலும் குப்பை பிரச்­சினை பூதா­க­ர­மா­கிய பின்னர் அவ்­வி­ட­யத்தில் தீர்வு முன்­வைப்­ப­தற்கு 60 நிறு­வ­னங்கள் முன்­வந்­தன. ஆன­போ­திலும் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. ஏனெனில் குப்­பை­மேட்டின் பின்னால் சுழலும் இரு­நூறு மில்­லி­யன் ரூபா நிதி­யினை அவர்கள் இழக்கத் தயா­ரில்லை, ஆகவே அங்­கி­ருந்து மக்­களைத் துரத்­தி­யா­வது தொடர்ந்தும் குப்­பை­களைக் கொட்­டு­வ­தற்கே சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் முயற்­சித்­த­தா­கவும் சட்­டத்­த­ரணி நுவன் போபகே குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

அனர்த்தம் தொடர்பில் முன்­னெச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டதா? 

குறித்த பிர­தேசம் குடி­யி­ருப்­புக்கு பொருத்­த­மான இடம் அல்ல. எனவே அங்­கி­ருந்து மக்­களை வெளி­யே­று­மாறு ஏற்­க­னவே எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்ற போதிலும் அவ்­வா­றான எவ்­வித முன்­னெச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­ப­ட­வில்லை. எனினும் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் குடி­யி­ருந்­த­வர்­களை மாத்­திரம் அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. மாறாக வீடு­க­ளுக்கு உரிய உரித்­தா­வணம் உள்­ள­வர்­களை அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு அறி­வித்தல் விடுக்­கப்­ப­ட­வில்லை என பிர­தே­ச­வா­சிகள் தெரி­விக்­கின்­றனர்.

மேலும் இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் மீதொட்­ட­முல்­ல­வி­லுள்ள 300 வீடுகள் வரையில் குடி­யி­ருப்­புக்கு பொருத்­த­மற்ற வீடுகள் என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­துடன் அவர்ளை அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறும் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டது. எனினும் அக்­கு­டி­யி­ருப்­பா­ளர்கள் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­துடன் குப்­பை­மேட்டை அகற்­று­மாறே கோரிக்கை விடுத்­தனர். ஆன­போ­திலும் ஆபத்தை கருத்­தில்­கொண்டு பின்னர் அவர்கள் அங்­கி­ருந்து வெளி­யே­றினர்.

குப்­பை­மேடு சரிந்­த­மைக்­கான காரணம்

குப்­பை­மேடு சரிந்­தமை தொடர்பில் பல்­வே­று­பட்ட கருத்­துகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் தேசிய கட்­டு­மான ஆராய்ச்சி நிறு­வ­கத்தின் அறிக்­கைக்­கி­ணங்க, குப்பைகள் மேட்டில் அதி­க­ள­வான குப்பை கொட்­டப்­பட்­டுள்­ளன. ஆகை­யினால் அந்­நி­லப்­ப­ரப்பின் மேல் சுமை அதி­க­ரித்­துள்­ளது. அந்­நி­லப்­ப­ரப்பு கீழி­றங்­கு­வ­தற்­கான அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. மேலும் அண்­மையில் கொழும்பில் பெய்த மழை­யி­னாலும் அந்­நி­லப்­ப­ரப்பின் மேற்­ப­கு­தியின் தாங்கு தன்­மை­யை­விட சுமை அதி­க­ரித்­துள்­ளது. அதனால் நிலம் கீழி­றங்­கி­யுள்­ளது.  

எனவே அக்­குப்பை மேட்டின் தரை­மட்டம் கீழி­றங்­கி­யதால் அதனை அண்­மித்த நிலப்­ப­ரப்பு மேல்­நோக்கி நகர்ந்­துள்­ளது. ஆகை­யி­னால்தான் மேல்நோக்கி நகர்ந்த நிலப்­ப­ரப்­பி­லுள்ள கட்­டி­டங்கள் சேத­ம­டைந்­துள்­ளன. அதனால் மீதொட்­ட­முல்­ல­யி­லுள்ள தஹம்­புர, பன்­சல்­ஹேன, நாக­ஹ­முல்ல, 23 ஆம் தோட்டம், நில்­கே­வத்தை போன்ற பிர­தே­சங்­களில் அதி­க­ள­வான சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

அப்­பி­ர­தேசம் தற்­போ­து எச்­ச­ரிக்கை மிகுந்த பகு­தி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பிர­தே­சத்தின் வடி­கா­ல­மைப்பும் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ளது. எனவே அவை சீர்­செய்­யப்­படும் முன்னர் மழை­பெய்­யு­மி­டத்து வெள்ளம் ஏற்­ப­டு­வ­தற்கும் இட­முண்டு.

சேத விபரம்

அனர்த்­தத்­தினால் சிக்­குண்டு பலி­யான 32 பேரின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் ஒரு­வரின் உடல் பாகங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன. மேலும் 8 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அனர்த்­தத்­தினால் 246 குடும்­பங்­களைச் சேர்ந்த 1059 பேர் பாதிக்­கப்பட்­டுள்­ளனர். அவர்­களில் 76 குடும்­பங்­களைச் சேர்ந்த 284 பேர் தொடர்ந்தும் முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அம்­மத்­திய நிலை­யத்தின் தர­வுகள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை சொத்து விபரம் தொடர்பில் முழு அள­வி­லான கணிப்­பீ­டுகள் இது­வ­ரையில் பூர்த்­தி­செய்­யப்­ப­ட­வில்லை. அத்­துடன் பாதிக்­கப்­பட்ட பகு­தியில் தொற்­றுநோய் பரவும் அபாயம் ஏற்­பட்­டுள்­ள­தாக சுகா­தார துறை­யினர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். அது தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்­கு­மாறும் சுகா­தாரத் துறை­யினர் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

அனர்த்­தத்தின் பின்­ன­ரான நட­வ­டிக்­கைகள் 

சித்­தி­ரைப்­புத்­தாண்டு தினம் அனர்த்தம் இடம்­பெற்ற பின்னர் அங்கு குப்பைகள் கொட்­டப்­ப­டு­வது உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட்­டது. அத்­துடன் அப்­பி­ர­தே­சத்தில் இனி குப்பைகள் கொட்­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க பிர­தேச மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார்.

மேலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு க்கு எதிர்­வரும் ஜூன் மாத­ம­ளவில் புதிய வீடுகளை வழங்­குவ­தற்கு நட­வ­ டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அது­வ­ரை யில் வச­தி­க­ளு­ட­னான தற்­காலிக தங்குமிடங்களில் மக்கள் தங்கவைக் கப்படுவர். அத்துடன் சொத்து சேத விபரங்களைச் சேகரித்து அதற்கான நஷ்டஈடு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.  

இதே­வேளை மீதொட்­ட­முல்ல குப்­பை­மேட்டை விரைவில் அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி ­சேன சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார். மேலும் அனர்த்­தத்தின் பின்­ன­ரான நட­வ­டிக்­கைகள் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் மூன்று நாட்­க­ளுக்கு ஒரு­முறை கூடி ஆரா­யப்­ப­டு­கி­றது. அத்­துடன் அனர்த்­தத்­திற்­கான கார­ணத்தை கண்­ட­றி­வ­தற்கு ஓய்­வு­பெற்ற நீதி­பதி தலை­மையில் விசேட குழு அமைக்­கப்­பட்டு அத­னூ­டாக நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை அனர்த்தம் தொடர்பில் நாட்­டி­லுள்ள பல குழுக்கள் ஆய்­வு­களை மேற்­கொண்­டுள்­ள­துடன் ஜப்­பா­னி­லி­ருந்து வரு­கை­தந்­துள்ள விசேட குழு­வொன்றும் ஆய்­வு­களை மேற்­கொண்­டுள்­ளது.

அனர்த்­தத்தின் பின்னர் மீதொட்­ட­முல்­லயில் குப்பைகள் கொட்­டப்­ப­டு­வது நிறுத்­தப்­பட்­ட­தனால் கொழும்பில் மீண்டும் பொது இடங்­களில் குப்பை கள் கொட்­டப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. எனவே தினந்­தோறும் சேக­ரிக்­கப்­படும் குப்பை பிரச்­சி­னையைத் தீர்ப்பதற்கு குப்பைகள் கொட்டும் இடத்தை மாற்­று­வது தீர்­வாக அமை­யாது. மாறாக குப்பை முகா­மைத்­து­வத்தில் முன்னணி வகிக் கும் நாடுகள் முன்னெடுக்கும் வழிமுறை களைப் பிற்பற்றுவதன் மூலமே அப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பது எமது அவதானிப்பாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-22#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.