Jump to content

13 பிரித்தானிய பிரதமர்கள், 12 அமெரிக்க ஜனாதிபதிகள், 10 இலட்சத்துக்கும் அதிகமான தூரம் பயணம் : 91ஆவது அகவவையில் கால்பதிக்கும் மகாராணி


Recommended Posts

13 பிரித்தானிய பிரதமர்கள், 12 அமெரிக்க ஜனாதிபதிகள், 10 இலட்சத்துக்கும் அதிகமான தூரம் பயணம் : 91ஆவது அகவவையில் கால்பதிக்கும் மகாராணி

 

 

பிரித்தானிய மகாராணி எலிசபத்தின் 91 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. 

queen.jpg

பிரித்தானிய மகாராணியின் 91 ஆவது பிறந்தநாளை ஒட்டி, உத்தியோகபூர்வ வாசஸ்தலமான  பக்கிங்காம் அரண்மனையில் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

மேலும் 1926 ஆம் ஆண்டு பிறந்த எலிசபத், தந்தை 4ஆம் ஜோர்ஜின் மறைவிற்கு பிறகு 1952ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியாக முடிசூட்டப்பட்டார். 

அத்தோடு உலகிலுள்ள மன்னர் மற்றும் மகாராணிகளில் இவரே மிக வயதானவர் எனும் பெருமையை பெறுவதோடு, பிரித்தானிய அரச குடும்பத்தில் முடிசூட்டப்பட்டவர்களில் மிக நீண்ட நாட்கள் மகாராணியாக வலம் வருபவர் எனும் பெருமையை பெற்று கடந்த 65 வருடங்களாக மகாராணியாக பதவி வகித்து வருகிறார்.

மகாராணி எலிசபெத்தின் ஆட்சுச்சி காலத்தில் இதுவரை அவர் 13 பிரித்தானிய பிரதமர்கள், 12 அமெரிக்கா ஜனாதிபதிகளை சந்தித்துள்ளதோடு, சுமார் 10 இலட்சத்து 60 ஆயிரம் கிலோ மீற்றர்கள் பயணம் செய்து 106 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/19277

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது தலைமுறையிலும், அடுத்துவரும் சில தலைமுறைகளுக்கும் இவருக்கு பின்னர் ஒரு பெண், குட்டி இளவரசர் ஜார்ஜ்க்கு திருமணமாகி பெண் குழந்தை பிறந்தாலன்றி,  சிம்மாதனத்துக்கு வரும் வாய்ப்பு தென் படவில்லை.

பிரதமர் டேவிட் காமெரான் காலத்தில், மிக நீண்ட காலமாக வழக்கில் இருந்த, முதல் பிள்ளை பெண்ணாக இருந்தாலும், பின்னர் ஆண் குழந்தை பிறந்தால் அதுவே முடிக்குரிய வாரிசு என்பதை மாற்றி, முதல் பிள்ளையே வாரிசாக வரும் என மாற்றும் முறைக்கு எல்லா ராணியினை அரச தலைமையாக கொண்ட 14 நாடுகள் அங்கீகாரம் வழங்கியபோதும், 15 வது நாடாகிய கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் ஏதோ இழுபறி செய்ததால், தாமதமாகியது.

இன்றய நிலை தெரிய வில்லை.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.