Jump to content

கித்துல்கல வில் ஓர் மறக்கமுடியாத சாகச சுற்றுலா அனுபவம்....


Recommended Posts

149886_10150095248715991_628650990_7752659_8348908_n.jpg

சாகசத்திற்கு தயாராக நண்பர் குழாம் :D

எங்கள் யாழ் இந்து 2005 மாணவர்கள் எல்லோரும் ஒன்றுணைந்து கடந்த வருடம் முதல் வருடாந்தம் ஒரு நாள் சுற்றுலாவை ஒழுங்குசெய்து வருகின்றோம்.இம்முறை  கித்துள்கல சென்று White water rafting செய்வதாகத் திட்டமிட்டிருந்தோம். முன்பொருமுறை கேதா அண்ணா ஒழுங்கு செய்த கித்துல்கல சுற்றுலா பற்றிய முன்னாள் பதிவர்  ;) புல்லட்டின் பதிவொன்றை வாசித்ததிலிருந்து நானும் கித்துல்கல செல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.இதற்கமைய குறுகிய கால முன் அறிவித்தலுடன் முப்பத்திரண்டு நண்பர்களைத் திரட்டி நேற்று கித்துல்கல நோக்கிய எமது சாகசப் பயணத்தை ஆற்றியிருந்தோம்.இம் முறை யாழ்ப்பானத்திலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டிருந்தார்கள். பழைய பாடசாலைக்கால நினைவுகளைக் கிளறி ஒரே குறும்பும் கும்மாளமுமாக ஏறக்குறைய இரண்டரை மணி நேரப் பயணத்தின் பின்னர் கித்துல்கலவை அடைந்தோம்.

151030_10150095252530991_628650990_7752758_7560865_n.jpg
ஆற்றங்கரையில் படகோட்டும் நண்பர்கள் :P


அங்கே ஆறு அண்மைக்கால பெரு மழையாலோ என்னவோ கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. எங்களுக்கு முன்னமே சில சுற்றுலாப் பயணிகள் பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள்.  முதலில் நெறிப்படுத்துனர்கள் துடுப்பு வலிப்பது பற்றியும் அதற்காக அவர்கள் வழங்கும் கட்டளைகளையும் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளையும் எங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்தினார்கள்.

அரைகுறை சிங்களம் தெரிந்த நண்பர்களெல்லாம் அவர்களது சைகைகளைத் தமிழில் மொழிபெயர்த்து ஏனைய நண்பர்களுக்கு தங்கள் சிங்களப் பாண்டித்தியத்தை முண்டியடித்து வெளிப்படுத்தினார்கள் ;). அப்போது நெறிப்படுத்துனர்   பாறைகள் நிறைந்த பாரிய அலைகள் போல ஆறு கரை புரண்டோடும் ஓர் அலைக்கிடங்கைக் காட்டி இது போன்று மூன்று பாரிய அலைக்கிடங்குகளைக் கடந்து ஒரு ஐந்து கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டும்.அவ் இடங்களில் கொஞ்சம் அவதானமாகக் கடந்தால் பயமில்லைஎன்று வெகு சாதாரணமாகக் கூறிய போதே எங்கள் நண்பர்கள் பலரது இதயத் துடிப்பு வீதம் பலமடங்காக எகிற ஆரம்பித்தது.ஆனால் நெறிப்படுத்துனர்கள் அத்தோடு நிறுத்தாமல் ஆற்றுக்குள் வீழ்ந்துவிட்டால் காப்பாற்றும்வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தல்களை வழங்க ஆரம்பித்தார்கள்.ஏதோ சாதாரண படகோட்டல் என்று சம்மத்தித்து வந்திருந்த நண்பர்கள் தங்கள் உயிர் வாழ்வின் நிலைத்திருப்பின் அவசியத்தை வலியுறுத்தி செல்லமாகக் கடிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்..எல்லோரது கவனமும் இப்போது உயிர்காப்புக் கவசத்தையும்,தலைக்கவசத்தையும்  இறுக்கமாகத் தங்களுடன் பிணைத்துக் கொள்வதிலேயே தீவிரமாகத் திரும்பியிருந்தது.

150073_10150095256290991_628650990_7752825_4256160_n.jpg
ஒரு எட்டுப் பேரை முதலாவது படகில் ஏறுமாறு பணித்தார் நெறிப்படுத்துனர்களில் ஒருவர்.நண்பர்களிற் சிலர் முன்னாலே சென்று தங்களை நெருக்கடிக்குள் மாட்ட விரும்பாது நைசாக நழுவ,அழைத்துக் கொண்டு சென்றதால் தப்பி ஓட முடியாது நானும் நிரஞ்சனும் முதலாவது படகில் ஏதோ அசட்டுத் தைரியத்துடன் ஏறி அமர்ந்து விட்டோம். :) பாடி எவ்வளவு ஸ்ரோங்காய் இருந்தபோதும் எங்கள் பேஷ்மன்ற் கூட கொஞ்சம் வீக்காய் இருந்ததை யார் தான் அவதானித்தார்களோ தெரியாது :P .எங்கள் படகு பயிற்சிப் பயணத்தை ஆரம்பிக்கையில் என்னோடு இருந்த நண்பனொருவன் இஷ்ட தெய்வத்தையெல்லாம் பிரார்த்தித்துவிட்டு துடுப்பை வலிக்க ஆரம்பித்தான்.எங்கள் படகு அவ்விடத்திலே ஒர்  பயிற்சிப் பயணத்தை ஆற்றி வர ஏனைய நண்பர்கள் யாவரும் நான்கு படகுகளில் ஏறி சாகசப் பயணத்திற்குத் தயாராயிருந்தார்கள்.இப்போது எல்லோரும் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்ததை அவர்களிடமிருந்து வந்த உற்சாகக் கூ ஒலியும் , மிக வேகமான துடுப்பு வலிப்பும் காட்டியது.

எங்கள் படகு முன்னால் செல்ல பின்னாலே ஏனைய மூன்று படகுகளும் பின்தொடர எங்கள் சாகசப் பயணம் ஆரம்பித்து சிறிது தூரம் செல்ல நெறிப்படுத்துனர் முதலாவது அலைக்கிடங்கு வருவதைக் காட்டி அதற்கேற்றவாறான சைகைகளைக் குறிப்பிட்டார். பாறைகளிடையே எங்கள் படகு ஏறிப் பாய்ந்து அலைகளுக்கிடையே அலையாடி அதனைக் கடக்கையிலே நாங்கள் அனைவரும் முழுவதுமாகவே குளித்திருந்தோம். சற்றுத் தூரம் கடந்து சென்று ஏனைய படகுகளில் வந்த நண்பர்கள் அலைக்கிடங்கைக் கடக்கும் அழகைக் கண்டு ரசிக்கையில் தான் நாங்கள் எவ்வாறு அந்த அலைக்கிடங்கைக் கடந்தோம் என்பதை அசை போட்டுப் பார்க்கக் கூடியதாயிருந்தது. இவ் அலைக்கிடங்குகளைக் கடக்ககையில் ஒரு திகில் கலந்த சந்தோச கூ ஒலியை சகலரும் அவர்களை அறியாது எழுப்பியது தான் ஆச்சரியப்படத் தக்க ஒற்றுமை.

ஓர் அலைக்கிடங்கை வெற்றிகரமாகக் கடந்ததும் அடி மனதிலிருந்த சகல பயமும் நீங்கி , எல்லோரும் ஓர் அருட்டப்பட்ட குதூகலமான மனநிலையில் இருந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த அலைக்கிடங்கு எப்போது வரும் என ஆவலோடு எதிர்பார்த்திருக்கவும் ஆரம்பித்தார்கள்.இவ்வாறே அளவு கடந்த குதூகலத்துடன் எங்கள் பயணம் தொடர்ந்தது.அடுத்த அலைக்கிடங்கையும் வெற்றி கரமாகக் கடந்து வந்து நண்பர்களது படகுகள் அவற்றில் மூழ்கி எழுந்து அலைகளில் எழுந்து கடப்பதை மயிர் கூச்செறிய ரசித்தவாறிருக்கையில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. பாறைகளூடு ஊடுருவி அலையில் அடிக்கப்பட்ட படகொன்று ஒரு பாறையுடன் மோத படகு கவிழ்ந்தது.மூன்று நண்பர்கள் ஆற்றினிடையே இருந்த பாறையொன்றில் அலைகளிற்கிடையே உடும்புப் பிடியாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.ஏனைய ஒருவன் மிக வேகமாக ஆற்றின் வேகத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தான்.எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.

அதற்கிடையில் அந்த படகில் வந்த நெறிப்படுத்துனர் சுதாகரித்துக் கொண்டு கவிழ்ந்த படகை நிமிர்த்தி சிலரை படகில் ஏற்றியிருந்தார்.ஏனைய மூன்று படகில் இருந்த நெறிப்படுத்துனர்களும் சிறிதும் பதறாது வெகு இயல்பாக நிலைமையை அவதானித்து அங்கிங்கு சிதறித் கிடந்த நண்பர்களை நோக்கி எங்களை படகைச் செலுத்தச் செய்துகொண்டிருந்தார்கள். ஒருவாறாக சிலரை நாங்கள் காப்பாற்றி குண்டுக் கட்டாகத் தூக்கி எங்கள் படகுகளில் போட்டுக்கொண்டிருந்தோம்.அவர்களில் மிகவும் மிரண்டு போய் தத்தளித்துக்கொண்டிருந்த நண்பன் நாங்கள் அருகில் செல்கையில் ஹெல்ப் மச்சான் ஹெல்ப் என்று அந்த அபாய நிலையிலும் ஆங்கிலத்தில் கூக்குரலிட்டான்.இதற்கிடையில் நீச்சல் தெரிந்த நண்பன் ஒருவன் எங்கள் படகை நோக்கி நீந்தி வந்து சேர்ந்திருந்தான். இவ்வளவு நடந்தும் அந்த பாறையில் உடும்புப் பிடியாகத் தொங்கிக் கொண்டிருந்தவர்கள் தொங்கியவாறேயிருந்தார்கள். அவர்களைக் கையைவிட்டுவிட்டு ஆற்றினோட்டத்தில் வந்தால் நாங்கள் காப்பாற்றிக் கரை சேர்க்கலாம் என்பதால் கையைவிட்டுவிடும்படி நாங்கள் பலதடவை கத்தியும் அவர்கள் விடுவதாயில்லை. பின்னர் அவர்கள் தங்கள் கைப்பலத்தை இழந்தோ ஏதோ ஒருவாறு ஆற்றுடன் அடித்துச் செல்லப்பட்டு வரலாயினர். இப்பால் படகில் காத்துக் கொண்டிருந்த நாம் ஒவ்வொருவரை நோக்கி படகை வலித்துச் சென்று அவர்களை தூக்கி எங்கள் படகுகளில் ஏற்றலானோம்.அவர்களில் ஒருவன் வேகமாக அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட ஏலவே கவிழ்ந்த படகிலிருந்து நீந்தி வந்தேறிய நண்பனொருவன் ஏதோ உள்ளார்ந்த உந்துகையில் அவனை மீட்பதற்காக மீண்டும் நீருக்குள் பாய்ந்தான். அப்போதுதான் எங்களோடிருந்த நெறிப்படுத்துனர் சொன்னான்.. தங்களுக்கு என்ன நீந்திச் சென்று காப்பாற்றத் தெரியாதா ? வீழ்ந்தவர்களுக்கு இதுவொரு திகிலான அனுபவம்.. உங்களைக் கொண்டே படகை வலிக்கச் செய்து அவர்களை மீட்கச் செய்தால்த் தானே உங்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாய் அது அமையும் என்றும்.. லைவ் ஜக்கெற், ஹெல்மட் எல்லாம் போட்டுள்ள நிலையில் எந்த அபாயமும் இல்லை எனவும் கூறினான்.. அத்துடன் அங்கு இதெல்லாம் தினமும் நிகழ்வது தான் எனவும் ,இதெல்லாம் சகஜம் என்றும் கூறியபோது ஏனோ வடிவேலின் நகைச்சுவை தான் நினைவிற்கு வந்து தொலைத்திருக்க வேண்டும்..ஒருவாறு எல்லோரையும் மீட்டெடுத்த பெருமையுடன்  அடுத்த அலைக்கிடங்கையும் கடந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.  

விருதுகள் பல பெற்ற முன்னர் எப்போதோ எடுத்த ஆங்கிலப்படத்திற்காக போடப்பட்ட பாலத்திற்கான சுவடுகளைப் பெருமையுடன் காட்டினான் எங்களுடன் வந்த நெறிப்படுத்துனர்.தொடர்ந்து அமைதியான எந்த சலசலப்புமில்லாத ஆற்றின் பகுதியை வந்தடைந்திருந்தோம்.அங்கே குதித்து நீந்தலாம் என்றது தான் தாமதம் பலர் ஏற்கனவே திகிலில் உறைந்து போயிருக்க சிலர் குத்திகலாயினர். கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தொகை அதிகரிக்கலாயிற்று.என்ன கொடுமை என்றால் அந்த இடத்தில் கூட கால் நிலத்தில் முட்ட முடியாத ஆழம். நம்மில் பலர் ஒருவாறு படகைப் பிடித்தவாறும்,உயிர் காப்பு அங்கியின் துணையுடனும் மிதக்கலானோம். கவிழ்ந்த படகிலிருந்த நண்பர்களிடம்(வழமைக்கு அவர்கள் ஏற்கனவே திரும்பியிருந்தார்கள்) அவர்களது அனுபவத்தைக் கேட்பதில் நாமெல்லாம் முந்தியடித்தோம்.பாறையில் உடும்புப் பிடியாகத் தொங்கியவர்களை நாங்கள் கையை விடுமாறு கூறக் கூற தொங்கிக்கொண்டிருந்ததைப் பரிகாசம்செய்ய அவர்கள்  அதன் கடினத்தை எமக்கு புரிய வைக்குமுகமாக தன் நிலை விளக்கமளித்தனர். அதிலிருந்த நண்பனொருவன் தனது தொந்தி பாறையில் கொழுவுப்பட்டுக் கொண்டதாகவும், அதனால் தனக்கு அதில் தொங்குவது பெரிய கடினமாயிருக்கவில்லை எனவும், கூறி தன்னைப்போன்று சற்றுப் பருத்த உடலமைப்பு இருந்தால் ஆபத்திற்குதவும் என்றும் கூறி அனைவரையும் சிரிப்பிலாழ்த்தினான்.இவர்களின் அனுபவப் பகிர்வின் பின்னர் பல பேர் தங்கள் படகு கவிழவில்லையே என ஆதங்கப்படத் தொடங்கினர்.பின்னர் அனைவரும் ஒருவாறு ஒருவரை ஒருவர் குண்டுக் கட்டாக படகினுள் தூக்கிப் போட்டு கரையை அடைந்தோம்.

76115_10150095255445991_628650990_7752810_7502543_n_renamed_15240.jpg
வாழ் நாளில் மறக்கவே முடியாத,கொடுக்கும் பனத்திற்கு பயனுள்ள ஓர் சாகச அனுபவமுள்ள  சுற்றுலா சென்ற திருப்தியுடன் இரவு வீடு திரும்பினோம். நீங்கள் சாகசம் மிகு சுற்றுலா செல்ல விரும்பினால் உங்களுக்கு எந்தத் தயக்கமுமின்றி கித்துல்கலவை நாங்கள் சிபாரிசு செய்கின்றோம். யாம் பெற்ற (இ/து)ன்பம் பெறுக இவ் வையகம்.. 

http://nizal-sinmajan.blogspot.ch/2010/11/blog-post_29.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டீர்கள் .... ரசிக்கக் கூடியதாய் இருந்தது ஆதவன்....! tw_blush:

Link to comment
Share on other sites

10 hours ago, Athavan CH said:

விருதுகள் பல பெற்ற முன்னர் எப்போதோ எடுத்த ஆங்கிலப்படத்திற்காக போடப்பட்ட பாலத்திற்கான சுவடுகளைப் பெருமையுடன் காட்டினான் எங்களுடன் வந்த நெறிப்படுத்துனர்.

 

Link to comment
Share on other sites

சாகசப்பிரியர்களுக்கு ஒரு சுற்றுலாபுரி – கித்துள்கல

வேலைப்பளுக்களைக் களைந்துவிட்டு, அமைதியான இடத்தில் பிடித்தமான காலநிலையில் தனியாகவோ, ஜோடியாகவோ, குடும்பமாகவோ ஓய்வு நேரங்களை அனுபவிப்பது ஒருவித ரகம்.

பயணிக்கும் இடம் எவ்வாறானது? பயண வழியில் எத்தகைய சாகசங்கள் (Adventure) இருக்கும்? இந்த சுற்றுலா பயணம் எத்தகைய புதிய அனுபவத்தை தரும்? என்கிற கேள்விகளுக்கு பின்னால், புதுமைகளை அனுபவிப்பவர்கள் ஒருவித ரகம்.

இதில், சாகசங்களை அனுபவிக்க எங்கே பயணிக்கலாம்? என்கிற தேடலுடன் இருப்பவர்களுக்கு, புதியதோர் இடத்தை அடையாளபடுத்துவதாகவும், புதிய முயற்சிகளை வாழ்வில் ஒருமுறையேனும் செய்திடவேண்டும் என நினைப்பவர்களுக்கும் கித்துள்கல பயணம் சாலப்பொருத்தமாகவிருக்கும் என நம்புகிறேன்.

படம் - travelolanka.com

கித்துள்கல (Kithulgala)

கொழும்பிலிருந்து சுமார் 90KM தொலைவில், கேகாலை மாவட்டத்தின் அவிசாவளை நகரிலிருந்து 40KM தொலைவிலும் மழைக்காடுகளைத் தன்னகத்தே கொண்டு, களனிகங்கையின் இயற்கை வனப்பை முழுவதுமாக உள்வாங்கிநிற்கும் ஓர் பிரதேசமே கித்துள்கல. பனை வகையை சார்ந்த கித்துள் மரங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் கித்துள் கருப்பட்டிகளின் பிரசித்தமே இந்த ஊரின் காரணப்பெயராக உள்ளபோதிலும், தற்காலத்தில் இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் முதற்கொண்டு, உள்நாட்டவரையும் ஈர்க்ககூடிய இயற்கையாக அமைந்த சுற்றுலாத்தலமாக இது அமைந்துள்ளது.

பயண முறைகள்

சுற்றுலாக்களைத் திட்டமிடல் ஒரு கலை. அதிலும் இவ்வாறான சாகசச் சுற்றுலாக்களை கூட்டாக சென்று களிப்பதைத் திட்டமிடல் சற்றுச் சவாலான விடயமே. பொதுவாக சிலர் சாகசச் சுற்றுலாக்கள் செல்லத் தயங்கி சிலசமயம் பின்வாங்குவதுண்டு, சிலர் கடைசி நிமிடத்தில் வருவதுண்டு. இப்படியான சந்தர்ப்பங்களை எதிர்வுகூறி ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வேறுபட்ட சுற்றுலா ஒழுங்குகளை தயார்நிலையில் வைத்துக்கொள்வது உசிதம்.

குறைந்தது 2-4 பேர் வரையில் பயணிப்பதாயின், மிகசிக்கனமாக பேரூந்திலேயே பயணிக்கலாம். கொழும்பு – ஹட்டன் குளிரூட்டபட்ட பேரூந்தில் ஒருவருக்கு தலா 300/- வரை செலவாகும். இதுவே, 8-10 பேர் பயணிப்பதாயின் வான் ஒன்றினை முன்பதிவு செய்து பயணிக்கலாம். கித்துள்கல சென்று மீண்டும் கொழும்புக்கு வர முழுமையாக 10,000/- (தனிநபருக்கு 1,000/-) வாகனத்திற்கு செலவாகும்.

முக்கியமாக, பயண ஒழுங்கை திட்டமிடும்போது, எத்தகைய சாகச அனுபவங்களை சுற்றுலா பயண ஒழுங்காக மாற்றிக்கொள்ளுவது என்பது முக்கியமாகும்.

படம் - miracleisland.files.wordpress.com

கித்துள்கலவில் தவறவிடக் கூடாதவை

கித்துள்கல முழுவதும் மழைக் காடுகளும், களனி கங்கையும் பரந்து,விரிந்து காணப்படுகின்றன. வெளிநாட்டு உல்லாசப்பயணிகளாக வருபவர்கள் பெரும்பாலும் இரண்டு நாட்களை இங்கே செலவிடுவார்கள். பெரும்பாலும், இங்குவருகின்ற உள்நாட்டவர்கள் ஒரு நாளை முழுமையாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

கித்துள்கலவுக்கு இரண்டு நாட்கள் சுற்றுலா செல்பவர்கள், பெரும்பாலும் முதல் நாள் இரவினை மழைக்கால அடர்ந்த காடுகளில் முகாமிட்டு தங்கவே செலவிடுவார்கள். தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி, அமைதியாக இயற்கையுடன் ஒரு நாளை செலவிடகூடியதற்கு கித்துள்கல காடுகள் உகந்தவையும், பாதுகாப்பானதும் கூட. இவற்றை ஒழுங்கு செய்து தரவும், முறையான வழிகாட்டலுடன் இரவு பொழுதுக்கான கூடாரங்கள் , BBQ உணவுகளை உள்ளடக்கியதான விதவிதமான வெவ்வேறு விலைகளை உள்ளடக்கிய பட்டியலை (Packages) கொண்ட பல்வேறு சாகச நிறுவனங்கள் (Adventure Organizer Companies) கித்துள்கலவிலும், இணையம் எங்கும் கொட்டிக்கிடக்கிறன. அவர்களை  முறையாக தொடர்புகொண்டு ஒழுங்கு செய்துவிட்டு சுற்றுலா செல்வதன் மூலம், அசொளகரியங்களை தவிர்த்து கொள்ளலாம்.

படம் - northbaliexplore.com

என்னுடைய சுற்றுலாக்கள் பெரும்பாலும் குறுகிய கால இடைவெளியில் திட்டமிடப்படுவதால், பெரும்பாலும் குறித்த சுற்றுலா பிரதேசங்கள் தொடர்பில், இணையத்தில் கொட்டிக்கிடக்கும் விடயங்களை முதலில் சரிபார்த்துக்கொள்வேன். அவ்வாறு கித்துள்கல தொடர்பில் இணையத்தை மேய்ந்தபோது, கண்ணில் பட்ட ஒரு நிறுவனம் தான் Team 39 http://www.raftingteam39.com/ குறிப்பாக, பல்வேறு வெளிநாட்டவர்களின் சாதக பரிந்துரைகளை (Positive Reviews) பெற்ற நிறுவனமாக இது இருக்கின்றது. நிறுவனத்தினரை தொடர்புகொண்ட போது, கித்துள்கலவில் எத்தகைய சாகச நிகழ்வுகள் உள்ளன, அவர்களின் விலைப்பட்டியல் (Price Package / List) எவ்வாறு வடிவமைக்கபட்டுள்ளது என்பது தொடர்பிலான முழுவிபரத்தையும் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். வரவேற்பு பானத்துடன் நாளை ஆரம்பித்து, மதிய உணவு மற்றும் தேநீர் உள்ளடங்கலாக ஒருநாளை முழுவதுமாக உள்ளடக்கியதாக அவர்களது விலைப்பட்டியல் அமைந்திருந்தது. குறைந்தது 10 பேர் கொண்ட குழுவாக செல்லும்போது, குறித்த நபருக்கு 1,700 – 2,000/- வரையில் கட்டணமாக அறவிடப்படும். மேலதிகமாக, உங்கள் முழு சுற்றுலாவையும் வீடியோ முறையில் பதிவு செய்தும் வழங்குகிறார்கள் (இதற்கு மேலதிகமாக 2,000/- அறவிடுகிறார்கள்). எனவே, சாகச பயணங்களை வாழ்நாள் முழுவதும் ஒரு பொக்கிஷமாக சேர்த்துவைத்துப் பாதுகாக்க முடியும்.

படம் - bestoflanka.com

விடுமுறை நாள் ஒன்றினை தேர்வுசெய்து, Team 39னுடன் திட்டமிடலை உறுதிசெய்துகொண்டு, கொழும்பிலிருந்து காலை 7 மணியளவில் புறப்பட்டோம். தற்சமயம் மழைக்காலம் என்பதனால், போகின்ற வழியில் கித்துள்கல சாகச சுற்றுலா சாத்தியப்படுமா? என்கிற கேள்வியுடன், மாற்று ஏற்பாடு ஒன்றுடனும் புறப்பட்டோம். ஆனால், மழைக்காலங்கள்தான் கித்துள்கல படகு சவாரி (White Water Rafting) , மலையேற்றம் (Mountain Hiking) , சிறுகுன்றிலிருந்து அருவியில் குதித்தல் (Confidence Jump), அருவியின் போக்கில் நீந்துதல் (Stream Sliding) என்பன மிரட்டலான அனுபவத்தை தரும் என்பதை சுற்றுலா முடிவில் உணர்ந்து கொண்டோம்.

மலையேற்றம் (Mountain Hiking) படம் - kitulgalaadventures.com

மலையேற்றம் (Mountain Hiking) படம் – kitulgalaadventures.com

சரியாக, 10.30க்கு தொலைபேசி வழிகாட்டலுடன் கித்துள்கலவின் பொருத்தமான இடத்தினைனை சென்றடைந்தோம். முதலில் படகு சவாரிக்கு செல்வது என தீர்மானித்து கொண்டோம். அதற்கு அமைவாக, உடைகளை மாற்றிக்கொண்டு, குறித்த நிறுவனத்திலிருந்து அவர்களுடைய வாகனத்திலேயே படகுசவாரிக்கு பொருத்தமான இடத்திற்கு பயணப்பட்டோம். 5 நிமிட வாகன பயணம், கூடவே இன்னுமொரு 5 நிமிட நடைப்பயணத்திற்கு பின்பு களனிகங்கையின் படகுச்சவாரிக்கு பொருத்தமான இடத்தை சென்றடைந்தோம். Team 39னின் தேர்ந்த படகோட்டிகளின் வழிகாட்டலுடன், பொருத்தமான தற்காப்பு அங்கிகளுடன் (Safety Jack) மழையில் சவாரியை ஆரம்பித்தோம். இது முழுவதுமாக சுமார் 1 மணிநேர சாகச பயணமாகவிருந்தது.

கித்துள்கல படகு சவாரி (White Water Rafting) படம் - srilankadaytours.com

கித்துள்கல படகு சவாரி (White Water Rafting) படம் – srilankadaytours.com

இடைநடுவே, சுமாரான மற்றும் பயங்கரமான பாறைகள் நிறைந்த பாதையில் ஆற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, அதன் வெள்ளை அலைகளுக்கு நடுவில் பயணிப்பது சாகச அனுபவம்தான். சிலசமயங்களில் படகோட்டியின் அறிவுரைக்கு அமைவாக துடுப்புபோடாத சமயத்தில், படகுகள் கவிழ்வதும் உண்டாம். ஆனால், தற்காப்பு அங்கிகள் அணிந்து இருப்பதால், எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என எங்களுடன் வந்த படகோட்டி சொல்லிக்கொண்டார். கூடவே, படகுச்சவாரியின் இறுதி சில நிமிடங்களுக்கு ஆற்றில் இறங்கி, படகு கவிழ்ந்தாலும் மூழ்கவோ, ஆற்றில் அடித்து செல்லவோமாட்டோம் என்பதை விளக்க எங்களையும் ஆற்றில் இறக்கிவிட்டார். அப்போதுதான், பொருத்தமான தற்காப்பு வசதிகள் உள்ளபோது, வாழ்நாளில் நீந்ததெரியாத ஒருவராலும், அத்தகைய நிலையை சிறப்பாக கையாளமுடியும் என்பதைப் புரிந்துகொண்டோம். காரணம், எனக்கும் நீச்சல் தெரியாது என்பதுதான்.

படம் - safari.serendivus.com

படம் – safari.serendivus.com

படகுச்சவாரியின் பின்பு, விரும்பினால் மதிய உணவுக்கு பின்னதாக ஏனைய நடவடிக்கைகளைத்தொடரலாம் எனகூறினர். கூடவே, உணவருந்திவிட்டு மலையேற்றம் மற்றும் ஆற்றில் குதித்தல் என்பன எல்லோர் உடல்நிலைக்கும் ஒத்துவருமா? என்பதையும் ஆலோசனை செய்து கொண்டார்கள். எனவே, எல்லாவற்றையும் முடித்துவிட்டு, உணவருந்துவதாக முடிவு செய்துகொண்டோம். அதற்க்கு அமைவாக, மீண்டும் ஒரு 10 நிமிட வாகன மற்றும், நடைபயணத்தின் பின்னதாக, களனி கங்கை உருவாகும் அருவியின் உச்சியை அடைந்தோம். பாதை வழியே பயணிக்கின்ற போது அட்டைகள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என்பதை நம்முடன் வந்திருந்த வழிகாட்டி பயணம் முழுவதுமே நினைவுபடுத்திக்கொண்டு வந்தார். அங்கு சென்றபின்புதான் ஒன்றை புரிந்துகொள்ள முடிந்தது. கித்துள்கல சாகச பயணத்தில் உண்மையான சாகசங்களே இனித்தான் ஆரம்பிக்க போகிறது என்பது!

படம் - cloudvilla

படம் – cloudvilla

முதலில், சிறுகுன்றிலிருந்து அருவியில் குதித்தல் (Confidence Jumb), அருவியின் போக்கில் நீந்துதல் (Stream Sliding) என்பவற்றுக்கு எல்லோரும் புதியவர்கள் என்பதால், எங்களுடன் வந்த வழிகாட்டி தாங்களே முதலில் அதனை செய்து காட்டினார்கள். எந்தவித ஆபத்தும் இல்லாத மிகச்சிறிய குன்றிலிருந்து குதிக்கவும், அருவியின் போக்கில் நீந்தவும் அனுமதித்தார்கள். இதன்மூலம், பெருமளவான பயத்தை போக்கிக்கொள்ள முடிந்தாலும். அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு எல்லோராலும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள முடியவில்லை. எனவே, சிலர் பின்வாங்கிகொள்ள, ஆபத்து இல்லையென்பதால் பயத்தை விலக்கிகொள்ள நான் உட்பட சில நண்பர்களும் ஏனைய செயற்பாடுகளுக்கு முன்வந்தோம். அடுத்து, சுமார் 6-8 அடி உயரமான பாறையிலிருந்து அருவியில் குதிக்கவேண்டும் என வழிகாட்டி சொன்னார். உண்மையிலேயே, உயரமான இடத்திலிருந்து குதிக்கின்ற அந்தநொடியும், குதித்து நீருக்குள் அமிழ்ந்து (எல்லா செயல்பாடுகளின்போதும் தற்காப்பு அங்கி அணிவது அவசியம்) வெளியேவருகின்ற அந்த நொடியும் திகிலானதும், சுவாரசியமானதும் கூட! எங்கள் சுயதைரியத்தை பரிசோதித்துகொள்ள இவ்வாறான செயற்பாடுகளை ஒருமுறையாவது பரீட்சித்து பார்க்கவே வேண்டும். ஆனால், பொருத்தமான தற்காப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டிகளுடன்தான்! இத்தகைய அனுபவங்களை வார்த்தைகளாக விபரிக்க முடியாது. அவற்றை, சாகச பிரியர்களாக அனுபவத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும்.

சுமார் 3 மணிநேர செயற்பாடுகளுக்குப்பின்னதாக, Team 39 குழுவின் அலுவலகத்தை மீண்டும் வந்தடைந்தோம். அங்கேயே, பாதுகாப்பான முறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் சகலரும் தங்களை தயார்படுத்திக்கொள்ளகூடிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கபட்டிருந்தன. தயார்படுத்தலின் பின்னதாக, அனுபவங்களை வீடியோ காட்சிகளாக (உங்களுடைய சொந்த Pen Driveயை கொண்டு செல்வது நல்லது. அல்லது அதற்கும் வேறாக பணம் செலுத்த வேண்டி ஏற்படலாம்) பெற்றுக்கொண்டு, அங்கிருந்து விடைபெற்றோம்.

உண்மையில், கித்துள்கல சாகசபிரியர்களான எமக்கு ஒரு சொர்க்கபுரிதான்! இப்படியான, சாகச இடங்களை தேடித்தேடி பயணப்படுபவர்களுக்கும், வாழ்க்கையில் இவற்றையெல்லாம் ஒருதடவையேனும் முயற்சிசெய்து பார்த்திட வேண்டும் என சிந்திப்பவர்களுக்கும் கித்துள்கல ஓர் புதிய அனுபவமே!

கித்துள்கல நோக்கி பயணிப்பவர்களுக்கு,

  • பயணத்திற்கு முன்னதாகவே, பயணித்தவர்களின் அனுபவத்துடன் பொருத்தமான வழிகாட்டிகளை தெரிவுசெய்து கொள்ளுங்கள், இது சிக்கனமானதும், பாதுகாப்பானதும் கூட!
  • மாற்று ஆடைகளை எடுத்து செல்லுங்கள். பெரும்பாலும், நீரிலேயே பயணிப்பதால் பெறுமதியான பொருட்களை வழிகாட்டும் நிறுவனங்களின் Lockerரில் வைத்துவிட்டே செல்லவும். உடைமைகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்.
  • சகல செயற்பாடுகளையும் எல்லோராலும் முன்வந்து செய்வது கடினம். எனவே, யாரையும் வற்புறுத்தாதீர்கள்.
  • குடிநீர் கொண்டு செல்வது பொருத்தமானது. கூடவே, பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தியும் விடுங்கள்.

http://roartamil.com/travel/kitulgala/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.