Recommended Posts

அறை எண் 22

 

 

சோவென விழும் அருவியின் இரைச்சல் பொங்கியெழும் ஆனந்தத்தையும் தரவல்லதாக இருந்தது. நீண்ட நேரம் அதன் நீரலையில் ஆடியிருக்க வேண்டும். தலைமுடி பிடரியோடு ஒட்டியிருந்தது. ஆடைகள் ஈரமாக உடலைக் கவ்விக் கொண்டிருந்தன. ஈரத்தை உதறி முடிக்கும் முன் நீர்ச்சுழி மலை முகட்டின் எல்லை நோக்கி உந்தத் தொடங்கியது.
11.jpg
மாபெரும் உந்தலால் திடீரென கீழே விழ... பள்ளம் பள்ளம்... விழுகையில் ஒரு கணம் மூச்சு நின்றுவிடுவது போல் ஒரு நெஞ்சடைப்பு. திடீரென சுவாசம் முட்டித் திரும்புகையில் ஒரு நீண்ட ஆற்றின் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள் சொப்னா. ஆற்றின் இரு மருங்கிலும் புதர்கள், நாணல்கள், கோரைப்புற்கள். நீரின் நடு நடுவே பாறைத்திட்டுக்கள்.

பாறைகளின் மேல் மோதிக் கொள்ளாமல் லாவகமாக நீரலைகளின் விசைக்கு உகந்தவாறு தன் உடலை தெப்பம் போல் செலுத்தி மிதந்து கொண்டிருந்தாள். சட்டென்று ஆறு மக்கள் நடமாட்டமில்லாத நெடுஞ்சாலையாக மாறியது. சாலை செல்லச் செல்ல ஊர்களும், வீடுகளும் வாகனங்களுமான தெருவாக மாறியது. தெரு ஒரு பெரிய நாகத்தின் நெளிவு சுளிவுகளுடன் ஒரு தண்ணீர்ப் பாம்பாக நீண்டு கொண்டிருந்தது.

அதன் நெளிவு சுளிவுகளுக்கிடையே மறுபடியும் தனது உடலை லாவகமாகச் செலுத்தி ஒரு கடிகாரத்தின் நேர்த்தியுடன் ஓடிக்கொண்டிருந்தாள். ‘‘சொப்னா மேடம், ஏன் இப்படி ஓடறீங்க. இன்னும் பத்து நிமிஷம் இருக்கு...” என்றாள் பின் தொடர்ந்து வந்த சுகன்யா. “எனக்கு நிதானமா நடக்கத்தெரியாது சுகி. என்ன செய்ய...” ஆமாம்.

நடை என்றாலே அவளுக்கு ஓட்டம்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள் நடந்ததே இல்லை. ஓட மட்டுமே செய்திருக்கிறாள். ஓட்டமும் நடையுமாக அவளும் சுகியும் பரீட்சை கமிட்டி அறையை அடைந்தபோது, அது அங்கு ஒரு ராணுவ முகாம்போல இயங்கிக் கொண்டிருந்தது. கேள்வித்தாள்களும் பதில்தாள்களும், கட்டுவதற்கான நூல் கட்டுகளும், அறை எண்கள் தாங்கிய பழுப்பு நிற உறைகளில் இடப்பட்டு மேசைகள் மேல் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொருவரும் வேகவேகமாக வினாத்தாள்களையும் பதில் தாள்களையும் எண்ணி சரிபார்த்துக் கொண்டிருந்தனர். இவற்றைத் தூக்கிக் கொண்டு ஒரு நூறு மீட்டர் நடந்து லிஃப்ட் டில் ஏறி ஐந்தாவது மாடியில் உள்ள பரீட்சை எழுதும் அறைக்குச் செல்ல வேண்டும். எட்டு பேருக்கு மேல் நுழைய முடியாத அந்த லிஃப்ட்டுக்காக ஒரு பெரிய வரிசையே காத்துக் கிடக்கும்.

அவ்வளவு விடைத்தாள்களையும் சுமந்து கொண்டு நடப்பதென்பது மிகவும் சிரமாக இருந்த நிலையில் நிர்வாகம் பெரிய பெரிய கட்டைப்பைகளைக் கொடுத்து தாள்களைத் தூக்கிச் செல்ல வசதி செய்து கொடுத்திருந்தது. அப்போதும் சில அறைகளில் காற்றும் மெல்லிய தேகம் கொண்ட பரீட்சை மேற்பார்வையாளர்களும் மட்டுமே செல்ல முடியும் என்கிற வகையில் இருக்கைகள் நெருக்கமாக இடப்பட்டு கிட்டத்தட்ட நூறு மாணவிகள் வரை அமர்த்தப்பட்டிருப்பார்கள்.

முதல் ஒரு மணிநேரம் அவர்களது விடைத்தாள்களில் கையெழுத்திடுவதிலும் அவர்களது பதிவைக் கையெழுத்திட்டு வாங்கிக் கொள்வதிலும் சென்றுவிடும். கடைசி ஒரு மணி நேரம் எல்லோரும் உபரி விடைத்தாள் கேட்கத் தொடங்குவார்கள். ஒவ்வொரு மாணவியிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு உபரி விடைத்தாளை ஒப்படைக்க வேண்டும்.

மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு என மாணவிகள் மாறி மாறி மேற்பார்வையாளர்களைப் பல்வேறு மூலைகளுக்கு அலைக்கழித்துக் கொண்டே இருப்பார்கள். இளம் உதவியாசிரியைகள் அமைதியாக வேலை செய்து கொண்டிருக்க முதுமை தள்ளியவர்கள் மட்டும் முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்கள். சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு இருவர் மேற்பார்வை பார்க்கும் அறையே நல்லது.

அப்போதுதான் அவர்கள் நடுவில் கழிப்பறைக்குச் செல்லமுடியும். தேநீர் கொண்டுவரும் பணியாளர் அந்த முதல் மற்றும் கடைசி மணி நேரங்களைத் தவிர்த்து நடுவில் வந்தாரானால் நன்று. இல்லையென்றால் தேநீர் குடிப்பதற்கு நேரமும் கிட்டாது. பேப்பர்களை எண்ணியவாறு சிறிது சாய்வுள்ள நாற்காலியில் அமர்ந்து விட்டாள் சொப்னா. தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டமையால் காலை உணவைத் தவிர்க்கவேண்டிய கட்டாயம். சில நாட்கள் இப்படி ஆகிவிடுகிறது.

கண்களை மூடி நிகழ்வுகளை அசைபோட ஆரம்பித்தாள் சொப்னா. தொலைக்காட்சி ஒளியூட்டப்பட்டது, சந்தனக் கலரில் சட்டை போட்டுக் கொண்டு நரைத்த தலையுடன் ஒருவன் சொல் கூசாமல் ‘பாப்ரி மஸ்ஜித் என்னும் அவமானச் சின்னத்தை அழித்துவிட்டோம்’ என்றும், ‘சிறுபான்மையினரின் கட்சி, மதம் சாரா கட்சி எங்கள் கட்சி’ என்றும் பேசிக் கொண்டிருந்தான். 

காட்சிகள் மாறின. ஒரு பெரிய மைதானத்திற்கு நடுவே நடந்து கொண்டிருந்தாள் சொப்னா. பரீட்சைத் தாள்களின் கனத்தில் தோள்பட்டை வலிக்கத் தொடங்கியது. கண் முன்னே பரவிக்கிடந்த மணல் படுக்கை. மேலே பளிச்சிடும் மஞ்சள் ஒளியுடன் சூரியன். திடீரென வானத்தில் கிறீச் கிறீச்சென்ற சத்தத்துடன் தரையின் மேல் நிழல்களை உருட்டிச் சென்றன கிளிகள். வரிசை வரிசையாய் மணல்வெளியைக் கடந்து சென்றன நிழல்கள்.

சூரிய ஒளி கண்களைக் கூசச் செய்தது. கைகளை புருவத்திற்கு மேல் தூக்கி மறைத்துக் கொண்டு பறந்து செல்லும் கிளிகளை நோக்கினாள் சொப்னா. திடீரெனப் பறவையாகி கீழே நோக்கத் தொடங்கினாள். நகரின் சிறிய சாலைகளுக்கு நடுவே பெரிய பெரிய சதுரங்களாகத் தெரிந்தன கட்டிடங்கள். அவற்றிற்கு நடுவே வரைபடம் போல் வளைந்து செல்லும் சாலைகளில் உலோகப் புள்ளிகளாக வாகனங்கள் நகர்ந்தவாறிருந்தன.

ஓரிரு இடங்களில் அதைவிடவும் சிறிய புள்ளிகளாக எறும்புகள் போல் மனிதர்கள் தெரிந்தனர். உலோகப் புள்ளிகள் ஊர்ந்தவாறு இருக்கையில் மானுடப் புள்ளிகள் மட்டும் அதே இடத்தில் நிலைத்து நின்றன. வங்கியில் பணம் எடுப்பதற்காக நின்று கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள். நேற்று பாபநாசம் அருகே 75 வயது முதியவர் வரிசையில் நிற்கும்போது இறந்துவிட்டார் என்றும் அவரது ஊரின் பெயர் ‘வாழ்க்கை’ என்றும் தெரிந்து கொண்டாள்.

தான் சம்பாதித்த காசுக்காக வங்கி வரிசைகளில் நின்று உயிர்நீத்தவர்களின் எண்ணிக்கை வேறு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது... ஏன், முந்தாநாள் கூட பேருந்தில் சில்லறை தர இயலாத ஒரு பெண்மணி வழியிலேயே இறக்கிவிடப்பட்டார். அவர் செல்ல வேண்டியிருந்த இடம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள ஊரான ‘முக்கோணம்’.

ஊர் பெயரெல்லாம் தத்துவமாக இருக்கையில் நடைமுறை மட்டும் அதை சிறிதும் உள்வாங்காத பித்துவமாக அல்லவா இருக்கிறது. ‘இது என்ன கிரகம்? இதனை பார்க்காவிட்டால் என்ன?’ என்று அவளது மனம் சொல்லிக் கொண்டது. ஒருபுறம் இத்தகைய அரசியலும் மறுபுறம் வியாபாரமயமாகிப் போன கல்வியும் என்று சிந்தித்தவாறு கீழே இறங்கி நடக்கலானாள்.

அப்போதுதான் தரையைக் கவனித்தாள். கால்படும் இடம் யாவிலும் சிறிய சிறிய விலங்கினங்களின் மண்டையோடுகளாகத் தெரிந்தது. அவை பெரிய பெரிய பல்லிகளின் எலும்புக் கூடுகள் போலக் காட்சியளித்தன. அவற்றின் மேல் கால் வைப்பதைத் தவிர்த்து கஷ்டப்பட்டு நடந்துவந்தபோது திரும்பவும் பரீட்சைக்கான கமிட்டி அறையை அடைந்திருந்தாள். ‘‘புரொபஸர்னா இன்விஜிலேஷன் கிடையாது.

அஸோசியேட்னா இரண்டு... அஸிஸ்டெண்டுனா ஆறு, அதிலும் தனியார் பணியாளர்களுக்கு ஏழு அல்லது எட்டு நாள்...’’ என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தனர். ‘‘அட்டெண்டருக்கு ஆறாயிரம், பேராசிரியைக்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம்...’’ என்று யாரோ ஒருவர் முணுமுணுப்பது கேட்டது.

‘‘சொப்னா மேடம் பேப்பரை கொடுங்க...’’ யாரோ பதில் தாள்களைக் கையிலிருந்து பறித்துக் கொண்டபோதுதான், ‘ஐய்யய்யோ, மாணவர் பதிவுத்தாளை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டோமே... அது ஒருவேளை பரீட்சை அறையிலேயே இருக்குமோ? எனக்கு கொடுக்கப்பட்டிருந்த பரீட்சை அறை எண்: 22. நான்தான் அந்த அறைக்குச் செல்லவேயில்லையே! ஒரு வேளை தூக்கத்தில் கோட்டைவிட்டு விட்டேனோ? பின் எப்படி விடைத்தாள்கள் கையில் வந்தன?’ யோசித்துக் கொண்டிருக்கையில் விழிப்பு தட்டியது. ஞாயிற்றுக்கிழமையில் என்ன இப்படி ஒரு கனவென்று நினைத்தாள் சொப்னா.   

www.kungumam.co

              

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஹாய் சொப்னா, நீங்கள் பரீட்சை மண்டபத்திலும் பகலில் தூங்கினால் உப்பிடித்தான் சண்டேயிலும் சொப்பனம் வந்து தொலையும்....!  tw_blush:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை சாட்டிங்
    
   சாட்டிங்கில் நண்பனைத் தொடர்புகொண்டான் பரத்.
   ‘‘டே சிவா, பிஸியா?’’
   ‘‘இல்லை பரத், சொல்லு!’’
   ‘‘இன்னும் டெல்லியிலதான் வேலை பாக்குறியா?’’
   ‘‘ஆமா!’’

   ‘‘எனக்கொரு ஹெல்ப்...’’
   ‘‘சொல்லுடா?’’
   ‘‘வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க...’’
   ‘‘நைஸ்... கங்கிராட்ஸ்!’’

   ‘‘பொண்ணு ெடல்லிலதான் இருக்கா, பேரு ஸ்நேஹா.’’
   ‘‘நீயும் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆகப்போறியா?’’
   ‘‘இல்லை... அவ சென்னைக்கு வந்துடுவா!’’
   ‘‘நான் என்ன பண்ணணும்?’’

   ‘‘அவ ஆபீஸ் வரைக்கும் போய் கொஞ்சம் விசாரிக்கணும்!’’
   ‘‘டன். அட்ரஸ், ஃபோட்டோ மெயில் பண்ணிடு!’’
   ‘‘டன்!’’
   ஒரு வாரம் கழித்து...
   ‘‘என்னடா ஆச்சு? ஸ்நேஹாவைப் பார்த்தியா?’’
   ‘‘ம்...’’
   ‘‘எப்படி இருக்கா?’’
   ‘‘சூப்பர். ஆனா உனக்கு சரிப்பட்டு வரமாட்டா!’’
   ‘‘என்னடா சொல்றே?’’

   ‘‘அவளுக்கு டெல்லிதான் பிடிச்சிருக்கு. இங்கேயே செட்டில் ஆக விரும்புறா. பேரன்ட்ஸ் கட்டாயப்படுத்துறதனாலதான் உன்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருக்கா... அப்புறம் ஒரு விஷயம்...’’‘‘என்ன?’’
   ‘‘அவ இங்கே ஒரு பையனை லவ் பண்றா. இன்னிக்குதான் எனக்குத் தெரியும். பையன் சுமாராதான் இருக்கான், ஆனா அவளுக்குப் புடிச்சிருக்கு!’’
   ஒரு மாதம் கழித்து, சிவா-சிநேஹா கல்யாணப் பத்திரிகை பரத் கைக்கு வந்தது.      
   kungumam.co.
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை செல்லங்கள்
    
   நம்ம மிதுனுக்குப் புதுசா ஒரு ஜாதகம் கொண்டு வந்திருக்கேன். ஜோடிப் பொருத்தம் அபாரம்!’’ என்றபடி தரகர் அய்யாசாமி, மிதுனின் புகைப்படத்துடன் பெண்ணின் படத்தையும் ஜோடி சேர்த்து அவன் தாயாரிடம் நீட்டினார். முகத்தில் பரவசம் பரவ தாயார் கேட்டார், ‘‘என்ன படிச்சிருக்கா?’’
   ‘‘நம்ம பையனுக்கு சமமான படிப்புத்தான். எம்.ஏ., எம்.ஃபில்!’’
   ‘‘வசதி எப்படி?’’ - மிதுனின் தந்தை சேனாபதி கேட்டார்.
   ‘‘பொண்ணோட அப்பா பெரிய பஸ் கம்பெனி அதிபர். நாலஞ்சு பெட்ரோல் பங்க் இருக்கு. பத்துப் பதினைஞ்சி டேங்கர் லாரி ஓடுது. பொக்லைன் அது இதுனு நம்ம அந்தஸ்துக்குச் சமமானவங்கதான்!’’   ‘‘பொண்ணு கூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?’’
   ‘‘ஒரே பொண்ணுதாங்க. ரொம்பச் செல்லமா வளர்த்திருக்காங்க!’’
   ‘‘அப்ப இந்த இடம் தோதுப்படாது தரகரே!’’
   ‘‘ஏனுங்க?’’
   ‘‘மிதுனும் எங்களுக்கு ஒரே பையன். ரொம்பச் செல்லம். செல்லமா வளர்ந்த பிள்ளைங்க நல்லபடியா வாழணும்னா அவங்க வாழ்க்கைத்துணை கொஞ்சம் அனுசரித்துப் போற கேரக்டரா இருக்கணும். ஆனா, இங்க பையன் பொண்ணு ரெண்டு பேருக்கும் விட்டுக்கொடுத்துப் போற மனப்பக்குவம் இருக்காது. எல்லாத்திலும் நானா நீயானு போட்டி போடுவாங்க. நிம்மதி இருக்காது. அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சிகளோட வளர்ந்த பொண்ணா பாருங்க!’’ என்றார் சேனாபதி.  
   kungumam.co
  • By நவீனன்
    
    
   முதலாளி முருகேசன் தன் மகன் கார்த்தியுடன் குடோனுக்கு ரவுண்ட்ஸ் வந்துகொண்டிருந்தார். மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவன் தன் ஆறு வயது மகனை அழைத்து வந்திருந்ததைப் பார்த்ததும் முருகேசன் டென்ஷன் ஆகிவிட்டார். ‘‘எதுக்குய்யா வேலை செய்யிற இடத்துக்கெல்லாம் பையனை கூட்டிட்டு வர்றே..?’’ என்று அந்தத் தொழிலாளியை அதட்டிவிட்டு அலுவலகம் திரும்பினார். அங்கே... மேனேஜர் அழைத்து வந்திருந்த அவருடைய ஆறு வயது மகன் அமர்ந்திருந்தான். புன்னகைத்தபடி அவனிடம் கொஞ்சிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தார். கார்த்திக்கு கோபம். உயர் பதவியில் இருப்பவனுக்கு ஒரு சட்டம்... அடிமட்டத் தொழிலாளிக்கு ஒரு சட்டமா? இதை தந்தையிடம் நேரடியாகவே கேட்டான்.   ‘‘அது அப்படியில்லப்பா... ஒவ்வொருத்தனுக்கும் அவனுடைய அப்பா தெரிஞ்சோ, தெரியாமலோ, ரோல் மாடல் ஆயிடறார்... உனக்கு நானும், மேனேஜர் அவர் மகனுக்கும் ரோல் மாடல் ஆகறது நல்ல விஷயம். மூட்டை தூக்கறவன் தன் மகனுக்கு ரோல் மாடல் ஆகறது அப்படி இல்லை... நம்மகிட்ட இருக்கிறவங்க எதிர்காலம் நல்லா இருக்கணுமில்லையா!’’ என்றார் முருகேசன். ‘‘அதை அப்படிப் பார்க்காதீங்கப்பா! அப்பா மூட்டை தூக்கித்தான் தன்னைப் படிக்க வைக்கிறார் அப்படிங்கற உணர்வு அந்தப் பையனை நிச்சயமா உயர்ந்த நிலைக்கு ஆளாக்கும் இல்லையா?’’ என்ற மகனின் நம்பிக்கையில் உயிர் இருப்பதாக உணர்ந்தார் முருகேசன். 
   kungumam.co
  • By நவீனன்
   நன்றி
    
   சுந்தரத்துக்கு நல்ல பசி. காரை விட்டு இறங்கியதுமே, ‘சாந்தி பவன் உயர்தர உணவகம்’ என்ற போர்டைப் பார்த்ததும் ஆறுதலாய் இருந்தது. பசி தீர சாப்பிட்டான். சாப்பாடு மிகவும் அருமை. வீட்டில் சாப்பிடுவதைப் போன்ற உணர்வு. பல ஊர்களில் ஹோட்டலில் சாப்பிட்டவன் என்பதால், இது வயிற்றைக் கெடுக்காத இயல்பான ருசியுள்ள உணவு என்பது அவனுக்கு புரிந்தது. சர்வரைக் கூப்பிட்டான். ‘‘இங்க சாப்பாடு தயார் பண்ற சமையல்காரர் யாரு? அவரோட பேசணும்!’’
   ‘‘ஏன் சார்?’’   ‘‘சாப்பாடு ரொம்பப் பிரமாதம். அவரைப் பாராட்டணும்!’’
   ‘‘வழக்கமா சமைக்கிறவர் இன்னைக்கு திடீர்னு லீவு. அதனால இன்னிக்கு சமையல் நான்தான் சார்!’’
   ‘‘சாப்பாடு ரொம்ப பிரமாதம். எங்க குடும்பத்துக்கு ஒரு சமையல்காரர் தேவை. நல்ல சம்பளம் கொடுப்போம். தங்கறதுக்கு இடம், சாப்பாடு, தீபாவளிக்கு போனஸ் எல்லாம் உண்டு. வர்றீங்களா?’’
   ‘‘மன்னிக்கணும் சார். ஒரு காலத்துல பிழைப்புக்கு வழியில்லாம தற்கொலை செய்ய முயற்சித்த நேரத்துல எனக்கு வேலை கொடுத்து, உயிரைக் காப்பாற்றினவர் இந்த ஓட்டல் முதலாளி. நீங்க தர்ற வசதிக்காக உங்களோட வந்துட்டா அவருக்கு நான் துரோகம் செய்தவனாவும் நன்றி கெட்டவனாவும் ஆகிடுவேன். உங்க அழைப்புக்கு நன்றி!’’
   ‘இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு எஜமான விசுவாசமா?’ - எண்ணி வியந்தபடியே கிளம்பினான் சுந்தரம்.
   kungumam.co.
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை  பொண்டாட்டிதாசன்
    
   ‘ஏய், ரமா! பேங்க்ல நம்ம ஜாயின்ட் அக்கவுன்ட்ல இருந்து என்னைக் கேக்காம பத்தாயிரம் பணம் எடுத்திருக்கே... என்ன நீயும் சம்பாதிக்கிறேங்கற திமிரா?’’ - கோபம் கொப்பளிக்கக் கேட்டான் மாதவன்.‘‘ஆமா, எடுத்தேன். அதுக்கு எதுக்கு கேக்கணும்? தாலியைக் கட்டிட்டா நான் உங்க அடிமையா? ஈக்வல்-ஈக்வல் பார்ட்னர்!’’ - வெடுக்கென்று பதிலளித்தாள் ரமா.

   அவன் பேச, இவள் பேச, வாக்குவாதம் வளர்ந்துகொண்டே போனது.எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருந்த ரமாவின் மாமியார் செல்லம்மாள், ‘‘என்ன நீ! புருஷன்னு கொஞ்சம்கூட மரியாதையில்லாம சரிக்கு சரியா வாயாடிட்டு இருக்கே?’’ என்றாள் அதட்டலாக!
   இருவரையும் முறைத்துவிட்டு வேகமாய் உள்ளே போனாள் ரமா.

   அன்றிரவு படுக்கையறையில்.‘‘ரமா, நீ கோபமா இருப்பேனு புரியுது. ஆனா, காலைல நான் அப்படி சத்தம் போட்டதெல்லாம் வெறும் நாடகம்!’’ என்றான் மாதவன்.‘‘நாடகமா?’’‘‘ஆமா ரமா. என் தங்கச்சி வாசுகிய அவ புருஷன் கண்டபடி டார்ச்சர் பண்றான். அவ நரக வாழ்க்கை வாழறா. நாம அன்னியோன்யமா வாழறதைப் பார்த்தா, ‘நம்ம பொண்ணு அங்கே கஷ்டப்படுது.

   இங்கே மருமக சந்தோஷமாயிருக்கா. மகன் பொண்டாட்டி தாசனாயிருக்கான்’னு எங்கம்மா ஆதங்கப்படுவாங்கல்ல! அதான் நாடகமாடினேன். சாரி டார்லிங்!’’‘‘உங்க மனசைப் புரிஞ்சிக்காம நானும் உங்களைக் கன்னாபின்னானு பேசிட்டேன். நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க!’’
   படுக்கையறை விளக்கு அணைந்தது.
   kungumam.co
  • By நவீனன்
   அதிர்ஷ்டம்
    
   ‘‘புது காராம் புது கார். சனியன். இது வந்த நேரமே சரியில்லை. வாங்கி ஒரு வாரம்தான் ஆச்சு. இதை வாங்கின நேரம், உங்க தம்பி  இறந்துட்டார். நீங்க சீட்டு கட்டின பத்து லட்ச ரூபாய் பணத்தோட அந்தக் கம்பெனிக்காரன் ஓடிட்டான். முதல்ல இதை வித்துத்  தொலையுங்க!” - மனைவியின் பிடுங்கல் தாங்காமல் காரை அடி மாட்டு விலைக்கு விற்றுவிட்டு வந்தான் கணேசன்.

   ஒரு வாரம் போயிருக்கும். ஞாயிற்றுக்கிழமை திடீரென காலிங்பெல் அடிக்க, கதவைத் திறந்தான். காரை வாங்கிய மணிசர்மா நின்றிருந்தார்.  ‘காரைத் திருப்பிக் கொடுக்க வர்றாரா? இவர் வீட்டில் என்ன நடந்ததோ’ - மனதில் கிலி கண்டு நின்றான் கணேசன்.   ‘‘என்ன சார் அசந்து போய் நிற்கறீங்க? ரொம்ப அதிர்ஷ்டமான கார் சார் இது. இதை வாங்கிய மூணே நாள்ல என் மகனுக்கு திடீர்னு  பிரமோஷன் கிடைச்சது. எனக்கு வேற ஷேர் மார்க்கெட்ல எக்கச்சக்க லாபம். ஆனா, உங்க காரை ரொம்ப அடிமாட்டு விலைக்கு  வாங்கிட்டேன். எங்க வீட்டுக்கு வந்த மஹாலக்ஷ்மி! அதனால அதுக்குரிய நியாயமான விலையை வாங்கிக்கங்க!’’ என்று ஒரு கவரை  நீட்டினார் அவர். கணேசனும் அவன் மனைவியும் அசந்து போய் நின்றார்கள்!       
   kungumam.co.
  • By நவீனன்
   ஏமாற்றம்
    
   தன் காதலி மல்லிகாவின் அப்பாவுக்கு தன் நண்பனை விட்டே போன் போடச் சொன்னான் சீனு. ‘‘உங்க பொண்ணு ஒரு பையனோட  கேவலமா ஊர் சுத்துறா!’’ என்று சொல்லச் சொன்னவன், இவர்கள் வெளியிடங்களில் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் வாட்ஸ்அப்பில்  அனுப்பிவிட்டான்.   ‘‘எந்த அப்பனுக்கும் கோவம் வரும். நிச்சயமா வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிடுவார்!’’ - சீனு சொல்லிச் சிரித்தான். ‘‘டேய்,  மல்லிகாவைப் பிடிச்சுதானே காதலிச்சே? அப்புறம் ஏன்டா இப்படி கழட்டி விடறே?’’ - நண்பன் கேட்டான். ‘‘காதலிக்கப் பிடிச்சுதுடா.  கல்யாணம்னா அது பணக்காரப் பொண்ணா இருக்க வேண்டாமா? இந்த அயிரை மீனை ஆத்துலயே விட்டுருவோம். கண்டிப்பா ஒரு  விலாங்கு மீன் மாட்டும்!’’ என்றான் வில்லத்தனமாக.

   அன்று மாலை... சீனு தன் வீட்டுக்குள் நுழைய, மல்லிகாவும் அவள் பெற்றோரும் அங்கே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். அதிர்ச்சியில்  உறைந்து நின்றான் சீனு. ‘‘டேய் சீனு, எனக்கு ரொம்பவும் வேண்டிய நண்பனுடைய பெண்ணைத்தான் நீ விரும்பி இருக்கே. நாங்க யாரோ  என்னமோனு பயந்துட்டோம். பரவாயில்லை. உன் விருப்பப்படியே மல்லிகாவை உனக்குக் கட்டி வைக்கிறோம். சம்மதம்தானே?’’ - அப்பா  கேட்டார். விக்கித்துப் போனவனின் தலை அவனை அறியாமல் ஆடியது!
    
   kungumam.co
  • By நவீனன்
   ஏ.டி.எம்
    
   இருட்டு நேரம். பைபாஸ் ேராட்டின் ஒதுக்குப்புறத்திலிருந்தது அந்த ஏ.டி.எம். வாசலில் வாட்ச்மேன் உடையில் நின்றிருந்த ஆதி, நண்பன்  மூர்த்தி அங்கு வந்ததும் உற்சாகமானான்.   ‘‘சீக்கிரம் வேலையை ஆரம்பிச்சுடு. யாராவது வந்தா ஏ.டி.எம் ரிப்பேர்னு திருப்பி அனுப்பிடறேன்!’’ என்று பரபரத்தான். உள்ளே நுழைந்த  மூர்த்தி கர்சீப்பை முகத்தில் கட்டிக் கொண்டான். ரகசிய கேமராவிற்கு முதுகைக் காட்டியபடி வேலையை ஆரம்பித்தான். அடுத்த ஒரு மணி  நேரத்தில் விஷயம் தெரிந்து விசாரணைக்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் மதியழகன் குழம்பினார். ‘காலையில இருந்து வேற யாருமே இங்கே  வரல. சாட்சி இல்ல. ரகசிய கேமராவில் முகம் பதியலை. எப்படி திருட்டைக் கண்டுபிடிக்கலாம்!’ என்று யோசனையுடன் சுற்றி வந்தவரின்  கண்ணில் பட்டது அது. எடுத்துப்பார்த்தவரின் முகம் பிரகாசமானது.

   சற்று நேரத்தில் மூர்த்தியின் வீட்டுக் கதவைத் தட்டினார் மதியழகன். முதலில் அதிர்ச்சியுடன் பார்த்தவன், பின்னர் குற்றத்தை  ஒப்புக்கொண்டான். ‘‘எப்படி சார் கண்டுபிடிச்சிங்க?’’ என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவன் கேட்க, தன் பாக்கெட்டிலிருந்த சீட்டைக்  காட்டினார் மதியழகன். ‘‘சே... கர்சீப்பை எடுக்கும்போது கார் நம்பர் பதிஞ்ச டோல்கேட் ரசீது விழுந்ததை கவனிக்கலையே!’’ என்று  தலையைத் தொங்கப்போட்டான் மூர்த்தி.
   kungumam.co
  • By நவீனன்
   காதல்
   ‘‘உங்களை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டது எவ்வளவு தப்புன்னு இப்பதான் புரியுது!’’  - முகம் சிவக்க மாலா கத்தினாள். ‘‘இங்க மட்டும் என்னா வாழுதாம்..? அதேதான்! நீ என்னிக்கு என் வாழ்க்கைல வந்தியோ... அன்னில இருந்தே எனக்கு நரகம்தான்!’’ - பிரஷர் எகிற, குதித்தான் கணேசன்.

   ‘‘கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதீங்க! டிபன் சாப்பிட்டுட்டு போங்க...’’‘‘நீயாச்சு, உன் டிபனுமாச்சு!’’ - விருட்டென வெளியேறினான்.‘‘உங்களுக்கு அவ்வளவுன்னா... எனக்கு மட்டும் மானம், ரோஷம் இருக்காதா?’’ - சடாரென்று கிளம்பிப்போய் காருக்குள் ஏறினாள் மாலா. ஷூட்டிங் ஸ்பாட்டில்...

   ‘‘ஸ்டார்ட்... கேமரா... ரோல்!’’ ‘‘டார்லிங், உங்களைப் பார்த்த பிறகுதான் என் வாழ்க்கையே பிரகாசமாச்சு! இப்படியே என்னைக்குமே இருந்துடக் கூடாதா?’’ - இது ஹீரோயின்.

   ‘‘அன்பே, என்னோட பாதி நீதான். உன்னைக் காதலிக்க ஆரம்பிச்ச நாள்தான் பொன்னான நாள்!’’ - இது ஹீரோவின் டயலாக். ‘‘கட்... கட்... வெல்டன், ஒரே ஷாட்டில் டேக் ஓகே!’’ - டைரக்டர் கைகுலுக்கி வழியனுப்பினார்.

   ஹீரோ கணேசனும், ஹீரோயின் மாலாவும் முகத்தை திருப்பிக்கொண்டு தத்தம் கார்களில் பயணித்து வீட்டுக்குப் போனார்கள்... அந்த வீடு, காலையில் சண்டை போட்ட அதே வீடுதான்!
    
   kungumam.co
  • By நவீனன்
   நேரம்
    
   வீட்டில் எல்லோரும் சோனாவுக்கு ‘ஹேப்பி பர்த் டே’ சொல்லிவிட்டார்கள். காலேஜ் தோழிகளும் போனில் வாழ்த்தி விட்டார்கள். வாட்ஸ்அப் குரூப்களிலும், ஃபேஸ்புக்கிலும் ஏகப்பட்ட வாழ்த்துச் செய்திகள். ஆனால் அவளுடைய காதலன் விஷாலிடமிருந்து மட்டும் எந்த அழைப்பும் இல்லை.

   ‘‘பையன் நம்ம பர்த் டேவை மறந்துட்டானோ?’’ - சோனா கொதித்துப் போனாள். மணி 9, 10, 11, 12 என்று ஓடி, மாலை 5ம் ஆகிவிட்டது. இன்னும் விஷாலிடமிருந்து போனைக் காணோம்.சரியாக ஐந்தரைக்கு ‘விஷாலி’ என்ற ஒளிர்வுடன் செல் அலற, ‘படவா ராஸ்கல்’ என மனதில் சீறியபடி ‘நங்’ எனப் பச்சையை அழுத்தினாள்.

   ‘‘ஸ்வீட்டி, ஹேப்பி பர்த் டே டு யூ..!’’

   ‘‘உனக்கு இப்பத்தானாடா விடிஞ்சது..?’’ என்று சோனா எகிறினாள். ‘‘என்ன ஹனி, இப்பிடி எரிஞ்சு விழுறே? சரியான நேரத்துக்கு வாழ்த்தினாதானே அது வாழ்த்து, ‘உன் ஜில் கேர்ள் ஈவினிங் சரியா அஞ்சரை மணிக்குத்தான் பிறந்தாள்’னு நீ முன்னாடி என்கிட்ட சொல்லலை..? அதான் வெயிட் பண்ணி அஞ்சரைக்கு வாழ்த்தினேன்! சரி, காலிங் பெல் சத்தம் கேக்குதுல்ல... போய்க் கதவைத் திற! கூரியர் பையன் நான் அனுப்பின பர்த் டே கிஃப்ட்டைக் கொண்டு வந்திருப்பான்! சரியா அஞ்சரைக்குக் குடுக்கணும்னு அவனுக்குக் கை நிறைய டிப்ஸ் குடுத்திருக்கேன்!’’ சோனா குளிர்ந்து போனாள்!
   kungumam.co