Sign in to follow this  
நவீனன்

இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் பிரதமர் ரணில்

Recommended Posts

இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் பிரதமர் ரணில்

 

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளவுள்ளார்.

wickremesinghe-delhi-759.jpg

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயமானது தனிப்பட்ட விஜயமாக அமையவுள்ள நிலையில் மறுநாள் 26 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மதிய போசனத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்திய வெளியுறவுத்தறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மே மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் வெஷாக் பண்டிகை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19246

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் பிரதமர் ரணில்

இந்த முறை எந்த கோயிலுக்கு போறாராம்? 

எதாவது விஷ்ணு கோவிலுக்குத்தான்......கோவிந்தா கோவிந்தா...அவையள் லட்டு கொடுக்க இவையள் கவுண்கொண்ட கொடுக்க ...தீர்வு வந்திடும்

Share this post


Link to post
Share on other sites

தமிழினப் படுகொலையாளர்களாகிய ஹிந்திய அரசிற்கு, எல்லை தாண்டும் ஹிந்திய பயங்கரவாதிகளுக்கான  கூலியை நேரில் கொண்டுசென்று கொடுக்கப்போகிறார் போலுள்ளது!

Share this post


Link to post
Share on other sites

இந்­தியா செல்லும் பிர­தமர் சீனா­வுக்கும் விரை­கிறார்

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வரும் 25 ஆம் திகதி இந்­தி­யா­விற்கு விஜயம் செய்­ய­வுள்ளார். இந்­திய விஜ­யத்தை முடித்து விட்டு அடுத்த மாதம் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு அவர் சீனா செல்­ல­வுள்ளார்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி சர்­வ­தேச வெசாக் தினத்தை முன்­னிட்டு இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். இந்­திய பிர­த­மரின் வரு­கைக்கு முன்னர் அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பல தரப்­பட்ட பேச்­சு­ச­வார்த்­தை­களை முன்­னெ­டுக்கும் நோக்கில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தியா விஜயம் செய்­யத்­திட்­ட­மிட்­டுள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­தது. 

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஐக்­கிய நாடு­களின் சர்­வ­தேச வெசாக் தினம் கோலா­க­ல­மாக இலங்­கையில் கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டுகள் துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. வெசாக் வல­யத்தை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி திறந்து வைக்­க­வுள்ளார். இறுதி நாளன்று நேபாள ஜனா­தி­பதி வல­யத்தை திறந்து வைக்­க­வுள்ளார். 

இந்­நி­லையில் இந்­திய பிர­த­ம­ருக்கு உத்­தி­யோ­க­பூர்வ அழைப்­பினை விடுப்­ப­தற்­கா­கவும் பல்­வே­றுப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களில் கலந்து கொள்ளும் நோக்­கிலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வரும் 25 ஆம் திகதி இந்­தி­யா­விற்கு செல்­ல­வுள்ளார்.

இந்த விஜ­யத்தின் போது பெரும் சர்ச்­சைக்கு உள்­ளா­கி­யுள்ள திரு­கோ­ண­மலை எண்ணெய் குதம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சங்க பல மட்ட பேச்­சு­வார்த்­தை­களில் ஈடுப்­ப­ட­வுள்ளார். அத்­துடன் எட்கா வர்த்­தக ஒப்­பந்தம் தொடர்­பிலும் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெ­ற­வுள்­ளன.மேற்­கு­றித்த விட­ய­தா­னங்கள் தொடர்பில் இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் இணக்­கப்­பாடு ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொள்ளும் முக­மா­கவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வி­ஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார் என்­பதும் குறிப்­பி­ட­தக்­கது

இந்­நி­லையில் இந்­தி­யா­விற்­கான விஜ­யத்தை முடித்து விட்டு நாடு­தி­ரும்­பி­யதன் பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்த மாதம் சீனா­விற்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார்.

சீனா விஜ­யத்தின் போது சர்ச்­சைக்கு உள்­ளா­கி­யுள்ள அம்­பாந்­தோட்டை துறை­முகம் மற்றும் சீனாவின் தெற்கு கைத்­தொழில் பேட்டை முதலீட்டு வலயம் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.. அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இவ்விஜயத்தின் போது நடத்தப்படவுள்ளன. மேலும் பல ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-22#page-1

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்த இலங்கை ஆர்வமாக உள்ளது: விக்ரமசிங்கே

இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்த இலங்கை ஆர்வமாக இருப்பதாக பிரதமர் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

 
இந்தியாவுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்த இலங்கை ஆர்வமாக உள்ளது: விக்ரமசிங்கே
 
கொழும்பு:
 
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 5 நாள் சுற்றுப் பயணமாக வரும் 25-ம் தேதி இந்தியா வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேசுகிறார்.
 
இந்த சுற்றுப்பயணம் தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கண்டியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, “இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்திய பயணத்தின்போது திரிகாணமலை மாவட்ட வளர்ச்சி தொடர்பாக பேசப்படும். திரிகோணமலையில் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது ஜப்பானுடன் இணைந்த ஒரு கூட்டு முயற்சியாகும்” என்றார்.
201704222038385707_langa._L_styvpf.gif
 
மேலும், இந்தியா-இலங்கை இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் இழுபறியில் உள்ளது. இதுபற்றியும் இந்த சுற்றுப்பயணத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ரணில் விக்ரமசிங்கே இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/22203837/1081399/Lanka-keen-to-boost-economic-ties-with-India-Wickremesinghe.vpf

Share this post


Link to post
Share on other sites

இங்கதான் நிலைமை உங்களுக்கு சாதகமா இருக்கே! யாரும் எதிர்க்க இல்ல!!  ஒருக்கா வந்து போறது ..!  tw_dizzy:

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இங்கதான் நிலைமை உங்களுக்கு சாதகமா இருக்கே! யாரும் எதிர்க்க இல்ல!!  ஒருக்கா வந்து போறது ..!  tw_dizzy:

இந்தியாவின் நீண்டநாள் கனவு.....40 வருடங்களுக்கு மேல்.......

 

7 hours ago, நவீனன் said:

-இலங்கை இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் இழுபறியில் உள்ளது

 ஒரே நாணயம்,விசா இன்றி வர்த்தகர்கள் வந்து போதல்.......ராமர் காலத்து கனவு

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, putthan said:

இந்தியாவின் நீண்டநாள் கனவு.....40 வருடங்களுக்கு மேல்.......

ஒரே நாணயம்,விசா இன்றி வர்த்தகர்கள் வந்து போதல்.......ராமர் காலத்து கனவு

வாவ்....அப்ப நான் விசா இல்லாமல் இந்தியாவுக்கு போகலாம்...வரலாம்.........:cool:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

வாவ்....அப்ப நான் விசா இல்லாமல் இந்தியாவுக்கு போகலாம்...வரலாம்.........:cool:

ஜெர்மன்காரர்(தோல் கறுப்பு என்றாலும்) விசா எடுக்க வேணும் ஒன்லி ஃபொர் இந்தியன் & சிறிலங்கன்ஸ்:10_wink:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this