Sign in to follow this  
நவீனன்

யாழ். பண்ணையிலுள்ள 2 முகாம்களை நகர்த்த இராணுவம் தீர்மானம்

Recommended Posts

யாழ். பண்ணையிலுள்ள 2 முகாம்களை நகர்த்த இராணுவம் தீர்மானம்
 
 
யாழ். பண்ணையிலுள்ள 2 முகாம்களை நகர்த்த இராணுவம் தீர்மானம்
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள 2 இராணுவ முகாம்களை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக அந்த இடங்களிலிருந்து இராணுவம் நகர்த்தவுள்ளதாக அறியமுடிகிறது.
 
போர்க் காலத்தில் யாழ்ப்பாண மாநகரில் பல்வேறு இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. போரின் பின்னர் படிப்படியாக இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன.எனினும் சில முகாம்கள் இன்றுவரை அகற்றப்படாத நிலையில் காணப்படுகின்றன.
 
2 இராணுவ முகாங்களும் வேறு இடத்துக்கு நகர்த்தப்படவுள்ளன.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியும் அவற்றில் அடங்குகின்றது. அதனை சிறுவர் வைத்தியசாலையை அமைக்க மீளளிக்குமாறு கோரப்பட்டிருந்தது.
 
யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இறுதியாக இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கடற்கரையை அண்டிய பகுதிகளில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் முகாம்களை அமைந்துள்ளமையால் தங்களின் வலைகளை உலர விடமுடியாத நிலமை காணப்படுகின்றது என்று கடற்தொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

http://www.onlineuthayan.com/news/25710

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this