Jump to content

'ஒ.பி.எஸ் இடத்தில் இ.பி.எஸ்'- பவர்சென்டரை மாற்றும் டெல்லி லாபி!


Recommended Posts

'ஒ.பி.எஸ் இடத்தில் இ.பி.எஸ்'- பவர்சென்டரை மாற்றும் டெல்லி லாபி!

 
 

Eda_400_02197.jpg

“கோழி குருடாக இருந்தால் என்ன, குழம்பு ருசியாக இருக்குதானு பாக்கணும்” என்ற காமெடி வரிகள் போல தான் அ.தி.மு.கவின் நிலையும் இப்போது உள்ளது. பன்னீர் இருந்தால் என்ன?, பழனிசாமி இருந்தால் என்ன? நம் கண் அசைவுக்கு சரியான நபராக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு  மத்திய அரசு வந்துவிட்டது  தான் அ.தி.மு.க இணைப்பு தள்ளி போவதற்கு காரணம் என்கிறார்கள். 

தமிழக அரசியலில் காலுான்றுவதற்கு  இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பில்லை என்ற முடிவில் பி.ஜே.பி மேலிடம் உறுதியாக உள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்ததையே ஆரம்பித்தில் பி.ஜே.பி விரும்பவில்லை. ஆனால், அது உட்கட்சி விவகாரம் என்பதால் மூக்கை நுழைக்க முடியாமல் போனது. கட்சியில் இருந்து ஆட்சிக்கு சசிகலா தாவ முனைந்த போது, இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தது மத்திய அரசு. தமிழகத்தில் தங்களுக்கு நம்பிக்கையான சில நபர்கள் மூலம் சசிகலா முதல்வராக வருவதற்கு முட்டுக்கட்டை போடும் அஜெண்டாவை கையில் கொடுத்தது. அவர்கள் மூலம்தான் சசிகலாவின் நடவடிக்கையால் பன்னீர் மனம் நொந்து போய் உள்ளார் என்ற தகவல் டெல்லிக்கு சென்றது. அதன் பிறகு, மத்திய அரசு ஆடுபுலி ஆட்டத்தை வேகமாக ஆடி சசிகலாவின் முதல்வர் கனவுக்கு முடிவுரை எழுதியது. 

“விசுவாசத்துக்கு பெயர் பெற்றவர் பன்னீர்” என்ற டெல்லிக்கும் சொல்லபட்டதால் பன்னீரை பவர் சென்டராக மாற்ற பி.ஜே.பி முடிவு செய்தது. பன்னீரை தலைமை பதவிக்கு கொண்டுவந்தால் தமிழகத்தில் நாம் நினைத்தை செய்ய முடியும் என்று கணக்கு போட்டது பி.ஜே.பி. இதற்கு இடைஞ்சலாக இருப்பது சசிகலா குடும்பம் என்பதை யூகித்து, முதலில் அந்த குடும்பத்தினரை  கட்சியை விட்டு அப்புறப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாகியது. சசிகலாவுக்கு சிறை, தினகரனுக்கு பெரா என  அடுத்தடுத்து சிக்கல்களை ஏற்படுத்தினார்கள். தினகரனுக்கு நெருக்கமாக இருந்த விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தி, இனி இந்த நிலை உங்களுக்கு வரலாம் என்று அமைச்சர்களுக்கு அச்சுறத்தல் கொடுத்தார்கள். மத்திய அரசின் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட அமைச்சர்கள் தினகரனை ஒதுக்கிவைக்கின்றோம் என்று ஒரு வழியாக வழிக்கு வந்தார்கள். இதுவரை மத்திய அரசு கணக்குபடியே எல்லாம் சென்று கொண்டிருந்தது. ஆனால், அதன்பிறகு தான் பாதை மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Pan_2_600_02219.jpg

தினகரனை கழற்றிவிட்டதில் மத்திய அரசின் பங்கு எந்த அளவோ, அதே அளவு சசிகலா குடும்பத்திலும் தினகரனுக்கு எதிராக நடந்த உள்குத்து வேலைகளும் காரணம். ஆனால், சசிகலா குடும்பமே கட்சியில் இருக்க வேண்டாம் என்று கொங்கு மண்டல அமைச்சர்கள் முடிவு செய்ததின் பின்னணில் வேறு கதைகளும் உள்ளது. தமிழகத்தின் முதல்வராக கௌண்டர் சமூகத்தைச் சேர்ந்த பழனிசாமி உள்ளார். முதல் முறையாக இந்த சமூகத்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டு அணிகளும் இணைந்துவிட்டால் பன்னீர் வசம் முதல்வர் பதவிபோய்விடும் என்று  கவலை அந்த சமூகத்தின் முக்கிய பிரமுகர்களிடம் ஏற்பட்டுள்ளது.“பன்னீரும் சசிகலாவை எதிர்கிறார், நாமும் சசிகலாவை வேண்டாம் என்று தான் சொல்கிறோம், மத்திய அரசும் சசிகலா குடும்பம் வேண்டாம் என்தற்காக தான் நெருக்கடி கொடுக்கிறது. மூன்று தரப்புக்கும் அஜெண்டா ஒன்று தான் , அந்த அஜெண்டாவும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இனியும் ஏன் பதவியை நாம் விட்டுத் தரவேண்டும்” என்று அவர்கள்  ஆலோசனை செய்துள்ளார்கள்.

“மத்தியஅரசுக்கு பன்னீர் மட்டும் தான் விசுவாசம் காட்டுவாரா, நாமும் விசுவாசத்தைக் காட்டலாம்” என்று புது ரூட் போட்டுள்ளார்கள். இந்த விசுவாச ஒப்பந்தத்தை மோடியிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்று யோசித்த போது தான் இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சதாசிவம் சீனில் வந்துள்ளார். பி.ஜே.பி மேல்மட்ட தலைவர்களோடு நல்ல உறவில் சதாசிவம் இருப்பதால்  அவரிடம் இது குறித்து பேசபட்டதாக கூறப்படுகிறது. அவரும் டெல்லிக்கு தொடர்பு கொண்டு, “பழனிசாமி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார். பன்னீர் தரப்பினால் எதை நீங்கள் செய்ய நினைக்கின்றீர்களோ, அதை பழனிசாமியே செய்து கொடுப்பார். சசிகலா குடும்பத்தை தள்ளிவைப்பதில் எந்த மாற்றுகருத்தும் இருக்காது” என்று பேசியுள்ளார்.  பி.ஜே.பி தரப்பில் இந்த டீலிங்குக்கு ஒத்துவந்துள்ளாதாக கூறப்படுகிறது. 

தமிழகத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியதன் பின்னணி இது தான் என்கிறார்கள். மத்திய அரசு  சிவப்பு விளக்குகளை காரில் பயன்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டதும், முதல் ஆளாக தனது காரில் இருந்த சைரனை தானே கழற்றினார் பழனிசாமி. இதன் பின்னணியே உங்கள் கட்டளையை உடனே செய்வேன் என்பதை மத்திய அரசுக்கு சொல்லாமல் சொல்வது தான் என்கிறார்கள் கொங்கு மண்டலத்தினர். டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல் வந்த பிறகு தான் பன்னீர் தரப்பிடம் கெடுபிடி காட்ட துவங்கியுள்ளார்கள் அமைச்சர்கள். ஜெயக்குமார் செவ்வாய் கிழமை இரவு காட்டிய பவ்வியம், வியாழன் அன்று இல்லாமல் போனதற்கு காரணம் இதன் பின்னணியில் தான் என்கிறார்கள். இந்த தகவல்கள் பன்னீர் அணிக்கு லேட்டாக தான் கிடைத்துள்ளது. அந்த கடுப்பு தான் முனுசாமியின் பேட்டியில் எதிரொலித்தது என்கிறார்கள்.

இரண்டுஅணிகள் இணைந்தாலும் முதல்வர் பதவியை பன்னீர் கேட்கக் கூடாது என்பது தான் கொங்கு மண்டலத்தின் முக்கிய பிரமுகர்கள் வைத்திருக்கும் மறைமுக டிமாண்ட். இதை பன்னீர் தரப்பினர் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான். இதனால் இரண்டு அணிகளின் இணைப்பும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், இதை பற்றி எல்லாம் பி.ஜே.பி தரப்பு அலட்டிக்கொள்ளவில்லை. ஆட்டுவிக்க நாங்கள் தயார், ஆடுவதற்கு யார் தயார் என்ற நிலையில் தான் பி.ஜே.பி உள்ளது. அதனால் பன்னீருக்கு பதிலாக பழனிசாமி வருவதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம்.

பன்னீர்  இடத்தில் பழனிசாமியை வைத்து புது ரூட்டில்  பயணம் செய்ய தயாராகிவிட்டது பி.ஜே.பி. 

http://www.vikatan.com/news/tamilnadu/87093-edappadi-palanisami-in-place-of-opanneerselvam--delhi-lobby-changing-the-power-center.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.