Jump to content

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கையில் பத்து நாட்களே நிரம்பிய பச்சைக் குழந்தை. மனம் நிரம்ப பயம். கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கம். வைத்தியசாலையிலிருந்து பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டு முற்றத்தைக்கூட மிதிக்க முடியாமல் விதி விரட்டி அடித்துக் கொண்டிருந்தது. ஓடி ஓடி வேலணை அராலி யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் தாண்டிக்குளம் என்று நாம் அனுபவித்த வேதனை நிரம்பிய அந்த நாட்களின் ஆரம்பமே எனது கடைசி மகளின் ஆரம்ப வாழ்க்கை.
மழலைப் பருவத்திலேயே விதிவசத்தால் பெற்றவர்களைப் பிரிந்து இரண்டு வருடங்கள் என்னைப் பெற்றவர்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. காலம் கைகூடி கனடாவில் குடியேறி தனது ஆரம்ப பாடசாலை வாழ்க்கையை இங்கு ஆரம்பித்தார். புதிதாகக் குடியேறிய நாட்டில் ஆரம்ப காலம் எல்லோரையும்போல எமக்கும் பல சவால்கள் நிறைந்ததாகத்தான் இருந்தது.
அந்த நிலையிலும் படிப்பில் மட்டுமல்ல விளையாட்டுத் துறையிலும் பாடசாலையில் பல விருதுகளைப் பெற்று தன் திறமையை வெளிப்படுத்தினார். 12ம் வகுப்பில் ஒன்ராறியோ புலமைப்பரிசிலும் பாடசாலையில் அதி விசேட புள்ளிகளைப் பெற்ற மாணவியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
யோர்க் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் படித்து முடித்தபின் வின்சர் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்லூரியிலும் அமெரிக்க சட்டக்கல்லூரியிலும் ஒரே நேரத்தில் மூன்றாண்டுகள் கற்று இவ் வருடம் மே மாதத்தில் அமெரிக்காவிலும் யூன் மாதத்தில் கனடாவிலும் பட்டம் பெற்று சட்டத்தரணியாக வெளிவர உள்ளார்.
பசி வந்திட பத்தும் பறக்கும் என்பர் ஆனால் என் மகளுக்கு படிக்க தொடங்கினால் பசியே மறக்கும். நான் படி படி என்று சொல்லும்படி வைக்காமல் படித்தது போதும் நிற்பாட்டு என்று சொல்லும்படி செய்வார். படிக்கும் பொழுது அவருக்கு முன்னால் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். அதை நான் பலமுறை கண்டித்திருக்கிறேன். அதற்கு அவரது பதில் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தினால் தன்னால் படிக்க முடியாது என்பதுதான்.
சிறுவயதிலிருந்தே எனக்கு எவ்வித பிரச்சனையும் தராமல் எளிமையிலும் இனிமையாக வாழ்ந்த என் அன்பு மகள் தன் பதினைந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தாலும் மனம் தளராமல் இழப்பைக் கண்டு துவண்டு விடாமல் துணிவுடன் செயல்பட எனக்கு தூண்டு கோலாக இருந்தவர்கள் என் பிள்ளைகளும் என் உடன் பிறந்தவர்களது குடும்பங்களும். உறவுகளும் நட்புக்களும் கூட தம் அன்பாலும் ஆதரவாலும் எம்மை வழிநடத்தினர்.
என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்வான நாள் 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகளைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற குறளை  எனக்கு சொந்தமாக்கிய இந்த நாள்.
தனது கனவு மெய்ப்பட்டு கருத்தினில் கொண்ட கொள்கையுடன் செயற்பட்டு சட்டத்தரணியாக பட்டம் பெறவுள்ள என் அருமை மகள் என் குடும்பத்திற்கு மட்டுமல்ல கனடா நாட்டிற்கும் எம் பிறந்த மண்ணிற்கும் எம் ஊருக்கும் சமூகத்திற்கும் சிறப்புற செயலாற்றி வளமோடு நலமோடு வாழ இறைஆசீர் நிறைவாகப் பெற வேண்டி வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் வாழ்த்துகின்றோம் உங்கள் மகளோடு உங்களையும் ......! சீரும் சிறப்பும் பெற்று நீடுழி வாழ்வீர்களாக.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavallur Kanmani said:

என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்வான நாள் 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகளைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற குறளை  எனக்கு சொந்தமாக்கிய இந்த நாள்.
தனது கனவு மெய்ப்பட்டு கருத்தினில் கொண்ட கொள்கையுடன் செயற்பட்டு சட்டத்தரணியாக பட்டம் பெறவுள்ள என் அருமை மகள் என் குடும்பத்திற்கு மட்டுமல்ல கனடா நாட்டிற்கும் எம் பிறந்த மண்ணிற்கும் எம் ஊருக்கும் சமூகத்திற்கும் சிறப்புற செயலாற்றி வளமோடு நலமோடு வாழ இறைஆசீர் நிறைவாகப் பெற வேண்டி வாழ்த்துகின்றேன்.

பிறர் சந்தோசமாக இருந்தால் நானும் என்னையறியாமலே சந்தோசப்படுவது எனது சுய குணம்.
வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி பிள்ளைகளின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பெற்றோர்கள் அடையும் சந்தோசம் எல்லையே இல்லாதது.அதிலும் படிப்பு முடிந்து பட்டம் பெற்று தொழில் தொடங்கும் நேரம் வார்த்தைகளில் வடிக்க முடியாது.

இவ்வளவு காலமும் படிப்பு பட்டம் வேலை பற்றியே சிந்தித்து கொண்டிருந்து நீங்கள் இனி திருமணத்தைப் பற்றி சிந்திக்க தொடங்குவீர்கள்.

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 கனடா நாட்டிற்கும்  பிறந்த மண்ணிற்கும் சமூகத்திற்கும் சிறப்புற செயலாற்றி

வளமோடு நலமோடு வாழ இறைஆசீர் நிறைவாகப் பெற வேண்டி நானும் வாழ்த்துகின்றேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வாழ்த்துக்கள் இன்னும் வெற்றி பெற்று  வாழ்ந்திட 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணியாக வரவுள்ள கண்மணி அக்காவின் புதல்விக்கும், அவரின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட கண்மணி அக்காவுக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மகிழ்வில் பங்குகொண்டு என் மகளை வாழ்த்திய அன்புறவுகள் சுவி குமாரசாமி புங்கையூரன் நந்தன் ஈழப்பிரியன் நிலாமதி முனிவர்ஜீ கிருபன் நுணாவிலான் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kavallur Kanmani said:

சிறுவயதிலிருந்தே எனக்கு எவ்வித பிரச்சனையும் தராமல் எளிமையிலும் இனிமையாக வாழ்ந்த என் அன்பு மகள் தன் பதினைந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தாலும் மனம் தளராமல் இழப்பைக் கண்டு துவண்டு விடாமல் துணிவுடன் செயல்பட எனக்கு தூண்டு கோலாக இருந்தவர்கள் என் பிள்ளைகளும் என் உடன் பிறந்தவர்களது குடும்பங்களும். உறவுகளும் நட்புக்களும் கூட தம் அன்பாலும் ஆதரவாலும் எம்மை வழிநடத்தினர்.
என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்வான நாள் 'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகளைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற குறளை  எனக்கு சொந்தமாக்கிய இந்த நாள்.

Bildergebnis für great job gif

சில பிள்ளைகள்.... தனது வகுப்பில் படிக்கும் சக மாணவர்களை பார்த்து,
விலை உயர்ந்த  "அடிடாஸ்", "பூமா"... போன்ற உடைகள், சப்பாத்து போன்றவற்றையும்.... 
வருடத்துக்கு வருடம்,  புதிதாக அறிமுகமாகிக் கொண்டு இருக்கும்...  "அப்பிள்", "சம்சுங்"  போன்ற கைத்தொலைபேசிகளையும்...  வாங்கித் தரச் சொல்லி, பெற்றோரை அரியண்டப் படுத்துவார்கள்.

கண்மணி அக்கா.... உங்கள் மகள் அதனையெல்லாம்,  கருத்தில் எடுக்காது... தனது குறிக்கோள் எதுவென்று,
இளம் பராயத்திலேயே தீர்மானித்து, இன்று.... வெற்றிப் படியை தொட்டு இருக்கின்றார்.
உங்கள் மகளுக்கும், உங்களுக்கும்... எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது கனவு மெய்ப்பட்டு கருத்தினில் கொண்ட கொள்கையுடன் செயற்பட்டு சட்டத்தரணியாக பட்டம் பெறவுள்ள எங்கள் அருமை மகள்

தன் குடும்பத்திற்கு மட்டுமல்ல கனடா நாட்டிற்கும் எம் பிறந்த மண்ணிற்கும் எம் ஊருக்கும் சமூகத்திற்கும் சிறப்புற செயலாற்றி வளமோடு நலமோடு வாழ இறைஆசீர் நிறைவாகப் பெற வேண்டி வாழ்த்துகின்றேன்

ஆனந்தக்கண்ணீர் பெருகியது அக்கா...

நிழல் தந்த ஆண்டவரை  பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்திய வாசி தமிழ்சிறி விசுகு அனைவருக்கும்நன்றிகள். உண்மையிலேயே ஆனந்தக்கண்ணீர் வர வைத்த என் மகளையிட்டு நான் மிகுந்த சந்தோசப்படுகின்றேன். நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகிழ்ச்சியில் மனம் நிறைந்து பச்சைப்புள்ளியிட்டு வாழ்த்திய விசுகு நந்தன் குமாரசாமி கலைஞன் தமிழினி சுவி நவீனன் கிருபன் சுபேஸ் மோகன் புங்கை வசந் தும்பளையான் முனிவர்ஜீ மீரா ஈழப்பிரியன் நுணாவிலான் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் Image result for image for congratulations

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழி

செல்ல மகள் மென்மேலும் உயர்ந்திட இறையருள் கூடட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தறையிலே பயின்று சாதனைபடைத்து மிளிர்வதோடு வாழும் நாட்டிற்கும்  தாயகத்துக்கும் தனது புலமையால் புகழ்சூட வாழ்த்துகிறேன். 

சட்டத்துறையிலே எமது இளையவர்கள் வருவதை அறியும்போதெல்லாம் எமது விடியலையும் எண்ணிக்கொள்வேன். ஏனென்றால் எம்மிடம் இன்று எதுவுமே இல்லை. ஆனால் எமது நம்பிக்கையே இதுபோன்ற புலமைசார் இளையோரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன் சகாரா நொச்சி உங்கள் அனைவரின் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள். எமது பிள்ளைகள்தான் எம் வருங்கால சொத்து. எதிர்காலம் எம் இளையவர்கள் கைகளில்தான். அவர்களை நாம் உருவாக்குவோம். நன்றிகள்

 

 

 

 

Link to comment
Share on other sites

நல்ல சந்தோசமான விடயம் அக்கா. உங்கள் மகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.