Jump to content

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ்


Recommended Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ்

 

ஐரோப்பிய சாம்பயின்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் இரண்டு லெக்குகள் முடிவில் பார்சிலோனாவை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது யுவான்டஸ்.

 
 
 
 
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ்
 
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதியின் 2-வது லெக் போட்டிகள் நேற்று நடைபெற்றது. ஒரு போட்டியில் பார்சிலோனா - யுவான்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் யுவான்டஸ் 3-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. 2-வது லெக் நேற்று பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 4-0 என யுவான்டசை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை பார்சிலோனாவிற்கு இருந்தது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.எஸ்.ஜி. அணிகெதிராக இதுபோன்றுதான் 4-0 என பின்தங்கிய நிலையில் இருந்து பார்சிலோனா, தனது சொந்த மைதானத்தில் 6-1 என பி.எஸ்.ஜி-யை வீழ்த்தியது.

இதுபோன்ற அதிசயம் நேற்றும் நடைபெறும் என பார்சிலோனா அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யுவான்டஸ் அணியின் அபாரமான ஆட்டத்தால் பார்சிலோனா அணியால் ஒரு கோல்கள் கூட அடிக்க முடியவில்லை. அதைபோல் ஒருகோலும் வாங்கவில்லை. இதனால் 2-வது லெக் ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

முதல் லெக்கில் யுவான்டஸ் 3-0 என வெற்றி பெற்றதால் இரண்டையும் சேர்த்து 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

201704201603360495_messi1-s._L_styvpf.gi

மற்றொரு ஆட்டத்தில் மொனாகோ 2-வது லெக்கில் டோர்ட்மன்ட் அணியை 3-1 என வீழ்த்தியது. முதல் லெக்கில் 3-2 என மொனாகோ வெற்றி பெற்றது. மொத்தத்தில் 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

201704201603360495_neymar-s._L_styvpf.gi

பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணியும், லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி அட்லெடிகோ மாட்ரிட் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

201704201603360495_pique-s._L_styvpf.gif

அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்ற அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/20160322/1080942/Juventus-beats-barcelona-and-entered-semi-final.vpf

Link to comment
Share on other sites

மெஸ்சி, சுவாரஸ், நெய்மர்... மும்மூர்த்திகளை அசைத்துப் பார்த்த யுவென்டஸ்! #MatchAnalysis #BarcelonaVsJuventus #Championsleague #VikatanExclusive

 
 

சரியான எதிரியிடம் திறமையை நிரூபிக்க முடியாமல் ஆட்டம் கண்டிருக்கிறது பார்சிலோனாவின் ஆட்டம். ‘மெஸ்சி, ரொனால்டோவை இத்தாலியில் வந்து விளையாடச் சொல்லுங்கள். அப்போது தெரிந்துவிடும் அவர்கள் எவ்வளவு கோல்கள் அடிக்கிறார்கள்... எங்கள் டிஃபன்ஸ் எவ்வளவு பலம் என்று...’ என்றார் இத்தாலியைச் சேர்ந்த முன்னாள் டிஃபண்டர் ஒருவர். அந்த வாய்க்குக் கொஞ்சம் இனிப்பு.

மெஸ்சி - சாம்பியன்ஸ் லீக்

சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனா - யுவென்டஸ் மோதல் என்றதுமே உற்சாகமானது கால்பந்து உலகம். மெஸ்சி, நெய்மர், சுவாரஸ் என அட்டாக்கிங்கில் பார்சிலோனா பக்கா எனில், ஜார்ஜோ கெலினி, லியாண்டோ போனுச்சி,  அலெக்ஸ் சாண்ட்ரோ, டேனி ஆல்வ்ஸ் என பின்களத்தில் யுவென்டஸ் ராக் என்பதே அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம். இரு கட்டங்களாக நடக்கும் காலிறுதியின் முதல் கட்டம் டியூரின் நகரில் உள்ள யுவென்டஸ் அணியின் ஹோம் கிரவுண்டில் நடந்தது. அதில் 3-0 என யுவென்டஸ் வெற்றி. தேங்க்ஸ் டூ டிபாலா. அவர், மெஸ்சி கண்முன், மெஸ்சி போலவே இடதுகாலில் இரண்டு கோல்கள் அடித்து ‘அடுத்த மெஸ்சி’ என ஐரோப்பிய கால்பந்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். பார்கா ரசிகர்களைப் பதற வைத்தவர்.

பார்சிலோனாவின் ஹோம் கிரவுண்ட் கேம்ப் நு மைதானத்தில் நேற்று Second leg நடந்தது. பார்சிலோனா அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் எனில், சொந்த மண்ணில் குறைந்தது நான்கு கோல்கள் அடிக்க வேண்டும். அதேநேரம் யுவென்டஸ் வீரர்களை கோல் அடிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த இடத்தில் ஒரு புள்ளி விவரம். இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனில், யுவென்டஸ் இதுவரை ஒன்பது போட்டிகளை டிரா செய்துள்ளது, ஒட்டுமொத்தமாக வாங்கியது இரண்டு கோல்கள் மட்டுமே.

மெஸ்சி, நெய்மர் - சாம்பியன்ஸ் லீக்

அப்பேற்பட்ட அணிக்கு எதிராக  90 நிமிடத்தில் நான்கு கோல்கள் அடிப்பது சாத்தியமா? சாத்தியம்தான் என நம்பினர் பார்கா ரசிகர்கள். காரணம். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் First leg-ல்  0-4 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த பார்சிலோனா, second leg-ல் ஆறு கோல்கள் அடித்து PSG கிளப் மட்டுமல்ல ஒட்டுமொத்த கால்பந்து உலகுக்கும் ஆச்சர்யம் அளித்தது. அதுபோன்றதொரு அதிசயம் மீண்டும் நிகழும் என எதிர்பார்த்தே கேம்ப் நு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அடியெடுத்து வைத்தனர் பார்கா ரசிகர்கள். அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வதில்லையே!

முழுக்க, முழுக்க தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டால் மட்டுமே பார்சிலோனா அரையிறுதியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும். Attack,  Attack, Attack... இதுதான் பார்சிலோனா மேனஜர் லூயிஸ் என்ரிகேவின் பிளான். அதனால்தான் அவர் போட்டி தொடங்கும் முன் ‘முதல் கோலை நாங்கள் அடித்து விட்டால், இரண்டாவது கோலை கேம்ப் நு மைதானமே (ரசிகர்களின் உற்சாகத்தில்...) அடித்து விடும். மூன்றாவது கோல் தன்னாலே வந்துவிடும்’ என நம்பிக்கை வார்த்தை சொன்னார். அவர் இந்த சீசனுடன் பார்சிலோனாவுக்கு குட்பை சொல்ல இருக்கிறார். இது அவருக்கு சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவுடன் கடைசிப் போட்டி. அதனால் அவர் அப்படி உணர்ச்சிவசப்பட்டார். ஆனால் அந்தப் போட்டி மறக்க முடியாத போட்டியாக அமைந்து விட்டது.

மெஸ்சி, சுவாரஸ்

அதிக கோல் தேவை எனும்போது அட்டாக்கிங்கில் ஈடுபட்டால் மட்டுமே வெற்றி சாத்தியம். ஆனால், டிஃபன்ஸ், டிஃபன்ஸ், டிஃபன்ஸ் என்ற தியரியுடன் பார்சிலோனாவுக்கு வரவில்லை யுவென்டஸ் பயிற்சியாளர் அலெக்ரி. யுவென்டஸ் வீரர்களும் முடிந்தவரை அட்டாக்கிங்கில் ஈடுபட்டனர். முடிந்தவரை என்ன... முதல்முறையாக Shoot on target வந்ததே யுவென்டஸ் சைடில் இருந்துதான். ஒன்பதாவது நிமிடத்திலேயே இலக்கை நோக்கி ஷாட் அடித்தார் யுவென்டஸ் ஸ்ட்ரைக்கர் ஹிகுவெய்ன். அதேசமயம் ‘இது எங்க ஏரியா’ என  டிஃபன்ஸிலும் யுவென்டஸ் மிரட்டியது. மிரட்டியது என்றால்... ‘அவர்கள் மலையாக நின்றார்கள்’ என பார்சிலோனா சென்டர் பேக் ஜெரார்டு பீக்கே(வே) ஒப்புக்கொள்ளும் அளவு மிரட்டலாக இருந்தது.

மெஸ்சி, சுவாரஸ், நெய்மர் என மும்மூர்த்திகளும், ரைட், லெஃப்ட், மிடில் என மூன்று முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தினர். ம்ஹும் அதில் எதுவும் கோலாகவில்லை. முதல் 15 நிமிடங்களுக்குள் மெஸ்சி கொடுத்த கிராஸை சரியாக மீட் செய்யத் தவறினார் ஜோர்டி ஆல்பா. அடுத்த சில நிமிடத்தில் பெனால்டி பாக்ஸுக்குள் மார்க் செய்யப்படாத இடத்தில் இருந்து, மெஸ்சி இடது காலில் அடித்த ஷாட் எங்கோ சென்றது. இருமுறை அவர் அடித்த செட் பீஸ் ஷாட்கள் கம்பிக்கு மேலே பறந்தன. நெய்மர்

சுவாரஸ் பைசைக்கிள் கிக் எல்லாம் முயற்சித்தார். நெய்மர் ஒவ்வொருமுறையும் பந்துடன் பாக்ஸில் நுழைந்தார். இனியஸ்டா என்னவெல்லாமோ மேஜிக் செய்தார். ரொபர்டோ தன் பங்குக்கு கோல் நோக்கி ஒரு ஷாட் அடித்தார். இவை எதுவும் கோலாகவில்லை. இவை எதுவும் கெலினி, போனுச்சியின் கால்களை மீறிச் செல்லவில்லை. இவை எதுவும் யுவென்டஸ் கோல் கீப்பர் புஃபான் கைகளை நெருங்கவில்லை. பார்சிலோனா அடித்த 18-ல் ஒன்று மட்டுமே இலக்கை நோக்கிய ஷாட். அதையும் புஃபான் தடுத்து விட்டார். மீதி ஐந்து டிஃபண்டர்களால் பிளாக் செய்யப்பட்டது. மற்றவை எல்லாம் இலக்கின்றி பறந்தன. 

யுவென்டஸ் டிஃபன்ஸ் ஒருபுறம் மலையாக, பார்சிலோனாவுக்கு மலைப்பாக இருந்தது எனில், டிபாலா, ஹிகுவெய்ன் உள்ளிட்ட ஸ்ட்ரைக்கர்கள் நான்கு ஷாட்களை இலக்கை நோக்கி அடித்திருந்தனர். ஆக, எல்லா வகையிலும் பார்சிலோனாவுக்கு குடைச்சல் கொடுத்தது யுவென்டஸ். முடிவில் மேட்ச் டிரா. ஆனால் இரு கட்ட காலிறுதி முடிவில் யுவென்டஸ் 3-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதோடு, 2015 சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் பார்சிலோனாவிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.

http://www.vikatan.com/news/sports/87040-juventus-defenders-too-solid-to-messi-neymar-suarez.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
    • இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார். https://thinakkural.lk/article/299654
    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.