Jump to content

சாம்பியன்ஸ் டிராபி செய்திகள்...


Recommended Posts

சாம்பியன்ஸ் டிராபிக்கு யுவராஜ், தோனி நிச்சயம். மற்றவர்கள்யார் ? #VikatanExclusive

சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்கேற்கவுள்ள  இந்திய வீரர்களை நாளை அறிவிக்கவுள்ளார்கள். மினி உலகக்கோப்பை என கொண்டாடப்படும் சாம்பியன்ஸ் டிராஃபியை  ஜெயிக்க இந்த முறை வலுவான போட்டி நிலவுகிறது. இங்கிலாந்தில் மேட்ச் நடக்கும் என்பதால் அங்கேயுள்ள சூழலுக்கு ஏற்ப விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பிசிசிஐ. 2013 சாம்பியன்ஸ் டிராஃபி இங்கிலாந்தில் தான் நடந்தது. அங்கே சொந்த மண்ணில் கெத்தாக ஆடிய இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தோனியின் தலைமையிலான இந்திய அணி. அதன் பின்னர் 2014ல் இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றது. டெஸ்ட் தொடரை படுமோசமாக ஆடி இழந்தாலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று கம்பீரமாக நாடு திரும்பியது  இந்திய அணி. 

சாம்பியன்ஸ் டிராஃபி

அதன் பின்னர் இப்போது தான் இங்கிலாந்து செல்கிறது இந்திய அணி. சாம்பியன்ஸ் டிராஃபி ஓவல், எட்ஜபாஸ்டன், கார்டிஃப் என மூன்று மைதானங்களில் நடைபெறுகிறன. இந்த மூன்று மைதானங்களுக்குமே பேட்டிங் ஆடுவதற்கு ஏற்றவையே. பகலிரவு போட்டிகள் என்பதால், பந்துகள் ஸ்விங் மற்றும் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா லீக் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளுடன் ஆடுவதால் அதற்கேற்றவாறு அணியை தேர்வு செய்வதும் அவசியம். 

ரஹானே மற்றும் தவான்

ஓபனிங்  :-

இங்கிலாந்து மண்ணில் தொடக்க வீரர்களாக களமிறங்குவபவர்கள் எப்போதுமே பெரிய சவாலை சந்திக்க நேரிடும். ஏனெனில் புது பந்து ஸ்விங் ஆகும் என்பதால், எளிதில் விக்கெட்டை விடும் வாய்ப்பு உண்டு. எனவே தரமான தொடக்க வீரர்கள் அணிக்கு அவசியம்.

ரோஹித், தவான் இருவரும் காயத்தில் இருந்து திரும்பியிருப்பதால் இருவரும் அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களே ஒப்பனராக களமிறங்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. எனினும், அஜிங்கிய ரகானே இங்கிலாந்து மண்ணில் நன்றாக ஆடக் கூடியவர் என்பதால் மாற்று தொடக்க வீரராக அவரையும் பிசிசிஐ சேர்க்கக்கூடும். ரோஹித் - தவான் அல்லது ரஹானே - தவான் இணை இன்னிங்ஸை தொடங்கும் என எதிர்பார்க்கலாம். 

விராட், தோனி, யுவராஜ்

நடுவரிசை :-

அணித் தலைவர் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்குவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கோலி இங்கிலாந்தில் குறைவான சராசரியை வைத்திருக்கிறார். எனவே அவரை முழுவதுமாக நம்புவது கடினம். எனினும் 2015க்கு பிறகு வேற லெவல் பேட்ஸ்மேனாக உருவெடுத்திருக்கிறார். அவரது ஷாட் தேர்வுகளில் துல்லியம் கூடியுள்ளது. எனவே இந்த முறை கோலி நன்றாகவே ஆட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

நான்காவது இடத்தில் யுவராஜ்சிங்  களமிறங்கக்கூடும். இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்துடன் நடந்த ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெளுத்துக் கட்டினார் யுவி. அந்த அனுபவம் மீண்டும் கை கொடுக்கும் என நம்பலாம். இங்கிலாந்து மண்ணில் மிதவேகப்பந்து நன்றாக எடுக்கும். அதே சமயம் யுவராஜ் மிதவேகப்பந்து பவுலர்களை பிரித்து மேய்வார் என்பதால் யுவராஜுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுப்பார் கோலி. ஒருவேளை அவர் தொடர்ச்சியாக சொதப்பினால், யுவியின் இடத்தில் ரஹானே ஆட வாய்ப்பிருக்கிறது. 

ஐந்தாவது இடத்தில் தோனி  களமிறங்குவார். பினிஷர் ரோலை முன்னைப் போல பல போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக செய்ய முடியவில்லை என்பதாலும், மைதானத்திற்கு வந்தவுடன் பெரிய ஷாட் ஆடும் டச் இல்லை என்பதாலும் தோனியே ஐந்தாவது இடத்தில் இறங்குவார்  "நான் நிறைய பந்துகளை சந்திக்க விரும்புகிறேன். களத்தில் நீண்ட நேரம் நிற்க விரும்புகிறேன். செட்டிலாகி ஆட விரும்புகிறேன் " - இது தோனியின் ஸ்டேட்மென்ட். 

ஆகவே நான்காவது இடத்தில் தோனி களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா

கீழ் வரிசை மற்றும் பினிஷர் ரோல் : -

கேதர் ஜாதவ் அசத்தல் பார்மில் இருக்கிறார் எனவே அவரை நிச்சயம் பிசிசிஐ மிஸ் செய்யாது. சுழற்பந்திலும்  சில நேரங்களில் கை கொடுப்பார் என்பதால் இந்த தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டே கேதர் ஜாதவ் தான். ஆறாவது இடத்தில் அவர் தான் களமிறங்குவார். போட்டியின் சூழ்நிலை கருதி சில வேளைகளில் தோனிக்கு முன்பு களமிறங்கவும் வாய்ப்பு இருக்கிறது. தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் தேவை என்றாலும், அந்த இடத்தை கேதர் நிரப்புவார் என்பதால் அவரது இடம் உறுதியாகிவிடுகிறது. 

ஹர்திக் பாண்டியா, ஏழாவது நிலையில் இறங்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் அணியில் இருந்தால் ஆழமான பேட்டிங் வரிசை கிடைக்கும் என கோலி நம்பக்கூடும். ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் பினிஷர் ரோலும் அவருக்குத் தரப்படலாம். எனினும், ஐந்து தரமான பவுலர்கள் அணியில் இருக்க வேண்டும் என்பது கோலியின் பாலிசி. 7 +4 க்கு பதிலாக 6 +5 பிளானை தேர்ந்தெடுத்தால் ஹர்திக் பாண்டியா நீக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆயினும், 15 பேர் கொண்ட அணியில் இவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்வின் மற்றும் ஜடேஜா

சுழற்பந்து :- 

எந்த பேச்சுக்கும் இடம் கிடையாது. ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவரும் சுழற்பந்து டிப்பார்ட்மென்டை கவனித்துக் கொள்வார்கள். அஸ்வின் இங்கிலாந்தில்  ஒருநாள் போட்டிகளில் இதுவரை நன்றாகவே வீசியுள்ளார். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அவர் சிம்மசொப்பனம் என்பதால் அவர் களமிறங்குவது உறுதி.

ரவீந்திர ஜடேஜா அதிரடியாக பேட்டிங்கும் செய்யக்கூடியவர், மளமளவென விக்கெட்டுகளையும் அள்ளக்கூடியவர். ஆழமான பேட்டிங் வரிசைக்கும், எதிரணியின் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுப்பதற்கும் ஜடேஜா உதவுவார். 

புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ்

வேகப்பந்து : -

புவனேஷ்வர் குமார் இங்கிலாந்து மண்ணில் தவிர்க்கவே முடியாக ஸ்விங்கர். முகமது ஷமி இறுதி ஓவர்களில் விக்கெட் வேட்டை நடத்துபவர். உமேஷ் யாதவ் பெரிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்தும் திறன் படைத்தவர் எனவே இவர்கள் மூவரும் அணியில் இடம்பிடிக்கக்கூடும். பாண்டியா அணிக்குள் வந்தால், ஷமி அல்லது உமேஷ் வழிவிட வேண்டியதிருக்கும். 

இஷாந்த் ஷர்மா கடந்த  சாம்பியன்ஸ் டிராஃபியின் நாயகர்களில் ஒருவர். ஆடுகளங்களில் புற்கள் நிறைய இருந்து, பவுன்ஸ் வீச சாதகமாக இருந்தால், இஷாந்த் அணியில் இடம்பெறலாம். கடந்த சில ஒருநாள் போட்டிகளில் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் கூட இங்கிலாந்து ஆடுகளங்கள் என்பதை கருத்தில் கொண்டு 15 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. 

ஜஸ்பிட் பும்ரா இறுதி ஓவர்களில் நன்றாக வீசக்கூடியவர். யார்க்கர்களில் அசத்துவார் என்பதால் நிச்சயம் 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பார். ஷமிக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இவர் இடம் பிடிக்கவும் வாய்ப்பு  இருக்கிறது .

மனிஷ் பாண்டே நடுவரிசையில் நன்றாக ஆடுபவர். யுவராஜுக்கு மாற்றாக இவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ  நினைத்தால் இஷாந்த் ஷர்மா 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது.  

கணிப்பு :- 

உத்தேச பதினைந்து பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பவர்கள் :-

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர்ஜாதவ், ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிட் பும்ரா, (மனிஷ் பாண்டே/இஷாந்த் ஷர்மா). 

பிளெயிங் லெவனில் யார்? 

ரோஹித்ஷர்மா, ஷிகர் தவான், விராட்கோலி (கேப்டன்), யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி (கீப்பர்),கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், (முகமது ஷமி/ஜஸ்பிட் பும்ரா) . 

யார் யாருக்கு இடம் கிடைப்பது சந்தேகம்? 

http://www.vikatan.com/news/sports/88693-bcci-will-select-the-indian-team-for-champions-trophy-tomorrow.html

Link to comment
Share on other sites

  • Replies 236
  • Created
  • Last Reply

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணி சற்றுமுன்னர் அறிவிப்பு!

 

 

ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் சபை சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

26016.jpg

நிய­மிக்­கப்­பட்ட நிர்­வாகக் குழு சம்­பியன்ஸ் கிண்­ணத்­திற்­கான இந்­திய அணியை உட­ன­டி­யாக அறி­விக்க வேண்டும் என உயர் நீதிமன்றம்  கிரிக்கெட் சபை நிர்­வா­கி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டிருந்தது. 

இதன்படி சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணியை நிர்­வாகக் குழு  இன்று அறிவித்துள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்திய அணியின் முழு விபரம் : 

1. விராட் கோஹ்லி (அணித் தலைவர்)

2. சிக்கர் தவான்

3. ரோஹித் சர்மா

4. அஜின்கே ரஹானி

5. மகேந்திரசிங் டோனி

6. யுவராஜ் சிங்

7. கேதர் ஜாதவ்

8. ஹர்திக் பாண்ட்யா

9. ரவிச்சந்திரன் அஷ்வின்

10. ரவீந்ர ஜடேஜா

11. மொஹமட் சமி

12. உமேஷ் யாதவ்

13. புவனேஷ்வர் குமார்

14. மனிஷ் பாண்டே

15. ஜஸ்பிரிட் பும்ரா

http://www.virakesari.lk/article/19830

Link to comment
Share on other sites

சுரேஷ் ரெய்னா சாம்பியன்ஸ் டிராஃபிக்கு ஏன் தேர்வாகவில்லை?

 
 

சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது. இந்த அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, மனிஷ் பாண்டே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கம்பீர், ரிஷப் பன்ட்,  ராகுல் திரிபாதி, உத்தப்பா, ரெய்னா உள்ளிட்ட வீரர்களுக்கு அணியில் இடமளிக்கப்படவில்லை. சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல்லில் அதிரடியாக ஆடிவருகிறார். 12 போட்டிகளில் மூன்று அரைசதம் அடித்து 434 ரன்கள் குவித்திருக்கிறார். நேற்றைய நிலவரப்படி, ரெய்னா  தான் இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

ரெய்னா நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர், அருமையான  ஃபீல்டர், சுழற்பந்திலும் கலக்குவார் என்பதால் எந்த ஒரு கேப்டனும் இவரை அணியில் வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள். பின்னர் ஏன் ரெய்னா இன்று அறிவிக்கப்பட்ட அணி வீரர்கள் பட்டியலில் இல்லை? இதற்கு காரணம் உண்டு. 

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா கடைசியாக இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் ஆடியது எப்போது தெரியுமா? 25 அக்டோபர் 2015. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மும்பையில் நடந்த அந்த போட்டியில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் ஒருநாள் போட்டிக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் ரெய்னாவின் தொடர்ச்சியான மோசமான பெர்பார்மென்ஸ் தான். 

ரெய்னா கடைசியாக தென் ஆப்ரிக்க ஒருநாள் தொடரில் பங்கேற்றார். உள்ளூரில் நடந்த அந்த தொடரில், ஐந்து ஒருநாள் போட்டிகளில் அவர் குவித்த ரன்கள் 3, 0 , 0 , 52 , 12 . சென்னையில் நடந்த போட்டியில் அரைசதம் எடுத்ததை தவிர மற்ற போட்டிகளில் மகா சொதப்பல் ஆட்டம் ஆடினார். இந்திய மண்ணிலேயே தென் ஆப்ரிக்க பவுலர்களின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் வீழ்ந்தார். 

2010க்கு பிறகு இந்த ஏழு ஆண்டுகளில் ரெய்னா ஒருநாள் போட்டிகளில் அடித்த சதம் வெறும் இரண்டு தான். ஒரு சதம் இங்கிலாந்துக்கு எதிராகவும், இன்னொரு சதம்  ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் அடித்தார். ஆனால் இதே காலகட்டத்தில் அவர் 20 அரைசதங்கள் விளாசியிருப்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். 

ஒருநாள் போட்டிகளில் ஓப்பனிங் நன்றாக இருந்தாலும், பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் தடுமாறுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. ஐந்தாவது நிலையில் களமிறங்கும் வீரர் தொடர்ச்சியாக பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் முடங்கினால், அந்த பிரஷர் பினிஷர் ரோலில் இருப்பவர்களுக்கு பெரும் பாரமாக அமையும்.

2013, 2014 களில் நல்ல ஃபார்மில் இருந்த ரெய்னா 2015ல் சோடை போனார்.  கடைசியாக அவர் பேட் பிடித்த 16 இன்னிங்ஸ்களில் ஏழு இன்னிங்ஸ்களில் சிங்கிள் டிஜிட்டில் அவுட். இப்படியோரு மோசமான ஃபார்ம் இருப்பதைக் காரணம் காட்டியே ரெய்னாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கிடையில் 2016ல் ரெய்னாவுக்கு குழந்தை பிறக்க, மனைவியையும் குழந்தையும் கவனித்துக்  கொள்வதில் பிஸியானார். அதன் பின்னர் நியூசிலாந்து தொடருக்கு எடுக்கப்படுவதற்கு முன்பாக காயமடைய, அதைக் காரணம் காட்டி ரெய்னாவை தவிர்த்தது பிசிசிஐ. இங்கிலாந்து தொடருக்கு அவர் தயாராக இருந்தாலும், சோதனை முயற்சியாக யுவராஜ், கேதர் ஜாதவ் ஆகியோரை களமிறங்கியது பிசிசிஐ.

நீண்ட நாட்களாக நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிக் கொண்டிருந்ததால் தவித்த இந்திய அணிக்கு யுவராஜ், கேதர், தோனி இணை வலு சேர்த்தது. இதனால் இங்கிலாந்தை வீழ்த்தித் தொடரை வென்றது இந்திய அணி. இதனால் வெற்றி ஃபார்முலாவை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாததால் பிசிசிஐ ரெய்னாவை அணியில் சேர்க்கவில்லை. 

சுரேஷ் ரெய்னா

ரெய்னா இங்கிலாந்து மண்ணில் இதுவரை சுமாராகவே ஆடியிருக்கிறார். இந்திய அணி தென்ஆப்ரிக்காவை லீக் போட்டிகளில் எதிர்கொள்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ரெய்னாவின் செயல்பாடுகள் மிகவும் சுமார் ரகமே! 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டெஸ்ட் அணியில் ரெய்னாவும் இருந்தார். ( 0, 78, 12, 1 , 4 , 10, 0, 0 ) எட்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் எடுத்த ஸ்கோர் இவை தான். புள்ளிவிவரங்கள் ரெய்னாவுக்கு பாதகமாகவே இருப்பதுதான் நிதர்சனம். 

ஒருநாள் போட்டிகளில் சுமாரான ஆட்டம். அதே சமயம், உள்ளூர்  போட்டிகளில் விளையாடித் தன்னை நிரூபிக்கவும் தவறி விட்டார் ரெய்னா. பல்வேறு உள்ளூர் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பங்கேற்கவே இல்லை. இதனால் டி20 போட்டிகளுக்கு ரெய்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிசிசிஐ, ஒருநாள் போட்டிகளில் கழட்டிவிடுகிறது. ஏற்கெனவே உள்ளூர் போட்டிகளில் விளையாடி நிரூபித்த உத்தப்பா, கம்பீர், பன்ட், தினேஷ் கார்த்திக் போன்றவர்களுக்கே இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியொரு சூழ்நிலையில் ரெய்னாவுக்கு எப்படி வாய்ப்பு தருவது என்பது அணித் தேர்வாளர்கள் மனநிலை. தவிர யுவராஜ், தோனி, கேதர் மூவரும் மேட்ச்வின்னராக கடந்த தொடரில் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களை நீக்க வலுவான காரணமும் இல்லை என்பதால் ரெய்னா அணியில் சேர்க்கப்படவில்லை. 

ரெய்னா திறமையானவர் தான், புள்ளிவிவரங்கள் என்பதையெல்லாம் தாண்டி, அவர் பெஸ்ட் ஃபீல்டர் என்பதால் அவரால் சுமார் 20 ரன்கள் வரை இந்தியா சேமிக்க முடியும். எனினும் பேட்டிங்கில் அவர் மெருகேற வேண்டிய தேவை இருப்பதால் பிசிசிஐ எடுத்த இந்த முடிவை விமர்சிக்க முடியாது. ரெய்னா மீண்டும் உள்ளூர் போட்டிகளில் ஒருநாள் ஃபார்மெட்டில் சிறப்பாக ஆடி தன்னை நிரூபித்து மீண்டும் ஒருநாள் அணியில் கலக்குவார் என நம்புவோம்.

http://www.vikatan.com/news/sports/88754-the-reasons-behind-suresh-raina-excluded-for-champions-trophy.html

Link to comment
Share on other sites

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: 8 போட்டிக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் 8 போட்டிக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்துள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

 
 
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: 8 போட்டிக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன
 
ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் வருகிற 1-ந்தேதி முதல் ஜூன் 18-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகள் வேல்ஸில் உள்ள கார்டிஃப், இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மற்றும் ஓவல் ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெறுகிறது,.

இதில் 8 முன்னணி அணிகள் பங்கேற்கின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வங்காள தேசம் ஆகிய நான்கு அணிகள் ஒரு பிரிவிலும், இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பிடித்துள்ளனர்.

இதில் இந்தியா - பாகிஸ்தான், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டிகளுக்கு ரசிகர்களிடையே எதிர்ப்பு உள்ளது. இதனால் இந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கள் மளமளவென விற்றுத் தீர்ந்தன. இதுபோன்று 8 போட்டிகளுக்கான விக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுக்கள் உள்ள நிலையில், இங்கிலாந்து - வங்காள தேசம் மோதும் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனையாகியுள்ளன.

இந்த தொடருக்கான டிக்கெட்டுக்கள் விற்பனை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. 60 நாடுகளில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட விக்கெட் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 ஆயிரம் டிக்கெட்டுக்கள் விற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/11203740/1084808/ICC-Champions-Trophy-2017-Tickets-sold-out-for-eight.vpf

Link to comment
Share on other sites

மினி உலகக்கிண்ணத் தொடருக்காக இலங்கைக்கு கடும் பயிற்சி

 

இங்கிலாந்தில் எதிர்வரும் முதலாம் திகதி மினி உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அணிக்கு தொடர்ந்து நான்காவது நாளாக இன்று கடும் பயிற்சி வழங்கப்பட்டது.

கண்டியில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று கடுமையான களத்தடுப்புப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. இலங்கை அணி கடந்த சில ஆட்டங்களில் களத்தடுப்பில் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியமையால் பயிற்சி முகாமில் களத்தடுப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

 

18320588_2181464065218122_6875642994473932090_o.jpg

18451361_2181464038551458_5439426649813513847_o.jpg

18451551_2181464028551459_5993730239412149150_o.jpg

18402935_2181463635218165_8042688948041552403_n.jpg

18402894_2181463861884809_2302560507888077779_n.jpg

18403032_2181463948551467_5467986030747252756_n.jpg

http://uthayandaily.com/story/2660.html

Link to comment
Share on other sites

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: சாம்பியன் அணிக்கு 14 கோடி ரூபாய் பரிசுத்தொகை

 

இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 2.2 (ரூ. 141186100) மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

 
 
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: சாம்பியன் அணிக்கு 14 கோடி ரூபாய் பரிசுத்தொகை
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஐ.சி.சி. நடத்தும் 8 முன்னணி அணிகளுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.

இதில் சாம்பியின் பட்டம் வெல்லும் அணிக்கு 2.2 மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று ஐ.சி.சி. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து 2-வது இடத்தை பெறும் அணிக்கு 1.1 மில்லியன் டாலர் (சுமார் 7 கோடியே 5 லட்சம் ரூபாய்) பரிசுத் தொகையும், ஒட்டு மொத்தமாக 4.5 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.

2013-ம் ஆண்டில் வழங்கப்பட்ட தொகையை விட 5 லட்சம் டாலர் அதிகமாகும். அரையிறுதிக்கு முன்னேறும் மற்ற இரண்டு அணிகளுக்கு தலா 4 லட்சத்து 50 அயிரம் டாலரும், ஒவ்வொரு பிரிவில் 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு தலா 90 ஆயிரம் டாலரும், ஒவ்வொரு பிரிவில் கடைசி இடத்தை பிடிக்கும் அணிக்கு தலா 60 ஆயிரம் டாலரும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்றும அறிவித்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/14163125/1085219/ICC-announces-Champions-Trophy-prize-money-winners.vpf

Link to comment
Share on other sites

எம்மை எந்த அணியும் தொடரிலிருந்து வெளியேற்றலாம் : மாலிங்க

 
Lasith Malinga
singer-league-2017-728.jpg

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ICC), பலத்த எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்தில் ஜூன் 1 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்தில் பங்குகொள்ளும் 8  நாடுகளினதும்  வீரர்கள் குழாத்தினை  நேற்று (10) ஊர்ஜிதம் செய்துள்ளது.

 

இத்தொடரில் விளையாட ஒவ்வொரு நாடுகளிலும், ஓய்விலிருந்த சில வீரர்கள் அணிக்கு திரும்பி இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு எடுத்துக் காட்டாக, தனது ஆறாவது வெற்றிகரமான சம்பியன் கிண்ணத் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணியின் சொஹைப் மலிக் தேர்வு செய்யப்பட்டிருப்பதை குறிப்பிட முடியும்.

இதுவரையில், ஏனைய எட்டு வீரர்கள் மாத்திரமே சம்பியன் கிண்ணத் தொடரில் ஆறு தடவைகள் வரையில் பங்கேற்றுள்ளனர். ரிக்கி பொன்டிங் (அவுஸ்திரேலியா), ராஹூல் ட்ராவிட் (இந்தியா), டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து), மார்க் பவுச்சர் மற்றும் ஜெக் கல்லிஸ் (தென்னாபிரிக்கா), சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார (இலங்கை) ஆகியவர்களே அந்த வீரர்களாவர்.

சொஹைப் மலிக் போன்று, இந்திய அணியின் யுவராஜ் சிங்கும் கிட்டத்தட்ட 11 வருடங்களின் பின்னர் இத்தொடரில் பங்கேற்கின்றார். 2002ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் வரை யுவராஜ் தொடராக பங்கேற்றிருந்தார். அதற்கு பின்னைய வருடங்களில் இடம்பெற்ற தொடர்களில் விளையாடும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்திருக்கவில்லை.

அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஸ்டீவ் ஸ்மித்திற்கு நடைபெறப்போகும் தொடர் கன்னி சம்பியன்ஸ் கிண்ணமாக அமையவுள்ளது. ஸ்மித்தோடு சேர்த்து இறுதியாக 2013இல் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடியிருந்த கிளேன் மெக்ஸ்வெல், மிச்செல் ஸ்டார்க், மெத்திவ் வேட் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரும் அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இத்தொடர் மூலமாக மெக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் 2000 ஓட்டங்களினையும் (43 ஓட்டங்களே குறைவாக இருப்பதால்) வோர்னர் 4000 ஓட்டங்களினையும் (54 ஓட்டங்களே குறைவாக இருப்பதால்) எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு .சி.சி உலகக் கிண்ணத்தில் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த பங்களாதேஷ் அணியில், 2006ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இடம்பிடித்திருந்த மஷ்ரபி மொர்தஸா மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். இவர்கள் இருவரும் இம்முறைக்கான தொடரிலும் காணப்படுகின்றனர்.

பங்களாதேஷ் அணியினை மொர்தஸா தலைமை தாங்குவதோடு, சகலதுறை ஆட்டக்காரர்கள் வரிசையில் உலகில் முதல் இடத்தினைப் பெற்றிருக்கும் வீரர் என்கிற பெருமையோடு சகீப் அல் ஹஸன் இத்தொடரில் ஆடவிருக்கின்றார்.

இதுவரை இரண்டு தடவைகள் சம்பியன்ஸ் கிண்ணத்தினை நடாத்திய (2004 & 2013) நாடாக காணப்பட்டிருக்கும் இங்கிலாந்து அணியில், கடந்த சம்பியன் கிண்ணத் தொடரில் ஆடியிருந்த வீரர்களான ஜொன்னி பேயிர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், இயோன் மோர்கன், ஜோ ரூட் மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்த வருடத்திற்கான தொடரிலும் இடம் பிடித்திருக்கின்றனர்.

 

இத்தொடரின், நடப்புச் சம்பியனாக காணப்படும் இந்திய அணியில் கடந்த தொடரில் விளையாடியிருந்த எட்டு வீரர்கள் நீடிக்கின்றனர். சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விராட் கோலி .சி.சி நடாத்தும் பெரிய தொடர் ஒன்றில் இந்திய அணியினை முதற்தடவையாக தலைமை தாங்குகின்றார். இந்திய அணியானது ரவிச்சந்திரன் அஸ்வின், சிக்கர் தவான், மஹேந்திர சிங் டோனி, ரவிந்திர ஜடேஜா, புவ்னேஸ்வர் குமார், ரோஹித் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருடன் இத்தொடரில் களமிறங்கவுள்ளது.

இந்திய அணி போன்று கடந்த தொடரில் விளையாடியிருந்த ஏழு வீரர்களுடன் நியூசிலாந்து அணியானது இம்முறைக்கான கிண்ணத்திற்காக மோதவிருக்கின்றது. ட்ரென்ட் போல்ட், மார்ட்டின் குப்டில், மிச்செல் மெக்லெனகன், லூக் ரோன்ச்சி, ரோஸ் டெய்லர், டிம் செளத்தி மற்றும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஆகிய அந்த ஏழு வீரர்களும் அணிக்கு இம்முறையும் பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டெய்லர் மற்றும் குப்டில் ஆகியோர் 2009 ஆம் ஆண்டு சம்பியன் கிண்ண இறுதிப்போட்டியில் ஆடியிருந்த நியூசிலாந்து அணியில் காணப்பட்ட வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்ப்ராஸ் அஹமட் இவ்வருட சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் மூலம் முதல் தடவையாக இத்தொடரில் விளையாடுகின்றார். இவருடன் சேர்த்து பாகிஸ்தான் அணியானது மேலும் ஒன்பது புதிய வீரர்களுடன் கிண்ணத்தற்காக பலப் பரீட்சை நடாத்த உள்ளது. பாகிஸ்தான் குழாத்தில் காணப்படும் மொஹமட் ஹபீசுக்கு இது மூன்றாவது தொடராகும்.

அதேபோன்று 2013ஆம் ஆண்டின் தொடரில் ஆடியிருந்த ஜுனைட் கான், உமர் அக்மல் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் இத்தொடரிலும் தொடர்ந்து ஆடுவதோடு, 2009ஆம் ஆண்டின் தொடரில் பங்கேற்று இருந்த மொஹமட் அமீர் மீண்டும் சம்பியன்ஸ் கிண்ண தொடரொன்றில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றார்.

ஒரு நாள் தரவரிசையில் உலகில் முதல் இடத்திலுள்ள தென்னாபிரிக்க அணியானது கடந்த தொடரில், விளையாடியிருந்த ஏழு வீரர்களுடன் இம்முறைக்கான தொடரிலும் களம் காணவுள்ளது. அவ்வீரர்களில் ஏபி.டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்காவின் தலைவராக காணப்படுவதோடு, ஹஷிம் அம்லா, பர்ஹான் பெஹர்டீன், ஜே.பி டுமினி, டு ப்லெசிஸ், டேவிட் மில்லர் மற்றும் மோர்னே மோர்க்கல் ஆகியோர் அவ்வணிக்கு மேலதிக வலுவினை சேர்க்க காத்திருக்கின்றனர். வரும் தொடர் டி வில்லியர்சிற்கு நான்காவது சம்பியன்ஸ் கிண்ணம் என்பதோடு, டு ப்லெசிற்கு ஒரு நாள் போட்டிகளில் 4000 ஓட்டங்களினை (57 ஓட்டங்களே மேலும் தேவை என்பதால்) பூர்த்தி செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாகவும் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2013ஆம் ஆண்டு தொடரில் ஆடியிருந்த ஆறு வீரர்களான அணித்தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ், தினேஷ் சந்திமால், நுவான் குலசேகர, லசித் மாலிங்க, குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஆகியோருடன் இலங்கை அணியானது இவ்வருட சம்பியன்ஸ் கிண்ணத்தில் களமிறங்கி போராடவுள்ளது

நான்காவது தடவையாக சம்பியன் கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கையின்வேகப்பந்து வீச்சுப் புயலான லசித் மாலிங்கவிற்கு, ஒரு நாள் போட்டிகளில் 300 விக்கெட்டுக்களை சாய்க்க இன்னும்ஒன்பது விக்கெட்டுக்கள் மாத்திரமேதேவையாக உள்ளது. மாலிங்க குறிப்பிட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி இச்சாதனையினை செய்வராயின் உலகில் இச்சாதனையை புரிந்த 13 ஆவது வீரராகமாறுவதோடு, இலங்கை சார்பான நான்காவது வீரராக மாறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியில்முத்தையா முரளிதரன் (534), சமிந்தவாஸ் (400) மற்றும் சனத் ஜயசூரிய (323) ஆகிய வீரர்களே இச்சாதனையினை முன்னர் நிலைநாட்டியிருந்தனர்.

மாலிங்க சம்பியன் கிண்ணத்தில் பங்குபெறுவதை பற்றி பேசியிருந்த போது

“2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் ஒரு நாள் போட்டித் தொடர்களில் மீண்டும் விளையாடுவதற்கு அதிக ஆர்வத்தோடு காணப்படுகின்றேன். (ஒரு நாள் போட்டிகளில்) எனது மீள்வருகைக்கு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத்தினை தவிர வேறு சிறந்த களமொன்று  இருப்பதாக தெரியவில்லை. 2006 ஆம் ஆண்டிலிருந்து இத்தொடரில் எதனையும் விடாமல் பங்கேற்று வருகின்றேன்.  ஒவ்வொரு தடவையும் எனக்கு சிறப்பாக அமைந்த இத்தொடரில் வரும் ஜூன் மாதத்திலும் வெற்றியினை எதிர்பார்க்கின்றேன்.

ஆசியாவின் ஜாம்பாவன் அணிகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவற்றுடன் சேர்த்து தென்னாபிரிக்கா காணப்படும் குழுவில் நாம் இருக்கின்றோம். இது ஒரு சர்வதேச நிகழ்ச்சி என்கிற காரணத்தினால் எப்போட்டியும் இலகுவாக இருக்கப்போவதில்லை. எதிரணிகள் அவர்களது ஆற்றல் காரணமாக எம்மை தொடரிலிருந்து வெளியேற வைக்க முடியும். ஆனால், எந்த நேரத்திலும், எந்த அணியினையும் வீழ்த்தும்  சிறந்ததொரு அணியினை தற்போது நாங்கள்  கொண்டிருக்கின்றோம். ஆக, இத்தொடரில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு அடைவு அல்லது சாதனையினை நாங்கள் நிலைநாட்டுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்

என்று கூறியிருந்தார்

அவுஸ்திரேலியா தொடரில், பங்கேற்கும் அணிகள் இம்மாதம் (மே)  24ஆம் திகதிக்கு முன்னர் .சி.சி இன் அனுமதியின்றி தமது குழாங்களில் மாற்றங்களினை மேற்கொள்ள முடியும். ஆனால், (மே) 25ஆம் திகதியிலிருந்து வீரர்கள் மாற்றங்கள் தொடர்பான அனுமதி, நிகழ்வு ஒழுங்கமைப்பு குழுவிடம் பெறப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிகளது குழாங்கள்

அவுஸ்திரேலியா

ஸ்டீவ் ஸ்மித் (அணித் தலைவர்), டேவிட் வோர்னர், பேட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், ஜோன் ஹேஸ்ட்டிங்ஸ், ஜோஸ் ஹேஷல்வூட், ட்ராவிஸ் ஹெட், மொய்சேஸ் ஹென்ரிக்ஸ், கிரிஸ் லின், கிளேன் மெக்ஸ்வெல், ஜேம்ஸ் பட்டின்சன், மிச்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்திவ் வேட் மற்றும் அடம் ஷம்பா

பங்களாதேஷ்

மஷ்ரபி மொர்தஸா (அணித் தலைவர்), இம்ருல் கைஸ், மஹமதுல்லாஹ், மெஹதி ஹஸன் மிராஜ், மொசாதிக் ஹொசைன், முஷ்பிகுர் ரஹீம், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹுசைன், சஞ்சமுல் இஸ்லாம், சப்பீர் ரஹ்மான், சபியூல் இஸ்லாம், சகீப் அல் ஹஸன், செளம்யா சர்க்கர், தமிம் இக்பால் மற்றும் தஸ்கின் அஹமட்

இங்கிலாந்து

இயோன் மோர்கன் (அணித் தலைவர்), மொயின் அலி, ஜொன்னி பேயிர்ஸ்டோவ், ஜேக் பால், சேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளன்க்கெட், ஆதில் ராஷித், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லேய், கிரிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வூட்

இந்தியா

விராட் கோஹ்லி (அணித் தலைவர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரிடி பும்ரா, சிக்கர் தவான், மஹேந்திர சிங் டோனி, ரவிந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், புவ்னேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, மனிஷ் பாண்டே, அஜிங்கியா ரஹானே, மொஹமட் சமி, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங் மற்றும் உமேஷ் யாதவ்

நியூசிலாந்து

கேன் வில்லியம்சன் (அணித் தலைவர்), கோரி அன்டர்சன், ட்ரென்ட் போல்ட், நெயில் ப்ரூம், கொலின் டி கிரான்ட்ஹொம்மெ, மார்ட்டின் குப்டில், டொம் லேதம், மிச்செல் மெக்லெனகன், அடம் மில்னே, ஜிம்மி நீசம், ஜீத்தன் பட்டேல், லுக் ரோன்ச்சி, மிச்செல் சன்ட்னெர், டிம் செளத்தி மற்றும் ரோஸ் டெய்லர்

பாகிஸ்தான்

சர்ப்ராஸ் அஹ்மட் (அணித் தலைவர்), அஹ்மட் ஷேசாத், அஸ்ஹர் அலி, பாபர் அஷாம், பாஹிம் அஷ்ரப், பக்கார் ஷமான், ஹஸ்ஸன் அலி, இமாத் வஷிம், ஜுனைத் கான், மொஹமட் அமீர், மொஹமட் ஹபீஸ், சதாப் கான், சொஹைப் மலிக், உமர் அக்மல் மற்றும் வஹாப் ரியாஸ்

தென்னாபிரிக்கா

ஏபி. டி வில்லியர்ஸ் (அணித் தலைவர்), ஹஷிம் அம்லா, பர்ஹான் பெஹர்டீன், ஜே.பி டுமினி, குயின்டன் டி கொக், டு ப்லெசிஸ், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், மொர்னே மோர்க்கல், கிரிஸ் மொர்ரிஸ், வேய்ன் பார்னல், அன்டைல் பெஹ்லுக்வயோ, ட்வைன் ரெடொரியஸ், ககிஸோ றபாடா மற்றும் இம்ரான் தாஹிர்

இலங்கை

அஞ்சலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), தினேஷ் சந்திமல், நிரோஷன் திக்வெல்ல, அசேல குணரத்ன, ஷாமர கப்புகெதர, நுவான் குலசேகர, சுரங்க லக்மால், லசித் மாலிங்க, குசல் மெண்டிஸ், குசல் மெண்டிஸ், நுவான் பிரதீப், சீக்குகே பிரசன்ன, குசல் பெரேரா, திசர பெரேரா, லக்ஷன் சந்தகன் மற்றும் உப்புல் தரங்க

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்க முடியும்: அஞ்சலோ மெத்யூஸ் நம்பிக்கை

 


இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்க முடியும்: அஞ்சலோ மெத்யூஸ் நம்பிக்கை
 

இங்கிலாந்து மண்ணில் பிரகாசிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

தாம் இங்கிலாந்து சென்று 12 முதல் 14 நாட்கள் வரை பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும், அதன் ஊடாக சிறப்பாக விளையாட முடியும் என நம்புவதாகவும் அஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சாம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் நாளை காலை இங்கிலாந்து நோக்கிப் பயணமாகின்றது.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.

 

http://newsfirst.lk/tamil/2017/05/இங்கிலாந்து-மண்ணில்-பிரக/

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவின் ப்ளஸ், மைனஸ் என்ன? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? மினி தொடர்

 
 

சாம்பியன்ஸ் டிராபி

ஐபிஎல் பரபரப்புகளே இன்னும் ஓயவில்லை, அதற்குள் சாம்பியன்ஸ் டிராஃபி ஜுரம்  பற்றவைக்கப்பட்டிருக்கிறது. விராட் கோலி  முதல் டிவில்லியர்ஸ் வரை `இந்த முறை  நாங்கதான் சாம்பியன்' எனத் தீர்க்கமாக  நம்புகிறார்கள். எட்டு அணிகளுக்கும்  இந்த ஆசை இருந்தாலும், கோப்பை  ஓர் அணிக்குத்தானே சாத்தியம். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சாம்பியன்ஸ் டிராஃபியை முத்தமிட, அத்தனை வீரர்களும் துடிக்கிறார்கள். வரும் ஜூன் 18-ம் தேதி கோப்பையை  வெல்லப்போகும் அணி எது, ஒவ்வோர் அணியின் ப்ளஸ் மைனஸ் என்ன, வெற்றி - தோல்வி வாய்ப்பில் இதுவரையிலான வரலாறு  போன்றவற்றை அலசும் மினி தொடர்  இது.

ஆஸ்திரேலியாவின் ப்ளஸ் - மைனஸ்

ஆஸ்திரேலியா

சாம்பியன்ஸ்  டிராஃபி வரலாற்றிலேயே இரண்டு முறை கோப்பையைத் தக்கவைத்த ஒரே அணி, ஆஸ்திரேலியாதான். (2002-ம் ஆண்டில் இலங்கையுடன்  கோப்பையைப் பகிர்ந்துகொண்டதால் இந்தியா சேர்க்கப்படவில்லை)  ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாதான் மினி உலகக்கோப்பையை இரண்டு முறை வென்றது. 

வருடங்கள்  ஓடிவிட்டன, அப்போதிருந்த ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர்கூட தற்போதுள்ள அணியில் இல்லை. பலருக்கு வயதாகிவிட்டது; சிலர், ஃபார்ம்  அவுட் காரணமாக  ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். சரி,  இப்போதைய ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா சாம்பியன் ஆகுமா?

அணியின் ப்ளஸ், மைனஸ் குறித்துப் பார்ப்பதற்கு முன்னதாக 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவின் பெர்ஃபாமன்ஸ், சாம்பியன்ஸ் டிராஃபி-யில் எப்படியிருந்தது என்பதைப் பார்ப்போம்.

1998-ம் ஆண்டு  - நாக்அவுட் டிராஃபி:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபிக்கு முதலில் இருந்த பெயர், `நாக் அவுட் டிராஃபி'. உலகக்கோப்பையின் முக்கியத்துவத்தைக் குறைக்காதவண்ணம், வருமானத்தைக்  கூட்டுவதற்காக ஐசிசி ஆரம்பித்ததுதான் `நாக் அவுட் டிராஃபி'. அப்போது `வில்ஸ் இன்டர்நேஷனல் கோப்பை' என்று இதற்குப் பெயர். லீக் போட்டிகள் கிடையாது. எல்லாமே நாக் அவுட் போட்டிகள்தான். எட்டு அணிகளில் வெல்லும் நான்கு அணிகள் அரை இறுதிக்குச் செல்லும். வெறும் எட்டு நாள்களில் நடந்த குறுகியத் தொடர் இது. 

1998-ம் ஆண்டு நாக் அவுட் டிராஃபியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றது வங்கதேசம். நாக் அவுட் சுற்றில் இந்தியாவுடன் மோதியது ஆஸ்திரேலியா. டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. எட்டு ரன்களுக்குள் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றியது ஆஸி. அதன் பிறகு சச்சின் -  ஜடேஜா அதிரடியில் இந்தியா 307 ரன்கள்  குவித்தது. ஆஸ்திரேலியா மிக அருமையாக இன்னிங்ஸைத் தொடங்கியது. மார்க் வாக் அரை சதம் அடித்தார்.
25 ஓவர்களில் 145/2 என இருந்த ஆஸி., டெண்டுல்கரின் சுழலைச் சமாளிக்க முடியாமல் 48.1 ஓவரின் முடிவில் வெறும் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெல்ல, மறுநாளே மெல்பர்னுக்கு விமானம் ஏறியது.

 

 

 

2000-ம் ஆண்டு - முதல் போட்டியிலேயே அவுட்! 

கென்யா தலைநகர் நைரோபியில் இரண்டாவது நாக் அவுட் டிராஃபி நடந்தது. மொத்தம் 11 அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில், முதல் ஐந்து இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக கால் இறுதிக்குத் தகுதிபெற்றன. கால் இறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றில் மீதி இருந்த ஆறு அணிகள் மோதின. தர வரிசையில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்ததால், நேரடியாகவே கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தது. 

இந்தியா, கென்யாவை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலிய அணி, இந்த முறையும் இந்தியாவை கால் இறுதியில் சந்தித்தது. யுவராஜ் சிங் அதிரடியில் இந்தியா இந்த மேட்சை 20 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. இரண்டாவது முறையாக கால் இறுதியோடு நடையைக்கட்டியது ஆஸ்திரேலியா. 

 

 

2002-ம் ஆண்டு - நாக் அவுட்டில் காலி:

லீக் சுற்றுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மினி உலகக்கோப்பைத் தொடர் இது. இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்தத் தொடர், இலங்கைக்கு மாற்றப்பட்டது. லீக் சுற்றில் நான்கு பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று அணிகள் இடம்பெற்றிருந்தன. முதல் இடத்தைப் பிடிக்கும் அணி, நேரடியாக அரை இறுதிக்குத் தகுதிபெறும் என்பது விதி. 

குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. 164 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆஸி., ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தைப் பந்தாடியது. அரை இறுதியில்  இந்த முறை இலங்கையைச் சந்தித்தது. முரளிதரனும் அரவிந்த டி சில்வாவும் ஆஸ்திரேலியாவைப் பாடாய்ப்படுத்தினர். ரன்கள் குவிக்கவே சிரமப்பட்ட ஆஸி., 48.4 ஓவர்களில் வெறும் 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நாற்பதே ஓவர்களில் சேஸிங்கை முடித்து டாட்டா காட்டியது இலங்கை. தொடர்ந்து மூன்றாவது முறையாக நாக் அவுட் சுற்றில் மண்ணைக் கவ்விய சோகத்தோடு சொந்த ஊருக்குத் திரும்பியது ஆஸ்திரேலியா. 

2004-ம் ஆண்டு - அரை இறுதியோடு கரைந்த கனவு:

முந்தைய தொடரைப்போலவே அதே முறையில் போட்டிகள் நடந்தன. இந்தத் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. ஆஸ்திரேலியா இடம்பெற்றிருந்த பிரிவில் நியூசிலாந்து, அமெரிக்க அணிகள் இருந்தன. நியூசிலாந்தை ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி., அமெரிக்காவுடனான போட்டியை ஒட்டுமொத்தமாகவே வெறும் 31.5 ஓவர்களில் முடித்து, டின்னருக்குச் சென்றது. அரை இறுதியில் இங்கிலாந்திடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தொடர்ந்து நான்காவது முறையாக நாக் அவுட் சுற்றில் வெளியேறியது ஆஸி. 

ஆஸ்திரேலியா

2006-ம் ஆண்டு - தொடரை நடத்திய இந்தியா:

முதன்முதலாக சாம்பியன்ஸ் டிராஃபி இந்திய மண்ணில் நடந்தது. இந்த முறை லீக் சுற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. நான்கு பிரிவுகளுக்குப் பதிலாக இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன. எட்டு அணிகளுக்கு மட்டுமே அனுமதி. 

ஆஸ்திரேலியாவின் குரூப்பில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இருந்தன. லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றாலும், இந்தியாவையும் இங்கிலாந்தையும் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து வீழ்த்தி அரை இறுதிக்குத் தகுதிபெற்றது ஆஸி. மொஹாலியில் நடந்த அரை இறுதியில் 240 ரன்களைத் துரத்திய நியூசிலாந்து அணி, 206 ரன்களை மட்டுமே எடுத்தது. முதன்முதலாக மினி உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றில் வென்ற மகிழ்ச்சியில் திளைத்த ஆஸி., இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது. 

மும்பையில் நடந்த அந்த மேட்ச் ருசிக்காமலேயே முடிந்தது. வெறும் 138 ரன்களுக்கு  வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆக, ஆஸ்திரேலியா `எளிதாக வென்றுவிடலாம்' என நினைத்துக் களம்கண்டது. ஆனால், 13/2 என லேசாகத் தடுமாறியது. அதன் பிறகு வாட்சன் - மார்ட்டின் இணை பொறுப்புடன் ஆடி, குழுவைக் கரை சேர்த்தனர். ஆஸி.  சாம்பியன் ஆனது. வாட்சன் `மேன் ஆஃப் தி மேட்ச்'  விருதை வென்றார். மூன்று உலகக்கோப்பைகளை வென்றிருந்தாலும், சாம்பியன்ஸ் டிராஃபியில் சாம்பியன் ஆகவில்லையே என்ற கவலை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இருந்தது. இந்தத் தொடரில் அவர்கள் வென்ற பிறகு, ஆஸி-யைக் கண்டு அத்தனை அணிகளும் நடுங்க ஆரம்பித்தன. 

ஆஸ்திரேலியா

2009-ம் ஆண்டு - மீண்டும் சாம்பியன்:

2008-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. காரணம் பாகிஸ்தான். முதலில் பாகிஸ்தானில்தான் தொடர் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், அந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இலங்கை வீரர்கள் பாதிக்கப்பட, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் `பாகிஸ்தானில் தொடர் நடந்தால், தொடரைப் புறக்கணிப்போம்' என அறிவித்தன. இதையடுத்து தொடர் ரத்துசெய்யப்பட்டு, 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. 

இரண்டு பிரிவுகளில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆகிய அணிகள் இடம்பெற்ற குரூப் 1-ல் ஆஸ்திரேலியாவும் இருந்தது. வெஸ்ட் இண்டீஸை 50 ரன்கள் வித்தியாசத்தில் ஊதித்தள்ளிய ஆஸி., பாகிஸ்தானையும் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுடனான போட்டி மழையால் ரிசல்ட் கிடைக்கவில்லை. 

அரையிறுதியில் இங்கிலாந்து 258 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க, ஷேன் வாட்சன் , பாண்டிங் இருவரும் சதம் அடித்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி-யின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது. 201 ரன்கள் எடுத்தால் மீண்டும் சாம்பியன் என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸி., வாட்சனின் மீண்டும் ஓர் அட்டகாசமான சதத்தால் 45 ஓவர்களிலேயே மேட்சை முடித்தது. முதல் நான்கு சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இறுதிப்போட்டி வரை உடன் வராத ஆஸி., அடுத்தடுத்து இரண்டு கோப்பைகளை வென்று வரலாறு படைத்தது. இரண்டு உலகக்கோப்பைகள்,  இரண்டு சாம்பியன்ஸ் டிராஃபியுடன் கேப்டன் பாண்டிங் போஸ் கொடுக்க, ஆஸி-யே ஆனந்தக்கூத்தாடியது. 

 

 

2013-ம் ஆண்டு -  சொதப்பல் ஆட்டம்:

இங்கிலாந்தில் நடந்த ஏழாவது சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இருந்தன. நியூசிலாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட, இங்கிலாந்து மற்றும் இலங்கையுடனான போட்டிகளில் மண்ணைக் கவ்வியது ஆஸ்திரேலியா. மூன்று போட்டிகளில் ஒரு வெற்றிகூட கிடைக்காமல் லீக் சுற்றோடு வெளியேறியது ஆஸ்திரேலியா. 

2017-ம் ஆண்டில் என்ன நடக்கும்? 

சாம்பியன்ஸ் டிராஃபியில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் உண்டு. தர வரிசையில் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 ஆகிய இடங்களில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபியில் மோதியதே கிடையாது. இந்த முறையும் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. 

இந்த முறை இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் ஆஸ்திரேலியாவும் உள்ளது. இந்த நான்கு அணிகளுமே ஒருநாள் போட்டிகளில் வலுவான அணிகள்தான். குறிப்பாக, வங்கதேசம் சமீபகாலங்களில் மிகப்பெரிய எழுச்சி பெற்றுள்ளது. வங்கதேச அணியுடன் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மோதப்போகிறது ஆஸ்திரேலியா. தற்போதைய வலுவான வங்கதேசத்தை அவ்வளவு எளிதாக ஆஸ்திரேலிய அணியால் வீழ்த்திவிட முடியாது. வங்கதேச அணி, கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவைத் தவிர அத்தனை அணிகளையும் கடந்த மூன்று ஆண்டுகளில் வீழ்த்தியிருக்கிறது. இந்த முறை ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது. எனவே, வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி, பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

ஆஸ்திரேலியா

2015-ம் ஆண்டு உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு  மீண்டு வந்து சரமாரியான வெற்றிகளைக் குவித்துவருகிறது  இங்கிலாந்து. நியூசிலாந்து அணி, கணிக்க முடியாத வகையில் ஆடிவருகிறது. ஆகவே, ஆஸ்திரேலியாவுக்கு இந்த முறை பயங்கரமான சவால், லீக் சுற்றிலேயே காத்திருக்கிறது. 2015-ம் ஆண்டில் சொந்த மண்ணில் எளிதாக உலகக்கோப்பையை வென்றதைப்போல இந்த முறையும் கோப்பையைக் கைப்பற்றிவிட முடியாது என்பதே நிதர்சனம்.

சரி, ஆஸ்திரேலிய அணி எப்படி இருக்கிறது? 

பேட்டிங்கைப் பொறுத்தவரை வார்னர், ஃபின்ச், ஸ்டீவன் ஸ்மித் இருக்கிறார்கள். டிராவிஸ் ஹெட் மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் இப்போது அணியில் இணைந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர மேக்ஸ்வெல், ஹென்றிக்ஸ் ஆகிய ஆல்ரவுண்டர்களும் பேட்டிங்கில் கலக்குவார்கள். போதாக்குறைக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மாத்யூ வேடு வேறு இருக்கிறார். 

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பலமான பேட்டிங் வரிசைபோலத் தெரிந்தாலும், அனுபவமற்றப் படை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக, ஸ்டீவன் ஸ்மித் தவிர எல்லோருமே அதிரடி பேட்ஸ்மேன்கள்தான். சிலர் பின்ச் ஹிட்டர்கள். இங்கிலாந்து மண்ணில், பெளலிங் நன்றாகவே எடுபடும். பெரும்பாலான போட்டிகள் பகல் போட்டிகளாகவே உள்ளன. ஆகவே, முதலில் பேட்டிங் செய்யும் அணி, முதல் பத்து ஓவர்களில் கவனமாக ஆடவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய லின், மேக்ஸ்வெல், ஹெட் போன்றோர் ஆட்டத்தை எப்படி வெளிப்படுத்தப்போகிறார்கள் என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தத் தொடரில் அனுபவம் வாய்ந்த, பொறுப்புடன் ஆடக்கூடிய ஜார்ஜ் பெய்லியை நிச்சயம் மிஸ்செய்யும் ஆஸி. 

ஆஸ்திரேலியா

பேட்டிங்கில் சற்று நிலையற்றத்தன்மை இருந்தாலும், பெளலிங்கில் சற்று  தெம்பாகவே இருக்கிறது. எனினும் ஜாம்பாவைத் தவிர நல்ல சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மிதவேகப்பந்துக்கு மிச்செல் மார்ஷ், ஜேம்ஸ் ஃபால்க்னர் இல்லை. `அவர்களின் இடத்தை யார் சரியாக நிரப்புவார்கள்?' என்ற கேள்வி எழுகிறது.சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆடப்போகும் ஆஸி. அணி முற்றிலும் புதிது. இந்தப் பதினைந்து பேரிலிருந்து அணிக்குத் தேவையான பதினொரு பேரை எடுப்பது பெரும்சவால். அதே நேரத்தில் இவர்களுக்கு எப்படி வியூகம் வகுப்பது என்பதில் எதிர் அணி திணறும். இது ஆஸி-க்கு சற்றே சாதகமான அம்சம். 

ஆஸ்திரேலியா

ஒருநாள் போட்டிகளில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமெனில், ஆஸ்திரேலியா கடக்கவேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. அதற்கான முதல் அடி, சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பையை மீண்டும் கையில் ஏந்துவதாக இருக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பதே நிதர்சனம். ஏனெனில், அரை இறுதிக்குத் தகுதிபெறுவது என்பதே பெரும் சவால்!

http://www.vikatan.com/news/sports/89662-will-australia-win-the-champions-trophy.html

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபி கோப்பை அணி: காயமடைந்த மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

 

இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்துள்ள மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

 
 
 
 
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை அணி: காயமடைந்த மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்ப்பு
 
மும்பை:

இங்கிலாந்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்துள்ள மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 18-ந்தேதிவரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் ‘டாப்8’ நாடுகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
201705182224371256_ct2._L_styvpf.gif
நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இருக்கின்றன. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதில், விராட் கோலை தலைமையிலான 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.

இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த இளம் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே, நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். காயம் குணமடையாததால் அவர் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதனால், அவர் வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடியாது. இதையடுத்து, அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/18222434/1085959/Dinesh-Karthik-replaces-injured-Manish-Pandey-in-CT.vpf

Link to comment
Share on other sites

வங்கதேசத்துக்குக் கோப்பை வெல்லும் திறமை இருக்கிறதா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? மினி தொடர் - 2

 
 

சாம்பியன்ஸ் லீக்

 

வங்கதேசம், நிச்சயம் கவனிக்கப்படவேண்டிய அணி. சமீபகாலங்களில் இதன் எழுச்சி அபாரமானது; ஆச்சர்யமானதும்கூட. சரி, இந்த முறை சாம்பியன்ஸ் டிராஃபியை வங்கதேசம் வென்றுவிடுமா... அதற்கான நேரம் வந்துவிட்டதா? 

வங்கதேசம்

1998-ம் ஆண்டு, முதல் சாம்பியன்ஸ் டிராஃபி நடந்ததே வங்கதேசத்தில்தான். ஆனால், அந்தத் தொடரில் வங்கதேசம் இல்லை. 'இரண்டாவது சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் ஆடலாம். ஆனால், ஒரு சவால். நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற வேண்டுமெனில், நாக் அவுட் சுற்றுக்கு முந்தைய தகுதிச் சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும்' என்றது ஐசிசி. அந்தப் போட்டியில் இங்கிலாந்துடன் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது வங்கதேசம். இப்படித்தான் சாம்பியன்ஸ் டிராஃபியில் வங்கதேசத்தின் பயணம் தொடங்கியது. 

2002-ம் ஆண்டு இலங்கையில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபிக்கு வங்கதேசம் டெஸ்ட் அந்தஸ்து பெற்றதால் சேர்த்துக்கொள்ளப்பட்டது. நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகியவை ஒரு குரூப்பில் இருந்தன. ஆஸ்திரேலியாவிடம் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த வங்கதேசம், நியூசிலாந்திடம் வெறும் 77  ரன்களில் சுருண்டு, 167 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது.

 

2004-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபியில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் 'பி' பிரிவில் இடம்பெற்றது வங்கதேசம். தென் ஆப்பிரிக்காவுடனான முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம், வெறும் 93  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதில் 14 ரன்கள் உதிரிகள் என்பது சுவாரஸ்யமான விஷயம். நான்கு பேர் டக் அவுட் ஆக, ஒன்பது பேர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார்கள்.

நஃபீஸ் இக்பால் மட்டுமே 40 ரன்கள் எடுத்தார். நிக்கி போஜே, லாங்வெல்ட், நிதினி  ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். 17.4 ஓவரில் சேஸிங்கில் மேட்சை முடித்தது தென் ஆப்பிரிக்கா.  வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டியும் சோககீதம்தான். 270 ரன்களைத் துரத்தி வெறும் 131 ரன்களில் திருப்திப்பட்டுக்கொண்டு தொடரிலிருந்து வெளியேறியது வங்கதேசம்

2006-ம் ஆண்டு, அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்ற பிரிவில் வங்கதேசத்துக்கு இடம் கிடைத்தது. இலங்கையுடனான முதல் போட்டியில் 303 ரன்களைத் துரத்தியது. வழக்கம்போல விக்கெட்டுகள் வேகமாகச் சரிந்தன. 78/4  என ஸ்கோர் இருந்தபோது `மேட்ச் 130-140 ரன்களில் முடிந்துவிடும்' என நினைத்தது முரளிதரன், மலிங்கா, வாஸ் கூட்டணி. ஆனால், ஷகிப் அல் ஹசன் நங்கூரமாக நின்றார். அவருக்குக் கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் பலம் சேர்க்க ஸ்கோர் சீராக உயர ஆரம்பித்தது. எனினும், 50 ஓவர் முடிவில் 265 ரன்களையே வங்கதேசத்தால் எடுக்க முடிந்தது.
ஷகிப் அல் ஹசன் 67 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். சாம்பியன்ஸ் டிராஃபி வரலாற்றிலேயே வங்கதேசத்தின் கெளரமான தோல்வி இதுதான்.

வெஸ்ட் இண்டீஸுடனான இரண்டாவது போட்டியில் பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. மூன்றாவது போட்டியில் ஜெய்ப்பூர் மண்ணில் ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் தொடக்க வீரர் சஹாரியார்  நஃபீஸ் பொறுப்புடன் சதம் அடிக்க, 50 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் குவித்தது. 

ஷகிப் அல் ஹசன், மோர்தாஸா, அப்தூர் ரசாக் அருமையாக பந்து வீச, ஜிம்பாப்வேவை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம். ஷகிப் பத்து ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகளை அள்ளினார். சாம்பியன்ஸ் டிராஃபி வரலாற்றில் முதல் வெற்றியும் இந்தத் தொடரில்தான் வங்கதேசத்துக்குக் கிடைத்தது.

2009 , 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் எட்டு அணிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், வங்கதேசம் தகுதி பெறவில்லை. இதோ கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் ஆடப்போகிறது வங்கதேசம். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறை சீஸனிலேயே இல்லை. இந்தப் பத்து வருடங்களில் வங்கதேசம்  நல்ல அணியாக உருவெடுத்துள்ளது. இந்த முறை அரை இறுதி வரை செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அந்தக் கனவு நனவாகுமா..? 

 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ள 'பி' பிரிவில் உள்ளது வங்கதேசம். ஜூன் 1-ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியைச் சந்திக்கிறது வங்கதேசம். 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் தந்தது வங்கதேசம். அந்தப் போட்டியில் மஹமதுல்லா சதம் அடித்தார். அந்தக் காயத்தின் வடு ஆறுவதற்குள், கடந்த ஆண்டு இங்கிலாந்தை மீண்டும் ஒரு போட்டியில் வென்றது. ஆகவே, இங்கிலாந்தை நிச்சயம் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆடும். இங்கிலாந்துக்கு இருக்கும் சாதகமான  ஒரே அம்சம், சொந்த மண் என்பதுதான். 

2013 - 2014-ம் ஆண்டு சீஸனில் வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்தை 3-0 என வாஷ்அவுட் செய்திருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் தனது சொந்த மண்ணிலேயே தட்டுத்தடுமாறித்தான் வென்றது நியூசிலாந்து. ஆகவே, இந்த அணியையும் வென்றுவிட முடியும் எனத் திடமான நம்பிக்கை வங்கதேசத்துக்கு உண்டு. 

ஆஸ்திரேலியாவுடன் ஆறு ஆண்டுகளாக மேட்ச் ஆடவில்லை. கடைசியாக, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் கோப்பை முத்தரப்புத் தொடரில்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வங்கதேசம். அதன்பிறகு, இன்னமும் அந்த அணியை வீழ்த்தவில்லை. 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இரண்டு அணிகள் மோதவிருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது.  ஆகவே, ஆஸ்திரேலியாவை வீழ்த்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் வங்கதேச வீரர்கள். 

வங்கதேசம்

வங்கதேச அணி எப்படியிருக்கிறது? 

சாம்பியன்ஸ் டிராஃபிக்குத் தேர்வுசெய்யப்பட்ட 15 வீரர்களில், ஐந்து பேட்ஸ்மேன்கள், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று ஆல்ரவுண்டர்கள், ஒரு விக்கெட் கீப்பர் எனப் பக்காவாக டீமைத் தேர்தெடுத்திருக்கிறது.  தமீம், கயஸ், சவுமியா சர்க்கார், மஹமதுல்லா, சபீர் ரஹ்மான் ஆகிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். மோர்தாசா, ஷகிப், மொசாதக் ஹொசைன் என நல்ல ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷிபிகுர் ரஹீமும் அணிக்கு பலம் சேர்ப்பார். சுன்ஜாமுல் இஸ்லாம், மெஹந்தி ஹாசன் சுழற்பந்து துறையைப் பார்த்துக்கொள்வார்கள். ஷபிபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, ரூபெல் ஹுசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான் என வலுவான வேகப்பந்து துறையும் இருக்கிறது. 

எதிர்பார்க்கப்படும் பிளெயிங் லெவன்:

தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ரூல் கயஸ், மஹமதுல்லா, முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், மெஹந்தி ஹசன், முஷ்ரபே மோர்தாசா, தஸ்கின் அகமது, ரூபெல் ஹுசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான். 

 

வங்கதேசம்

 

வங்கதேசத்தின் ஒரே பிரச்னை நிலையற்ற ஆட்டம்தான். வெற்றிபெறவேண்டிய கடைசி நேரத்தில் ஆர்வக்கோளாறின் காரணமாக, அபத்தமான சில தவறுகளைச் செய்வார்கள். வெற்றிக்கு அருகில் வந்து கோட்டைவிட்டுவிடும் அணி என்ற அவப்பெயரைத் தவிர்க்க, இந்தத் தொடர் ஓர் அரிய வாய்ப்பு. சற்று பொறுப்பாக ஆடினால், வங்கதேசம் அரை இறுதி வரைகூட வர முடியும். `பி' பிரிவில் நிச்சயம் எந்த இரண்டு அணிகள் அரை இறுதிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் வங்கதேசத்துக்கு இந்த முறை அதிக பங்கு இருக்கும். கிரிக்கெட் உலகில் கோப்பைகளை வெல்ல, ஓடவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆமை வேகமா, புலிப்பாய்ச்சலா என்பதை முடிவுசெய்யவேண்டியது வங்கதேச வீரர்கள்தான். 

http://www.vikatan.com/news/sports/89786-will-bangladesh-win-the-champions-trophy.html

Link to comment
Share on other sites

சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள சவால்கள்
ku.jpg

சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள சவால்கள்

 
 
bradby-2017-web-banner-728.gif

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது.

எட்டாவது தடவையாக நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் உலக தரப்படுத்துதலில் முதல் எட்டு இடங்களை பிடித்துள்ள அணிகள் போட்டியிடுகின்றன. அந்தவகையில், எவ்வாறெனினும் இம்முறை கிண்ணத்தை கைப்பற்றி தமது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்திருக்கும் வலிமைமிக்க எதிரணிகளுடன் போட்டியிட்டு கிண்ணத்தைக் கைப்பற்ற வேண்டிய சூழ்நிலையில் இலங்கை அணியும் உள்ளது.

48121இம்முறை சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில், 2013ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி நடப்பு சம்பியனாக களமிறங்கவுள்ள, நிலையில் 2006ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளுக்கு அறிமுகமான பங்களாதேஷ் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை பின்னிலைப்படுத்தி இரண்டாவது தடவையாக சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் பங்குபற்றவுள்ளது. அதேநேரம், 2004ஆம் ஆண்டு சம்பியன் பட்டதை வென்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் தடவையாக இப்போட்டித் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறிய போதிலும், அவ்வணியால் கிண்ணத்தை கைப்பற்ற முடியவில்லை. சொந்த மண்ணில் இரண்டு தடவைகள் கோட்டை விட்ட இங்கிலாந்து அணிக்கு சாதகமான மற்றும் உகந்த காலநிலையில் சொந்த மண்ணில் மீண்டுமொரு வாய்ப்பு கிடைக்கபெற்றுள்ளது.

ஜூன் முதலாம் திகதி ஓவல் மைதானத்தில், இங்கிலாந்து அணி பங்களாதேஷ் அணியுடனான முதல் போட்டியுடன் 2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. நடப்பு சம்பியனான இந்தியா ஜூன் மாதம் 4ஆம் திகதி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் எஜ்பஸ்டனில் மோதவுள்ளது.

2015ஆம் ஆண்டு ஐ.சி.சி உலக கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியுற்ற நியூசிலாந்து அணி ஜூன் மாதம் 2ஆம் திகதி எஜ்பஸ்டனில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய அணியை பழி தீர்க்க காத்திருகின்றது.

இலங்கை அணிக்கோ மிகப் பெரிய சவால் ஓன்று காத்திருகின்றது. ஏனெனில், ஜூன் மாதம் 03ஆம் திகதி வலிமைமிக்க தென்னாபிரிக்க அணியுடன் முதல் போட்டியில் மோதவுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி அங்கு நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், 5-0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்திருந்தது. அத்துடன், சம்பியன்ஸ் கிண்ணத்தில் தனது முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியை மீண்டும் எதிர்கொள்ளவுள்ளது.

எது எவ்வாராயினும், இம்முறை சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் லசித் மலிங்கவுடன் களமிறங்கவுள்ள இலங்கை அணி, எதிர்நோக்கவுள்ள சவால்களை சற்று ஆராய்வோம்.    

தென்னாபிரிக்கா

இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரத்தில், தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலிய அணியை பின்தள்ளி ஒரு நாள் போட்டித் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகக் கிண்ண போட்டிகளில் சிறந்த வீரர்களுடன் களமிறங்கி திறமைகளை வெளிப்படுத்தும் தென்னாபிரிக்கா அணி துரதிஷ்டவசமாக நொக் அவுட் போட்டிகளில், தோல்வியுற்று வெளியேறுவது யாவரும் அறிந்த விடயமாகும்.

B குழுவில் இடம் பிடித்துள்ள இவ்வணி இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் மோதவுள்ளது. துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என மூன்று துறைகளிலும் பிரகாசிக்கும் இவ்வணியில் விளையாடும், ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முறையே துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என்பவற்றில் உலக தர வரிசையில் முதலிடத்தில் உள்ளனர்.  

Imran Tahir becomes World's No.1 ODI Bowler

அத்துடன், ஏபி டி வில்லியர்ஸ் தலைமையில் களமிறங்கும் இவ்வணியில் உலக தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா மற்றும் அனுபவம் வாய்ந்த  டூ பிளெசிஸ், ஜே.பி. டுமினி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

மேலும், வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இங்கிலாந்து மைதானங்களில் ககிஸோ ரபாடா, மோர்ன் மோர்கெல் மற்றும் பர்ஹான் பெஹார்டின் ஆகியோரின் வேகத்தையும் இலங்கை அணி சமாளித்தாக வேண்டிய நிலையில் உள்ளது.


இந்தியா

இந்தியாவைப் பற்றிய அறிமுகம் கிரிக்கெட் ரசிகர்களான உங்களுக்கு அதிகம் தேவையில்லை என்றே நினைகின்றேன். ஏனெனில் கிரிக்கெட் உலகில் அதிகளவாக பேசப்படும் ஒரு நாடாக இந்தியா உள்ளது. இந்திய கிரிக்கெட் செய்திகள் இலங்கை ஊடகங்களில் வெளிவராத நாளே இல்லை எனலாம்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் மற்றும் 2013ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை வென்று வழமையாக வெற்றிகளை குவித்து வரும் வலிமை மிக்க அணியாகத் திகழ்கின்றது. நாம் யாவரும் அறிந்த சிறந்த துடுப்பாட்ட வீரரான விராத் கோஹ்லியின் தலைமையின் கீழ் துடுப்பாட்டம், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு என சகல துறைகளிலும் பிரகாசிக்கும் இவ்வணி இம்முறை கிண்ணத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Virat-Kohli-

ஆனால், உள்ளூர் மண்ணில் கலக்கும் இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் அதிகளவான தோல்விகளை சந்தித்துள்ளது. 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளிலும் சற்றுத் தடுமாறியிருந்தது. இந்திய அணியானது அவர்களது உறுதியான துடுப்பாட்ட வரிசையை நம்பியுள்ளது. 300 இற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றிருந்தாலும் மோசமான பந்து வீச்சு காரணமாக பல தடவைகள் தோல்வியை சந்தித்திருக்கின்றது.

யுவராஜ் சிங் போன்ற சிறந்த களத்தடுப்பு வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி பந்து வீச்சில் தடுமாறினாலும், இம்முறை அஷ்வின் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் 25 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தி முதலிடத்தில் இருக்கும் புவனேஷ் குமார் ஆகியோர் பந்து வீச்சுத் துறையை பலப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


பாகிஸ்தான்

ஐ.சி.சி தர வரிசைப்படி எட்டாவது இடத்திலிருந்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் களங்களில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களான வஹாப் ரியாஸ் மற்றும் ஜுனைட் கான் ஆகியோர் தமது ஸ்விங் பந்து வீச்சால் அச்சுறுத்தக்கூடியவர்கள்.

muhammad-amir

போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்து சர்வதேச போட்டிகளிருந்து விலகியிருந்த மொஹமட் அமீர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், நடப்பாண்டில் 8 போட்டிகளில் பங்குபற்றி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரது ஸ்விங் பந்து வீச்சு நிச்சயமாக துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

சப்ராஸ் அஹமட் தலைமையில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியில் அனுபவம் மிக்க மற்றும் சகல துறைகளிலும் பிரகாசிக்கும் ஷுஐப் மாலிக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் அணியை வெற்றிப்பாதைக்கு வழி நடத்தக்கூடியவர்கள்.


இங்கிலாந்து

2015ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்குப் பின்னர் இங்கிலாந்து அணி வியக்கத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இவ்வணி நீண்டதொரு சிறந்த துடுப்பாட்ட வரிசையை கொண்டுள்ளது. அத்துடன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் அணியாக இங்கிலாந்து அணி கணிக்கப்படுகின்றது. ஏனெனில், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி மற்றும் கிரிஸ் வோக்ஸ் போன்ற அதிகளவான சகலதுறை ஆட்டக்காரர்களை உள்ளவாங்கியுள்ளது. இந்திய ஐபிஎல் போட்டிகளில் 13 கோடி ரூபாய்க்கு விலை போன பென் ஸ்டோக்ஸ் தனது திறமையை ஐபிஎல் போட்டிகளில் நிரூபித்திருந்தார். அத்துடன் ஜேசன் ரோய், அலெக்ஸ் ஹேல்ஸ், மற்றும் ஸாம் பில்லிங்ஸ் போன்ற வீரர்களும் அணியில் உள்ளடங்கியுள்ளனர். இங்கிலாந்து அணியானது, இலங்கை அணிக்கு மாத்திரமல்லாது ஏனைய அணிகளுக்கும் சவாலாக அமைந்துள்ளது.

joe-root

ஜோ ரூட் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரரைக் கொண்டுள்ள அவ்வணிக்கு இயன் மோர்கன் போன்ற மேலும் பல வீரர்கள் கிடைத்திருப்பது போனஸ். ஜோஸ் பட்லரை பற்றி சொல்லவே தேவையில்லை. ஒருநாள் போட்டிகளில் வேகமான துடுப்பாட்ட விகிதத்தினை தன்னகத்தே வைத்துள்ளார்.

அதேநேரம் சொந்த மண்ணில் விளையாட இருக்கும் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருக்கும் டேவிட் வில்லி மற்றும் கிறிஸ் வோக்ஸ் போன்ற ஸ்விங் பந்து வீச்சாளர்களும் இலங்கை அணிக்கு சவாலாக உள்ளனர். அத்துடன், காலநிலை மற்றும் அதிகளவான மைதான ரசிகர்களின் ஆதரவு ஆகியன மேலும் உற்சாகப்படுத்தும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை.

எனினும் துரதிஷ்டவசமாக முக்கியமான தருணங்களில் கோட்டை விடுவது இங்கிலாந்து அணியின் வழக்கமாக உள்ளது. இம்முறை கிடைத்துள்ள இந்த பொன்னான வாய்ப்பையும் தவறவிடுவார்களா அல்லது சிறப்பாக பயன்படுத்திக்கொள்வார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


அவுஸ்திரேலியா

வலிமை மிக்க அணிகளில் அவுஸ்திரேலிய அணியும் ஓன்று. அத்துடன் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றில் சம பலத்தைக் கொண்டுள்ள அணியாகத் திகழ்கின்றது. ஸ்டீவன் ஸ்மித்தின் தலைமையில் களமிறங்கும் இவ்வணியில் ஐபிஎல் 2017 போட்டிகளில் சராசரியாக 58.27 என்ற ஓட்ட விகிதத்தில் அதிகூடிய ஓட்டங்களை (641) விளாசிய டேவிட் வோர்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

david warnerபொதுவாக பொக்கெட் ரொக்கெட் என்று வர்ணிக்கப்படும் டேவிட் வோர்னர் இவ்வருடம் மட்டும் 5 ஒருநாள் போட்டிகளில் 367 ஓட்டங்களை விளாசியுள்ளார். இதுவரை ஒரேயொரு சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் பங்குபற்றியுள்ள வோர்னர் நிச்சியமாக இம்முறை போட்டிகளில் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

கடந்த இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரில்  இலங்கை அணியை துவம்சம் செய்த ஜோர்ஜ் பெய்லி சம்பியன்ஸ் கிண்ண அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை. எனினும்,எனினும், கடந்தாண்டு  இலங்கை மண்ணில் நடைபெற்ற டி20 போட்டித் தொடரில்,  இலங்கை அணியின் 260 ஓட்டங்கள் என்ற உலக சாதனையை, இலங்கை அணிக்கெதிராகவே  முறியடித்த அதே வேளை ஆட்டமிழக்காமல் 65 பந்துகளில் 145 ஓட்டங்களை விளாசி டி20 தொடரை கைப்பற்ற உதவிய கிளென் மெக்ஸ்வெல் இலங்கை அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பார்.

அதிரடியாக துடுப்பாடும் டேவிட் வோவார்னர் மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இலங்கை அணிக்கு கடினமான வெற்றி இலக்குகளை எட்டவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படலாம். மறுபுறம் பந்து வீச்சில் பயமுறுத்தும் அடம் சம்பா மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக அமையலாம். வேகப் புயலாக உருவெடுத்திருக்கும் மிச்சல் ஸ்டார்க் நடப்பாண்டில் 6 போட்டிகளில் மட்டும் பங்குபற்றி 13 விக்கெட்டுளை வீழ்த்தியுள்ளார்.


நியூஸிலாந்து

article-doc-7h774-3bmscybNe842cce83474b5100341-121_634x497துடுப்பாட்டத்தை விட பந்து வீச்சில் சிறந்த அணியாக நியூஸிலாந்து அணி விளங்குகின்றது. டிம் சௌத்தீ மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் தமது அதிரடி பந்து வீச்சினால் அச்சுறுத்தக் கூடியவர்கள். அதேநேரம் கோயே ஆண்டர்சன், கேன் வில்லியம்சன் மற்றும் மார்ட்டின் கப்தில் போன்ற  சிறந்த துடுப்பாட்ட  வீரர்களையும் கொண்டுள்ளது.

வேகப் பந்துக்கு உகந்த இங்கிலாந்து மைதானங்கள் நியூஸிலாந்து அணியின் ஸ்விங் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நிச்சியமாக அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் அணிகளில் ஒன்றாக நியூஸிலாந்து அணி இருக்கப்போகின்றது.


பங்களாதேஷ்

இரண்டு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற அணியை நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளிலிருந்து வெளியேற்றிய பெருமை இந்த அணிக்கு உண்டு. அத்துடன், 100வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வென்று சாதனை படைத்த அணி. மேலும், சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய பெருமையும் இந்த அணிக்கு உண்டு. இவைகளிலிருந்தது இவ்வணி பெரும் பலமிக்க அணியாக உருவெடுத்து வருகின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.

Mustafizur-Rahman

முஸ்தபிகுர் ரஹ்மான், சாகிப் அல் ஹசன் மற்றும் தமீம் இக்பால் போன்ற சிறந்த வீரர்களை கொண்டுள்ளது. எனினும் உள்ளூர் மற்றும் ஆசிய நாடுகளில் வெற்றிகளை குவிக்கும் பங்களாதேஷ் அணி இங்கிலாந்து மண்ணில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இலங்கை

இன்னும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை பற்றி பேசிக்கொண்டிருப்பதில் பலனில்லை. அன்று இந்திய அணியின் கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் மற்றும் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் போன்ற கிரிக்கெட் வீரர்களின் ஓய்வுக்குப் பின்னர் இந்திய அணி தோணி மற்றும் விராத் கோஹ்லி போன்ற சிறந்த வீரர்களை உருவாக்கி கிரிக்கெட் உலகத்தில் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது.

16178733_1381068565300038_2350922567977697069_oசகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மெதீவ்ஸின் தலைமயில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது. இலங்கை அணியின் பினிஷெர் (Finisher) என்ற ரீதியில், இறுதி ஓவர்களில் அணியை வலுப்படுத்தும் இவரது ஆட்டம் முக்கியமானது. அத்துடன், இவரது மித வேகப்பந்து வீச்சு அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளது. காயம் காரணமாக தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது இலங்கை திரும்பியிருந்தார்.

தனது சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்த அஞ்சலோ, ”கடினமான மதீப்பீடுகளுக்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட சிறந்த குழாம் ஓன்று எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக நாம் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டோம். போட்டிகளுக்கு நாம் தயாராகிவிட்டோம் என்ற நம்பிக்கை உள்ளது. திட்டமிட்டபடி எங்கள் ஆட்டத்தை நாம் விளையாடுவோம். மேலும், ஒரு வார காலத்துக்கு முன்பதாகவே அங்கு செல்கின்றோம். அத்துடன் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளோம். அது எனது அணிக்கு தேவையான சக்தியை வழங்கும்” என்று தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் முதுகெலும்புகளாக விளங்குகின்றனர்.

16251933_1389518854455009_8959356744272147830_oதனது கன்னி சம்பியன்ஸ் கிண்ண போட்டியில் பங்கேற்கவுள்ள குசல் மெண்டிஸ் நடப்பாண்டில் 8 போட்டிகளில் பங்குபற்றி மொத்தமாக 276 ஓட்டங்களை குவித்துள்ளார். சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் இந்த இளம் வீரர் சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் எதிர்நோக்கவுள்ள அனைத்து சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்ளும் பட்சத்தில் இலங்கைக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.   

17758330_1482973441776216_3875636901112156225_oபந்து வீச்சில்  இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல இலங்கை அணியும் முற்று முழுதாக நம்பியுள்ள பந்து வீச்சாளராக முழு உலகையும் அச்சுறுத்திய லசித் மலிங்க உள்ளார் என்றால் அது மிகையாகாது. அனுபவம் மற்றும் மதிநுட்பத்துடன் பந்து வீசும் ஒரே ஒரு பந்து வீச்சாளர் லசித் மலிங்க. கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் இறுதியாக விளையாடிய போட்டியில் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

 

33 வயதாகும் லசித் மலிங்க 2004ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தார். இதுவரை 191 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 291 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அத்துடன் நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரேயொரு பந்துவீச்சாளர் இவராவார். மேலும், குறித்த சாதனை தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியிலேயேLasith Malinga பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 3 ஹட்ரிக் சாதனை படைத்த ஒரேயொரு பந்து வீச்சாளர் லசித் மலிங்கவே.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் களமிறங்கவுள்ள லசித் மலிங்க விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா போன்ற வலிமைமிக்க அணிகளை இலகுவாக வெற்றியீட்டலாம் என்பது திண்ணம்.

இவர்கள் அனைவரும் ஒரு அணியாக முழு பலத்துடன் திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயமாக சம்பியன்ஸ் கிண்ணத்தை இலங்கை மண்ணுக்கு கொண்டு வரலாம்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து அணியை குறைத்து எடைபோட வேண்டாம்: டி வில்லியர்ஸ்

 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை குறைத்து எடைபோட வேண்டாம் என்று தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டி வில்லியர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 
சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து அணியை குறைத்து எடைபோட வேண்டாம்: டி வில்லியர்ஸ்
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 8 அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த தொடருக்கு தயாராகும் வகையில் தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்துடன் மூன்று  போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகிற புதன்கிழமை தொடங்குகிறது.

இந்த தொடர் குறித்தும், வர இருக்கின்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்தும் டி வில்லியர்ஸ் கூறுகையில், இங்கிலாந்து அணியை தற்போது குறைத்து எடைபோட வேண்டாம் என்று டி வில்லியர்ஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் இங்கிலாந்துக்கும் இடமுண்டு. எனவே இங்கிலாந்து அணியை குறைவாக எடை போட வேண்டாம்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னோடம் எனக்கருதப்படும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றுவது எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் அணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எங்களுக்கு எதிரான தொடரை 2-3 என்று இழந்த பிறகு, 6 ஒருநாள் தொடர்களில் 5-ல் வென்றுள்ளது.

அதேவேளையில், நாங்களும் ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அணிகளுக்கு ஒயிட் வாஷ் செய்து வலுவாக உள்ளோம்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்ல விரும்புகிறோம். சொந்த நாட்டில் இங்கிலாந்துது அணி சிறந்த வெற்றிகளை குவித்து வருகிறது.

2015 உலகக் கோப்பை தோல்விகளுக்குப் பிறகு இங்கிலாந்து அணி பெரிய சக்தியாக விளங்குகிறது. தற்போதைய இங்கிலாந்து அணி திறமை வாய்ந்தது. இந்தியா கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றத. ஆஸ்திரேலியா இம்முறை கோப்பையை வெல்ல போராடும்’’

இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/21133559/1086365/England-one-day-team-have-earned-a-lot-of-respect.vpf

Link to comment
Share on other sites

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு எதிரொலி: சாம்பியன்ஸ் டிராபி பாதுகாப்பை ஆய்வு செய்யும் ஐ.சி.சி.

 

மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு காரணமாக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்கான பாதுகாப்பை ஆய்வு செய்து வருகிறது ஐ.சி.சி.

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு எதிரொலி: சாம்பியன்ஸ் டிராபி பாதுகாப்பை ஆய்வு செய்யும் ஐ.சி.சி.
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் லண்டன், பர்மிங்காம் மற்றும் கார்டிஃப் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

இந்நிலையில் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போட்டி தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இங்கிலாந்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றது ஐ.சி.சி.-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரையடுத்து ஜூன் 24-ந்தேதி முதல் ஜூலை 23-ந்தேதி வரை பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் நடக்க உள்ளது.

எனவே, சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ள இருக்கும் இந்தியா மற்றும் சில நாடுகள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

201705231829190332_manchester1-s._L_styv

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடர் மற்றும் பெண்களுக்கான உலகக்கோப்பை தொடருக்கான உச்சகட்ட பாதுகாப்பு வழங்குவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளுடன் இணைந்து எங்களுடைய இந்த தொடருக்கான பாதுகாப்பு இயக்குனரகம் ஆலோசனைகள் நடத்தி வருகிறது.

201705231829190332_manchester2-s._L_styv

இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் வரை அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ச்சியாக பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வோம்’’ என்று தெரிவித்துள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/23182913/1086749/ICC-to-Review-Security-in-Wake-of-Manchester-Attacks.vpf

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் ரசிகர்கள் இந்த முறையாவது பட்டாசை வெடிப்பார்களா... சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? - மினி தொடர் 3

 
 

champions Trophy

   

"இந்தியாவை ஜெயிப்பது மட்டும் எங்கள் முக்கிய இலக்கு அல்ல, சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதே இப்போதைய திட்டம். நாங்கள் தகுதியான அணி. நிச்சயம் வென்று சரித்திரம் படைப்போம் "  - எனச் சொன்னவர் இன்ஸமாம் உல் ஹக். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவுக்கு எதிரான போட்டியை ஆவலுடன்  எதிர்பார்க்கிறார்கள். இமாத் வாசிம், சர்பராஸ் அகமது உள்ளிட்ட வீரர்களும் `இந்தியாவை வெல்வோம்' எனச் சூளுரைத்துள்ளார்கள். உலகக்கோப்பையையும் டி20 கோப்பையையும் ஏற்கெனவே வென்றுவிட்ட பாகிஸ்தான், இதுவரை சாம்பியன்ஸ் டிராபியை வென்றதில்லை. இந்த முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுமா? பாகிஸ்தான் ரசிகர்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு பட்டாசைக் கொளுத்துவார்களா?

Star sports Mauka AD

உலகக்கோப்பையில் இந்தியாவை, பாகிஸ்தான் வென்றதே கிடையாது என்பது வரலாறு. ஆனால், மினி உலகக்கோப்பையில் இதுவரை சந்தித்த மூன்று போட்டிகளில் இரண்டில் ஜெயித்தது பாகிஸ்தான். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை பாகிஸ்தான் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். 

1998 ஆம் ஆண்டு, கால் இறுதிப்போட்டி:

முதல் உலகக்கோப்பையில் கால் இறுதிச்சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றது பாகிஸ்தான். அந்தத் தொடரின் நான்காவது கால் இறுதிப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர் வாலேஸ், சேவாக் பாணியில் அன்றைய தினம் அதிரடி ஆட்டம் ஆடினார். 58 பந்துகளில் 13 பெளண்டரிகள் அடித்து 79 ரன்கள் குவித்தார். சந்திரபால், 49-வது ரன்னில் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்களைக் குவித்தது வெஸ்ட் இண்டீஸ். அதில் 32 ரன்கள், பாக். வீரர்கள் தாராளமாகத் தந்த உதிரி ரன்கள். 

`நீங்க மட்டும்தான் கொடுப்பீர்களா...  நாங்களும் அள்ளித்தருவோம்'ல என 25 ரன்களை  பாகிஸ்தான் பேட்டிங்கின்போது தாரைவார்த்தது   லாராவின் பெளலிங் படை.  ஒரு வீரர்கூட நிலைத்துநின்று ஆடாததால், அந்தப் போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை மட்டுமே சேர்த்தது பாகிஸ்தான். 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

2000 ஆம் ஆண்டு, அரை இறுதிப்போட்டி:

1999 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மண்ணைக் கவ்வியது பாகிஸ்தான். அந்தக் காலகட்டங்களில் பாகிஸ்தான் அபாயகரமான அணியாக விளங்கியது . நைரோபியில் நடந்த இரண்டாவது  சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேரடியாக கால் இறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது பாகிஸ்தான். அங்கே இலங்கையைச் சந்தித்தது. 

இலங்கை அணி, பாகிஸ்தானைவிட பயங்கர வலிமையையோடு இருந்தது. ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை அணியில் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, அர்னால்டு, அட்டப்பட்டு, வாஸ், முரளிதரன் என நட்சத்திர வீரர்கள் நிறைந்திருந்தார்கள். கால் இறுதியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. 8.3 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்து பெரிய ஸ்கோரை நோக்கிய ஓடிய இலங்கையை, வாசிம் அக்ரம் கட்டுக்குள் கொண்டுவந்தார். வெறும் 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை. ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது மொயின் கான் அணி. அந்த மேட்ச்சில் அபாரமான ஒரு சதம் அடித்தார் அன்வர். 

அரை இறுதியில் நியூசிலாந்தைச் சந்தித்தது பாகிஸ்தான். அந்தப் போட்டியிலும் சயீத் அன்வர்  சதம் அடித்தார். இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற 253 ரன்களைத் துரத்தியது நியூசிலாந்து. அந்த அணிக்கு எந்த இடைஞ்சலும் கொடுக்கவில்லை பாக். பெளலர்கள். 49 ஓவர்களில் இலக்கை கடந்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாகிஸ்தானை சொந்த ஊருக்கு விமானம் ஏற்றியது நியூசிலாந்து. 

பாகிஸ்தான்

2002 ஆம் ஆண்டு, லீக் சுற்று:

இலங்கை, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றிருந்தன. இலங்கை மண்ணில் நடந்த தொடரில் முதல் போட்டியே பாகிஸ்தான் Vs இலங்கை.  சயீத் அன்வர் அரைசதம் எடுத்தார். மிஸ்பா, 47 ரன்கள் குவித்தார். அதைத் தவிர பாக். பேட்டிங் குறித்துச் சொல்ல ஒன்றும் இல்லை. முரளிதரன் மூன்று விக்கெட்டுகளை அள்ளினார். 201 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இலங்கை, 36 ஓவர்களில் மேட்சை முடித்தது. ஜெயசூர்யா சதம் அடித்தார் . 

இலங்கையிடம் தோற்ற கோபத்தை, நெதர்லாந்திடம் காண்பித்தது பாகிஸ்தான். ஷோயப் அக்தர், சமி இருவரும் நெதர்லாந்து பேட்ஸ்மேன்களை பெளன்ஸரில் பயமுறுத்தினார்கள். அஃப்ரிடி மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். 137 ரன்களைத் துரத்திய பாக்.,16.2 ஓவரில் சேஸிங்கை முடித்தது. ஷாஹித் அஃப்ரிடி 18 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள், நான்கு பெளண்டரிகள் என 52 ரன்கள் குவித்தார். அவரது ருத்ரதாண்டவத்தில் நடுங்கியது நெதர்லாந்து அணி. இந்தப் போட்டியில் பாக். வென்றிருந்தாலும், குரூப்பில் முதல் இடம் பிடிக்க முடியவில்லை என்ற காரணத்தால் டோர்னமென்ட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது. 

2004 ஆம் ஆண்டு, அரை இறுதி:

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் இது.  கென்யா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றிருந்தன. முதல் போட்டியில் கென்யாவை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தது பாகிஸ்தான். அஃப்ரிடி ஆறு ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டும் கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார். 

இரண்டாவது போட்டி, இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சினின் அதிரடியில் பாகிஸ்தான் தோற்றது. அந்தக் காயத்தின் வடு அப்படியே இருந்தது. அதற்கு இந்தப் போட்டியில் பழிதீர்த்தது பாகிஸ்தான். சோயப் அக்தர் மற்றும் நவேத் உல் ஹசன் பந்துவீச்சில் தடுமாறினர் இந்திய பேட்ஸ்மேன்கள். இருவரும் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 201 ரன்கள் என்ற இலக்கை 49.2 ஓவரில் கடந்து, அரை இறுதியில் நுழைந்தது இன்ஸமாம் அணி. 

சவுதாம்டனில் நடந்த அரை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் சரணடைந்தது பாகிஸ்தான். வெறும் 132 ரன்கள் என்ற இலக்கை 29 ஓவரில் கடந்தது வெஸ்ட் இண்டீஸ். இரண்டாவது முறையாக அரை இறுதியோடு வெளியேறியது பாகிஸ்தான். 

2006 ஆம் ஆண்டு  லீக் சுற்று:

"இந்திய மண்ணில் கோப்பையை ஜெயிப்பது எங்கள் கனவு. இந்திய மண்ணில் நாங்கள் நிச்சயம் சாம்பியன் ஆவோம். கடந்த முறைபோல தவறு நடக்காது. இது பாகிஸ்தானுக்கான கோப்பை" என சோயப் அக்தர் தொடர் ஆரம்பிக்கும்போது சொன்னார். முந்தைய தொடர்களைக் காட்டிலும் இந்த முறை லீக் சுற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அணிகள், நான்கு பிரிவுகளுக்குப் பதிலாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் சுற்றில் மூன்று அணிகளுடன் மோத வேண்டும். அதில் இரண்டில் வென்றால் அரை இறுதி வாய்ப்பு கிடைக்கலாம் என்ற விதியோடு  தொடங்கியது  சாம்பியன்ஸ் டிராபி தொடர். 

பாகிஸ்தான் இடம்பெற்ற 'பி' பிரிவில்  தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றன. முதல் போட்டியில் இலங்கையை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். நியூசிலாந்துடனான போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. மூன்றாவது போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடி பாகிஸ்தானுக்கு. 

தென் ஆப்பிரிக்காவுடனான அந்தப் போட்டியில், முதலில் பந்து வீசியது பாகிஸ்தான். 42 ரன்களுக்குள் ஐந்து பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார் பாக். பெளலர்கள். ஸ்மித், டிப்பின்னர், காலிஸ், கிப்ஸ், டிவில்லியர்ஸ் எல்லோரும் சொற்ப  ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு கெம்ப்பும் பெளச்சரும் பொறுப்பாக ஆடினார்கள். 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது தென் ஆப்பிரிக்கா.

`சிறிய இலக்குதானே ஜெயித்துவிடலாம்' என நினைத்துக் களமிறங்கியது பாகிஸ்தான். மொஹாலியில் நடந்த அந்தப் போட்டியில் ஆக்ரோஷமான கேப்டன்சியை வெளிப்படுத்தினார் கேப்டன் ஸ்மித். பாகிஸ்தானின் முதல் ஏழு பேட்ஸ்மேன்கள், ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர்.  14.4 ஓவர்கள் முடிவில் 47 ரன்களுக்கு எட்டு விக்கெட்டை இழந்திருந்தது பாகிஸ்தான். பெளலர் யாசிர் அராபத் மட்டும் 27  ரன்களைக் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணிக்கு அதிக ரன்கள் வந்தது உதிரிகள் (16) வாயிலாகத்தான். 25 ஓவர்கள் முடிவில் 89 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி,  மிக மோசமான தோல்வியுடன் இந்தியாவைவிட்டுக் கிளம்பியது யூனிஸ்கான் அணி. 

2009 ஆம் ஆண்டு, மீண்டும் அரை இறுதி:

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றிருந்தன. வெஸ்ட் இண்டீஸை 133 ரன்களுக்குச் சுருட்டி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான். 

இந்தியாவுடனான போட்டியில் பரபரப்பு எகிறியது. செஞ்சூரியனில் நடந்த அந்தப் போட்டியில், முதலில் பேட்டிங்  செய்த பாகிஸ்தான் 302 ரன்களைக் குவித்தது. முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 300 ரன்களைக் கடந்தது பாகிஸ்தான். அதற்குக் காரணம், சோயிப் மாலிக்கின் அபாரமான சதம். டெண்டுல்கர், கோலி, தோனியின் சொதப்பல் ஆட்டங்களால் 44.5 ஓவரில் 228 ரன்களுக்குச் சுருண்டது இந்தியா. இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவைத் தோற்கடித்த மகிழ்ச்சியில் அந்த நாடே கொண்டாட்டம் பூண்டது. ஆஸ்திரேலியாவுடனான கடைசி லீக் போட்டியில் 206 ரன்கள் இலக்குவைத்தது பாகிஸ்தான். கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் அந்த மேட்ச்சை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. 

மூன்று லீக் போட்டிகளில், இரண்டு வெற்றியுடன் அரை இறுதியில் நுழைந்தது. ‘இந்தமுறையாவது இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற வேண்டும்' என்ற வெறியோடு நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆனால், 233 ரன்களில் நியூசிலாந்திடம் அடங்கியது. 48-வது ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. மூன்றாவது முறையாக அரை இறுதியோடு வெறுங்கை வீசிக்கொண்டு  தன்  நாட்டுக்குத் திரும்பிச் சென்றது பாகிஸ்தான் அணி.  

2013 ஆம் ஆண்டு,  மரண அடி :

பாகிஸ்தான் மறக்க விரும்பும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இதுவாகத்தான் இருக்கும். ஏனெனில், லீக் சுற்றில்  மூன்று போட்டிகளிலும் தோல்வி! வெஸ்ட் இண்டீஸுடனான முதல் போட்டியில் 190 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மிஸ்பா மட்டும் 96 ரன்களுடன் நாட் அவுட்டாக நின்றார். 41-வது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ். இரண்டாவது போட்டியில் இந்தியாவைச் சந்தித்தது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த அந்தப் போட்டியில்  எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. வலுவான தென் ஆப்பிரிக்காவை 234  ரன்களில் கட்டுப்படுத்தியது. ஆனால், சேஸிங்கில் 167 ரன்களில் ஆல் அவுட். 

2017ல் சாம்பியன் ஆகுமா? 

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படும். இதுவரை சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எந்த அணியும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. எந்த அணியும்  பாகிஸ்தான் பெளலிங்குக்கு எதிராக 300 ரன்களைக் குவித்ததில்லை. பாகிஸ்தான் பங்குபெறும் ஆட்டங்கள் பெரும்பாலும் குறைந்த ஸ்கோர்கொண்ட போட்டிகளாகவே அமைந்துவருகின்றன. 

இந்த சீஸனில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்றதே பெரிய விஷயம். தட்டுத்தடுமாறித்தான் உள்ளே நுழைந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தை இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவை ஒரு போட்டியிலும் வென்றதைத் தவிர, ஒருநாள் போட்டிகளில் பெரிதாக ஈர்க்கவில்லை பாக். அணி. 

பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், நான்கு ஆல்ரவுண்டர்கள், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ஒரு ஸ்பின்னர் என்ற கலவையுடன் அணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.  பாக். அணியில் வேகப்பந்து வீச்சு நல்ல பலத்துடன் இருக்கிறது. ஆனால், பேட்டிங்தான் படு சுமார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாகத் தவறுகின்றனர். யாசிர் ஷா மாதிரியான அபாயகரமான ஸ்பின்னர்கள் அணியில் இல்லை. 

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சர்பராஸ் அகமதுதான்  இந்த முறை கேப்டன். அவர் இன்னமும் தன்னை பெரிய தொடர்களில் நிரூபிக்கவில்லை. அந்த அணியில் ஒரே ஆறுதல் பாபர் அசாம்தான். சமீப காலங்களில் நல்ல ஃபார்மில் ஆடிவருகிறார். திறமையான பேட்ஸ்மேனும்கூட.  அசார் அலியும் சிறப்பாகவே ஆடக்கூடியவர். சேஷாத்தின்  ஃபார்ம்தான் கவலையளிக்கும் அம்சமாக இருக்கிறது. பாகிஸ்தானின் பெரும் பலம் ஆல்ரவுண்டர்கள். ஹபீஸ், இமாத் வாசிம், சோயிப் மாலிக்  ஆகியோர் சிறப்பாக ஆடினால், பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். 

இங்கிலாந்து ஆடுகளங்கள்  இந்த முறை சராசரியாக 275 ரன்களுக்குமேல் குவிக்கக்கூடிய பேட்டிங் பிட்சாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வேகப்பந்துக்கும் சாதகமாக இருக்கும். எனவே, வெறும் பந்துவீச்சை மட்டும் நம்பி களமிறங்கினால் ஜெயிப்பது கடினம். பாக். அணிக்கு மிகப்பெரிய மைனஸ் ஃபீல்டிங். பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான களத்தில் ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டால் இந்த முறையும் சாம்பியன் கனவைப் புதைக்கவேண்டியதுதான்.

எதிர்பார்க்கப்படும் லெவன்:

ஷேஷாத், அசார் அலி, பாபர் அசாம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சர்ஃபராஸ் அகமது, இமாத் வாசிம், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது ஆமீர், ஜுனைத்கான் 

பாகிஸ்தான்

இந்த சீஸனில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் பாகிஸ்தானும் உள்ளது. இலங்கை அணியும் பாகிஸ்தானும் கிட்டத்தட்ட சம அளவிலான வலிமையோடுதான் இருக்கின்றன.  கொஞ்சம் முயற்சித்தால் இலங்கையை வென்றுவிட முடியும். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் கணிப்பது கடினம். ஏற்கெனவே இரண்டு முறை இந்திய அணியை வீழ்த்தியிருப்பதால், மனவலிமையோடு இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான். வலுவான தென் ஆப்பிரிக்காவை ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு  உலகக்கோப்பையில் வீழ்த்தியது பாகிஸ்தான். அதன் பிறகு, இரண்டு அணிகளும்  இப்போதுதான் மோதவுள்ளன. தென் ஆப்பிரிக்கா இந்த முறை அசுர வலிமையுடன் களமிறங்குகிறது. அந்த அணியை வீழ்த்த, பாகிஸ்தான் ரொம்பவே சிரமப்படவேண்டியிருக்கும். 

Pakistan

 

லீக் சுற்றில் இரண்டு போட்டிகளை நல்ல ரன் ரேட்டில் வென்றுவிட்டால், அரை இறுதிக்குத் தகுதிபெற முடியும். பாகிஸ்தான் கூடுதல் கவனத்தோடு ஆடினால், அரை இறுதிக்குக்கூட வர முடியும்.  கணிக்கவே முடியாத அணிகளில் முதன்மையானது பாகிஸ்தான். அந்த அணி சாம்பியன் பட்டத்தையும் வெல்லும். இன்னொரு சமயம் ஒரு போட்டியையும்கூட வெல்லாமல் ஊருக்குத் திரும்பும். இந்த முறை என்ன செய்யப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

http://www.vikatan.com/news/sports/90233-will-pakistan-win-the-champions-trophy-2017.html

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி இன்று இங்கிலாந்து பயணம்

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

 
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி இன்று இங்கிலாந்து பயணம்
 
புதுடெல்லி:

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் ‘டாப் 8’ அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதவேண்டும். ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்திய அணி கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்தது. இதேபோல சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்தது.

இந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடுவதற்காக இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-ந்தேதியும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 8-ந்தேதியும், கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 11-ந்தேதியும் சந்திக்கின்றன.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-

201705241108139841_Cricket._L_styvpf.gif

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், ரகானே, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்டியா, டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, பும்ரா, தினேஷ் கார்த்திக்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/24110808/1086839/Champions-Trophy-Indian-team-are-traveling-to-England.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பையில் எனது பந்துவீச்சில் புதிய யுக்தியை கையாளுவேன்: அஸ்வின்

 

 
 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எனது பந்துவீச்சில் புதிய யுக்தியை கையாள போகிறேன் என சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரசன் அஸ்வின் தெரிவித்தார்.

 
 
 
 
சாம்பியன்ஸ் கோப்பையில் எனது பந்துவீச்சில் புதிய யுக்தியை கையாளுவேன்: அஸ்வின்
 
மும்பை:

மினி உலககோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று இரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது.

முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து கூறியதாவது:-

201705251039400656_uvzz10be._L_styvpf.gi

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் எனது பந்துவீச்சில் புதிய யுக்தியை கையாள போகிறேன். அதை இரண்டு பயிற்சி ஆட்டங்களில் சோதித்து பார்க்க திட்டமிட்டு இருக்கிறேன்.

இது போட்டி தொடரில் சிறப்பாக விளையாட உதவும். எனது புதிய யுக்திகள் அணியின் வெற்றிக்கு நிச்சயம் பயன் அளிக்கும் என நம்புகிறேன்.

ஒருநாள் போட்டியில் ஐ.சி.சி. புதிய விதிகளை கொண்டு வந்து உள்ளதால் பந்துவீச்சில் பழைய யுக்திகளுடன் செயல்படுவது பலன் அளிக்காது. அதற்கு ஏற்றாற்போல் புதிய யுக்திகளை புகுத்த முடிவு செய்து உள்ளேன்.

ஐ.பி.எல். தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதாகும். இதன்மூலம் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் கண்டறியப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/25103937/1087034/Ashwin-plans-on-doing-something-new-at-Champions-Trophy.vpf

Link to comment
Share on other sites

கடைசி இரண்டு ஆண்டுகளாக டோனி மீது அதிக சுமை வந்து கொண்டிருந்தது: கோலி

 

கடைசி இரண்டு ஆண்டுகளாக டோனி மீது அதிக சுமை வந்து கொண்டிருந்தது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

 
 
கடைசி இரண்டு ஆண்டுகளாக டோனி மீது அதிக சுமை வந்து கொண்டிருந்தது: கோலி
 
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்தது.

லண்டன் சென்றதும் இந்திய அணி கேப்டன் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து பேட்டியளித்தார். அப்போது இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக கருதப்படும் டோனிக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் மீது அதிக சுமை வந்து கொண்டிருந்தது என்று கூறினார்.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘கடைசி நிலை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை நமக்கு தேவை என்பது ஒரு முக்கியமான விஷயம். கடைசி இரண்டு ஆண்டுகளாக டோனி மீது அதிக அளவிளான சுமைகள் வந்து கொண்டிருந்ததாக நான் நினைக்கிறேன். அவர் தனக்குத்தானே முற்றிலுமாக  வெளிக்கொண்டு வர முடியவில்லை. ஏனென்றால், அவருடன் இணைந்து அணியை வெற்றிக்கொண்டு செல்லக்கூடிய சிறந்த வகையில் ஆட்டத்தை முடிக்கும் வீரர்களை பெற்றிருக்கவில்லை.

கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அந்த இடத்தில் நமக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள். அதிலும் ஹர்திக் பாண்டியா நமக்கு மிகவும் அழகான பலம்.

நாங்கள் சிறந்த பேலன்ஸ் அணியோடு சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். நாங்கள் பேலன்ஸ் அணி. பந்து வீச்சாளர்கள் சிறப்பான அளவில் பந்து வீசிக் கொண்டிருக்கிறார்கள். பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். சிறந்த ஆல் ரவுண்டர்களை பெற்றுள்ளோம். முக்கியமாக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். இந்த தொடருக்கான சிறந்த அணியாக நாங்கள் உள்ளோம்.

201705252153408396_indiateam-s._L_styvpf

தற்போது ஆட்டத்தை எப்படி வெளிக்கொண்டு வந்து செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியமானது. நீங்கள் உலகத்தின் சிறந்த அணி என்று நினைக்கலாம். ஆனால், நீங்கள் சிறந்த வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்தாவிடில், அதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை. இதுபோன்ற தொடர்களில், நீங்கள் ஆட்டத்தை அன்றைய நாளில் எப்படி செயல்படுவீர்கள் என்பதை பொறுத்துதான் அணியின் உயர்வு தாழ்வு இருக்கிறது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/25215333/1087190/ICC-Champions-Trophy-2017-Too-much-burden-was-coming.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை: பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்

 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.

 
சாம்பியன்ஸ் கோப்பை: பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்
 

 

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. லண்டனில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிக்கு மோதுகின்றன.

 

201705261301482140_tn7i6606._L_styvpf.gi
 

 

இந்தியா 28-ந்தேதி நியூசிலாந்துடனும், 30-ந்தேதி வங்காளதேசத்துடனும் மோதுகிறது. மற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான்- வங்காளதேசம் (27-ந்தேதி), ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் (29-ந்தேதி), நியூசிலாந்து- இலங்கை (30-ந்தேதி) விளையாடுகின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/26130140/1087279/champion-trophy-warm-up-match-start-today.vpf

Link to comment
Share on other sites

நியூசிலாந்துக்கு கோப்பை வெல்லும் தகுதி இருக்கிறதா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 4

 
 

நியூசிலாந்து

                                                      

உலகக்கோப்பையை இதுவரை சுவைத்தது இல்லை. டி20 கோப்பையும் கைகூட வில்லை. ஆனால் மினி உலகக்கோப்பையை சுவைத்ததுண்டு. அந்த ருசியை மீண்டும் அனுபவிக்க காத்திருக்கிறது நியூசிலாந்து. 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது மக்களை ஆர்ப்பரிக்க வைப்பார்களா வில்லியம்சன் படையினர்? 

நியூசிலாந்து

நியூசிலாந்து அணியின் ஸ்பெஷலே அந்த அணி வெற்றி பெறுவதும் கிரிக்கெட் உலகில் பெரிதாக தெரியாது, தோல்வி அடைவதும் கண்டுகொள்ளப்பட மாட்டாது. ஆனால் உலகின் வலுவான அணிகளுள் முக்கியமானது நியூசி. 2015 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸியிடம் தோற்றது. 2016 உலகக்கோப்பையில் லீக் சுற்றில் அத்தனை அணிகளையும் சுளுக்கெடுத்தது. ஆனால் அரை இறுதியில் இங்கிலாந்திடம் பரிதாபமாகத் தோற்றது. உலகில் தொடர்ந்து ஜென்டில்மேன் கிரிக்கெட் ஆடும் அணிகளில் மிக முக்கியமானது நியூசிலாந்து. வெற்றி பெற்றால் கூட  அதி ஆக்ரோஷமான கொண்டாட்டங்கள் இருக்காது. எதிரணி வீரர்களை கோபப்படுத்தி கவனத்தை திசை திருப்புவது போன்ற யுக்திகளை கடைபிடிக்க மாட்டார்கள். 2015 உலகக்கோப்பையில் தனது அணியை இறுதிப்போட்டிக்கு  அழைத்துச் சென்ற எலியட், சோகத்தில் இருந்த ஸ்டெயினை  கரம்தந்து தூக்கிவிட்ட  செய்கையை கிரிக்கெட் உலகமே பாராட்டித் தள்ளியது. விளையாட்டை அதற்குரிய மரியாதையோடு அணுகும் பண்பாளர்கள் நியூசி வீரர்கள். இதனாலேயே இந்த அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. 

சரி,  நியூசிலாந்தின் சாம்பியன்ஸ் டிராஃபி வரலாறு என்ன? 

முதல் சாம்பியன்ஸ் டிராபியில் தகுதிச்சுற்றில் விளையாடி தான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குள்ளேயே வந்தது நியூசி. ஜிம்பாப்வேயை  ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. வந்த வேகத்தில் அதே ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்று வெளியேறியது பிளமிங் அணி. 

இரண்டாவது மினி உலகக்கோப்பை கென்ய மண்ணில்  நடந்தது. இம்முறை தர வரிசைப்பட்டியலில் டாப் -6 அணிகளுள் ஒன்றாக இருந்ததால் நேரடியாக நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. நாக் அவுட்டில் ஜிம்பாப்வேயை சந்தித்தது. 64 ரன்கள் வித்தியாச வெற்றியுடன் அரை இறுதியில் நுழைந்தது. பாகிஸ்தான் அணி அரையிறுதியில் நியூஸியை அடித்து நொறுக்க காத்திருந்தது. 

பந்து நன்றாக ஸ்விங் ஆனதால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். சயீத் அன்வர் மட்டும் பொறுமையாக ஆடி சதமடித்தார். அந்த மனிதனின் பொறுப்பான ஆட்டத்தால் 252 ரன்கள் குவித்தது பாக். நியூசி சேஸிங்கில் தடுமாறியது. ஸ்விங் மன்னன் அக்ரம்  அவுட்ஸ்விங்கில் பயமுறுத்தினார். 15 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. அதன்  பிறகு நாதன் ஆஸ்லேவும்  ரோஜர் ட்வோஸும் பொறுப்பாக ஆடி ரன்ரேட்டை மெல்ல மெல்ல உயர்த்தினார்கள். மூன்றாவது விக்கெட் 150வது ரன்னில் விழுந்தது. 49 ரன்களில் நடையை கட்டினார் ஆஸ்லே. அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 149/ 2 என காட்டிய ஸ்கோர் போர்டு 187 / 6 என காட்டும் போது பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆனால் மேக்மில்லன் - ஸ்டைரிஸ் கூட்டணி மேற்கொண்டு விக்கெட்டுகள் எதுவும் சிதறாமல் பார்த்துக் கொண்டனர். 49வது ஓவரில் இறுதிப்போட்டியில் நுழைந்தது பிளமிங் அணி. 

அக்டோபர் 15, 2000 அன்று இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டியில் சந்தித்தன. கங்குலி - டெண்டுல்கர் இணை கலக்கியது 27 வது ஓவரில் டெண்டுல்கர் முதல் விக்கெட்டாக விழுந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 141. அதன் பிறகு தான் வெற்றிக்கான நம்பிக்கை  துளிர்த்தது பிளமிங்கிடம். அந்த மேட்சில் சச்சினியும் டிராவிடையும் ரன் அவுட் ஆக்கிய ஸ்டைரிஸ், டிராவிடையும்  வினோத் காம்ப்ளியையும் தனது அபாரமான பந்துவீச்சில் பெவிலியன் அனுப்பினார். 265 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் டிராபியுடன் போஸ் கொடுக்கலாம் என்ற கனவோடு களமிறங்கியது பிளமிங் படை. 

வெங்கடேஷ் பிரசாத் குடைச்சல் தந்தார்; சச்சின் சுழல் ஆயுதம் கொண்டு தாக்கினார்; தடுமாறியது நியூசி. வெற்றி இந்தியாவின் பக்கம் என நினைத்தபோது ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறங்கினார் கிறிஸ் கெயின்ஸ். அவர் பதட்டப்படவே இல்லை. நேர்மறையான எண்ணங்களுடன் தீர்க்கமாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். 132 / 5 என தத்தளித்த நியூசியை கடைசி வரை களத்தில் நின்று கரையேற்றினார் கெயின்ஸ். ஐம்பதாவது ஓவரின் நான்காவது பந்தில் சிலிர்த்துக் கொண்டது நியூஸி. கிரிக்கெட் உலக வரலாற்றில் இதுவரை நியூசிலாந்து வென்ற முதலும் கடைசியுமான ஒரே ஐசிசி கோப்பை அதுவே. 

நியூசிலாந்து

2002 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியின் ஆட்டத்தை பற்றி அசைபோட ஒன்றும் இல்லை. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் மெக்ராத்திடம் தோற்றது. அந்த கோபத்தை வங்கதேசத்தின் மீது பாய்ச்ச, அந்த அணி ஷேன் பாண்டிடம் சிக்கி சின்னாபின்னமானது. ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறியது நியூசி. 

முந்தைய மினி உலகக்கோப்பையின் அதே கதை தான் 2004 தொடரிலும் நடந்தது. ஆஸி மற்றும் நியூசியுடன் இடம்பெற்றிருந்த இன்னொரு அணி, கத்துக்குட்டியான அமெரிக்கா. பிளமிங் முதல் போட்டியில் சதமடிக்க, ஓரம் பந்துவீச்சில் சுருண்டு விழுந்தது அமெரிக்கா. 210 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியுடன் ஆஸியை சந்தித்தது. மெக்ராத் மற்றும் காஸ்பிரோவிச் கூட்டணி நியூசியை அடக்கியது. மீண்டும் லீக் சுற்றோடு நடையை கட்டியது பிளமிங் அணி. 

New_Zealand_20038_15268.jpg

2006 சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் நடந்தது. லீக் சுற்றில் முதல் போட்டியை தென்னாப்பிரிக்காவோடு ஆடியது. முதலில் பேட்டிங் செய்த நியூசி 195 ரன்கள் மட்டுமே  எடுத்தது. அதில் பிளமிங் மட்டுமே 89 ரன்கள் எடுத்திருந்தார். 35 ஓவரில் தென் ஆப்ரிக்கா மேட்சை முடிக்கும் என நினைத்தவர்களுக்கு மில்ஸ், ஓரம் கூட்டணி சம்மட்டி அடி தந்தது. எட்டு வீரர்கள் ஒற்றை இலக்க  ரன்களில் அவுட் ஆக 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தெ.ஆ.  அடுத்த போட்டி இலங்கையுடன் ஆடியது. இந்த முறை ஏழு நியூசிலாந்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆக நியூஸியின் ஸ்கோர் 165/10. மீண்டும் மேஜிக் வெற்றி பெறும்  என எல்லோரும் கணித்தார்கள். ஆனால் அந்த சீனுக்கு எல்லாம் இங்கே இடம் கிடையாது என சொன்னது இலங்கையின் பேட்டிங். 36வது ஓவரிலேயே மேட்ச் முடித்து டின்னருக்குச் சென்றது இலங்கை அணி.

மூன்றாவது போட்டி பாகிஸ்தான் அணியுடன். பிளமிங் மற்றும் ஸ்டைரிஸ் இருவரும் அரை சதம் அடிக்கவே 274 ரன்கள் குவித்தது. பிளமிங்குக்கு சிரமம் வைக்காமல் சீரான இடைவெளியில் பெவிலியன் நோக்கி ஓடினார்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். அனாயசமாக அரையிறுதியில் நுழைந்தது நியூசி. முந்தைய  இரண்டு சாம்பியன்ஸ் டிராபியில்  எந்த அணியிடம் சிக்கி சின்னாபின்னமானதோ அதே அணி  அரையிறுதியில் காத்திருந்தது. 241 ரன்கள் தான் முடிந்தால் வெற்றி பெற்றுப்பார் என சவால் விட்டார் பாண்டிங். கிவிகளை துள்ளவே விட வில்லை கங்காருக்கள். எடுத்த எடுப்பிலேயே மெக்ராத் - லீ கூட்டணி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிதைத்தது.  35 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து அல்லாடிய அணியை வெட்டோரி கொஞ்சம் பழுதுபார்த்தார். அது எந்த வகையிலும் ஆஸியை பயமுறுத்தவில்லை. 206 ரன்களில் ஆல் அவுட் ஆனது நியூசி. 79 ரன்களுடன் ஆறுதல் அடைந்தார் வெட்டோரி. 

2009 சாம்பியன்ஸ் டிராபி தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்தது.   வெட்டோரி தலைமையில் தொடரை எதிர்கொண்டது நியூசி.  தென் ஆப்ரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய  அணிகள் இடம்பெற்றிருந்த பிரிவில் நியூசிலாந்து இருந்தது.  முதல் போட்டியில் பார்னெல்லின் ஐந்து விக்கெட்டுகள், டிவில்லியர்ஸின் 70 ரன்கள்  நியூசிலாந்து தோல்வி அடைய போதுமான காரணிகளாக இருந்தன. இலங்கையை 38 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்று அரை இறுதியில் அடியெடுத்து வைத்தது வெட்டோரி அணி.  

2000 நாக் அவுட் டிராபியின் அதே சீன் இங்கே. '234 ரன்கள் அடித்துவிட்டு இறுதிக்கு செல்' என்றது யூனிஸ்கான் அணி. 71/3  என நியூசி தடுமாறியது. ஒரு பேட்ஸ்மேன் வந்தார். ஆமீர்  பந்தாவது  அஃப்ரிடி பந்தாவது என அனாயசமாக அடித்து நொறுக்கினார். அவரது 75 ரன்கள் நியூசியை கரம் பிடித்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றன. அதே பேட்ஸ்மேன் தான் ஆறு வருடங்கள் கழித்து தான் பிறந்த மண்ணுக்கு எதிராக  அதிரடியாக ஆடி தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். அந்த மனிதன்  கிரான்ட் எலியட் ! 

நியூசிலாந்துக்கு முந்தைய மூன்று தொடர்களிலும் கசப்பு மருந்து தந்த அதே ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் வந்து சிரித்தது. பிளமிங் அணியால் மட்டுமல்ல வெட்டோரி அணியாலும் ஆஸியை அசைத்துப் பார்க்க முடியவில்லை. 200 ரன்களில் சுருண்டு, 45 வது ஓவரில் மீண்டுமொரு முறை  ஆஸியிடம்  பணிந்தது நியூசி. ரிக்கி பாண்டிங் கெத்தாக மற்றுமொரு முறை சாம்பியன்ஸ் டிராபியை ஏந்தினார். 

2013 சாம்பியன்ஸ் டிராபி  இங்கிலாந்து மண்ணில் நடைபெற்றது. ஆஸி, இலங்கை, நியூசி, இங்கிலாந்து ஒரு பிரிவில் இடம்பெற்றன. இலங்கையை 138 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து. மெக்லாகன் நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். பதிலடியாக மலிங்காவும் நான்கு விக்கெட்டுகள்  கைப்பற்றிச் சிரித்தார். தட்டுத்தடுமாறி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசி. 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மீண்டுமொரு ஆஸியுடன் மோதியது நியூசி. பிரண்டன் மெக்குல்லத்தின் அணி இந்த முறை தோல்வியில் இருந்து தப்பித்தது. ஆனால் வெற்றி பெறவில்லை. காரணம் போட்டியின் போது இடையூறாக வந்த மழை. இங்கிலாந்துடனான போட்டி மழையால் 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இங்கிலாந்து 170 ரன்களைத் தான் வெற்றி இலக்காக  நிர்ணயித்தது. வில்லியம்சன் 67 ரன்கள் அடித்தார்; கோரே ஆண்டர்சன் 30 ரன்கள் குவித்தார் . ஆனால் அதெல்லாம் வெற்றிக்கு போதவில்லை. 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது நியூசி. 

இப்போது என்ன நடக்கும் ?

2015 உலகக் கோப்பையில் திடீரென எழுச்சி பெற்றது நியூசி. இறுதிப்போட்டியைத் தவிர வேறு எதிலும் தோற்கவில்லை. அதன் பிறகு இந்த இரண்டு ஆண்டு கால ஒருநாள் கிரிக்கெட் பயணத்தை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம். 

NZ_3_20393_15305.JPG

கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 12 தொடர்களில் ஆடியிருக்கிறது. இதில் ஏழு முறை கோப்பையை வசப்படுத்தியிருக்கிறது. ஆனால் பெரிய அணிகளுடன் தோல்வியைத் தழுவியே வந்திருக்கிறது என்பதை மேற்கண்ட படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

2015 உலகக்கோப்பைக்கு பிறகு 42  ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கிறது நியூசி. இதில் 24 போட்டியில் வெற்றி. 18 போட்டியில் தோல்வி.  வெற்றி சதவீதம் 57.14.  கடந்த இரண்டு ஆண்டுகளில் நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் குவித்த ரன்கள் பற்றிய சார்ட் இது. 

NZ_6_20199_15161.JPG

42 ஒருநாள் போட்டிகளில்  25 முறை முதலில் பேட்டிங் பிடித்திருக்கிறது  நியூசிலாந்து. இதில் 15 முறை வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 60%. எப்போதெல்லாம் முதலில் பேட்டிங் செய்கிறதோ அப்போதெல்லாம் அதிக ரன்களை குவிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது நியூசி. கீழ்கண்ட படத்தை நன்றாக கவனித்தால் 280 முதல் 300 ரன்கள் வரையிலான ரன்களை நியூசி பல முறை எடுத்துள்ளதை தெரிந்து கொள்ள முடியும். இந்த 25 போட்டிகளில் நியூசிலாந்து சராசரியாக குவித்த ரன்கள் 278.96 .

NZ_4_20130_15497.JPG

குறைந்த பட்சமாக 149  ரன்களை ஒரு முறையும், அதிகபட்சமாக 398 ரன்களை ஒரு முறையும் எடுத்திருக்கிறது. இப்போதைய இங்கிலாந்து பிட்ச்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது நியூஸிக்கு சற்றே சோகமான விஷயம் தான். ஏன் என்பதற்கான விளக்கம் கீழே . 

இந்த இரண்டு ஆண்டுகளில் 17 போட்டிகளில் சேஸிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் 9 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. வெற்றி சதவீதம் 52.94 %. 

அதிக ரன்களை சேஸிங் செய்யும் போதும் சரி, தொடரின்  முக்கியமான போட்டிகளில்  இலக்கை துரத்தும் போதும் சரி வெற்றியை கோட்டை விடுகிறது வில்லியம்சன் அணி. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கடந்த ஆண்டு இந்திய மண்ணில் நடந்த தொடரை சொல்லலாம் . வரலாறு படைக்க வேண்டிய தொடரில் ஐந்தாவது  போட்டியில் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க தொடரிலும் இதே கதை தான். 

புள்ளிவிவரங்களை ஒருபக்கம் வைப்போம். நியூசிலாந்து இம்முறை சாம்பியன் ஆகத் தகுதி வாய்ந்த அணியா? நிச்சயமாக. ஏனெனில் நல்ல வலுவான படை இருக்கிறது. இங்கிலாந்து மைதானங்கள் நியூசிலாந்து வீரர்களுக்கு பரிச்சயமானதே. இம்முறை ஐந்து பேட்ஸ்மேன்கள், ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீரர்கள், இரண்டு நல்ல ஆல்ரவுண்டர்கள், ஒரு விக்கெட் கீப்பர் என்ற கலவையுடன் அணி இருக்கிறது. 

NZ1_20540_15355.JPG

தொடக்க வீரராக களமிறங்கும் கப்டில் அதிரடி பார்முக்குத் திரும்பிவிட்டால் எதிரணி பவுலர்கள் பாடு திண்டாட்டம் தான். இந்த இரட்டை சத நாயகன் பார்முக்கு திரும்பினால் வில்லியம்சனுக்கு யானை பலம் கூடும். டாம் லாதம் நம்பிக்கையளிக்கும் வீரர். கேன் வில்லியம்சன் அட்டகாசமான பேட்ஸ்மேன். தற்போதைய நிலையில் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் இவர். நான்காவது இடத்தில் களமிறங்கும் ராஸ் டெய்லர் தான் உள்ளே வெளியே ஆட்டம்  ஆடுகிறார். இவரது நிலையற்ற பார்ம் நிச்சயம் நடுவரிசைக்கு  கவலை தரும். வில்லியம்சனுக்கு அடுத்தாக ஸ்ட்ரைக் ரொட்டெட் செய்யும் பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லை. ஒரு வேளை மழை பெய்து பிட்ச் மந்தமானால் நியூசியின் கோப்பை கனவு அவ்வளவு எளிதில் நனவாகாது. 

ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன், கொலின் டி கிராண்ட்ஹோம் நல்ல தேர்வு. சுழற்பந்துக்கு இஷ் சோதியை நீக்கி  ஜீதன் படேலைச் சேர்ந்திருக்கிறார்கள். மிச்சேல் சான்ட்னரும் நல்ல வீரர்.  வேகப்பந்து துறை செம ஸ்ட்ராங். போல்ட், மெக்லாகன், சவுதி, மில்னே, நீஷம் ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என்பதில்  வில்லியம்சன் தடுமாறக்கூடும். மில்னேவின் வேகம் பிளஸ் என்றாலும் அவரது ஃபேஸ்  ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல அமைந்துவிடும். விக்கெட் கீப்பர் ராஞ்சி பேட்டிங்கில் பெரிதாக ஈர்க்க வில்லை. அவர் தனது பங்களிப்பை சரியாக செய்ய வேண்டியது அவசியம்.

new_zealand_2_20178_15599.jpg

எதிர்பார்க்கப்படும் லெவன் :-

கப்தில், டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்) , ராஸ் டெய்லர், லுக் ராஞ்சி, கோரே ஆண்டர்சன், கோலின் டி கிரான்ட்ஹோம், மிச்சேல் சான்ட்னர், (ஜீதன் படேல் / ஜேம்ஸ் நீஷம்), டிரென்ட் போல்ட், டிம் சவுதீ. 

 

இம்முறை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளை எதிர்கொள்ளப் போகிறது நியூசி. இந்த மூன்று அணிகளுமே நியூசிலாந்துக்கு சவாலான அணிகள் தான். குறிப்பாக வங்கதேசம் நிச்சயம் அபாயகரமான அணி. அந்த அணியுடனான போட்டியில் கூடுதல் கவனத்துடன் ஆட வேண்டியது அவசியம். நியூசிலாந்தை பொறுத்தவரையில் பெரிய மைனஸ் என குறிப்பிட்டுச் சொல்லும் படி எதுவும் இல்லை. ஆனால் போட்டி நடக்கும் நாளில் அப்போதைய சூழ்நிலையில் எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பொறுத்தே ஆட்டமுடிவுகள் அமையும். கேன் வில்லியம்சன் இன்னொரு பிளமிங் ஆவாரா? விடை சில நாள்களில்...

http://www.vikatan.com/news/sports/90469-will-new-zealand-win-the-champions-trophy.html

Link to comment
Share on other sites

இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில்

Sri Lanka 318/7 (50.0 ov)
Australia 319/8 (49.4 ov)
Australia won by 2 wickets (with 2 balls remaining)
Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

நேற்று தொடங்கிய சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 319 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.

 
சாம்பியன்ஸ் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
 
லண்டன் :

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் லண்டன் ஓவலில் மோதின. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மேத்யூஸ் 95 ரன்களும், குணரத்னே 70 ரன்களும் விளாசினர்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஆரோன் பிஞ்ச் (137 ரன்), டிராவிஸ் ஹெட் (85 ரன், நாட்-அவுட்) வெற்றிக்கு வித்திட்டனர். இன்றைய பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் சந்திக்கின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/27084606/1087412/sri-Lanka-defeated-Australia-in-the-Champions-Cup.vpf

Link to comment
Share on other sites

சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து கோப்பையை வெல்லும் - லாரா

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார்.

 
சாம்பியன்ஸ் டிராபி: இங்கிலாந்து கோப்பையை வெல்லும் - லாரா
 
லண்டன்:

மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் உலகின் ‘டாப் 8’ நாடுகள் பங்கேற்கின்றன.

இந்தப்போட்டியில் இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பிரபல வீரர் பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இதுவரை நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியை விட இந்த முறை மிகவும் பரபரப்பாக இருக்கும். ஏனென்றால் அனைத்து அணிகளும் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.

சொந்த மண்ணில் விளையாடுவது இங்கிலாந்துக்கு கூடுதல் பலமாகும். என்னை பொறுத்தவரை இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அந்த அணி 20 ஓவர் உலககோப்பையை இறுதிப்போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் தோற்று கோப்பையை இழந்து இருந்தது. ஆனால் தற்போது அந்த அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர்.
 
201705271348485906_x8gcfc3w._L_styvpf.gi


போத்தம், பிளின்டாப் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தவர்கள். ஆனால் தற்போது ஒட்டு மொத்த இங்கிலாந்து அணியிலும் அபாரமாக ஆடக்கூடிய வீரர்கள் உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் வியக்கதக்க வீரர்கள் உள்ளனர்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சாம்பியன்ஸ் டிராபியை (2004) வென்றது மறக்க இயலாது. தற்போதுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி தரவரிசை காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.

இவ்வாறு லாரா கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி இதுவரை சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இல்லை. 2004-ல் வெஸ்ட் இண்டீசிடமும், 2013-ல் இந்தியாவிடம் தோற்று அந்த அணி கோப்பையை இழந்து இருந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/27134848/1087494/England-for-success-at-ICC-Champions-Trophy-2017-says.vpf

Link to comment
Share on other sites

2-வது ஒருநாள்: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இங்கிலாந்து 330 ரன்கள் குவிப்பு- ஸ்டோக்ஸ் சதம்

பென் ஸ்டோக்ஸின் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 330 ரன்கள் குவித்துள்ளது.

 
2-வது ஒருநாள்: தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இங்கிலாந்து 330 ரன்கள் குவிப்பு- ஸ்டோக்ஸ் சதம்
 
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் சவுதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 8 ரன்கள் எடுத்த நிலையிலும், ஹேல்ஸ் 24 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

201705271952031935_josbuttler-s._L_styvp
ஜோஸ் பட்லர்

அதன்பின் வந்த ஜோ ரூட் 39 ரன்களும், கேப்டன் மோர்கன் 45 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். ஆனால், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 79 பந்தில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 101 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அவுட்டாகாமல் 53 பந்தில் 7 பவுண்டரியுடன் 65 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 10 ஓவர்கள் வீசி 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/27195202/1087570/Ben-Stokes-century-help-england-330-runs-against-south.vpf

England 330/6 (50.0 ov)
South Africa 57/1 (10.1 ov)
South Africa require another 274 runs with 9 wickets and 39.5 overs remaining

 

 

 

பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: வங்காள தேசம் 341 ரன்கள் குவிப்பு

 

பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், தமீம் இக்பால் சதத்தால் வங்காள தேச அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் குவித்துள்ளது.

 
 
 
 
பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: வங்காள தேசம் 341 ரன்கள் குவிப்பு
 
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1-ந்தேதி) தொடங்குகிறது. அதற்கு முன் சில அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றன. வங்காள தேசம் இன்று பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி வங்காளதேச அணியின் தமீம் இக்பால், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சர்கார் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது வங்காள தேசம் 6.1 ஓவரில் 27 ரன்கள் எடுத்திருந்தது.

201705271902538845_imrulkayes-s._L_styvp
61 ரன்கள் சேர்த்த இம்ருல் கெய்ஸ்

2-வது விக்கெட்டுக்கு தமீம் இக்பால் உடன் இம்ருல் கெய்ஸ் ஜோடி சேர்ந்தார். அந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இம்ருல் கெய்ஸ் 62 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தமீம் இக்பால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் குவித்தது.

சதம் அடித்த தமீம் இக்பால் 93 பந்தில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 35 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த சஹிப் அல் ஹசன் 23 ரன்னும், மெஹ்முதுல்லா 29 ரன்னும், மொசாடெக் ஹொசைன் 26 ரன்னும், மெகதி ஹசன் மிராஸ் 13 ரன்களும் எடுக்க, வங்காள தேசம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் குவித்தது.

201705271902538845_junaikhan-s._L_styvpf
4 விக்கெட் வீழ்த்திய ஜுனைத்கான்

பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத்கான் 9 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
 
Bangladesh 341/9 (50.0 ov)
Pakistan 94/3 (17.0 ov)
Pakistan require another 248 runs with 7 wickets and 33.0 overs remaining

http://www.maalaimalar.com/News/Sports/2017/05/27190253/1087562/Warm-Up-Match-bangladesh-341-runs-against-pakistan.vpf

Link to comment
Share on other sites

பாகிஸ்தானுக்குக் கிடைத்தார் புதிய அதிரடி ஆல்ரவுண்டர் ஃபாஹிம் அஷ்ரப்: வங்கதேசம் தோல்வி

 
  • அதிரடி ஆல்ரவுண்டர் பாகிஸ்தானின் ஃபாஹிம் அஷ்ரப்.
    அதிரடி ஆல்ரவுண்டர் பாகிஸ்தானின் ஃபாஹிம் அஷ்ரப்.
  • தமிம் இக்பால். | படம்.| ஏ.எஃப்.பி.
    தமிம் இக்பால். | படம்.| ஏ.எஃப்.பி.
 

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற பயிற்சி ஒருநாள் ஆட்டத்தில் வங்கதேசத்தின் 341 ரன்களை பாகிஸ்தான் அணி வெற்றிகரமாக விரட்டி பரபரப்பான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்கதேசம் 341 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி இலக்கை விரட்டி 49.3 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி சற்றும் எதிர்பாராததுதான், காரணம் பாகிஸ்தான் ஒருநிலையில் 42.4 ஓவர்களில் 249/8 என்று தடுமாறியது, ஆனால் ஃபாஹிம் அஷ்ரப் என்ற இடது கை பேட்ஸ்மென் (வலது கை பந்து வீச்சு) கடைசியில் 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 30 பந்துகளில் 64 ரன்களை விளாசியதும் ஹசன் அலி 27 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தும் இருவரும் இணைந்து அவுட் ஆகாமல் 92 ரன்களைச் சேர்த்ததும் பாகிஸ்தான் வெற்றியை தீர்மானித்தது.

பாகிஸ்தானுக்காக முதல் போட்டியில் ஆடுபவர் ஃபாஹிம் அஷ்ரப் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாகிஸ்தான் எந்த நிலையிலும் இலக்கைத் துரத்தும் நிலையிலேயே இல்லை, ஒரு கட்டத்தில் 168/5 பிறகு 227/6 பிறகு 42-வது ஓவரில் 242/7 என்று தடுமாறியது.

இதனையடுத்து கடைசி 8.3 ஓவர்களில் 100 ரன்கள் பக்கம் வெற்றிக்குத் தேவைப்பட்டது. மெஹதி ஹசன் மிராசை ஒரே ஓவரில் 19 ரன்கள் விளாசினார். அடுத்து மஷ்ரபே மோர்ட்சா ஓவரில் 16 ரன்கள், கடைசி ஓவரில் 13 ரன்கள் என்று அவர் விளாசி வெற்றி பெறச் செய்தார், அதுவும் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் அடித்த சிக்ஸ் மைதானத்தின் நீளமான பவுண்டரியாகும்.

முதல் போட்டியிலேயே அசத்திய இவருக்கு இந்த ஸ்கோர் முதல் தர கிரிக்கெட் ஸ்கோராக முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. ஆனால் வங்கதேச அணி முஸ்தபிசுர் ரஹ்மானை வைத்திருந்தால் ஒருவேளை பாகிஸ்தான் வெற்றி பெற முடியாமல் போயிருக்கும்.

மைதானத்தின் நீளமான பகுதிகளில் ஃபாஹிமை அடிக்க வைத்து வீழ்த்தும் வங்கதேச உத்தி எடுபடவில்லை, காரணம் அவர் டேரன் சமி போல் நேராக அடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். உண்மையில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பாகிஸ்தானுக்கு ஃபாஹிம் அஷ்ரப் மூலம் கிடைத்து விட்டார்.

வங்கதேசத் தரப்பிலும் தவறுகள் இல்லாமலில்லை, சுமார் 5 கேட்ச்கள் தவற விடப்பட்டன, ஃபாஹிமுக்கும் கடைசி ஓவரில் கேட்ச் விடப்பட்டது. இது 3 ரன்களாக வேறு மாறியது. ஒரு ஸ்டம்பிங்கும் தவற விடப்பட்டது.

முன்னதாக பாகிஸ்தான் அணியில் அகமத் ஷெசாத் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்களை எடுத்தார். மொகமது ஹபீஸ் 62 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். ஆனால் முக்கியமாக ஷோயப் மாலிக் 66 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து மிராஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஷோயப் மாலிக் அவுட் ஆகும் போது பாகிஸ்தான்38.3 ஓவர்களில் 227/6 என்று இருந்தது. மாலிக்கிற்கு 8 ரன்களில் கேட்ச் விடப்பட்டது. இவரும் ஹபீஸும் இணைந்து 12.3 ஓவர்களில் 79 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் ஹபீஸ், சர்பராஸ் அகமது அடுத்தடுத்து ஆட்டமிழந்தவுடன் பாகிஸ்தான் தொய்ந்தது.

ஆனால் கடைசியில் சற்றும் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் புதிய ஆல்ரவுண்டர் ஃபாஹிம் அஷ்ரப் நம்ப முடியாத அதிரடி ஆட்டம் ஆடி வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்தார்.

தமிம் இக்பால் அதிரடி சதத்தில் 341 ரன்கள் குவித்த வங்கதேசம்:

முன்னதாக முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 341 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் தமிம் இக்பால் 93 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 102 ரன்கள் விளாசினார்.

பாகிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் 9 ஓவர்கள் வீசி 73 ரன்கள் வாரி வழங்கி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வஹாப் ரியாஸ் 9 ஒவர்களில் 68 ரன்களுக்கு விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. சவுமியா சர்க்கார் 19 ரன்களில் ஜுனைத் கானிடம் வீழ்ந்தார். ஆனால் அதன் பிறகு ஜுனைத் கான் வீசிய இன்னிங்ஸின் 9-வது ஓவரில் தமிம் இக்பால் புரட்டி எடுத்தார். 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் அந்த ஓவரில் தமிம் இக்பால் ஆதிக்கம் செலுத்த அந்த ஓவரில் 25 ரன்கள் வந்தது. 39 பந்துகளில் அரைசதம் கண்ட தமிம் இக்பால் 88 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 100 ரன்களை எட்டி 102 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு வீரரான இம்ருல் கயேஸ் 62 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார், இருவரும் இணைந்து 142 ரன்களை 20 ஓவர்களில் விளாசினர்.

முஷ்பிகுர் ரஹிம் அவர் பங்குக்கு 35 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 46 ரன்களை விளாசினார். ஷாகிப் அல் ஹசன் இந்தவேகத்துக்கு இணங்க ஆடாமல் 27 பந்துகளில் 23 ரன்களில் வெளியேறினார். ஆனால் மஹமுதுல்லா 6 பவுண்டரிகளுடன் 24 பந்துகளில் 29 ரன்களையும் மொசாடக் ஹுசை 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 26 ரன்களையும் எடுக்க வங்கதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்களை குவித்தது.

ஆனால் பாஹிம் அஷ்ரப் வங்கதேச பந்து வீச்சை அடித்து நொறுக்கி நம்ப முடியாத நிலையிலிருந்து வெற்றி பெறச் செய்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/பாகிஸ்தானுக்குக்-கிடைத்தார்-புதிய-அதிரடி-ஆல்ரவுண்டர்-பாஹிம்-அஷ்ரப்-வங்கதேசம்-தோல்வி/article9714244.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.